Tag Archives: மேகலா இராமமூர்த்தி

இரஷியாவின் மகத்தான படைப்பாளி!

-மேகலா இராமமூர்த்தி புதின எழுத்தாளர், சிறுகதையாசிரியர், பத்திரிகையாளர், தத்துவவாதி எனும் பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட மாபெரும் படைப்பாளி, இரஷியாவைச் சேர்ந்த பியதோர் தாஸ்தயெவ்ஸ்கி. சமூக, அரசியல் ஆன்மிகத் தளங்களில் மனித உளவியலை மிக ஆழமாக ஆராய்ந்தவை அவருடைய படைப்புக்கள். மருத்துவர் மிகையில் தாஸ்தயேவ்ஸ்கி – மரியா தாஸ்தயேவ்ஸ்கயா (Mikhail Dostoevsky and Maria Dostoevskaya) இணையரின் இரண்டாவது மகனாக நவம்பர் 11 1821இல் இரஷியாவிலுள்ள மாஸ்கோவில் பிறந்தார் பியோதர் தாஸ்தயேவ்ஸ்கி. குழந்தைப் பருவத்திலேயே இலக்கியத்துடனான அறிமுகம் தாஸ்தயெவ்ஸ்கிக்கு கிடைத்தது. மூன்று வயதுக் குழந்தையாக அவர் ...

Read More »

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 32

-மேகலா இராமமூர்த்தி சுக்கிரீவன் மனையாட்டியைக் கவர்ந்து வைத்திருக்கும் வாலியின் ஒழுக்கக் கேட்டைச் சுட்டிக்காட்டி, அவன் பிழைசெய்தவன் என்று இராமன் குற்றஞ்சாட்டியதைக் கேட்ட வாலி அதனை மறுத்து, ”ஐய! மனிதர்கள் பின்பற்றும் கற்பொழுக்கத்தைப் பின்பற்றி வாழும் வகையில் விலங்குகளாகிய எம்மை இறைவன் படைக்கவில்லை; மனம் விரும்பியபடி வாழும் வாழ்க்கையே எமக்குரியது; திருமண முறைகளோ அவற்றைக் கைக்கொள்ளும் பண்புகளோ எமக்கில்லை” என்றுரைத்துத் தான் சுக்கிரீவன் மனைவியைக் கவர்ந்ததில் பிழையில்லை என்று வாதிட்டான். இராமன் அதனை ஒப்பவில்லை. ”தேவர்களைப்போல் பிறந்து அறவழிகள் அனைத்தையும் தெளிவுற அறிந்துள்ள உன்னை எங்ஙனம் ...

Read More »

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 31

-மேகலா இராமமூர்த்தி விண்ணவரும் கண்டு மருளும் வண்ணம் வாலிக்கும் அவன் சோதரன் சுக்கிரீவனுக்கும் நிகழ்ந்த கடும்போரில் ஒருகட்டத்தில் வாலியின் கை ஓங்கியது. யானையை அரி தாக்கி அழிப்பதுபோல், தன்னுடைய நகங்களாலும் கரங்களாலும் சுக்கிரீவனைத் தாக்கிக் கீழே வீழ்த்தினான் அந்தச் சூரன்! ”வாலியை நீ தாக்கும் வேளையில் நான் அவனை அம்புவிட்டுக் கொல்கின்றேன்” என்று சுக்கிரீவனுக்கு உறுதியளித்திருந்த இராமன் அவ்வாறு செய்யவில்லை. இனியும் வாலியோடு மோதினால் அவனால் தான் உயிரிழப்பது உறுதி என்பதை உணர்ந்த சுக்கிரீவன், அங்கிருந்து தப்பித்து இராமனின் மறைவிடம் வந்தடைந்தான்.  நொந்த சிந்தையோடு ...

