கவிதைகள்

உன்னைத்தான் கேட்க வேண்டும்

புவன் கணேஷ் அரை நிமிடத்திற்கு ஒரு முறை ஆயிரம் வாட் மின்னலாய், உன் முகம் தோன்றி மறைகின்றது என் மனத்தில். கொல்லும் குளிரிலும் கொட்டும் பனியிலும் உன்னைப் பற்றிய நினைவுகள் என்னைக் கதகதப்புடன் வைக்கின்றன! தூய காதலை உன் மீது கொண்டிருந்தும் உன்னை நான் இழந்தது எதைக் காட்டுகிறது? உருளும் உலகத்தில் உறவுகள் நிலையல்ல என்ற தத்துவத்தினையா? – புரியவில்லை! உன்னைத்தான் கேட்க வேண்டும்! •••••  •••••  •••••  •••••  •••••

Read More »

மௌனம்

நாகை வை.ராமஸ்வாமி மஹா பெரியவாளின் மஹோன்னத தியானம். யோக நிலை வரவேற்பறையின் ஆனந்த ராகம். தன்னுள்ளே தன்னைத் தேடும் தவறா ஞானயுக்தி. ஒப்புதல் மறுத்தல் தவிர்த்திட அருமைச் சாதனம். அளவோடு கடைப்பிடித்தால் ஆரோக்கிய வழிமுறை.

Read More »

இருப்பும் இழப்பும்

குமரி எஸ்.நீலகண்டன் இழப்பை இருப்பும் இருப்பை இழப்பும் துரத்திக்கொண்டே இருக்கின்றன. சிலர் இருப்பது இழப்பை ஈடுகட்டவே.. பல இழப்புகளால் உருவானவையே சில இருப்புகள். இழந்தவை எல்லாம் எங்கோ இருந்துகொண்டிருக்கின்றன. இருப்பவையெல்லாம் யாரோ இழந்தவையாக இருக்கலாம். இருப்பும் இழப்பும் சதா இடம் பெயர்ந்துகொண்டே இருக்கின்றன. ஒளி இருட்டை இழப்பதும் இருட்டு ஒளியை இழப்பதும் எதார்த்தம். இழந்த ஒளியால் வீட்டை நிரப்பலாம் வாசல் திறந்து….

Read More »

தனிமை ஒரு வரமே

கவிதாயினி மதுமிதாவின் ‘தனிமை ஒரு வரமே’ என்ற பாடலுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார், கனடாவைச் சேர்ந்த ஆர்.எஸ். மணி. மிக உருக்கமான அந்த இனிய பாடலை இங்கே கேட்டு மகிழுங்கள். இந்தப் பாடலின் வரி வடிவம் இங்கே: தனிமை ஒரு வரமே தனிமை ஒரு வரமே – மனமே தனிமை ஒரு வரமே இனிமை அது தருமே – உனக்கு இனிமை அது தருமே தன்னையே அறிந்து கொள்ள தன்னிலை உணர்ந்து கொள்ள தண்ணென்ற அமைதியும் சேர தானாய் அமையும் அந்த தனிமை       (தனிமை ) ...

Read More »

பால் நிலா

– ராமலக்ஷ்மி மொட்டு அது தானாகக் கட்டவிழும் முன்னே பட்டுடுத்தி அலங்கரித்துப் பாதந்தனைப் பற்றியெடுத்து அம்மிமேல் வைத்தழுத்தி அருந்ததியைப் பார்க்கவைத்து கட்டிவைக்கிறார் அவசரமாய் கடமையை முடித்திட..! ஈரைந்து திங்களிலே ஆடுகிறது தொட்டில். தொலைத்திட்ட அவள் பருவம்போலத் துலங்குகின்ற பால் நிலவை- அழைக்கின்றாள் தேன்குரலில் அழகாகத் தன் தாலாட்டில் குழந்தைக்கு அமுதூட்டத் துள்ளியோடி வருமாறு..!

Read More »

பவனி

ராமலக்ஷ்மி பளபளக்கும் பட்டுடையும் மினுமினுக்கும் நகைநட்டும் சரிகை இழையோடும் தலைப்பாகையுமாய்.. அலங்கரித்த வெண்புரவிகளில் கம்பீரமாய் பெருமிதமாய் அரசத்தம்பதியர் வீற்றுவர- கண்நூறுதான் கண்டுமகிழ.. ஊர்உலா முடிந்து உடைமாற்றி நகை களைந்து- நின்றார்கள் கூலிக்கு இன்றாவது கிடைக்குமாவென.. கனைக்காத குதிரைக்குக் கால்களாய் இருந்த களைப்பு மிகுதியில் ராஜாவும்.. செழிக்காத கலைக்குச் சேவகியாய்- மெய் வருத்திப் பொய்க் களிப்புடன் பவனிவந்த ராணியும்!

Read More »

நதி

முனைவர் ச.சந்திரா, கிருட்டிணன்கோவில் நாகரீகத்திற்கு தாயகமாம் நதி நங்கையே! நீ அருவித்தாய் மேல் சினம் கொண்டாய்! பாறை க‌ட‌ந்தாய்! பாதை மாறினாய்! ம‌ண்ணைத் தேடிவ‌ந்து முத்த‌மிட்டு ம‌ண‌வாள‌னாக்கி மாலையும் சூடினாய்! ம‌ண்ணோடு ஊட‌ல்புரிந்த‌ நீ

Read More »

சீனப்பெண் கவிகள் வரிசையில் –

(காலம்: 9ஆம் நூற்றாண்டு) தமிழில்: ஜெயந்தி சங்கர் 1. மூங்கில் நிழலில் ஒரு குளம் – ச்சாங் வென்ச்சி யோசிக்கிறான் என் காதலன் குளத்தருகில், கிளைகள் தொங்கும் நீரருகில். மரகத சிற்றலைகளோ வட்ட வரிகளாக தினமும் தினமும் முடிவின்றி.

Read More »