Tag: சத்தியமணி கவிதை அவ்வை தில்லி தமிழ்

  • நினைவுகள் கரைந்திடும் மாயம்

    நினைவுகள் கரைந்திடும் மாயம்

     

    மரத்தில் பூத்த கதிர் மலர்
    காமபாணம் கொண்டது
    நிலத்தில் பூத்த கவி மலர்
    காதல்நாணம் கொண்டது
    குளத்தில் பூத்த பதுமமோ
    இதழ்விரியச் சிரித்தது மின்
    தளத்தில் பூத்த பதிவிலோ
    தமிழும் பொழியச் சிவந்தது

    இரவில் மலர்ந்த கனவுகளெல்லாம்
    விழித்ததும் மறைந்து போகும்
    உறவில் கிடைத்த இன்பங்களெல்லாம்
    முதிர்வினில் மறந்து போகும்
    பிரிவில் விளைந்த துயரம் எல்லாம்
    பிணியினில் மறத்து போகும்
    பிறப்பில் தொடர்ந்த அனுபவமெல்லாம்
    இறப்பில் எரிந்து போகும்

    பயணம் முடிந்த தருண மெல்லாம்
    சீட்டை கிழித்திடும் நாளும்
    அயனம் மாறிடும் உதய மெல்லாம்
    ஏட்டைப் புரட்டிடும் மேலும்
    சயனம் நிரந்தர மாகிடுமேனி
    சடலம் என்றவர் காணும்
    நயனம் பெருகிடும் நீராற்றில்
    நினைவுகள் கரைந்திடும் மாயம்

     

     

    Share
  • குடியரசு பாரதம் 26 01 2025

    குடியரசு பாரதம் 26 01 2025

    குடியரசு பாரதம் 26 01 2025
    சத்தியமணி

    வந்தே மாதரம்
    வாழிய பாரதம்
    தங்கும் பொன்னே
    தாய் மண்ணே !!
    எங்கே அறமும்
    அங்கே திறமும்
    இங்கே பிறந்தோம்
    தரம் விண்ணே !! ()

    வண்ணம் காட்டும் மயிலைப் போல்
    பண்பாடை காட்டும் பாரதம்
    கண்ணம் காட்டும் மகளைப் போல்
    தர்மம் காட்டும் பாரதம்
    அண்ணம் காட்டும் நளினம் போல்
    தூய்மைக் காட்டும் பாரதம்
    இன்னும் காட்டும் தெய்வீகம் போல் கும்பம் காட்டும் பாரதம் ()

    விண்ணில் ஏவும் கணைகள் மூலம்
    வீரம் காட்டும் பாரதம்
    எண்ணில் அடங்கா எழிலால் நாளும்
    தீரம் காட்டும் பாரதம்
    கண்ணில் தோன்றும் கருணை ஊற்றை
    வாழ்வில் ஊட்டும் பாரதம்
    மண்ணில் வளரும் தேசம் யாவும்
    வாழ்த்தும் உயர்வில் பாரதம்.

    Share
  • கணுப் பொங்கல்

    கணுப் பொங்கல்

    கணுப் பொங்கல்
    சத்தியமணி. தில்லி

    கணுப் பொங்க லிட்டேனே
    காணும் பொங்க லிட்டேனே
    மனப் பொங்க லிட்டேனே
    மங்களப் பொங்க லிட்டேனே
    மஞ்சள் பொங்க லிட்டேனே
    வண்ணப் பொங்க லிட்டேனே
    தரையில் கோலமும் இட்டேனே
    மஞ்சள் இலைகளை வைத்தேனே
    திரியில் விளக்கு ஏற்றியபின்
    தாயின் முகத்தை நினைத்தேனே
    கீழ்திசை நோக்கிட பரிமாற
    கவளப் பிடிகளைப் படைத்தேனே
    காக்கை குருவிகள் கிளிகளையும்
    சாப்பிட வேண்டி துதித்தேனே
    உங்களைப் போலொரு கூட்டாக
    ஒற்றுமை கற்பிக்க அழைத்தேனே
    உடன் பிறந்தோமென உணர்வோடு
    ஒருதாய் பெற்ற உறவாலே
    பிரிவு வெறுப்பென இல்லாமல்
    பரிவுடன் வாழ்ந்திட வாழ்த்திடவே!
    பதவி பணவெறி தாக்காமல்
    உதவி கரங்களை விழைந்திடவே!
    நன்றி மறவா எண்ணமுடன்
    கடந்த காலம் நினைத்திடவே
    தன்னலப் பொந்தினில் இல்லாது
    தருவதும் பெறுவதும் நிறைந்திடவே
    கரும்பை இணைப்பது கணுவாகும்
    பாசம் இணைப்பது உறவாகும்
    கரும்பின் இனிப்பினு மேலாகும்
    பிறவிக்கு அன்பும் அமுதாகும்
    ஊணும் உயிரும் உறவாடும்
    காணும் பொங்க லிதுவாகும்

     

