கவிதைகள்

அப்பா

பாஸ்கர் சேஷாத்ரி கொஞ்சம் கொஞ்சமாக அப்பா போலாகிக்கொண்டு இருக்கிறேன் . அவரைப் போல, வருவோர் போவோரை ஓரக்கண்ணால் பார்க்கிறேன் சம்பந்தமில்லாமல் அவ்வப்போது ம்ம் கொட்டுகிறேன் எட்டாங்கிளாஸ் இங்கிலீஷ் எவனுக்கு வருமென்கிறேன் பேரனிடம் அவன் அப்பனை வளர்த்த கதை சொல்கிறேன் மருமகள் எனினும் தம்பெண் போலுண்டா என்கிறேன். அவரைப்போலக் காபி குடித்து டபராவை வைக்கிறேன் ஒரு காதைக் கூர்ப்பாக்கி, தலை சாய்த்துக் கேட்கிறேன் இட்ட உணவை அவர் போல மிச்சமின்றி வைக்கிறேன் பலமிழிந்த கால்களுடன் அவர் போல நடக்கிறேன் வெற்றிலையும் பாக்கும் வாழ்க்கை என நினைக்கிறேன் ...

Read More »

தேர்தல் நேரப் பட்சிகள்

ஆ. கிஷோர் குமார் எத்துணை கூட்டம் எத்துணை கட்சிகள் அத்துணை கட்சிகளும் தேர்தல் நேரப் பட்சிகள்.. தவறியும் வருந்துவதில்லை தவறுக்குத் துணிந்த மனிதன்.. மறந்தும் மண்ணில் விழாத நெடுவானம் போல… கட்சிகளே காகங்களாய் மாறி .. சில இரையும் சில கரையும் சில நம் இருப்பிடம் சுற்றியே உறையும்.. ஓட்டு எனும் இரை கொத்தச் சில, சுற்றிச் சுற்றி வட்டமிடும்.. மூளைச் சலவையைச் சில நெற்றிப்பொட்டு தொட்டே செய்ய முனையும்… இன்று நம்மிடம் முதலீடு செய்பவன் நாளை மொத்தத்தையும் வட்டியுடன் உறிவான்.. சற்றே விழித்திருப்போம் அழுத்தும் ஆள்காட்டி விரல் அன்றொரு ...

Read More »

குறளின் கதிர்களாய்…(338)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(338) மனத்தி னமையா தவரை யெனைத்தொன்றுஞ் சொல்லினால் தேறற்பாற் றன்று. – திருக்குறள் – 825 (கூடா நட்பு) புதுக் கவிதையில்... மனதினால் நம்மோடு ஒன்றி அமையாத ஒருவரை, அவர் சொல்லும் சொற்களை வைத்து யாதொரு செயலிலும் தேர்ந்து தெளிதல் முறையானதல்ல…! குறும்பாவில்... மனதால் ஒன்றா ஒருவரை அவர்பேசும் பேச்சை வைத்துச் செயலெதிலும் தேர்ந்து தெளிதல் முறையன்று…! மரபுக் கவிதையில்... மனதது பொருந்த வரும்நட்பே மன்னும் என்றும் வாழ்வினிலே, நினைவில் கொண்டிடு மனமொன்றாய் நெருங்கா நிலையில் ஒருவர்தன் இனிதாய்ப் பேசிடும் ...

Read More »

இவனை என்செய்வேன்!

ஏறன் சிவா உலகத்தில் முதல்மொழியெம் முத்தமிழ்தான் என்பான் — சொல் ஒன்றுமட்டும் உதிர்த்துவிட்டு ஆங்கிலமே தின்பான்! இலக்கணத்தில் நமக்கிங்கோர் இணையில்லை என்பான்! — அதில் இருக்குமொரு சூத்திரத்தில் ஏதோன்றும் அறியான்! இலக்கியங்கள் நம்தலைமேல் இருக்குமுடி என்பான் — அதில் எந்நூலும் பொருள்படித்து இதுவரையில் அறியான்! தாய்மொழிக்குத் தாய்மொழியெம் தமிழ்மொழிதான் என்பான் — ஒரு நாய்கூட “வள்”ளென்கும் இவன்தமிழைக் கொல்வான்! கலைகட்கெலாம் தாய்க்கலையெம் தமிழ்க்கலையென் றுரைப்பான் — நீ ஒருகலையை உருப்படியாய் கல்லென்றால் முறைப்பான்! உலகுக்கே ஒழுக்கம்தந்தோர் தமிழரென்று கதைப்பான் — அந்த ஒழுக்கத்தை இன்றிவனே ...

