Category: நேர்காணல்கள்

நேர்காணல்கள்

  • தெருக்கூத்துக் கலைஞர் பட்டுக் கவுண்டர்!

    -முனைவர் மு.இளங்கோவன்

    நான் பணிபுரியும் அலுவலகத்திற்கு இரண்டு நண்பர்கள் அண்மையில் வந்தனர். ஒருவர் முன்பே அறிமுகம் ஆனவர். அவரின் பெயர் திரு. குணசேகரன் என்பதாகும். பொ.தி.ப. சாந்தசீல உடையார் அலுவலகத்தில் கணக்கராகப் பணிபுரிந்தவர். உடன் வந்தவர் அவரின் தம்பி திரு. சரவணன் ஆவார். வந்தவர்கள் பலபொருள்குறித்து என்னுடன் உரையாடிக்கொண்டிருந்தனர். பின்னர் எங்களின் பேச்சானது தெருக்கூத்து நோக்கி நகர்ந்தது.

    புதுச்சேரியில் மிகுதியான தெருக்கூத்துக் கலைஞர்கள் இருந்துள்ளமையையும் அவர்களைப் பற்றிய போதிய பதிவுகள் இல்லாமல் உள்ளதையும் அவர்களிடம் தெரிவித்தேன். என்னுடன் உரையாடிய சரவணன் தெருக்கூத்துக் கலைஞர் என்பதையும், கலைமாமணி கோனேரி இராமசாமி அவர்களின் கலைக்குழுவில் உள்ளவர் என்பதையும் அறிந்து மகிழ்ந்தேன்.

    சரவணன் அவர்களிடம், தங்களுக்குத் தெரிந்த மூத்த தெருக்கூத்துக் கலைஞர்கள் புதுவையில் உள்ளனரா? என்று வினவினேன். கல்விப் புலத்திலிருந்து தங்கள் கலையை நோக்கி வினவுபவர் உள்ளாரே என நினைத்து, ஆர்வமுடன் உரையாடலை அவரும் தொடர்ந்தார். தங்கள் உறவினர்கள் பலர் கூத்துக்கலைஞர்கள் எனவும், தங்கள் உறவினருள் அகவை முதிர்ந்த கூத்துக்கலைஞர் ஒருவர் இப்பொழுதும் உள்ளார் எனவும் தெரிவித்தார். அன்றுமுதல் அகவை முதிர்ந்த அந்தக் கூத்துக் கலைஞரைச் சந்திப்பதற்குத் திட்டமிட்டேன்.

    கூத்துக்கலைஞர் சரவணன் தம் வாழ்க்கையை நடத்துவதற்கு உரிய தொழிலாகத் திருமணக்கூடங்கள், விழா மேடைகள் ஆகியவற்றை ஒப்பனைப்படுத்தும் கலைஞராகவும் கூடுதல் பணிகளைச் செய்வது உண்டு. திருமண நாளில் மண்டபங்களில் மணமேடையை அழகுப்படுத்துவது, அதனைப் பிரித்தெடுத்து மீண்டும் அடுத்த மண்டபத்துக்குக் கொண்டு செல்வது, அங்குப் பணி முடிந்த பிறகு வீட்டுக்குக் கொண்டுவருவது என்று எப்பொழுதும் பணி அழுத்தமாக இருப்பவர். நான் அழைக்கும்பொழுது இதனைக் கூறி, விலகிக்கொள்வார். அவர் அழைக்கும்பொழுது நான் அலுவலகத்தில் உழன்றுகொண்டிருப்பேன்; அல்லது அயலகப் பயணங்களில் இருப்பேன். இருவரும் சந்திக்கும்பொழுது ஒளி ஓவியர் எங்களுடன் இணையமுடியாதபடி சூழல் இருக்கும்.

    இன்று(04.03.2017) மாலை ஒளி ஓவியர், கூத்துக்கலைஞர், நான் மூவரும் ஒருபுள்ளியில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டுப் புதுவையின் கடைசி எல்லைப்பகுதியில் இருந்த நாவற்குளம் பகுதியை அடைந்தோம். ஒருகாலத்தில் நாவல் மரங்கள் நிறைந்திருந்த பெரும் தோப்புகளும், பனந்தோப்புகளும், பொன்விளையும் பூமியுமாக இருந்த நாவற்குளம் என்ற செம்மண் நிலம் இன்று, சிமெண்டு மாளிகைகள் எழுப்பப்பெற்று, சமூகத்தில் முதன்மையானவர்கள் வாழும் இடமாக மாறிவிட்டது.

    எங்களின் வருகைக்குக் குணசேகரனும் சரவணனும் காத்திருந்தனர். சாலையை ஒட்டிய ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். வீட்டின் முன்பகுதியில் ஒரு அகவை முதிர்ந்த பெரியவர் அமர்ந்திருந்தார். என்னை அழைத்துச் சென்று அந்தப் பெருமகனாரிடம் அறிமுகம் செய்தனர். முன்பு என்னைப் போல் மூவர் சென்று உரையாடித் திரும்பியுள்ளனர். அவர்களின் செயலால் சோர்வுற்று இருந்த பெரியவர் என்னையும் அந்தப் பட்டியலில் இணைத்து, நினைத்ததில் தவறு ஒன்றும் இல்லை. மனச்சோர்வுடன்தான் பேசினார்.

    குடும்பத்தில் இருந்தவர்களுக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தனர். அகவை முதிர்ந்த அந்தக் கூத்துக்கலைஞரை உள்ளே அழைத்து, விளக்கொளியில் அமரச் செய்து உரையாடத் தொடங்கினோம். “பேட்டி”காணும் செய்தியாளர்கள் என்ற பெயரில் யாரேனும் வந்திருந்தால் வந்த வேகத்தில் திரும்பியிருப்பார்கள். ஐயாவை எங்களின் வழிக்குக் கொண்டு வருவதற்குப் பெரும் பாடுபட்டோம்.

    என் பெயர் பட்டுக் கவுண்டர். அப்பா பெயர் பெரியதம்பி, அம்மா பெயர் காத்தாயி. இப்பொழுது எனக்குத் தொண்ணூற்றெட்டு வயது ஆகிறது என்றார். பிறந்து வளர்ந்தது, படித்தது, வாழ்ந்தது எல்லாம் இந்த ஊரில்தான். தாய் மாமன் சு. இராஜகோபால் அவர்களிடம் தெருக்கூத்துப் பாடல்களையும், நாடகப் பாடல்களையும் கற்றுக்கொண்டேன் என்றார். இந்தத் தகவலைப் பெறுவதற்குள் பெரும் முயற்சி எனக்குத் தேவைப்பட்டது. நான் கத்திக் கதறி விவரங்களை வாங்குவதற்குள் அக்கம் பக்கம் இருந்தவர்கள் கூடினர். அகவை தொண்ணூற்று எட்டு என்றாலும் இன்னும் கண்ணாடியில்லாமல் செய்தித்தாளைப் படிக்கின்றார்.

    திரு. பட்டுக் கவுண்டர் அவர்கள் பெருகிய நிலங்களைக் கொண்ட வளமான வாழ்க்கை வாழ்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் தாத்தா அந்நாளைய பிரெஞ்சு அரசுக்குத் துப்பாக்கிக்குப் பயன்படும் பொருள்களைச் செய்து வழங்கியுள்ளார். அதனால் புதுவையின் ஒதுக்குப்புறமாக இருந்த இவர்களின் நிலங்கள் வரை புதுச்சேரியின் எல்லையைப் பிரெஞ்சியர் அமைத்தனர் என்பதை அறியமுடிந்தது. சற்றுத் தொலைவில் ஆங்கிலேயர்களின் முகாம்(கேம்ப்) இருந்துள்ளதையும் உரையாடலில் அறிந்தேன்.

    Pattu2பட்டுக் கவுண்டர் தம் வீட்டை ஒட்டிய பகுதியில் அக்காலத்து இளைஞர்களாக இருந்த உறவினர்களை ஒன்றிணைத்துத் தெருக்கூத்தினைக் கற்றுள்ளார். இவர்களுக்கு ஆசிரியராக இருந்து, இராஜகோபால் என்பவர் தெருக்கூத்துக் கலையை அனைவருக்கும் பயிற்றுவித்துள்ளார். பலநாள் பயிற்சி எடுத்து, அரங்கேறிய தெருக்கூத்துக் கலைஞர்கள் கோவில் திருவிழாக்களிலும், கோடைக் காலங்களிலும் அந்தநாளில் தெருக்கூத்து ஆடியுள்ளனர். பக்கத்து ஊர்களிலிருந்து தெருக்கூத்துக்குத் தேவையான இசைக்கருவிகள், ஒப்பனை செய்வதற்குரிய அணிகலன்கள், கட்டைகள் வாடகைக்கு அமர்த்திப் பயன்படுத்தியுள்ளனர். அருகில் உள்ள ஊர்களுக்கும் சென்று தெருக்கூத்து ஆடியுள்ளனர்.

    பட்டுக் கவுண்டர் தருமன், கண்ணன், நாரதன், வசிஷ்டர், அபிமன்யு என்று பல்வேறு பாத்திரங்களில் ஆர்வமாக நடித்தவர். இன்றும் மெல்லிய குரலில் இந்தப் பாத்திரங்கள் பாடும் பாடல்களைப் பாடிக்காட்டித் தம் இளமைக்காலத் தெருக்கூத்து அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். பாடல்களைப் பாடும்பொழுது அடிக்கடி களைப்படைந்துவிடுகின்றார். நினைவுக்குச் சில பாடல்களையும் உரையாடல்களையும் ஒளிப்பதிவு செய்துகொண்டோம். இருபத்தைந்து வயதில் தெருக்கூத்து ஆடத் தொடங்கிய பட்டுக் கவுண்டர் 60 வயது வரையும் தெருக்கூத்தின் உச்ச நிலையைத் தொட்ட கலைஞராக விளங்கியுள்ளார். தெருக்கூத்துக் கலைஞர்கள் சிலரிடம் புகுந்துள்ள மது, புலால் உண்ணுதல் என்ற பழக்கங்கள் இல்லாதவராகவும், அறச்சிந்தனை கொண்டவராகவும் விளங்கும் பட்டுக் கவுண்டர் அவர்கள் போற்றி மதிக்கத்தக்க கலைஞர் என்பதில் ஐயமில்லை.

    பட்டுக் கவுண்டர் அவர்களின் மகன் பெருமாள்சாமியும் தெருக்கூத்துக் கலைஞர். இப்பொழுது பகலில் தச்சுத்தொழிலும், இரவில் தெருக்கூத்துப் பணியுமாக உள்ளார். பட்டுக் கவுண்டரின் பெயரன் பற்குணன் கணினி வரைகலையில் பயிற்சிபெற்று வருகின்றார். இவரும் இளம் அகவையிலையே தாத்தாவுடன் இணைந்து தெருக்கூத்தினைப் பார்ப்பது, பாரதக் கதை கேட்பது என்று விருப்பத்துடன் இருந்து, தெருக்கூத்தில் கண்ணன் வேடம் அணிந்து, பாட்டிசைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுவருபவர். மூன்று தலைமுறைக் கூத்துக்கலைஞர்களை ஓரிடத்தில் சந்தித்த மன நிறைவு எனக்கு ஏற்பட்டது. மூவரின் பாடலையும் ஒளிப்பதிவு செய்தோம்.

    நாவற்குளம் பகுதி வளர்ச்சி அடைவதற்குச் சாலை அமைக்கவும், பள்ளிக்கூடம் கட்டவும், கோயில் கட்டவும் கோடிக்கணக்கான மதிப்புடைய தம் நிலங்களை அன்பளிப்பாக வழங்கிய கொடை நெஞ்சர் பட்டுக் கவுண்டர் என்பதை அறிந்து கைகுவித்து வணங்கித் திரும்பினேன்.

    Share
  • வீரத்தமிழனின் ஏறுதழுவல் ஆதரவுப் பேரணி!

    பவள சங்கரி

    சங்கே முழங்கு..
    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
    மங்காத தமிழென்று சங்கே முழங்கு
    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
    இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
    பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
    சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு

    திங்களொடு செழும்பருதி தன்னோடும்
    விண்ணோடும் உடுக்க ளோடும்
    மங்குல் கடல் வற்றோடும் பிறந்த
    தமிழுடன் பிறந்தோம் நாங்கள்,ஆண்மைச்
    சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு
    ஞாபகம் செய் முழங்கு சங்கே

    சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்
    தீராதி தீரரென் றூது சங்கே
    பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
    சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு

    வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்
    தோளெங்கள் வெற்றித் தோள்கள்
    கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள்
    ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்
    வெங்குருதி தனிழ்கமழ்ந்து வீரஞ்செய்
    கின்றதமிழ் எங்கள் மூச்சாம்

    பாவேந்தர் பாரதிதாசன்

    a1
    தமிழர்களின் பண்பாடு மட்டும் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்வுகளில் மிக முக்கியமானது ’ஏறுதழுவல்’ என்ற சல்லிக்கட்டு வீர விளையாட்டு ஆகும். வீரர்கள் காளையை அணைத்து அடக்கும் இந்த வீர விளையாட்டு தமிழக இளைஞர்களின் முக்கியமான அடையாளமாகக் கருதப்படுகிறது.

    பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் சிந்துவெளி நாகரிகத்திலும் ஏறுதழுவல் என்ற காளையை அடக்கும் வீர விளையாட்டுகள் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. அதாவது வீரர்கள் கோபமான காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. கி.மு. 2000 ஆண்டுகளிலேயே ஏறுதழுவல் எனும் விளையாட்டு வழக்கத்தில் இருந்ததை அறியமுடிகிறது. சங்க இலக்கியமான கலித்தொகையில்,

    கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
    புல்லாளே ஆய மகள்.
    அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத
    நெஞ்சிலார் தோய்ப்பதற்கு அரிய – உயிர்துறந்து
    நைவாரா ஆய மகள் தோள்

    என்றுரைப்பதை அறியலாம்.

    மஞ்சு விரட்டு விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினை சல்லி என்று குறிப்பிடுவார்கள். அதுமட்டுமன்றி 50 ஆண்டுகளுக்கு முன்பு ‘சல்லிக் காசு’ என்ற நாணயங்களை ஒரு துணியில் வைத்து, அதை மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் வழமை இருந்தது. வெற்றி பெறும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இதனாலேயே ‘சல்லிக்கட்டு’ என்ற பெயரும் வந்தது.

    இசுபெயின், போர்ச்சுகல், மெக்சிகோ, சப்பான் போன்ற நாடுகளில் காளைப்போர் முக்கியமான தேசியப் பொழுதுபோக்கு விளையாட்டாக இன்றும் நடைபெற்றாலும், ‘ஏறுதழுவல்’ என்ற தமிழ்நாட்டின் சல்லிக்கட்டு கொல்லாமை எனும் அடிப்படையில் நடப்பதே நிதர்சனம்.

    a2

    a3
    இந்திய விலங்கு நல வாரியம், பெடா (PETA), இந்திய நீலச் சிலுவைச் சங்கம், விலங்குகள் நல ஆர்வலர்கள் போன்ற அமைப்புகளும் ஏறுதழுவல் என்ற இந்த வீர விளையாட்டு விலங்குகளை துன்புறுத்துவதாகக் கருதியும், உயிரிழப்புகளும், காயங்களும் ஏற்படுவதாகக் கருதியும் சில ஆண்டுகளாக இதைத் தடை செய்யக் கோரி நீதிமன்றங்களில் வழக்கும் தொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிபந்தனைகளுடனேயே சல்லிக்கட்டு நடைபெற நீதிமன்றங்கள் அனுமதி அளித்து வருகின்றன. ஆயினும் இந்த ஆண்டு சல்லிக்கட்டு நடத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது தமிழர்களிடையே பெரும் கலவரத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் பல ஊர்களில் மக்கள் தங்கள் எதிர்ப்பை பல்வேறு விதமாக பதிவு செய்து வருகின்றனர். இன்று ஈரோட்டில் பெருவாரியான இளைஞர்கள் சல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதற்கான எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக மிக அமைதியான முறையில் இரு சக்கர வாகன பேரணி நடத்தினர்.

