கட்டுரைகள்

நம்பிக்கையின் எதிரொலி

ச.சிறீசக்தி (சிறீசக்தி, கணினியில் இளநிலை, முதுநிலை, நிறைஞர் பட்டதாரி. இப்பொழுது (2010) முதுநிலைப் பொறியியலாளர் படிப்பு, எம்ஜிஆர் ஜானகி அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் சில ஆண்டுகள் விரிவுரையாளர். பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தனின் பெயர்த்தி. அவரின் நிழலில் தமிழும் சைவமும் கற்றவர். கவிக்கோ அப்துல் ரஹ்மான், வெ.இறையன்பு ஆகியோரின் அன்புக்குரியவர். ஞானத் தேடல், இலக்கியச் சாரல் இதழ்களில் எழுதி வருபவர். சென்னையில் வசிக்கிறார்.) வாழ்வில் பலவிதமான நம்பிக்கைகளை நாம் கொண்டுள்ளோம். அந்த நம்பிக்கை உண்மையானதா, உண்மை அற்றதா என்பதை ஆராயாமல் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது. கண்மூடித்தனமான ...

Read More »

இலங்கையின் மாபெரும் சமாதி புத்தர்

லில்லி சிவசண்முகநாதன், கொழும்பு இலங்கையின் குருணாகலைக்கு அருகில் ரீதிகம, ரம்பொடகலை, மொனராகலையில் உள்ள வித்தியா சாகர பிரிவென விகாரையில் கருங்கற் புத்தர் சிலை, எம் இந்தியச் சிற்பிகளால் செதுக்கப்பட்டு வருகிறது. கருங்கல் பாறையைத் தகர்த்து, தமது கை வண்ணத்தினால் புத்தர் சிலை உருப்பெற்று வருகிறது. இது, பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வாகும் “விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை. எண்ணியவன் உறங்கினாலும் எண்ணங்கள் உறங்குவதில்லை” இவ்வசனத்திற்கேற்ப, ரம்பொடகலையில் மக்கள் எண்ணிய எண்ணம், இன்று  விதையாக முளைத்து, மக்களுக்கு நல்ல கனிகளை கொடுக்கப் போகிறது. 2001 ...

Read More »

பிரான்சு கம்பன் கழக ஒன்பதாம் ஆண்டு விழா

நேரடி வருணனை: புதுவை எழில் படங்கள்: திருமதி லூசியா லெபோ. தகவல்: ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ ================================ தொடக்கம் : பாரீஸ் நகரில் பல்கலைக்கழக நகரம் (Cité de l’Unviersité) ஒன்று உள்ளது. அங்கே இந்தியத் தாயகம் (Maison de l’Inde) என்ற மண்டபத்தில் 31/10/2010 (ஞாயிறு) அன்று, பிரான்சு கம்பன் கழகத்தின் 9ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. காலை 11 மணி அளவில் பிரான்சு கம்பன் கழகத்தின் தலைவர் கவிஞர் கி பாரதிதாசன், செயலர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ இருவரும் ஒருசேரக் ‘கம்பன் ...

Read More »

ரத்த அழுத்தம்

தமிழ்த்தேனீ ஏனோ தெரியவில்லை, சில நாட்களாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அதிகம் சத்தம் போடுவதாக எனக்குத் தோன்றிக்கொண்டிருந்தது. என் மனைவியிடமும், பெண்களிடமும், பேரன்களிடமும் சத்தத்தைக் குறையுங்கள், இல்லையென்றால் சீக்கிரம் காது செவிடாகிவிடும்  என்று அலுத்துக்கொள்வது என் வழக்கமானது. படிக்க வேண்டிய வயதில் கல்வியை ஒழுங்காகக் கவனித்துப் படிக்காமல்,சதா சர்வ காலமும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னெ உட்கார்ந்து, உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் கெடுத்துக்கொண்டு எதிர்காலத்தையே பாழாக்கிக்கொள்ளும் சிறுவர்களையும் சிறுமிகளையும் கண்டால் எரிச்சல் வருகிறது. நல்ல தூக்கத்தில் மாடி வீட்டுக்காரர்கள் கதவை அறைந்து சாத்தினால் கோபம் வருகிறது. ...

