Tag Archives: Peer Reviewed

(Peer Reviewed) சங்க இலக்கியங்களில் கணினித் தொழில்நுட்ப வழி பனுவல் சார் பயன்பாடுகள் – முன்னோட்டம்

இரா.சண்முகம் Team Manager, CTS Bengaluru | [email protected] முன்னுரை ஒலைச்சுவடிகள் மூலம் தொடங்கிய சங்க இலக்கியப் பதிப்பு, இன்று வானுயுரத்திற்கு வளர்ந்து நிற்கிறது. எண்ணற்ற அரிய நூல்கள் அழிந்து போனாலும் இன்றும் நம் வரலாற்றை உரைக்கப் பல நூல்கள் துணை நிற்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. கால மாற்றத்திற்கேற்ப நாமும் நம் தேவைகளை மாற்றிக்கொண்டே வருகிறோம். ஒரு காலத்தில் “ஆலும் வேலும் பல்லுக்குக்குறுதி” என்று வாழ்ந்தவர்கள், இன்று பற்குச்சிகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். நம் வசதிக்காக நம்மை மாற்றிக்கொள்ளும் போதுதான் வளர்ச்சி ஆரம்பிக்கிறது. ...

Read More »

(Peer Reviewed) சங்கத் தமிழில் எதிர்மறை: தொடரியல் ஆய்வு

முனைவர் சு. சரவணன் ஆய்வறிஞர், பிரெஞ்சு ஆசியவியல் நிறுவனம், புதுச்சேரி. சங்கத் தமிழில் எதிர்மறை: தொடரியல் ஆய்வு எதிர்மறை என்பது உடன்பாடான கருத்திற்கு மறுதலையான கருத்தினை வெளிப்படுத்துவதாகும். இது வினைச்சொல்லமைப்பில் வெளிப்படுவதாகும். சங்கத் தமிழிலக்கியங்களில் அமைந்துள்ளதன்படி எதிர்மறையினை மொழியியல் அடிப்படையில் இருவகையில் ஆய்வு செய்யமுடியும். 1. உருபனியல் ஆய்வுமுறை, 2. தொடரியல் ஆய்வுமுறை. உருபனியல் ஆய்வில் எதிர்மறையானது ஒரு சொல்லுக்குள்ளேயே எதிர்மறை உருபால் உணர்த்தப்படுகின்றது (செய்யலன், சூழேன், செய்யான், செய்யாதான், வாரல் போன்றவை). தமிழ் மரபிலக்கணங்கள் சிலவும் அதற்கான எதிர்மறை உருபுகளைத் தந்துள்ளன. தொடரியல் ...

Read More »

(Peer Reviewed) மக்கட் பெயர்

முனைவர் ஜெ. அரங்கராஜ், ஆகோள் ஆய்வு மையம், யாழ்ப்பாணம். மக்கட் பெயர் I மக்கள் தங்களை அழைப்பதற்கும் ஒருவரிடமிருந்து ஒருவரை வேறுபடுத்தி அடையாளப்படுத்திக் கொள்வதற்கும் பெயர்களை இடுவராயினர். இவ்வாறு தங்களை அழைக்கப்படுதலுக்கான சொல்லைப் பெயர் எனச் சுட்டினர். ஒருவரிடம் பெயர் கேட்டலையும் பெயர் கூறலையும்,              “தன்பெயர் கிளக்குங் காலை யென்பெயர்              பேதைச் சோழ னென்னுஞ் சிறந்த கருமை”                ...

Read More »

(Peer reviewed) இலக்கியச் சான்றுகளின்வழி தொல்தமிழர்களின் ஈகையும் புரிதல் கோட்பாடும்

மு. இராமகிருஷ்ணன் உதவிப் பேராசிரியர் பழங்குடியினர் வழக்காற்றியல் துறை ஜார்க்கண்ட் நடுவண் பல்கலைக்கழகம் பிராம்பே, இராஞ்சி – 835205. இலக்கியச் சான்றுகளின்வழி தொல்தமிழர்களின் ஈகையும் புரிதல் கோட்பாடும் முன்னுரை தொல்தமிழர்களின் சமூகப் பண்பாட்டு வாழ்வில் ஈகை என்னும் கருத்தாக்கம் சிறப்பானதோர் இடத்தைப் பெற்றிருந்ததை இலக்கியச் சான்றுகள்வழி அறிய முடிகின்றது. தொல்காப்பியம் முதல் ஔவையாரின் தனித் திரட்டுவரை ஈகை குறித்த வரையறைகளை முன்வைப்பதில் தொல் தமிழ்ச்சமூகம் முற்போக்குடன் விளங்கியுள்ளது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. ஈகை தொடர்பான கருத்தாக்கத்தை வரையறை செய்வதிலும் அதற்கான சான்றுகளைக் கட்டமைப்பதிலும் தொல் ...

