Posts Tagged ‘இந்த வார வல்லமையாளர்’

Page 1 of 912345...Last »

இந்த வார வல்லமையாளர் – 301: விமானப்படை வீரர் அபிநந்தன்

இந்த வார வல்லமையாளர் – 301: விமானப்படை வீரர் அபிநந்தன்
இந்த வார வல்லமையாளர் என விமானப்படை வீரர் அபிநந்தனை அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது. செய்யாறு அருகே உள்ள திருப்பனமூர் என்னும் கிராமத்தைப் பூர்விக ஊராகக் கொண்ட சிம்மக்குட்டி வர்த்தமானன் என்னும் விமானப்படை அதிகாரியின் மகன் திரு. அபிநந்தன். பாகிஸ்தான் படையினரால் சுடப்பட்டு, பாகிஸ்தான் ஆளும் காஷ்மீர் பகுதியில் பிடிபட்ட அபிநந்தன், திரும்பவும் இந்தியா வந்துள்ளார். அவரை வரவேற்பதில் பெருமை கொள்கிறோம். இவர் நாடு திரும்பியதால் இந்தியா - பாகிஸ்தான் போரும் அதனால் ஏற்படும் அழிவுகளும் தடுக்கப்பட்டுள்ளன. ... Full story

இந்த வார வல்லமையாளர் (299) – இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான்

இந்த வார வல்லமையாளர் (299) - இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான்
ஆஸ்கார் விருதுகளைப் பத்து ஆண்டு முன்னர் பெற்ற இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் அவர்களை இவ்வார வல்லமையாளர் என அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது. கணினி தொழில்நுட்பத்தை சினிமா இசையில் புகுத்தியவர். மேற்கத்திய சங்கீதத்தின் வளர்ச்சியை உள்வாங்கி இந்திய திரையிசையாக தமிழ், ஹிந்தி மொழிகளில் தருவதில் மிக வல்லவர் ரகுமான். 'இளையராஜா 75' என்ற பல்லாயிரம் பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தன் குருவை வாழ்த்தி 'கீபோர்ட்' வாசித்து புகழ்மிக்க புன்னகைமன்னன் படப்பாடலை மீண்டும் இசைத்தார். மும்பை, ஹாலிவுட் இசையமைப்புகளில் நீண்ட காலம் செலவிட்ட இரகுமான் இப்போது சென்னையில் நேரத்தைச் செலவிடுகிறார். ராஜீவ் மேனன் ... Full story

இந்த வார வல்லமையாளர் (298) – ஜார்ஜ் பெர்னாண்டஸ்

இந்த வார வல்லமையாளர் (298) - ஜார்ஜ் பெர்னாண்டஸ்
  ஜார்ஜ் பெர்னாண்டஸ் (George Fernandes (ஜூன் 3, 1930 - ஜனவரி 29, 2019), ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரும் இந்தியாவின் முன்னாள் அமைச்சரும் ஆவார். அவரை இவ்வார வல்லமையாளர் என அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது. ஜார்ஜ் பெர்னாண்டஸ், 1967 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற நான்காவது மக்களவைத் தேர்தலில் முதன் முறையாகத் தேர்வானார். அதன் பிறகு, 1977, 1980, 1989, 1991, 1996, 1998, 1999, 2004 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் வென்று மொத்தம் ... Full story

இந்த வார வல்லமையாளர் (297) – ப்ராஞ்சல் கச்சோலியா

இந்த வார வல்லமையாளர் (297) - ப்ராஞ்சல் கச்சோலியா
-விவேக்பாரதி இல்லங்கள் என்பன அன்பின் ஆதாரங்கள். நமக்கு நாமே சேர்த்துக் கொள்ளும் வரங்கள். “எலிவளை ஆனாலும் தனிவலை வேண்டும்” என்று பழமொழி சொல்கிறது அல்லவா! அத்தகைய சிறப்பினை நமது சமூகத்தில் எப்போதும் இடம்பிடித்து இருப்பன வீடுகள் தாம். சின்னச் சின்ன வீடுகளில் தொடங்கி பெரிய பங்களாக்களும், அரண்மனைகளும், அடுக்கடுக்காய் பல மாடிகளைக் கொண்ட அடுக்ககங்களும் சூழ்ந்த நாடு நம் நாடு. இத்தகைய நவீன இல்லங்களை சமூகத்தினர் தற்போது அலங்காரப் படுத்துவதில் காட்டும் ... Full story

இந்த வார வல்லமையாளர் (294) – டாக்டர் சுதா சேஷய்யன்

இந்த வார வல்லமையாளர் (294) - டாக்டர் சுதா சேஷய்யன்
தமிழில் ஆர்வம் கொண்டு செயல்பட்டு அதன் மேம்பாட்டிற்கும் தமிழ் மக்களின் நல்வாழ்விற்கும் உழைக்கும் அறிஞர்களும் சான்றோர்களும் அதிக பட்சம் பிற துறைகளிலும் சாதித்தவர்களாக இருக்கிறார்கள். இந்த வார வல்லமையாளரும் அப்படிப் பட்டவர் தான். “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்” என்பார் பாரதியார். அப்படி உலகமெங்கும் வியக்கும் பல மருத்துவக் கருத்துகளைத் தமிழ்மொழியிலும் தந்து, தமிழின் மீதும் ஆன்மீகச் சிந்தனைகளின் மீதும் தீராத காதலாகி, ... Full story

