இலக்கியம்

குறளின் கதிர்களாய்…(338)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(338) மனத்தி னமையா தவரை யெனைத்தொன்றுஞ் சொல்லினால் தேறற்பாற் றன்று. – திருக்குறள் – 825 (கூடா நட்பு) புதுக் கவிதையில்... மனதினால் நம்மோடு ஒன்றி அமையாத ஒருவரை, அவர் சொல்லும் சொற்களை வைத்து யாதொரு செயலிலும் தேர்ந்து தெளிதல் முறையானதல்ல…! குறும்பாவில்... மனதால் ஒன்றா ஒருவரை அவர்பேசும் பேச்சை வைத்துச் செயலெதிலும் தேர்ந்து தெளிதல் முறையன்று…! மரபுக் கவிதையில்... மனதது பொருந்த வரும்நட்பே மன்னும் என்றும் வாழ்வினிலே, நினைவில் கொண்டிடு மனமொன்றாய் நெருங்கா நிலையில் ஒருவர்தன் இனிதாய்ப் பேசிடும் ...

Read More »

மருத்துவமனை இயங்கிய கோவில்கள்

சேசாத்திரி ஸ்ரீதரன் ஒரு நோயாளி தங்கிப் பண்டுவம் மேற்கொள்ளும் இடம் தான் ஆதுலர் சாலை என்பது. ஆதுலர் என்றால் நோயாளி சாலை என்றால் ஆதரவு விடுதி எனப் பொருள். முடியாட்சியின் போது கோவில் மண்டபங்களே இத்தகு மருத்துவமனைகளாக இருந்தன. இப்படியான மருத்துவமனைகள் பல ஊர்களில் செயற்பட்டன. அதற்கான கல்வெட்டுச் சான்றுகள் நமக்கு சில கோவில்களில் காணக் கிடைக்கின்றன. கோவில்கள் பண்டு வழிபாட்டு இடம் என்பதோடு அல்லாமல் ஆடல் பாடல் இசைக் களமாக, வேதக் கல்விக் கூடமாக, சரசுவதி பண்டாரம் எனும் நூலகமாக, மருத்துவகமாக செயற்படும்படியாக ...

Read More »

மாவு மிஷின் (சிறுகதை)

பாஸ்கர் நிஜார் போட்டிருந்த நாட்களில் நான் குந்துமணி பங்களாவில் மாடிப்படி மாது. கடைக்கு ஏதேனும் வாங்கவேண்டும் என்றால் எல்லோரும் என்னைத் தான் அழைப்பார்கள். மங்களம் மாமி பில்லை காபிபொடி கேட்பாள். ஆராவமுது அய்யங்கார் கேட்பது மைதீன் புகையிலை. அதுவும் மாமிக்கு தெரியாமல் கொடுக்க வேண்டும். பார்த்துவிட்டால் மாமி எனக்கு புரியாதபடி மாமாவை வைவாள். புகையிலை மயக்கத்தில் வாயை குதப்பிக் கொண்டு மாமா இன்றெல்லாம் உட்கார்ந்திருப்பார். வாயைத் திறக்க மாட்டார். திறந்துவிட்டு பேசினால் அந்த குதப்பலை முழுங்க வேண்டி வரும். வாந்தியும் எடுத்து பார்த்து இருக்கிறேன். ...

Read More »

இவனை என்செய்வேன்!

