இலக்கியம்

ஏறன் சிவா துளிப்பாக்கள்

ஏறன் சிவா வீசப்பட்ட விதைகள் முளைத்து வந்தது நம்பிக்கை!                **** துள்ளியோடிய அணில் ஏறி அமர்ந்துகொண்டது மனத்தில்!                 **** சோற்றுக்கே வழியில்லை வீடு கட்டுகிறான் சிலம்பப் பயிற்சி!                 **** வீட்டுக்கு வரும் விருந்தினர் ஓடி ஓடி வரவேற்கிறான் நாய்க்குட்டி!                  **** ...

Read More »

படக்கவிதைப் போட்டி – 254

அன்பிற்கினிய நண்பர்களே! கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? பிரேம்நாத் திருமலைச்சாமி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி  தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (19.04.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ...

Read More »

படக்கவிதைப் போட்டி 253-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி ஆழியும் ஓடங்களும் அவற்றின் அருகிருக்கும் மனிதர்களுமாக ‘ஆழிசூழ் உலகை’க் கறுப்பு வெள்ளை நிழற்படமாக்கி நம் பார்வைக்குத் தந்திருக்கின்றார் திரு. முகம்மது ரபி. இப்படத்தை படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கின்றார் திருமிகு ராமலக்ஷ்மி. படமெடுத்தவர், அதனைத் தேர்ந்தெடுத்தவர் இருவருக்கும் என் நன்றி! ”வாழ்க்கையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே” எனும் பழைய திரைப்படப் பாடல் நினைவலைகளில் மோதுகின்றது. கூடவே…” நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம்” எனும் கணியன் பூங்குன்றனின் மணிமொழியும் நெஞ்சில் ஒலிக்கின்றது. கற்பனைக்கு நல்விருந்தாய் விளங்கும் ...

Read More »

கனவென்னும் கட்டெறும்பு

கவிதை: அண்ணாகண்ணன் வாசிப்பு: அண்ணாகண்ணன், ஷைலஜா இந்தக் கவிதையை ஒலி வடிவில்  இங்கே கேட் கலாம்.   காய்ச்சலா என்று கேட்டு நெற்றியில் கையை வைத்தாய். இல்லாத காய்ச்சல் சூடு ஜிவ்வென ஏறக் கண்டேன். வேர்க்குதா என்று கேட்டு மேலாக்கால் துடைத்து விட்டாய். இல்லாத வேர்வை பொங்கி என்மேனி மூழ்கக் கண்டேன். தூசியா என்று கேட்டு இதழ்குவித்து ஊதி விட்டாய். உலகமே தூசியாச்சு உன்னிதழ் உலக மாச்சு. கோணலா வகிடு என்று சீப்பினால் சிலை வடித்தாய். மேகமாய் மிதந்து சென்று காற்றுக்குத் தலை கொடுத்தேன். ...

Read More »

எழுவகைப் பெண்கள் – 14

அவ்வைமகள் தலைப்பின்னல் எனும் மருத்துவச்  சூட்சுமம் அந்த இராணுவ அதிகாரிக்கு, தலைமுடி பற்றி, சிலபல நல்ல கேள்விகள் இருந்தன. அவற்றுள் முதலாவதாக மிக முக்கியமானதாக எதை எடுத்துகொள்ளலாம் என அவரையே கேட்டேன். “தலைப் பின்னல்” என்றார். அவர் சொன்னார்: நான் பொதுவாகக் கேள்விப்பட்டது அல்லது வலைத்தளத்தின் மூலம் தெரிந்துகொண்டது என்னவென்றால் பின்னல் சடை போடுவது என்பது உங்களது பாரம்பரிய பழக்கம் என்று. ஏறக்குறைய எங்கள் நாட்டுப் பூர்வீக இந்தியர்கள் கூட நீள்முடி உள்ளவர்கள் – அவர்களில் பெண்கள் ஏன் ஆண்களும் கூட, உங்களைப்போலவே பின்னல் ...

Read More »

தீர்வறியும்  சார்வரி

அண்ணாகண்ணன்   இடரெழுந்து இடையறாது இடறவைக்கும் போதிலும் தொடரிழந்து தொடர்பிழந்து தொடருமின்னல் ஆயினும் படரிடுக்கண் படையெடுத்து, திசைமறைத்து நிற்பினும்  சுடரெடுத்து, புதிரவிழ்த்து, துயரொழித்து மீட்டுவோம்.   சிறகடக்கி, சிறுவளைக்குள் சிரமொடுங்கி நிற்பினும் வறுமையோடு வெறுமையோடு தனிமைசூழ நிற்பினும் நிறமிழந்து நிதியிழந்து கதியிழந்த போதிலும் அறமிழக்க வில்லையின்னும் அறமிழக்க வில்லையே!   அச்சமென்னும் கிருமியெங்கள் உச்சிமீது ஏறுதோ! நச்செரித்து ஆலகாலம் உட்செரித்து வெல்லுவோம் உச்சரிக்கும் தமிழெடுக்க, மூச்சிறுக்கம் நேர்ப்படும் ஆச்சரிய அனுபவங்கள் ஆயிரமாய் ஏற்படும்!   விலகலென்ற காட்சியிலும் கலகலென்று தோன்றுவோம் வலிகளுண்டு என்றபோதும் வழிகளுண்டு ...

