தொடர்கள்

சேக்கிழார் பாடல் நயம் – 123 (ஆளுடை)

திருச்சி புலவர் இராமமூர்த்தி வரலாறு எறிபத்தர்  வரலாற்றின்  நிறைவுப்  பகுதி இது. யானை, பாகருடன் கொல்லப் பட்டுக்  கிடந்ததையும் எறிபத்த  நாயனார்  சினம்பொங்க நின்றதையும்  கண்ட அரசர்,  அவர்முன் சென்று இவ்வாறு வெட்டிக் கொன்றது எதனால்? எனக்  கேட்டார்.  உடனே  எறிபத்தர் தேவர்களின் தேவராகிய ஈசரின் அன்பர் சிவகாமியாண்டார் இறைவனுக்குச்  சாத்தக் கொண்டுவந்த மாலையை, இந்த யானை தும்பிக்கையால்,பாகர் தடுத்தும் சிதற வீழ்த்தியது. அதைக்கண்டு  சினந்து நானே இதனையும் பாகரையும் வெட்டிவீழ்த்தினேன். என்றார். அதுகேட்டமன்னன் அஞ்சியபடி  அடியாரைப்பணிந்தான்.இவ்வாறு சிவாபராதம் புரிந்த யானையின் உரிமையாளனாகிய என்னையும் ...

Read More »

தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 9

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்  உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை  பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  விளார் புறவழிச்சாலை,  தஞ்சை மாவட்டம் – 613006. மின்னஞ்சல் முகவரி –  [email protected] தொல்காப்பியப் பொருளதிகார உவமங்கள் – 2 முன்னுரை தொல்காப்பியம் பொருட்பகுதியின் பொருள் புலப்பாட்டுக்காகப் பொருத்தமான உவமங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் பாங்கினை ஆராயும் முந்தைய கட்டுரைப் பொருளுடன் இந்தக் கட்டுரையும் இதற்கு அடுத்து வரும் கட்டுரையும் தம்மை இணைத்துக் கொள்கின்றன. இலக்கண ஆசிரியன் ஒருவனுடைய இலக்கிய உள்ளத்தை அறிந்து கொள்வதற்கும் இவை பயன்படக்கூடும். மேலும் இலக்கணத்தை இலக்கியமாக்கும் ...

Read More »

பழகத் தெரிய வேணும் – 60

நிர்மலா ராகவன் பிறருடைய கருத்து எல்லாரும் இருப்பதுபோல் நாமும் இருந்தால்தான் சரியானது, நம்மை ஏற்பார்கள் என்று எண்ணி நடப்பவர்கள் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது. மனக் கிலேசமும் எழக்கூடும். கருத்து வேறுபாடு குடும்பம் திருமணமானதும், முதல்முறையாக மாமியார் வீட்டில் கூட்டுக்குடித்தனம் செய்ய ஆயத்தமானாள் மலர்விழி. அவளுடைய தாய் வாய் ஓயாது உபதேசம் பண்ணி அனுப்பினாள். “எல்லாரிடமும் மரியாதையாகப் பழகு. பெரியவர்கள் சொல்வதைக்கேட்டு நட. உனக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, நீதான் விட்டுக்கொடுக்க வேண்டும்”. இந்த ரீதியில் தொடர்ந்து பல நாட்கள், `அறிவுரை’ என்று தனக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டதை ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 122 (புரிந்தவர்)

திருச்சி புலவர் இராமமூர்த்தி பாடல்: புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர் தம் கழுத்தில் பூட்டி அரிந்திடல் உற்ற போதில் அரசனும் ‘பெரியோர் செய்கை இருந்தவாறு இது என்? கெட்டேன்! என்று எதிர் கடிதின் சென்று பெரும் தடந் தோளால் கூடிப் பிடித்தனன் வாளும் கையும் வரலாறு: இவ்வளவு  பெரிய  யானைமுன்னே இந்த உண்மைத்   தவமுடைய அடியார் சென்றபோது  நடந்ததை அறியாத மன்னன் யானையும்   பாகரும்  மாளும்   வண்ணம்  வெட்டியதே போதுமோ? எனக்கேட்டார். அது  கேட்ட  எறிபத்தர், ‘’அரசே, இறைவனுக்குச்  சாத்த சிவகாமி ஆண்டார் எடுத்து ...

