Author Archive

Page 1 of 3123

மழைப்பேச்சு!

மழைப்பேச்சு!
  ஷைலஜா யாகங்கள் பல செய்தீர் உங்கள்மன சோகம் நீங்கிடவேண்டுமென்றே தாகம் தணிக்க வந்தேன் தவறா? கண்ணுக்கு எட்டாத்தொலைவில் காணாபொருள்போலிருந்தேன் காட்சிகொடுத்ததும் தவறா? கோடிக்குரல் அழைத்தால் தேடிவருவது தெய்வகுணம் ஓடிவந்ததும் தவறா? என்பாதைஅத்தனையும் எங்கும் அடைத்துவிட்டீர் எப்படியோ வந்ததும் தவறா? என்குணம் எதிலும் அடங்கும் என்பது தெரிந்திருந்தும் ஏரிகுளங்களை அழித்தது தவறு இல்லாத பொழுதினில் ... Full story

படியில் குணத்துப் பரத நம்பி!

படியில் குணத்துப் பரத நம்பி!
ஷைலஜா கம்பகாவியத்தில் இராவணவதைப்படலம் முடிந்து சீதையுடன் இராமன் அயோத்திக்குத்திரும்பும் காட்சி! இலங்கைமாநகரினின்றும் புஷ்பகவிமானத்தில் பரிவாரங்களுடன் புறப்படும் இராமன் சீதைக்கு ஒவ்வொருஇடமாக காட்டிக்கொண்டுவருகிறான்.வருகிறான். கோதாவரி நதி வரும்போது அதனருகில் உயர்ந்தகுன்றினைக்காண்பித்து,’நாம் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்த இடம் ‘என்கிறான். பரத்வாஜமுனிவர் இராமரை எதிர்கொண்டு தன் இருப்பிடத்திற்கு அனைவரும் வந்து விருந்துண்ணும்படி அன்புடன் கேட்க இராமனால் தட்டமுடியவில்லை..ஆனால் அயோத்தியில் தம்பி பரதன் தன் வரவுக்குக்காத்திருப்பான் என நினைக்கிறான்.குறித்த நேரத்தில் தான் ... Full story

ஏன் வரவில்லை?

ஷைலஜா இரண்டுவருஷமாய் நான் இந்தியாவிற்குப்போகவே இல்லை. அதற்குமுன்புவரை வருடம்ஒருமுறைதவறாமல் போவது வழக்கமாக இருந்தது. ஒவ்வொருமுறையும் இருபதுநாளுக்குமேல் லீவ் எடுத்துக்கொண்டு வீட்டில் அப்பா அம்மா அண்ணா மன்னி தம்பிதங்கை அண்ணாவின் குழந்தை ப்ரியாக்குட்டியுடன் பொழுதினைக்கழித்துவருவேன்.மலைக்கோட்டை, சமயபுரம், கல்லணை,முக்கொம்பு,வயலூர் என்று பெரிய திட்டங்களோடுதான் துபாயைவிட்டுப்புறப்படுவேன் ஆனால் அங்கெல்லாம் போக நேரம் கிடைக்காத அளவுக்கு வீடு என்னைக் கட்டிப் போட்டுவிடும். இந்தவருடமும் ஊருக்குப்போகவேண்டாமென்றுதான் இருந்தேன் ஆனால் போனவாரம் போனில்ப்ரியாகுட்டி,"சித்தப்பா எப்போ வரே?' என்று கேட்டதும் மனது கேட்கவில்லை. புறப்பட்டுவிட்டேன்!... Full story

கர்மவீரர் காமராசர் ..

கர்மவீரர் காமராசர் ..
ஷைலஜா, பெங்களூர் கர்மம் எனில் செயல்.செயல்வீரராக வாழ்ந்துகாட்டிச்சென்றவர் அந்த உன்னத மனிதர்! அதனால்தான் கர்மவீரர் என்று போற்றப்படுகிறார். சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் எனும் வள்ளுவரின் வாக்குபோல சொல்லியவண்ணம் வாழ்ந்து காட்டியவராம் காமராஜர்! மக்களுக்காக வாழ்ந்த மாமனிதரைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது.ஆயிரத்தில் ஒருவரின் பெருமையை வெறும் ஆயிரம் சொற்களில் அடக்க முடியாதுதான்!... Full story

காந்தி நாமம் வாழ்க!

