தொடர்கள்

பழகத் தெரிய வேணும் – 56

நிர்மலா ராகவன் கற்பனையும் தசைநார்களும் `ஆனாலும், நீ ஒரே உணர்ச்சிக் குவியல்!’ சிலர் இப்படியொரு கண்டனத்திற்கு ஆளாவார்கள். உணர்ச்சியே இல்லாதிருக்க மனிதர்களென்ன மரக்கட்டைகளா? நான்கு வயதுச் சிறுவன் தானே பேசிக்கொள்வது ஓயாது எழும் கற்பனைக்கு வடிகால். மற்றும் சில குழந்தைகள் சுவற்றிலோ, காலிலோ கிறுக்கித் தள்ளுவார்கள். சில குழந்தைகள் தானே பேசிக்கொள்வார்கள். இம்மாதிரியான குழந்தைகளைக் கேலியாகப் பார்ப்பவர்களுக்குத்தான் குழந்தைகளின் சுபாவம் புரியவில்லை. எழுதவோ, படிக்கவோ தெரியாத அவ்வயதில் தமக்குத் தோன்றியதைத் தெரிந்தவிதத்தில், பிடித்தவகையில்,  வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். அவ்வளவுதான். ஏளனம் செய்யாது வளர்க்கப்பட்டால், பெரியவர்களானதும், `இவர்களது கற்பனைக்கு ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 118 (பொன்மலை)

திருச்சி புலவர் இராமமூர்த்தி பொன்மலைப் புலிவென் றோங்கப் புதுமலை யிடித்துப் போற்று மந்நெறி வழியே   யாக    வயல்வழி   யடைத்த   சோழன் மன்னிய   வநபா    யன்சீர்    மரபின்மா  நகர   மாகுந் தொன்னெடுங்   கருவூ ரென்னுஞ்   சுடர்மணி   வீதி   மூதூர். பொருள்  பழைமையாகிய நெடிய கருவூர் என்று சொல்லப்பெறும் ஒளியும் அழகுமுடைய வீதிகளோடு கூடிய பழைய ஊர், வெற்றியின் அடையாளமாக இமயமலையினுச்சியில் புலிக்கொடி ஓங்கி நிற்க, அம்மலையினை இடித்துக் காவல் பொருந்தும்படி அமைத்த புதிய வழியே வழியாய் வழங்க ஏனை வழிகளை யடைத்த, கரிகாற் சோழர் முதல் ...

Read More »

தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 4

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை  பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  விளார் புறவழிச்சாலை,  தஞ்சை மாவட்டம் – 613006. மின்னஞ்சல் முகவரி –  [email protected] தொல்காப்பிய நோக்கில் ‘உவமம்’  முன்னுரை தமிழிலக்கியத்திலோ இலக்கணத்திலோ இயல், படலம் என்பன போன்ற  பகுப்புக்கள் பொருள் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டவையாகும். அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் எனவும்,  புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் எனவும் அமையும் இலக்கியப் பாகுபாடானாலும், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் எனவும், உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் எனவும் அமையும் இலக்கணப் பாகுபாடானாலும் ...

Read More »

பழகத் தெரிய வேணும் – 55

நிர்மலா ராகவன் திட்டம் போடுங்களேன்! `அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாளாம்!’ எந்தமாதிரியான கோலம் போடுவது என்று யோசியாது, எதையோ செய்துவைப்போம் என்று செய்தால் இப்படித்தான் ஆகும். முன் திட்டமில்லாது, பேச்சாளரோ, பாடகரோ மேடையில் ஏறியபின் என்ன செய்வது என்று புரியாது விழித்துக்கொண்டிருந்தால் என்ன ஆகும்? உரையாற்ற அழைத்து, நிர்வாகிகள் தலைப்பை அளித்துவிட்டால், உடனடியாக என்ன பேசுவது என்று தோன்ற ஆரம்பிக்கும். குறித்துக்கொள்ளாவிட்டால் மறக்கும் அபாயம் உண்டு. நான் உரையாற்ற அவைக்குமுன் நின்று, சில வினாடிகள் சுற்றுமுற்றும் பார்ப்பேன். லேசான சிரிப்பு எழும். `என் பேச்சால் ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 117 (மல்லல்)