Read More »

தமிழரின் நாக்கு!

ஏறன் சிவா  மீன்புலிவில் வேந்தருடை மெய்யுரைக்கத் தமிழர்நா கூசாது! — அவர் வான்முட்டும் வரலாற்றை வகுத்துரைக்கத் தமிழர்நா கூசாது! — இங்கே காண்!தமிழர் அறிவியலைக் கணத்துரைக்கத் தமிழர்நா கூசாது! — பாரில் நான்தமிழன் எனப்பெருமை நவில்வதற்குத் தமிழர்நா கூசாது! வெல்நாட்டுப் போர்வெற்றியை விளக்குதற்குத் தமிழர்நா கூசாது!  — அவர் வல்கோட்டைக் கட்டியதை வாயுரைக்கத் தமிழர்நா கூசாது! — அணைக் கல்கோட்டைக் காலத்தைக் கணித்துரைக்கத் தமிழர்நா கூசாது! – தமிழ்ச் சொல்கோட்டைப் பெரிதென்றுச் சூளுரைக்கத் தமிழர்நா கூசாது! நெல்விளைக்கும் வேளாண்மையின் நெறியுரைக்கத் தமிழர்நா கூசாது! — ...

Read More »

கொரோனாவின் கோரப்பிடியும், இங்கிலாந்தும்

சக்தி சக்திதாசன் லண்டன் அசாத்தியமான நிலை, அசாதாரணமான சூழல் நான்கு மாதங்களுக்கு முன்னால் எண்ணிப்பார்த்திருக்கக் கூட முடியாத ஒரு சூழலில் சிக்கித் தவிக்கும் இங்கிலாந்து மக்கள். இங்கிலாந்து மட்டுமல்ல முழு உலகுமே என்று கூடச் சொல்லலாம். எதையும், எப்படியும், எப்போதும் சமாளித்து விடுவோம் என்று பொருளாதாரத்திலும், முன்னேற்றத்திலும் முன்னனி வகித்து அனைத்து வசதிகளும் நிறைந்திருக்கும் நாடுகள் எனும் உல்கக்கணிப்பில் இருந்த நாடுகள் பல. பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கி வெளியேவர அந்நியநாட்டு உதவிகளை எதிர்பார்த்து தத்தளித்துக் கொண்டிருந்த நாடுகள் பல கலந்து நிறைந்த உலகினை ஒரு கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்க்கிருமி இன்று தன்னிலை உணரப் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(296)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்…(296) உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை யற்றே தவத்திற் குரு. – திருக்குறள் – 261 (தவம்) புதுக் கவிதையில்… உண்டி சுருக்கல் போன்ற நோன்புகளால் தம் உயிருக்கு வரும் துன்பங்களைப் தாம் பொறுத்தலும், பிற உயிர்களுக்குத் துன்பம் தராதிருத்தலும் ஆகிய அளவினதே தவத்திற்கு வடிவமாகும்…! குறும்பாவில்… தவத்தின் வடிவம் இதுவே,   தன்னுயுயிருக்கான துன்பம்பொறுத்தல், பிறவுயிரைத் துன்புறுத்தாதிருத்தல் ஆகியவற்றின் அளவினதே…! மரபுக் கவிதையில்… உண்டி சுருக்கல் போலுள்ள உயர்தர நோன்புகள் பலவற்றால் அண்டிடும் தம்முயிர்த் துன்பங்கள் அனைத்தையு மொன்றாய்த் தாம்பொறுத்தும், ...

Read More »

இருதயாகாயம் (சிறுகதை)

முனைவர் நா. தீபா சரவணன் உதவிப்பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை. முதல் மாடியில் ஜன்னலுக்கருகில் வெளியில் கண்ணுக்கெட்டும் தூரம் வரைப் பார்த்துக்கொண்டு சுரேஷ்மேனோன் உட்கார்ந்திருக்கும் போது ஆகாயத்தின் மேகங்கள் நிறம் மாறிக் கொண்டிருந்தது. அவன் இரயிலிலிருந்து இறங்கும்போது இருந்த வெள்ளை மேகங்கள் எங்கோ மறைந்தது. வானம் இருண்டது போலிருந்தது. “தீப்தியெ இனியும் காணோமே” வேறொரு ஜன்னல்வழியாக வெளியில் பார்த்துக்கொண்டு கீதா கூறினாள். தீப்தி சுரேஷ்மேனோனுக்குக் கடைசியாக அனுப்பியக் கடிதத்தில் சில ஆணைகள் இருந்தது. ஏது வண்டியில் நகரத்தில் வரவேண்டுமென்றும், ...

