Tag Archives: செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(354)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(354) இழிவறிந் துண்பான்க ணின்பம்போ னிற்குங் கழிபே ரிரையான்க ணோய். – திருக்குறள் – 946 (மருந்து) புதுக் கவிதையில்... அளவறியாமல் உண்பதால் அடையும் இழிவினை அறிந்து, அளவோடு உண்பவனிடம் அளவிலா இன்பம் நிலைத்திடும்.. அதுபோல அளவே இல்லாமல் அதிக உணவு உண்பவனிடம் அகலாமல் நோய் நிலைக்குமே…! குறும்பாவில்... இழிவறிந்தே அளவாய் உண்பவனிடம் இன்பம் என்றும் நிலைப்பதுபோல் அளவேயின்றி இரையுண்பவனிடம் நோய்தான் நிலைக்குமே…! மரபுக் கவிதையில்... உணவ ததிகமாய் உண்பதனின் உண்மை இழிவினை யறிந்தேதான் உணவை யளவாய் உண்பவனே உயர்வாய் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(353)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(353) ஆற்றாரு மாற்றி யடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின். – திருக்குறள் – 493 (இடனறிதல்) புதுக் கவிதையில்... வென்றிடத் தக்க இடத்தின் விபரமறிந்து, தம்மையும் காத்துக்கொண்டு பகைவரிடம் தம் செயலைச் செய்தால், தகுந்த வலிமையற்றவரும் வலிமை உள்ளவராக வெல்வார் உறுதியாக…! குறும்பாவில்... இடத்தின் தன்மையை அறிந்து தம்மையும் காத்து எதிரியிடம் வினையாற்றினால், வலிமையற்றவரும் வலுவுடன் வெல்வார்…! மரபுக் கவிதையில்... வென்றிடத் தக்கதாய் இடமதனின் விபர மதனை நன்கறிந்து, தன்னுயிர் தனையும் பாதுகாத்துத் தம்செய லதனைப் பகைவர்தம் முன்னே ...

Read More »

குறளின் கதிர்களாய்…(352)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(352) வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்க ளைந்து மகத்தே நகும். – திருக்குறள் – 271 (கூடாவொழுக்கம்) புதுக் கவிதையில்... வஞ்சக மனங்கொண்ட ஒருவனின் பொய்யொழுக்கத்தைப் பார்த்து, அவனது உடம்போடு கலந்திருக்கும் ஐம்பூதங்களும் தம்முள் ஏள்ளி நகைக்கும்…! குறும்பாவில்... வஞ்சக மனம் கொண்டவனின் பொய்நடத்தை கண்டு அவன் உடலிலுள்ள ஐம்பூதங்களும் தமக்குள் சிரிக்கும்…! மரபுக் கவிதையில்... உள்ள மதிலே வஞ்சத்துடன் ஊரார் முன்னே நல்லவனாய் கள்ளத் தனமாய் மறைத்தொழுகும் கயவ னவனின் உடலதனின் உள்ளே யொன்றாய்க் கலந்திருக்கும் உயர்ந்த ஐந்து ...

Read More »

குறளின் கதிர்களாய்…(351)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(351) குறிப்பிற் குறிப்புணரா வாயி னுறுப்பினு னென்ன பயத்தவோ கண். – திருக்குறள் – 705 (குறிப்பறிதல்) புதுக் கவிதையில்... முகம் கண் போன்றவற்றின் குறிப்பால் மற்றொருவனின் மனக் குறிப்பை அறிய முடியவில்லையெனில், ஒருவனின் உறுப்புகளுள் சிறந்தனவாம் கண்களால் என்ன பயன்…! குறும்பாவில்... முகக் குறிப்பால் ஒருவனின் அகக் குறிப்பை அறியமுடியவில்லையெனில், உறுப்புகளுள் சிறந்த கண்களால் பயனில்லை…! மரபுக் கவிதையில்... முகமொடு கண்கள் போன்றவற்றில் முகிழ்க்கும் குறிப்பின் அடிப்படையில் அகத்தி லொருவன் கொண்டுள்ள அத்தனை உள்ளக் குறிப்பினையும் புகுந்து சென்றே ...

Read More »

