இலக்கியம்

சித்திரைப் பெண்ணே வருக

சரஸ்வதி ராசேந்திரன் சித்திரைப்  பெண்ணே  வருக சிறப்பெல்லாம் அள்ளித் தருக சாதகம்   ஆக்கவே    வருக சாற்றிட   நற்செயல்    புரிக தீநோய்   தீர்த்திட   வருக திருத்தமாய்  நல்வழி   புரிக உறவுகள்   சிறந்திட  வழிசெய்க உள்ளம்  மகிழ்வுற  அருள்புரிக விளைபயிர்  காத்திட மழைதருக விலைபொருள் குறைய அருள்புரிக நசித்திட வேண்டும் வீணர்களை இசைத்திட வேண்டும் நல்வாழ்க்கை வாட்டிட வேண்டும் வறுமையினை வதைத்திட  வேண்டும் நோயினையே காத்திட  வேண்டும்  குழந்தைகளை கற்றிடப்  பள்ளிகள் திறந்திடவேண்டும் சித்திரப்    பெண்ணே    வருக சீக்கிரம்   சிறப்பை  அள்ளித்தருக ஊர்நலம்   கூடிட  வேண்டும் உறவுகள்  பலப்பட   வேண்டும்

Read More »

சிந்திக்க வைக்கும் சிறப்பான சித்திரை!

மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா,  ஆஸ்திரேலியா சித்திரைத் திருநாளை தமிழர் திருநாள் என்பதா? தைத் திருநாளை தமிழர் திருநாள் என்பதா? என்று ஒரு போராட்டமே நடந்து கொண் டிருக்கிறது. அந்தப் போராட்டம் அரசியல் மயப்படுத்தப்பட்டு, அரசி யல் கட்சிகளின் கொள்கையாக்கப்பட்டு; அக்கட்சிகள் சார்பாக அறிஞ ர்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி பெரும் சர்சையினை உருவாக்கி ஆட்சிகள் மாறும் வேளை காட்சிகள் மாறியதையும் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனாலும் பலரும் சித்திரைத் திருநாளையே தமிழர்தம் திருநாளாகக் கொண்டாடி வருகிறார்கள் என்பதும் நோக்கத்தக்கதே. திருநாளினைக் கொண்டாடுவதன் நோக்கமே மனமகிழ்வும் மனநிறைவுமேயாகும். அதனை விட்டு விட்டு அங்கும் ...

Read More »

பிரித்தானியக் குடியரசின் கோமகன் பிலிப் – ஒரு பார்வை

சக்தி சக்திதாசன் இலண்டன் கிரிக்கெட் விளையாட்டில் சதம் அடிப்பதே ஒரு சாதனை எனும்போது வாழ்க்கையில் சதம் அடிப்பவர்களின் சாதனையை என்ன சொல்வது? அப்படியான ஒரு அருமையான சாதனைச் சந்தர்ப்பத்தை ஒரு இரண்டு மாத கால இடைவெளியில் தவற விட்டு விட்டார் எமது இங்கிலாந்து மகாராணியார் இரண்டாவது எலிசபெத் அவர்களின் கணவர் எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப் (Duke Of Edinbrugh Prince Philip). ஆமாம் கடந்த வெள்ளிக்கிழமை அதாவது 09.04.2021 அன்று காலை 9 மணிக்கு தனது 99வது வயதில் காலமாகிய கோமகன் பிலிப் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(345)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(345) அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். – திருக்குறள் -443 (பெரியாரைத் துணைக்கோடல்) புதுக் கவிதையில்... அறிவு மற்றும் ஒழுக்கங்களில் சிறந்த பெரியவர்களை, அவர்கள் விரும்புவனவற்றைத் தெரிந்து செய்து தமக்கு மிக உயர்ந்த துணைவராக்கிக் கொள்ளுதல், அரசர்க்குக் கிடைத்தற்கரிய பேறுகளில் மிகவும் அரியதான ஒன்றாகும்…! குறும்பாவில்... பெரியோர்கள் விரும்புவன தெரிந்துசெய்து அவர்களைத் தமக்கு உற்ற துணைவராக்கிக்கொள்ளுதல், அரசர்க்குப் பெறற்கரிய பேறுகளில் அரியதாம்…! மரபுக் கவிதையில்... அறிவுட னொழுக்கம் அனைத்திலுயர் ஆற்றல் மிக்கப் பெரியோரை, முறையா யவர்கள் ...