Read More »

தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 8

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்  உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை  பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  விளார் புறவழிச்சாலை,  தஞ்சை மாவட்டம் – 613006. மின்னஞ்சல் முகவரி –  [email protected] தொல்காப்பியப் பொருளதிகார உவமங்கள் (1) முன்னுரை தொல்காப்பியத்தில் உவமம், சங்க இலக்கியங்களில் உவமம், பிற்கால இலக்கியங்களில் உவமம் என்பன தனித்தனி ஆய்வுக்கு உட்பட்ட பொருண்மை என்பது இக்கட்டுரையாளர் கருத்து. ‘கவிதையில் உவமம்’ என்பது செய்யுளியலில் குறிப்பிடப்படாத காரணத்தால் தொல்காப்பிய உவமவியலின் உள்ளடக்கம் சாதாரண உவம ஆய்வினின்றும் வேறுபடுகிறது. தலைமக்களின் கூற்றுப் பகுதியாக இருந்த உவமக் கோட்பாடு ...

Read More »

பழகத் தெரிய வேணும் – 59

நிர்மலா ராகவன் குறையேதும் உண்டோ? இந்த நாகரிக யுகத்தில் யூ டியூபைப் பார்ப்பவர்கள் கண்ணில் அடிக்கடி தட்டுப்படுவது எந்த நடிகை எப்படியெல்லாம் கெட்ட வழியில் போனாள், எந்த நடிகர் எத்தனைப் பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தார், மனைவியுடன் சண்டை போட்டார் போன்ற செய்திகள்தாம். இவை அடிக்கடி வெளியிடப்படுவது எதனால்? பிறரிடம் குற்றம் கண்டுபிடித்தால் நாம் அவர்களைவிட உயர்ந்து நிற்கிறோம் என்ற அற்ப திருப்தியைப் பிறருக்கு உண்டாக்குவதற்காக. பிறரை வருத்துவது எதற்காக? தன்னிடம் நிறைய குறைகள் இருக்கின்றன என்று நினைப்பவரே அந்த வருத்தத்தைப் போக்க, அல்லது அதை ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 121 (குழையணி)

திருச்சி புலவர் இராமமூர்த்தி ‘குழை அணி காதினானுக்கு அன்பராம் குணத்தின் மிக்கார் பிழை படின் அன்றிக் கொல்லார்; பிழைத்தது உண்டு’ என்று உட்கொண்டு மழை மத யானை சேனை வரவினை மாற்றி, மற்ற உழை வயப் புரவி மேல் நின்று இழிந்தனன்; உலக மன்னன்’’ வரலாறு தாம் ஏந்தி வந்த பூக்கூடையைப்  பட்டத்து யானை தட்டிச்  சிதைத்தது கண்ட சிவகாமியாண்டார், அந்த  யானையைத் தொடர்ந்து ஓட  இயலாமல் கீழே விழுது கதறினார். இதனை எறிபத்தர் முன் பாகர்கள் கூறினார். அதுகேட்டு ‘’பெருமான் அந்தணர் அனுப்பிய ...

Read More »

தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 7

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை  பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  விளார் புறவழிச்சாலை,  தஞ்சை மாவட்டம் – 613006. மின்னஞ்சல் முகவரி –  [email protected] இலக்கண விளக்கமும் உவமமும் முன்னுரை பொதுவாக ‘உவமம்’ என்பது இலக்கியம் சார்ந்தது. அதற்கேயுரியது. வண்ணனைச் செய்யப்படும் பொருளை அல்லது விளக்கப்படும் கருத்துகளைக் கூடுதல் கவர்ச்சியோடும் தெளிவோடும் அழகோடும் புரிந்துகொள்வதற்காகப் படைப்பாளனால் ஒப்புமை செய்து காட்டப்படுவதே உவமம். ஆனால் தமிழியல் வரலாற்றில் முற்றிலும் மாறான நிலையில் இந்த உவமத்தைப் பயன்படுத்தியிருப்பதை அறியமுடிகிறது. இலக்கண நுட்பங்களைக் கற்பித்தலுக்கான கருவிகளில் ...