    Share
  • மங்கையர் தினம்

    மங்கையர் தினம்

    தினம் தினம் இனிக்க மங்கையர்
    தினம் வந்தது தானாய்….1
    இதிகாசம் பதிக்கும் கலிகாலம் பழிக்கும்
    சலியாத தாய்மை பணி…2
    தொடராகும் தொடக்கம் துவளாத வரைக்கும்
    சுடராகும் குலத்தில் பெண்..3
    மகளாய் மனையாய் தமக்கை தோழியாய்
    சகமாய் வந்தாள் தாய்..4
    அன்பை காட்டி அகத்தை கூட்டி
    பண்பை தருவது பெண்..5

    Share
  • குரு சரணமாலை

    குரு சரணமாலை

    திருவாகி வந்தென் குற்றம் துடைப்பார்
    உருவாகி ஊட்டும் குரு
    மாயவிளை யாடல்தமை மதிவீழ செய்யாது
    காயமெலாம் காக்கும் குரு
    ஆனந்த ஆனந்த ஆனந்த பொழிவாகி
    தானந்த மாகிடும் குரு
    துன்பம் கொடுத்து துயரம் தனைமாற
    இன்பம் கொடுக்கும் குரு
    பிறவிகள் அறுக்க பித்தமெலாம் அழிக்க
    அருவிகள் அருளாக குரு
    பிழையோ பாவமோ பித்தமோ பிணிநீக்க
    மழையாக மந்திரம் குரு
    ஞானமும் நல்லறிவு சாதுர்யம் தன்னடக்கம்
    தானங்க மாகிடும் குரு
    தெரியாது புரியாது தவித்திடும் நிலைமாற
    குறையாத வளந்தான் குரு
    வித்தை கற்பித்து சத்தை தெளிவிக்க
    சித்தியுள் நிறைந்த குரு
    முடியாத காரியம் விதியென காரணம்
    அடியாலே நிகழ்த்தும் குரு
    ஒழுக்கம் தவநெறி நல்லறம் பாக்கியம்
    வழங்கும் பகவான் குரு

    [contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

    Share
  • அனுமன் பத்து

    அனுமன் பத்து ( 200423)

    முடியாத செயல்களும் முடிக்கும் ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு …1
    இயலாது இராமன் துயரறுத்த ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…2
    படியாத அசுரரை அழித்த ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…3
    ஏய்க்கும் ஏமாற்றும் மாயர்வீழ ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…4
    ஆபத்தை அழித்து அருளால் ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…5
    துன்பம் அணுகாது காப்பாய் ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…6
    ராமஜய ராமஜப ராமசுப ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…7
    வாலிலே பலமோடு வரமாய்வா ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…8
    திக்கெலாம் நிறைந்து காக்கின்ற ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…9
    மறைவாய் மாயையது அணுகாது ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…10
    பத்தும் துதிக்க பத்திரம் ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கி யருள்.

    Share
  • திருசிரமலை நாயகனே

    திருசிரமலை நாயகனே

    [contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

     

    திருசிரமலை நாயகனே
    சத்தியமணி 31 08 22

    வெற்றி தரும் வேழமுக

    மைந்து மினிதா னனடி
    பற்றி பெறும் பாக்கியஉ

    பாத்தி யமென தாளனடி
    சுற்றி வரும் போதினிலே
    மனதாள துயர் களைந்
    தேற்றி தடையோட விடும்

    பாலன் விளையாடி வரும்
    நற்றி பொன்னி யலைவீச
    திருசிர மலையமர நாயகனே….1

    தாயுமா  னான்சிவ சிவம்
    தாயுமை சேர்ந்து நலம்
    தூயுமன தாளும் குணம்
    வாயுமுட னாசியி னில்
    காயமுடன் பிறக்கும் சுழல்
    தேயவுட னாளும் நிலம்
    பாயும் பொன்னி யலைவீச
    திருசிர மலையமர நாயகனே….2

    உச்சி மலையா ளுமறை
    போற்று தயாபர எழில்
    மெச்சி சிவசைவ குழாம்
    ஏற்று பிள்ளை யாரெனவே
    கச்சி யம்பலத் தானுறையும்
    காமாட்சி பெற்ற தனால்
    பச்சை பொன்னி யலைவீச
    திருசிர மலையமர நாயகனே…..3

    காப்பு அரையில் அரவுயிடை
    கழலடி தண்டை மணிகளும்சேர்
    தோப்பு கரணம் போட்டதுமே
    துள்ளி நம்மில் ஏதுகுறை
    மூப்பு பிணியா வுமதை
    தீர்க்கு படியாகும் ரசம்
    நீர்ப்புக பொன்னி யலைவீச
    திருசிர மலையமர நாயகனே…….4

    மாமன் ரங்க நாயகனும்
    மருமான் மகிழவே நிலம்
    மாமிய வளாடும் குழை
    கேட்ட ணிந்தே தினம்
    நாமமி னிதாக நெற்றி
    நடுவி னிலிட்ட படி
    தாமத தாளமு டன்சுக
    தாள் பதித்தா டசிவ
    ராகம் பொன்னி யலைவீச
    திருசிர மலையமர நாயகனே…….5