Read More »

ஏப்ரல் 10 – உலக ஹோமியோபதி நாள்

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, ஆஸ்திரேலியா [ஏப்ரல் 10ஆம் நாள், உலக ஹோமியோபதி நாள்.  என் தந்தையார், என் தாய்மாமன் ஆகியோர், ஹோமியோபதி வைத்தியர்கள் ஆவர். நானும் ஹோமியோபதி பற்றி என் தந்தையாரிடம் அறிந்திருக்கிறேன். ஓரளவு அதில் பயிற்சியும் இருக்கிறது. என் தாயாரின் அப்பா அதாவது என் தாத்தா, பிரபலமான ஆயுள்வேத வைத்தியர். அந்த வகையில் ஹோமியோபதி நாளினைக் கருத்திருத்தி இக்கட்டுரையினை வழங்குகின்றேன்.] பிறப்பு என்பது நல்லதொரு வரமாகும். ஆனால் இறப்பும் அதனுடன் இணைந்தே இருக்கிறது.பிறந்தவுடன் கொண்டாடி மகிழ்கின்றோம். பல வித கற்பனைகள் சிறகடிக்க வாழ்க்கை என்னும் வானில் சிறகடித்துப் பறந்தும் வருகிறோம்.அப்படி சிறகடிக்கும் வாழ்வில் எப்படியோ நோய்கள் வந்து எங்களின் இன்பக் கனவு களைச் சிதறடித்து விடுவதையும் காண்கிறோம். இதனால்தான் “நோயற்ற வாழ்வே குறைவற்ற ...

Read More »

இந்தியப் பயண இலக்கியத்தின் தந்தை

-மேகலா இராமமூர்த்தி உலக வாழ்க்கை குறித்து மேனாட்டு நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியரிடம் கேட்டால், உலகமே ஒரு நாடக மேடை; அதில் அனைவரும் நடிகர்கள் என்பார். பயணங்களிலேயே தம் வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்தவரும், சீர்திருத்தச் சிந்தனையாளரும், இந்தி(ய)ப் பயண இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான ’மகா பண்டிதர்’ இராகுல் சாங்கிருத்தியாயனைக் கேட்டால் ”உலக வாழ்க்கையே பயணங்களின் முடிவில்லா நெடுஞ்சாலை; அதில் அனைவருமே பயணிகள்” என்று சொல்லக்கூடும். உத்திரப் பிரதேசத்தின் ஆசம்கர் (Azamgarh) மாவட்டத்திலுள்ள பாந்தகா என்ற கிராமத்தில் கோவர்தன் பாண்டே, குலவந்தி தேவி இணையருக்கு மகனாக, ...

Read More »

கமலா மாமி

பாஸ்கர் நினைத்து பாருங்கள். நாற்பது வருடங்களுக்கு முன் சுற்று புற சூழல் பாதிப்பில்லாத மயிலாப்பூர் மற்றும் அதன் மாட வீதிகள். அதுவும் நான் சொல்ல போவது அந்த எட்டாம் நம்பர் வடக்கு மாட வீதி. மூன்றடிக்கும் குறைவான அகலம் கொண்ட அந்த சந்தில் என் சினேக காலம் ஊன்றியது. அது நண்பர் மௌலியின் வீடு. நீளமான சந்து. அந்த பக்கம் போனால் பலா தோப்பு வந்து விடும் போல். அவ்வளவு நீளம். அதில் ஒரு அஞ்சடி மர பெஞ்ச். அதில் தான் அய்யாசாமி என்கிற ...