Read More »

பழகத் தெரிய வேணும் – 58

நிர்மலா ராகவன் பரோபகாரம் போதுமா? தலைவர்கள் தாம் சாதித்ததாக எண்ணுவதைத் தேர்தல் சமயத்தில் பட்டியலிடுவார்கள். அரசியலில் மட்டுமல்ல, எந்த ஒரு சிறு குழுவின் தலைவர்களாக இருப்பவர்களும்கூட. வெற்றி என்பது ஒருவரது சாதனைகளின் மட்டுமல்ல. மற்றவர்களுக்காக எதுவும் செய்யாது, தமக்குத்தாமே நன்மை செய்துகொண்டிருப்பவர்களால் பிறருக்கு என்ன லாபம்? ஒரு சிலர், `குறுகிய காலத்தில் நான் இத்தனை பட்டங்கள் பெற்றேன், சொத்து சேர்த்தேன்,’ என்று பெருமை பேசிக்கொள்வார்கள். அறிவும் பணமும் மட்டும் நிறைவைக் கொடுத்துவிடாது. (ஆனால், அது காலம்கடந்துதான் புரியும்). தகுந்த தருணத்தில், அல்லல்படும் ஒருவருக்கு உதவிக்கரம் ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 120 (அப்பொழுது)

திருச்சி புலவர் இராமமூர்த்தி வரலாறு கருவூர்ப் பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் எங்கும் இறைவழிபாட்டுக்கு உரிய நிகழ்வுகள் நடந்தன! அவ்வூர்ச் சிவனடியார் விறன்மிண்டர் என்பவராவார். அவர் தம் பெயருக்கேற்ற விறலும்  மிண்டும் கொண்டவர். இறைவன்பால் அன்பு கொண்ட அவர் இறைவழிபாடு செய்யும்  அடியார்களுக்கு ஆவன செய்வதற்கு உரிய பரசும் மனமும், இறைவழிபாட்டுக்கு இடையூறு செய்வாரைத்  தண்டிப்பதற்கு உரிய ஆயுதமாகிய பரசு என்ற மழுவா யுதத்தையும் ஏந்தினார்! சிவகாமியாண்டார் என்னும் அடியவர் ஒருவர், இறைவன்பால் பேரன்பு கொண்டு, அதிகாலையில்எழுந்து இறைவனுக்குச் சாத்துவதற்குரிய மலர்களையும், மாலைகளையும் நிறைத்த  பூக்குடலையையம்  ஏந்திக்கொண்டு ...

Read More »

புதிய பிள்ளைப்பருவங்கள் – 4

மீனாட்சி பாலகணேஷ் மருதோன்றி அணிதல்      (பெண்பால் பிள்ளைத்தமிழ்) அழகுக்கலை என்பது பெண்ணோடு கூடிப்பிறந்து வளர்வது. அதற்கு வயது வரையறையே இல்லை! உலகம் முழுமையுமே, கூந்தல் அலங்காரங்களாகட்டும், விதவிதமான அணிமணிகள், ஆடைகள், அனைத்துமே பெண்களின் பார்வையில் ஒப்பற்றதொரு பரிமாணத்தை அடைந்து ஒளிர்வனவாகும். இவற்றுள் ஒன்று மருதோன்றி, மருதாணி, மெஹந்தி – இவையெல்லாம் பெண்கள்  தங்கள் கரங்களையும் கால்களையும் அழகுபடுத்திக்கொள்ள அணிந்து கொள்ளும் இயற்கை சாதனங்கள் ஆகும். பருவமடைந்த இளம் பெண்கள் தொய்யில் எனப்படும் வண்ணக்குழம்பாலான சித்திரங்களைத் தங்கள் தோள்களிலும் மார்பிலும் வரைந்து கொள்வர் ...

