கட்டுரைகள்

இக்காலகட்டத்தில் காரைக்காலம்மையார் பற்றிய பெண்ணியல் நோக்கு

கௌசி, ஜெர்மனி பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி அறவாநீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க உடலுக்கு அழிவு உண்டு ஆன்மாவுக்கு அழிவில்லை. நிச்சய மோட்சம் கிடைத்து இறைவன் காலடி சேர்ந்தால் அன்றி உயிர்கள் மீண்டும் மீண்டும் தம்முடைய பாவ புண்ணியங்களுக்கேற்ப பிறப்பெடுத்துக் கொண்டிருக்கும் என்பது இந்துமத நம்பிக்கை. உலக வாழ்க்கையை விரும்பாத அடியார்கள் மீண்டும் பிறப்பெடுப்பதை விரும்பாது மோட்சம் கிடைப்பதையே விரும்புகின்றார்கள். பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மீண்டும் பிறப்புண்டானால் சிவனடியாராகவே இருந்து உன்னை ...

Read More »

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 25

-மேகலா இராமமூர்த்தி ஏன் இன்னும் இலக்குவன் மீளவில்லை? ஒருவேளை சீதையை கவர்ந்துசென்ற அரக்கர்களைக் கண்டு அவர்களோடு வெஞ்சமர் புரியத் தொடங்கிவிட்டானோ? இராவணன் என் இளவலையும் கவர்ந்துசென்று கொன்றுவிட்டானோ? என்றெல்லாம் எண்ணிக் கவன்ற இராமன், தன்னைத்தானே வாளால் குத்திக்கொண்டு மாள எத்தனித்த வேளையில், அயோமுகியால் தூக்கிச்செல்லப்பட்ட இலக்குவன் அவளின் வசிய வித்தையிலிருந்து மீண்டு, சூர்ப்பனகையின் நாசியை அறுத்து அவளைத் தண்டித்ததுபோலவே, அயோமுகியின் நாசியையும் அறுத்தான். அவள் வலிதாளாது அலறிய பேரொலி இராமன் செவிகளில் விழுந்தது. இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு எழுகின்ற இந்தப் பேரொலி ஏதோ ஓர் ...

Read More »

நினைத்தேன் வந்தாய் நூறு வயது – மக்கள் திலகம் பிறந்த நாள்

பாஸ்கர் அது 1958 ஆம் வருடம். மருதூர் கோபாலக்ருஷ்ண மேனன் ராமசந்திரன் அந்த திரைப்படத்தில் ஒரு வசனம் பேசுவார். பட்டேனே பல துயரம், கெட்டேனா… இதை எண்ணி தான் புரட்சி கூட்டத்தில் சேர்ந்தேன். அண்ணா என எம் என் ராஜம் அலறுவார். கவலைப்படாதே மனோஹரி… அது ஆளை கொல்லும் ஆயுத புரட்சி அல்ல. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை என்பார். என்னை நம்புகிறாயா சகோதரி? நான் மட்டும் இல்லை அண்ணா.. இந்த நாடே உங்களை தான் நம்பியிருக்கிறது. மக்கள் திலகம் பேசி முடிப்பார். கொட்டகையில் ...

Read More »

தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  மெல்பேண், ஆஸ்திரேலியா மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் “தைபிறந்தால் வழிபிறக்கும்” என்று தமிழர்கள் சொல்லுவது வழக்கமாகும். அந்த வழக்கம் தொடர்ந்து வரவேண்டும் என்பதுதான் பலரின் ஆசையாகும். ஆனால் சென்றவருடம் பொங்கலைப் பொங்கி மகிழ்ந்த பின்னர் கண்ணூறு பட்டதுபோல் சீனாவின் சீதனம் வந்திறங்கியது. சீதனத்தின் சீரழிவால் வாழ்வே தடம்புரண்டு நிற்கும் நிலை ஆகிவிட்டது. பொங்கல் இப்பொழுது வந்து நிற்கிறது. பொங்குவதா விடுவதா? பொங்கினால் பகிர்ந்து கொடுத்து மகிழலாமா? அல்லது அவரவர் பாட்டில் வீட்டிலே பொங்கி நிற்பதா என்றெல் ல்லாம் எண்ணத் தோன்றுகிறது ...