    IMG_20170113_113115144 (1)

    அனைத்து இளம் தமிழர்களும் கட்சி பாகுபாடு, மத பாகுபாடு, இன பாகுபடு என ஏதுமின்றி, பல்லாயிரம் இளைஞர்கள் ஒன்றுகூடி தமிழர்களின் பண்பாட்டையும் வீரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் ஒன்றுகூடி கட்டுக்கோப்பாக மாபெரும் பேரணியை நடத்திக்காட்டியுள்ளனர். இந்நிகழ்வுகள் இந்திப் போராட்டத்தின்போது தமிழனைத் தட்டி எழுப்பியது போன்று நம் தமிழரின் பண்பாட்டைக் காப்பதற்காக ஒவ்வொரு இளைஞனும், இளைஞியும் முன் நின்றதே தமிழன் என்பவன் தலை நிமிர்ந்து நிற்பவன் என்பதன் எடுத்துக்காட்டாகும். இதையும் மீறி கண்ணில் நீரை வரவழைக்கும் சில நிகழ்வுகளாக, உடல் ஊனமுற்ற சகோதரர்களும் இந்த நிகழ்வில் தமிழனாக நாங்களும் இணையும் கடமை உண்டு என முன்வந்ததுதான். தமிழன் ஒன்றுகூடி விட்டான். இனி தமிழனுக்கு எங்கும் இடையூறோ, இன்னல்களோ இருந்தால் நாங்கள் இருக்கிறோம் தோள்கொடுக்க, துயர் துடைக்க என்று தமிழினம் எழுத்து நின்றுள்ளது. தமிழகத்திற்கு வழிகாட்டும் வகையில் ஈரோட்டிலிருந்து ஒரு பொறி கிளம்பியுள்ளது. பல்லாயிரம் இளைஞர்கள் பங்குகொண்ட இரு சக்கர ஊர்வலமும், அதற்கு முத்தாய்ப்பாக காங்கேயம் காளைகளை வீரர்கள் அடக்குவதுபோல வண்டிகளில் காளைகளையும், வீரர்களையும் முன்னிறுத்தி ஊர்வலத்தைத் துவங்கியிருப்பதும் ஊர்வலத்திற்கு முன்னே மற்றொரு வீர விளையாட்டான சிலம்பாட்டம் விளையாடி வந்ததும் வெற்றியின் துவக்கமாக மிளிர்கிறது. வண்டியின் தொடக்கம் நிறைவிடத்தை அடைந்தபோது அதன் பின்பகுதி தொடங்கிய இடத்தில் இருந்ததென்றால், (கிட்டத்தட்ட 5 கி.மீ. தொலைவு) அத்துனை ஆயிரக்கணக்கான இளைஞர்களும் மிகுந்த கட்டுப்பாட்டோடு இருந்ததையும், நிகழ்ச்சி அமைதியாக நடைபெற்றதையும் பார்த்தபோது அதன் அமைப்பாளர்களையும், காவல் துறையினரையும் பாராட்டப்படவேண்டியவர்கள் என்று தோன்றியது. தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் முனைவர் சுபாஷிணி அவர்களும் இப்பேரணியை வாழ்த்தி வரவேற்றுள்ளார்.

    IMG_20170113_112729479

    IMG_20170113_112813672
    இந்த நிகழ்வில் தமிழனின் பண்பாட்டையும், தமிழனின் பாரம்பரியப் பெருமைகளையும் பறை சாற்றக்கூடிய, பவள சங்கரியின் ‘கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம்’ என்ற ஆய்வு நூல் வெளியிடப்பட்டது மணிமகுடம் வைத்ததாக அமைந்தது. வரலாற்று ஆய்வாளர் திரு கனியன் பாலன் மற்றும் திரண்டிருந்த இளைஞர் அணியின் சார்பாக திரு கண. குறிஞ்சி , மக்கள் சிவில் உரிமைக் கழகம் மாநிலத் தலைவர் (பி.யூ.சி.எல்) பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. தமிழர் பண்பாட்டை மீட்கும் வகையின் தொடர்ச்சியாக பிப்ரவரி 21ஆம் தேதி உலக தாய்மொழி தினத்தில் அடுத்த நிகழ்வும் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர். மாபெரும் எழுச்சி மிக்க இந்நிகழ்வை மிகக்கட்டுப்பாட்டுடன், அமைதியாக, ஒழுக்க முறையைக் கடைபிடித்தவாறு தமிழன் வீரத்தில் மட்டும் சிறந்தவனில்லை, விவேகத்திலும், கட்டுப்பாட்டிலும் அதைவிடச் சிறந்தவன் என்பதை நிரூபித்துள்ளதும் பாராட்டிற்குரியது.

    IMG_20170113_112122804

    “400 வருசத்திற்கு முன்னாடி வாஸ்கோடகாமா அப்படீங்கற தொப்பிக்காரன், கோழிக்கோட்டுல இறங்கி நம்ம தமிழ் நாட்டைக் கண்டுபிடிச்சான் அப்படின்னு சொல்றாங்க.. அப்ப அமெரிக்காக்காரனுக்கு 400 வருசம்தான் சரித்திரம். ஆனால் நம்ம பாட்டன் , முப்பாட்டன் எல்லாம் 1000 வருசத்துக்கு முன்னாடியே தாஞ்சாவூரு கோயில்ல ராசராசசோழன் காலத்துல கட்டுன கோயில்ல இருக்கற கோபுரத்துல தொப்பிக்காரனோட சிலையை வச்சிப்பிட்டாங்க. அப்ப 1000 வருசத்துக்கு முன்னாடியே நாம இங்கிருந்து கடல் கடந்துபோய் அவனை கண்டுகிட்டு வந்துட்டோம்னுதானே அர்த்தம். எதுக்கெடு நாம அமெரிக்காக்காரன்னு சொல்லிக்கிட்டிருக்கோம். ஆனா இன்னைக்கு அவன் மூஞ்சுல கொரியாக்காரன் ராக்கெட்டு உட்டுட்டான். இந்த கொரியாக்காரனுகளுக்கு நாகரீகமும், வீரமும், திங்கற இட்லி தோசையும், கொழக்கட்டையும், அம்மா, அப்பான்னு கூப்பிடறதுக்கும் சொல்லிக்கொடுத்ததும் மறத்தமிழச்சியான நம்ம கொங்கு நாட்டுக்காரிதான்னு நம்ம ஈரோட்டுக்கார அக்கா பவள சங்கரி இத ஆதாரப்பூர்வமா நிரூபிச்சிருக்காங்க. இந்த நூலை வெளியிடுறதுல ஒவ்வொரு தமிழனும் பெருமைப்படலாம்” என்று நெகிழ்ச்சி பொங்க இதன் அமைப்பாளர் திரு பார்த்திபன் மற்றும் பாபா தொலைக்காட்சி உரிமையாளர் திரு சுரேஷ் அவர்களும் உணர்வு பொங்கப் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

    Share
  • கிரேசி குழுவினரின் நகைச்சுவைத் தூது

    பவள சங்கரி

    கூகிளில் கடோத்கஜன் – புத்தம் புதிய நாடக ஆக்கம்!
    crazy

     

    crazy4

    crazy5

    பொதுவாக நல்லிணக்கத் தூதுக்குழுவினர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று மக்களுடன் கலந்துறவாடி அந்தந்த நாட்டினருடன் ஒரு ஆக்கப்பூர்வமான சிந்தையை வளர்க்கும் விதமாக நல்ல இணக்கத்தை ஏற்படுத்தி வருவர். இதற்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல வெளிநாடுகள் சென்று நமது பண்பாடு, கலாச்சாரம் அனைத்தையும் வெளிநாட்டு மக்களும் அறியும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தி வரும் கலை, இலக்கிய, இசைக்குழுவினர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. இவர்களுடைய பயணம் வியாபார நோக்கம் மட்டுமே பிரதானமாகக்கொண்டது என்ற குறுகிய வட்டத்தில் ஒதுக்கவும் இயலாது. இதனை உணர்த்தும் விதமாக கிரேசி குழுவினரின் நீண்ட அமெரிக்கப்பயணம் நிரூபித்துள்ளது.

    crazy7

    கிரேசி நாடகக்குழுவினர் சமீபத்தில் அமெரிக்கப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து திரும்பியுள்ளனர். ஐந்தாவது முறையான இந்த அமெரிக்கப் பயணம், சென்ற நான்கு முறைகளைக்காட்டிலும் குறிப்பிடும் அளவிற்கு, அரங்கு நிறைந்த காட்சிகளாகவும், இரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப்பெற்றும் வெற்றிகரமான பயணமாக அமைந்துள்ளது குறிப்பிட்டத்தக்கது. திரு கிரேசி மோகன் மற்றும் திரு மாது பாலாஜி அவர்களின் தலைமையில் இயங்கும் இந்நாடகக்குழுவினரின் கடின உழைப்பும், அயராத முயற்சியும் இவர்களை இம்மாபெரும் சாதனைக்கு வழி கோலியுள்ளது. ஆயிரக்கணக்கான அன்பு இரசிக உள்ளங்களின் ஏகோபித்த பாராட்டைப்பெற்று திரும்பியுள்ள மகிழ்ச்சியில் சகோதரர் திரு கிரேசி மோகன் அவர்கள் உளம் நெகிழ்ந்து பகிர்ந்து கொண்டுள்ளார். மீண்டும் விரைவில் அமெரிக்க இரசிகர்களுடன் கலந்துறவாட வாய்ப்புகள் வாசல் விரிந்து காத்திருப்பதையும் உணர முடிகின்றது. நாடக உலகிற்கு இவர்களின் அரிய சேவை பாராட்டிற்குரியது. திரை உலகின் முன்னோடியான நாடக உலகம், திரு கிரேசி மோகன், திரு ஒய்.ஜி.மகேந்திரன், திரு எஸ்.வி.சேகர் போன்ற மிகக் குறிப்பிட்ட சில கலைஞர்களால் மட்டுமே உயிர் பெற்று நடமாடிக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. பிற்காலத்தில் மேடை நாடக உலகின் நிலை என்னவாகும் என்ற கவலையும் ஏற்படத்தான் செய்கிறது. இவர்களைப்போன்றோர் இதற்கான ஏற்பாடை செய்து, தங்களுக்கான வாரிசுகளை உருவாக்கி மேடை நாடக உலகம் தொடர்ந்து திரையுலகிற்கு ஈடாக வலம் வர வேண்டும் என்று வேண்டுகிறோம்.

    crazy1

    அமெரிக்காவின், மேரிலாண்ட் ஆளுநர் தமது மாநிலக் காரியதரிசி மூலமாக வாசிங்டன் நகரில் 31.10.16 அன்று, தங்களுடைய ‘கூகிள் கடோத்கஜன்’ என்ற புத்தம் புதிய நாடகம் நடைபெறும் அரங்கில் அளித்துள்ள, ‘Professional excellence award ‘ மட்டுமே இதற்கு பெரும் சாட்சி.

    crazy6

    crazy2

    அமெரிக்காவின், வாசிங்டன், கலிஃபோர்னியா, பிலடெல்பியா, சிகாகோ, சேன் டிய்கோ, சேன்ஜோஸ், கனெக்டிகட், அரிசோனா, டல்லாஸ், ஹூஸ்டன், தம்ப்பா, அட்லாண்டா, நியூயார்க், நியூஜெர்சி போன்ற பலப்பல இடங்களிலும் 1000ற்கும் மேற்பட்ட இரசிகர்களின் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக நாடகம் நடத்தி முடித்து வந்துள்ள கிரேசி குழிவினரின் முதுகெலும்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் திரு கிரேசி மோகன், அவர் சகோதரர் திரு மாது பாலாஜி மற்றும் உடன் பிறப்புகள் என்று திரு கிரேசி மோகன் அவர்கள் குறிப்பிடும் ஏனைய கலைஞர்கள் அனைவரையும் வல்லமை மனமார வாழ்த்தி வரவேற்கிறது. இந்த சாதனை பல்லாண்டு காலம் தொடர்ந்து நடைபெற எல்லாம் வல்ல எம் இறையை பிரார்த்திக்கிறோம்.

    crazy8

    ஓரிரு திரைப்படங்களில் தலையை காட்டி விட்டாலே தலைகனம் வந்து மக்களை சந்திப்பதை விரும்பாத பல கலைஞர்களுக்கிடையே, நடிப்பு, வசனம், நாடக மேடை, கதை, இலக்கியம், வெண்பா, ஆன்மீகம் என அனைத்துத் தளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் திரு கிரேசி மோகன் அவர்களின் எளிமை பாராட்டுதலுக்குரியது. அனைவரிடமும் பாரபட்சமின்றி இவர் பழகும் தன்மை ஒரு எடுத்துக்காட்டாகும். நம் வல்லமை இதழில் தொடர்ந்து பல ஆக்கங்களை படைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்தம் ஆக்கங்கள் அனைத்தும் திருமால் திருப்புகழ்  என்ற இந்தப் பகுதியில் காணலாம். அந்த வகையில் இவர் பல்லாயிரக்கணக்கான இரசிகர்களை உலகம் முழுவதும் பெற்றிருப்பதில் எந்த ஐயமும் இல்லை. தனக்கான எந்த விதமான தனிப்பட்ட பெருமையையோ, கவனிப்பையோ எதிர்பார்ப்பதில்லை இந்த பிரபலம் என்பதே இவரை பன்மடங்கு உயர்த்திக்காட்டுகிறது. சென்ற ஆண்டு என் மகனின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சி சென்னையில் வைத்திருந்தபோது, மற்ற நண்பர்களை அழைத்ததுபோல் இவரிடமும் யதார்த்தமாக தொலைபேசியில் அழைத்து விசயத்தைக் கூறியவுடன், மிகவும் மகிழ்ச்சியாக கட்டாயம் கலந்து கொள்வதாகக் கூறியபோதுகூட நான் அந்த நேரத்தில் ஏதோ சமாதானமாகப் பேசுகிறார் என்றே நினைத்திருந்தேன். ஆனால் நிகழ்ச்சி நடக்கும் நாளை நினைவில் குறித்து வைத்து அந்த நாளில் மறக்காமல் நேரில் வந்து எங்கள் குழந்தைகளுக்கு ஆசி வழங்கி, அனைத்து உறவினர்களுடனும் அன்பாகவும், வழமையான அவருடைய நகைச்சுவை பாணியில் பேசி சில மணித் துளிகள் அந்த நிகழ்ச்சியைக் களைகட்ட வைத்துவிட்டார். இந்த எளிமையும், இரசிகர்கள் அனைவரையும் தம் அன்பான உறவுகளாக மதிக்கும் இவர்தம் பெருந்தன்மையுமே இவரை மக்கள் மனதில் நீங்காதொரு இடத்தைப் பிடிக்க வைத்துள்ளது என்றால் அது மிகையல்ல! திரு கிரேசி மோகன் அவர்கள் இன்னும் பல்லாண்டுகள், நீண்ட ஆயுளும், நிறைந்த ஆரோக்கியமுமாக, மென்மேலும் பலப்பல சாதனைகள் புரிந்தவாறு மக்கள் மனதில் நிறைந்திருக்கவேண்டும் என்று உளமார வாழ்த்துகிறோம்.

    crazy3

    “எனக்கு சாம்பார்ல காய்கறிய முழுசு முழுசா போட்டா பிடிக்கும்னு சொன்னதென்னவோ வாஸ்தவந்தான்.. அதுக்காக அதே பிரின்ஸிபில நீங்க எல்லா காய்கறிக்கும் அப்ளை பண்ணப்டாது. அன்னிக்கு லஞ்ச்டைம்ல கேண்டின்ல டிபன் பாக்ஸ ஓபன் பண்ணி பாக்கறேன். புடலங்கா சாம்பார். எடுத்தா த்ரெளபதி வஸ்திராபரணம் மாதிரி வந்துண்டேயிருக்கு. எங்க ஆஃபீஸ்ல லஞ்ச் டைமே ஆஃப் அன் அவர் தான். இதுல புடலங்காயை எடுக்கறதுக்கே கால் மணி ஆச்சுன்னா எப்படி?”

