சிறுகதைகள்

கண்ணையாவின் கை (சிறுகதை)

பாஸ்கர் சேஷாத்ரி கண்ணையா பற்றி நிறைய பேருக்குத் தெரிந்து இருக்காது. அந்தக் காலத்து ஆசாமி. நான் படித்த பீ எஸ் ஹை ஸ்கூல் பெல் மேன். எழுபதுகளில் நான் படித்த காலத்தில் அவர் தான் என் நிஜ ஹீரோ. வாத்தியார்கள் எல்லாம் அப்புறம் தான். அவருக்கு அப்போதே சுமார் அம்பது வயதுக்கு மேல். நீல நிற தொளதொளவென்று அரைக்கை சட்டை. மடித்துக் கட்டிய வேட்டி. சவரம் செய்யாத முகம். வெள்ளை வெளேர் தலைமுடி. முகத்தில் எப்போதும் குங்குமப் பொட்டு. இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டுமானால் ...

Read More »

சிவராமன் (சிறுகதை)

பாஸ்கர் சேஷாத்ரி சில விஷயங்களைப் பேச வேண்டும் என்றான். எங்கே போலாம் எனக் கேட்டேன் நாளைக்கு மீட் பண்ணலாம் என்றான் வேணாம். நான் முட்டி வலி டாக்டரைப் பார்க்கணும். இன்னிக்கே வேணும்னா பார்க்கலாம் என்றேன் . கொஞ்சம் யோசித்து, சரி ஆறு மணிக்கு பழைய வுட்லண்ட்ஸ் வா என்றான். முன்னை விட ரொம்ப மெலிந்து இருந்தான் அவன் தோள் பையைச் சரி செய்துகொண்டே நடந்து வந்தான். என்னாச்சு உன் ஸ்கூட்டர். கை காட்டி காண்பித்தான். சீக்கிரம் விக்கணும். பழையபடி ஒரு டிவிஎஸ் பிப்டி செகண்ட் ...

Read More »

கொல்லாமை (சிறுகதை)

வசுராஜ் இன்று பல்வலி அதிகமாக இருந்ததால் பல் மருத்துவரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருந்தேன். கொரானா பயத்தால் வெளியே செல்ல பயந்து ஒத்திப் போட்டதால் பல்வலி அதிகமாகி இன்றுபோய்த் தான் ஆக வேண்டும் என்ற நிலையில் காலை 11 மணிக்கு கிளினிக் வர சொல்லி இருந்தார்கள். என் கணவர்  மாஸ்க் போட்டுக்கொண்டு தயாராக நின்றார். நான் எளிமையான சமையல் செய்து மேசை மேல் வைத்து விட்டுக் கைப்பையுடன் கிளம்பினேன். வீட்டைப் பூட்டிக் கொண்டு வருவதற்குள் என் கணவர் காரைச் சரிபார்க்கக் கீழே போய்விட்டார். ரொம்ப நாளாக எடுக்காததால் பெட்ரோல் ...

Read More »

வலி (சிறுகதை)

பாஸ்கர் சேஷாத்ரி எல்லோருக்கும் வணக்கம் என்றார் டாக்டர் . அவர் இன்றுடன் இந்த மருத்துவமனையில் சேர்ந்து பத்து வருடங்கள் முடியப் போகிறது . உங்கள் அனைவருக்கும் நன்றி என ஆரம்பித்தார் . நாம் எல்லோரும் சின்ன அல்லது பெரிய தப்புகளைச் செய்திருப்போம் . நான் உள்பட. இந்தக் கூட்டத்தில் எல்லோரும் அதனை உண்மையாகச் சொன்னால் நான் மகிழ்வேன். எந்தத் தவறுக்கும் தண்டனை எந்த வகையிலும் இல்லை. இந்தக் கூட்டம் குற்ற உணர்ச்சியை எடுக்க மட்டுமின்றி, இனி அந்தத் தவறை செய்யாமல் இருக்க என்றார் யாரும் ...

Read More »

வழிவாணிபன் மியான் ஹுசைனின் ஜூஹூ அனுபவம்

மூல ஆசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன் மொழி: மலையாளம் தமிழில்: முனைவர் நா.தீபாசரவணன் உதவிப் பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை மும்பையின் பரபரப்பான நகரத்தில் வழிவாணிபக்காரனான மியான் ஹுசைன், வெயில் காலமானதால் தனது வியாபாரத்தை மாலையுடன் நிறுத்திவிட்டு தனது இருப்பிடமான சிஞ்ச் போக்கலிக்குத் திரும்பினார். வழக்கமாக இரவு பத்து மணிக்குத் தான் வீட்டுக்குத் திரும்புவார். குழந்தைகள் அதற்குள் தூங்கி இருப்பார்கள். மியான் ஹுசைன் உறங்குவதற்குள் நடுநிசி ஆகிவிடும். குளித்து முடித்து வருகின்ற அவருக்கு உணவுப் பரிமாறுவதோடு நிலோஃபரின் வேலை முடிந்தது. அவள் ...