    சம்பு சலமாகி லிங்கம்
    நந்தி உடனோடு தவம்
    நம்பி துதிபாடி களிறு
    காத்த ஆனைக் காவினிலே
    தும்பி க்கையில் வலம்
    தூக்கி யெம்நா விலுரை
    எம்பி பொன்னி யலைவீச
    திருசிர மலையமர நாயகனே……6

    அண்ட சராசர பெற்று
    ஆளும் அகிலா ண்டரசி
    கண்ட சினம் தானழிய
    கண்ணெ திரில் பேருருவே
    உண்ட கொழுக் கட்டையதை
    கவளமென தின்ற வனே
    வண்டல் பொன்னி யலைவீச
    திருசிர மலையமர நாயகனே……7

    உருகி மனதுதி கள்பல
    எழுதி தனக்கானத் தமிழ்
    பருகி பெரும்வள மையுடை
    புலமைத் தரும் கணபதியே
    இருகி வரும் வளர்மதியே
    ஏற்றமிகு பதவி புகழ்
    மருகி பொன்னி யலைவீச
    திருசிர மலையமர நாயகனே…..8

    அரச மரத் தடியிலொரு
    அருளாள நதியின் கரை
    அரச ரும்முனி அகத்திர்சேர்
    அடிபணிய வைக்கும் கரி
    முரசரியும் முகத்தவனே
    முக்காலம் அறிந்தவனே
    பரிசப் பொன்னி யலைவீச
    திருசிர மலையமர நாயகனே…..9

    கருக விடும் அங்குசமும்
    கனிய வரும் பூரணமே
    அருக முடன் மாலையுள
    அத்தி முகங் கணபதியே
    எருக்க மொட்ட விழ்ந்திலே
    எட்டிசெலும் தீவினைகள்
    பெருக்கவர பொன்னி யலைவீச
    திருசிர மலையமர நாயகனே…..10

    சுமுகமாய் வேழாய்ப் போற்றி
    சுகமு ம்மனத் துணிவே போற்றி
    ஒற்றை கொம்பாய் போற்றி
    ஓமென ஒலிப்பாய் போற்றி
    சிராப் பிள்ளையே போற்றி
    சிவஞானக் கொழுந்தே போற்றி
    திருசிர மலையப்பா போற்றி
    திருசிற் றம்பலம் போற்றி…11

    ஒருநாளும் துவளாது

    உன்பாதற் சலங்கையென
    வருநாளும் துதிகள் பாடி
    வாயினிக்க இசைகள் கூடி
    திருநாளும் தரிசனமும்
    தின்பண்ட பிராசதமும்
    அருள்வாய் உமைபாலா
    மணிநாதன் முன்சரணம்

    …….இன்னும் வரும்

    Share
  • அரங்க கும்மி

    சத்தியமணி

    உறங்கச் சயனமோடு
    உறங்கா நயனமோடு
    முழங்கச் சங்கினோடு
    முழங்காச் சங்கமோடு
    வணங்க அடிகளோடு
    வணங்கா முடிகளோடு
    இரக்கத்தில் வந்தனனே
    அரங்கனைக்  கும்மியடி    1

    குன்றாடும் இடமாகி
    கோவிந்தன் இருந்தாலும்
    நின்றாடும் யமுனையதில்
    கோபாலன் இருந்தாலும்
    மன்றாடும் நிலைக்கெமை
    மாற்றாது இருப்பாயே
    அன்றாடம் அரியென்றே
    அரங்கத்தில் கும்மியடி 2

    அளந்தானாம் சிற்றடியில்
    உயர்ந்தானாம் பேருருவில்
    கலந்தானாம் அலைமகளைப்
    பிரிந்தானாம் மானதனால்
    சேர்ந்தானாம் தென்னிலங்கை
    சிறந்தானாம் ரகுராமன்
    அவன்தான் இவனென்றே
    அரங்கத்தில் கும்மியடி 3

    விட்டலன் பேர்சொல்லி
    வீதியில் களிப்பாட்டம்
    வித்தகன் அரியென்று
    பக்தரிசை குளிப்பாட்டும்
    பண்டரி நாமந்தனில்
    புண்டரியின் அபங்கத்தில்
    வரியாகி பண்ணாகி
    அரங்கத்தில் கும்மியடி 4

    மானால் கெட்டதும் (சீதை)
    மதியால் கெட்டதும் (வாலி)
    கூனால் கெட்டதும் (கைகேயி)
    சூதால் கெட்டதும் (தர்மர்)
    காதால் கெட்டதும் (தசமுகன்)
    கண்ணால் கெட்டதும் (கௌரவர்)
    கூறுமரி கதைக்கேட்டு
    அரங்கத்தில் கும்மியடி 5