    “மொளச்சு மூணு இலை விடலை../ நீ இன்னும் மொளைக்கவே இல்லியே/””

    “பீமாராவ். நீர் பயில்வான் தான். அதுக்காக உம்ம பேனா கூடவா இப்படி இருக்கணும். ஆறு ஓட்டை போட்டா புல்லாங்குழலா யூஸ் பண்ணலாம் போல இருக்கே!”

    இப்படி பல்லாயிரம் நகைச்சுவை சரவெடிகளை
    அய்யா அம்மா அம்மம்மா, க்ரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் போன்ற நாடகங்களில் வெடிக்கத் தொடங்கி இன்று வரை நம்மையெல்லாம் தீபாவளிக் கொண்டாட்டத்தில் மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார் இந்த மனிதர். நாடகமேடை, வெள்ளித்திரை இரண்டிலும் வெற்றி வாகை சூடிய இந்த சாக்லேட் கிருஷணர் வெண்ணை மாதிரி அத்தனை பேர் மனதையும் விழுங்கி ஏப்பம் விட்டுவிடக்கூடிய கூகிள் கடோத்கஜரும் ஆவார். மேலும் வெண்பா எழுதும் புலவரும் கூட.

    இவற்றையெல்லாம் தாண்டி எனக்கு இவரிடம் பிடித்த விஷயம்.. எனக்குப் பிடித்த ஓவியக்கலையில் இவரும் ஒரு விற்பன்னர் என்பது தான்!

    பின் குறிப்பு: இந்தப் பின்னூட்டங்கள் திரு கிரேசி மோகன் அவர்களின் முக நூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவை. இந்த வசனங்களை நினைவு கூர்ந்து வெளியிட்டுள்ள வடக்குப்பட்டி ராமசாமி, கலா வெங்கட், அனன்யா, பாபு பிகே.. கணேச குமாரன் ஆகியோருக்கு நன்றி .

    Share
  • தேசிய தமிழ் காவலர்!

    பவள சங்கரி

    சமீபத்தில் மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பா.ஜ.க மூத்த தலைவர் தேசிய தமிழ் காவலர், தமிழ்வேள் – இல.கணேசன் அவர்களை வல்லமை வாழ்த்துகிறது.

    14713061_1275054042513722_7565585110330755965_o

    14707869_1274984265854033_9120603766977147093_o

    நேற்று பொற்றாமரை கலை இலக்கிய மன்றத்தின் மாதாந்திர இலக்கியக் கூட்டமும், மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதை முன்னிட்டு பொற்றாமரை குழுவினர் மற்றும் நண்பர்களின் பாராட்டு விழாவும் ஒரு குடும்ப விழா போன்று மிக எளிய முறையில் நடைபெற்றது. இலக்கிய உலகின் ஆகச்சிறந்த ஆளுமைகள் ‘எழுத்துச் சித்தர்’ திருமிகு. பாலகுமாரன், திருமிகு.சிவசங்கரி, திருமிகு. திருப்பூர் கிருஷ்ணன், திருமிகு.கவிக்கோ ஞானச்செல்வன், திருமிகு ஹெச்.ராமகிருஷ்ணன் போன்றோர் கலந்துகொண்டு வாழ்த்தினர். சகோதரிகள் குமாரி அஞ்சனி – அஸ்வினி ஆகியோரின் இனிமையான வீணை இசையுடன் இனிதே ஆரம்பித்தது இந்த விழா. ‘வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள்’ என்று கலைவாணியை காட்சியில் நிறுத்தி, ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ எனத் தொடர்ந்து வாழ்த்தி, ‘குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா’ என மிக அழகானதொரு இசை வேள்வியை நிகழ்த்தி அனைவரையும் இசையில் மெய்யுருகச் செய்தனர். வளர்ந்துவரும் இசைக் கலைஞர்களை உற்சாகப்படுத்தி வரும் பொற்றாமரை அமைப்பு இம்முறை இக்கலைஞர்களை அறிமுகப்படுத்தி கௌரவித்துள்ளார்கள்.

    14712567_1275094235843036_7390068809339411174_o

    14691929_1274986885853771_6378079422552903539_o

    மாதமொரு இலக்கிய அறிமுகம் என்ற வரிசையில், திரு ம.வெ. பசுபதி அவர்கள் அருமையாக ஆசாரக்கோவை பற்றியும், கவிதை உறவு ஆசிரியர் திரு ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்கள் ‘சொந்தமாய் ஒரு சொர்க்கம்’ என்ற தலைப்பில் உறையாடியதைத் தொடர்ந்து தலைவர் தலைமையுரையுடன் விழா சிறப்பாக நிறைவடைந்தது.

    14712997_1274993309186462_1026205734414727114_o

    dsc_09441dsc_09521

    தலைவர் தமது தலைமையுரையில் குறிப்பிட்ட சில சுவையான செய்திகள்:

    தாம் மத்திய பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அந்த மக்களுக்காக பாடுபடப்போகிறாரா அல்லது பிறந்த மண்ணுக்காகப் பாடுபடுவாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, மத்திய பிரதேசம் என் புக்ககம் என்றாலும் நான் பிறந்த மண்ணான என் தாய் வீடாம் தமிழகத்தை எந்நாளும் மறவேன் என்று கூறியதாகக் குறிப்பிட்டார்.

    வாயால் நாம் உண்ணுவது அனைத்தும் வயிறைச் சென்று அடைந்து அங்கிருந்தே உடல் முழுவதிற்கும் சக்தி பெறுகிறது. வாய் நினைத்ததாம், தானின்றி வயிறுக்கு உணவேதும் கிடைக்காது என்ற மிதப்பில் தன்னை இறுக்கி மூடிக்கொண்டதாம். வயிறும் எந்த வேலையுமின்றி அமைதியாய் இருந்ததாம். இறுதியில் உடல் முழுவதும் வலுவிழந்து போனதாம். அந்த வகையில் கால் பகுதியிலிருந்து வயிற்றுப்பகுதிக்கு வந்து சேர்ந்துள்ள எனக்கு வாய் என்றும் துணை நின்றால் நம் பணிகள் சிறக்கும் என்பது உறுதி என்றார்.

    dsc_09371பிராந்திய கட்சித் தலைவர்கள் மட்டுமே தமிழை வளர்க்க முடியும் என்ற எண்ணங்களை உடைத்தெறிந்து தேசியத் தலைவர்களும் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட முடியும் என்பதை உணர்த்தும் வகையில் தாய் மொழியான தமிழ் மீது மட்டற்ற பற்று கொண்டு அதற்காகவே தமது வாழ்க்கையின் பெரும் பகுதியை அர்ப்பணித்துக்கொண்டுள்ள மாபெரும் தேசியத் தலைவர், தமிழ்வேள் இல.கணேசன் அவர்கள் பாராட்டுதலுக்கு உரியவர் என்பதில் ஐயமில்லை. மதுரையில் பூத்த பொற்றாமரையை சென்னையில் மலரச்செய்த மாபெரும் தலைவர் தமிழ்வேள் இல.கணேசன் அவர்கள். அன்று முச்சங்கம் கொண்டு தமிழ் வளர்த்தனர் பாண்டியர். இன்று பொற்றாமரைகொண்டு தமிழ் வளர்க்கும் தமிழ்வேள் இல.கணேசன் ஐயா அவர்களுக்கு தற்போது கிடைத்திருப்பது ஒரு சிறு அங்கீகாரமே. தமிழ்த்தாயின் அருட்பார்வையோடு அவர் மென்மேலும் பல்வேறு சிறப்புகள் அடைய வல்லமை வாழ்த்துகிறது.

    பாரதிய ஜனதா கட்சியின் தேசியக் குழுவின் உறுப்பினரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியுமான உயர்திரு இல. கணேசன் அவர்கள் பசுமைசூழ் தஞ்சை வளநாட்டில் பிப்ரவரி 17, 1945 ஆம் ஆண்டில் பிறந்தவர். ‘ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின்’ பிரச்சாரகராகவும், கட்சியின் தேசிய செயலராகவும், கட்சியின் தேசிய துணைத்தலைவராகவும் பணியாற்றிப்பின் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில செயலராக நியமிக்கப்பட்டவர்.

    தற்போது மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த நஜ்மா ஹெப்துல்லா மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டதால் மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள அந்த பதவிக்கு, தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும் கட்சியின் அகில இந்திய செயற்குழு உறுப்பினருமான திரு இல.கணேசன் அவர்களை கட்சித் தலைமை தேர்வு செய்ததையடுத்து இல.கணேசன் கடந்த மாதம் மத்திய பிரதேச மாநிலத்துக்கு சென்று மாநில சட்டமன்ற செயலாளரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பதால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    பாராளுமன்றத்தில் அவருடைய செயல்பாடு தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு பேருதவியாக அமையும் என்பதோடு பா.ஜ.க.வின் நிரந்தரமான வளர்ச்சியையும் உறுதி செய்யும் என்பதில் ஐயமில்லை. “காவிரி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்’ என்று தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் இல.கணேசன் தெரிவித்தது தமிழர்களுக்கு பெரும் நம்பிக்கையளிக்கக்கூடிய செய்தியாகும்.

    14753962_1275061399179653_1519628871610476637_o

    திரு இல.கணேசன் அவர்கள் பதவியேற்றவுடன், ‘ தமிழகத்தில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் நலன், மொழிக்காக குரல் கொடுக்க எனது வாழ்வில் முன்னுரிமை அளித்து வருகிறேன். காவிரிப் பிரச்சனையில் தமிழகக் கட்சிகளுக்கு உள்ள அக்கறை, உணர்வை பாஜகவும் பிரதிபலித்து வருகிறது. காவிரிக்காக தமிழக அரசு முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாஜக துணை நிற்கிறது. மாநிலங்களவையில் பேச வாய்ப்புக் கிடைக்குமானால் காவிரி விவகாரத்தை நிச்சயமாக எழுப்புவேன். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய வனத் துறை அமைச்சராக இருந்த போது பிரகாஷ் ஜாவடேகர் முன்னெடுத்த முயற்சிகளை, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் சேர்ந்து மேற்கொள்வேன். அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று உறுதியளித்துள்ளது வரவேற்பிற்குரியது. இதைத் தொடர்ந்து, பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களும் இதை உறுதி செய்து, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்க தாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்பதோடு, இந்த விவகாரத்தை அரசியலாக்கும் வகையிலோ, ஆதாயம் தேடும் வகையிலோ பாஜக எக்காலத்திலும் ஈடுபடாது என்றும் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வருவது தொடர்பான சட்ட விவகாரங்களை மத்திய அரசு ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள். இந்த வகையில் தமிழ் நாட்டின் எதிர்காலம் பட்டொளி வீசும் என்ற நம்பிக்கையும் உடன் வருவதும் நிதர்சனம்.

    வாழ்க பாரதம்!

    Share
  • ‘சொல்லின் செல்வரின்’ சமுதாய அக்கறை!

    பவள சங்கரி

    DSC_0795[1]

    DSC_0799[1]
    ஈரோடு கொங்கு கலையரங்கில் நேற்று (24/07/2016) சி.கே.கே. அறக்கட்டளை சார்பில், சமுதாய அக்கறை உள்ளதா என்பது குறித்த பட்டி மன்றம் நடந்தது. ‘சொல்லின் செல்வர்’ திரு சுகி.சிவம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடந்த இந்த பட்டி மன்றத்தில் சமுதாய அக்கறை குறைந்துள்ளது என்ற அணியில் பேரா. ராமச்சந்திரன், திரு.மோகனசுந்திரம், பேரா. திருமதி.சாந்தாமணி ஆகியோரும், சமுதாய அக்கறை அதிகரித்துள்ளது என்ற அணியில் முனைவர்.சுந்தர ஆவுடையப்பன், திரு மணிகண்டன், வழக்கறிஞர் சுமதி ஆகியோரும் வாதிட்டனர். இலக்கிய அரங்கம் என்று ஆவலாகச் சென்றவர்களுக்கு சற்று ஏமாற்றம்தான். காரணம் வாதிட்ட அனைவரும் இலக்கியம் குறித்து ஏதும் பேசவில்லை. மேலோட்டமான வாதமாகவே இருந்தது. ஆனாலும் அனைவரின் வாதங்களும் சுவையாகவே அமைந்திருந்தது. இந்தக்குறையை நிவர்த்தி செய்யும்விதமாக நடுவர் திரு சுகி.சிவம் அவர்கள் தமது உரையில் ஆழ்ந்த பல கருத்துகளை முன்வைத்தது பாராட்டிற்குரியது.

     

     

    Share
  • தமிழ்த் தேசியவாதியுடன் சிறப்பு நேர்காணல்

    பவள சங்கரி

    தமிழ்த் தேசியவாதி ஐயா திரு பழ.நெடுமாறன் 1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள் , கி. பழநியப்பனார் மற்றும் பிரமு அம்மையாருக்கும் தவப்புதல்வனாய்ப் பிறந்தவர். இவரது தந்தையார் மதுரைத் தமிழ்ச் சங்க செயலாளராகவும், மதுரை திருவள்ளுவர் கழக நிறுவனராகவும் பணியாற்றியவர். 1942 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாடு, 1948 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ்த் திருநாள், 1956 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா போன்ற மாபெரும் தமிழ் மாநாடுகளைச் சிறப்புற நடத்திய பெருமை அவர்தம் தந்தையாரையேச் சாரும். பழ.நெடுமாறன் அவர்களுக்கு பார்வதி என்ற மனைவியாரும், ஒரு தமக்கை, ஒரு தங்கை, மூன்று தம்பிகளும் உள்ளனர்.

    ஆரம்பக் காலத்தில் மகாத்மா காந்தி, காமராசர் மீது கொண்ட பற்றின் காரணமாக இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். இந்திரா காந்தி அம்மையார் மதுரையில் தாக்கப்பட்ட போது அவரை உயிருடன் மீட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. திரு காமராசர் அவர்கள் நெடுமாறன் ஐயாவின் துணிவையும் நற்குணத்தையும் வெகுவாகப் பாராட்டி அவருக்கு “மாவீரன்” என்ற பெயரையும் சூட்டினார். சில கருத்து வேறுபாடுகளினால் காங்கிரசை விட்டு வெளியேறியவர் , பின்னர் காமராசர் காங்கிரசு என்ற இயக்கத்தை தோற்றுவித்தார். ஈழப் பிரச்சனையில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு தமிழர்களின் நலன் கருதி தமிழர் தேசிய இயக்கத்தைத் துவக்கினார். பதவிக்காகவேண்டி தேர்தல் அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்த்து முற்றிலும் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை மட்டுமே முன்னிறுத்தும் சமூக நலப்பணி அரசியல் வழியைத் தேர்ந்தெடுத்து செயல்பட்டு வருகிறார்.

