Tag Archives: ஜெயஸ்ரீ ஷங்கர்

தன்னைச் சுடும்!..

ஜெயஸ்ரீ ஷங்கர்   ஹேய்….இங்க பாரேன் கிரி….! மூணு மாசக் குழந்தையைக் கூட இந்த ‘மாண்டசரி ஸ்கூல்ல’ சேர்த்துக்கறாளாம். வெரி நைஸ்…இல்லபா …நல்லவேளையா இப்ப ..நம்ம கீட்ஸு க்கு நாளையோட அவன் பொறந்து நாலாவது மாசம் முடியப் போறது ..இன்னி வரைக்கும் இந்த ஹோர்டிங் அட்வெர்டைஸ்மென்ட் என் கண்ணுலயே படல பார்த்தியா..? டூ யு நோ திஸ் பிஃபோர் ரா….? நோ….பார்…….! தெரியாதுங்கறியா….? இல்ல ‘நோ பார்’னே சொல்றியா.. இல்ல பார்கவி தெரியாதுன்னு சொல்றேன். நானும் உன்கூட சேர்ந்து இப்பத்தான் இதைப் படிக்கறேன்.. யூ…சோம்பேறி ...

Read More »

தொலைத்ததும்…….கிடைத்ததும்..! – 7

​​ஜெயஸ்ரீ ஷங்கர் என்ன வில்லத்தனம்…என்று பாண்டியும், திமிறும் மலரை அழுத்திப் பிடித்தபடி…..அந்த அழுத்ததிலேயே சில சங்கேதங்களை உணர்த்தியவன் கண்களால் ஜாடை காட்டியது  இங்கிருந்து தப்பித்து  ஓடு…என கட்டளையிட்டது போலிருந்தது அவளுக்கு. அவனது கைகளை அழுத்திக் கடிப்பது போல பாசாங்கு செய்து விட்டு அவனை விலக்கித் தள்ளி அறையை விட்டு வெளியேறி தலை தெறிக்க ஓடியவள் படிகளில் பதுங்கி பதுங்கி இறங்கி லிப்ட் வழியாக கீழிறங்கி அங்கு லோடு இறக்கிவிட்டுத் தயாராக நின்றிருந்த வண்டியின் கதவு சார்த்தப் படுவதற்குள் தாவி ஏறிக் கொண்டாள் . அங்கு அடுக்கி வைக்கப் ...

Read More »

தொலைத்ததும்…….கிடைத்ததும்..! (6)

ஜெயஸ்ரீ ஷங்கர் , புதுச்சேரி சட்டென்று திரும்பிய மலர்விழி ‘நானும் இங்கியே இதுங்களோடவே இருந்துகிட்டு என்ன தான் ஆவுதுன்னு ஒரு கை பார்த்துப்புடறேன்..’ ஒரு ஓரமாக இருந்த சோபாவில் தொப்பென்று கீழே அமர்ந்து கொண்டாள் . அடுத்த சில நொடிகளில், அவளை இருவர் பிடித்து எழுப்பி உள்ளே அழைத்துச் சென்று குளிக்கச் சொல்லி அழகு படுத்தி கண்ணாடி முன்பு கொண்டு நிறுத்தியதும் .. நானா… இது? நான் என்ன இம்புட்டு அழகா..?..என்று கன்னத்தைத் தொட்டுத் தடவிப் பார்த்துக் கொண்டு சிரித்து மகிழ்ந்தவள் அருகிலிருந்த பெண்ணிடம் ...

Read More »

தொலைத்ததும்…….கிடைத்ததும்..! – 5

ஜெயஸ்ரீ ஷங்கர் ஏய்…மலரு…..இப்படியா…. அந்தல சிந்தலையா விளுந்து கெடப்பே…..சரி சரி எந்திரி, மேனேஜர் உன்னைய அழைச்சிட்டு வரச் சொன்னாரு….எந்திரிச்சி வா….அடி கிடி பட்டிடிச்சா…? இல்லண்ணே…..லேசா காலு மடங்கிடிச்சி….இரு எந்திரிக்கிறேன். கூடப் பிறந்த பிறப்புகளைப் பற்றி எதுவுமே அறியாத பாண்டிக்கு அண்ணே….என்று அவள் அழைத்ததும், மனசுக்குள் எதுவோ என்னவோ செய்தது அவனுக்கு. இருந்தாலும் மலரை முறைத்துத் திட்டினான். என்னா ….புதுசா அண்ணே….நொண்ணேன்னு உறவு கொண்டாடுற….ஒங்கூடப் பொறந்தவனா நானு….ஓய்யாரத்தப் பாரு…அதட்டினான். ஓட்டிக்கிட்டுப் பொறந்தாத் தான் அண்ணனா….ஆபத்துல வந்து உதவினாக் கூட அண்ணேன் தான். பின்ன எதுக்கு இப்ப ...

