கவிதைகள்

குறளின் கதிர்களாய்…(267)

-செண்பக ஜெகதீசன் பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்ல ராகுதன் மாணார்க் கரிது. -திருக்குறள் -823 (கூடா நட்பு) புதுக் கவிதையில்… நல்ல பல நூற்களைக் கற்றுத் தேர்ந்தும், அதனால் மனம் திருந்தி நல்லவராகி நட்பாகும் நல்ல குணம் பகைவரிடம் இருப்பதில்லை…! குறும்பாவில்... பகைவர் பலநூல் கற்பினும், அதனால் மனந்திருந்தி நட்பாகும் நற்குணம் அவரிடம் வருவதில்லை…! மரபுக் கவிதையில்… நல்ல நூற்கள் பலகற்றும் நன்றாய் அவற்றின் பொருளுணர்ந்தும், பொல்லாப் பகைவர் மனந்திருந்திப் போது மெனவே பகைமறந்து நல்லோ ராகி நட்புகொளும் நல்ல குணமது வாராதே, கல்லா ...

Read More »

படக்கவிதைப் போட்டி – 225

அன்பிற்கினிய நண்பர்களே! கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? பிரேம்குமார் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் வெள்ளிக்கிழமை (27.09.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ...

Read More »

ஐயப்பன் காவியம் – 7

-இலந்தை  சு. இராமசாமி  தேவகாண்டம் அனுசூயைப் படலம் கலிவிருத்தம் நிலைபெறும் கற்பினள் உலகினில் யாரோ நலமுறத் தேடுவோம் வாமெனச் சேர்ந்தே அலைமகள் கலைமகள் மலைமகள் ஆய்ந்தார் பலருமே அனுசுயை என்றுப கர்ந்தார் 72 முத்தொழில் தேவியர் எப்படி எனவே அத்திரி மகரிஷி அற்புத மனைவி உத்தமி கற்பினில் ஒப்பிலி அவளே பத்தினிச் சிகரமென் றொப்பினர் பலரே 73 அரனையும் அரியையும் மறையவன் தனையும் விரைவுடன் நெருங்கியே வினவினர் அவர்கள் சரிசரி அதுசரி என்றனர் உடனே இருகரம் சிரசினில் வைத்தனர் தொழுதார் 74 * எண்சீர் ...

Read More »

பலவடிவில் கூட்டம் !

மகாதேவஐயர் ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரியுதொரு கூட்டம் பொய்பேசி புழுகுரைத்து நிற்குதொரு கூட்டம் வாழவிடா வழிதேடி வதைக்குதொரு கூட்டம் வையகத்தில் நிறைந்திருக்கு வகைவகையாய் கூட்டம் தாயிடத்துப் பரிவுகொளா தானுமொரு கூட்டம் தள்ளாடும் முதுமைதனைத் தவிர்க்குமொரு கூட்டம் நீதிநெறி தனையொதுக்கி நிற்குமொரு கூட்டம் நீள்புவியில் இப்படியே நிறைந்திருக்கு கூட்டம் ! கடவுளில்லை என்றுரைத்துக் கட்சிகூட்டும் கூட்டம் கடமை செய்வார் கழுத்தறுக்கக் காத்திருக்கும் கூட்டம் தனியுடமை என்றுரைத்துத் தான்பிடுங்கும் கூட்டம் சகலமுமே தெரியுமென்று சவால்விடுக்கும் கூட்டம் தத்துவத்தைச் சமயத்தைச் சாடிநிற்கும் கூட்டம் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(266)

-செண்பக ஜெகதீசன்  கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉ மையந் தரும். -திருக்குறள் -845(புல்லறிவாண்மை) புதுக் கவிதையில்… கற்றிராத நூற்களையும் கற்றனவாய்க் காட்டி, அதன்படி புல்லறிவாளர் வாழ்வது, அவர் குற்றமறக் கற்ற நூலிருப்பின் அதிலும் மற்றவர்க்கு சந்தேகம்தான் எழும்…! குறும்பாவில்… கல்லா நூற்களைக் கற்றதாய்க் காரணங்காட்டிப் புல்லறிவாளர் அவ்வாறு ஒழுகுதல், பிறர்க்கு அவர் கற்றநூலிலும் சந்தேகமே…! மரபுக் கவிதையில்… நல்ல நூற்களைக் கற்றறிந்ததாய் நடித்து நூற்கள் அவற்றினிலே சொல்லிய வழியில் ஒழுகுவதாய்ச் சொல்லி யொருவன் நடந்தாலே, எல்லோ ருக்கும் ஐயம்எழும் எடுத்துப் படித்த நூல்களிலே ...