    DSCN2103
    இந்தியாவில் தூக்குத் தண்டனையை அறவே நீக்க வேண்டும் என்பதற்காக தமிழகமெங்கும் பெரும் இயக்கத்தை நடத்தியதோடு சென்னையில் ஐம்பதினாயிரம் பேரைத் திரட்டி மரண தண்டனை ஒழிப்பு ஊர்வலம் நடத்தியதன் மூலம் பெரும் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தியவர் இவர். 1983 ஆம் ஆண்டில் கொழும்பில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட துக்கமான நிகழ்வின்போது 5000 தொண்டர்களுடன், மதுரையிலிருந்து இலங்கை நோக்கி தமிழர் தியாகப் பயணம் மேற்கொண்டார். 1991 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த காயமடைந்த, ஊனமுற்ற விடுதலைப் புலிகளின் நிலைமை குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு முறையிட்டு அவர்கள் விடுதலை பெற பெரிதும் உதவினார். 2000 ஆம் ஆண்டில் வீரப்பன், கன்னட நடிகர் இராசகுமாரை கடத்திய போது காட்டுக்குள் சென்ற மீட்புக் குழுவிற்குத் தலைமை ஏற்றுச் சென்று வீரப்பனிடம் பேசி இராசகுமாரை விடுவிக்கவும் உதவியவர். இதன் விளைவாக இரு மாநிலங்களுக்கிடையே மூளவிருந்த பெரும் இனக் கலவரத்தைத் தடுத்து நிறுத்திய பெரும்பேறும் பெற்றவர் இவர். 2000 ஆம் ஆண்டில் வீரப்பனுக்கு உதவியவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் தடா சட்டப்படிக் கைது செய்யப்பட்டு அதன் காரணமாக மைசூர் சிறையில் வாடிய 121 அப்பாவி ஊர்க்காரர்களின் வழக்கைச் சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு நடத்தி அவர்களில் 117 பேரின் விடுதலைக்கு வழி வகுத்த உத்தமரும் இவர்தான்.

    மாணவப் பருவத்திலிருந்து இன்று வரை தமிழர்களின் நலம் சார்ந்த பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு அதன்பொருட்டு சுமார் 50 க்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டு காவலிலும் சிறையிலும் நாட்கணக்கிலும் மாதக் கணக்கிலும் வைக்கப்பட்டவர். ஐயா அவர்கள் மக்கள் நலன் கருதி தமிழகத்தின் ஒன்றிரண்டு சிறைகளைத் தவிர ஏனைய அனைத்துச் சிறைகளிலும் இருந்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

    DSCN2039

    DSC_0600[1]

    1611e269-dc52-499d-a5a6-359194b3e624சமீபத்தில் ஈரோடு திருமுறைக்கழக நிறுவனர் ரா.ப. தங்கவேலனார் நூற்றாண்டு விழா மற்றும் பெரிய புராணப் பேரொளி உயர்திரு ஈரோடு தங்க.விசுவநாதன் அவர்களின் பவள விழா நிகழ்வில் கலந்துகொண்டு, அவ்வமயம் அடியேனின் ’கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம்’ என்ற நூல் உலகத் தமிழினத் தலைவர் திருமிகு பழநெடுமாறன் அவர்களால் சிறப்பாக வெளியிடப்பட்டது. நூல் அவர் கையில் கிடைத்த குறுகிய கால அவகாசத்திலேயே நூலின் தலைப்பினாலேயே தாம் மிகவும் ஈர்க்கப்பட்டதால், வாசிக்கும் ஆர்வம் ஏற்பட்டு விரைவில் பெரும்பகுதி படித்ததாகவும், பல நூல்கள் அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருப்பதைப் போல் அல்லாமல் இந்நூல் ஒரு புதிய கோணத்தில் ஆய்வு செய்யப்பட்டிருப்பதைத் தாம் மகிழ்ந்து வரவேற்பதாகவும், அதற்காகவே தமது மனம் நிறைந்த பாராட்டுகளை வழங்குவதாகவும் ஐயா அவர்கள் பேசியது மிகவும் உற்சாகம் அளிக்கக்கூடியதாக இருந்தது. நூல் பற்றிய பல விளக்கங்களை பொறுமையாகக் கேட்டறிந்ததோடு விரிவாக எழுதுவதாகவும் கூறியுள்ளார். ஐயா அவர்கள் அடுத்த ஆய்வு நூலுக்கான அச்சாரமும் போட்டு வாழ்த்தியது மன நிறைவை ஏற்படுத்தியது. நிறை குடங்கள் என்றும் நீர் தளும்புவதில்லை என்று முழுமையாக உணர்ந்த தருணமும் இதுதான்…. இவ்வரிய தருணத்தில் ஐயா அவர்களுடன் நம் வல்லமை இதழுக்காக மேற்கொண்ட சிறப்பு நேர்காணலின் தொகுப்புகளைக் கீழே காணலாம்:

    எங்களுடைய பல விதமான ஐயங்களுக்கு மிகத் தெளிவாக பதில் அளித்து தம்முடைய நெருக்கடியான நேரச்சூழலிலும் பல மணித்துளிகளை நமக்காகச் செலவிட்ட ஐயா பழ.நெடுமாறன் அவர்களின் மனிதம் போற்றும் பேராண்மையை வணங்கி விடைபெற்றோம்.

    உடன் இருந்து உதவியதோடு ஐயாவின் உள்ளம் அறிந்து மனம் நெகிழ்ந்து போற்றி, தம் ஐயங்களையும் தெளிவு பெற்ற தமிழர், இன்முகம் நிறை வல்லமை மிக்க இளைஞர் திரு அகரம் பார்த்திபன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    நன்றி

    அன்புடன்

    பவள சங்கரி

    Share
  • ஔவை நடராசன் – 81

    Avvai Natarajan and Annakannan

    புகழ் பூத்த தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள், அண்மையில் முத்து விழா கண்டுள்ளார். 80 வயது நிறைந்து, 81ஆம் ஆண்டில் நுழைந்துள்ளார். கனிந்த வயதில், நிறைந்த வாழ்வில்,  செறிந்த அனுபவங்கள் கொண்ட அவருடன் அண்ணாகண்ணன், 2016 மே 2ஆம் நாள் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல் இங்கே.

     

    Share
  • ‘கடலோடி’ நரசய்யா (2)

    பவள சங்கரி

    Narasiah
    நம் இந்தியக் கப்பற்படையில் பணியாற்றியவரும், நம் நாடு சுதந்திரம் பெற்றிருந்த காலகட்டங்களில் பொறுப்பான பதவிகளில் இருந்தவர் மட்டுமல்லாது, ஒரு மீப்பெரும் எழுத்தாளராகவும் இருக்கும் ஒரு ஆளுமையைச் சந்திக்கப்போகிறோம் என்ற பேராவல் உடன்வர பேராசிரியர் நாகராஜன் ஐயா அவர்களும் நான் நரசய்யா ஐயாவை சந்திக்கப்போவது தெரிந்தவுடன் உடன் வருவதாகக் கூறிவிட்டார்கள். அவர்தம் இல்லத்தின் எல்லையைத் தொட்டவுடன் கட்டிடப் பாதுகாவலர், ‘இதோ இந்த வீடுதான். ஐயா உங்களுக்காகத்தான் காத்திருக்கிறார்’ என்றார். வீட்டிற்குள் நுழைந்தவுடன் தம்பதி சமயதராக வந்து வரவேற்று அன்பாக இருக்கையில் அமரச் செய்தார்கள். இலக்குமி கடாட்சம் முழுமையாக நிறைந்திருந்த இல்லம் அது. நாங்கள் அமர்ந்திருந்த, சற்றே பள்ளமாக அமைந்திருந்த வரவேற்பறையின் நேர் எதிர்புறம் முதன்முதலில் கண்களில் பளிச்சிட்டது பரந்த அழகானதொரு ஓவியம். இரண்டு, மூன்று முறை திரும்பத் திரும்ப என் பார்வை அதன் மீதே செல்வதைக் கண்ணுற்றவர் குறிப்பால் என் எண்ணம் உணர்ந்தவராக அது செருமனியில் இருக்கும் ஒரு கோட்டை என்றும் அந்த ஓவியத்தைத் தீட்டியதும் தான் தான் என்ற ஆச்சரியமான தகவலையும் அளித்தார். பன்முக நாயகரின் மற்றொரு முகத்தையும் அறிந்த திருப்தி எங்களுக்கு. அம்மையாரின் அன்பான உபசரிப்புடன் எங்கள் உரையாடல் துவங்கியது.

    bbb7c505-ab26-4d72-a71b-a70d3d821dab

    பணியையும், எழுத்தையும், வாழ்க்கையையும் சமமாக பாவிக்கும் மனித நேயமிக்க ஒரு எழுத்தாளர் திரு நரசய்யா அவர்கள். அதாவது எந்த முகமூடியுமில்லாத வெளிப்படையான பேச்சே இவருடைய மொத்த உருவமாக உயர்ந்து நிற்கிறது! சமகால எழுத்து மட்டுமன்றி, தொல்லியல் சார்ந்த பதிவுகள், வரலாற்றுத் தகவல்கள், விமர்சனங்கள், நாட்டு நடப்பு என பல்வேறு தளங்களில் மிக அமைதியாக, தன் போக்கில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மிக சுறுசுறுப்பாக இயங்கி வருபவர் இவர். பெரும்பாலும் பிரபலமான அனைத்து தினசரிகள், வார இதழ்கள், இணைய தளங்கள் என பல்வேறு பத்திரிகைகளில் இவரது படைப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. எந்த ஒரு விசயத்தையும் ஆய்வுப்பூர்வமாக அணுகி அதன் நன்மை, தீமைகளை எந்தவிதமான மேற்பூச்சுமின்றி வெளிப்படையாக விவரிப்பதில் வல்லவர் இவர். அனைத்திற்கும் மேலாக வார்த்தைகளில் தெளிவும், எவரையும் புண்படுத்தாத நளினமும் இவருடைய தனித்தன்மை. அந்த வகையில் அன்பான மனைவியையும், பண்பான இரு மகன்களும் கொண்ட அழகான குடும்பத்தின் சொந்தக்காரர் இவர். இரண்டு மகன்களும் திருமணமாகி குழந்தைகளுடன் நல்ல நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு மகன் தன்னைப் போலவே கப்பற் பணியில் ஈடுபட்டு இளம் வயதிலேயே மிக உயர் பதவியை வகிப்பதை பெருமை பொங்கக்கூறுகிறார். அமைதியும், அருளும் நிறைந்த அழகிய குடும்பத்தின் தலைவராக இருக்கும் , நரை, திரை மூப்பைக் கடந்த இந்த இளைஞருக்கு 83 வயது என்று சொன்னால் நம்புவது சற்று கடினமாகத்தான் உள்ளது. புலவர் பிசிராந்தையாரிடம் ஒரு வழிப்போக்கர் அவருடைய இளமையின் இரகசியம் குறித்து கேட்டபோது அவர் பாடிய அந்த புறநானூற்றுப் பாடல்தான் நினைவிற்கு வந்தது.

    ” யாண்டு பலவாக நரையில வாகுதல்
    யாங்காகியர் என வினவுதிராயின்,
    மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
    யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
    அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை
    ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
    சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.”

    திரு நரசய்யா அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நான் முதன்முதலில் ஐயாவைச் சந்தித்ததும் இக்குழுவின் துணைத்தலைவர் முனைவர் சுபாஷிணி அவர்கள் நடத்திய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில்தான். அந்த நிகழ்ச்சியில் என் நான்கு நூல்களும் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் ஒரு நூலுக்கு ஐயா அவர்களின் அணிந்துரை பெற்றிருந்ததும் என் வாழ்நாள் நினைவுகூரத்தக்க செய்திகள் என்றால் அது மிகையாகாது! அவருடைய வரலாற்று ஆய்வுகளின் விருப்பமான ஒரு வாசகியாக, அவர்தம் பணிசார்ந்த ஆளுமையை வியப்புடன் நோக்கும் ஒரு சாதாரண இந்தியக் குடிமகளாக அவரைச் சந்திக்கச் சென்றவள் மனிதம் நிறைந்த அந்த இணையரைச் சந்தித்துவிட்டு ஒரு அன்பு மகளாய் திரும்பி வந்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.

    99d5cab1-8444-44ed-917a-defa7c80afb2

    எடுத்த எடுப்பில் ஆணித்தரமான வாதங்களை வெகு எளிதாக இருவரும் துவங்கிவிட்டனர். இடையிடையே விட்ட இடத்தை இணைத்துப் பிடிக்கச் செய்வதும், எனது ஐயங்களை தீர்த்துக்கொள்ள எழுப்பிய வினா மட்டுமே எனது பணியாக இருந்தது. சம்பிரதாயமான விசாரிப்புகளுக்குப் பிறகு தமது நூலக அறைக்கு அழைத்துச் சென்றார் மிகப்பெருமையாக. தலையணி அளவிற்கு பெரிய, பிரபலமான பன்னாட்டு எழுத்தாளர்களின் ஆங்கிலப் புத்தகங்கள் நிரம்பியிருந்த அறையில், பல தமிழ் நூல்களும், இரண்டு புராதன பெரிய பிரம்பு இருக்கைகளையும் காண முடிந்தது. எண்பது ஆண்டுகள் பழமையான அந்த நாற்காலிகளை தம் மகன் மூலம் விரும்பி பரிசு பெற்றதாக பெருமை பொங்கக் கூறியபோது ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை அவர் முகத்தில் காண முடிந்தது. பல அரிய நூல்களுக்கு மதிப்புரை வழங்கியுள்ளவருக்கு சம்பந்தப்பட்ட அயல்நாட்டு ஆளுமைகளிடமிருந்தும் கிடைத்த பாராட்டுக் கடிதங்களையும் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. சில அரசு அலுவலகங்களில் தகுந்த ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்பது பற்றிய பேச்சை மிக ஆக்கப்பூர்வமாக அதே சமயம் நகைச்சுவையாக ஆரம்பிக்க பேரா. நாகராசன் அவர்களும், ‘inclination’ (Inclination is defined as a tendency towards something, such as a behavior or a habit) என்ற பண்பாடு, அதாவது ஏதாவது ஒரு விசயம் பற்றிய மாற்று கருத்தை முன்வைக்கும்போது அதை நாசூக்காக கையாள வேண்டியது பற்றிய சிறு விவாதம் வந்தது.

    06cf7c51-3a8a-45e5-aa0b-bc35f056741b

    நரசய்யா அவர்கள் சரிதான் என்று ஆமோதித்தவர், “நம்ம ஆட்கள் ஆதாரங்கள் ஏதும் இல்லாமலே நல்ல கதை விடக் கற்றுவைத்திருக்கிறார்கள். அதுதான் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. எழுத்தாளர் ஜெயமோகன் மீது எனக்கு எப்பொழுதும் மரியாதை உண்டு. ஆனால் அவர் சொன்ன அந்த பக்கிங்காம் கால்வாய் குறித்த விசயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அதற்கு பதிலாக, வரலாற்றுத் தகவல்களை சரியாக அறிந்துகொள்ளாமல் கற்பனையாக எதுவும் எழுதுவது சரியல்ல என்று எழுதிவிட்டேன். பக்கிங்காம் கால்வாய் பகுதிகளின் முந்தைய நிலையை நன்கு அறிந்தவன் நான். ஒரு பெரிய பொறியியல் வல்லுநர் இது குறித்து எழுதிய ஆய்வுத் தகவல்களை வாசித்திருக்கிறேன். அதற்கான ஆதாரங்களாக என்னிடம் படங்கள் உள்ளன. பக்கிங்காம் கால்வாய் அப்போது மிக சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு படக்குத்துறை. அங்கு குறைந்தது 30 படகுகள் நின்றுகொண்டிருக்கும். இப்போது அங்கு எப்படியிருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். அதேபோல் சிலர் எடுத்ததற்கெல்லாம் லெமூரியாக் கண்டம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எதற்கும் அடிப்படை ஆதாரங்கள் இல்லாத ஒரு விசயத்தை திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருப்பதில் சலிப்புதான் மிஞ்சுகிறது.