Read More »

தொலைத்ததும்.. கிடைத்ததும்..! – 4

​ஜெயஸ்ரீ ஷங்கர் இந்தா…வளியை விடு என்று அவனைப் பார்த்து ஏளனமாகச் சொன்ன மலர்விழி, சார்….பாக்கிங் ஆபீசுக்கு அளைச்சிட்டுப் போறதாச் சொன்னீங்களே….அதான் ரூம்பைக் காலி பண்ணீட்டு வந்தேன். இப்பவே அங்கன போயிரலாமா..என்று தனது பையை டேபிளின் மீது தொப்பென்று வைத்தாள் . அதுங்கையிலே….சொல்லிட்டியா…? கர கரத்தது மேனஜரின் குரல். ..ம்ம்ம்……! சரின்னிச்சு. அப்பச் சரி. கெளம்பு….என்றவர், எட்டிப் பார்த்து, ஏல பாண்டி….நில்லு..! நீயும் கூட வா. நானே அளச்சிட்டுப் போறேன், அது எதுக்கு சார் அந்த எடத்துக்கு ? ஒண்ணுமே தெரியாதவள் போலக் கேட்டாள் மலர். ...

Read More »

தொலைத்ததும் .. கிடைத்ததும் …! – 3

ஜெயஸ்ரீ ஷங்கர் ஷீலாவிடம் இந்த விஷயத்தைச் சொல்லலாமா… வேண்டாமா… என்ற குழப்பத்தில் மனது தவித்தாலும், கிராமத்து மண்ணுக்கே உரிய வெள்ளந்தியான மனோபாவத்தில் மலர் வேகமாக ஷீலா…ஷீலா என்று அவளை நோக்கி முகத்தில் பிரகாசத்துடன் ஓடுகிறாள். என்னாச்சுடி…சம்பளம் வாங்கிட்டியா?…சந்தோசத்தப் பாரு..ம்ம்…சொல்லு…எவ்ளோ கொடுத்தான் அந்தத் திருட்டுப் பய.? தெரியுமாடி உனக்கு…? என்கிட்டே முன்னமே ஏன் சொல்லல. பாதிக்குப் பாதி தான் தந்துச்சு அந்தக் கொரங்கு. எனக்கு அப்பிடியே உடம்பெல்லாம் தீப்புடிச்சி எரிஞ்சிச்சு தெரியுமா? பண்றது திருட்டுத்தனம்…அதுல அதட்டல் வேற. நான் நல்லாக் கேட்டுபுட்டு தான் வந்தேன் என்ற ...

Read More »

தொலைத்ததும்.. கிடைத்ததும்..2

ஜெயஸ்ரீ ஷங்கர்    என்னாச்சுடி மலரு……? ஷீலா, தானிருந்த இடத்திலிருந்தே குரல் கொடுத்தாள். முள்ளு குத்திருச்சு, லேசா வலிச்சுச்சு.. அவ்வளவு தான்…வேற ஒண்ணுமில்ல…மலர் சொல்லும்போது ஷீலாவின் ஆளு….பாண்டியன் ஜன்னல் பக்கமாக வந்து நின்று இவளைப் பார்த்து சிரித்துவிட்டு, இவள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டவுடன் …. “ஷ்…ஷ்…மலர்விழி,  அந்தப் பிள்ளை .ஷீலாவை கூப்பிடு.” என்கிறான். இவள் திரும்பி வேறு யாராவது தன்னை கவனிக்கிறார்களா என்று பார்த்தவள், ஏய்…ஷீலா உன் ஆளு..இங்கன வந்து நின்னு உன்னிய கூப்பிடுது..என்னான்னு கேளு. ஷீலா வாயெல்லாம் பல்லாக அவனைப் ...