    தீராத பிறவிச்சுழல்
    தீர்ப்பான் அடிபற்றி
    ஆறாத பழியெலாம்
    அழிப்பான் கழல்பற்றி
    கூறாத உரையெலாம்
    கீதையாய் பொருள்பற்றி
    மாறாத அருளுண்டான்
    அரங்கத்தில் கும்மியடி 6

    ஏழேழு பிறவியெலாம்
    எம்மோடு வந்தானோ
    ஏழுமலை தன்னைவிட
    எம்முளமாய் நின்றானோ
    வாழுமற வாழ்வெனவே
    வந்தினிதே வைத்தானோ
    தூயுமனத் தாயானான்
    அரங்கத்தில் கும்மியடி 7

    இருப்பதில் இருப்பதும்
    இல்லாது இருப்பதும்
    மறைப்பதும் தெரிவதும்
    தெரிந்தும் மறைப்பதும்
    கிடைப்பதும் இழப்பதும்
    கிட்டாதும் நிலைப்பதும்
    நாரணன் செயலென்றே
    அரங்கத்தில் கும்மியடி 8

    தேனாய்த் தமிழூட்டி திகட்டாப் பொருளாற்றி
    பூணாய்ப்  பூட்டியே புகட்டி அருளாற்றி
    நாணாய் நாவேற்றி நல்லிசைப் பண்ணாகி
    அரங்கன் அரங்கத்தில் அடிமனமே கும்மியடி 9

    பற்றியது செவ்வடிகள்
    எட்டியது  வைகுந்தம்
    சுற்றியது சுதர்சனம்
    சுரமுடனே சங்கநாதம்
    வெற்றியினி வெற்றியென
    வேங்கடன் மணியொலியே
    நற்றவினை யாவும்பெற
    அரங்கத்தில் கும்மியடி 10

    மேகத்தில் தேவரவர்
    நீர்வாரி தெளிக்கஅரி
    போகத்தில் ரதமேறி
    பூரியில் பவனிவரும்
    கோலத்தில் ஊர்வலமே
    அடியவர் குறையழியும்
    சோகமெலாம் மறக்கும்
    அரங்கத்தில் கும்மியடி 11

    துயிலைக் கலைத்து துயிலோனை எழுப்ப
    கயிலை மலையோடு
    கங்கை கரைதற்போல்
    மங்கையர் அலைபுவி தாயாரும் எமதென்றே
    சங்கைத் தரித்தோனாம்
    அரங்கனைக் கும்மியடி 12

    கற்றதும் உற்றதும் கழனியில் பிறந்து
    பெற்றதும் அற்றதும்
    பேருடன் பதவிகளைக்
    குற்றமற அறமுடன்
    வற்றாது வரமளித்த
    அரங்கனைச் சரணடைய
    அரங்கத்தில் கும்மியடி 13

    அளந்தானாம் சிற்றடியில்
    உயர்ந்தானாம் பேருருவில்
    கலந்தானாம் அலைமகளைப்
    பிரிந்தானாம் மானதனால்
    சேர்ந்தானாம் தென்னிலங்கை
    சிறந்தானாம் ரகுராமன்
    அவன்தான் இவனென்றே
    அரங்கத்தில் கும்மியடி 14

    விட்டலன் பேர்சொல்லி
    வீதியில் களிப்பாட்டம்
    வித்தகன் அரியென்று
    பக்தரிசை குளிப்பாட்டும்
    பண்டரி நாமந்தனில்
    புண்டரியின் அபங்கத்தில்
    வரியாகி பண்ணாகி
    அரங்கத்தில் கும்மியடி 15

    நேற்றாகி மறைந்தான் இன்றாக இருந்தான்
    கூற்றாகி நாளையெனக்
    கூப்பிடவே வருவான்
    காற்றாகி மூச்சாகி
    மாற்றவரும் வேளையிலே
    வாரணம் சூழவரான்
    அரங்கத்தில் வாசலிலே  அடிமனதே கும்மியடி 16

    கருடன் பேருருவாய்
    கொடியென மேலமர
    அனுமன் கையுயர
    வெற்றி மேலுயர
    ஆழ்வார் பாசுரமோ
    ஆனந்த சுரமுடனே
    ரங்க ரங்காவென
    அரங்கத்தில் கும்மியடி 17

    தாயார் தரிசனமும்
    தன்வந் தரிதுணையும்
    ஆயர்ப் பாற்குவளை
    அணைத்த கரங்களும்
    பாறாழி படுக்கையும்
    பாதத்தின் தரிசனமும்
    போதாதா கலியழிய
    அரங்கத்தில் கும்மியடி 18

    கவியின மென்றெனை
    நாவினில் அமுதிட்டு
    புவியர சாயிரமும்
    போற்றிட அருளிட்டு
    கவியர சாகசடாரி
    சிரசிலே வைத்தானே
    அழியா நிலைதந்த
    அரங்கத்தில் கும்மியடி 19

