Archive for the ‘வல்லமையாளர் விருது!’ Category

Page 1 of 1612345...10...Last »

இந்த வார வல்லமையாளர்! (231)

இந்த வார வல்லமையாளர்! (231)
செல்வன் இவ்வார வல்லமையாளராக Inter University Centre for Astronomy & Astrophysics (IUCAA),&  Indian Institute of Science Education and Research (IISER) (புனே) ஆகிய அறிவியல் ஆய்வு மையங்களை சேர்ந்த இந்திய வானவியல் விஞ்ஞானிகள் டீமை தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவர்கள் பெயர்: ஜாய்தீப் பாக்சி சிஷிர் சங்காயன் பிரகாஷ் சர்க்கார் சோமக் ராய்சவுத்ரி ஜோ ஜேக்கப் ப்ரதிக் ... Full story

இந்த வார வல்லமையாளர்! (230)

இந்த வார வல்லமையாளர்! (230)
செல்வன் இவ்வார வல்லமையாளர் - சஹா நாதன் சஹா நாதன் அமெரிக்காவில் உள்ள சியாட்டில் மாநகரில் வசிக்கும் புலம் பெயர் தமிழர். ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். விண் டிவி, தூர்தர்ஷன், மெரினா ரேடியோ, தமிழ்குஷி டாட்காம் ரேடியோ ஆகியவற்றில் அறிவிப்பாளராக பணியாற்றியுள்ளார். இவரது விருப்பத்துறைகள் ஆன்மிகம் மற்றும் சுயமுன்னேற்றம் ஆகியவை ஆகும். ரேடியோவில் "இன்று முதல் சக்ஸஸ்" மற்றும் "உன்னை அறிந்தால்" போன்ற சுயமுன்னேற்ற ஒலிபரப்பு தொடர்களை வழங்கி வந்தார். இந்த சூழலில் சென்னையில் "பிரைவேட் ... Full story

இவ்வார வல்லமையாளர்

நம் இந்திய அரசாங்கத்திடம் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள கிம் யாங் – ஷிக் கொரிய நாட்டில் சியோல் நகரில் 1931 ஆம் ஆண்டில் பிறந்தவர். ஆங்கில இலக்கியம் ஈஹா பல்கலைக்கழகத்தில் பயின்று, தமது இந்தியத் தத்துவங்கள் முதுநிலை பட்டப்படிப்பை சியோல் டோங்க்குக் (Dongkuk) பல்கலைக்கழகத்தில் பயின்றவர். 1998இல் Academy of International Congress of Poets மூலமாக H.Phd. Lit, என்ற உயரிய பட்டமும் பெற்றவர். கிம் யாங் – ஷிக் கொரிய மொழியில் பல இலக்கியப் ... Full story

இவ்வார வல்லமையாளர்

இவ்வார வல்லமையாளர்
இவ்வார வல்லமையாளர்- விஷ்வேச தீர்த்த ஸ்வாமி உடுப்பியில் உள்ள புகழ் பெற்ற கண்ணன் ஆலயத்தில் திருக்கோயில் சார்பில் இஸ்லாமிய சமூகத்தினர்க்கு இப்தார் விருந்தளித்து மதங்களுக்கு இடையேயான சகோதரத்துவம் நிலைநாட்டப்பட்டது. இந்த நிகழ்வுக்கு ஆலோசனை அளித்து, நடக்கத் தூண்டுதலாக இருந்தவர், பார்யாய பேஜாவர் மடத்தின் தலைவரான விஷ்வேச தீர்த்த ஸ்வாமிகள் ஆவார் சுமார் 1500 பேர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள். மாலை 6.59 மணி அளவில் தன் நோன்பை முறித்த பின், வாழைப்பழம், ஆப்பிள், பேரீச்சை ஆகிய உணவுகளுடன் கஷாயமும் வழங்கப்பட்டது. நிகழ்வில் உரையாற்றிய விஷ்வேச தீர்த்த ஸ்வாமிகள் "கர்நாடகாவில் இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்" என ... Full story

இந்த வார வல்லமையாளர் (227)

இந்த வார வல்லமையாளர்  (227)
 செல்வன் வீர வாஞ்சி ஜூன் 17 வீர வாஞ்சி என அழைக்கப்பட்ட வாஞ்சிநாதனின் 106வது நினைவுதினம். ஆங்கிலேயர் ஆட்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ்துரையை, வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்று, தானும் உயிர்நீத்த தினம் 1911, ஜூன் 17-ம் தேதி. 1886ஆம் ஆண்டில் ரகுபதி அய்யருக்கு மகனாகப் பிறந்தவர் வாஞ்சிநாதன். இயற்பெயர் சங்கரன். செங்கோட்டையில் பள்ளிப் பருவத்தினை முடித்தவர். திருவனந்தபுரத்திலுள்ள மூலம் ... Full story