Read More »

தொலைத்ததும் .. கிடைத்ததும் ..!

ஜெயஸ்ரீ ஷங்கர் யம்மா……நான் பாசாயிட்டேன் …..நான் பி.எஸ்.ஸி பாசாயிட்டேன்…..என்று சந்தோஷமாக குதித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையும் தன மகள் மலர்விழியைப் பார்த்ததும் இட்டிலிக்கு மாவு அரைத்துக் கொண்டிருந்த மங்களவல்லிக்கு, தான் என்றைக்கோ பார்த்த 16 வயதினிலே படத்தின் கதாநாயகி மயிலு தான் டக்கென்று நினைவுக்கு வந்தாள் . “அதுக்கென்ன இப்போ?” என்ற அதே குருவம்மாளின் பதில் வாய்வரை வந்தும் அடக்கிக் கொண்டு… “ம்ம்…ம்ம்…அது சரி….உள்ளார போயி உப்பு ஜாடிய எடுத்தா….” என்று இயந்திர கதியாக மாவுரலை சுற்றிக் கொண்டிருந்த அம்மாவைப் பார்த்து, “ஒனக்கு சந்தோஷப் ...

Read More »

வல்லமைப் பெண்மணி!

ஜெயஸ்ரீ ஷங்கர். பாரதி கண்ட புதுமைகளை  கனவுகளாய்  மறையாது நிழலாய் கண்ட மாதருக்குள் நிஜமாகக் நிமிர்ந்திடத் தானோ அழகாய் எழுந்தவள் நீ..! நமக்கேன் வம்பென பேசாமல் ‘சரவணன் மீனாட்சி’யில் மனம் மகிழ புரட்டு சீரியலுள் புதைந்து போகாமல் அகத்து பெண்மணிகளின் வல்லமையை கோபுரத்திலேற்றிக்   காட்டிய சாபமெனும் பெயரில் கல்லெனக் கிடந்திடாத வல்லமைத் தடம் பட்ட இன்னுமோர் அகலிகை நீ..! உறங்கிக் கிடக்கும் உயிர்களுக்குள் உரத்தைத் தூவி உயிர்ப்பை இருத்தி கடலுக்கடியில் பாறையாய் பதுங்காது வெட்ட வெளியிலே ஊர்வலமாக்கி உன்னதத்தின் மேன்மைகளை உழைப்பவளின் உன்னதத்தை பேனா ...

Read More »

மணிக்கொடி ஏற்றிய வெற்றிக்கொடி …!

ஜெயஸ்ரீ ஷங்கர்  “மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்… ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்…” இந்த சாதாரண சினிமாப் பாடலின் அசாதாரணமான வரிகள், ஒவ்வொருவரின் சாதாரண இதயத்திலும் கூட  அசாதாரண அதிர்வலைகளை நிச்சயமாக எற்படுத்தி இருக்கும். சாதிக்க நினைக்கும் இதயங்களுக்கு இந்த வரிகள் தான் ஊக்கபானமாக இருந்திருக்கும். இதைப் பற்றி சிந்தனை செய்யும் போதே, சிந்தனைகள்  செயலாகி செயல் புத்தகமாகி எழுதிய புத்தகம் அனைத்தையும் தாண்டிச் சென்று புகழ்க்கொடியை விரித்து “வெற்றிக் கொடி ” ...

Read More »

காதல் பாடம்…!

  ஜெயஸ்ரீ ஷங்கர்   கவின் முகில் மெல்லக் கடந்தது காடு…! இருள் சூழ் வேளை தனில் சூழ்ந்தது தென்றல் தொட்ட மரங்கள் சிலிர்த்தெழுந்தது பச்சை இலைகளுக்குள் கலகலப்பு…. சலசலப்பு…!. இச்சைக் கிளிகள் இரவோடு இரவாக அலகுரசிக் கொஞ்சும்போது…. குண்டு விழிகள் கெஞ்சும்..அஞ்சும்.. மிஞ்சியே சேர்ந்து விரிக்கும் சிறகு.. காதல் கிளிகளாய் மலர்ந்த விடியலில் உல்லாச ஊர்கோலம் மோகங்களோடு மேகங்களும் சந்தோஷ வானில் காதல் கொண்டு கட்டிக் கலக்கும்.. உயர் மலைகள் ஊடே புகுந்து ஆடை கலைந்து அழுதிடுங்கால் பூமி சிலிர்த்துச் சிரித்துப் பூக்கும் ...