    சீயரும் தீர்த்தமிட
    பட்டரும் துளசிதர
    தீயரும் விலகிடவே
    துட்டரும் தூயமென்ன
    ஆயரின் நாவினிக்க
    அழைக்கும் அரியெனும்
    நாமமதைக் கூவியே
    அரங்கத்தில் கும்மியடி 20

    கரிசனம் மிகபெற்று
    கதவுகள் திறந்துவிட்டு
    துரிதமாய் அழைத்து
    துழாய்தமை அணிவிக்க
    அரிசனம் அந்தணம்
    வேதியர் கூடிபெறும்
    தரிசனம் தாவென்று
    அரங்கத்தில் கும்மியடி 21

    மலையாடும் இடம்தனில் கோவிந்தன் இருந்தானோ
    அலையாடும் யமுனையிலே கோபாலன் இருந்தானோ
    மன்றாடும் நிலைக்குஎமை வீழாதிருக்கவென
    அன்றாடம் அரியெனவே அரங்கத்தில் கும்மியடி 22

    காரணம் முன்னாகி
    காரியம் பின்னாகி
    சீரணம் ஆகுமுன்
    சிந்தையில் சிதையாகி
    பூரணம் முடிவாகி
    பொலிவினில் சமமாகி
    அரங்கத்து வாசலிலே
    ஆனந்தக் கும்மியடி 23

    உயிரெனப் பேரிட்டு
    உடலென்று உணவிட்டு
    உறவென்று உணர்வோடு
    துறவென்று வழியிட்டு
    மடிதன்னில் பாலிட்டு
    மடியென்றும் பாலிட்ட
    உறக்கத்தில் வைகுந்தன்
    அரங்கத்தில் கும்மியடி 24

    வரமென்று பெறுவதும் வாழ்வுக்கு போறாது
    தரமென்று தந்தாலும் தரணிக்குத் தேறாது
    அறமென்று அறிந்தே
    மரணத்தின் முன்னேவா
    இரங்கடா அரங்காவென
    அரங்கத்தில் கும்மியடி 25

    இரண்டிலே ஒன்றாக
    ஒன்றிலும் இரண்டாக
    சேர்ந்தும் பிரிவாக
    பிரிவிலும் சேர்வாக
    ஒலியாக ஒளியாக
    வழியாக வெளியாக
    அங்கத்தில் புலனான
    அரங்கத்தில் கும்மியடி 26

    வந்தனன் எதிரிலே
    தந்தனன் அமுதினை
    அந்தணன் வாமனன்
    முந்தினன் மாதவன்
    நந்தகோ பாலனின்
    அரங்கத்தில் கும்மியடி 27

    அங்கமெ லாநிறைந்து
    அணியாய் அணிகின்ற
    தங்கமென மிளிர்ந்து
    கவசமாய்க் காக்கின்ற
    இங்குமென எங்குமென
    எளிதாய் உடனுறைய
    மங்கையலை நாயகியின்
    அரங்கத்தில் கும்மியடி 28

    மங்களம் பெருக்கிட
    மனதெலாம் நிறைவுற
    திங்களின் முகமலர
    திக்கெலாம் வாழ்த்துரைக்க
    எங்கெலாம் எப்போதும்
    என்னுடனே இருப்பானோ
    அரங்கா இரங்காயென
    அரங்கத்தில் கும்மியடி 29

    தங்கமய விமானத்தைத்
    தேவரவர் பூசிப்பதும்
    காயத்ரி மண்டபமும்
    காரிருள் சயனமும்
    வேண்டும் நொடியினில்
    என்முன் தெரியவை
    நித்தமும் அரங்கனென
    நிறைவோடு கும்மியடி

    ………….  அரங்க கும்மி ( சத்தியமணி)

    பத்து நாளில் தில்லியிலிருந்து திருச்சிக்கு அழைத்து  திருவரங்கன் தரிசனம் கொடுத்தது அற்புதம்

    Share
  • தமிழிவள் துடிப்பும் அடங்கிடுமோ?

    சித்திரை நிலவு சிரிக்கின்றாள்
    செந்தமிழ் கேட்டு நகைக்கின்றாள்
    முத்தமிழறிஞர் சங்கத்தை
    மோகனமிட்டு அளக்கின்றாள்
    உத்தமர் யாரெவர் புரியவில்லை
    பித்தர்கள் கூட்டமாய் குறைவுஇல்லை ()

    கற்றவர் சபையிலை அங்கினுமே
    கட்சிகளாக காணுகின்றாள்
    பெற்றவரில்லா பிள்ளையைப் போல்
    பெருந்துயர் மனதுடன் வாழுகிறாள்
    உற்றவர் உறவினர் எனச்சேர்ந்த
    ஒருபிடி குழுக்களில் மேடைகளில்
    மற்றவர் யாவரும் பார்வையிலா குருடராகவே காணுகிறாள் ()