திருச்சி புலவர் இராமமூர்த்தி இலைமலிந்தசருக்கம் எறிபத்தநாயனார் திருத்தொண்டர் வரிசையில் ஒன்பதாமவராக வருபவர் எறிபத்தநாயனார். அவருடைய அருள்வரலாறு திருத்தொண்டர்புராணத்தின் மூன்றாம் சருக்கமாகிய  இலைமலிந்தசருக்கம் என்றபகுதியில் அமைகிறது. சுந்தரர் அருளிய திருத்தொண்டத்தொகை பதின்மூன்று எண்சீர் விருத்தங்களால் ஆனது. இந்நூலின் முதல்சருக்கம் திருமலைச்சருக்கம் ஆகும். அடுத்து   இரண்டாம் பாடல் தில்லைவாழ் எனத் தொடங்குகிறது. அதனையே சேக்கிழார் பெருமான்  தம் திருத்தொண்டர் புராணத்தின் இரண்டாம்  சருக்கமாகக்  கொண்டு ‘’தில்லைவாழந்தணர்  சருக்க’’த்தில்  அடியார்கள் எண்மரின் வரலாற்றைப் பாடினார். அவ்வாறே பதின்மூன்று சருக்கங்களுடன்  இப்புராணம்  அமைந்தது. இரண்டாம் விருத்தத்தின் முதலடி ‘’இலைமலிந்த சீர்நம்பி’’  ...

Read More »

தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 3

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை  பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  விளார் புறவழிச்சாலை,  தஞ்சை மாவட்டம் – 613006. மின்னஞ்சல் முகவரி –  [email protected] ‘தொல்காப்பியத்தில் உவம உருபுகள்’ ஒரு பார்வை முன்னுரை பயிர்களுக்கு ‘வளர்ச்சி’ என்பது தனி. ‘காப்பு’ என்பது தனி. ஆனால் மொழிகளுக்கு வளர்ச்சியே காப்பு. வீக்கம் வளர்ச்சி ஆகாது. மரபாகிய அடிச்சட்டகம் எந்த நிலையிலும் மாறக்கூடாது. ‘மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்’. உவம மரபு என்பது தமிழின் ஆழமான மரபு. பொருள், உவமம் பொதுத்தன்மை, உவமச்சொல் ...

Read More »

பழகத் தெரிய வேணும் – 54

நிர்மலா ராகவன் குடும்பம் எனும் பல்கலைக்கழகம் தற்போது, குடும்பங்களில் வன்முறை, விவாகரத்து எல்லாம் பெருகிவிட்டதாம். அனுதினமும் பார்ப்பவர்களையே திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருக்க நேரிடும்போது நமக்கு அவர்களுடைய மதிப்பு புரிவதில்லை. வாழ்க்கையை ஆரம்பிக்கும்போதும், இப்பூவுலகத்திலிருந்து மறையும்போதும் நம்முடன் இருப்பவர்கள் குடும்பத்தினர்தான். (இடையில் வரும் நண்பர்கள் நிலைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது). இதனாலேயே, குடும்பத்தில் நடக்கும்போது முக்கியமாகப் படாத சில விஷயங்கள் பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் நல்ல நினைவாக நிலைத்திருக்கும். உற்றார் நம்மைத் திட்டியது நல்வழிப்படுத்துவதற்குத்தான் என்று மனம் தெளிவடையும். கதை “இந்தப் பெண் ஓயாமல் ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 116 (நாதர்)

திருச்சி புலவர் இராமமூர்த்தி நாதர் தந்திரு வருளினால் நற்பெருந் துலையே மீது கொண்டெழு விமானம தாகிமேற் செல்லக் கோதில் அன்பரும்  குடும்பமும்  குறைவறக்   கொடுத்த வாதி   மூர்த்தியா   ருடன்சிவ   புரியினை   யணைந்தார். பொருள் நாதருடைய திருவருளினாலே நல்ல பெரிய அந்தத் துலையே அவர்களை மேலே கொண்டு எழுகின்ற விமானமாகி மேற்செல்லக், குற்றமில்லாத அன்பராகிய நாயனாரும், அவரது மைந்தர் மனைவியாராகிய குடும்பத்தாரும் எஞ்ஞான்றும் குறைவுபடாத அழிவில் வான்பதங் கொடுத்த சிவ மூர்த்தியாருடனே சிவபுரியை அணைந்தனர். விளக்கம் துலையே விமானமதாகி மேற்செல்ல – ஐயர் தம்முன் தொழுதிருக்கும் ...