காந்தி நாமம் வாழ்க!
அக்டோபர் பெட்டகம் ஷைலஜா     அன்பாய் நிறைந்தவர் அகிம்சையை போதித்தவர் இன்பக்குறுநகையை இதழினில் கொண்டவர் சத்தியப்பாதையின் சாந்தத்தலைவரவர் உத்தமப்பணியினில் உலகையே வென்றவர் கொள்ளையர்போல் வந்த வெள்ளையர் ஆட்சியை மெள்ள மெள்ளவே... Full story

என் பார்வையில் கண்ணதாசன்…

என் பார்வையில் கண்ணதாசன்...
-- ஷைலஜா என் பார்வையில் கண்ணதாசன்...     'மாணிக்கம் கட்டி, வைரம் இடை கட்டி, ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டில்..' என்கிறார் இறைவன் கண்ணனைப்பாடும் பாசுரத்தில் ஆழ்வார் பெருமான்! எந்தக் கலப்படமும் இல்லாத, சுத்தமான 24 காரட் தங்கத்தைதான் ‘ஆணிப்பொன்’ என்று அழைக்கிறோம். ஆணிமுத்தும்  உயர்வானது. ‘ஆணிமுத்து வாங்கிவந்தேன் ஆவணி வீதியிலே’ என்று கண்ணதாசன் எழுதிய பாடலைக் கேட்டிருப்பீர்கள்! கண்ணதாசனும் தமிழ்மாதமான ... Full story

மனசு

மனசு
ஷைலஜா இறுக்கிக்கட்டிச் சரமாய் தொடுத்தபின்னும் மணம்பரப்பும் மலர்போல அடக்கிப்பின்னலிட்டும் அடங்கமறுக்கும் முன் உச்சிமுடிபோல குடம்குடமாய் நீர்விட்டும் மழையை விரும்பும் மலர்ச்செடிபோல எத்தனையோ மனிதர்கள் அருகில் இருந்தும் தொலைதூரத்திலிருக்கும் உன்னையே எதிர்பார்க்கும், மனசு.   http://www.long-distance-lover.com/long-distance-relationship-quotes/ Full story

பெண்ணின் ராஜாங்கம்!

ஷைலஜா தமிழ் இலக்கியங்களின் சிறப்பே அதனை நாம் ஆழ்ந்து படிக்கும் போது அதில் வரும் சில அழகிய காட்சிகள் மனதைவிட்டு நீங்காமல் அப்படியே பதிந்துவிடுவதுதான். பெரும்புலவர் ஒருவர் தாம் எழுதிய கதையில் வரும் கதாநாயகியின் பெண்மைத்தன்மையை இப்படித்தான் அழகாக படம்பிடித்துக்காட்டுகிறார். அந்தக்கதையின் கதாநாயகி ஒருமகாராணி. தன்னுடைய சிறந்த நான்கு குணங்களை நாற்படையாகவும், தன்னுடைய ஐம்புலன்களையும் சிறந்த அமைச்சர்களாகவும் பெற்று ஆட்சி செய்வதாக தன் கவிதைகளில் வர்ணித்துள்ளார். ரத கஜ துரக பதாதி என்று சொல்லப்படும் நால்வகைப்படையும் அவளுடைய சிறந்த குணமாகிய அச்சம் நாணம் மடம் ... Full story

குடியரசு தினம் என்றால் என்ன?…

குடியரசு தினம் என்றால் என்ன?...
ஷைலஜா   நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தைகூட விடை சொல்லிவிடும் ஆனால் குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் முழிப்பார்கள். சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்றால் யாரோ நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள், அவர்களிடமிருந்து நாம் விடுதலை பெற்று விட்டோம் என்பதை உணரமுடிகிறது. மற்றபடி பலருக்கு- அதிலும் குறிப்பாய் பல இளைஞர்களுக்கு குடியரசு பற்றி எதுவும் தெரிவதில்லை. இன்றைய ... Full story

மகான் ஸ்ரீ அரவிந்தர்

மகான் ஸ்ரீ அரவிந்தர்
ஷைலஜா -- அரவிந்தர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். தவிர அவர் ஓர் இலக்கியவாதி. மெத்தப்படித்தவர். எழுத்தாளர், பத்திரிக்கையாளர், கட்டுரை ஆசிரியர், இதழாளர், கல்லூரிப் பேராசிரியர் என பல பதவிகள் வகித்தவர். பத்துக்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்தவர். அவரது பிறந்த நாளில் தான் பாரத நாடு விடுதலை அடைந்தது 1872 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் தேதி, கிருஷ்ண தன கோஷ்-சுவர்ண லதா தேவி தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தையாய் அரவிந்தர் அவதரித்தார். அவருக்கு அரவிந்த் அக்ராய்ட் ... Full story

உள்ளம் கவர்ந்தானை

உள்ளம் கவர்ந்தானை
ஷைலஜா எங்கள் வீட்டிற்கு ரங்கன் வந்ததிலிருந்து தாத்தா ரொம்பவும் பிசி ஆக ஆகிவிட்டார். யார் அந்த ரங்கன்?. அப்படி என்ன அவனுக்கு ஸ்பெஷல் கவனிப்பு?. ரங்கன் சுமார் நாலு மாதக் குரங்கு. தாத்தாவுக்கு ரங்கனை குரங்கு என்று சொன்னால் கோபம் வரும். இனிமேல் நாமும் ரங்கன் என்றே அவனை அழைப்போம். அவன் இந்த வீட்டில் நுழைந்ததே தோட்டத்தில் ஏற்பட்ட ஒரு கவனக்குறைவு காரணமாகத்தான். தேங்காய் உரிக்க மண்ணுக்குள் சொருகியிருந்த ... Full story

சிரித்தது செங்கட் சீயம்!….