Read More »

எலி வேட்டை

தமிழ்த்தேனீ ”ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானீர் என்னும் ஊரில் உள்ள எலிக் கோயிலில் மனிதர்களை விட அதிகமாக எலிகள்தான் நடமாடும். இந்தக் கோயிலுக்கு எலிக்கோயில் என்றே  பெயர். இங்கே எலிகளை யாரும் துன்புறுத்துவதில்லை. அது மட்டுமல்ல,யாரும் இங்கே பூனைகளை வளர்ப்பதில்லை.எலிகளைத்  தெய்வமாகவே கொண்டாடுகிறார்கள்” “ஏங்க, ரெண்டு நாளா  இந்த எலி பண்ற அட்டகாசம்  தாங்க முடியலை,பூஜை  அறையில் உள்ள  பிள்ளையார் சிலையெல்லாம் கீழே தள்ளி வைக்குது, அங்கே இருக்கிற விளக்கிலேருந்து  திரியெல்லாம் எடுத்து  கீழே போட்டு வைக்குது” என்றாள்  மனைவி. “என்கிட்ட சொல்லவே இல்லையே,இப்போதானே  ...

Read More »

பிரான்சின் ஸ்ட்ராஸ்பூர் நகரில் இலக்கியத் தேடலின் சந்திப்பு

– ஆல்ப‌ர்ட், அமெரிக்கா. படங்கள், வருணனை: புதுவை எழில் ஸ்ட்ராஸ்பூர் (Strasbourg); ஐரோப்பியப் பாராளுமன்றம் அமைந்திருக்கும் அழகிய நகரம். கடந்த முறை, 2009இல், இலக்கியத் தேடலின் இரண்டாம் கூட்டத்தை அங்கு நடத்த அழைப்பு விடுத்தார் எழுத்தாள நண்பரும் இலக்கியத் தேடலின் உறுப்பினருமான நாக‌ரத்தினம் கிருஷ்ணா. விளைவாக, அதுபோல இலக்கிய அமைப்பு ஒன்றைத் தொடங்கி விழா நடத்த வேண்டும் என்ற ஆவல் அப்போது அங்கே கலந்துகொண்ட பலருக்கும் எழுந்திருக்கிறது. அந்த ஆவலை வளர்த்து ஆவன செய்தவர்  நாக‌ரத்தினம் கிருஷ்ணா. 19.09.2010 ஞாயிறு அன்று ‘சொல்  புதிது’ ...

Read More »

யானையைக் காட்டி, பிச்சை எடுக்கிறேன்

5 ஆண்டுகளுக்கு முன்பு செல்லப் பிராணியை வளர்க்கலாம் என்று ஒரு ஆட்டுக் குட்டியை வாங்கி, வளர்க்க ஆரம்பித்தேன். பார்ப்பதற்கு அழகான இளம் ஆட்டுக் குட்டியாக அது இருந்தது. அலுவலக வேலைகள் முடிந்ததும் அந்தக் குட்டியோடுதான் எனது நேரமெல்லாம். நண்பர்கள் குட்டியின் அழகில் மயங்கி, அதற்குத் தேவைப்படும் உணவை வழங்கினார்கள். அந்த ஆட்டுக் குட்டியை வளர்ப்பதில் நான் பெரும் மகிழ்வடைந்ததற்குக் காரணம், அது அந்தத் தெருவில் இருந்த குழந்தைகளுக்கு – பொம்மை வாங்கித் தர முடியாத பெற்றோர்களுக்கு – தேவைப்படுகிற விளையாட்டுப் பொருளாக மாறியதுதான். அவர்கள் ...