Read More »

கடந்து போயினும் மறந்து போகுமோ 2020?

சக்தி சக்திதாசன் லண்டன் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் திகதி சென்னையை நோக்கிய எனது பயணத்தின் முக்கிய நோக்கம், என் மனைவியின் நீண்டநாள் கனவு, தன்னுடைய பிறந்த மண்ணை விட்டு புலம் பெயர்ந்த பின்னால் ஒருமுறையாவது ஆண்டு தொடங்கும் போது தான் பிறந்த மண்ணில் இருக்க வேண்டும் எனும் அவாவிலே எழுந்ததாகும். 28ஆம் திகதி சென்னையைச் சென்றடைந்த நாம் 31ஆம் திகதி எனது மனைவி பிறந்த ஊரான தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் உள்ள கிருஸ்ணாபுரத்தைச் சென்றடைந்து 2020இன் புத்தாண்டுப் பிறப்பை கிருஸ்ணாபுரத்தில் கொண்டாடினோம். ...

Read More »

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 24

-மேகலா இராமமூர்த்தி பன்னசாலையில் சீதையைக் காணாது இராமனும் இலக்குவனும் கலங்கி நின்ற வேளையில் தரையில் தெரிந்த தேர்ச்சக்கரச் சுவடுகளைச் சுட்டிக்காட்டிய இலக்குவன், இவற்றை நாம் பின்தொடர்ந்து செல்வோம் என்று கூறவே இராமனும் அக்கருத்தை ஏற்று இலக்குவனோடு அச்சுவடுகளைத் தொடர்ந்து சென்றான். ஆனால் சற்றுத் தூரத்திலேயே அச்சுவடுகள் காணாமல் போய்விட்டதைக் கண்டு திகைத்தனர் இருவரும். ”இனி நாம் என்ன செய்வது இளவலே?” என்று இராமன் வருந்த, ”அண்ணா! தேர்ச்சுவடு மறைந்தால் என்ன…தேர் தெற்கு நோக்கித்தான் சென்றிருக்கின்றது என்பதை நாம் அறிந்துகொண்டுவிட்டோம் அல்லவா? ஆதலால், தென் திசையிலேயே ...

Read More »

பன்முக ஆளுமை கொண்ட பேரறிஞர்! 

-மேகலா இராமமூர்த்தி தமிழிலக்கிய வரலாறு படைத்த பேராசிரியர் மு. வரதராசனார் எனும் மு.வ.வை நம்மில் பலர் நன்கறிவோம். அதேசமயம் தமிழ் இலக்கிய வரலாற்றை மிக விரிவாக 9ஆம் நூற்றாண்டு தொடங்கி 17ஆம் நூற்றாண்டுவரை நூற்றாண்டு வாரியாக விரிவாகவும் விளக்கமாகவும் எழுதிய இலக்கிய வரலாற்றறிஞர் மு. அ. எனப்படும் மு. அருணாசலனாரை நம்மில் பலருக்குத் தெரியாது. அருணாசலனார் இலக்கிய வரலாற்றறிஞர் மட்டுந்தானா? இல்லை! கட்டுரையாளர், சொற்பொழிவாளர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், தமிழிசை ஆய்வாளர், சைவசமய அறிஞர், காந்தியச் செயற்பாட்டாளர் எனும் பன்முக ஆளுமை கொண்ட பேரறிஞராவார். ...