இந்த வார வல்லமையாளர் (293): சுகந்தி நாடார்

இந்த வார வல்லமையாளர் (293): சுகந்தி நாடார்
முத்தமிழ் என்றழைக்கப்பட்ட நம் தமிழ்மொழி இப்போது நாற்றமிழாக அதனுடன் “கணினித் தமிழை”யும் இணைத்துக் கொண்டுள்ளது. இணையம் ஒரு பக்கம் உயர்ந்து கொண்டே இருக்கையில் அதன் மூலமாகவும் தமிழை இளைய, இணைய தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது என்பது தமிழ் ஆர்வலர்களது இடையறாத பணியாக இன்றளவில் இயங்கி வருகிறது. இப்படிப் பட்ட பொழுதில் முழுக்க முழுக்க இணைய தலைமுறைக்கு இனிய தமிழைக் கொண்டு சேர்க்க வேண்டியே உழைக்கும் ஒரு குழு இருக்கின்றது என்பதும், அவர்கள் எண்ணற்ற எளிமையான ... Full story

இந்த வார வல்லமையாளர் (280)

இந்த வார வல்லமையாளர் (280)
இந்த வார வல்லமையாளராக கரிசல் மண்ணின் புதல்வர் கி. ராஜநாராயணன் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. அரிய படைப்புகளைப் படைத்து இளைய தலைமுறைக்கு வழிகாட்டியுள்ளார். தம் ஊர் இடைசெவல், அங்கே பிறந்த எழுத்தாளர் கு. அழகிரிசாமியுடன் சேர்ந்து திருநெல்வேலியில் ‘வட்டத்தொட்டி’யில் இணைந்து தம் கலைரசனைகளை வளர்த்துக் கொண்டவர். சங்கீதத்தை, நாதஸ்வரம் போன்ற கருவிகளை வாசிக்கும் இசைவாணரை வர்ணிப்பதில் கி.ரா. அவர்களுக்கு இணை அவரே தான். சிறுகதைகள் ... Full story

இந்த வார வல்லமையாளர் (274)

இந்த வார வல்லமையாளர் (274)
இந்த வார வல்லமையாளராகக் கலைஞர் மு. கருணாநிதி (1924-2018) அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. எளிய இசை வேளாளர் குடும்பத்தில், திருக்குவளை என்னும் சிற்றூரில் பிறந்த கலைஞர் மு.க. தமிழக அரசியலை 60 ஆண்டுகளாக வழிநடத்திய மாபெரும் சக்திகளில் ஒருவராக இருந்தார். எப்பொழுதும் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவராகவும், வன்முறைப் பாதையைத் தூண்டும் அரசியலைக் கையில் எடுக்காதவர் ஆகவும் அண்ணா வழியில் திராவிட இயக்கத்தை அமைத்தார். சமூக நீதியை அனைவர்க்கும் பரப்பிய கருணாநிதி, மத்திய அரசுக்கு நிகரான சம்பளம் என்று மாநில அரசில் பணிபுரிவோருக்கும் செய்தார். பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் வருமானத்தை வெகுவாகக் கூட்டினார், ரிக்‌ஷா ... Full story

இந்த வார வல்லமையாளர் (272)

நா. கணேசன் இந்த வார வல்லமையாளராகத்  திரு. கோ. பாலச்சந்திரன், இ.ஆ.ப.  அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. டெக்ஸாஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் பெட்னா திருவிழா கோலாகலமாக நிகழ்ந்தது. பல முக்கிய பிரமுகர்கள் தமிழ்நாட்டில் இருந்துவந்து கலந்துகொண்டனர். என்றுமில்லா வகையில் 5000 பேர்கள் பங்கேற்பு. இந்திய வரலாற்றில் தமிழின் ஆழமான பங்கு வியத்தற்குரியது. இந்தியப் பல்கலைகளில் மட்டுமன்றி மேலை உலகத்திலும், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலும் உயராய்வுகள் இத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அதனை ஊக்குவிக்குமுகமாக, பேராசிரியர் பதவிகள் நல்ல பல்கலைகளில் ஏற்பட்டுவருகின்றன. ... Full story

இந்த வார வல்லமையாளர் (271)

இந்த வார வல்லமையாளர் (271)
நா. கணேசன்   இந்த வார வல்லமையாளராக 'சிவசிவா' வி. சுப்பிரமணியன் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. ’தமிழும், சைவமும் நமதிரு கண்கள்’ என்றார்  யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ ஆறுமுக நாவலர். விவிலியத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் வாழ்வின் முதல் பாகத்தில் ஐரோப்பியரிடம் பணியாற்றிய பின்னர், உரைநடை எழுதுவதற்கான பயிற்சியைப் பெற்று, சைவ சமயத்தினையும், தமிழ் இலக்கண நூல்களையும் நல்ல உரைநடையில் நாவலர் பெருமான் தமிழுக்குத் தந்தார். நல்ல அச்சகங்களும், பள்ளிகளும் அமைத்தார். இலங்கைத் தீவில் நாவலரின் ... Full story

