இலக்கியம்

இலக்கிய குண்டாயிசமும் கள்ள மெளனமும் – மதுமிதா நேர்காணல் – 2

சந்திப்பு: ஜெயந்தி சங்கர் கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மதுமிதாவுடன் ஜெயந்தி சங்கரின் உரையாடல் தொடர்கிறது. மதுமிதா தனது இலக்கியப் பயணம், பல்வகை அனுபவங்கள், சிக்கல்கள், சவால்கள் உள்ளிட்ட பலவற்றையும் இந்த அமர்வில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். இலக்கிய உலகில் இருக்கும் அரசியலையும் கள்ள மெளனத்தையும் உடைத்துச் சொல்கிறார். விறுவிறுப்பான இந்த உரையாடலைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள். முந்தைய நேர்காணல்கள்: மதுமிதாவின் பயணங்கள் – ஜெயந்தி சங்கர் நேர்காணல் – 1 சமஸ்கிருதம், செத்த மொழியா? – மதுமிதா நேர்காணல் (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே ...

Read More »

ஆன்மீக ஒளிபரப்பிய ஆற்றலுடை யோகர் சுவாமிகள் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர் மெல்பேண், ஆஸ்திரேலியா.      சித் என்றால் அறிவு, ஞானம், தெள்ளிய பார்வை, கூர் நோக்கு, விரிந்த நோக்கு என்று பொருள் சொல்லப்படுவதால் – சித்தர்களை அறிவாளிகள், ஞானிகள்,  தெளிந்த பார்வையினை உடையவர்கள், கூர்ந்த நோக்கினை உடையவர்கள், கடந்து சிந்திப்பவர்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா! சித்தர்கள் என்பவர்கள் மானிடம் செழித்திட வாழ்ந்த மகா ஞானிகள் எனலாம். “அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்னும் தத்துவமே அவர்களது இறுக்கமான தத்துவமாய் இலங்கியது எனலாம். எதையும் விரும்பார். எதையும் தமக்காக்கிட எண்ணார். மற்றவர் நலனுக்காய் ...

Read More »

படக்கவிதைப் போட்டி – 300 (நிறைவு)

அன்பிற்கினிய நண்பர்களே! படக்கவிதைப் போட்டியைத் தொடங்கி, இதோ 300ஆவது வாரத்தைத் தொட்டுவிட்டோம். ஏராளமான புதிய கவிஞர்களையும் புகைப்படக் கலைஞர்களையும் அடையாளம் காண, இந்தப் போட்டி உதவியுள்ளது.  இதில் ஊக்கத்துடன் பங்கேற்ற, இதற்குத் துணை நின்ற கவிஞர்கள், தங்கள் புகைப்படங்களை வழங்கிய புகைப்படக் கலைஞர்கள், படங்களைத் தேர்ந்தெடுத்து வழங்கிய சாந்தி மாரியப்பன், ராமலக்ஷ்மி உள்ளிட்ட தேர்வாளர்கள், நடுவராகத் தொடர்ந்து சீரிய செயலாற்றி வரும் மேகலா இராமமூர்த்தி. சில வாரங்களுக்கு நடுவராகச் செயலாற்றிய கவிக்கோ ஞானச்செல்வன், தொடர்ந்து வெளியிட்ட பவளசங்கரி, வல்லமை ஆசிரியர் குழுவினர் உள்ளிட்ட அனைவருக்கும் ...

Read More »

படக்கவிதைப் போட்டி 299இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி புகைப்படக் கலைஞர் திரு. எஸ். இராமலிங்கம் கலைநுணுக்கத்தோடு எடுத்திருக்கும் சிலைகளின் நிழற்படத்தை அவரின் படத்தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 299க்கு வழங்கியுள்ளார் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றி! சொல்லில் கலைவண்ணம் ஊட்டிக் காலத்தால் அழியாப் பாடல்களைப் படைத்தளித்த பைந்தமிழ்ப் புலவர்களைப்போல், கல்லில் கலைவண்ணம் காட்டிக் காலத்தால் அழியாக் கவின் சிலைகளைப் படைத்த  சாதனையாளர்கள் நம் சிற்பிகள்; அவர்களைப் போற்றுதல் நம் கடன்! இந்தச் சிற்பங்களின் நேர்த்தியை, இவற்றை வடித்த சிற்பிகளின் சீர்த்தியைத் தீந்தமிழ்ச் சொல்லெடுத்துப் பாட வருகிறார்கள் நம் ...