Read More »

படக்கவிதைப் போட்டி – 224

அன்பிற்கினிய நண்பர்களே! கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ஷாமினி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் வெள்ளிக்கிழமை (20.09.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ...

Read More »

ஐயப்பன் காவியம் – 6

-இலந்தை சு. இராமசாமி மகன் வேண்டு படலம் விளம் விளம் விளம் விளம் விளம் மா மா – எழுசீர் விருத்தம் அரண்மனை எதிரிலே அமைந்தபூங் காவனம் அதனிலே அமர்ந்த வண்ணம் விரல்நுனி கடித்தெதோ துயரினில் இருந்தபோல் வீற்றிருந் தாளி ராணி அருகினில் மன்னவன் ஆதர வாகவே அவள்கரம் கையெ டுத்தான் கருநிற விழிகளில் வழிந்திடும் நீரினைக் கைகளி னால்து டைத்தான்.    53 அங்கொரு மரத்தினில் காகமொன் றாசையாய் அதன்குஞ்சுக் குணவை ஊட்டும் பொங்கெழில் காட்சியைப் பார்த்ததும் வேதனை பொங்கிட அழுது தீர்த்தாள் ”இங்கெனக் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(265)

-செண்பக ஜெகதீசன் அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய வொண்பொருள் கொள்வார் பிறர். -திருக்குறள் -1009 (நன்றியில் செல்வம்) புதுக் கவிதையில்… அடுத்தவரிடம் அன்புகாட்டுதலை விடுத்து, தன்னை வருத்தி அறம் பாராது ஒருவன் ஈட்டிய அரும்பொருளைத் தான் அனுபவிக்காமல் போய், பிறர் அபகரித்துக்கொள்ளும் நிலைதான் வரும்…! குறும்பாவில்… பிறரிடம் அன்புகாட்டாமல் தனைவருத்தி அறம்பாராது சேர்த்த செல்வமெல்லாம் அவன் அனுபவிக்காதே பிறரைச்சேரும்…! மரபுக் கவிதையில்… அன்பது பிறரிடம் காட்டாமல் அறத்தைச் சிறிதும் பாராமல் தன்னுடல் நோகத் தனைவருத்தித் தவறாய்ச் சேர்த்த செல்வமெல்லாம், தன்னால் அவற்றை அனுபவிக்கத் தக்க ...

Read More »

விழியாக விளங்குகிறாய் பாரதியே

-மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா வறுமையிலே உழன்றாலும் பெறுமதியாய்க் கவிபடைத்தாய் அறிவுறுத்தும் ஆவேசம் அதுவேயுன் கவியாச்சே துணிவுடனே கருத்துரைத்தாய் துவண்டுவிடா உளங்கொண்டாய் புவிமீது வந்ததனால் பொங்கிற்றே உணர்ச்சிவெள்ளம் ! பலமொழிகள் நீகற்றாய் பற்றுதலோ தமிழின்பால் தேமதுரத் தமிழென்று தீர்க்கமாய் நீமொழிந்தாய் காதலுடன் தமிழணைத்தாய் கற்கண்டாய்க் கவிதைதந்தாய் ஆதலால் பாரதியே அமர்ந்துவிட்டாய் உள்ளமெலாம் ! பாப்பாக்குப் பாட்டுரைத்தாய் படிப்பினைகள் அதில்நுழைத்தாய் சாப்பாடு தனைமறந்தாய் சந்தமொடு சிந்துதந்தாய் ஏய்ப்பாரை எண்ணியெண்ணி எறிகணையாய் கவிசொன்னாய் ஆர்த்தெழுந்த உன்பாட்டால் அனைவருமே விழித்தெழுந்தார் ! பாஞ்சாலி சபதத்தால் ...

Read More »

படக்கவிதைப் போட்டி – 223

அன்பிற்கினிய நண்பர்களே! கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? கீதா மதிவாணன் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் திங்கட்கிழமை (09.09.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் ...