குறளின் கதிர்களாய்…(350)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(350) கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தியாண்டு முகாஅமை வல்லதே யொற்று. – திருக்குறள் – 585 (ஒற்றாடல்) புதுக் கவிதையில்... பிறருக்கு ஐயம்வரா வேடத்தில் சென்று, ஐயுற்று யாரேனும் சினந்து நோக்கையில் அதற்கு அஞ்சாமல் நின்று, எது செய்து எவ்விதம் கேட்டாலும் மனதிலுள்ள செய்தியை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே நல்ல ஒற்றனாவான்…! குறும்பாவில்... ஐயுறா வேடத்தில் சென்று, ஐயுற்று நோக்கில் அஞ்சாமல், அறிந்ததை வெளியிடாத வல்லவனே ஒற்றன்…! மரபுக் கவிதையில்... மற்றவர் யாரும் அறிந்திடாதே மாறு வேடம் புனைந்துகொண்டு, சற்றும் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(349)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(349) உழுவா ருலகத்தார்க் காணியஃ தாற்றா தெழுவாரை யெல்லாம் பொறுத்து. – திருக்குறள் – 1032 (உழவு) புதுக் கவிதையில்... உழவெனும் உயர்தொழில் செய்ய மனமின்றி வேறு தொழில்கள் செய்ய, அவற்றைத் தேடியலைவோர் யாவரையும் தாங்குவதாலே, உழுபவரே உலகெனும் தேருக்கு அச்சாணியாவர்…! குறும்பாவில்... உழவின் உயர்வை அறியாமல் வேறுவேலை தேடி அலைவோரையும் தாங்குவதால், உழவரே உலகத்தார்க்கு அச்சாணி…! மரபுக் கவிதையில்... உயர்ந்த தொழிலாம் உழவதனின் உயர்வு தன்னை யறியாமல் முயன்று வேறு பணிதேடி முனைப்புட னலையும் மாந்தரையும் அயர்வே யிலாமல் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(348)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(348) ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர் தோற்றம் நிலக்குப் பொறை. – திருக்குறள் -1003 (நன்றியில் செல்வம்) புதுக் கவிதையில்... பிறரை விடப் பொருளதிகம் சேர்க்கவேண்டுமென்று பொருள் சேர்ப்பதிலேயே பற்றுள்ளம் கொண்டு, புகழை விரும்பா மக்கள் பிறந்து வாழ்தல் பூமிக்குப் பெரும் பாரமே…! குறும்பாவில்... அதிகம் பொருள் சேர்க்கவேண்டுமென்று அதிலே பற்றுள்ளம் கொண்டு புகழ்விரும்பார் பிறப்பு, அகிலத்திற்கு அதிகமான பாரம்தான்…! மரபுக் கவிதையில்... அடுத்தவர் தம்மை விடவும்பொருள் அதிகம் சேர்த்திட வேண்டுமென்ற திடமது கொண்டே அதன்மீது தீராப் பற்றது கொண்டேதான் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(347)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(347) ஆற்றுவா ராற்றல் பணித லதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை. – திருக்குறள் -985 (சான்றாண்மை) புதுக் கவிதையில்... செயலொன்றைச் செய்து முடிப்பவர் திறமை, தம்முடன் பணியாற்றுபவர்களுடன் பணிந்தே வேலைவாங்குவதாகும்.. சான்றோர்க்கு அதுவே பகைவரையும் நண்பராக ஆக்கிவிடும் ஆயுதமாகும்…! குறும்பாவில்... தம்முடன் பணியாற்றுபவர்களுடன் பணிந்தே வேலைவாங்குதல்தான் செயலைச் செய்துமுடிப்போர் திறமை, பகைவரை நண்பராக்கச் சான்றோர்க் காயுதமுமது…! மரபுக் கவிதையில்... செயல தொன்றைத் திறம்படவே செய்து முடிப்போர் ஆற்றலது, செயலி லுடன்பணி செய்வோருடன் சேர்ந்தே பணிவுடன் வேலைவாங்கலே, உயர்ந்த பண்புடை சான்றோர்க்கே ...

Read More »

குறளின் கதிர்களாய்…(346)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(346) மழித்தலும் நீட்டலும் வேண்டா வுலகம் பழித்த தொழித்து விடின். – திருக்குறள் – 280 (கூடாவொழுக்கம்) புதுக் கவிதையில்... உயர்ந்தோர் வெறுக்கும் உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை மனத்தால் ஒதுக்கிவிட்டால், தவத்தோர்க்குத் தாடி வளர்த்தல் மொட்டை போடுதல் போன்ற புறக்கோலம் எதுவும் தேவையில்லை…! குறும்பாவில்... உலகும் உயர்ந்தோரும் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டுவிட்டால் தவத்தோர்க்கு மொட்டை தாடி போன்ற புறவேடங்கள் வேண்டாம்…! மரபுக் கவிதையில்... உலகில் வாழும் மாந்தர்களும் உத்தம மான சான்றோரும் விலக்கிப் பழிக்கும் தீயொழுக்கம் விட்டு விட்ட தவத்தோர்க்குப் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(345)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(345) அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். – திருக்குறள் -443 (பெரியாரைத் துணைக்கோடல்) புதுக் கவிதையில்... அறிவு மற்றும் ஒழுக்கங்களில் சிறந்த பெரியவர்களை, அவர்கள் விரும்புவனவற்றைத் தெரிந்து செய்து தமக்கு மிக உயர்ந்த துணைவராக்கிக் கொள்ளுதல், அரசர்க்குக் கிடைத்தற்கரிய பேறுகளில் மிகவும் அரியதான ஒன்றாகும்…! குறும்பாவில்... பெரியோர்கள் விரும்புவன தெரிந்துசெய்து அவர்களைத் தமக்கு உற்ற துணைவராக்கிக்கொள்ளுதல், அரசர்க்குப் பெறற்கரிய பேறுகளில் அரியதாம்…! மரபுக் கவிதையில்... அறிவுட னொழுக்கம் அனைத்திலுயர் ஆற்றல் மிக்கப் பெரியோரை, முறையா யவர்கள் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(344)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(344) தெளிவி லதனைத் தொடங்கா ரிளிவென்னு மேதப்பா டஞ்சு பவர். – திருக்குறள் -464 (தெரிந்து செயல்வகை) புதுக் கவிதையில்... தமக்குத் தரக்குறைவு என்னும் குற்றம் வருவது குறித்து அஞ்சும் இயல்புடையோர், அமைச்சர்கள் ஆலோசனை பெற்றும் தாமும் ஆராய்ந்து என்ன பயனைத்தரும் என்பதைத் தெளிந்தறியாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்…! குறும்பாவில்... அவமானம் வருவது குறித்து அஞ்சும் இயல்புடையோர், தெளிவு இல்லாத செயலைச் செய்யத் தொடங்கார்…! மரபுக் கவிதையில்... செயலால் தமக்கே இழுக்கதுதான் சேரு மென்றே அஞ்சுகின்ற இயல்பைக் கொண்ட ஆட்சியாளர், ...