Read More »

தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 6

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை  பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  விளார் புறவழிச்சாலை,  தஞ்சை மாவட்டம் – 613006. மின்னஞ்சல் முகவரி –  [email protected] உவமம் பற்றிய அறிஞர்களின் கருத்துக்கள் முன்னுரை ஒரு கவிதையை உணர்ச்சி வழிச் சுவைக்கலாம். கருத்து வழி உணரலாம். வடிவத்தின்வழி மனத்திருத்தலாம். கற்பனை வழி இரசிக்கலாம். இவை  அனைத்திலும் வெளிப்பட்டு நிற்கும் உத்திதான் ஒரு கவிதையை வெற்றிபெறச் செய்கிறது. அதாவது கற்பார் மனத்து நிலைத்து நிற்கக் காரணமாகிறது. உவமம் பொருள்விளக்கப் பகுதியாக இருந்தாலும் கவிதையின் அழகுக் கூறாக ...

Read More »

பழகத் தெரிய வேணும் – 57

நிர்மலா ராகவன் பொறாமை ஏன் எழுகிறது? புதிதாக மணமானவன் சீலன். `உன்னை யாராவது உற்றுப் பார்த்தால்கூட என்னால் தாங்க முடிவதில்லை,’ என்று அடிக்கடி மனைவியிடம் கூறுவான். `நீ ரொம்ப அழகு. நான் உனக்கு ஏற்றவனே அல்ல!’ `இவருக்குத்தான் என்மேல் எவ்வளவு அன்பு!’ என்றெண்ணி மனைவி பெருமைப்படுவாள். அவனும் அதைத்தான் எதிர்பார்த்தான். ஆனால், உண்மை அதுவல்ல. ஒருவர்மீது ஆதிக்கம் செலுத்தி, எப்போதும் கட்டுப்படுத்த ஓயாத புகழ்ச்சி ஒரு வழி. பொதுவாகவே, தனக்குக் கிடைத்தற்கரிய உறவாக ஒரு பெண்ணை மணந்தவன் அளப்பரிய அன்பால் அவளைத் திக்குமுக்காடச் செய்கிறான். ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் -119 (மழை)

திருச்சி புலவர் இராமமூர்த்தி எறிபத்தர் என்ற மன்னர் அக்கருவூரில் வாழ்ந்தார். அவ்வூரில் அமைந்த ஆனிலையப்பர் திருக்கோயிலில் சிவபூசை மரபுகளைப் பேணி வளர்த்த தொண்டராக அவர் திகழ்ந்தார். அவரைப்பற்றி இப்பாடல்கூறுகிறது. பாடல்: மழைவள ருலகி லெங்கு மன்னிய சைவ மோங்க வழலவிர் சடையா னன்பர்க் கடாதன வடுத்த போது முழையரி யென்னத் தோன்றி முரண்கெட வெறிந்து தீர்க்கும் பழமறை பரசுந் தூய பரசுமுன் னெடுக்கப்  பெற்றார். பொருள்: நிலைபெற்ற சைவம் மழையினால் வளருந் தன்மையுடைய உலகத்தில் எங்கும் ஓங்கும்படியாக, அழல்போன்ற நிறத்துடன் அவிர்ந்த சடையினை யுடைய ...

Read More »

தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 5

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை  பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  விளார் புறவழிச்சாலை,  தஞ்சை மாவட்டம் – 613006. மின்னஞ்சல் முகவரி –  [email protected] தொல்காப்பியமும் தண்டியலங்காரமும் முன்னுரை ‘உவமம்’ என்பது தமிழ் இலக்கிய மற்றும் இலக்கண மரபுப்படி அகப்பொருள் மாந்தர்களின் கூற்றுப் பகுதியில் பயன்படுவது. அது தற்காலத்தைப் போலச் செய்யுளுக்கு அல்லது கவிதைக்கு அழகு சேர்க்கும் ஓர் உறுப்பு என்பது வடமொழி மரபு. இதற்கான சான்றுகள் முந்தைய கட்டுரைகளில் சுட்டப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தில் ‘அணி’ என்னும் சொல், ‘செய்யுளணி’ என்னும் பொருளில் ...

Read More »