ஏறன் சிவா உலகத்தில் முதல்மொழியெம் முத்தமிழ்தான் என்பான் — சொல் ஒன்றுமட்டும் உதிர்த்துவிட்டு ஆங்கிலமே தின்பான்! இலக்கணத்தில் நமக்கிங்கோர் இணையில்லை என்பான்! — அதில் இருக்குமொரு சூத்திரத்தில் ஏதோன்றும் அறியான்! இலக்கியங்கள் நம்தலைமேல் இருக்குமுடி என்பான் — அதில் எந்நூலும் பொருள்படித்து இதுவரையில் அறியான்! தாய்மொழிக்குத் தாய்மொழியெம் தமிழ்மொழிதான் என்பான் — ஒரு நாய்கூட “வள்”ளென்கும் இவன்தமிழைக் கொல்வான்! கலைகட்கெலாம் தாய்க்கலையெம் தமிழ்க்கலையென் றுரைப்பான் — நீ ஒருகலையை உருப்படியாய் கல்லென்றால் முறைப்பான்! உலகுக்கே ஒழுக்கம்தந்தோர் தமிழரென்று கதைப்பான் — அந்த ஒழுக்கத்தை இன்றிவனே ...

Read More »

படக்கவிதைப் போட்டி – 295

அன்பிற்கினிய நண்பர்களே! கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? புகைப்படக் கலைஞர் கிஷோர் குமார்  எடுத்த இப்படத்தை அவரது ஒளிப்படத் தொகுப்பிலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (20.02.2021) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா ...

Read More »

அஞ்சலி செலுத்த வந்தவன்

பாஸ்கர் போன வாரம் கூட இவனோடு ஒரு முரண் இனி விவாதம் செய்ய முடியாது . எல்லோரும் எல்லோரையும் பார்த்தார்கள் . எப்படி வருகிறது அழுகை , உடலை பார்த்தவுடன் எல்லோரும் நல்லவர்கள் இங்கே . செத்த பின் இங்கு எல்லாம் பரஸ்பரம் . ஒருவர் மாலையை சரி செய்தார் , பள்ளியில் படித்தவராம் ஒருவர் அந்த சிரிப்பே வாடவில்லை என்றார் , என்ன பாக்கியோ? யாரோ நின்று ஈக்களை விரட்டிக்கொண்டிருந்தார் . யாருமே இங்கே சிரிக்கக்கூடாது . பிற எதை செய்தாலும் கேள்வியில்லை ...

Read More »

குறளின் கதிர்களாய்…(337)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(337) அறிவின்மை யின்மையு னின்மை பிறிதின்மை யின்மையா வையா துலகு. – திருக்குறள் -841 (புல்லறிவாண்மை) புதுக் கவிதையில்... இல்லாமை பலவற்றுள்ளும் ஒருவனுக்கு மிக்க இல்லாமை அறிவில்லாமையாகும்.. மற்றைப் பொருள் இல்லாமை போன்றவற்றைப் பெரிதாய் எடுத்துக்கொண்டு இகழார் உலகிலுள்ளோர்…! குறும்பாவில்... இல்லாமைகளில் கொடிய இல்லாமை அறிவில்லாமையே, பிற இல்லாமைகளைப் பெரிதுபடுத்தி ஒருவனை இகழார் உலகோர்…! மரபுக் கவிதையில்... அறிவ தொருவனுக் கில்லாமையே அனைத்திலும் கொடிய இல்லாமையே, பிறவெலாம் இதனை மிஞ்சிவிடும் பெரிய இலாமை இல்லையாமே, உறவுகள் முதலா உடனிருக்கும் உற்ற ...

Read More »

படக்கவிதைப் போட்டி 294இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி புகைப்படக் கலைஞர் திரு. சரவணன் தண்டபாணி  எடுத்த இப்படத்தை அவரது ஒளிப்படத் தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுத்து படக்கவிதைப் போட்டி 294க்கு வழங்கியுள்ளார் திருமிகு. ராமலக்ஷ்மி. புகைப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றி! மலரும் மலர்முகச் சிறுவனும் அருகருகே ஒருவரையொருவர் நோக்கிக் கொள்ளும் எழிற்காட்சி நம் உள்ளம் கவர்கின்றது. இதற்குப் பொருத்தமாய்க் கவிதை தீட்ட, காட்சிக்குக் கவினைக் கூட்ட அழைப்போம் நம் கவிஞர்களை! ***** ”விரிந்து மலர்ந்த மலரைப்போல் சிரித்து மலர்ந்த முகத்தோடும் பொய்யில்லாச் சொல்லோடும் பிள்ளையாய் இருந்தால் தொல்லையில்லை” என்று பிள்ளைப் பருவத்தைப் போற்றுகின்றார் ...