இந்தவார வல்லமையாளர்! (226)

இந்தவார வல்லமையாளர்! (226)
செல்வன் இவ்வார வல்லமையாளர் - பேட்டி ஜென்கின்ஸ் (Patty Jenkins) சென்றவாரம் வெளியான Wonder Woman (வியப்புக்குரிய பெண்) எனும் திரைப்படம் இவ்வாரம் 435 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதன் இயக்குனர் பேட்டி ஜென்கின்ஸ். இப்படம் பல மைல்கற்களை கடந்துள்ளது. பெண் இயக்குனர் ஒருவர் இயக்கிய முதல் சூப்பர் ஹீரோ திரைப்படம். பெண்கள் ... Full story

இந்தவார வல்லமையாளர்: (225)

இந்தவார வல்லமையாளர்: (225)
செல்வன் இவ்வார வல்லமையாளர்: உம்முல் கர் (29/05/2017 – 05/06/2017 ) எட்டாம் வகுப்பு படித்ததற்காக குடும்பத்தாரால் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண், சுயமுயற்சியால் இன்று ஐ.ஏ.எஸுக்கு தகுதி பெற்றுள்ளார் உம்முல் கர். சிறுவயது முதல் இவருக்கு உடல் ஊனம் உண்டு. சிறு காயம் பட்டாலும் எலும்புகள் உடைந்துவிடும். இவரது பெற்றோர் மிக வறிய பின்புலத்தை சார்ந்தவர்கள். தந்தை டெல்லியில் பிளாட்பாரத்தில் துணி ... Full story

இந்த வார வல்லமையாளர் ! (224)

இந்த வார வல்லமையாளர் ! (224)
செல்வன் இந்த வார வல்லமையாளர்  - கே.வி.மாமா (22/05/2017 - 28/05/2017 ) யதேச்சையாகத்தான் அந்த காணொலி என் கண்ணில் பட்டது. திருவரங்கத்தில் வசித்து, மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற   கே.வி.மாமா எனும் கே.வி.ஸ்ரீனிவாசன் அவர்கள் சென்றவாரம் இறைவனடி சேர்ந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் திருவரங்கத்தைச் சுற்றியுள்ள அனைத்து மயானங்களின் இடுகாட்டு காவலர்களும் கலந்துகொண்டு பறையொலி அடித்து முழக்கி தம் சோகத்தைத் தெரிவித்தார்கள். அவரது இறுதி ஊர்வலம் மயானக்காவலர்கள் (வெட்டியான்கள்) புடைசூழ நடைபெற்றது.... Full story

இந்தவார வல்லமையாளர்! (223)

இந்தவார வல்லமையாளர்!  (223)
செல்வன் இந்தவார வல்லமையாளர்: சுந்தர் ஐயர் ஜோக்கர் படத்தில் வரும் ஜாஸ்மினே, ஜாஸ்மினே எனும் பாடலை பாடிய சுந்தர் ஐயர் சிறந்த பாடகருக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார். இவரது சொந்த ஊர் தருமபுரி. மிக எளிய பின்புலத்தை சேர்ந்தவர். அரசு இசைப்பள்ளியில் இசை ஆசிரியராக ஒப்பந்த அடிப்படையில் மாதம் 7000 ரூ. சம்பளத்துக்கு ... Full story

இந்தவார வல்லமையாளர் விருது! (222)

இந்தவார வல்லமையாளர் விருது! (222)
செல்வன் அன்னையர் தினமான இன்று, நாடெங்கும் உள்ள பிள்ளைகளின் கல்வித்தரம் உயரப்பாடுபடும் அமெரிக்க கல்வித்துறை செக்ரட்டரி (அமைச்சர்) பெட்ஸி டிவோஸ் (Betsy Devos) அவர்களை வல்லமையாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அமெரிக்க பெருநகரங்கள் சிலவற்றில் உள்ள பள்ளிகளில் குற்றச்செயல்களும் மாணவர்களிடையே போதைபொருட்கள் பயன்பாடும் அதிகம். இத்தகைய பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை வேறு பள்ளிகளுக்கும் மாற்ற முடியாது பெற்றோர் அவதிப்பட்டு வந்தார்கள். இதனால் குழந்தைகளின் கல்வித்தரம் பாதிப்படைந்தது. இந்த சூழலில் மாணவர்கள் விரும்பும் பள்ளிக்கு அவர்களை ... Full story

இந்தவார வல்லமையாளர் விருது! (221)