சிரித்தது செங்கட் சீயம்!....
ஷைலஜா   இன்று(24-5-2013)) சுவாதி நட்சத்திரம் ! நரசிம்ம ஜயந்தி! அன்று ஸ்ரீரங்கம் அரங்கன் கோயிலில் ஒரே ஆரவாரம்! ‘ஆதிகவியான வால்மீகியின்  இராமாயண காவியத்தை  தமிழில் செய்து அரங்கேற்றத் துணிந்த இந்தக் கம்பன் என்பவன் யாராம்?” என்று  ஒருவருக்கொருவர் வியப்பும் திகைப்புமாகக் கேட்டுக்கொண்டனர். திருவரங்க  நகரம்  அந்த நாளில் தமிழிலும் வடமொழியிலும் தேர்ந்த பண்டிதர்களைக்கொண்டிருந்தது. அங்கே தங்களது புலமைக்குப்பாராட்டு கிடைப்பதை விரும்பாத புலவர்களே இல்லை. இங்கு தனது இராமாயணக்காதை அரங்கேறுவதே தனக்குச்சிறப்பு என்று கம்பன் நினைத்தான்.... Full story

ஆராதனா

ஆராதனா
-ஷைலஜா  சின்னக்கடிதம்தான் ஆனால் அது மிகப்பெரிய விஷயத்தை தெரிவித்துவிட்டது. என்றாவது ஒருநாள் இப்படி ஒரு சம்பவம் நேரிடலாம் என நினைத்து அச்சப்பட்டுக்கொண் டிருந்த அகிலாவிற்கு கடிதத்தைப்படித்ததும் கண்கலங்கித்தான் போனது. அலுவலகம் சென்றிருந்த மகனுக்கு உடனே டெலிபோனில் விஷயத்தை தெரிவித்தாள் அடுத்த சில நிமிடங்களில் மூச்சிறைக்க வீடுவந்த திவாகரிடம் கடிதத்தைக்காட்டினாள்.”எட்டுவருஷ உறவை வெட்டிக்கொண்டு போய்விட்டாள் ஆராதனா!.எப்படிடா அவளுக்கு நம்மைப்பிரிய மனசுவந்தது? என்னைவிட அவளுக்கு உன்மேல் எத்தனை பாசம் நேசம் ... Full story

முன்னேறு பெண்ணே!

முன்னேறு பெண்ணே!
  ஷைலஜா அழுதுபுலம்பித்தேய்வதனால் ஆகும் பயனிங்கேதுமில்லை ஆற்றல் கொண்டே எழுந்திடுவாய் அவனியும் உந்தன் வசமாகும் தவித்துத் தனியே நிற்பதனால் தடைகள் குறையப்போவதில்லை புவியை அசைக்கப் போராடிடுவாய் புதுமை செய்யப் புறப்படுவாய்! அரண்டு அதிர்ந்து நிற்பதனால் ஆளுமை செய்ய வழியுமில்லை புரட்சி செய்யப் புறப்படுவாய் புவனம் உனக்கு வசமாகும் வெட்டிப்பேச்சு பேசுவதனால் விளையும் பயன்பெற இயல்வதில்லை வெற்றிச்சிகரம் அடைந்திடுவாய் விரைந்து முன்னேறு பெண்ணே! *************************************************** Full story

நெற்றித்திலகமிடுவோம்!

நெற்றித்திலகமிடுவோம்!
  ஷைலஜா சகுந்தலை தொலைத்த கணையாழியைப்போல காணாமல் போயிருந்த பெண்ணினத்தின் துணிச்சல் உச்சியின் கிரீடமாக இன்று மீண்டிருக்கிறது. மசிக் கசிவினையெல்லாம் மனக் கசிவாக்க வேண்டாம் உபாதைகளை எல்லாம் நம் பாதைகளாய்ப் புலம்ப வேண்டாம் மறைமுகமின்றி உள்முகம் காட்டுவோம் அடுப்பு வெளிச்சத்தில் எழுதிய எழுத்துக்களை ஆற்றலுடன் வெளியே படைப்போம் நேற்றைய தழும்புகளுக்கு சோர்ந்துபோகாமல் இன்றைய வியர்வையினை நெற்றிக்குத் திலகமிடுவோம்!     Full story
Page 1 of 3123
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.