Read More »

கேரளத்தின் ’குட் பை’ நாயகன்

குமரி சு. நீலகண்டன் கேரளத்தில் சமீபத்தில் ஒரு பரபரப்பான செய்தி…. கேரளத்தின் மிகப் பெரிய தொலைக்காட்சி அலைவரிசையான ஏசியாநெட்டின் முதுநிலை துணைத் தலைவர் ஸ்ரீகண்டன் நாயர், ஏசியாநெட் தொலைக்காட்சியை விட்டு ராஜினாமா செய்ததுதான். சாதாரணமாக ஒரு தொலைக்காட்சியின் நிர்வாகத்தின் மிக முக்கியப் பொறுப்பில் இருப்பவர், அந்த பதவியை ராஜினாமா செய்வதென்பது மக்களுக்கு ஒரு பெரிய பரபரப்புச் செய்தி அல்ல. ஆனால் கேரள மக்களுக்கு ஸ்ரீகண்டன் நாயரின் ராஜினாமா அதிர்ச்சி அளித்ததற்குக் காரணம், அவர் கேரள மக்களிடையே மக்கள் நாயகனாக விளங்கினார். இன்னும் அந்த அலைவரிசையின் ...

Read More »

விநாயகச் சதுர்த்திக்கு உதவும் வியாபாரிகள்

தமிழ்த்தேனீ விநாயகச் சதுர்த்தி என்றாலே என் நினைவுக்கு வருவது, நாம் விநாயகச் சதுர்த்தி கொண்டாட உதவி செய்யும் வியாபாரிகள்தான். ஒரு வியாபாரி களிமண்ணை எடுத்து வந்து கற்கள், வேண்டாத கழிவுகள் போன்றவற்றை நீக்கிச் சுத்தம் செய்து, பிள்ளையார் உருவம் செய்ய  அச்சுகள் தயாரித்து, அந்தக் களிமண்ணால் பிள்ளையார் சிலைகளைச் செய்து, வாங்குபவர்களின் மனநிலையை நன்கு கவனித்து, அவர்களுக்கு விநாயகரின் உருவம் எப்படி இருந்தால் பிடிக்குமோ அப்படி பார்த்துப் பார்த்துக் கவனமாகச் செய்து, குந்து மணியால் கண்களை அமைத்து, ஒரு தெய்வீகக் களையை அந்தப் பிள்ளையாருக்கு ...

Read More »

உழைப்பு தானம், உடனடித் தேவை

அ.மகபூப் பாட்சா (மேலாண்மை அறங்காவலர், சோக்கோ அறக்கட்டளை, மதுரை) புட்டுக்கு மண் சுமந்த வரலாறு புட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான் திருவிளையாடல் வெறும் புராண கதையாக மட்டுமில்லாமல் ஊர் கூடி உழைப்பு தானம் செய்யும் கலாச்சாரத்தைப் பறைசாற்றுகிறது. ஆனால் நாம் அதனை வெறும் சடங்காக மட்டும் பாவித்து, திருவிளையாடல் காட்சிகளைக் கண்டு ரசித்துவிட்டு அலைகின்றோம். புராண காலத்தில் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியபோது மதுரையைக் காப்பாற்ற அன்றைய பாண்டிய மன்னன் வீட்டுக்கு ஒருவர் ஆற்றுக் கரையைப் பலப்படுத்தவும், அரிப்பைத் தடுக்கவும் வருமாறு உத்தரவிட்டதாகவும், ...

Read More »

நோன்புப் பெருநாளும் புத்தாடைத் தேடலும்!

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை நோன்புப் பெருநாளை அண்மித்த நாட்களில் இப்பொழுது நாங்கள் இருக்கிறோம். ‘எவ்வளவு விரைவாக நோன்பு முடியப் போகிறது? நேற்றுத்தான் முதல் நோன்பு ஆரம்பித்த மாதிரி இருக்கிறது’ என்றெல்லாம் வியந்தபடி கதைத்துக்கொள்கிறோம். கிட்டத்தட்ட எல்லா இஸ்லாமிய வீடுகளிலும் பெருநாளுக்கான முதலாவது ஆயத்தம் குடும்பத்தவர்களுக்கான புத்தாடைகள் குறித்தான தேடல்தான். புனித ரமழானின் இறுதிப் பத்து நோன்புகளும் அனேகமாக, நமது புத்தாடைகளின் கொள்வனவிற்காகவும், அவற்றைத் தேடுவதற்காகவுமே கழிந்துவிடுகின்றன. ரமழான் மாதம் குறித்து அந்நிய மத நண்பர் ஒருவர் இவ்வாறு சொல்கிறார். “நோன்பு மாதத்தில்தான் இரண்டு வகையான ...