இந்தவார வல்லமையாளர் விருது! (221)
செல்வன் இவ்வார வல்லமையாளர்: இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி (மன்னர் அமரேந்திர பாகுபலி கதாபாத்திரத்தை உருவாக்கியதற்கு) இந்திய திரையுலக வரலாற்றில் முதன்முறையாக 1000 கோடி ரூபாய் வசூலை இவ்வாரம் கடந்து சாதனை படைத்துள்ளது பாகுபலி: 2 திரைப்படம். இந்திய திரையுலக வரலாற்றின் மைல்கல் ஆன படங்கள் என ஷோலே, மதர் இந்தியா போன்ற பாலிவுட் படங்களே இருந்து வந்த நிலையில் அப்படங்கள் படைத்த வரலாற்றுசாதனையை ... Full story

வல்லமையாளர் விருது பொறுப்பேற்கும், ‘பேலியோ டயட்’ புகழ் பேரா. செல்வன்

வல்லமையாளர் விருது பொறுப்பேற்கும், ‘பேலியோ டயட்’ புகழ் பேரா. செல்வன்
பவள சங்கரி அன்பினிய நண்பர்களுக்கு, வணக்கம். கடந்த 220 வாரங்களாக வல்லமையாளர் தேர்வை மிகச் சிறந்த முறையில் நடத்தியுள்ள நம் வல்லமை ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு.திவாகர்,  முனைவர் தேமொழி, உயர்திரு செ.இரா. செல்வக்குமார் அவர்களையும் மனமார வாழ்த்தி, அடுத்து வல்லமை ஆசிரியர் குழு உறுப்பினர் பேரா. செல்வன் அவர்களை இப்பொறுப்பை ஏற்று நடத்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். மேலும் இப்பணியில் உதவிய திரு. இன்னம்பூரான், பேராசிரியர் நாகராசன் அவர்களையும் பாராட்டி மகிழ்கிறோம். இதுவரை 220 வல்லமையாளர்களை நாம் பாராட்டி மகிழ்ந்திருக்கிறோம். மேலும் பல வல்லமையாளர்களை திருமிகு ... Full story

இந்த வார வல்லமையாளர்

செ. இரா.செல்வக்குமார் இந்த வாரத்தின் வல்லமையாளர் அருமையான நற்பணிகள் ஆற்றிவரும் ஓர் இளம் பெண். மிகவும் பயனுடைய கணினி மொழிகள், கணினி நிரல்நுட்பங்கள் பற்றிய ஏழு (7) மிக அருமையான, மின்னூல்களைத் தமிழில் எழுதியுள்ளார் திருவாட்டி நித்தியா துரைசாமி ("நித்யா துரைசாமி") அவர்கள் இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், இந்நூல்கள் அனைத்தையும் இலவசமாக அனைவரும் தரவிறக்கிப் பயன்கொள்ளும்படியாகக் "கிரியேட்டிவ் காமன்சு" (Creative Commons) என்னும் உரிமத்தின் கீழ் வழங்கியிருக்கின்றார். இந்நூல்களை யாரும் ... Full story

இந்த வார வல்லமையாளர்

செ. இரா.செல்வக்குமார் இந்த வாரத்தின் வல்லமையாளர் அனைவரும் எதிர்பார்த்திருந்த 2016 இரியோ-தி-செனரோ ஒலிம்பிக்குப் போட்டிகளில் ஒற்றையர் பெண்கள் இறகுப் பந்தாட்டப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற பு. வே. சிந்து (P.V. Sindhu) அவர்களே . அகவை 21 நிரம்பிய, தெலிங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இவரின் தந்தையார் திரு. பு.வே. இரமணா அவர்கள் இந்தியாவின் அருச்சுனா விருதை வென்றவர். சிந்து அவர்களின் ... Full story

இந்த வார வல்லமையாளர்

செ. இரா.செல்வக்குமார் இப்பதிவு சூலை 18, திங்கட்கிழமைக்கான வல்லமையாளர் தேர்வுக்குரியது. அக்கிழமையின் வல்லமையாளர் விருதுக்காக, 2016 ஆண்டுக்கான கார்னிகி கார்ப்பொரேசன் கிரேட்டு இம்மிகிரண்டு (பெரும்புகழீட்டிய குடியேறியவர்) விருது பெற்ற திரு. அரி சீனிவாசன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஒவ்வொரு ஆண்டும் கார்னிகி நிறுவனத்தார் பெரும்புகழ் ஈட்டிய குடியேறிய அமெரிக்கர்களுக்கு விருதுகள் வழங்குகின்றார்கள். 2016 இல் நான்கு இந்திய கொடிவழி குடியேறிகளுக்கு இவ்விருது வழங்கப்பெற்றது. 30 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 42 ... Full story
Page 1 of 1612345...10...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.