Read More »

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 30

-மேகலா இராமமூர்த்தி அமளிமிசை கிடந்த வாலி வெளியில் எழுந்த அமளியையும் ஆரவாரத்தையும் கேட்டான். ஊழி முடிவில் பொங்கியெழும் ஆழிப்பேரலைபோல் விரைந்தெழுந்தான். அவன் எழுந்த வேகத்தில் கிட்கிந்தை மலை நிலத்தினுள் அழுந்திற்று. வாலியின் வாயிலிருந்து புகைவருமாறு அவன் கண்களிலிருந்து கிளம்பிய சினத் தீயினால், அமுதம் நிகர்த்தவளும் மூங்கில்போன்ற தோள்களை உடையவளுமான வாலியின் மனைவி தாரை, தன் நீண்டகூந்தல் எரியப் பெற்றவளாய், அவனுக்கு இடையில் வந்துநின்று வெளியில் செல்ல எத்தனித்த அவனைத் தடுத்தாள். ஆயிடை தாரை என்று அமிழ்தின் தோன்றிய வேயிடைத் தோளினாள் இடை விலக்கினாள் வாயிடைப் ...

Read More »

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 29

-மேகலா இராமமூர்த்தி துந்துபிக்கும் வாலிக்கும் நடந்த கடும்போரில் அரக்கன் துந்துபியின் இரு மருப்புகளையும் பிடுங்கிய வாலி அவற்றாலேயே அவனை அடிக்க, வலிதாளாது அலறினான் துந்துபி. அத்தோடு விட்டானா வாலி? மலையின்மேல் இடி விழுந்தாற்போல் அவ் அரக்கனின் தலைமீது குத்தினான். அடுத்து, துந்துபியைத் தூக்கிய வாலி அவனைத் தன் கையால் சுழற்றி உயர வீச, அவ் அரக்கனின் உயிர் விண்ணுலகம் சென்றது; உடலோ மண்ணுலகில் உருசியமுக மலையில் மதங்க முனிவர் தவஞ்செய்யும் ஆசிரமத்தில் வீழ்ந்தது. குருதித் துளிகள் அங்குமிங்கும் தெறித்தன. அப்புனித இடத்தின் தூய்மையை அவ்வுடல் ...

Read More »

இந்தியப் பயண இலக்கியத்தின் தந்தை

-மேகலா இராமமூர்த்தி உலக வாழ்க்கை குறித்து மேனாட்டு நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியரிடம் கேட்டால், உலகமே ஒரு நாடக மேடை; அதில் அனைவரும் நடிகர்கள் என்பார். பயணங்களிலேயே தம் வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்தவரும், சீர்திருத்தச் சிந்தனையாளரும், இந்தி(ய)ப் பயண இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான ’மகா பண்டிதர்’ இராகுல் சாங்கிருத்தியாயனைக் கேட்டால் ”உலக வாழ்க்கையே பயணங்களின் முடிவில்லா நெடுஞ்சாலை; அதில் அனைவருமே பயணிகள்” என்று சொல்லக்கூடும். உத்திரப் பிரதேசத்தின் ஆசம்கர் (Azamgarh) மாவட்டத்திலுள்ள பாந்தகா என்ற கிராமத்தில் கோவர்தன் பாண்டே, குலவந்தி தேவி இணையருக்கு மகனாக, ...

Read More »

படக்கவிதைப் போட்டி 300இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி நண்பர்களே! படக்கவிதைப் போட்டி இவ்வாரத்தோடு நிறைவுபெறுகின்றது. இப்போட்டி 300 வாரங்கள் வெற்றிகரமாய்த் தொய்வின்றி நடக்கத் துணைநின்ற நிழற்படக் கலைஞர்கள், தேர்வாளர்கள், ஆர்வத்தோடு கவிதைகள் எழுதிவந்த கவிஞர்கள், வாசகர்கள் அனைவருக்கும் வல்லமை மின்னிதழின் நன்றிகள்! ***** புகைப்படக் கலைஞர் திருமிகு. அமுதா ஹரிஹரன் எடுத்திருக்கும் இந்த ’ஒளி’ப்படத்தை அவருடைய படத்தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுத்து நமக்கு வழங்கியுள்ளார் திருமிகு. ராமலக்ஷ்மி. இவ்விருவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக! தகத்தகாய ஒளியை வானில் பரப்பிக்கொண்டிருக்கின்ற சூரியப் பிஞ்சை ஏந்தியிருப்பதுபோல் காட்சியளிக்கும் இந்தக் கரம் காண்போரின் விழிகளை வியப்பில் விரிய ...

