இலக்கியம்

படக்கவிதைப் போட்டி 268இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி அங்காடியில் அணிவகுத்திருக்கும் கண்ணைப் பறிக்கும் வளையல்களையும் தோடுகளையும் கவினோடு படமெடுத்து வந்திருக்கின்றார் திருமிகு. ஷாமினி. இப்படத்தைப் படக்கவிதைப் போட்டி 268க்குத் தெரிவுசெய்து தந்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. ஒளிப்பட வித்தகருக்கும், நயமிகு தேர்வாளருக்கும் என் கனிவான நன்றிகள்! புறவிளக்கொளியில் மின்னும் இவ் அணிகலன்கள் மாதர்க்குத் தருபவை தற்காலிக அழகே! அணையாத அறிவொளியை அகத்தே ஏற்றும் கல்வியே அவர்களுக்கு என்றும் துணைநிற்கும் நிரந்தர அழகு! படத்தில் காட்சியளிக்கும் அணிகலன்களை மையமாக வைத்து மணியான கவிதைகள் புனைந்து காத்திருக்கின்றார்கள் நம் கவிஞர்கள். அவர்களைத் தாமதமின்றி வரவேற்போம்! ...

Read More »

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 6

-மேகலா இராமமூர்த்தி கூனி என்றழைக்கப்பட்ட மந்தரை என்பவள் கேகய நாட்டு இளவரசியான கைகேயி தயரதனை மணமுடித்துக் கோசலத்துக்கு வந்தபோது பணிப்பெண்ணாக அவளுடன் வந்தவள். இந்த மந்தரை ஒருமுறை குடத்தில் நீரெடுத்துக்கொண்டு மற்றபெண்களோடு அரண்மனைக்கு வந்துகொண்டிருந்தபோது வெளியில் தன் தோழர்களோடு நின்றுகொண்டிருந்த இளம்பிள்ளையான இராமன் விளையாட்டாக ஒரு மண்ணுருண்டையை வில்லில் வைத்து இவள் முதுகில் குறிபார்த்து அடித்துவிட்டான். முதுகில் மண்ணுருண்டை விழுந்தவேகத்தில் மந்தரையின் இடுப்பிலிருந்த குடம் சரிய அதிலிருந்த நீர் சிதறியது. இதுகண்டு மற்றபெண்கள் சிரிக்க, மந்தரைக்கு அஃது அவமானமாய்ப் போய்விட்டது! ”யார் இந்த வேலையைச் ...

Read More »

அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 7 (ஏதிலர்)

ச.கண்மணி கணேசன், முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர் (ப.நி.), ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி. முன்னுரை சிறுபாத்திரங்களுள் ‘ஏதிலர்’ என்னும் பாத்திரம் தனித்தன்மை வாய்ந்தது. பிற தலைமைப்பாத்திரம், துணைப்பாத்திரம், சிறுபாத்திரம் முதலியோரை அவ்வப்போது உள்வாங்கிக் கொள்ளும்போது ஏதிலன், ஏதிலான், ஏதிலாட்டி, ஏதிலாள், ஏதிலாளன் என்று ஒருமை விகுதி பெறக்  காண்கிறோம். புறஇலக்கியத்திலும் ஏதிலர் பற்றிக் குறிப்புகள் உள. அகப் பாடல்கள் ஏதிலரைப் பற்றிப் பேசுகின்றனவே அன்றி; ஏதிலர் பேசுவது இல்லை. ஏதில் தன்மை பற்றிய விளக்கம் மூலம் ஏதிலர் யாரெனப் புரிந்துகொள்ளலாம். ஏதில் தன்மை தொடர்பேதும் ...

Read More »

சீக்கிரம் அருள்வாய் கந்தா

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  மெல்பேண், ஆஸ்திரேலியா கருவிலே கருணை வேண்டும் கல்வியில் உயர்வு வேண்டும் தெருவெலாம் அலையா வண்ணம் தினமெனைக் காக்க வேண்டும் ஒருமனம் கொண்டு உன்னை உவப்புடன் வணங்க வேண்டும் பெருமனம் கொண்டு என்னை பேணுவாய் கந்த வேளே கருணைகூர் முகங்கள் ஆறும் காத்திட வேண்டும் ஐயா வறுமையில் வாடி நாளும் வதங்கிடா திருக்க வேண்டும் தரமுடை மனத்தைப் பெற்று தரணியில் வாழ வேண்டும் சிரமதில் அகந்தை போக சீக்கிரம் அருள்வாய் கந்தா நரை திரை வந்திடாமல் நலமுடன் வாழ வேண்டும் நாளுமுன் ...