Read More »

அஞ்சலி செலுத்த வந்தவன்

பாஸ்கர் போன வாரம் கூட இவனோடு ஒரு முரண் இனி விவாதம் செய்ய முடியாது . எல்லோரும் எல்லோரையும் பார்த்தார்கள் . எப்படி வருகிறது அழுகை , உடலை பார்த்தவுடன் எல்லோரும் நல்லவர்கள் இங்கே . செத்த பின் இங்கு எல்லாம் பரஸ்பரம் . ஒருவர் மாலையை சரி செய்தார் , பள்ளியில் படித்தவராம் ஒருவர் அந்த சிரிப்பே வாடவில்லை என்றார் , என்ன பாக்கியோ? யாரோ நின்று ஈக்களை விரட்டிக்கொண்டிருந்தார் . யாருமே இங்கே சிரிக்கக்கூடாது . பிற எதை செய்தாலும் கேள்வியில்லை ...

Read More »

குறளின் கதிர்களாய்…(337)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(337) அறிவின்மை யின்மையு னின்மை பிறிதின்மை யின்மையா வையா துலகு. – திருக்குறள் -841 (புல்லறிவாண்மை) புதுக் கவிதையில்... இல்லாமை பலவற்றுள்ளும் ஒருவனுக்கு மிக்க இல்லாமை அறிவில்லாமையாகும்.. மற்றைப் பொருள் இல்லாமை போன்றவற்றைப் பெரிதாய் எடுத்துக்கொண்டு இகழார் உலகிலுள்ளோர்…! குறும்பாவில்... இல்லாமைகளில் கொடிய இல்லாமை அறிவில்லாமையே, பிற இல்லாமைகளைப் பெரிதுபடுத்தி ஒருவனை இகழார் உலகோர்…! மரபுக் கவிதையில்... அறிவ தொருவனுக் கில்லாமையே அனைத்திலும் கொடிய இல்லாமையே, பிறவெலாம் இதனை மிஞ்சிவிடும் பெரிய இலாமை இல்லையாமே, உறவுகள் முதலா உடனிருக்கும் உற்ற ...

Read More »

சுடர்விடும் நின் புகழ்!

முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மா.மன்னர் கல்லூரி,புதுக்கோட்டை. (சென்னை – அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் சாந்தா அம்மையார் அவர்களுக்கு அஞ்சலி) சாந்தத்தைப் பிறர்க்குத் தந்த சக்தியின் வடிவம் நீங்கள் காந்தமாய் நின்ற புற்று நோயை உங்கள் சாந்தத்தால் விரட்டினீர்கள் பாந்தமாம் உங்கள் பண்பு பாரிலே யார்க்கும் உண்டோ? பந்தமில் உறவுக்கிங்கே பாசமாம் தாயுமானீர் ஏதமில் எங்கள் தாயே! ஏழையேம் எம்மைவிட்டு ஏன் நீங்கள் வானம் சென்றீர்? உம்மை யாம் இழந்ததாலே ஏதிலிகள் ஆனோம் இன்று! இன்பத்தைக் காண்போம் என்று? புற்றுநோயினை அழித்துப் பலரின் வாழ்வினைச் செழிக்கச் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(336)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(336) தன்றுணை யின்றாற் பகையிரண்டாற் றானொருவ னின்றுணையாக் கொள்கவற்றி னொன்று;. – திருக்குறள் – 875 (பகைத்திறம் தெரிதல்) புதுக் கவிதையில்... உதவிடும் துணையில்லை வருத்திடும் பகை இரண்டு, இந்நிலையில் தனியே இருக்கும் ஆட்சியாளர் பகையிரண்டில் ஒன்றைத் தனக்கு இனிய துணையாய் ஆக்கிக் கொள்க…! குறும்பாவில்... தனக்குத் துணையில்லை பகையிரண்டு, தனியான ஆட்சியாளர் பகையில் ஒன்றைத் தனக்கு நற்றுணையாக்கிக் கொள்க…! மரபுக் கவிதையில்... உதவிடத் தனக்குத் துணையில்லை உறுபகை யுள்ளது இரண்டாக, பதறிட வேண்டாம் ஆட்சியாளர் பகையினைக் கண்டே தனிமையிலே, ...