Read More »

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 28

-மேகலா இராமமூர்த்தி வாலி பிலத்தினுள் புகுந்து மாயாவி அரக்கனைத் தேடிச்சென்று மாதங்கள் 28 ஆகியும் திரும்பாததால் அனுமன் உள்ளிட்ட வானரர்கள் இளவரசனான சுக்கிரீவனை முடிபுனைந்து அரசாட்சியை மேற்கொள்ளப் பணித்தனர். ஆனால் சுக்கிரீவன் அதற்கு உடன்படவில்லை. வாலி ஆண்ட அரசைத் தான் உரிமைகொண்டு அரசாளுதல் குற்றமென்று எண்ணினான். எனவே வானரர்களின் கோரிக்கையை மறுத்து, ”நான் இந்தப் பிலத்தினுள் புகுந்து என் தமையன் வாலியைத் தேடுவேன்; ஒருவேளை அவன் இறந்துபோயிருந்தால் அவனைக் கொன்ற மாயாவியோடு போரிட்டு அவன் ஆவி முடிப்பேன்; அது கைகூடவில்லையாயின் என் இன்னுயிர் துறப்பேன்!” ...

Read More »

படக்கவிதைப் போட்டி – 300 (நிறைவு)

அன்பிற்கினிய நண்பர்களே! படக்கவிதைப் போட்டியைத் தொடங்கி, இதோ 300ஆவது வாரத்தைத் தொட்டுவிட்டோம். ஏராளமான புதிய கவிஞர்களையும் புகைப்படக் கலைஞர்களையும் அடையாளம் காண, இந்தப் போட்டி உதவியுள்ளது.  இதில் ஊக்கத்துடன் பங்கேற்ற, இதற்குத் துணை நின்ற கவிஞர்கள், தங்கள் புகைப்படங்களை வழங்கிய புகைப்படக் கலைஞர்கள், படங்களைத் தேர்ந்தெடுத்து வழங்கிய சாந்தி மாரியப்பன், ராமலக்ஷ்மி உள்ளிட்ட தேர்வாளர்கள், நடுவராகத் தொடர்ந்து சீரிய செயலாற்றி வரும் மேகலா இராமமூர்த்தி. சில வாரங்களுக்கு நடுவராகச் செயலாற்றிய கவிக்கோ ஞானச்செல்வன், தொடர்ந்து வெளியிட்ட பவளசங்கரி, வல்லமை ஆசிரியர் குழுவினர் உள்ளிட்ட அனைவருக்கும் ...

Read More »

படக்கவிதைப் போட்டி 299இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி புகைப்படக் கலைஞர் திரு. எஸ். இராமலிங்கம் கலைநுணுக்கத்தோடு எடுத்திருக்கும் சிலைகளின் நிழற்படத்தை அவரின் படத்தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 299க்கு வழங்கியுள்ளார் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றி! சொல்லில் கலைவண்ணம் ஊட்டிக் காலத்தால் அழியாப் பாடல்களைப் படைத்தளித்த பைந்தமிழ்ப் புலவர்களைப்போல், கல்லில் கலைவண்ணம் காட்டிக் காலத்தால் அழியாக் கவின் சிலைகளைப் படைத்த  சாதனையாளர்கள் நம் சிற்பிகள்; அவர்களைப் போற்றுதல் நம் கடன்! இந்தச் சிற்பங்களின் நேர்த்தியை, இவற்றை வடித்த சிற்பிகளின் சீர்த்தியைத் தீந்தமிழ்ச் சொல்லெடுத்துப் பாட வருகிறார்கள் நம் ...