Read More »

காதல் பூமியாய் காந்த பூமி..!

  ஜெயஸ்ரீ ஷங்கர். சுழன்று செல்லும் தேராக வெட்டவெளியில் வெள்ளோட்டம் ஆதவனும் வெண்மதியும் ஆளுக்கோர் திக்கில் பவனியாய் ஊர்கோலத் தேர் திருவிழா..! நாயகர்கள் வாழ்த்தோத ‘செவ்வாயில்’ புன்சிரிப்பும் கோளங்களின் நட்பும் பகையும் மாயைக் காதலைப் போற்றுமே…! கடலும் மலையும்  மண்ணும் காற்றும் அடைந்து திமிரும் எரிமலைகளும் மாயக் காதலுள் கட்டுண்டு கிடக்க… காதல்வானம் அள்ளித் தெளித்த காதல் வனமே பூகோளம்..! பூக்கோல காதல் விதைகள் முக்காலமும்..! வேரூன்றி எழுந்து நின்று பல்கிப் பெருகி கருகி அமிழ்ந்து மீண்டும் துளிர்க்கும் தளிராம் என்றும் சாகா வரம் ...

Read More »

ஆத்மாவின் மொழி.!

ஜெயஸ்ரீ ஷங்கர் நிமிர்ந்த உன்னிடம் சரண் அடைந்து சொல்கிறேன் சக்தியும் சிவனும் நீ..! அழிக்காது உயிரைக் காப்போம் அன்பில் நீர் ஊற்றுவோம் வா..! பிறந்தது ஓரிடம் வளர்ந்தது வேறிடம் இறந்திடும் ஒன்று கூடி..! தலை நீயும் கால் நானுமாய் உலகை அளப்போம் சேர் ! நித்தம் ஜெபிக்கும் எந்தன் மனம் நிந்தன் நாம மந்திரம்..! லட்சம் உருவைப் போற்றும் போதும் குறைந்த பட்சம் இது..! முன்னம் யாரோ…பின்னம் யாரோ…? இருப்பதில் மகிழ்ந்து விடு..! தயா…காருண்யம் சித்தம் கருணை பூரணம் பரி வாரணம்..! ஆனந்தம் ஆடும் ...

Read More »

நாலடிக் கோபுரங்கள்…!

ஜெயஸ்ரீ ஷங்கர் ஒவ்வொரு நாளும் நான் வீட்டை பூட்டி விட்டு தெருவைக் கடந்து வேலைக்குப் போவதற்குள் இன்று யாரையெல்லாம் சந்திக்க வேண்டி வருமோ என்ற எண்ணம் என் இதயத்தைப் பிடுங்கித் தின்னும். தெரிந்தவர்களால் ஒரு பிரச்சனையும் இல்லை. என்னைப் புதிதாகப் பார்ப்பவர்கள் ஏதோ ஒரு நாலு கால் பிராணியைப் பார்ப்பது போலவும் ,என்னை ஒரு பாவி போலப் பாவமாகக் கொத்தும் பார்வையை என் மீது வீசும் போது மட்டும் தான் எனக்கு, நாற்பது வயதாகியும் நாலடிக்கு மேலே வளராமல் நின்று விட்ட விஷயம் ஞாபகத்துக்கு ...

Read More »

ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 2

தொடுப்பவர் : ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம். எழுத்தாளரைப் பற்றிய விபரங்கள் 1968 குறுநாவல் சிற்பி :ஜோதிர்லதா கிரிஜா, சொந்த ஊர் : வத்தலக்குண்டு . பள்ளிப் பருவத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனவர்.. தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டதன் பின், 1968 இல் கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறுநாவல் வாயிலாக ஆனந்தவிகடனில் பெரியோர்க்கான எழுத்தாளராக அறிமுகம் கிடைத்தது. எழுதியுள்ளவை : 600க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 20 க்கும் மேற்பட்ட புதினங்கள், 60 க்கும் மேற்பட்ட குறும் புதினங்கள் , 60 ...

Read More »