Read More »

***கொரோனாவுடன் எங்கள் அன்றாட இல்வாழ்க்கை

அவ்வைமகள் இன்று கொரோனா பற்றிப் பலப்பல தகவல்கள் ஒவ்வொரு நானோநொடிக்கும் வெளிவந்து கொண்டிருக்கும்போது இன்னொரு ரோதனையைத் தருவது நம் நோக்கமில்லை. இப்போது சுகாதாரத் தூய்மைப் பொருட்களும் பிற அத்தியாவசியப் பொருட்களும் எங்கும் கிடைக்காத ஒரு சூழலில் நாம் இருக்கிறோம். இந்நிலையில், தொற்று நம்மைத் தீண்டாத வகையில் தனிமனிதர்கள் தமது சுகாதாரத்தை –எப்படிப்  பாதுகாத்துக்கொள்வது அதுவும் வீட்டில் இருந்தபடியே, ஒவ்வொரு குடும்பமாக, சுகாதார நிலைப்பாட்டோடு – பாதுகாப்பாக இந்தக் காலக்கட்டத்தை எப்படிக் கடத்துவது என்பதே நம் நோக்கு. இங்குப் பேசப்படுவது தற்போது எங்கள் இருப்பிடத்தில் நாங்கள் ...

Read More »

கண்கண்ட தெய்வங்கள்

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா கொரனோ வந்து கோரமாய்த் தாண்டவம் ஆடி, பல உயிர்களைப் பறித்தபடி இருக்கிறது. ஒருவரை ஒருவர் பார்க்கவோ பேசவோ கைகுலுக்கவோ முடியாத நிலையைக் கொரனோ ஏற்படுத்திவிட்டது. உறவுகள் பிரிவுகள் ஆகிவிட்டன. கூடினால் ஆபத்து! குலவினால் ஆபத்து! நினைக்கவே இருள் எம்மைச் சூழந்த உணர்வே எழுகிறது. இந்த நிலையில் வைத்தியர்களும் தாதியர்களும் எப்படி இருக்கிறார்கள் என்றால் மண்மீது வந்த மருத்துவ தெய்வங்களாய் மாறியிருக்கிறார்கள் என்று தான் கொள்ள வேண்டும். சாதாரண வேளையில் மருத்துவம் பார்ப்பதைவிட தற்போதுள்ள நிலையில் மருத்துவம் பார்ப்பதும் கம்பியில் நடப்பது ...

Read More »

இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 13

அவ்வைமகள் 13. ஆயத்தச் சிந்தையும் புரட்சிப் பிரசவமும் புரட்சிகள் எவ்வாறு உருவாகின்றன என்று நாம் சிந்தித்து வரும் இத்தருணத்தில், புரட்சிக்குண்டான காரணங்கள், சமுதாயத்தில் எல்லோரும் அறியும்படியாக், பொத்தம்பொதுவில் நடக்கிறபோது – ஏன் ஒருவர் – ஒரே ஒருவர் புரட்சியாளனாக ஆகிறார் என்று ஒரு வினா வருகின்றது. புரட்சியும் அறிவியல் கண்டுபிடிப்பும் ஒன்றே போன்றவை. புரட்சியைப் போன்றே, அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்று நிகழவேண்டுமேன்றால் அதற்கு, பல்முகக் காரணங்கள் இருக்கவேண்டும் (அரசியல், பொருளாதார, சமூகக் காரணங்கள்); புறத்தே இருந்து வரும் ஊக்குவிப்பான்களும் வேண்டும். இவை அனைத்தும் எல்லாத் ...

Read More »

படக்கவிதைப் போட்டி – 253

அன்பிற்கினிய நண்பர்களே! கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? முகம்மது ரபி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி  தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (12.04.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ...

Read More »

படக்கவிதைப் போட்டி 252-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி இந்த ஒளிஓவியத்துக்குச் சொந்தக்காரர் திரு. பிரேம்குமார் சச்சிதானந்தம். இதனைப் படக்கவிதைப் போட்டி 252க்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவ்விருவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மானுடக் குழந்தைகளும், ஆவின் குழவியும் அருகணைந்து நிற்கும் அழகிய காட்சி நெஞ்சில் இன்பத்தைப் பூக்கச்செய்கின்றது. இப்பூவுலகை இயற்கை படைத்தளித்தது அனைத்துயிர்களும் இன்பமாய் வாழ்வதற்கே. ஆனால் மானுடனோ உயிர்கள் அனைத்தையும் இரக்கவுணர்வின்றிக் கொன்றழிக்கின்றான் உணவுக்காக. அதன்விளைவாய்த் தீராத துன்பங்களையும் தேவையற்ற நோய்களையும் எதிர்கொண்டு கலங்குகின்றான். எந்த ஒரு வினைக்கும் இணையான எதிர்வினை உண்டு என அறிவியலும் அறவியலும் ...

Read More »