    திரு நரசய்யா அவர்கள் குறிப்பிட்ட, எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களின் ஒரு கட்டுரையின் பக்கிங்காம் கால்வாய் பற்றிய பகுதி கீழ்வருமாறு:

    “இந்தியாவில் எப்போதுமே வரட்சி உண்டு. நூற்றாண்டுகளாகவே மழைபொய்த்து வரும் வரலாறு நமக்குண்டு. மழை பொய்க்கும்போது நாம் பஞ்சம்பிழைக்கச்செல்வோம். இந்தியாவின் மேற்குப்பாதியில் நல்ல விளைச்சலிருந்தால் கிழக்குப்பாதியில் மழை இருக்காது. இங்கே ம்ழை இருந்தால் அங்கே இருக்காது. இதுதான் இங்குள்ள இயற்கை. மக்கள் மழை இல்லாவிட்டால் மறுபாதிக்கு கிராமங்களையே காலிசெய்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். இஸ்லாமிய ஆவணங்களில் அப்படி மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து ஊர்கலும் நகரங்களும் காலியாகக் கிடப்பதைப்பற்றிய வரிவசூலதிகாரிகளின் குறிப்புகள் பல உள்ளன.
    ஆனால் இந்த உப்புவேலி அந்த இடப்பெயர்வை தடுத்துவிட்டது. பஞ்சம் இருந்த இடங்களுக்கு தானியம் செல்வதையும் அது தடுத்துவிட்டது. தஞ்சைக்கும் ராமநாதபுரத்துக்கும் நடுவே ஒரு பெரிய மதில்கட்டினால் என்ன ஆகும்? அதுதான் நடந்தது

    இரண்டாவது பெரும் பஞ்சம் வந்ததற்குக்காரணம் ரயில்பாதைகள்தான். அவ்வருடங்களில் பஞ்சாபில் மிகச்சிறந்த விளைச்சல் இருந்தது. மொத்த தானியத்தையும் வெள்ளையர் ரயில்பாதைகள் வழியாக துறைமுகத்துக்கு திரட்டிக்கொண்டு சென்று ஏற்றுமதி செய்தார்கள். உலகமெங்கும் போரிட்டுக்கொண்டிருந்த தங்கள் ராணுவத்துக்கு அந்த உணவை அளித்தார்கள்
    பஞ்சத்தில் மக்கள் கோடிக்கணக்காகச் சாகும்போது துறைமுகங்களில் உணவு மலைமலையாகக் குவிந்துகிடந்தது. ஆறுமாதம் உணவு ஏற்றுமதியைத் தடுத்து நிறுத்தினால்போதும் பஞ்சத்தைத் தடுத்துவிடலாம் என பிரிட்டிஷ் மனிதாபிமானிகளே கண்ணீர் விட்டு கெஞ்சினார்கள். ஆதிக்க அரசு செவிசாய்க்கல்வில்லை.

    அந்த பெரும்பஞ்சத்தில் சென்னையை ஆட்சி செய்வ்ர் பக்கிங்ஹாம் பிரபு. அவர் இங்கே பணம் சேர்ப்பதற்காகவே அனுப்பப்பட்டவர். அவரது குடும்பம் நொடித்துப்போயிருந்தது. அவர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு விசுவாசமாக இருந்ததனால் அவரை பணம் நிறையக்கொட்டும் இடமான சென்னைக்கு அனுப்பினார்கள். நண்பர்களே அக்கால சென்னை வெள்ளை கவர்னர்கள் அடித்த கொள்ளையை இன்றைய மதிப்புப்படி பார்த்தால் 2ஜி எல்லாம் சும்மா பொரிகடலை மாதிரி.

    பக்கிங்க்ஹாம் பஞ்சத்தைப்பணமாக்கினார். இந்தியாவிலிருந்து கோடிக்கணக்கான கூலிகளை கப்பலில் ஏற்றி கிழக்கே நியூசிலாந்து முதல் மேற்கே கரீபியன் தீவு வரை, மலேசியா இலங்கை ஆப்ரிக்கா என கொண்டு சென்று அடிமைவேலை வாங்கினார்கள் வெள்ளையர். அப்படிக் கொண்டுசெல்பவர்களில் பத்தில் ஒருவரே தேறுவார்கள், மிச்சபேர் நோயிலும் குளிரிலும் மடிவார்கள். ஆகவே பத்து மடங்கு ஆட்களைக் கொண்டுசெல்லவேண்டியிருந்தது. அதனா இங்கே பஞ்சம் குறையக்கூடாது என ஆசைப்பட்டனர் வெள்ளை நில உடைமையாளர்கள். பஞ்சத்தை குறைக்காமலிருக்க அரசுக்கு கப்பலுக்கு இவ்வளவு என்ற கணக்கில் பணத்தை கொட்டிக்கொடுத்தனர்.

    கடைசியாக பக்கிங்காம் கண்டுபிடித்த வழிதான் பக்கிங்ஹாம் கால்வாய். சென்னைமுதல் விசாகப்பட்டினம் வரை ஒரு தரைவழிக் கடல்பாதை. பக்கத்தில்தான் கடல் இருக்கிறது. இந்தப்பாதை அவசியமே இல்லை. ஆனால் கோடிக்கணக்கான மக்களை ஒருவேளை கஞ்சி மட்டும் கொடுத்து வேலைவாங்கி அதைக் வெட்டினார்கள். கூலி இல்லை. கூலி முழுக்க செலவாகக் காட்டப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. அந்தக்கால்வாய் சில வருடங்கள் கூட பயன்படவும் இல்லை.”

    மேலும் ஆர்வமாகத் தொடர்கிறார்.

    வ.ரா., சிட்டி, கு.ப.ராஜகோபால், பிச்சமூர்த்தி போன்ற பெரும் எழுத்தாளர்களை நான் சந்தித்திருக்கிறேன். எத்தனை பெரிய ஆளுமைகள் அவர்கள்! ஒரு முறை சிட்டி அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்து சிரித்தார். உலகத்திலுள்ள அனைத்து மொழி வார்த்தைகளுக்கும் தமிழில் வேர்ச்சொல் உள்ளது என்கிறார்களே.. நான் ஒரு வார்த்தை சொல்கிறேன் அதற்கு வேர்ச்சொல் சொல்லுங்கள் என்றாராம் ஒருவர். ‘insect’ என்ற ஆங்கில வார்த்தைக்கு வேர்ச்சொல் சொல்லுங்கள் பார்க்கலாம் என்றாராம். பின் அவரே அதற்கு, ‘இம்சைக்குட்டி’ என்ற சொல்லாடல் தான் ‘insect’ ஆனது. ஆங்கிலேயர் ஒருவர் ஒரு பூச்சியைப் பார்த்து இது என்ன என்று கேட்கப் போக அதற்கு ஒருவர் போகிறபோக்கில் ‘இம்சைக்குட்டி’ என்றாராம். உடனே ஆங்கிலேயர் பேச்சு வழக்கில் இம்சைக்குட்டி என்று சொன்னதைக் கேட்டவன் ‘insect’ என்று பெயர் வைத்துக்கொண்டானாம் என்று கிண்டலாகச் சொல்லிச் சிரிப்பார். சிட்டி அவர்களிடம் நிறைய பேசியிருக்கிறேன். எனக்கு நெருங்கிய உறவு முறை அவர் என்பதும் ஒரு காரணம். மிகப்பெரிய ஆளுமை அவர். நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவர். என்னுடைய ‘கடல்வழி வணிகம்’ நூலுக்கு அணிந்துரை எழுதச்சொன்னபோது அப்போதுதான் அவர் ஒரு அறுவைச் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்தார். இருந்தாலும் நான் இந்த நூலை எழுதிக்கொண்டிருக்கும்போதே அடிக்கடி என்னைத் தொடர்புகொண்டு மிக ஆர்வமாக செய்திகள் அனைத்தையும் கேட்டு அறிந்து உள்வாங்கிக்கொண்டிருந்தார். பின் அவரே அணிந்துரையும் எழுதிக்கொடுத்தார். அப்படி எழுத்தாளர் என்பவர்களுக்கு நிறைய பக்குவம் தேவை. சிட்டி அவர்களின் வாழ்க்கை வரலாறை, ‘சாதாரண மனிதன்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன்.

    சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
    வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

    என்பார் வள்ளுவர். அதுபோன்ற சொற்கள் மட்டுமே ஆக்கங்களாக இருக்கவேண்டும். அதை இன்றைய எழுத்தாளர்கள் கட்டாயம் வளர்த்துக்கொள்ள வேண்டும்”.

    இடையில் பேரா. நாகராஜன் அமெரிக்க உளவியல் துறை ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு குறித்து பகிர்ந்துகொண்டார். இன்றைய நவீன உளவியல்துறை சார்ந்த மருத்துவம் என்பது அன்றைய புத்த மத முக்கிய கோட்பாடுகளின் வழியே வந்தவைதான். புத்த பிட்சுகளை தெருவோரங்களில் கண்டால் பிடித்துக்கொண்டு வாருங்கள் என்பார்களாம். ஆரம்ப காலங்களில் உளவியல் சார்ந்த பல கருத்தாக்கங்களை புத்தமதங்களிலிருந்துதான் வந்தது என்றார்.

    அடுத்து கீழை நாட்டு நாகரீகம் (orientalism) குறித்த பேச்சு வந்தது. இவை பற்றியும், நரசய்யா அவர்கள் எப்படி, ஏன் கப்பற்படை பணியைத் தேர்ந்தெடுத்தார் என்பது போன்ற சுவையான தகவல்களை இவர்களின் குரல் மூலமாகவே கேட்டுத் தெரிந்துகொள்வோமே..

    தென் அமெரிக்காவில் வாழும் இலா காந்தி மகாத்மா காந்தியின் பேத்தி. இவர் மணிலால் காந்தி என்பவரின் மகளும், பீனிக்சு செட்டில்மெண்ட்டில் வளர்ந்து பட்டம் பெற்றவருமாவார். இவர் ஒரு சமூக சேவகியாக வெரூலம் குழந்தைகள் மற்றும் குடும்ப நலத்துறையில் 15 ஆண்டுகளும், தர்பன் இந்தியக் குழந்தைகள் மற்றும் குடும்ப நலத்துறையில் ஐந்து ஆண்டுகளும் பணிபுரிந்தார். இலா காந்தி அதன் துவக்கத்திலிருந்து 1991 வரை பெண்கள் நதால் நிறுவனங்களின் நிர்வாகக்குழு உறுப்பினராகப் பணியாற்றினார். நிறவெறி தீவிரமாக இருந்த (1975) காலகட்டங்களில் இவர் அரசியல் நடவடிக்கைகளிலிருந்து தடை செய்யப்பட்டு 9 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தப் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டி மறைமுகமாகவும் செயல்பட்டார். இனவெறிக்கு எதிரான போராட்டத்தின்போது இவருடைய மகன் ஒருவரும் கொல்லப்பட்டார். தமது விடுதலைக்கு முன்பு நெல்சன் மண்டேலாவை சந்தித்த ஐக்கிய ஜனநாயக முன்னணி உறுப்பினர்களில் இவரும் ஒருவர். பாராளுமன்றத்தின் சேவைக்குப் பிறகு காந்தி, உள்நாட்டு வன்முறைக்கு எதிராக ஒரு 24 மணி நேரத் திட்டம் உருவாக்கியதோடு, காந்தி மேம்பாட்டு அறக்கட்டளையையும் நிறுவி, மத அலுவல்கள் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியதோடு ஒரு மாதப்பத்திரிகையின் மேற்பார்வை பணியிலும் ஈடுபட்டிருந்தார். மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை குழுவிலும், மகாத்மா காந்தி மேம்பாட்டு அறக்கட்டளையிலும் தலைமைப் பொறுப்பேற்றிருந்தார். இலா காந்தி பல ஆண்டுகளாக டெக்னாலஜி டர்பன் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றினார். 2007 இல், இவருக்கு பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது.

    இலா காந்தி மற்றும் மகாத்மா காந்தியின் பெயரர் கோபாலகிருஷ்ண காந்தி இருவரும் தமது மதிப்புரைக்கு அளித்த அங்கீகாரத்தை மனமகிழ்ந்து நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் திரு நரசய்யா அவர்கள்.

    இந்து நாளிதழில் வெளியான இந்நூலின் மதிப்புரை:

    http://www.thehindu.com/books/literary-review/kra-narasiah-reviews-the-south-african-gandhi-stretcherbearer-of-empire/article8058578.ece

    03sm_gandhi_jpg_2680646g

    She commented on my review:

    “This article [my review] points out that the book is a distortion of facts and I agree with that fully. It is difficult to understand why the vicious attack as a follow up support to Arundhati Roys book. I want to make three comments. 1. Madam Roy and her supporters should concentrate on boosting the image of their Hero Dada Ambedkarji by publicising his own work and his own contribution to the liberation of India rather than by attacking Gandhiji.

    2. This book is a build up from two previous publications by Deedat and Swartz . I draw this conclusion because they clearly ignore the many articles in the Indian Opinion both in relation to African people as well as in relation to the plight of the indentured .

    3. Gandhiji indeed was human and his work, qualities and commitment to the betterment of humanity and the universe needs to be acknowledged so that future generations can learn from it not worship it.”
    A reader named P rajeswaran said:
    “I fully agree with Mr Narasiah! The book fails miserably in proving that Gandhi was a racist..well Gandhi might have had different views (of indifference) at some earlier stages in his life in South Africa but they all changed over time to make him what he later came to be known famously for. Nothing wrong in such attempts at discrediting a world famous figure like the Mahatma. They could have been a little more fair in their treatment of the issues and their viewing angles, perhaps!”

    Gopalkrishna Gandhi grand son of both Mahatma and Rajaji wrote to me

    Dear and esteemed sir
    Of course I remember you !
    Thank you for your gracious observations on my Colombo speech.
    I did indeed read your review and found it eminently fair.
    MKG will never be free of his prejudices detractors, just as he will never be free of his uncritical devotees.
    And he will survive both.
    By a coincidence, only this morning I was with Mrs Mina Swaminathan at a talk on music and the brain by Dr ES Krishnamoorthy.
    With regards,
    Gopal

    நன்றி : காணொலிப் பதிவு – பேரா. நாகராஜன்

    Share
  • ’கடலோடி’ நரசய்யா

    பவள சங்கரி

    வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்
    மாட்சியின் மாசற்றார் கோள்.

    வள்ளுவனார் வழியில் வாழ் அறிவுடையார் இவர் என்பதை இவருடன் சிறிது பொழுதே உரையாடும் எவரும் எளிதில் உணரக்கூடும். நம் இந்தியக் கப்பற்படையில் பணியாற்றிய பெருந்தகை, கடலாய்வறிஞர், வரலாற்றாய்வாளர், சிறந்த கட்டுரையாளர், கதாசிரியர், தேச பக்தர், மனிதாபிமானி என பன்முகங்கள் கொண்ட ஆளுமை இவர். கப்பற் பொறியியல் கல்வியில் தேர்ச்சி பெற்ற இவர் ‘நரசய்யா’ என அனைவராலும் அன்பாக அழைக்கப்பெறும் , ஒரிசா மாநிலத்தின், பெரகாம்பூர் என்னும் இடத்தில் பிறந்தவரான, காவூரி ராமலிங்கம் அப்பல நரசய்யா என்பவர். இந்திய கடற்படை கப்பல்களில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த பேறு பெற்றவர். அதன்பின் ஐ.என்.எஸ்.விக்ராந்த் என்ற விமானந்தாங்கிக் கப்பலின் விமானத் தளத்தின் தலைவராக (ஃபிளைட் டெக் சீஃப்) பணியாற்றினார். பிறகு வணிகக் கப்பலில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இறுதியாக விசாகப்பட்டினத் துறைமுகத்தில் 1991ஆம் ஆண்டில் தலைமைப் பொறியாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். துறைமுகப் பணியின் இடையில் வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்கவேண்டி கடற்படையால் அழைக்கப்பட்டு அதில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. உலக வங்கியின் அழைப்பின்பேரில் ஆலோசகராகவும், கம்போடியா புனர் நிர்மாணத்தில் பங்கு கொண்டதும் இவருடைய ஆகச்சிறந்த ஆளுமை குறித்து நாம் அறிந்துகொள்ளத் தக்கதாகும்.