Read More »

ஆண்-பெண் நட்புறவு பற்றி

ஜோதிர்லதா கிரிஜா 2013 இல் இதே தலைப்பில் தினமணியில் வந்த என் கட்டுரை வல்லமையின் 27.09.2013 இதழில் சிலரால் விவாதிக்கப்பட்டது. அக்கட்டுரையில் நான் சொல்லவே சொல்லாதவை யெல்லாம் சாடப்பட்டன. அதாவது எடுத்துக்கொள்ளப்பட்ட விஷயம் ஆண்-பெண் நட்புறவாக இருக்க “பெண்ணுரிமை” பற்றிய விவாதங்கள் அரங்கேறின. எனது பதிலில் அதை நான் சுட்டிக் காட்டியாகிவிட்டது. (விருப்பமுள்ளவர்கள் “வல்லமையில் ஜோதிர்லதா கிரிஜா” என்று சொடுக்கிப் பார்த்துக்கொள்ளலாம்.) நிற்க. ஒரு மிக முக்கியமான விஷயம் பற்றிப் பெற்றோர்களுக்குச் சொல்லும் பொருட்டே இக் கட்டுரை. என் கட்டுரையில், “பத்து வயதுச் சிறுவர்கள் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(344)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(344) தெளிவி லதனைத் தொடங்கா ரிளிவென்னு மேதப்பா டஞ்சு பவர். – திருக்குறள் -464 (தெரிந்து செயல்வகை) புதுக் கவிதையில்... தமக்குத் தரக்குறைவு என்னும் குற்றம் வருவது குறித்து அஞ்சும் இயல்புடையோர், அமைச்சர்கள் ஆலோசனை பெற்றும் தாமும் ஆராய்ந்து என்ன பயனைத்தரும் என்பதைத் தெளிந்தறியாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்…! குறும்பாவில்... அவமானம் வருவது குறித்து அஞ்சும் இயல்புடையோர், தெளிவு இல்லாத செயலைச் செய்யத் தொடங்கார்…! மரபுக் கவிதையில்... செயலால் தமக்கே இழுக்கதுதான் சேரு மென்றே அஞ்சுகின்ற இயல்பைக் கொண்ட ஆட்சியாளர், ...

Read More »

பக்தி இயக்கத்தின் முன்னோடியாய் மிளிர்ந்த தமிழ் தந்த செல்வி காரைக்கால் அம்மையார்!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர் மெல்பேண், ஆஸ்திரேலியா உலகிலே பல மொழிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு மொழியும் முக்கியமான மொழிகள்தாம். ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு விதமான சிறப்பு இருக்கிறது. ஆனால் எந்த ஒரு மொழிக்குமே இல்லாத சிறப்பினை உலகில் எங்கள் தமிழ் மொழி பெற்றிருக்கிறது. அந்தச் சிறப்புத்தான் “பக்தி இலக்கியம்” என்னும் சிறப்பாகும். பக்தி என்பது – இலக்கியமாக எழுந்தி ருப்பது உலகமொழிகளில் தமிழ் மொழியில் மட்டுமே என்பதை எல்லா மொழியியல் அறிஞர்களுமே ஏற்றுக் கொள்ளுகிறார்கள். அந்த அளவுக்கு தனித்துவமாய், வளர்ந்து யாவரும் வியக்கும் ...

Read More »

தமிழ் பிராமி கல்வெட்டு விளக்கம்

சேசாத்திரி ஸ்ரீதரன் தமிழ் பிராமி கல்வெட்டுகள் சற்றொப்ப 38 ஊர்களில் மலை சார்ந்த குகைத் தளங்களிலும் திறந்தவெளியிலும் கண்டறியப்பட்டு உள்ளன. இம் 38 இடங்களில் சற்றொப்ப 100 கல்வெட்டுகள் அறியப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் குறைந்தது 1 முதல் அதிகமாக 12 கல்வெட்டுகள் வரை என இம் 38 இடங்களில் காணப்படுகின்றன. தமிழ் பிராமி கல்வெட்டுகள் தமிழ் மொழியின் தொன்மைக்கும் தமிழ் எழுத்து வட்டெழுத்தாகி அடுத்து சோழர் கால எழுத்தாகி பின் இந்நாள் எழுத்தாக  உருத்திரிந்ததற்கு சான்றாக உள்ளன. திரு. ஐராவதம் மகாதேவன் பெருமுயற்சி எடுத்து ...