Read More »

ஆய்வுலகில் காகிதச் சுவடிகளின் முதன்மை

முனைவர்  த. ஆதித்தன் இணைப்பேராசிரியர் அரிய கையெழுத்துச் சுவடித் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் சுவடி என்னும் சொல்லினைக் கேட்டவுடன் அனைவர் மனத்திலும் எழுவது ஓலைச் சுவடிகளே. அச்சு இயந்திரத்தின் வருகைக்கு முன்னர் இன்றைய அச்சுப் புத்தகங்கள் போன்று காணப்பட்டவை பனையோலைப் புத்தகங்களே ஆகும். அவையே ஓலைச் சுவடிகள் எனப்படுகின்றன. இதனை, “காகிதமும் எழுதுகோலும்  வழக்கத்திற்கு வராத காலத்திலே ஓலை நறுக்குகளில் எழுத்தாணி கொண்டு எழுதப்பட்ட சுவடிகளே நூல்களாக இருந்து வந்தன”1 என்று மா.சு. சம்பந்தன் கூறுவதன் மூலம் அறியலாம். காகிதப் பயன்பாடு பெருகியதற்குப் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(311)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(311) பேராண்மை யென்ப தறுகணொன் றுற்றக்கா லூராண்மை மற்றத னெஃகு. – திருக்குறள் -773 (படைச்செருக்கு) புதுக் கவிதையில்... பகைவரிடம் இரக்கம் காட்டாமல் வீரத்துடன் எதிர்த்து நிற்பது பேராண்மையாகும்.. அந்தப் பகைவர்க்குத் தாழ்வொன்று வருகையில் இரக்கம் கொண்டு அவருக்கு உதவிடுதல், பேராண்மைக்குச் சிறப்பு சேர்க்கும் கூர்மையாகும்…! குறும்பாவில்... பகைவரை எதிர்த்தல் பேராண்மை, பகைவரின் தாழ்வில் இரக்கமுடன் உதவிடுதல் பேராண்மைக்குச் சிறப்புதரும் கருவி…! மரபுக் கவிதையில்... பகைவர் தம்மோ டிரங்காமல் பலத்தைக் காட்டல் பேராண்மை, பகைவர் தமக்கோர் தாழ்வுவரின் பகையை மறந்தே ...

Read More »

அருமருந்தே மாரியம்மா!

மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா பல்லவி எண்ணமெலாம் உன்னிடத்தில் எங்களது மாரியம்மா மண்ணிலே நல்லவண்ணம் வாழவைக்கும் தெய்வமம்மா                                                                                           ...

Read More »

படக்கவிதைப் போட்டி – 268

அன்பிற்கினிய நண்பர்களே! கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ஷாமினி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (26.07.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு ...

Read More »

படக்கவிதைப் போட்டி 267இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி கூரான இரும்பின்மீது ஜோராகக் காலை மடக்கி வைத்து வாழைப்பழம் உண்ணும் குரங்கினை ’க்ளோஸ்-அப்’பில் அழகாகப் படமெடுத்து வந்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து இப்படம் தெரிவுசெய்யப்பட்டுப் படக்கவிதைப் போட்டி 267க்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு என் நன்றி! வாகாக உட்கார்ந்துகொண்டு வாழைப்பழத்தை வகையாக உண்ணும் இந்தக் கவி (கவி/கபி – குரங்கு) குறித்து நம் கவிகள் என்ன கருத்துக் கூறவிரும்புகின்றார்கள் என்பதை அறிந்துவருவோம்! புறப்படுங்கள்! ***** ”பாடுபட்டு விவசாயி வளர்த்த வாழையைக் கேடுகெட்ட குரங்கே நீ திருடி உண்ணலாமா?” என்று உரிமையோடு ...

Read More »

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 5

-மேகலா இராமமூர்த்தி தேவர் தலைவனான இந்திரனுக்கு வியாழன் (பிரகஸ்பதி) குருவாக வாய்த்ததுபோல் தயரதனுக்கு வசிட்டர் வாய்த்திருந்தார். ஆசனத்தில் அமர்ந்தபடி தயரதனின் வாழ்வியல் கருத்துக்களையும், இராமனுக்கு முடிபுனைய அவன் விரும்புவதையும் அறிந்த அவர் தயரதனை நோக்கி, ”மன்னவா! உன்னுடைய குலத்தில் இதுவரை எத்தனையோ அரசர்கள் ஆட்சி செய்திருக்கின்றார்கள். அவர்கள் யாருக்கும் இராமனைப் போன்ற உயர்ந்த மகன் பிறக்கவில்லை. அத்தகு உத்தமபுத்திரனைப் பெற்ற நீ அவனுக்குச் செய்யக் கருதும் கருமம் தருமத்தின் பாலதே ஆகும். எனவே அதனைத் தயக்கமின்றிச் செய்வாய்” என்றார். உயர்ந்த தவசீலரும் அறிஞருமான வசிட்டர் ...