Read More »

குறளின் கதிர்களாய்…(335)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(335) உறன்முறையா னுட்பகை தோன்றி னிறன்முறையான் ஏதம் பலவுந் தரும்;. – திருக்குறள் – 885 (உட்பகை) புதுக் கவிதையில்... புறத்து உறவுமுறைத் தன்மையுடன் கூடிய உட்பகை அரசனுக்கு உண்டானால், அது அவனுக்கு இறத்தல் தன்மையோடு கூடிய குற்றங்கள் பலவற்றைக் கொண்டுவரும்…! குறும்பாவில்... உறவுமுறைத் தன்மையோடு கூடிய உட்பகை தோன்றினால் அது கொண்டுவரும் இறத்தல் தன்மையுடன் கூடிய குற்றங்களை…! மரபுக் கவிதையில்... மன்னவன் தனது பின்னாலே மறைந்தே யிருந்து தாக்கவல்ல இன்னலாம் உட்பகை உறவுமுறையுடன் இணைந்து வந்தே தோன்றிவிடில், அன்னவ ...

Read More »

ஒரு ஆணியும் பிடுங்கவில்லை

பாஸ்கர் நான் ஏதும் செய்யவில்லை தானாக நடந்தது அதுவே பொழுதை நான் புடிக்கவில்லை அது பாட்டுக்குப் போகின்றது புல்லை நான் வளர்க்கவில்லை தாலாட்டிக் குதிக்கின்றது மூச்சை நான் விடவில்லை மூச்சும் என்னை விடவில்லை நான் ஒன்றும் செய்யவில்லை தென்றல் மட்டும் தீண்டிச் செல்லும் புன்னகைத்து நன்றி சொன்னால் முகத்தினிலே முத்தமிடும் வானுயரும் வெளி அளந்தால் கண்களும் மனசு ஆகும் விண்வெளியும் புல்வெளியும் முன்நெளியும் கோலமிகு வாழ்வு இது. கட்டி போட மனசை இங்கே கயிறுடன் ஆளுண்டா?

Read More »

குறளின் கதிர்களாய்…(334)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(334) களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத் தொளித்ததூஉ மாங்கே மிகும். – திருக்குறள் -928 (கள்ளுண்ணாமை) புதுக் கவிதையில்... கள்ளுண்பவன் கள்ளுண்ணும் போதினிலே, அவன் மறைத்து வைத்திருக்கும் குற்றங்கள் வெளிப்பட்டுவிடும்.. எனவே அவன் கள்ளுண்ணாத போது யான் கள்ளுண்ணுவதை அறியேனெனக் கூறுவதைக் கைவிடுக…! குறும்பாவில்... கள்ளுண்கையில் வெளிப்பட்டிடும் குற்றங்கள், மறைத்ததைக் கள்ளுண்ணாதபோது கள்ளுண்ணுதல் அறியேனெனக் கள்ளுண்பவன் கூறுதலை விட்டிடுக…! மரபுக் கவிதையில்... கள்ளை யுண்ணும் போதினிலே கரந்தே செய்த குற்றங்கள் தெள்ளத் தெளிவாய் வெளிவருமே தெரிந்து விடுமே எல்லோர்க்கும், கள்ள ...