Read More »

உறியடியும் வழுக்கு மரமும்!

காயத்ரி பாலசுப்ரமணியன் கண்ணன் பிறந்த நாள் கோகுலாஷ்டமி அன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பல கோயில்களில் உறியடி உற்சவமும் வழுக்கு மரம் ஏறும் போட்டியும் நடைபெற்றன. உறியடி உற்சவம், வழுக்கு மரம் இவை இரண்டுமே மனித வாழ்வின் தத்துவத்தை நமக்கு அழகாக எடுத்துரைக்கின்றன. உறியடி உற்சவத்தில், உயரத்தில், மண் பானையில் பரிசுப் பொருள் கட்டப்பட்டிருக்கும். அதனை அடிக்க ஆசைப்படுபவர்களின் கண்ணும் கட்டப்பட்டிருக்கும். விளையாட்டில் பங்கேற்பவர்களில் பலரும் அங்கும் இங்கும் அலைமோதி, இறுதியில் ஒருவர் மட்டுமே பானையை உடைத்துப் பரிசைப் பெறுவார். பானை என்பது பரம்பொருள். எட்ட ...

Read More »

வேர்களுக்கு ஒரு விழா!

ஷைலஜா ஆசிரியர் தினம் வருவதற்கு முன்பே சிறந்த ஆசிரியர்களுக்கான விருதை வழங்கிக் கௌரவித்திருக்கிறது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ். சென்னையில் நடந்த ‘அன்புள்ள ஆசிரியர்க்கு’ என்ற இந்த நிகழ்ச்சியில் விருது வாங்கிய 14 ஆசிரியர்களில் 7 பேர் பெண்கள் என்பது இன்னொரு சிறப்பு! இவர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள். இவர்கள் கடந்த ஆண்டு தனியார் பள்ளிகளுக்கு இணையாக 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவிகிதத்தைச் சாதித்துள்ளார்கள். ஆசிரியர்களைக் கௌரவப்படுத்துவதில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைவதாகச் சொன்ன ஸ்ரீகிருஷ்ணா ...

Read More »

வாரணாசிக் கரப்பான் பூச்சிகள்

தமிழ்த்தேனீ காசி என்பது இந்துக்களின் புனித ஸ்தலம். இப்படிப்பட்ட காசியின் புனித வரலாற்றை எனக்கு நினைவூட்டியது ஒரு சாதாரண கரப்பான் பூச்சி  என்பதே மிகவும் விசேஷமான செய்தி. இந்தக் கரப்பான் பூச்சியைச் சாதாரணக் கரப்பான் பூச்சி என்று நான் சொன்னதே தவறு. காலம் காலமாக, எல்லாவித இயற்கை உற்பாதங்களையும் கடந்து, எவராலும் அழிக்க முடியாத அளவுக்கு எதிர்த்து நின்று, இன்று வரை தன் இனத்தை  வெற்றிகரமாகப் பெருக்கிக்கொண்டிருக்கும் சிரஞ்சீவி இந்தக் கரப்பான் பூச்சிகள், மிக உத்தமமான  கரப்பான் பூச்சிகள் என்பதை நான் பயணித்த பெங்களூர் ...

Read More »

இன்றோ திருவாடிப்பூரம்!

ஷைலஜா இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் – குன்றாத வாழ்வான, வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து, ஆழ்வார் திருமகளா ராய்! உபதேச ரத்தின மாலையில் மணவாள மாமுனிகள் இப்படிக் கொண்டாடுகிறார் திருமால் தனது  ஒரு அவதாரத்தின் போது யாரைத் தன் தகப்பனாராக வரிக்கலாம் என யோசித்தாராம். தான் வணங்கும்படியாக உயர்ந்தவர்  யாரென்று கண்டுபிடித்துத் தசரதனைப் பிடித்தாராம். அதுமாதிரி பூமிதேவி அவதரிக்கு முன்பாக யாரைத் தன் தந்தையாக ஏற்கலாம் என யோசித்து  அதற்குச் சகல விதத்திலும் சரியானவர் பெரியாழ்வாரே எனத் ...

Read More »