    தனைச்சுற்றி வட்டமும் போட்டதிலே
    தினமொரு பலன்தரும் சனியவராய்
    அணைகட்டி ஓடிடும் காவிரியை
    தன்பிடி தடுக்கும் மாநிலமாய்
    கடன்விட்டு போயினும் கர்மாவின்
    கடைபட துயருரும் நாடதுபோல்
    உடன்கட்டை ஏறிட விழைவதுஉம்
    உத்தமமா பழி
    மொழியினமா? மொழியிடமா ? ()

    பணத்துக்கு வள்ளுவன் எழுதவில்லை
    பதவிக்கு பாரதி பணியவில்லை
    ஆட்சிக்கு ஆழ்வார் பாசுரங்கள்
    தமிழினில் தந்தார் புகழ்ச்சியில்லை
    விருதுகள் பெற்றிட விளம்பரங்கள்
    கம்பனும் அவ்வையும் செய்யவில்லை
    திறமைகள் பளிச்சிட தெரிந்தும்பலர்
    வளர்ந்திட வளர்த்திட நினைப்பதில்லை ()

    தன்னலமோடு கங்கைநதி
    தண்ணீர் மறுத்தால் பயனுளதோ
    தன்குலம் வாரிசெனச்சொல்லி
    வானம் மாரியை மறுத்திடுமோ
    பிரிவினை ஏற்றி அதில் பிழைக்கும்
    நரிகளும் எலிகளும் அணிவகுத்தால்
    துயரினைப் போக்கி உயிர்வாழ
    தமிழிவள் துடிப்பும் அடங்கிடுமோ ()

    Share
  • அன்னையர் தினம் 2022

    அன்னையர் தினம் 2022

    எத்தனை அடைந்தாலும் நிறைக்காதம்மா

    அத்தனை உறவுகளும் உனக்காகுமா

    உனக்கே நிகராகுமா () 

     

    உனக்கென நான் கிடைத்தேன்

    எனக்கென நீ கிடைத்தாய்

    தவமெனத் தான் சுமந்தாய்

    தயவுடன் தாங்கி நின்றாய்

    என்னுடன் நிதம் அமர்ந்தாய்

    இன்முகம் தினம் கொடுத்தாய்

    கவிதைகள் எழுத வைத்தாய்

    களித்தபின் தலை முகர்ந்தாய்

    அத்தனை நினைவுகளும் மறக்காதம்மா

    எத்தனை பிறவிகளும் பிரிக்காதம்மா ()

    தூளியில் துயிலளித்தாய்

    தோளினில் இதமளித்தாய்

    பைந்தமிழ்ப் பாசுரங்கள்

    பாலினில் நீ சுரந்தாய்

    அன்பினில் வளரவைத்தாய்

    அறவழித் தெளியவைத்தாய் 

    பண்புடன் பயிலவைத்தாய்

    பாரினில் பழகவைத்தாய்

    உதவிடும் குணமளித்தாய் தொடர்வேனம்மா

    உயர்ந்திட வழிவகுத்தாய் சிறப்பேனம்மா ()

    தாயினும் உயர்வுண்டோ

    தாயகம்!! அயர்வுண்டோ

    பிறவியின் பயனுண்டோ

    பிழைப் பொறுத்தருளுண்டோ

    கயமை விலக்கச் சொன்னாய்

    மெய்மை விளக்கி சென்றாய்

    நன்நெறி புரிய வைத்தாய்

    நலங்களைக் குவியத்தந்தாய்

    நனவினில் பிரிந்தே சென்றாயம்மா

    நினைவினில் இருந்தே காப்பாயம்மா ()    

    Share
  • திருமாலடி பிடிப்பாவை

    திருமாலடி பிடிப்பாவை

    சத்தியமணி
    பொடியான் தானமிட நெடியான் அடியளக்க
    அடியான் கல்லையே அகலிகை ஆக்கும்
    முடியான் மூவுலகின் இடையான் திருமலைப்
    படியான் அரங்கக் குடியானைப் பிடிமனமே…1
    ஆவினம் அழைக்க அதன்மடி பால்சுரக்க
    பூவினம் மொட்டுரிய பொன்வண் டெச்சமிட
    கூவினம் பாபயில  கோபியர் மத்தொலிக்க
    நாவினம் கோவிந்தா வெனுநாதனைப் பிடிமனமே…2
    Share
  • வாழியே தமிழே நீயும் !!

    உலக கவிஞர்கள் தினமென்று
    தொலைக்காட்சி படித்தது
    உலக கவிஞர்கள் தினமின்று
    மனசாட்சி இடித்தது
    உலக கவிஞர்கள் தினம்-என்று
    வல்லமை விரைந்தது – மனம்
    உலக கவிஞர்கள் தினமென்றும் (என)
    தனைத் தேற்றி கொண்டது

    என்ன செய்திங்குக் கிழித்து விட்டேனென‌
    பாவலர் வரிகள் மீறும்
    இன்றும் களைக்க மாட்டோ மென்றென‌
    காவலர் வரிகள் கூறும்
    படக் கவிதைப் போட்டிக்கு வாருமென‌
    அண்ணாவின் அழைப்பில் சேரும்
    படக் கவிதைப் பாராட்டு பாருமென‌
    மேகலையின் தேர்வில் தேறும்

