கவிதைகள்

அவனருள் கும்பிடடா!

நல்லவை சுமந்து நன்மைகள் ஆற்றின் நாடு போற்றுமடா – நல்லது அல்லவை சுமந்து அல்லல்கள் வளர்ப்பின் அகிலம் தூற்றுமடா!   பிறப்பின் பயனும் பிறர்க்கெனச் சொல்லும் பணியை ஆற்றிடடா – தனிச் சிறப்பை அதிலும் செலுத்தியும் வாட்டும் சிறுமை தூற்றிடடா!   வாழ்வின் பயனும் புகழெனச் சொல்லும் வாழ்வை அமைத்திடடா – மிகத் தாழ்வுறும் நினைவை அறவே தள்ளியும் தர்மம் சமைத்திடடா!   ஏற்றமும் இறக்கமும் இரட்டைப் பிறவிகள் என்பதை அறிந்திடடா – நிலை மாற்றியும் இயற்கை காட்டுதல் உணர்ந்து மமதை எறிந்திடடா!   காற்று என்றும் ...

Read More »

படக்கவிதைப் போட்டி – 193

அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (29.12.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு ...

Read More »

துணைவியின் இறுதிப் பயணம் – 5

சி. ஜெயபாரதன், கனடா என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை ! [Miss me, But let me go] ++++++++++++++ என்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன் தோற்றம் : அக்டோபர் 24, 1934 மறைவு : நவம்பர் 18, 2018 ++++++++++++++++++  [22] எழுதிச் சென்ற ஊழியின் கை ! முடிந்தது அவள் ஆயுள் என விதி மொழிந்தால் நான் ஏற்க மாட்டேன் ! முடிந்தது அவள் வினைகள் எல்லாம் என் வீட்டில் எனக் காலன் ஓலமிட்டால் நான் காதில் கேட்க ...

Read More »

குறளின் கதிர்களாய்…(237)

-செண்பக ஜெகதீசன் உற்றநோய் நீக்கி யுறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல். -திருக்குறள் -442(பெரியாரைத் துணைக்கோடல்) புதுக் கவிதையில்… வந்த துன்பத்தைப் போகும் வழியில் போக்கி, அத்தகு துன்பம் அடுத்து வராதவாறு முன்னரே அறிந்து தடுத்திடும் ஆற்றல்மிக்க பெரியோர் துணையை, அவர் விரும்புவன செய்தாவது அரசன் பெறவேண்டும்…! குறும்பாவில்… துன்பமதைப் போக்கி மேலும்வராதவாறதன் வழியறிந்து தடுத்திடும் ஆற்றல்மிக்கோர் துணையை ஆதரித்துப் பெறவேண்டும் அரசன்…! மரபுக் கவிதையில்… துன்பம் வந்ததைப் போக்கியேபின் தொடர்ந்தது மேலும் வராவகையை முன்பே நன்றாய் ஆய்ந்தறிந்தே முழுதாய்த் தடுத்திடும் ஆற்றலுள்ளோர் என்றும் ...

Read More »

கங்கை கண்ட கவி

-விவேக்பாரதி ஸ்ரீதர ஐயாவாள் கதை காப்பு கட்டளை யிட்டுக் கவியெழு தென்ற கவிஞரிடம் தட்டா துடனே தனதொரு தந்தம் தனையுடைத்து விட்ட யிடத்தை விரைவி லெழுது விநாயகனே குட்டிக் கவிஞன் குறிக்கும் கதையில் குறையகற்றே! கதை திருவிசை நல்லூர் திருநக ரில்பொற் றிருச்சடையர் உருவரு வாகும் உடையவர் மீதே உளமுருகித் தெருவினில் பாடல் திரட்டு படைக்குந் திறமையுடை ஒருவ ரிருந்தார் உயர்ஶ்ரீ தரனெனும் உண்மையரே! (1) சிவன்புகழ் பாடும் தொழிலுடை யார்!பசிச் சீற்றமெனும் அவமது நீக்க அடுப்பெறிப் பார்!வரும் அன்பருக்குச் செவியும் வயிற்றையும் சேர்த்து ...