Read More »

தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 2

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை  பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  விளார் புறவழிச்சாலை,  தஞ்சை மாவட்டம் – 613006. மின்னஞ்சல் முகவரி –  [email protected] உவமம் கவிதைக்கானதா? முன்னுரை ‘உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்’ என்பதனால் மணமக்கள் பொருத்தம் என்பதுபோலப் பொருளுக்கேற்ற உவமம் அமைதல் வேண்டும் என்பது பெறப்படும். அதாவது விளக்கப்படும் பொருளின் வினை, பயன், மெய், உரு என்னும் நான்கு கூறுகளில் எதற்காக உவமம் கூறப்படுகிறதோ அவற்றுள் அவை ஒத்திருக்க வேண்டும். பேராசிரியர் உரையில் இந்த நுட்பம் அமைந்துள்ளது. உவமம் தொல்காப்பியத்தில் ...

Read More »

பழகத் தெரிய வேணும் – 53

நிர்மலா ராகவன் உன்னையே நீ மதிக்கணும் `… இறைவனடி சேர்ந்தார். அன்னாரது இழப்புக்காக ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்ந்திருக்கும்..,’ என்று, அன்றாடம் பல பெயர்களை வெளியிட்டிருப்பார்கள் தினசரியில். அதில் என்றோ இறந்துபோனவர்களின் பெயர்களும் இருக்கும். (அவர்கள் எப்படி வருத்தத்தில் ஆழ்ந்திருப்பார்கள்?) இம்மாதிரியான அறிக்கைகளை பார்க்கும்போது எனக்கு ஒரு சந்தேகம் எழும். தம் பெயர் தினசரியில் வெளியாகிவிட்டதே என்ற பெருமைக்காக வெளியிடுபவர்களில் எத்தனைபேர் இறந்தவர் உயிருடன் இருந்தபோது அவருடைய மதிப்பை உணர்ந்து, அன்பாக நடத்தினார்கள்? கதை கணவன் மறைந்ததும் தான் தனிமரமாகிவிட்டோமே என்ற கவலையில், கதறி அழுதுகொண்டிருந்தாள் ...

Read More »

புதிய பிள்ளைப்பருவங்கள் – 3

மீனாட்சி பாலகணேஷ்        கூந்தல் அலங்காரங்கள் (பெண்பால் பிள்ளைத்தமிழ்) கூந்தல் என்பது ஒரு பெண்ணின் எல்லாவயதிலும் அவளுடைய பெண்மைக்குச் சான்றுகூறி, அழகிற்கு அழகு சேர்ப்பதாகும். பெண்களின் கூந்தலைப் பற்றிப் பாடாத கவிஞர்கள் உண்டோ? அன்றுமுதல் இன்றுவரை அவளுடைய கருங்கூந்தலைப்பற்றி எத்தனை கவிதைகள்! என்னென்ன வருணனைகள்! சௌந்தர்யலஹரி அன்னை தெய்வத்தின் கேசாதி பாத வருணனையில் ஆதிசங்கரர் கூறுவதனை வீரை கவிராஜ பண்டிதர் அழகுற மொழிபெயர்த்து வழங்கியுள்ளதனைக் காணலாமா? அன்னையின் கருங்கூந்தல் எவ்வாறுள்ளதென விவரிக்கிறார்:   ‘மலர்ந்த நறுநெய்தல் காடுபோல பிரகாசிக்கின்றது அக்கூந்தல். அடர்த்தியாக, வழுவழுப்பாக, மென்மையாக உள்ளது. ...