Read More »

தாடி

பாஸ்கர் சேஷாத்ரி இவர் தாடி கண்ணன். எண்பது வயது இளைஞர். எங்கள் குடும்ப தூரத்து உறவு. அம்பது வருஷத்துக்கும் மேலான நட்பு. திரிலோக சஞ்சாரி. பிரம்மச்சாரி. குடும்பக் குழந்தைகளுக்கு இவர் தாடி தாத்தா. எல்லாத் தகவல்களும் இவர் விரல் நுனியில். பழைய பீம்சிங்கில் ஆரம்பித்து இன்றைய பீ. சி. ஸ்ரீராம் வரை அவரிடம் தகவல் உண்டு.. என் மேல் மகா ப்ரியம். அய்யா என்று என் குடும்பம் என்னை அழைக்கும். இவரும் அப்படி அழைக்கும் போது என் தந்தை நினைவு வரும். வாஞ்சைக்கும் அன்புக்கும் ...

Read More »

ஆன்லைன் வகுப்புகளும் அதன் பாதகங்களும்

செந்தில்குமார் தியாகராஜன், பேராசிரியர், எக்ஸல் பிசியோதெரபி கல்லூரி, குமாரபாளையம், நாமக்கல், மெயில் : [email protected] கட்டுரைச் சுருக்கம் சமீப காலமாக தினமும் நாம் வாழ்ந்துகொண்டிருந்த வாழ்க்கையை வாழ முடியவில்லை அதாவது நாம் வாழ்ந்துகொண்டிருந்த அன்றாட வாழ்க்கை முறையிலிருந்து மாறுபட்டு, அரசு கூறும் வாழ்க்கைமுறையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குறைந்தது ஆறு மணியிலிருந்து எட்டு மணி நேரம் கணிப்பொறி முன்பு அமர்ந்து வேலை  செய்வதோ மற்றும் பள்ளி ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்களைக் கவனிப்பது இன்றைய சூழலில் கட்டாயமாகி இருக்கிறது. கணிப்பொறி முன் அமர்ந்து வெகு நேரம் ...

Read More »

கொங்குதேர் வாழ்க்கை : தொ.ப

முனைவர் ம. இராமச்சந்திரன் உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ் ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி. மதுரை தியாகராசர் கல்லூரி பல சிறப்புகளைக் கொண்டு தனக்கான ஆளுமையை உருவாக்கிக் கொண்டது. அதற்குப் பல அறிஞர்கள் காரணமாக இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் பேராசிரியர் தொ.பரமசிவன். இக்கல்லூரியில் நான் 1995-2000 ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை படித்துக்கொண்டு இருந்தேன். தியாகராசர் கல்லூரி சைவ மரபிற்கும் தமிழ் அறிஞர்களுக்கும் பெருமக்களுக்கும் பெயர்பெற்ற கல்லூரி. எப்போதுமே மரபின் ஆளுமையும் ...

Read More »

எதிர்காலத்தில் மூளையும் கொந்தல் செய்யப்படுமா?

முனைவர். நடராஜன் ஸ்ரீதர்  ஆற்றல் அறிவியல் துறை  அழகப்பா பல்கலைக்கழகம் , காரைக்குடி  [email protected] முன்னுரை சமீப காலங்களில் கணினிகள் கொந்தல் செய்யப்படுவது போல எதிர்காலத்தில் மனிதனின் மூளையும் கொந்தல் செய்யப்படுமா என்பது குறித்து இந்த கட்டுரை ஆய்வு செய்கிறது. கணினி கொந்தல் கணினிகள் கொந்தல் செய்யப்படுவது என்பது சமீப காலங்களில் வாடிக்கையாக ஒன்றாக அமைந்துவிட்டது. கணினிகள்  நமது அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றாக அமைந்துவிட்டது. நாம் பயன்படுத்தும் திறன்பேசி கூட கணினியாகவே செயல்படுகிறது. ஒரு காலத்தில் ஆய்வகங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கணினி இன்று ...