Read More »

படக்கவிதைப் போட்டி – 294

(அனைவருக்கும் வணக்கம். வல்லமை மின்னிதழ் சிறிது தடைப்பட்டதால், இதே படத்தை மீண்டும் அறிவிக்கின்றோம். வரும் சனிக்கிழமை வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அதன் பிறகு முடிவுகளை அறிவிப்போம். – ஆசிரியர்) அன்பிற்கினிய நண்பர்களே! கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? புகைப்படக் கலைஞர் சரவணன் தண்டபாணி  எடுத்த இப்படத்தை அவரது ஒளிப்படத் தொகுப்பிலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே ...

Read More »

வெற்றிக்குக் காரணம் (சிறுகதை)

நிர்மலா ராகவன் ராமனுக்கு மனைவியிடம் எரிச்சல்தான் எழுந்தது. அப்படி என்ன உலகில் இல்லாத குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டாள்? அதற்காக ஓயாமல் அழுதுகொண்டிருந்தால்? முதல் குழந்தை என்று அவனும் எத்தனையோ கனவுகளுடன் தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது தெரியவில்லையே, அது குறையுடன் பிறக்கும், இருக்கும் நிம்மதியையும் பறித்துவிடும் என்று! `வீணா அதைக் கொஞ்சிக்கிட்டு இருக்காதே. கீழேயே போட்டுவை. அது அல்பாயுசில போனதும் ரொம்ப வேதனையாப் போயிடும்!’ என்னமோ, அதன் இறப்புக்கு நாள் குறித்தவர்கள் போல் பலரும் அறிவுரை கூறியதை புனிதா காதில் வாங்கவேயில்லை. தலையிலிருந்து ஒரு மயிரிழை ...

Read More »

இக்காலகட்டத்தில் காரைக்காலம்மையார் பற்றிய பெண்ணியல் நோக்கு

கௌசி, ஜெர்மனி பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி அறவாநீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க உடலுக்கு அழிவு உண்டு ஆன்மாவுக்கு அழிவில்லை. நிச்சய மோட்சம் கிடைத்து இறைவன் காலடி சேர்ந்தால் அன்றி உயிர்கள் மீண்டும் மீண்டும் தம்முடைய பாவ புண்ணியங்களுக்கேற்ப பிறப்பெடுத்துக் கொண்டிருக்கும் என்பது இந்துமத நம்பிக்கை. உலக வாழ்க்கையை விரும்பாத அடியார்கள் மீண்டும் பிறப்பெடுப்பதை விரும்பாது மோட்சம் கிடைப்பதையே விரும்புகின்றார்கள். பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மீண்டும் பிறப்புண்டானால் சிவனடியாராகவே இருந்து உன்னை ...

Read More »

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 25

-மேகலா இராமமூர்த்தி ஏன் இன்னும் இலக்குவன் மீளவில்லை? ஒருவேளை சீதையை கவர்ந்துசென்ற அரக்கர்களைக் கண்டு அவர்களோடு வெஞ்சமர் புரியத் தொடங்கிவிட்டானோ? இராவணன் என் இளவலையும் கவர்ந்துசென்று கொன்றுவிட்டானோ? என்றெல்லாம் எண்ணிக் கவன்ற இராமன், தன்னைத்தானே வாளால் குத்திக்கொண்டு மாள எத்தனித்த வேளையில், அயோமுகியால் தூக்கிச்செல்லப்பட்ட இலக்குவன் அவளின் வசிய வித்தையிலிருந்து மீண்டு, சூர்ப்பனகையின் நாசியை அறுத்து அவளைத் தண்டித்ததுபோலவே, அயோமுகியின் நாசியையும் அறுத்தான். அவள் வலிதாளாது அலறிய பேரொலி இராமன் செவிகளில் விழுந்தது. இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு எழுகின்ற இந்தப் பேரொலி ஏதோ ஓர் ...