Read More »

பழகத் தெரிய வேணும் – 52

நிர்மலா ராகவன் இந்த மனிதர்களின் மனம்! “வீண் வேலை! இவ்வளவு சிறிய மல்லிகைக் கிளையை உடைத்துவந்து நடுகிறாயே! எங்காவது செடி முளைக்குமா?” அவநம்பிக்கை தெரிவித்தாள் தாய். ஏன் செய்கிறோம் என்றே புரியாது எதையாவது ஆரம்பித்துவிட்டு, சக்தி, நேரம் இரண்டையும் வீண்டிக்கும் பலரைக் கண்டிருப்பவள் அவள். சீத்தலைச் சாத்தனாரைப்போல், செய்த தவற்றுக்காகத் தன்னையே தண்டித்துக் கொண்டுவிடுவாளோ மகள் என்ற அனுசரணையே அத்தாயை அவநம்பிக்கை தெரிவிக்க வைத்திருக்கும். “முளைக்கும்,” என்றாள் கீதா, உறுதியாக. அவள் நினைத்தபடியே ஆயிற்று. ஒருக்கால் அந்தச் சிறிய கிளை பெரிய செடியாக வளர்ந்திருக்காவிட்டாலும், ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 115 (மண்டு)

திருச்சி புலவர் இராமமூர்த்தி தொடக்கம் – நல்லூர்  அமர்நீதி நாயனார்  தம்மிடம் வேதியர் வைத்துச்சென்ற  கோவணத்தைக் காணாமல் தேடித்  திகைத்தார்!  தாம் வைத்த இடத்தில் அக்கோவணத்தைக் காணவில்லை. உறவினராலும் அப்பொருளைக்  கண்டுபிடிக்க  இயலவில்லை.  மானை  மறைத்துக்  கரத்தில்  தண்டேந்திய வேதியர் அதுகேட்டுத் தீப்போல் வெகுண்டார். அமர்நீதியார் உணர்வு கலங்கி ‘’என் பெரும்பிழையைப்  பொறுத்துக்  கொள்க; உங்களுக்கு ஒன்றுகூறுகிறேன். இக்கோவணம் தவிர யான்உங்களுக்குச் சிறந்த நல்ல பட்டாடைகள், மணிகள் கொண்ட புதிய ஆடையை ஏற்றுக்கொள்க‘’ என்று கூறி மிகவும்  பணிந்து வணங்கினார். அடியார் கூறியதை ஏற்றுக்கொண்ட ...

Read More »

தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 1

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை  பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  விளார் புறவழிச்சாலை,  தஞ்சை மாவட்டம் – 613006. மின்னஞ்சல் முகவரி –  [email protected] ‘உவமம்’ – ஓர் இலக்கணப் பார்வை முன்னுரை இலக்கிய வடிவங்கள் அனைத்துக்கும் பொதுவானது உவமம். கருத்து நுண்பொருள். உவமம் பருப்பொருள். நுண்பொருளை விளக்க மற்றொரு நுண்பொருளே உவமமாவதும் உண்டு. கருத்துக்களை விளக்க மற்றொரு கருத்தே உவமமாவதும் உண்டு. இயற்கைக்குச் செயற்கையும் செயற்கைக்கு இயற்கையும் உயர்வுக்கு இழிவும் இழிவுக்கு உயர்வும் உவமமாவதும் உண்டு. எது எவ்வாறாயினும் உவமம் ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 114 (நல்ல)

திருச்சி புலவர் இராமமூர்த்தி “நல்ல கோவணம்  கொடுப்பனென்று  உலகின்மேல்  நாளும் சொல்லு வித்ததுஎன் கோவணம் கொள்வது துணிந்தோ? ஒல்லை ஈங்குறு வாணிபம்  அழகிதே யுமக்கு!“என்று எல்லை யில்லவன்  எரிதுள்ளி னால்என  வெகுண்டான். நல்லூர்  அமர்நீதியாரிடம்  தம்  கோவணத்தை  வைத்துச்  சென்ற  வேதியர் அக்கோவணத்தை மறைத்துவிட்டு  அதற்குத்  தலைமுழுகினாரோ, சடையில் உள்ள கங்கைநீரில்  நனைந்தாரோ, வானம் பெய்த மழையில் நனைந்து வந்தார். அவரை அறுசுவை உணவுடன் அமர்நீதியார் வரவேற்ற பொழுது, ‘’நான் ஈரத்தை  மாற்ற முன்பு உம்மிடம் தந்த  கோவணத்தை தருக’’  என்றார். அந்தணரின் சூழ்ச்சியை ...

Read More »