Read More »

நடை (சிறுகதை)

வசுராஜ் மொட்டை மாடியில் நடக்க ஆரம்பித்தேன். மாலை வானம் எஸ்.பி.பி. அவர்களை நினைவுபடுத்தும் “வானம் எனக்கொரு போதி மரம், நாளும் எனக்கொரு சேதி தரும்” தந்து கொண்டு தானிருக்கு. என்ன நிறங்கள்! இந்த நிறங்களுக்கு இறைவன் எதைக் கொண்டு வண்ணம் சேர்க்கிறான்? எந்தத் தூரிகையால் தீட்டுகிறான்? அட எனக்கே கவிதை வரும் போல் இருந்தது. தலைக்குப் பக்கத்தில் விமானம் தரையிறங்கத் தாழ்ந்து பறந்தது. (விமான நிலையம் வெகு அருகே) எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத காட்சி. விமானம் தரையிறங்குவது ஒரு ராட்சசக் கழுகு மிக ...

Read More »

மரங்கள் உருவாக்கினது யார்? (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

மூலநூலாசிரியர்: சி. வி. பாலகிருஷ்ணன் மொழி :மலையாளம் தமிழில்: முனைவர் நா. தீபாசரவணன் உதவிப்பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணாமகளிர்கலைஅறிவியல்கல்லூரி, கோவை. என்னுடைய மகன் பச்சுவுக்கும், எங்களுடைய வயல்தோப்பில் உள்ள வீட்டிற்கு விருந்து வந்த குர்யாச்சனின் மகன் ரோபினுக்கும் இடையே ஒரு சின்ன விவாதம். மரங்களை உருவாக்கினது யார்? அதுதான் விவாதப் பொருள். அவர்கள் கொஞ்ச நேரமாக மரங்களுக்கிடையில்தான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நானும்  குர்யாச்சனும் ஆளில்லாத வயல் வெளியில் உள்ள கூரையின் கீழிருந்து சிறிது மது அருந்திக் கொண்டிருந்தோம். குர்யாச்சன் பள்ளிக்கூடம் படிக்கும் போதிலிருந்தே எனது நண்பன். ...

Read More »

வேட்டி போர்த்திய உடல் (சிறுகதை)

பாஸ்கர் சேஷாத்ரி “சார், அந்தப் பக்கம் போகாதீங்க, இட்ஸ் ஹாரிபல்” “ஏன் என்னாச்சு?” “எவனோ ஒருத்தன் குடிச்சிட்டு துணி மணி இல்லாம இருக்கான். எதிர்த்த பக்கம் போங்க.” நான் நகர்ந்து அந்தப் பக்கம் சென்றாலும் என் கண்கள் அவன் இருந்த திசை நோக்கி இழுக்க அவனை நோக்கிச் சென்றேன் . மெலிந்த தேகம். எலும்பெல்லாம் தெரியும் ஒடிசலனா உடல். இந்த நிலையிலும் போதை என்ற விஷயம் எவ்வளவு பெரிய வேதனை. மனம் கலங்கியது. நேர அங்கே போய் அவனைப் பார்த்தேன். கிட்டதட்ட முழு நிர்வாணம். ...

Read More »

என்னை நான் தேடித் தேடி.. (சிறுகதை)

திவாகர் ஓ.. கொரோனா வந்ததே உங்களுக்குத் தெரியாது என்பதை மறந்துவிட்டு நான் அதையே பேசிண்டிருக்கேன். ஆறு மாசம் ஓடிப்போயிடுச்சு. சரி, விடுங்க..”உங்களை ஆறு மாசம் முன்னாடி ஜாகேஷ்வர்ல பார்த்தப்போ என்னவோ தோணிச்சு, மறுபடியும் இங்கே எங்கேயோ உங்களைப் பார்ப்பேன்னு.. உங்களுக்கும் அப்படிப் பட்டுதா?” நான் அவளைப் பார்த்துச் சிரித்தேன்.. கொஞ்சும் மழலைத் தமிழில் இவள் பேசுவது எத்தனை அழகாகக் கேட்கிறது. “இல்லைம்மா! அப்ப நீ பார்க்கறச்சே நான் இருந்த மனநிலை வேற. இப்போ உன்னை அடையாளம் கண்டுபிடிச்சுப் பேசறதே எனக்குப் பெரிசு. ஆனா அடுத்த ...

Read More »

தோல் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன் மொழி : மலையாளம் தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன் உதவிப்பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை. எப்போதும் போலவே சாம்பல் நிற சூட்கேஸை எடுத்துக்கொண்டு காரிலிருந்து இறங்கி அவசரமாக படுக்கையறைக்குச் சென்று மிகவும் இரகசியமாகப் பெட்டியைத் திறந்து அதிலிருந்த பணத்தை சுவரில் ஒரு இரகசியமான இடத்தில் வைத்த பிறகே விஜய ராகவன் உடைமாற்றினான். இனி அடுத்தது ஒரு குளியல். வாட்டர் ஹீட்டர் ஆன்செய்து குளியலறையின் கண்ணாடியில் தெளிந்த பிம்பத்தைப் பார்த்து திருப்தியுடன் நிற்கும்போது சே………..’ இடது முதுகில் ...