    DSC_5842

    இத்தனை பணிச் சிறப்புகளைப் பெற்றிருந்தபோதிலும் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் ஆகச்சிறந்த இலக்கியப் படைப்புகளையும் வழங்கியுள்ளவர், தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட நரசய்யா அவர்கள். இவர் ஒரு சிறந்த படைப்பாளி என்பதற்கான ஆதாரம், ” நீங்கள் எழுத்தாளர்களென நம்புபவர்களெல்லோரையும் விட சிறந்தவர்கள் இவர்கள்” என சாரு நிவேதிதா விகடன் கட்டுரைத் தொடர் ஒன்றில் பட்டியலிட்டிருந்த எழுத்தாளர்களில் திரு நரசய்யா அவர்களும் ஒருவர் என்பதுதான். இதில் திரு நரசய்யா அவர்களின் சிறந்த ஆக்கம் என்று ‘கடலோடி’ என்ற அவருடைய பயணக் கட்டுரை நூலையே குறிப்பிட்டிருக்கிறார்.

    திரு நரசய்யா பற்றி மேலும் விரிவாக அறிந்துகொள்ள அவருடைய ஒரு சில நூல்களையே துணையாக்கிக்கொள்வோமே!

    305753

    இராணுவம், கடல், கப்பல் போன்று, நாம் அதிகமாக அறிந்திராத பிரம்மாண்டங்கள் பற்றி அரிதான தகவல்கள் தாங்கிய, ‘கடலோடி’ என்ற நூலுக்குச் சொந்தக்காரரும் இவர்தான்! 1970களில் எழுதப்பட்ட ‘கடலோடி’ என்ற நூல் கப்பற்படை சாகசங்களை எளிய தமிழ் நடையில் அழகாக விளக்கப்பட்ட சிறு நூல் என்பதோடு திரு நரசய்யா அவர்களின் வெளிப்படையான கருத்துகள் மற்றும் தத்துவங்களும் கூட இந்நூலுக்கு அணி சேர்ப்பதைக் காணலாம். நம் நாடு சுதந்திரம் பெற்றபின்பும் நமது போர்க்கப்பல்கள் ஆங்கிலேயர்கள் மூலமாகவே பயிற்சி பெற்ற தகவல், மற்றும் பயிற்சி தளங்கள், போர்க்கப்பல்கள் போன்றவைகள் குறித்த சுவையான தகவல்களும் அடங்கிய நூல் இது. ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், பின்னர் வந்த முகலாய மன்னர்கள் போன்றவர்களின் ஆட்சிக்காலங்களில் பிரபலமாக இருந்த கப்பல் போக்குவரத்து மற்றும் பிரம்மாண்டமான கப்பல்கள் என அனைத்தும் கிழக்கிந்திய கம்பெனி நம் இந்திய நாட்டில் நுழைந்து முன்னூறு ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய காலங்களில் முற்றிலும் செயலிழக்கச் செய்ததோடு, ஆங்கிலேயர்களின் கப்பல் போக்குவரத்து கோலோச்ச ஆரம்பித்துவிட்டது. சுதந்திரப் போராட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாக, கப்பலோட்டிய வரலாற்றில் பெரும் பங்காற்றிய வ.உ.சி, சிந்தியா போன்றவர்களின் போராட்டம் குறித்த தகவல்களும், சிந்தியாவின் விடா முயற்சியும், சிந்தியா கப்பல்களை இந்தியர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற காந்தியடிகளின் பரிந்துரையும் குறித்த தகவல்களோடு, இந்தியா விடுதலை பெற்றபின், சிந்தியா இங்கிலாந்திற்கு அனுப்பிய முதல் பயணிகள் கப்பல் கிளம்பிய தினத்தையே வணிகக் கப்பல் தினமாக அறிவிக்கப்பட்ட சுவையான தகவல்களும் அறியமுடிகிறது.

    திரு நரசய்யா அவர்கள் ஐ.என்.எசு. விக்ராந்தில் பணியாற்றிய காலகட்டங்களான, 1970-71களில் பாகிசுதானுடன் நடைபெற்ற போரில், அந்நாட்டு நீர் மூழ்கிக் கப்பல் ஒன்று, விசாகப்பட்டினத்தில் இருந்த இந்தியாவின் ஒரே விமானந்தாங்கி கப்பலான ஐ.என்.எசு விக்ராந்தை தகர்க்க வந்தபோது அதை விசாகைக்கு அருகே வைத்து நீரில் மூழ்கடிக்கச் செய்கிறார்கள். இந்த ஐ.என்.எசு விக்ராந்த் கப்பலை வாங்குவதற்காக இங்கிலாந்து சென்ற இந்தியக் குழுவில் நரசய்யா அவர்களும் இருந்திருக்கிறார் என்பதும் ஆச்சரியமான தகவல். விமானந்தாங்கி கப்பல் குறுகிய ஓடுதளத்தில் போர் விமானங்கள் ஏறி இறங்கும் விதம் பற்றி இவர் அளித்திருக்கும் விவரங்கள் அதனை நேரில் காண்பது போன்ற அனுபவத்தை ஏற்படுத்தக்கூடியது.

    “பயண எழுத்து என்பது வெறுமனே நாம் பயணப்பட்ட இடங்களின் சிறப்புகளை அதிசயித்தோ, மிகைப்படுத்தியோ சொல்வது மட்டுமே ஆகாது. நிறைகளை மட்டுமே தாங்கி வரும் பல பயணக்கட்டுரைகளை நான் வாசிக்கும் நேரங்களில் எனக்கு ஏமாற்றமும், சலிப்புமே மிஞ்சுகிறது. அப்படிப்பட்ட பயண எழுத்தாளர்களுக்கு பிரயாணம் என்பது வேலைக்கிடையே ஒரு பொழுதுபோக்கு, ஆனால் எனக்கு பிரயாணம்தான் வேலையே !” என்று மிக யதார்த்தமாக தமது கருத்தை பதிந்திருப்பது சிந்திக்கத்தக்கது. இந்த நூல் வெளியான பிறகு பெரும்பாலும் இவர் கடலோடி நரசய்யா என்றே அழைக்கப்பட்டிருக்கிறார்.

    கடல்வழி வணிகம்

    4817

    அடுத்து ‘கடல்வழி வணிகம்’ என்ற அற்புதமான ஆய்வு நூல். இந்நூலின் அணுகுமுறையும் நோக்கமும் என்ற பக்கத் தலைப்பில் திரு நரசய்யா அவர்கள் கூறியுள்ளது கூர்ந்து நோக்கத்தக்கது:
    “கடல்சார் வணிகத்தைக் குறித்து பல ஆய்வாளர்கள் மிக அதிகாரப்பூர்வமானவையாகவும் விளக்கமளிப்பவையாகவும் உள்ள சிறந்த நூல்களை ஏற்கனவே எழுதியுள்ளனர். அவை அவ்வாசிரியர்களின் தனித் திறமைகளால் மெருகேற்றப்பட்டன. ஒவ்வொருவரும் தம் நோக்கில் தீர்க்கமாய் ஆராய்ந்து எழுதியுள்ளனர். எனது நோக்கம், அத்தகைய சிறந்த நூல்களினின்றும் முக்கியமான பகுதிகளைத் தொகுத்து, எளிமையான முறையில் தமிழில், சாதாரண மக்கள் படிப்பதற்குத் தக்கவாறு அளிப்பதேயாகும்”.

    அந்த வகையில் இந்நூல் பல்வேறு நாட்டு அறிஞர்களின் கடல் சார்ந்த ஆய்வுகளின் சாராம்சங்களை மிகத் தெளிவாக எளிமையாக, அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் வழங்கப்பட்டுள்ளது பாராட்டுதலுக்குரியது. சோழர் காலத்திலிருந்தே தென்னாட்டுக் கடற்படை சிறந்து விளங்கியதையும், மிகப்பொருத்தமான இலக்கிய ஆதாரங்களுடனும், தமிழகம் குறித்த தொன்மை வரலாற்றுச் செய்திகளும், அகழ்வாராய்வு, சாசனங்கள், மண்பாண்டச் சான்றுகள், நாணயவியல் குறிப்புகள் போன்றவைகள் இந்நூலின் ஆதாரங்களுக்கு வலு சேர்த்துள்ளன. இவைமட்டுமன்றி, அந்த காலகட்டத்தின் வணிக முறைமைகள், அங்கு செயல்பட்டு வந்த வணிகக் குழுக்கள் பற்றிய ஆதாரப்பூர்வமான தகவல்களுடன் எழுதப்பட்ட இந்நூல் ஆய்வாளர்களுக்கு பல வகையில் பயன் தரக்கூடியது என்றால் அது மிகையாகாது. தமது பணி சார்ந்த தளம் என்பதால், இந்தியக் கப்பல் கட்டும் முறைமைகளை, முன்காலம், சமகாலம் என இந்தியக் கப்பல் தொழில் முறைமைகளை மிகத் தெளிவாக, சுவைபட விளக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    திரு நரசய்யா அவர்கள் கப்பலில் பணியாற்றிய 1955 – 56 ஆண்டு காலகட்டங்களில், கடல்வழி வணிக ஆய்வறிஞர் கே.எம். பணிக்கர் அவர்கள், திரு நரசய்யா தாம் சென்ற ஒரு சிறிய மைன் சுவீப்பர் வகையைச் சேர்ந்த கப்பலில் தமது ஆராய்ச்சிக்காக உடன் வந்ததால் அவருடன் பழகும் வாய்ப்பு அமைந்ததையும் பெருமையாகக் குறிப்பிடுவதோடு, அக்காலத்திலிருந்தே அந்த சந்திப்பு தம்முள் ஓர் உந்துதலை உண்டாக்கியிருந்ததாகவும் கூறுகிறார். அக்காலத்தில் குஜராத் மற்றும் கலிங்க நாட்டினரான ஒரிசா மாநிலத்தவரும் கடல்வழி வணிகத்தில் ஈடுபட்டிருந்தாலும், முக்கியமான கடல்வழி வணிகம் தென்னகத்தின் மூலமே நடைபெற்றதால் இந்நூலில் தென்னகத்தை மையமாய் வைத்தே வணிகத்தை விவரித்துள்ளதாகவும் பதிவு செய்துள்ளார்.

    நரசய்யா ஒரு சிறந்த தேசபக்தர் என்பதைக் கட்டியங்கூறும் வகையில் அவர்தம் எழுத்துகள் இந்நூலில் ஆதாரம் சேர்ப்பதையும் காணமுடிகிறது. வியாபாரம் செய்வதற்காகவும், தங்கள் மதத்தைப் பரப்புவதற்காகவும் நம் இந்திய நாடு தேடி வந்த கிழக்கிந்தியக் கம்பெனிக்காரர்கள் நம் நாட்டின் இயற்கை வளம் மட்டுமன்றி மனித வளத்தின் மீதும் பேராசை கொண்டு முந்நூறு ஆண்டுகளாக நம்மை முற்றிலும் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். அந்தக் காலகட்டங்களில் ஒரு இளைஞராக இரத்தம் கொதிக்க இவையனைத்தையும் கண்டு மனம் வெதும்பியிருப்பதை மிகத்தெளிவாக உணரச்செய்கிறார். வணிக முறையில் உணவளித்த இந்திய மக்களை மேலைநாட்டினர் தங்க முட்டையிடும் வாத்தாகக் கருதி அடிமைப்படுத்தியதையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும், குறிப்பாக நம் கடல்வழி வணிகம் திட்டமிட்டு நசுக்கப்பட்டதையும் விரிவாக தகுந்த ஆதாரங்களுடன் எழுதியுள்ளார். ஒரு இராணுவ அதிகாரியாக பணியாற்றியதன் பயனாக, மேற்குக் கடற்கரை பாதுகாக்கப்பட்ட விதமும், கடற்கொள்ளைக்காரர்களிடமிருந்து மீட்பதற்கும், கடல்வழி வணிகத்தைக் காப்பதற்கும் கப்பற்படையின் சேவை எத்தகைய இன்றியமையாதது என்பதை இவர் எழுத்துக்கள் மூலமாக உணரமுடிகிறது.

    “சுதந்திரத்திற்கு முன்னர், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சில வருடங்களில் ஏற்பட்ட மாறுதல்களும், அவற்றின் வளர்ச்சியும், பன்னாட்டு வணிக அணுகுமுறையால் தற்போது ஏற்பட்டுள்ள மாறுதல்களும், அதற்குத் தக்கவாறு நம் துறைமுகங்கள் மாறிக்கொண்டு வருவதும், இன்றைய கடல்வழி வணிக நிலையும் விளக்கப்பட்டுள்ளன. காலத்தால் மாறுபடும் வணிக முறைகளும், அவற்றின் தாக்கமும் விளைவுகளும் ஆராயப்படுகின்றன” என்பவர் அதனை மிகத்தெளிவாகவே செய்திருக்கிறார்.

    ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அந்த வகையில் தென்னாட்டு கடல்வழி வணிகம் குறித்த செய்திகள் மட்டுமல்லாது பேரழிவுகள் குறித்த பல ஆய்வறிஞர்களின் சாராம்சங்களுடன், தமது கருத்தையும் திறம்பட விளக்கியிருப்பது ஆச்சரியம் ஏற்படுத்தக்கூடியது. இன்றும் நம் கண் முன்னால் நடக்கும் பேரழிவின் பின்புலம் பற்றி அறிய கண்கள் ஆச்சரியத்தில் விரியத்தான் செய்கிறது என்றால் அது மிகையாகாது!

    “கடலுள் மறைந்த பெரும் இடங்களுள் ஒன்று மாமல்லபுரத்தின் கிழக்குப்பகுதிகள். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓஷியானோகிராஃபி இந்த இடத்தில் ஒரு தீர்க்கமான அகழ்வாய்வை ஏப்ரல் 2002 இல் மேற்கொண்டது. அப்போது அவர்களுடன் இங்கிலாந்தின் ஸயண்டிஃபிக் எக்ஸ்ப்ளொரேஷன் சொசைடியும் சேர்ந்து இந்த ஆய்வை மேற்கொண்டது. … இவை 1500-1200 வருடங்களுக்கு முன்னவையாய் இருக்கலாம் எனவும் கருதுகின்றனர். முதன்முதலாக ஆங்கிலப் பயணியான ஜே. கோல்டிங்ஹாம் என்பவர் இவ்விடத்தைப்பற்றி 1978ஆம் ஆண்டிலேயே குறிப்பிட்டிருந்தார்…….. கிரஹாம் ஹான்காக் இவ்வாறு சொல்கிறார்: The scale of the submerged ruins, covering several sqare miles and at distances of upto a mile from shore, ranks this as a major marine-archeaological discovery as spectacular as the ruined cities submerged off Alexandria in Egypt”.

    சுனாமிக்குப் பிறகு வெளிப்பட்டுள்ள கோவில் கட்டடங்கள் இக்கருத்தை உண்மையென நிரூபிக்கின்றன.

    ஹான்காக் கூற்றுப்படி, ‘உலகில் பல இடங்களில் கூறப்படும் பிரளய வரலாறுகளை நாம் கதைகளென ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில் 17000 வருடங்களுக்கு முன்னரும், 7000 வருடங்களுக்கு முன்னரும் பிரளயங்கள் வந்துள்ளதாகத் தெரிகிறது. 25 மில்லியன் சதுர கிலோமீட்டர் அளவிலான பரப்பளவு கடல்கோளில் சென்றுள்ளன’.

    இவற்றிலிருந்து மாமல்லபுரம் ஒரு காலத்தில் சிறந்த துறைமுகமாய் இருந்திருக்க வேண்டுமென்பது ஊர்ஜிதமாகிறது. புகாரைப் போல இந்தத் துறைமுகமும் கடல் கோளால் மறைந்திருக்கலாம்.