Read More »

எளிய வாழ்க்கையின் இனிமையை உணர்த்திய அறிஞர்

மேகலா இராமமூர்த்தி மாட மாளிகைகளில் ஆடம்பரமாக வாழ்வதே வாழ்க்கை என்று எண்ணும் மானுடரே இம்மன்னுலகில் அதிகம். எளிய வாழ்க்கையை மேற்கொள்வதும் அதில் தன்னிறைவு காண்பதும் பலராலும் சிந்தித்துப் பார்க்கவும் இயலாத ஒன்று. இப்படிப்பட்ட மனிதர்களுக்கு மத்தியில், வேண்டாமை அன்ன விழுச்செல்வம் எனும் வள்ளுவத்தை நெஞ்சில் நிறுத்தி, தேவைகளைக் குறைத்து நிறைவோடும் நிம்மதியோடும் வாழும் மனிதர்களும் அத்தி பூத்தாற்போல் ஆங்காங்கே தென்படத்தான் செய்கின்றார்கள். அத்தகையவர்களில் ஒருவர்தாம் ஹென்றி டேவிட் தொரோ (Henry David Thoreau) எனும் மேனாட்டுச் சிந்தனையாளர். அவரின் வாழ்க்கையை நாம் அறிந்துகொள்வது எளிமையிலும் ...

Read More »

காப்பீட்டுத் திட்டங்களின் வகைகள் – ஒரு சிறு விளக்கம்

வெ. சுப்ரமணியன் காப்பீட்டுத் திட்டங்கள் (Insurance plans) குறித்து மக்களிடையே போதிய  விழிப்புணர்வு இல்லை. இன்னும் பொதுமக்களில் பலருக்கும் ஆயுள் காப்பீடு (Life Insurance), விபத்துக் காப்பீடு (Accidental Insurance) மற்றும் ஆரோக்கியக் காப்பீடு (Health Insurance) ஆகியவற்றுக்கிடையில் உள்ள வேறுபாடுகளைக் குறித்த சரியான புரிதல் இல்லை. சில மாதங்களுக்கு முன் சென்னையில் ஒரு பிரபல மருத்துவமனையின் சேர்க்கைப் பிரிவில் (admission section) எனக்கு முன் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி நின்றிருந்தார். அவர் அங்கிருந்த பணியாளருடன் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடியதிலிருந்து அவர் படித்த ...

Read More »

கோந்து ஸார் (சிறுகதை)

நிர்மலா ராகவன் கோவிந்தசாமி என்ற அவர் பெயர் சிறுகச் சிறுகத் தேய்ந்து,  கோய்ந்து, கோந்து என்று மருவிவிட்டது. பெயர்தான் கோந்தே தவிர, இந்தக் கோந்து எவருடனும் ஒட்டமாட்டார். அதனால் அவரைக் காக்காய்பிடிப்பது கடினம். இந்தத் தகுதிதான் அவருடைய தொழிலுக்குச் சௌகரியமாக இருந்தது. பாடகிகளோ, நாட்டியமணிகளோ கலை விமர்சகரான அவரைத் தம் இல்லங்களுக்கு விருந்துக்கு அழைத்து, அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து, ஜரிகை வேஷ்டி, மனைவிக்கு பட்டுப்புடவை என்று தாம்பாளத்தில் வைத்துக் கொடுப்பது என்றெல்லாம் பலவாறாக முயன்றும், அவர்களால் எந்தப் பட்டமும் பெற முடியவில்லை. அதற்கு இயற்கையிலேயே ...

Read More »

பெருவெடிப்பு நேர்ந்து பிரபஞ்சம் தொடங்கவில்லை; எப்போதும் அது இருந்துள்ளது

சி. ஜெயபாரதன். B.E. (Hons) P.Eng (Nuclear), கனடா காலக் குயவன் ஆழியில் பானைகள்  செய்ய களிமண் எடுத்தான்  கருந்துளைச் சுரங்கத்தில் ! பெருவெடிப்பில் பிரபஞ்சம் பிறக்கவில்லை. பெரு வெடிப்புக்கு மூல ஒற்றைத்துவ                                                                நுட்பத் திரட்சி எப்போது, எப்படி  வடிவானது ? ...

Read More »

குறளின் கதிர்களாய்…(342)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(342) சிறைநலனுஞ் சீரு மிலரெனினும் மாந்த ருறைநிலத்தோ டொட்ட லரிது. – திருக்குறள் – 499 (இடனறிதல்) புதுக் கவிதையில்... மக்கள் பாதுகாப்புக்கு அரணாகிய நலனும் வலிமையும் பிற சீரும் இலராயினும், அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தாக்குதல் மிகவும் சிரமமான செயலாகும்…! குறும்பாவில்... அரணாம் நலனும் பிற சீர்களும் இல்லாதவர்களானாலும் அவர்தம் இருப்பிடம் சென்று தாக்குதல் மிகவும் அரிது…! மரபுக் கவிதையில்... மக்களுக் கரணாம் நலனுடனே மற்றைச் சிறப்பெலாம் இலராயுள அக்கம் பக்கம் நாட்டினரை ஆற்றாப் பகைமை கொண்டேதான் ...