Read More »

எளிய வாழ்க்கையின் இனிமையை உணர்த்திய அறிஞர்

மேகலா இராமமூர்த்தி மாட மாளிகைகளில் ஆடம்பரமாக வாழ்வதே வாழ்க்கை என்று எண்ணும் மானுடரே இம்மன்னுலகில் அதிகம். எளிய வாழ்க்கையை மேற்கொள்வதும் அதில் தன்னிறைவு காண்பதும் பலராலும் சிந்தித்துப் பார்க்கவும் இயலாத ஒன்று. இப்படிப்பட்ட மனிதர்களுக்கு மத்தியில், வேண்டாமை அன்ன விழுச்செல்வம் எனும் வள்ளுவத்தை நெஞ்சில் நிறுத்தி, தேவைகளைக் குறைத்து நிறைவோடும் நிம்மதியோடும் வாழும் மனிதர்களும் அத்தி பூத்தாற்போல் ஆங்காங்கே தென்படத்தான் செய்கின்றார்கள். அத்தகையவர்களில் ஒருவர்தாம் ஹென்றி டேவிட் தொரோ (Henry David Thoreau) எனும் மேனாட்டுச் சிந்தனையாளர். அவரின் வாழ்க்கையை நாம் அறிந்துகொள்வது எளிமையிலும் ...

Read More »

படக்கவிதைப் போட்டி – 299

அன்பிற்கினிய நண்பர்களே! கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? புகைப்படக் கலைஞர் எஸ்.இராமலிங்கம் எடுத்த இப்படத்தை அவர்களது தொகுப்பிலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (21.03.2021) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு ...

Read More »

படக்கவிதைப் போட்டி 298இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி புகைப்படக் கலைஞர் திருமிகு. ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படம் வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டுப் படக்கவிதைப்போட்டி 298க்கு வழங்கப்பட்டிருக்கின்றது. கையிலே கோல்வைத்துக் குறிசொல்லும் பெண்மணியை இப்படத்தில் காணுகின்றோம். இவ்வாறு குறிசொல்லும் பெண்டிரை ’அகவன் மகளிர்’ என்றழைத்தனர் அன்று. வெள்ளியால் செய்த பூணிட்ட சிறுகோலைத் தாங்கியிருக்கும் இம்மகளிரை, ’வெண்கடைச் சிறுகோல் அகவன் மகளிர்’  (குறுந்: 298) என்கிறது குறுந்தொகை. தலைவியின் காதலை வீட்டுக்குத் தெரிவிக்க விரும்பும் தோழி, குறிசொல்ல வந்த அகவன் மகளைப் பார்த்து, ”சங்குமணி போன்ற நரைத்த நெடுங்கூந்தலையுடைய அகவன் மகளே! ...

Read More »

படக்கவிதைப் போட்டி – 298

Ramalakshmi

அன்பிற்கினிய நண்பர்களே! கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? புகைப்படக் கலைஞர் ராமலக்ஷ்மி எடுத்த இப்படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து  தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (14.03.2021) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி ...

Read More »

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 27

-மேகலா இராமமூர்த்தி நூலறிவும் வாலறிவும் நிரம்பிய அருங்குணத்தோனான மாருதி, உருசியமுக மலையேறிவந்த குரிசில்களான இராம இலக்குவரோடு அளவளாவி அவர்கள்பால் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டவனானான். சுக்கிரீவனின் துயரத்தைத் தீர்க்க இவர்களால்தாம் இயலும் என்றுணர்ந்தவன், ”சிறுபோது இங்கே இருப்பீர்; சுக்கிரீவனை விரைந்து கொணர்கின்றேன்” என்றுகூறிச் சென்றான். சுக்கிரீவனை அணுகிய அனுமன், ”வாலிக்கு வந்துசேர்ந்தான் காலன்; நாம் இடர்க்கடல் கடந்தோம்” என்று மகிழ்வோடியம்பி, இராமனின் வரலாற்றை விரிவாக அவனிடம் விளம்பத் தொடங்கினான். மாய மான் வடிவெடுத்து வந்த மாரீசனின் கதையை இராமன் முடித்ததைச் சொல்லவந்த அனுமன், ”காவலனே! மானிடக் ...

Read More »