Read More »

(Peer Reviewed) கம்பராமாயணம் மிதிலைக் காட்சிப் படலத்தில் அகத்திணை மரபும் மாற்றமும்

முனைவர் ஹெப்ஸி ரோஸ் மேரி.அ உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை, கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் கம்பராமாயணம் மிதிலைக் காட்சிப் படலத்தில் அகத்திணை மரபும் மாற்றமும் கம்பர் முத்தமிழ்த் துறை வித்தகர், உத்தமக் கவிஞர்.  அவர் இயற்றிய இராமாயணம், வால்மீகி ராமாயணத்தைத் தழுவி எழுதியதாக இருப்பினும் அதில் தமிழர் மரபும் பண்பாடும் காப்பியம் முழுமையும் விரவிக் கிடப்பதைக் காணலாம். கம்பர், வால்மீகி ராமயணத்தினின்று மாறுபட்டு படைத்துக் கொண்டுள்ள சிறந்த பகுதியாகக் கருதப்படுவது இராமனும் சீதையும் மணந்து கொண்ட வரலாறாகும். சங்க இலக்கிய மரபில் வந்த புலவரான ...

Read More »

[Peer Reviewed] முடுகா மொழியின் வினைச் சொற்களும் பழந்தமிழும்

முனைவர் த. கவிதா, உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை மற்றும் ஆய்வு மையம், அரசுக் கல்லூரி,  சித்தூர், பாலக்காடு, கேரளம், 678104.                                முடுகா மொழியின் வினைச் சொற்களும் பழந்தமிழும்                                உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாகத் திகழும் தமிழ் மொழியின் தனிச் சிறப்புகளைக் ...

Read More »

(Peer Reviewed) உரைக்கொள்கை உருவாக்கமும் பொருள்விளக்கப் பொருத்தப்பாடும் (திருக்குறள் – பொற்கோ உரையை முன்வைத்து)

முனைவர் ப.சு. மூவேந்தன் உதவிப் பேராசிரியர் (தமிழியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) தமிழாய்வுத் துறை, அரசு கலைக் கல்லூரி, திருத்தணி 631209 திருவள்ளூர் மாவட்டம். உரைக்கொள்கை உருவாக்கமும் பொருள்விளக்கப் பொருத்தப்பாடும் (திருக்குறள் – பொற்கோ உரையை முன்வைத்து) ஆய்வுச் சுருக்கம் (Abstract) தமிழ் இலக்கியப் பரப்பில் உரைகள் இன்றியமையாத இடத்தினை வகிக்கின்றன. உரைகள் பல்கிப் பெருகிய காலமும் இருந்ததை தமிழ் இலக்கிய வரலாறுகள் தெளிவுறுத்துகின்றன. மூல நூலாசிரியனுக்கும் கற்போனுக்கும் இடையே கால இடைவெளி ஏற்படும்போது மூல நூலாசிரியரின் கருத்தைத் தெளிவுபடுத்த ஆசிரியர்கள் தந்த விளக்கங்களே ...

Read More »