    உலகின் பல இடங்களிலும் அவ்வப்போது கடல், நிலப்பரப்பைத் தனது எழுச்சியால் ஜீரணித்துக் கொண்டிருந்திருக்கின்றது. தமிழ் இலக்கியங்களில் இது நன்றாகவே பதிக்கப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தின் காடு காண் காதையில், மாங்காட்டு மறையோன், பாண்டியனைப் புகழ்ந்துகொண்டு வரும்போது இவ்வாறு சொல்லப்படுகிறது.

    வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
    பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
    குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
    வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
    தென் திசை ஆண்ட தென்னவன் வாழி!

    – சிலப்பதிகாரம் – காடுகாண் காதை 18 – 22 (இங்கு தமிழகத்தின் தென்பகுதியில் நிகழ்ந்த கடல்கோள் குறிக்கப்பெற்றுள்ளது)

    அதேபோல, புறநானூற்றிலும் பஃறுளியாறு குறிக்கப்படுகிறது.

    ஆகவே, கடல் யுகாந்திரமாய்க் கரையைத் திருத்திக்கொண்டே இருந்திருக்கிறது. (இந்த இடத்தை எழுதிக்கொண்டிருக்கையில் – அதாவது, 2004, டிசம்பர் 26 ஆம் தேதியன்று, நாசம் விளைவித்த பின்னர், கார் நிக்கோபார் தீவுகளைத் திருத்தியமைத்துவிட்டதாக அறிகிறோம். பல இடங்களைத் தன்னுள் அடக்கியும் கொண்டுவிட்டது)”

    இதுபோன்று அழகன்குளம், மரக்காணம், காயல்பட்டிணம், சதுரங்கப்பட்டினம், முசிறி, கொடுமணல், கொத்தபட்டினம், நாகப்பட்டினம் போன்ற பல வரலாறுகளை ஆதாரப்பூர்வமாக சுவைபட எடுத்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இன்றைய இந்தியாவின் முதல் துறைமுகமான கொல்கத்தா துறைமுகம் பற்றி நாம் அறிந்திராத பல அரிய தகவல்களை அறியத் தந்திருப்பது சிறப்பு! போர்ச்சுகீசியர்களால் போர்டோ பெக்வினோ என்று வழங்கப்பட்ட ஹூக்ளி துறைமுகந்தான் கொல்கத்தா துறைமுகத்தின் மூலமாம். 1632இல் வங்காளத்து வைசுராய், பந்தல் என்ற வணிக மையம் மீது படையெடுக்க நேரிட்டபோது, ஆங்கிலேயர் போர்ச்சுகீசியர்களைத் தோற்கடித்துள்ளனர். 1686இல் திரும்பவும் போர்ச்சுகீசியர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையில் நடந்த ஒரு போரின் விளைவாக ஹூக்ளி நாசமாக்கப்பட்டுள்ளது. 1687இல் ஹூக்ளியின் கிழக்குக் கரையிலுள்ள கதநதி என்னும் இடத்தில் வணிக மையத்தை ஏற்படுத்திய, கொல்கத்தாவின் பிதாவாகக் கருதப்படும் ஜாப் சார்னாக் பற்றிய வரலாறும் அறியத் தருகிறார். இவன் ஏற்படுத்திய இந்த மையம்தான் கல்கத்தா துறைமுகத்திற்காக இடப்பட்ட வித்து என்கிறார் நரசய்யா. இந்தியா 1858இல் ஆங்கிலேய அரசாங்கத்தின்கீழ் வந்தவுடன், பல மாற்றங்கள் ஏற்பட்டன என்றும், தகவல் தொடர்புகளில் மேன்மை ஏற்பட்டவுடன் கொல்கத்தா துறைமுகம் பெரும் பயனைப் பெற்றது என்பதையும் பதிவு செய்திருக்கிறார். அதாவது ஆங்கிலேயர்கள் கீழை நாடுகளுடனான தமது வணிகத்தை மேம்படுத்தவேண்டி இந்தத் துறைமுகத்தின் மீது தங்களது முழு கவனத்தையும் செலுத்தி அதை மேம்படுத்தியுள்ளனர். கல்காத்தா துறைமுகத்திற்கும், ஏனைய மற்ற துறைமுகங்களுக்கும் உள்ள பெரும் வேறுபாடுகளை அழகாக அறிவியல் நோக்குடன் படம் பிடித்துக்காட்டியுள்ளார் இந்த ஆய்வியல் அறிஞர்.

    இதேபோல் ‘இந்தியாவின் வணிகத் தலைவாயில்’ என்றழைக்கப்படும் மும்பாய்த் துறைமுகம் பற்றிய வரலாற்றுச் செய்திகளையும் சுவைபடவே வழங்கியுள்ளார் இந்த வித்தகர். மலபார் பாயிண்ட் என்று வழங்கப்படும் மும்பையின் ஒரு பகுதியில் இருக்கும் புகழ் பெற்ற, பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வாக்கேசுவரர் கோவில் அப்போது ஒரு சிறந்த புனிதத் தலமாக விளங்கியதையும், 1338 லிருந்து மும்பை இசுலாமியர்களின் ஆட்சியின் கீழ் வந்துவிட்ட போதிலும், கடல்வழி வணிகம் மட்டும் இந்துக்கள் கைகளில்தான் இருந்தது என்பதையும் பதிவு செய்துள்ளார். இதன்பின் இவர் அளித்துள்ள வரலாற்றுத் தகவல்கள் அனைத்தும் மிக ஆழ்ந்து நோக்கத்தக்கவை எனலாம். வரலாற்று ஆய்வாளர்களுக்கு என்றும் பயனளிக்கக்கூடிய முக்கியமான தகவல்களின் சாரம் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. இது போன்று தூத்துக்குடி, எண்ணூர் போன்ற பல துறைமுகங்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களை அழகாக எடுத்துரைத்துள்ளார்.

    இறுதியாக, நம் இந்தியக் கப்பற்படையின் தோற்றம், வளர்ச்சி மற்றும் இன்றைய நிலை குறித்து தெள்ளத் தெளிவாக, மிக யதார்த்தமாக, சுருங்கச் சொல்லி விளங்கச் செய்திருப்பது பாராட்டுதலுக்குரியது! நம் இந்திய கடற்படையின் சரித்திரம் 1612 களிலேயே ஆரம்பமாகிறது என்ற ஆச்சரியமான தகவலுடன் பல வரலாற்றுச் செய்திகளை, மிகச் சுருக்கமாகவே அளித்துள்ளார்.

    1934இல் ராயல் இந்தியன் நேவி என்று வழங்கப்பட்டு, 1935 இல் சக்கரவர்த்தியால் கொடியளிக்கப்பட்ட இந்தப்படை இரண்டாவது உலக மகா போரில் இந்தியக் கடற்படையாக பங்கு கொண்டது என்கிறார். அப்போது 8 போர்க்கப்பல்கள் இருந்ததாம். இந்தியச் சுதந்திரத்திற்கு அப்போதைய கப்பற்படை உதவியது என்கிறார். இந்த அமைப்பில், 1928இல் முதல் இந்திய அதிகாரியாக நியமிக்கப்பட்ட சப் லெப்டினண்ட் டி.என். முகர்ஜி என்பவர், தாம், எச்.ஐ.எம்.எஸ். சிவாஜி என்னும் பெயர் கொண்ட இந்தியக் கப்பற்படையின், கடற்படைப் பொறியியல் கல்லூரியில், 1949ஆம் ஆண்டில் சேர்ந்தபோது தமது முதல் கமாண்டிங் அதிகாரியாக இருந்தார் என்ற அரிய தகவலையும் வழங்கியிருக்கிறார். அந்த வகையில் இந்த நூல் முழுவதிலும், தாம் எத்தகைய உயரிய ஆளுமைகளுடன் பணியாற்றியுள்ளார் என்பதை விவரித்துள்ளது சிறப்பு.

    இன்று தலை நிமிர்ந்து நிற்கும் நம் இந்தியக் கடற்படை பல புதிய கப்பல்களைக் கொண்டுள்ளது மட்டுமன்றி, இந்தியத் தளங்களிலேயே கட்டப்படும் தமக்கான கப்பல்களால் அந்தத் தளங்களையும் ஆதரிக்கின்ற யதார்த்தமான தகவலையும் வழங்கியுள்ளார். மாளாத இத்தனைத் தகவல்களையும் சிறப்பாக அளித்திருந்தாலும், இந்தத் தேடல் முடிந்து விடாது, தொடர்ந்து கொண்டிருக்கும் பல ஆய்வுகள் நமக்கு மேலும் பல புதிய செய்திகளை தெளிவுபடுத்தலாம் என்றும், அறியப்படாமல் புதைந்து கிடக்கும் எண்ணற்ற உண்மைகளை சரித்திர ஆசிரியர்களும், ஆய்வாளர்களும் வெளிக்கொணர்வதை சுட்டியுள்ளவர், இந்த விசயத்தில் தாம், ‘கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு என்பது எத்துணையாயினும் உண்மை’ என்று மிகுந்த தன்னடக்கத்துடன் கூறி மேலும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்!

    ஆகமொத்தம், இந்நூல் கையாளப்படும் விடயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதும் உண்மை. உலக வரலாற்றின் பல்வேறு கட்டங்களில், கடல்வழி வணிகம் எவ்வாறு பல்வேறு மாறுதல்களுக்குட்பட்டது என்பதையும், அதற்கு அந்தந்தக் காலத்து மன்னர்களின் ஆட்சி முறைகள் எவ்வாறு உதவி புரிந்தன என்பதையும் மிகத்தெளிவாகவே விளக்கியுள்ளார் என்றால் அது மிகையாகாது!

    இவருடைய, “சொல்லொணாப் பேறு”, கடல்வழி வணிகம், “மதராசப்பட்டினம்” , கம்போடியா நினைவுகள் போன்ற, நான்கு நூல்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    மேலும் தம்முடைய சில நூல்கள் குறித்து ஆசிரியர் தமது மொழியில் உரைத்திருப்பதையும், காணலாம்:

    ஆலவாய்

    4771இந்த நூலின் முக்கிய நோக்கம், சாதாரண வாசகர்களுக்கு மதுரையைப்பற்றிய எல்லா விவரங்களையும் ஒரே நூலில் தரவேண்டுமென்பதுதான். ஏனெனில், பல சிறந்த சரித்திர ஆசிரியர்களும் ஆய்வாளர்களுமான பேராசிரியர் ராஜய்யன், ஆய்வாளர் தேவகுஞ்சரி, பேராசிரியர் ஜெயச்சந்திரன் ஆகியோர் மதுரையின் பல சிறப்புகளைத் தங்களது ஆய்வின்படி வழங்கியுள்ளனர்.அதேபோல, பல பழைய ஆய்வாளர்களான சத்தியநாதய்யர், சேதுராமன் போன்றவர்கள் தம் கடின உழைப்பின்மூலம் பல உண்மைகளைக் கண்டு பதிப்பித்துள்ளனர். இந்நூல் அவற்றையெல்லாம் துணையாய்க்கொண்டும், இன்றைய தொல்லியல் ஆய்வாளர்கள் உதவியுடனும், காலத்தால் பழைமை வாய்ந்த பதிவேடுகளில் உள்ள செய்திகளோடும் மதுரையின் சரித்திரத்தை முடிந்தவரையில் ஒரே இடத்தில் முழுமையாய்க் கொடுக்க முயல்கிறது. எடுத்துக் கூறுகையில் விருப்பு வெறுப்பின்றி, நிகழ்ந்தவற்றை அப்படியே பதித்துள்ளேன். இந்நூலின் நோக்கம், தொன்மையான, தமிழ்நாட்டுப் பண்பாட்டுத்தலைநகரான மதுரை சாதாரண வாசகனுக்கு முழுமையாய்த் தெரிய வேண்டுமென்பது மட்டுமே! –

    கடலோடியின் கம்போடியா நினைவுகள்

    4980கம்போடியா எங்குள்ளது என்று கூட நான் அறிந்திராத நிலையில் என்னை ஒரு ஆலோசகராகத் தேர்ந்தெடுத்து, டோன்லே சாப் நதியின் ஆழத்தை அதிகரிக்கவும், அதன் போக்கை சரி செய்யும் என்னை அனுப்பிவைத்த உலக வங்கிக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். அந்த அழைப்பு வந்துவுடன் முதன்முதலாக நான் கலந்தாலோசித்தது திரு. சிட்டியைத்தான்! ஏனெனில் அவர் கம்போடிய மன்னர் சென்னை வந்திருக்கையில் அவரை கம்போடிய மன்னர் சென்னை வந்திருக்கையில் அவரை அழைத்துக்கொண்டு மாமல்லபுரம் சென்று வந்ததும் அந்நிகழ்வை என்னுடன் பங்கிட்டுக் கொண்டதும் நினைவில் இருந்து அகலாதவை. ஆகையால் சிட்டியிடம் கூறியபோது, அவர் எனக்குச் சில விவரங்களைக் கூறினார். அது மட்டுமன்றி, கம்போடியா பற்றிய சில நூல்களையும் பற்றிக் கூறினார். அவரது ஊக்கம் தான் பின்னர் என்னை ”புதுகைத் தென்றலில்” எழுதவும் உதவியது. ஆகையால் அவர் நினைவில் நிற்கிறார்.

    மதராசப்பட்டினம்

    4770இந்நூலின் பக்கங்களில் காணப்படுவது, ஒரு பெரிய திரைச்சீலையில் தீட்டப்பட்டிருக்கும் வார்த்தைகளாலான வண்ணப்படமாக அமைந்துள்ளது. கோரமண்டலக்கையின் சரித்திரத்தின் பகுதிகளை சிரத்தையுடன் எழுதி, அதில் போர்ச்சுகீசியர்களின் சாந்தோம் வரவிலிருந்து ஆரம்பமாகிறது. புனித ஜார்ஜ் கோட்டை நிர்மாணிக்கப்பட்டதும் அது வளர்ந்த விவரமும் கூறப்பட்டுள்ளன. வணிகம், மதம் மற்றும் ஜாதி பேதங்கள்பற்றிய விவரங்களைக் காட்டுகையிலும், மதராசபட்டினத்துப் பஞ்சங்களையும், அடிமை வியாபாரத்தையும் குறித்து விவரிக்கையிலும் அவரது சரித்திரத் தேடல் நன்றாகவே தெரிகிறது. ஆங்கிலேயர்களும் இந்நகரத்து இந்தியப் பிரமுகர்களும் இந்நகரத்திற்கும் தென்னகத்திற்கும் செய்த பெரும் சேவையை எடுத்துக் கூறுகையில் அவர் துபாஷிகளையும் அவர்கள் சேவைகளையும் நன்கு விவரித்துள்ளார். இந்திய நாட்டின் நகராண்மை, நில அளவை,கல்வி முறை, அச்சுப் பணி, வானசாஸ்திரம், வங்கி முறை மற்றும் மருத்துவம் முதலான சேவைகளுக்கு எவ்வாறு, மெட்ராஸ் முன்னோடியாக அமைந்தது என்பதை வலியுறுத்திச் சொல்கிறார். கற்பவர் ஆய்வாளர் மற்றும் சரித்திரத்தில் ஈடுபாடுள்ள சாதாரண வாசகர் எல்லோருக்குமே அவர்களது கவனத்தை ஈர்க்கும் முறையில் நரசய்யா தயாரித்துள்ள நூல் இது. அவர்களெல்லோரும் இந்நூலைப் படிக்க நேர்ந்தால், அதுவே இந்நகரத்தின் சரித்திர சேவைக்கு நரசய்யா செய்துள்ள பெரும் தொண்டாக அமையும். –

    ஆசிரியர் நரசய்யா அவர்களின் மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :

    நரசய்யா சிறுகதைகள் (1997)
    கடல்வழி வணிகம் (2005)
    தீர்க்க ரேகைகள் (2003)
    சொல்லொணாப்பேறு (2004)
    ஆலவாய் (2009)
    கடலோடி (2004)
    மதராசபட்டினம் (2006)
    துறைமுக வெற்றிச் சாதனை (2007)
    கடலோடியின் கம்போடியா நினைவுகள் (2009)
    சாதாரண மனிதன் – சிட்டியின் வாழ்க்கை வரலாறு

    ஆங்கிலம்

    1 Madras (1639 – 1947)

    2. English and Tamil co-authored with S Muthiah Overcoming challenges – வெற்றியின் சாதனை

    3. Lettered Dialogue

    Teaching subjects related to sea and ports in marine institutes of Chennai

    Attached here is Gopala Krishna Gandhi’s speech on launching of Mr. Narasiah’s book,  Lettered Dialogue’ . The passage is attached in the last page of the book in its second edition which is much more interesting to read!