Read More »

படக்கவிதைப் போட்டி 300இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி நண்பர்களே! படக்கவிதைப் போட்டி இவ்வாரத்தோடு நிறைவுபெறுகின்றது. இப்போட்டி 300 வாரங்கள் வெற்றிகரமாய்த் தொய்வின்றி நடக்கத் துணைநின்ற நிழற்படக் கலைஞர்கள், தேர்வாளர்கள், ஆர்வத்தோடு கவிதைகள் எழுதிவந்த கவிஞர்கள், வாசகர்கள் அனைவருக்கும் வல்லமை மின்னிதழின் நன்றிகள்! ***** புகைப்படக் கலைஞர் திருமிகு. அமுதா ஹரிஹரன் எடுத்திருக்கும் இந்த ’ஒளி’ப்படத்தை அவருடைய படத்தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுத்து நமக்கு வழங்கியுள்ளார் திருமிகு. ராமலக்ஷ்மி. இவ்விருவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக! தகத்தகாய ஒளியை வானில் பரப்பிக்கொண்டிருக்கின்ற சூரியப் பிஞ்சை ஏந்தியிருப்பதுபோல் காட்சியளிக்கும் இந்தக் கரம் காண்போரின் விழிகளை வியப்பில் விரிய ...

Read More »

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 28

-மேகலா இராமமூர்த்தி வாலி பிலத்தினுள் புகுந்து மாயாவி அரக்கனைத் தேடிச்சென்று மாதங்கள் 28 ஆகியும் திரும்பாததால் அனுமன் உள்ளிட்ட வானரர்கள் இளவரசனான சுக்கிரீவனை முடிபுனைந்து அரசாட்சியை மேற்கொள்ளப் பணித்தனர். ஆனால் சுக்கிரீவன் அதற்கு உடன்படவில்லை. வாலி ஆண்ட அரசைத் தான் உரிமைகொண்டு அரசாளுதல் குற்றமென்று எண்ணினான். எனவே வானரர்களின் கோரிக்கையை மறுத்து, ”நான் இந்தப் பிலத்தினுள் புகுந்து என் தமையன் வாலியைத் தேடுவேன்; ஒருவேளை அவன் இறந்துபோயிருந்தால் அவனைக் கொன்ற மாயாவியோடு போரிட்டு அவன் ஆவி முடிப்பேன்; அது கைகூடவில்லையாயின் என் இன்னுயிர் துறப்பேன்!” ...

Read More »

தொடக்கமும் முடிவும் இல்லாத பிரபஞ்சமே பெரு வெடிப்பின்றி விரிந்து செல்கிறது – 2

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear), கனடா பெரு வெடிப்பில் பிரபஞ்சம் பிறக்க வில்லை! ஆதி அந்த மில்லா அகிலம் என்று ஓதி வருகிறார் இன்று! கர்ப்ப மில்லை கரு ஒன்றில்லாமல் உருவாகுமா பிரபஞ்சம் வெறுஞ் சூனியத்தி லிருந்து? புள்ளித் திணிவு திடீரென வெடித்தது புனைவு நியதி! கருவை உருவாக்க உந்து சக்தி எப்படித் தோன்றியது? உள் வெடிப்பு தூண்டியதா புற வெடிப்பை? தூண்டு விசையின்றி துவங்குமா பெரு வெடிப்பு? பேரளவுத் திணிவு நிறை பிளந்த தெப்படி? கால வெளிக்கு வித்தாய் மூலச் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(343)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(343) ஓல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாத தில். – திருக்குறள் – 472 (வலியறிதல்) புதுக் கவிதையில்... தம்மால் செய்ய இயலும் செயலறிந்து, அதற்கு அறியவேண்டிய வலிமைகளறிந்து, மனம் மொழி மெய்களை அதில் எப்போதும் வைத்துப் பகைமேல் செல்லும் மன்னர்க்கு முடியாதது எதுவுமில்லை…! குறும்பாவில்... இயலும் செயலும் அதற்கான வலிமைகளுமறிந்து மனமொழிமெய் அதிலே வைத்துப் பகைமேல் செல்வோர்க்கு முடியாத தில்லையே…! மரபுக் கவிதையில்... செய்ய இயன்ற செயலறிந்து செயலதன் வலிமைகள் தானறிந்து மெய்யுடன் மனமொழி யெப்போதும் மிகையா ...

Read More »