Read More »

ஐயப்பன் காவியம் – 5

-இலந்தை சு. இராமசாமி  நாட்டுப் படலம் மா மா காய் – அறுசீர் விருத்தம் பசுமை சூழ்ந்த எழுநாடு பாண்டி யர்தம் வளநாடு ஒசிந்து செல்லும் பஃறுளியின் ஊட்டம் பெற்ற திருநாடு திசைகள் எட்டும் புகழ்பரப்பித் திகழ்ந்த நாடு, பொழில்நாடு இசைகள் பாடும் பாவாணர் ஏற்றம் பெற்ற எழில்நாடு (43) பொருநை வையை, பஃறுளியும் புகழ்சேர் குமரி பம்பைநதி பெருகிப் பொங்கும் காவிரியும் பெருமை சேர்த்த நதிநாடு திரும்பு கின்ற திசையெல்லாம் திகழும் மலைகள் நிறைநாடு கரும்பு போலத் திதிக்கின்ற கன்னல் தமிழின் மொழிநாடு ...

Read More »

நோவறு பதிகம்

-பாவலர் மா.வரதராசன் மாயிரு ஞாலத் தருள்செய சத்தி மகிழ்ந்துதந்த ஆயிரும் ஞான்ற திருக்கையைப் பெற்றவன் ஐங்கரத்தன் தீயிரும் இன்னல் தொலைந்திட வேண்டிச் சிலம்புகிறேன் வாயிருந் தென்னை மகிழ்வுறச் செய்வாய் வணங்குவனே! (1) செய்யும் வினையெலாம் என்றன் திறனென்று தேர்ந்திருந்தேன் ஐய நினதருள் என்றறி யாத அறிவிலனைப் பெய்யு மழையெனப் பேதைமை நீக்கிப் பிணைத்திடுவாய் உய்யு வழியென வந்து பணிந்தனன் உன்னடியே! (2) அடியொடு காயம் அணைந்திடு மாயினும் ஆறிவிடும் முடிவிலாத் துன்பம் முடிவரை மூழ்கிடில் மூச்சிருமோ? கடிமலர்க் கொன்றை அகலத்தன் பெற்ற கணபதிநின் அடியினில் ...

Read More »

கொண்டு செலுத்திடுவேன்

அண்ணாகண்ணன் கொண்டு செலுத்திடுவேன் அம்மா கொண்டு செலுத்திடுவேன் நின்று செலுத்திடுவேன் அம்மா நின்று செலுத்திடுவேன் நன்று செலுத்திடுவேன் அம்மா நன்று செலுத்திடுவேன் இன்று செலுத்திடுவேன் அம்மா இன்று செலுத்திடுவேன்! சென்று முடித்திடுவேன் ஐயா சென்று முடித்திடுவேன் குன்று பெயர்த்திடுவேன் ஐயா குன்று பெயர்த்திடுவேன் வென்று களித்திடுவேன் ஐயா வென்று களித்திடுவேன் ஒன்று நடத்திடுவேன் ஐயா ஒன்று நடத்திடுவேன்! உண்டு பெருங்காலம் நமக்கு உண்டு பெருங்காலம் உண்டு வருங்காலம் யார்க்கும் உண்டு வருங்காலம் கண்டு நிறைந்திருப்போம் அன்பே கண்டு நிறைந்திருப்போம் கட்டி அணைத்திருப்போம் அன்பே கட்டி ...

Read More »

வழித்துணை

-கவிஞர் விப்ரநாராயணன் திருமலை  அரைகுறை அறிவு அழிவைத் தருமே ஆழ்ந்த புலமை நிறைகுட மாமே நிறைந்த மனமே நிம்மதி தருமே நேர்மை நாணயம் உறவின் உயிரே திருமறை கற்றல் தெளிவு தருமே தருமம் வாழ்வில் உயர்வைத் தருமே பிறருக் குதவுதல் பிறப்பின் பயனே பரமன் நாமமே வழித்துணை யாமே அலைகள் அரவம் கடலின் அழகு ஆனந்த மனமே பிறப்பின் அழகு கலைகள் யாவும் இயற்கை யழகு கவிதை நயமே காப்பிய அழகு உலையில் அரிசி துடிப்ப தழகு உதய சூரியன் விசும்பி னழகு மலைகள் ...

Read More »

படக்கவிதைப் போட்டி – 222

அன்பிற்கினிய நண்பர்களே! கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் திங்கட்கிழமை (02.09.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் ...

Read More »