    ஓயாது ரேஸில் ஓடும் புரவிகளாய்
    கிரேஸியின் வெண் பாக்கள்
    தேயாது வானில் பாடும் மீன்களாய்
    செண்பகப் புது கவிகள்
    பாயாது பெருக்கு எடுத்து பாயும்ஜெய‌
    பாரதன் தரும் வரிகள்
    சாயாது சாய்ந்து கொண்டு ரசிக்க‌
    ஜெயசர்மா மரபு கவிகள்

    எத்தனை எத்தனைக் கவிகள் வாழும்
    இத்தகு வல்லமை இணையம்
    அத்தனை அத்தனைச் சிறப்பில் ஆளும்
    வாழியே தமிழே இனியும்

    Share
  • அந்த வருடம், புதிய வருடம்

    சத்தியமணி

    வருவது யாரோ??…புது வருடமா!!
    தருவது தானோ ?? இனிய வரமா!!
    முகங்களைப் பார்த்து முறுவல் பெறுமா?
    உறவுகள் கூடி விருந்து தருமா?

    எந்நேரமும் வாட்ஸ்அப் வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    எப்போதுமே ஃபேஸ்புக் ஃபேஸ்புக் ஃபேஸ்புக்
    இல்லையென்றால் ச்சேட்டிங் ச்சேட்டிங் ச்சேட்டிங்
    மிச்சமெல்லாம் ஸ்லிப்பிங் ஸ்லிப்பிங் ஸ்லிப்பிங்
    தங்க நேரம் வீணாகிக் கழிகின்றதே
    வாழ்வு வெறும் வயதாகி வளர்கின்றதே… (வருவது யாரோ?)

    தாயுடன் பாட நேரமில்லையா?
    தந்தையுடன் பேச வார்த்தையில்லையா?
    உறவுகள் ஒன்றாய்க் கூடவில்லையே?
    நனவுகள் நட்டம் பார்க்கவில்லையே?
    இந்த வருத்தம் நீக்கிடுமோ
    அந்த வருடம் புதிய வருடம் (வருவது யாரோ?)

    அறிவினில் பெற்றது அதையும் மறந்தோம்
    பிரிவினில் விட்டது எதையும் தொலைத்தோம்
    அனுபவம் கொடுத்ததை எங்கு நினைத்தோம்
    அதற்கும் மேலே தனித்துத் தவிர்த்தோம்
    இந்த வருத்தம் நீக்கிடுமோ
    அந்த வருடம் புதிய வருடம் (வருவது யாரோ?)

    Share
  • அம்மா இல்லாத தீபாவளி 

    அம்மா இல்லாத தீபாவளி 
    அதுவே ஆறாதத் தீராவலி 
    உணர்ந்தவருக்குத் துயர் தெரியும் 
    உணராதவர்க்கு இனி புரியும் 

    முப்பது நாட்கள் முன்னிருந்தே 
    முதலாம் முயற்சியில் இற‌ங்கிடுவாள் 
    அப்புறம் பார்க்கலாம் மென்றிடினும் 
    அப்பா மனதைத் தளர்த்திடுவாள் 

    எப்பொழு தெங்கெனக் கேட்காமல் 
    இப்பொழு தெனவே இழுத்துசெல்வாள். 
    எங்களின் விருப்பத் திற்கேற்றாற்போல் 
    எல்லாம் எல்லாம் கிடைத்திடுமே 

    சீருடையாய் மொத்தத் துணிவாங்கி 
    சிறப்பாய் தைக்கவும் தந்திடுவாள் 
    தந்தைக்கும் சட்டை வாங்கியப்பின் 
    தனக்கெனப் பிறகே யோசிப்பாள். 

    திருச்சியின் பெருங்கடைச் சாலையிலே 
    தெப்பக்குள எதிர் சிந்தா மணியினிலும் 
    எங்களுக் கெனவே போரிட்டு 
    பட்ஜெட் பட்டாசும் வாங்கிடுவாள் 

    காலும் கைகளும் வலித்தாலும் 
    கரகரத் தொண்டைக் கனத்தாலும் 
    உறவினில் பிடித்தவைக் கணக்கிட்டு 
    இரவினில் பட்சணம் செய்திடுவாள் 

    எத்தனை சிக்கனம் நயத்தோடு 
    அத்தனை வகைகளும் சுவையோடு 
    இத்தனை பகுத்திட கொடுத்திடுவாள் 
    தனக்கென மறைக்கா தெய்வமகள் 

    காலையில் சீக்கிரம் எழவேண்டி 
    இரவினில் உறங்கிடச் செய்திடுவாள். 
    விடியலின் முன்னே எழுந்தாங்கே 
    எண்ணெய்க் குளியலைத் தொடங்கிடுவாள் 

    ஆடைகள் எடுத்து அணியவைப்பாள் 
    ஆசையில் ஆசிகள் பொழிந்திடுவாள் 
    அன்புடன் பொங்கிட அணைத்துடனே 
    ஆண்டவன் அருளிட துதிசெய்வாள் 

    இட்டிலி சட்டினி இடும்போதும் 
    தட்டினில் விருந்தினைத் தரும்போதும் 
    மட்டில்லாத மகிழ்ச்சி தரும் 
    அம்மா வருவாய் எப்போது? 