Read More »

படக்கவிதைப் போட்டி – 192

அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? பார்க்கவ் கேசவன் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (22.12.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு ...

Read More »

திகைக்கச் செய்தார்!

-கவிஞர் இடக்கரத்தான் மாவீரன் சிவாஜிபெரும் கோட்டை கட்டும் மகத்தான பணிதனையும் தொடரும் வேளை காவியுடை தரித்தங்கு வந்து நின்ற குருவான ராமதாஸர் தம்மை வணங்கி ஆவலுடன் அகந்தையுமே மிகுந்து கொள்ள ”அங்குபணி ஆற்றிவரும் அனைவ ருக்கும் மாவீரன் நானன்றோ உணவு மற்றும் மற்றவற்றை வழங்குவதாய்” கூறி நின்றான்! குருநாதர் இதுதனையும் கேட்ட பின்னர் குறுநகையும் தனைஒன்றை உதிர்த்து விட்டு அருகினிலும் கிடந்தஒரு கல்லைக் காட்டி ”அதுதனையும் நீபிளப்பாய்” என்று சொன்னார்! உருவியதன் வாள்கொண்டு கல்லை ரெண்டாய் உடைக்கத்தான் அதிலிருந்து தேரை தோன்ற ”சிறுஉயிரும் இதற்கும்உன் ...

Read More »

துணைவியின் இறுதிப் பயணம் – 3

அமர கீதங்கள் சி. ஜெயபாரதன், கனடா என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை ! [Miss me, But let me go] ++++++++++++++ என்னருமை மனைவி  தசரதி ஜெயபாரதன் தோற்றம் :  அக்டோபர்  24, 1934 மறைவு : நவம்பர் 18, 2018 ++++++++++++++++++ [18]  இறுதிப் பயணம்  முப்பதாவது நாளின்று ! போன மாதம் இதே நேரம், இதே நாளில், ஓடும் காரில் பேரதிர்ச்சியில் அவள் இரத்தக் குமிழ் உடைந்து உரத்த குரல் எழுந்தது என்னருகே ! ஃபோனில் 911 ...

Read More »

தித்திக்கும் தீந்தமிழ்

-பா.அனுராதா அகத்திய முனியின் அருட் தோன்றல் பொதிகை மலைதனில் பிறந்து மதுரையில் முச்சங்கம் அமைத்து முப்பாலை அரங்கேற்றம் செய்த தமிழே! தொல்காப்பியனின் மூன்றாம் அதிகாரத்தால் முதுமக்களையும் முத்தெடுக்க வைத்த தமிழே! சைவத்தை வளர்த்த அடியாரை ஆட்கொண்ட தமிழே! நாலாயிர பிரபந்தத்;தை நான்காக பகுத்த தமிழே! ஔவையின் இசையால் அறுபடை வீடுகளையும் அகிலமெங்கும் ஆர்ப்பரித்து ஆண்ட தமிழே! பாரதியின் நாவில் அனுதினம் பயணித்து பாமரனை பண்பாளனாக வடித்த தமிழே! கணவனை இழந்த காப்பியத் தலைவிக்கு நீதி கேட்டு வாதிட்ட தமிழே! குறுக தரித்த ஈற்றடி குறட்பாவால் ...

Read More »

துணைதான் யாரோ?