Read More »

படக்கவிதைப் போட்டி – 299

அன்பிற்கினிய நண்பர்களே! கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? புகைப்படக் கலைஞர் எஸ்.இராமலிங்கம் எடுத்த இப்படத்தை அவர்களது தொகுப்பிலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (21.03.2021) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு ...

Read More »

படக்கவிதைப் போட்டி 298இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி புகைப்படக் கலைஞர் திருமிகு. ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படம் வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டுப் படக்கவிதைப்போட்டி 298க்கு வழங்கப்பட்டிருக்கின்றது. கையிலே கோல்வைத்துக் குறிசொல்லும் பெண்மணியை இப்படத்தில் காணுகின்றோம். இவ்வாறு குறிசொல்லும் பெண்டிரை ’அகவன் மகளிர்’ என்றழைத்தனர் அன்று. வெள்ளியால் செய்த பூணிட்ட சிறுகோலைத் தாங்கியிருக்கும் இம்மகளிரை, ’வெண்கடைச் சிறுகோல் அகவன் மகளிர்’  (குறுந்: 298) என்கிறது குறுந்தொகை. தலைவியின் காதலை வீட்டுக்குத் தெரிவிக்க விரும்பும் தோழி, குறிசொல்ல வந்த அகவன் மகளைப் பார்த்து, ”சங்குமணி போன்ற நரைத்த நெடுங்கூந்தலையுடைய அகவன் மகளே! ...

Read More »

மகாத்மா காந்தியும் மாவீரன் பகத் சிங்கும்

ஜோதிர்லதா கிரிஜா மாவீரன் என்று அழைக்கப்படும் பஞ்சாப் மாநில இளைஞர் பகத் சிங்  1931 ஆம் ஆண்டில், மார்ச் 23 ஆம் நாளில் இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த இங்கிலாந்து அரசால் தூக்கிலிடப்பட்டார். மகாத்மா காந்தி மனம் வைத்திருந்தால் பகத் சிங்கின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று இன்றளவும் கம்யூனிஸ்ட் தோழர்கள் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள். இதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பது உண்மையான வரலாற்றை யறிந்தவர்களின் நிலைப்பாடாகும். இதைப் பற்றி விவாதிப்பதற்கு முன்னால், பகத் சிங் பற்றிய வரலாற்றை அறிய வேண்டியது முக்கியம். பகத் சிங்  ...

Read More »

கடல் அலை அடிப்பில் மின்சக்தி உற்பத்தி, கடல் நீரைக் குடிநீராய் மாற்றி

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா சூரிய மின்சக்தி சேமிக்க, நூறு மெகாவாட் பேராற்றல் உடைய ஓரரும் பெரும் மின்கலம் தாரணியில் உருவாகி விட்டது வாணிபப் படைப்புச் சாதனமாய்! பசுமைப் புரட்சிச் சாதனையாய் சூழ்வெளித் தூய புது எரிசக்தி! மீள்சுழற்சிக் கனல்சக்தி! பரிதிக் கனலும், கடல் அலையடிப்பும் பிரபஞ்சக் கொடை வளமாய் தாரணிக்கு வற்றாத அளவில் வாரியம்  அனுப்பும் மின்சக்தி! கடல்நீரைக் குடிநீராக்கின் குடிநீருக்கும் பஞ்ச மில்லை! வானூர்தி விண்ணில் பறக்குது! பரிதி சக்தியால்! எரி வாயு இல்லாமல் பறக்கும்! பகலிலும் இரவிலும் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(341)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(341) சொலல்வல்லன் சோர்வில னஞ்சா னவனை இகல்வெல்லல் யார்க்கு மரிது. – திருக்குறள் – 647 (சொல்வன்மை) புதுக் கவிதையில்... எண்ணியதைப் பிறர் ஏற்றிடும்படிச் சொல்லும் ஆற்றல் மிக்கவன், சொல்லிடும் செய்தி சொல்லிடக் கடினமானதெனிலும் சோர்வுறாமல் சொல்பவன், கேட்பவர் பகையாளர் என்றாலும் பயமில்லாதவன் எனப் போற்றப்படும் இவனை மாறுபாட்டால் வெல்வதென்பது எவர்க்கும் மிக அரிதாகும்…! குறும்பாவில்... புரியும்படி எடுத்துச்சொல்வதில் வல்லவனாய் கடினமான செய்தியையும் சோர்வுறாமல் சொல்பவனாய் அஞ்சாதவனை மாறுபாட்டால் வெல்வதரிது…! மரபுக் கவிதையில்... சொல்ல எண்ணிடும் சேதியினைச் சொல்லும் வகையில் ...

Read More »

படக்கவிதைப் போட்டி – 298

Ramalakshmi

அன்பிற்கினிய நண்பர்களே! கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? புகைப்படக் கலைஞர் ராமலக்ஷ்மி எடுத்த இப்படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து  தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (14.03.2021) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி ...

Read More »