ஒன்பதாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

ஒன்பதாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்
அண்ணாகண்ணன் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பு, 2010 மே 16 அன்று செல்வ முரளி உதவியுடன்  வல்லமையைத் தொடங்கினோம். பேரா.இ.அண்ணாமலை உடனான இ-நேர்காணலே முதல் இடுகை. அந்தப் புள்ளியிலிருந்து சிற்றடிகளை எடுத்து வைத்து, இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். இப்போது 2018 மே 16 அன்று ஒன்பதாம் ஆண்டில் வல்லமை நுழைந்துள்ளது. இந்த எட்டு ஆண்டுகளில் வல்லமை, 14,276 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 12,551 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் சுமார் 2 ஆயிரம் ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் ... Full story

இந்த வார வல்லமையாளர்! (236)

இந்த வார வல்லமையாளர்! (236)
செல்வன் இவ்வார வல்லமையாளராக திரைப்பட நடிகர் அல்வா வாசு எனப்படும் வாசுதேவன் அவர்களை தேர்வு செய்கிறோம். 1970களில் மதுரையைச் சேர்ந்த வாசுதேவன் எனும் இளைஞர் சும்மா சென்னையை சுற்றிபார்க்கலாம் என சொல்லி வந்து சேர்கிறார். அவரது உறவினர் திரைத்துறையில் இருந்ததால் வந்து சேர்ந்த சில மணிநேரத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு கூட்டி சென்றுவிட்டார். அதன்பின் எடிட்டிங் பயிற்சி எடுத்து பெரிய இயக்குனர் ஆகும் கனவில் இயக்குனர் மணிவண்ணனின் உதவி இயக்குனராக பணியில் சேர்கிறார் அல்வா வாசு. இவருடன் மணிவண்ணனின் உதவி ... Full story

இந்த வார வல்லமையாளர்! (230)

இந்த வார வல்லமையாளர்! (230)
செல்வன் இவ்வார வல்லமையாளர் - சஹா நாதன் சஹா நாதன் அமெரிக்காவில் உள்ள சியாட்டில் மாநகரில் வசிக்கும் புலம் பெயர் தமிழர். ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். விண் டிவி, தூர்தர்ஷன், மெரினா ரேடியோ, தமிழ்குஷி டாட்காம் ரேடியோ ஆகியவற்றில் அறிவிப்பாளராக பணியாற்றியுள்ளார். இவரது விருப்பத்துறைகள் ஆன்மிகம் மற்றும் சுயமுன்னேற்றம் ஆகியவை ஆகும். ரேடியோவில் "இன்று முதல் சக்ஸஸ்" மற்றும் "உன்னை அறிந்தால்" போன்ற சுயமுன்னேற்ற ஒலிபரப்பு தொடர்களை வழங்கி வந்தார். இந்த சூழலில் சென்னையில் "பிரைவேட் ... Full story

இந்தவார வல்லமையாளர் விருது! (221)

இந்தவார வல்லமையாளர் விருது! (221)
செல்வன் இவ்வார வல்லமையாளர்: இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி (மன்னர் அமரேந்திர பாகுபலி கதாபாத்திரத்தை உருவாக்கியதற்கு) இந்திய திரையுலக வரலாற்றில் முதன்முறையாக 1000 கோடி ரூபாய் வசூலை இவ்வாரம் கடந்து சாதனை படைத்துள்ளது பாகுபலி: 2 திரைப்படம். இந்திய திரையுலக வரலாற்றின் மைல்கல் ஆன படங்கள் என ஷோலே, மதர் இந்தியா போன்ற பாலிவுட் படங்களே இருந்து வந்த நிலையில் அப்படங்கள் படைத்த வரலாற்றுசாதனையை ... Full story

இந்த வார வல்லமையாளர்

செ. இரா.செல்வக்குமார் இந்த வாரத்தின் வல்லமையாளர் அருமையான நற்பணிகள் ஆற்றிவரும் ஓர் இளம் பெண். மிகவும் பயனுடைய கணினி மொழிகள், கணினி நிரல்நுட்பங்கள் பற்றிய ஏழு (7) மிக அருமையான, மின்னூல்களைத் தமிழில் எழுதியுள்ளார் திருவாட்டி நித்தியா துரைசாமி ("நித்யா துரைசாமி") அவர்கள் இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், இந்நூல்கள் அனைத்தையும் இலவசமாக அனைவரும் தரவிறக்கிப் பயன்கொள்ளும்படியாகக் "கிரியேட்டிவ் காமன்சு" (Creative Commons) என்னும் உரிமத்தின் கீழ் வழங்கியிருக்கின்றார். இந்நூல்களை யாரும் ... Full story
Page 1 of 912345...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.