Read More »

குறளின் கதிர்களாய்…(343)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(343) ஓல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாத தில். – திருக்குறள் – 472 (வலியறிதல்) புதுக் கவிதையில்... தம்மால் செய்ய இயலும் செயலறிந்து, அதற்கு அறியவேண்டிய வலிமைகளறிந்து, மனம் மொழி மெய்களை அதில் எப்போதும் வைத்துப் பகைமேல் செல்லும் மன்னர்க்கு முடியாதது எதுவுமில்லை…! குறும்பாவில்... இயலும் செயலும் அதற்கான வலிமைகளுமறிந்து மனமொழிமெய் அதிலே வைத்துப் பகைமேல் செல்வோர்க்கு முடியாத தில்லையே…! மரபுக் கவிதையில்... செய்ய இயன்ற செயலறிந்து செயலதன் வலிமைகள் தானறிந்து மெய்யுடன் மனமொழி யெப்போதும் மிகையா ...

Read More »

குறளின் கதிர்களாய்…(342)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(342) சிறைநலனுஞ் சீரு மிலரெனினும் மாந்த ருறைநிலத்தோ டொட்ட லரிது. – திருக்குறள் – 499 (இடனறிதல்) புதுக் கவிதையில்... மக்கள் பாதுகாப்புக்கு அரணாகிய நலனும் வலிமையும் பிற சீரும் இலராயினும், அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தாக்குதல் மிகவும் சிரமமான செயலாகும்…! குறும்பாவில்... அரணாம் நலனும் பிற சீர்களும் இல்லாதவர்களானாலும் அவர்தம் இருப்பிடம் சென்று தாக்குதல் மிகவும் அரிது…! மரபுக் கவிதையில்... மக்களுக் கரணாம் நலனுடனே மற்றைச் சிறப்பெலாம் இலராயுள அக்கம் பக்கம் நாட்டினரை ஆற்றாப் பகைமை கொண்டேதான் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(341)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(341) சொலல்வல்லன் சோர்வில னஞ்சா னவனை இகல்வெல்லல் யார்க்கு மரிது. – திருக்குறள் – 647 (சொல்வன்மை) புதுக் கவிதையில்... எண்ணியதைப் பிறர் ஏற்றிடும்படிச் சொல்லும் ஆற்றல் மிக்கவன், சொல்லிடும் செய்தி சொல்லிடக் கடினமானதெனிலும் சோர்வுறாமல் சொல்பவன், கேட்பவர் பகையாளர் என்றாலும் பயமில்லாதவன் எனப் போற்றப்படும் இவனை மாறுபாட்டால் வெல்வதென்பது எவர்க்கும் மிக அரிதாகும்…! குறும்பாவில்... புரியும்படி எடுத்துச்சொல்வதில் வல்லவனாய் கடினமான செய்தியையும் சோர்வுறாமல் சொல்பவனாய் அஞ்சாதவனை மாறுபாட்டால் வெல்வதரிது…! மரபுக் கவிதையில்... சொல்ல எண்ணிடும் சேதியினைச் சொல்லும் வகையில் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(340)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(340) கற்றாருட் கற்றா ரெனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார். – திருக்குறள் – 722 (அவை அஞ்சாமை) புதுக் கவிதையில்... கற்றோர் நிறைந்த அவையில் அவர் முன் தாம் கற்றதை அவர் மனத்தில் பதியுமாறு எடுத்துரைக்க வல்லவரே, கல்வி கற்றோருள் நன்கு கற்றவரென மதிக்கப்படுவர்…! குறும்பாவில்... கற்றோர் அவையில் தாம் கற்றவைகளை அவர்கள் மனதுக்கேற்ப சொல்லவல்லாரே கற்றோருள்ளும் மிகக்கற்றவரெனக் கருதப்படுவர்…! மரபுக் கவிதையில்... கற்றோர் பலரும் நிறைந்திருக்கும் கண்ணிய மிக்க அவையதிலே முற்றிலும் அவர்கள் மனம்மகிழ்ந்தே முழுதும் விரும்பிக் ...

Read More »