Read More »

மாநிலம் எங்கணும் மங்கலம் பொங்கவா!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  மெல்பேண், ஆஸ்திரேலியா. இருபதே சென்றுவா இருபதொன்றே நன்றுவா வந்திடும் கொரனாவை வராதுமே செய்துவா! நல்லன அளிக்கவா வல்லன கொடுக்கவா வெல்லுவோம் என்றிடும் வீரத்தை உணர்த்தவா! மதுவினை ஒழிக்கவா மங்கையர் காக்கவா சதிகளை தடுக்கவா சன்மார்க்கம் நிலைக்கவா! அரசியல் சிறக்கவா ஆட்சிகள் நிலைக்கவா கயமைகள் விரட்டவா கண்ணியம் காக்கவா! உழவர்கள் உயரவா உழைப்பவர் சிரிக்கவா கயவர்கள் ஓடவா காமுகர் மடியவா! ஆணவம் அகலவா ஆன்மீகம் பெருகவா நாடெலாம் நலமுடன் நாளுமே இருக்கவா! கற்றிடும் மாணவர் கல்வியில் உயரவா பெற்றவர் வாழ்விலே பெருஞ்சுமை ...

Read More »

குறளின் கதிர்களாய்…(333)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(333) அகடாரா ரல்ல லுழப்பர்சூ தென்னும் முகடியான் மூடப்பட் டார். – திருக்குறள் – 936 (சூது) புதுக் கவிதையில்... தன்பெயர் மறைத்து சூதென்ற பெயரில் வரும் மூதேவியால் விரும்பிக் கொள்ளப்பட்டவர்கள் வயிற்றுக் உண்ண உணவின்றியும், உலகில் பலதுன்பம் பெற்றே அல்லலுறுவர்…! குறும்பாவில்... சூதென வரும் மூதேவியால் முடக்கப்பட்டவர்கள் உண்ண உணவின்றித் தவிப்பர் அல்லல் அதிகம்பட்டு அவதியுறுவர்…! மரபுக் கவிதையில்... தன்பெயர் மறைத்து மூதேவி தரணியில் வருவாள் சூதெனவே, அன்னவள் தன்னை விரும்பியேதான் அவளிடம் தானே அகப்பட்டோர், மன்பதை தன்னில் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(332)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(332) உற்றா னளவும் பிணியளவுங் காலமுங் கற்றான் கருதிச் செயல். – திருக்குறள் – 949 (மருந்து) புதுக் கவிதையில்... மருத்துவ நூல் நன்கு கற்ற மருத்துவர், நோயாளியின் பிணிபோக்க முயல்கையில், நோயாளியின் வயது நோய் வந்திருக்கும் காலம், குணப்படுத்தத் தேவையான காலம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்…! குறும்பாவில்... பிணிபோக்கக் கற்ற மருத்துவர் நோயாளியின் வயது நோய்வந்த தீரும் காலம் போன்றவற்றை ஆராய்ந்து செயல்படுக…! மரபுக் கவிதையில்... மருத்துவ நூலெலாம் நன்குகற்ற மருத்துவ ரொருவர் நோயாளிக் கிருக்கும் ...

Read More »

கணம்தோறும் வியப்புகள்

விப்ரநாராயணன் தென்னங் கீற்றிடைத் தோன்றும் ஒளியும் விண்ணில்  தோன்றும் வான வில்லும் கண்ணில் கசியும் காமத் துளிகளும் எண்ணி நொடியில்  மறந்த சொற்களும் மின்மினிப் பூச்சியின் மின்னல் வாழ்வும் நுண்ணிய அணுவில் நுண்துகள் ஓட்டமும் மண்ணில் காணும் கரோனா ஆட்டமும் மழையில் தோன்றும் காளான் கூட்டமும் அழைப்பை விடுக்கும் அணங்கின் சேட்டையும் வழவழா தரையில் வழுக்கி வீழ்தலும் எழுந்தான் மறைந்தான் என்று கேட்டலும் தொழுதான் தரையில் கிடந்தான் என்றலும் மதுவில் மயங்கி மக்கள் வீழ்தலும் இதயத் துடிப்பும் இதயம் நிற்பதும் உதய  சூரியன்  உதிக்கும் ...

Read More »