Read More »

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 23

-மேகலா இராமமூர்த்தி சீதையை அவள் தங்கியிருந்த பன்னசாலையோடு பெயர்த்தெடுத்துக்கொண்டு தன் தேரில் ஏறிய இராவணன், தேரை விரைந்து செலுத்து என்று தேர்ப்பாகனுக்குக் கட்டளையிட்டான். இந்த அசம்பாவிதங்களைச் சிறிதும் எதிர்பாராத சீதை, தீயில் வீழ்ந்து வெந்தழியும் கொடிபோல் துடித்து எழுந்தாள்; அழுதாள்; அரற்றினாள்; அறமே என்னை இத்துன்பத்திலிருந்து விரைந்து காத்திடு என்று முறையிட்டுக் கதறினாள். விடு தேர் என வெங் கனல்      வெந்து அழியும் கொடிபோல் புரள்வாள்      குலைவாள் அயர்வாள் துடியா எழுவாள்      துயரால் அழுவாள் கடிதா அறனே இது      ...

Read More »

கல்லூரிப் பொதுத்தமிழ்ப் பாடத்தைக் கற்கவும் கற்பிக்கவும் கணினிப் பயன்பாடு

Dr. ச. கண்மணி கணேசன் (ப.நி.) முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர் ஸ்ரீகாளிஸ்வரி கல்லூரி, சிவகாசி. 626189, இந்தியா. [email protected] அறிமுகம்  பள்ளியிறுதித் தேர்வு முடித்துக் கல்லூரிக்கு வரும் மாணவர்  கற்றுக்  கொள்ள வேண்டிய பொதுத்தமிழைக் கணினி மூலம் எவ்வாறு கற்கலாம்; கற்பிக்கலாம் என்பதை அலசிப் பார்ப்பதே  இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். எழுதுவதற்கு மட்டுமே முதன்மை கொடுக்கும் போக்கு கல்லூரிக் கல்வியில் பல்லாண்டு காலமாக நிலைத்திருப்பதால்; தமிழ்க் கல்வியின் தரத்தைக் காப்பாற்ற வேண்டிய அவசரத்தேவை உள்ளது. கல்லூரியில் தமிழ் கற்பித்த அனுபவம் இக்கட்டுரையின் ...

Read More »

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 22

-மேகலா இராமமூர்த்தி இராவணனின் வீர பராக்கிரமங்களை இலைக்குடிலில் அமர்ந்திருக்கும் துறவியார் விதந்தோதுவதைக் கண்ட சீதை, அதனைச் சிறிதும் இரசிக்காது, ”ஐய! உடம்பையும் மிகையாகக் கருதும் இயல்புடைய துறவி நீர்! அப்படியிருக்க வேதங்களையும் வேதியர்களின் அருளையும் விரும்பாமல், மன்னுயிர்களைக் கொன்று புசிப்பவர்களும் பாதக வினைகளையே நன்றெனப் புரிபவர்களுமாகிய அரக்கர்தம் பதியில் வதியக் காரணம் என்ன?” என்றாள் வியப்போடு! வேதமும் வேதியர்      அருளும் வெஃகலா சேதன மன்உயிர்      தின்னும் தீவினைப் பாதக அரக்கர்தம்      பதியின் வைகுதற்கு ஏது என் உடலமும் மிகை      ...

Read More »

அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 26 (வேலன்)

ச. கண்மணி கணேசன் (ப.நி.), முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர், ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி. முன்னுரை அகஇலக்கியச் சிறுபாத்திர வரிசையில் முத்தாய்ப்பாக இடம் பெறுபவன் வேலன். அவன் கூறியதாகத் தலைவியும் தோழியும் தம்முள்ளும்;  தாயிடமும்  தலைவனிடமும் பேசுகின்றனர். தலைவன் தேர்ப்பாகனிடம் பேசும் போது அமையும் பின்புலத்திலும் வேலன் இடம் பெறுகிறான். தலைவியும் தோழியும் நல்கும் சிறுபாத்திரத் தகுதி “வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்” (நற்.- 34) என்று தோழி பேசுங்கால் வேலன் வெறியாட்டின் போது அணங்காகிய முருகனிடம் வேண்டியமை பற்றிக் கூறுகிறாள். அதுபோல் ...

Read More »