(Peer Reviewed) சங்க இலக்கியத்தில் மணச் சடங்குகள்

முனைவர் க. இராஜா இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி காட்டேரி, ஊத்தங்கரை, கிருட்டிணகிரி (மா.) சங்க இலக்கியத்தில் மணச் சடங்குகள் சடங்கு நிகழ்த்தப்படும் இடம், காலம், சூழல், தேவை, நோக்கம் போன்ற காரணங்களை முன்வைத்து அவற்றின் தன்மைகள் வேறுபடுகின்றன. சடங்குகள் செயல், நிகழ்த்துதல், நனவு, தன்னார்வம், கருவி, பகுத்தறிவு, கூட்டுத்தன்மை, சமூகம், சமூக உறவுகள், புனைவு, குறியீடு, வெளிப்பாடு, நடத்தை, அழகியல், புனிதம் ஆகியவற்றோடு தொடர்புடையதாக அமைகின்றது. சடங்குகள் வாழ்க்கை வட்டச் சடங்குகள், வளமைச் சடங்குகள், வழிபாட்டுச் சடங்குகள், திருவிழாச் சடங்குகள், மந்திரச் சடங்குகள், பிற சடங்குகள் என வகைப்படுத்தப்படுகின்றன. அவற்றுள் நிச்சயதார்த்தம், ...

Read More »

(Peer Reviewed) சிலப்பதிகாரத்தில் ஆறுகள் கட்டமைக்கும் சூழலியல் உறவும் பண்பாடும்

முனைவர் இரா.இலக்குவன் வெ.ப.சு. தமிழியல் ஆய்வு மையம் ம.தி.தா. இந்துக் கல்லூரி திருநெல்வேலி – 627610 சிலப்பதிகாரத்தில் ஆறுகள் கட்டமைக்கும் சூழலியல் உறவும் பண்பாடும் ஆறு, சூழலியல் சங்கிலியில் மாபெரும் கண்ணியாகும். மக்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் விரவிச் சமைப்பதில் ஆற்றுக்குத் தலையாய பங்குண்டு. ஆறு மண்ணில் மட்டுமல்ல, மக்கள் உணர்வுகளிலும் ஓடுகிறது. ‘மனிதரையும் இயற்கையையும் இணைக்கும் தளை நீர், நமது அன்றாட வாழ்விலும், நீர் நீங்காத இடம் பெற்றுள்ளது. காலம் தொடங்கிய காலம் முதலே நீர் அசாதாரணமான சமூக நிறுவனங்களை உருவாக்கியிருக்கிறது’1 ...

Read More »

(Peer Reviewed) பாலக்காடு வட்டார முடுகர் இன மக்களின் மொழி மற்றும் வாழ்வியலில் பழந்தமிழ் மரபுகள்

முனைவர் த. கவிதா, உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை மற்றும் ஆய்வு மையம், அரசுக் கல்லூரி, சித்தூர், பாலக்காடு, கேரளா – 678104. மின்னஞ்சல்: [email protected] பாலக்காடு வட்டார முடுகர் இன மக்களின் மொழி மற்றும் வாழ்வியலில் பழந்தமிழ் மரபுகள் உலக நாகரிகங்களுள் பழைமை மிக்க நாகரிகமாக விளங்குவது,  தமிழ் நாகரிகம். அந்த நாகரிகத்திற்குரிய  மக்கட் தொகுதியினர்  ஒரு காலத்தில் பாரதம் முழுக்கப் பரந்து வாழ்ந்திருந்தனர்  என்பது அறிஞர்களின் கணிப்பு. உலக மொழிக் குடும்பங்களில் ஒன்றாக விளங்கும் திராவிட மொழிக் குடும்பத்தில், தலைமை சான்ற மொழியாகத் ...

Read More »

(Peer Reviewed) பொடுகு உருவாதல் அறிவியல் விளக்கம்

நடராஜன் ஸ்ரீதர், பேராசிரியர் சந்திரமோகன் ரெத்தினம், முதுஅறிவியல் மற்றும் இயற்பியல் ஆய்வுத் துறை, ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை, தமிழ்நாடு மின்னஞ்சல்: [email protected][email protected] ============================================================================ பொடுகு உருவாதல் அறிவியல் விளக்கம் முன்னுரை நம் அனைவருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது தலையில் பொடுகு உருவாகுதல்.  இரண்டில் ஒருவருக்கு இப்பிரச்சினை இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பொடுகைப் பற்றிய அறிவியல் விளக்கத்தைஇக்கட்டுரையில் காணலாம். பொடுகு – வரலாறு வெயில் காலமோ, மழைக் காலமோபெரும்பாலோருக்கு ஏற்படும் கஷ்டமான விஷயம் தலையில் பொடுகு என்பது உருவாவது. இதற்கான உண்மையான காரணம் என்ன? ...