    சிரிப்பில் உதிரிட மத்தாப்பு 
    சிலநொடி கருகிட புகையாக‌ 
    சுழலும் சக்கரம் கக்கிவிட்டு 
    இருள்வெளி கோளம் ஆகிவிட 

    அதிரும் சரவெடி பட்டாசோ 
    சிதறிடத் துகளாய் வீதியிலே 
    புதிரும் போட்டது யாவுமெனைப் 
    புரிந்தது பிரிவுகள் இப்படியா?


    வருத்திடும் பிணியில் இருந்தாலும் 
    மருந்தினை உண்டிட மறந்தாலும் 
    விரும்பிடும் எங்களை மறக்காமல் 
    இருந்தவள் விட்டெனைச் சென்றது ஏன்? 

    சப்தமிட்ட வெடிகள் இன்றி 
    சாளரமெல்லாம் மூடிவைத்தேன் 
    மூச்சுத் திணறும் புகையென்றே 
    முகத்திரையும் நான் வாங்கிவைத்தேன் 

    தேடும் இடமெலாம் உனைப்போல 
    உருவம் நகர்வது தெரியுதம்மா 
    அகலின் விளக்கின் அடியினிலே 
    அம்மா உன் நிழல் ஆடுதம்மா 

    இருளைக் களைந்திடும் உன்விழிகள் 
    அருளைப் பெருக்கிடும் உன்மொழிகள் 
    கருணைக் கடலாய் இருந்தவளே 
    காதுகள் கொடுத்து கேளாயோ 


    படைத்ததும் கவிதைப் படித்துவிட்டு 
    பாராட் டள்ளி கொடுத்தவளே 
    கிடைத்திட வேண்டும் அதுபோன்று 
    நிலத்தினில் மீண்டு வருவாயா? 

    கனக்கும் மனதின் ஒலியோடு 
    கசியும் ஈரம் கண்களிலும் 
    துடைக்கும் விரல்கள் உனையன்றி 
    துணையாய் எதையும் கண்டதில்லை

    Share
  • பொறித்துப் படி

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    எத்தனைக்  கொடுமையிது எத்தனைக்    கொடுமையிது இத்தருண  மிங்கே
    அத்தனைக்  கடுமையிது      அத்தனைக்   கடுமையிது       முத்தமிழ    ணங்கே!
    இத்தனைக்  காயமுடன்         இம்மகள்         துடித்தழுது        இவ்வலியு   மோடு
    வத்தனைக்  காய்வந்து            பலியாகி         கிடக்கிறாள்      பரிகாச        மோவிது ?

    பெண்ணுக்கு  சீர்மதிப்பும்  சிதறாத           சிறப்பும்   தருவதுதான்       ஈன்ற‌
    மண்ணுக்கு     அழகாகும்     மறையாதப் புகழாகு   மெனத்தெரியா மலே
    கண்ணுக்கு      இழுக்கும்      கசையடி       வழக்கும்   காணநாற்சந்      தியில்
    இண்டனமா!    இதற்கும்       மேலெழு         ந்தாரினி   எள்ளிநகை           யாடவோ

    குயிலாய்ப்    பாடிவரும்   பறவையை   பருந்துகள்  உரித்து    ருசியாற‌
    மயிலாய்ப்     பரதமிட        மேடையில்    வருவதை    குறித்து    பசியாற‌
    பயிலாய்ப்     பைந்தமி      ழாலினுடை   கண்ணகி    பதிவிர    தையான‌
    உயிரும்          குலமும்          இனமும்           இனியும்      கற்புடன்   வாழுமோ

    அன்னைக்கு   தங்கைக்கு   தமக்கைக்கு      தாரமாய்  வந்துள மனைக்கும்
    இன்றைக்கு    மகனுக்கு       மனைவியாய்    வந்திடும்  குலவிளக் கிற்கும்
    என்றைக்கோ  இந்நிலை     ஏற்பட்டிருப்பின்  ஆதாரம்  கேட்டுநீ   பார்ப்பாய்
    வன்மைக்கு      பலியாகி       இன்மைக்குள்     நீமட்டும்   அகந்தை  யோடு

    தவறிழைத்தால்  திருந்தவே  தப்புசெயின் வருந்தவே இனியும் வாழ்வில்
    உபரியானவை    வந்தபோது  உணர்ந்து       தெளிந்து  அறமும்   கண்டே
    கவரிமானினக்     கட்டுப்பாடு   மறந்து               போனதில்  தட்டுப்பா    டுமனச்
    சுவரினில்       குறளும்   அவ்வையின் அகச்சூடி  பொறித்துப்  படி

    Share