-கவிஞர் இடக்கரத்தான் வானுக்குக் துணைசெய்யும் நிலவின் தோற்றம்    வயலுக்குத் துணைதானே வரப்பின் ஏற்றம் ஆணுக்குத் துணைசெய்வாள் அழகுப் பாவை    அரசுக்குத் துணைஆற்றும் நல்லோர் சேவை மானுக்குத் துணைசெய்யும் குட்டைக் கால்கள்    மாந்தர்தம் துணையன்றோ நீதி நூல்கள் தேனுக்காய் அலையும்சிறு வண்டி னுக்கோ    தேன்சிந்தும் மலர்க்கூட்டம் துணையே ஆகும்! ஊருக்குத் துணைசெய்யும் நதியின் ஓட்டம்    உயர்வுக்குத் துணைசெய்வார் நல்லோர் கூட்டம் நாருக்குத் துணைசெய்யும் மலரின் வாசம்    நன்மைக்குத் துணையாற்றும் நல்லோர் நேசம் வேருக்கு வலுசேர்க்கும் மண்ணின் ஈரம் ...

Read More »

பெரும் பேறாய் போற்றுகின்றோம் !

மகாதேவஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண்… அவுஸ்திரேலியா முண்டாசுக்   கவிஞனே   நீ மூச்சுவிட்டால் கவிதை வரும் தமிழ் வண்டாக நீயிருந்து தமிழ் பரப்பி நின்றாயே அமிழ் துண்டாலே வருகின்ற அத்தனையும் வரும் என்று தமிழ் உண்டுமே பார்க்கும்படி தரணிக்கே உரைத்து நின்றாய் ஏழ்மையிலே நீ   இருந்தும் இன் தமிழை முதலாக்கி தோள் வலிமை காட்டிநின்று துணிவுடனே உலவி வந்தாய் வாய்மை கொண்டு  நீயுரைத்த வரமான வார்த்தை எல்லாம் மக்களது  மனம் உறையின் வாழ்வு வளம் ஆகிடுமே அடிமை  எனும்  மனப்பாங்கை அழித்துவிட ...

Read More »

படக்கவிதைப் போட்டி – 191

அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (15.12.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(236)

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு. -திருக்குறள் -465(தெரிந்து செயல்வகை) புதுக் கவிதையில்… பகைவரை அழிக்கும் செயல்வகையை நன்கு அறியாமல் செயலில் இறங்கினால், அது பகைவரை நிலைத்து நிலைபெற வழிவகுத்துவிடும்…! குறும்பாவில்… செயல்வகை தெரியாமல் பகையழிக்கும் செயலில் இறங்குவது, பகைவர் உறுதியாய் நிலைபெற வைத்துவிடும்…! மரபுக் கவிதையில்… தொடரும் பகையை அழித்திடவே தகுந்த செயல்வகை தெரியாமல் தொடங்கும் செயலில் பயனில்லை தேடித் தராது வெற்றியையே, மடமைச் செயலாய் மாறியேயது மாற்றான் வெல்ல வழிவகுத்தே இடரது நமக்குத் தரும்வகையில் எதிரியை நிலைக்க வைத்திடுமே…! ...

Read More »

வியப்பு தோன்றும்!

கவிஞர் இடக்கரத்தான் வான்நிலவும் கடலிறங்கி நீந்தக் கூடும்    வஞ்சியரும் நெடும்தாடி வளர்க்கக் கூடும் தேன்சிந்தும் மலர்க்கூட்டம் பறக்கக் கூடும்    தேரினையும் எறும்புகளும் இழுக்கக் கூடும் மீன்கூட்டம் மணல்மேட்டில் வாழக் கூடும்    மின்வெட்டும் நிரந்தரமாய் மறையக் கூடும் வீண்வார்த்தை அரசியலும் பேசி வாழ்வோர்    வாய்மைதனில் நடந்திடுங்கால் வியக்கத் தோன்றும்! புயலதுவும் தென்றல்போல் தழுவக் கூடும்    புலிபோலும் எலிகளுமே பாயக் கூடும் மயில்களெலாம் குயில்களென இசைக்கக் கூடும்    மதுவும்தான் உயிர்காக்கும் பொருளாய் மாறும் அயல்மொழியும் தமிழின்முன் மண்டி இட்டு ...

Read More »