Read More »

(Peer Reviewed) இராமநாதபுரம் வட்டாரக் கல்வெட்டுகள் காட்டும் வணிகம்

முனைவர் ஆ.ராஜா, அருங்காட்சியகத் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 10 இராமநாதபுரம் வட்டாரக் கடற்கரைப் பகுதியில் சங்க காலம் முதல் இடைக்காலம் வரை கடல்சார் வணிகமும் உள்நாட்டு வணிகமும் சிறந்து விளங்கின. இவ்வணிகம் கி.பி.12-14ஆம் நூற்றாண்டுகளில் பிற்காலப் பாண்டியர்களின் எழுச்சியின் காரணமாகச் சிறந்த வளர்ச்சியை அடைந்தது.  இக்காலக் கட்டத்தில் பல்வேறு வணிகக் குழுக்கள் அயல்நாட்டு, உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தன. இராமநாதபுரம் கடற்கரைப் பகுதி, நிலவியல் அடிப்படையில் அதிகமான ஆற்று முகத்துவாரங்களைக் கொண்ட பகுதியாக அமைந்திருப்பதால் கடல்சார் வணிகச் செயல்பாடுகளுக்குப் ...

Read More »

(Peer Reviewed) சிலம்பில் பெண்களின் அவல நிலை

கு.வளா்மதி, உதவிப் பேராசிரியா், தமிழ்த் துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா்ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி சிலம்பில் பெண்களின் அவல நிலை முன்னுரை           ஐம்பெருங்காப்பியங்களுள் முதன்மையானது, ‘சிலப்பதிகாரம்’ ஆகும். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஒற்றுமைப் பண்புகளால் ‘இரட்டைக் காப்பியங்கள்’ என்று போற்றப்படுகின்றன. இன்பமும் துன்பமும் நிறைந்த மனித வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை மையப்படுத்தியே இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. இலக்கியங்களில் கதைமாந்தா் படுகின்ற துன்ப நிலையைக் கண்டு வாசகா்கள் இரக்கம் கொள்கின்றனா். இந்தத் துன்ப நிலையே ‘அவலம்’ என்று கூறப்படுகின்றது. குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரத்தில் பெரும்பான்மையும் அவலம் ...

Read More »

[நூல் அறிமுகம்] (Peer Reviewed) ஆனந்த் நீலகண்டனின் ”Vanara: The Legend of Baali, Sugreeva and Tara”: மாற்றி யோசிக்கப்படும் பழைய கதையின் யதார்த்தம்

முனைவர் ம.பிரபாகரன், இளநிலை ஆய்வாளர், பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் (EFEO), புதுச்சேரி. ஆனந்த் நீலகண்டனின் ” Vanara: The Legend of Baali, Sugreeva and Tara ”: மாற்றி யோசிக்கப்படும் பழைய  கதையின் யதார்த்தம் சென்ற ஆண்டு(2018)  வெளியான ஆனந்த் நீலகண்டனின்  ” Vanara: The Legend of Baali, Sugreeva and Tara ” ( 304 pages, Published November 14th 2018 by Penguin Random House) என்ற ஆங்கில நாவலைச் சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. அதனை ஆய்வு ...

Read More »

(Peer Reviewed) ஆயரினக்குடி மரபில் குரவையாடுதல் – ஒரு பார்வை

முனைவர் இரா.வீரபத்திரன் உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை, கற்பகம் உயர்கல்வி கலைக் கழகம், கோவை. ஆயரினக்குடி மரபில் குரவையாடுதல் – ஒரு பார்வை அன்று தொட்டு இன்றுவரை அழியாத நாகரிகத்தையும் பண்பாட்டையும் உடைய நன்மக்கள், நம் தமிழ் மக்களே. இந்தப் பரந்த உலகிற்கே நாகரிகத்தையும் பண்பாட்டையும் கற்றுத் தந்த பெருமை, நம் முன்னோர்களையே சாரும். தமிழ்ப் பாரம்பரியத்தில் உதித்த மரபு வழிப்பட்ட நெறிமுறைகள், இன்று நமது வாழ்க்கைப் பாடமாகவும் ஒரு படிப்பினையாகவும் விளங்குவதை நாம் அறிய முடிகிறது.  அதில் கலையின் ஒரு கூறாகக் குரவைக் ...

Read More »