Read More »

அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 6 (ஏவலிளையர்)

ச.கண்மணி கணேசன், முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர் (ப.நி.), ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி. முன்னுரை ஏவல் இளையர் என்னும் குழுப்பாத்திரம் அகஇலக்கியச் சிறுபாத்திரங்களுள் ஒருமை விகுதி பெறும் தனிப்பாத்திரமாக இடம்பெறுவதில்லை. அகஇலக்கியம் மட்டுமின்றிப் புறஇலக்கியத்திலும் இப்பாத்திரம் பற்றிய குறிப்புகளைக் காண இயல்கிறது. இருவேறுபொருள் தரும் ‘இளைய-’ எனும் சொல்தொகுதி தொகைநூல்களில் இளையர் என்னும் சொல் இரண்டு பொருட் பரிமாணங்களுக்கு உரியதாகக் காணப்படுகிறது. வயதில் மூத்தவரோடு உறழ்ந்து சுட்டப்படும் ‘இளையர்’, ‘இளமையை’, ‘இளையோர்’ ஆகிய பெயர்ச்சொற்கள் உள்ளன (பெரும்.- 268; பொருநர்.- 187; சிறு.- 232; ...

Read More »

குறளின் கதிர்களாய்…(310)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(310) மனமாணா வுட்பகை தோன்றி னினமாணா ஏதம் பலவுந் தரும். – திருக்குறள் – 884 (உட்பகை) புதுக் கவிதையில்... புறத்தில் நட்புக்கொண்டதுபோல் நடித்து அகத்தில் நட்பிலா உட்பகை கொண்டோர் நட்பு அரசனுக்குக் கிடைத்தால், அவனுக்குத் தன் சுற்றம் சேரா வகைக்குக் குற்றங்கள் பலவற்றைத் தந்திடுமே…! குறும்பாவில்... நட்புடன் புறத்தே நடித்து, உட்பகை அகத்திலுளோர் நட்பு அரசனுக்குச் குற்றம்தரும் சுற்றம்சேரா வகையிலே…! மரபுக் கவிதையில்... புறத்தே நட்பது உள்ளதுபோல் பொய்யாய் நடித்தே அகத்தினிலே மறைத்த உட்பகை கொண்டோரை மன்னன் நட்பாய்க் ...

Read More »

படக்கவிதைப் போட்டி – 267

அன்பிற்கினிய நண்பர்களே! கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து  தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (19.07.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு ...

Read More »

படக்கவிதைப் போட்டி 266இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி நேரிய பார்வையும் கூரிய சிந்தனையும் கொண்டிருக்கும் இந்த முதுமகளைப் படம்பிடித்து வந்திருப்பவர் திருமிகு. நித்தி ஆனந்த். படக்கவிதைப் போட்டிக்கு இப்படத்தைத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவ்விரு நங்கையர்க்கும் என் நன்றிகள்! நரை திரை மூப்பு கண்டுவிட்டாலும் உள்ள உறுதிக்குக் குறைவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றன இவ் அம்மையாரின் விழிகள். ”…கடிது இவள் துணிவே மூதின் மகளிர் ஆதல் தகுமே” (புறம்: 279) என்று அன்றைய மறக்குடி மகளிருக்கு ஒக்கூர் மாசாத்தியார் கூறிய மொழிகள் இப்பெண்மணிக்கும் பொருந்துவனவாகவே எனக்குத் தோன்றுகின்றன. இனி கவிஞர்களின் ...

Read More »

மகராசர் காமராசர்!

பாடல் எழுதியவர் : அண்ணாகண்ணன், சென்னை இசையமைத்து, மூன்று மெட்டுகளில் பாடியவர்: ஷைலஜா, பெங்களூரு. வாசிக்கக் கல்விச் சாலை வயிற்றுக்கு நல்ல சோறு! தேசத்தின் வளத்தைக் கூட்ட திக்கெட்டும் அணைகள்! ஆலை! யோசிக்கும் நொடியில் இந்த யுகம்வெல்லும் மனித நேயர்! மாசில்லை எனப்பார் போற்றும் மகராசர் காம ராசர்! வாய்ச்சொல்லில் வீரர் அல்லர்! வகுப்புகள் ஆறே கற்றார்! பாட்டாளி அவரின் பேரில் பல்கலைக் கழகம் இன்று! வீழ்ச்சியில் கிடந்த நாட்டை மீட்பராய் வந்து காத்தார்! நேயத்தின் எளிய செல்வர் நிகரில்லாக் காம ராசர்! இந்தப் ...

Read More »