Read More »

வொர்க் ப்ரம் ஹோம்

பாஸ்கர் சேஷாத்ரி “மே ஐ கம் இன்?” “வாங்க சம்பத், உட்காருங்க” “இட்ஸ் ஒகே. நான் நிக்கறேன் சார்: “பீல் அட் ஹோம்.” “நீங்க சொல்லும்போது, என் காதுல பீ அட் ஹோம்னு கேக்குது சார்” “புரியறது சம்பத்.” “சார், பதினெட்டு வருஷ செர்வீஸ் சார்” “பாக்காத செக்போஸ்ட் இல்லை. எவ்வளவு கேஸ்.” “…” “எவ்வளவு வக்காலத்து, எவ்வளவு பஞ்சாயத்து.” “…” “எதுக்கும் இப்ப அர்த்தம் இல்லை. யு ஹாவ் சென்ட் மீ அவுட்.” “என் கையில எதுவும் இல்லை சம்பத். அது நிர்வாகம் ...

Read More »

கோபால் பல்பொடி

பாஸ்கர் சேஷாத்ரி “என்னம்மா கேஸ் இது?” “சின்ன பையன் சார். பல்பொடி எடுத்து தின்ன மேலே ஏறினவன் கீழே விழுந்துட்டான். பக்கத்துல்ல கை பம்ப் ஆணி வேற . கன்னத்தில குத்தி ஒரே ரத்தம்.” “எப்படா விழுந்தே?” “கார்த்தாலே சார்” “ஸ்கூலுக்கு போலயா?” “ஹால்ப் யியர்லி சார்.” “டாக்டர்னு சொல்லு” – சிஸ்டர் “ஏன்டா பத்து மணிக்கா பல் தேய்ப்பே?: “டாக்டர். அவன் கோபால் பல்பொடி திங்க மேல ஏறினான்” “என்ன க்ரூப் சிஸ்டர்?” “ஏ பாசிடிவ்” “பேரு என்ன? கோபாலா?” சிரிக்க முடியவில்லை. ...

Read More »

பீ. எஸ். ராமச்சந்திரன் சார்

பாஸ்கர் சேஷாத்ரி இது நடந்து சுமார் நாற்பது வருஷங்கள் இருக்கும். அவர் பீ. எஸ். ராமசந்திர அய்யர். எனக்கு பள்ளியில் ஆங்கில வாத்யார். அச்சு போல கையெழுத்து. நடுத்தரமான உசரம். வெள்ளை கதர் ஜிப்பா. வேட்டி– அதனை துவைத்தால் காய்வதற்கே ரெண்டு நாளாகும். கொஞ்ச நாள் தாச்சி அருணசாலம் தெருவில் இருந்தார். ரொட்டிக்காரன் தெரு என்றால் பழைய மயிலாப்பூர் வாசிகளுக்கு தெரியும். சமயத்தில் வகுப்புக்கு பிரம்பு குச்சி கொண்டு வருவார். அவ்வப்போது மாறும் என்றால் எத்தனை கையை பதம் பார்த்திருக்கும். அவரை பார்த்தால் கொஞ்சம் ...

Read More »

வனப்பிரதேசம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன் மொழி : மலையாளம் தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன் உதவிப்பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை. மாலை வேளை டௌனில் உள்ள மிகவும் நல்ல பேக்கரியிலிருந்து தனியாக செய்யச்சொல்லிச் தயாரிக்கப்பட்ட பெரிய கேக் நாலு மெழுகுவர்த்திகளுடன் மேசை மேல் இருந்தது. மின்னுகின்ற ரிப்பன்களும், பல வண்ணங்களிலும் வடிவங்களிலுமுள்ள பலூன்களும் ஆங்காங்கு தொங்கவிடப்பட்டிருந்தது. நாங்க எங்க பொண்ணோட பிறந்த நாளக்கொண்டாடறோம். விருந்தினர் யாரையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் முன்கதவு சாத்தவில்லை. அறையின் பலூன்களையும், ரிப்பன்களையும் அசைத்துக்கொண்டு  இளம்காற்று மட்டும் ...

Read More »

கருப்பு வெள்ளை (சிறுகதை)

பாஸ்கர் சேஷாத்ரி கிட்டத்தட்ட முப்பது வருஷங்களுக்கு பின்னர் அந்தப் புகைப்பட நிலையத்திற்குள் நுழைந்தேன். அன்று இருந்த அதே வாசனை. உள்ளே பெரியவரின் படம், கருப்பு வெள்ளையில். பார்த்துக்கொண்டே நின்ற போது அவர் மகன் “வாங்கோ” என்றார். பெரியவரே உள்ளே சென்று சின்னவராகத் திரும்பியது போல ஒரு தோற்றம். “ரொம்ப நாள் கழிச்சுப் பார்க்கிறோம். இந்த ஊர்தானா?” எனக் கேட்டார் “ஆமாம்” என்றேன். “அன்னிக்கு பார்த்த மாதிரியே இருக்கு ஸ்டுடியோ” என்றேன். “இது எங்க சொத்து. அவர் விட்டுச் சென்ற எதிலும் நாங்க கை வைக்கவில்லை. ...

Read More »