Read More »

சுடர்விடும் நின் புகழ்!

முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மா.மன்னர் கல்லூரி,புதுக்கோட்டை. (சென்னை – அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் சாந்தா அம்மையார் அவர்களுக்கு அஞ்சலி) சாந்தத்தைப் பிறர்க்குத் தந்த சக்தியின் வடிவம் நீங்கள் காந்தமாய் நின்ற புற்று நோயை உங்கள் சாந்தத்தால் விரட்டினீர்கள் பாந்தமாம் உங்கள் பண்பு பாரிலே யார்க்கும் உண்டோ? பந்தமில் உறவுக்கிங்கே பாசமாம் தாயுமானீர் ஏதமில் எங்கள் தாயே! ஏழையேம் எம்மைவிட்டு ஏன் நீங்கள் வானம் சென்றீர்? உம்மை யாம் இழந்ததாலே ஏதிலிகள் ஆனோம் இன்று! இன்பத்தைக் காண்போம் என்று? புற்றுநோயினை அழித்துப் பலரின் வாழ்வினைச் செழிக்கச் ...

Read More »

முகநூலும் முத்துலட்சுமியும் (சிறுகதை)

நிர்மலா ராகவன் அன்று மத்தியானம் பொழுதே போகாது, முகநூலுக்குள் நுழைந்தாள் அமிர்தா. பழைய கதைதான். தங்களுடைய குடும்பத்தோடு இணைந்த புகைப்படம், உறவினரின் அறுபதாவது அல்லது எண்பதாவது பிறந்தநாளை ஒட்டி நடத்திய விழா. இதெல்லாம் முன்னேபின்னே பார்த்தறியாத `நண்பர்’களுக்காக. பிடிக்கிறதோ, இல்லையோ, எல்லாவற்றையும் அவர்களும் பாராட்டிவைப்பார்கள். அப்போதுதானே, நாளைக்கு அவர்கள் எதையாவது வெளியிடும்போது பிறர் புகழ்வார்கள்! பேசத் தெரிந்தவுடன் பாடும் குழந்தையின் மழலைப் பாட்டைக் கேட்டதும், `இவ்வளவு சிறு வயதிலேயே ஒரேயடியாகக் கொண்டாடினால், உலகமே தனக்காகத்தான் இயங்குகிறது என்பதுபோல் கர்வப்பட்டு, யாரையும் மதிக்காமல் போய்விடாதா!’ என்று ...

Read More »

படக்கவிதைப் போட்டி 293இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி தோளில் வீற்றிருக்கும் கிளிகளோடு அமர்ந்திருக்கும் இளைஞரைப் படமெடுத்து வந்திருக்கின்றார் திருமிகு. ஆர். கே. லக்ஷ்மி. இப்படத்தை அவரது ஒளிப்படத் தொகுப்பிலிருந்து தேர்வுசெய்து படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றிகளை நவில்கின்றேன். தோளிலே தத்தைகளோடும் முகத்திலே தீவிரச் சிந்தனைகளோடும் அமர்ந்திருக்கின்றார் இந்த இளைஞர். கவிஞர்களின் சிந்தனைக்கும் வேலை தந்திருக்கின்றது இந்த ஒளிப்படம் என்றே கருதுகின்றேன். படத்திற்குப் பொருத்தமாய்க் கருத்துக்களை அள்ளித்தர வாரீர் கவிஞர்களே! ***** ”முதுகில் கிளிகளைச் சவாரி செய்ய அனுமதி! காதிற்குக் கிடைக்கும் தேனிசை; மனத்திற்குள் ...

Read More »