                                                                              Launch                                                                       

                                                                                   Of

                                                                       Lettered Dialogue

                                                                                   By

                                                                         K.R.A.Narasiah

                                                                  Chennai, April 20, 2012

     

    We are celebrating today two persons – Mathuram Bhoothalingam and P G Sundararajan.

    We are celebrating a genre in writing – Letters.

    And we are celebrating a relationship – what may one call it ? ‘Relationship’ is a loaded word. I use it advisedly.

    I would suggest we neither waste any noun on it, nor expend any adjective to describe it.

    In Jiddu Krishnamurti’s language, let us just observe it.

    Without those two persons having known one another there would have been no letters between them. Without those letters, there would have been no relationship between them. Without a relationship between them, their knowing one another and writing to each other could have been a thing of no importance or interest.

    And Sri K R A Narasiah would have devoted his time post-retirement from the Indian Navy and his astonishing skill with historical narration to writing about the history of Indian seafaring , ports and lighthouses.

    But that conjunction did occur, Mathuram Bhoothalingam as Krithika and P G Sundararajan as Chitti did meet and get to write the letters which Sri Narasiah has with rare sensitivity double-distilled into this slim book, the size of which belies its strength.  The book also carries, I must mention, as a foretaste to the delectation of the letters themselves, a poignant Foreword by my esteemed friend of many years, the bibliophile, aesthete , civil servant and social commentator , Sri V.Sundaram.

    Krithika was a bigger person than most who did not know her, realized. This appellation – ‘Mrs’ – is curious. Just consider those three characters of the English language in the Roman script.

                                                                   2

    ‘Mr’ as an abbreviation of the full word ‘Mister’, can be understood. Its ‘M’ and ‘r’ are the first and last letters of the full word. But if ‘Mrs’ were to be expanded to its full phonetic potential, you will find that the letter ‘r’ is nowhere in it. It is a complete intrusion. Abbreviated to ‘Mrs’, however, the ‘r’ creeps in, as if from nowhere, like a  wall, separating the ‘M’ from the ‘s’ as if to  say ‘Mrs’ is the ‘Mr’ with an ‘s’ added , that is all. Likewise , ‘Srimati’ and ‘Thirumati’ are ‘Sri’ and ‘Thiru’ with a suffix, no more.  And we of course have accepted this as a ‘given’. We have accepted ‘Mrs’ as a given, as an adjunct, an accompaniment, a corollary , of ‘Mr’.

    How much can a mere abbreviation obfuscate !

    S.Bhoothalingam was not interested in diminishing or abridging Mathuram Bhoothalingam’s sensibility. On the contrary, he was a truly modern and emancipated man in frank admiration, even awe, of his gifted wife. But a flask, even when transparently self-abnegating as the protector and preserver of the temperature of its contents, is a flask. It contains, it holds, it  secures. But it does not, indeed it cannot, permit the substance within to take a  shape  other than its own. Whence arises the need for a pseudonym. And there again, let us not miss the irony. What is truly one’s own, made of one’s own choice, volition and in utter freedom from the tastes and predilections of one’s parents or one’s spouse, one’s own pen-name, is called ‘pseudo’. Reality has to go into hiding in order to break loose and breathe free. When men use pseudonyms, they gain the excitement of obscurity. When women use them, they gain the joy of an independent identity.

    Charlotte Bronte wrote Jane Eyre under the name Currer Bell . Emily Bronte wrote Wuthering Heights as Ellis Bell. And of course the world knows the author of The Mill on the Floss , Silas Marner  and Middlemarch, not by her own name Mary Ann , but as George Eliot. Agatha Christie kept her first name, devised the surname, dropping her  own ‘Miller’. And who can be expected to know that Ayn Rand’s real name is  Alisa Zinovyevna Rosenbaum. Some use initials , true initials, which serve – though  with varying purposes, I am sure –  that veil the author’s persona in their own way. We have A.S.Byatt, P.D.James, M.M.Kaye, M.A.Griffiths, J.K.Rowling, who added the ‘K’ in the middle though she does not have a middle name. There are examples of  distinguished women authors in Tamil writing under a pen-name, like Ambai and Bama.

    Krithika is, if anything, independent. Independent in what she chooses to think of  and independent  in what and how she chooses to write upon.

                                                                       3

    But hers is not the independence of vagrancy. It is the independence of one who has a ticket in her hand, an open ticket, with destinations unmarked. She travels, she does not lurch. And in her letters to Chitti, she  journeys with a companion with an identical travel document. How delicious , how altogether delectable, to travel with someone who becomes a friend on the journey, with no worries of excess baggage on one’s hand or left-luggage to be collected on return, only conversation, recollection, and banter !

    And yet the letters between Krithika and Chitti are not light. They are not chat. They are not ‘side-stuff’. They are about the times, about people, about what is being written, thought, said. They do not seek the other’s corroboration, though they sometimes seem to revel in approval. They do not seek to impress, though they sometimes seem to like having that effect. They also are not meant for posterity though I suspect they are being written in the knowledge that they are going into some little box or cabinet, some table-drawer or old trunk where they will be excavated from in a lonely hour, by a lonely lamp, for a lonely read when no one else is looking.

    The first question that occurred to me, when I  saw the correspondence, was : Were Krithika and Chitti in love ?

    But no, no such luck.

    Then, the next question that came to me was: Were Krithika and Chitti into some joint confessional?

    Again, no luck.

    Were they seeking shoulders to lean on, perhaps even to cry on ?

    No. They were utterly self-possessed.

    Are they the Karuthamma and Pareekutti of Thakazhi’s Chemmeen ?

    No!

    And then I realized I was missing the whole point of the letters. I was trying to find the predictable and the trite in what was altogether different, fresh and autonomous. I was trying to find the stereo-typical in what was original.

    Unless Sri Narasiah has edited out things which belonged to the world of privileged communication, there is no indication that Eros hides somewhere between the lines of these letters. If Eros does, that would be good for Eros. If Eros does not, it matters not.

                                                                          4

    Letters from a man to another man, from a woman to another woman would raise no eyebrows. But letters , a whole series of them , stretching over more than four decades from – and let me speak as if I am seated in a temple’s courtyard  in Chennai – letters from one married lady to a married gentleman…sollunga saar, adhu sariyaa ? They have to raise not just eyebrows but hackles.  This is a reflection on us, our limitations. Two individuals are above all individuals . Whether they  are man and woman, married or otherwise, has to be beside the point, especially when what are being written are letters  that contain reflections, observations.

    Why one wants to say something to one particular person, and not to another, why some jokes are best shared with one and nor another, why one would wish to exclude someone even very close, while talking to someone else, all these questions are impossible to answer. That is how it is. Human relationships are not be dissected. They are to be observed.

    Letters that are not business letters, or written with a purpose or a motive, letters that ‘just happen’ like Topsy in Harriet Beecher Stowe’s Uncle Tom’s Cabin do not seek to introduce themselves, or define anything, much less the relationship they are in. But they are in a relationship, a relationship that is not incident on past association or future strengthening.

    They are  in the relationship that shares without expectation of gratitude or even of agreement. They are in a relationship which is its own Alpha and its Omega, its own justification.

    They are letters because they happen to be written. They could well have been conversations. They could well have been thoughts unexpressed, but conveyed.

    Krithika’s  and Chitti’s letters do not lead up to or culminate in anything. But they do aggregate into something. They aggregate into an understanding , a kind of compact, which says ‘We agree to not seek agreement or concordance, only communication’. They add up to the exchange of  the mind’s arrears and the heart’s accretions. The phrase ‘heart’s arrears’ is Vikram Seth, used by him The Golden Gate.

    All of us have those – arrears of the mind and heart. We long to repay them , to our times, to our circumstances. When a great musician sings, he is not spouting Tyagaraja or Dikshitar alone. Something of his own heart’s arrears comes through in the rendering. Only crusty critics will say ‘Oh he had bhava allright , but his neraval was soft, his tanam limp…’. For God’s sake, audiences should  be a collective rasika , not a jury he is not a robot, but a man with debts of the mind, loans of the heart and, yes, mortgages of the soul to repay.

    We need to express ourselves on things we do not have the chance to, in the ordinary transactions of life. Some of us write, sometimes well, sometimes very badly. Some of us speak, and speak, and speak, most times to the audience’s tearful tedium. Ask me.

    Letters are to literature, what a whisper is to a speech.

                                                                            5

    A thinking, feeling mind’s whisper is worth more than a stentorian’s earful.

    Krithika wrote voluminously, as did Chitti. She wrote as she thought, without translating her words for official acceptance.

    Talking of translations, let me urge caution. Krithika and Chitti write English of the first order. But it is their English. It sounds like them. It whispers like them. Let there be no hurry to render the letters into Tamil, the Tamil of someone else. Of Krithika’s or anyone’s Tamil, I can be no judge. Thanks to the generosity of Mina Swaminathan, I could dip into her Vasaveswaram. Krithika writes with a mastery of her language. ‘Her’ language is not just Tamil, but the Tamil she grew into. Something in me is awed when She says this about the central character Periyapaattaa : Nalla uram padaittha deham. Intha vayathirkuuda mushtiyai iruka piditthaaraanaal bhujam kandu kandaaha-t-tirandu ubbi nirkum.

    The lines are rendered  in a way in which Periyapaattaa  goes and Albert Schwarzenegger comes in: “He was sturdily built. Even at this age, if he makes a hard fist, his shoulder muscles would bulge like iron balls.” Periyorgal ennai mannippaargal. T. Sriraman avargal ennai mannippaar.

    Why I say let there be some caution in the matter of translation is that Krithika’s  masterly description of Periyappaataa in terms any callisthenist would be proud of becomes something else in someone else’s English . If these letters are ever taken up for translation into Tamil, let them be translated into her Tamil and his Tamil, not into the translator’s Tamil. Dialects are not wrond language, they are a sub-language, like mannerisms are not defects, only styles.

    Krithika and Chitti need to be read not because they were literary geniuses, or they were social philosophers but because they were two individuals in a relationship of trust, intellectual, cultural and emotional trust.  And that relationship of trust is at a discount today.

    Money is invested, deposits are parked, confidence is extended, admiration is advanced, allegiance is lent. But trust ? Trust is reposed. Reposing is a higher form of transfer, of placement than all the others. And letters are the most sublime vehicle for that reposing, which is why reading someone’s letter without permission is regarded as a wrong, interception by anyone, including the State, of letters is considered vile.

    There is another reason why this volume is so precious. Letters are becoming an endangered species of writing. With the emergence of the e-mail and the SMS, letters, hand-written and ‘proper’ letters are a rarity.

                                                                          6

     Imagine today’s young generation producing a Krithika and a Chitti fifty years from now. They will have acute observations to make, no doubt. They will will have points of view that are both interesting and valuable. But will they have the language, the expression ? Will they have the feel for communication ?

    Krithika says in one letter to Chitti : “My four days in Madras seem a dream now. Not so our long morning drives ; I still feel the sands at Mahabalipuram beating against my cheeks…” That would perhaps be rendered on SMS like this : “Hey Chits… 4 dez Mds total dream, yar. But thoz morn drives! Awsum…M’pur sands biting me mug…wow”

    But believe me, if the Krithika and Chitti of 2052 are true descendants in spirit of our Krithika abd Chitti, I would say their SMS correspondence would be a good read. Let us not be prudes.

    Letters written in a relationship of trust are therefore a precious transaction which, when one is given the chance to read with legitimacy, is a privileged experience.

    Chitti comes through the pages of this volume as a man of firm views, assessments and even predispositions. In other words, as a man who would have been a delight to know and a trouble to disagree with. I rue the fact that I did not get to meet and know  one so free of platitudes and predictability. In his letters to Krithika he is obviously seeking and discovering one he can exchange his thoughts with, almost as if in an exercise of self-nourishment.

    Every serious relationship compensates for a lack in other relationships. Oravu enradu saadaarana vishayam illai. Puhai-yil than oruvaugal vasikkum.

    The more undefined a relationship the more it is likely to be secure, provided others do not interfere with it. Defined relationships can also be secure, but rather like contracts entered into in faith and sustained in perseverance.

    Chitti and Krithika reposed trust in one another’s sensibility, discretion and restraint in a relationship that did not suffer owing to lack of conventional typifications.

    Their correspondence is therefore not just about their times, but about all that which is refined, restrained and redemptive about human relationships.

    I commend Sri Narasiah for his devoted labour.  He has given  very few letters in full, from first line to last. Perhaps that whets our appetite for another edition in which he will give us that in the next round.

                                                                          7

    I shall close with a suggestion. Many of you might have seen ‘Tumhari Amrita’, the play with two actors – Shabana Azmi and Farookh Shaikh . Then play is about letters written by one to the other. They are not man and wife. They are what they are. The letters are , simply, gripping. A play ‘Yours, Krithika’ in which two actors playing Krithika and Chitti read a selection of their letters in chronological sequence will be a huge education, and a huge success. The Museum theatre will overflow.

    Let us look forward to such a production.

    திரு நரசய்யா அவர்களை நேரில் சந்தித்து உரையாட வேண்டும் என்ற என்னுடைய பல நாள் கனவு சமீபத்தில் நிறைவேறியது மகிழ்ச்சியான தருணம். தமிழ் மரபு அறக்கட்டளையின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியொன்றில் ஏற்கனவே ஐயாவை சந்தித்திருந்தாலும், இந்த முறை ஐயா அவர்களின் இல்லத்தில் அவரை சந்தித்து அவருடன் சில மணி நேரங்கள் செலவிட்டதன் மூலம் பல வரலாற்றுத் தகவல்களையும், அவர்தம் அனுபவங்களையும் நேரடியாக அவர் வாய்மொழியாகக் கேட்டு அறிந்தது மகிழ்ச்சியின் எல்லை. அதைப்பற்றி அடுத்த பகுதியில் காண்போம்…

    Share
  • தேசிய இளைஞர் தினம்!

    பவள சங்கரி

    சுவாமி விவேகானந்தர்  பாதையில் இன்றைய இந்திய இளைஞர்கள்

    DSC00876

    தமிழ்நாடு தேசிய சிந்தனைக் கழகமும் ரோட்டரேக்ட் சங்கமும் இணைந்து ஈரோடு வேளாளர் கல்லூரியில், தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு 13.01.2016 அன்று “சுவாமி விவேகானந்தர் பாதையில் இன்றைய இந்திய இளைஞர்கள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கில் தேசிய சிந்தனைக் கழகத்தின் சென்னை மாநிலக் குழு உறுப்பினரான திருமிகு இசைக்கவி இரமணன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஆகச் சிறந்த ஆக்கப்பூர்வமான சிந்தைகளை விதைத்துவிட்டுச் சென்றுள்ளார். மாணவர்களின் உற்சாகமான பங்கேற்பும், கேள்வி நேரப்பகுதியுமே இதற்கு சான்றாக அமைந்திருந்தது. வேளாளர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எம். ஜெயராமன் அவர்களின் சுருக்கமான இனிய உரை மற்றும் சிறப்பு விருந்தினர் குறித்த அழகான அறிமுக உரையுடன் இனிதே ஆரம்பித்த நிகழ்ச்சி, தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாளர், திரு. மா.கோ.சி. ராஜேந்திரன் அவர்களின் எழுச்சிமிகு உரையைத் தொடர்ந்த அம்மேடை முழுமையாக திரு இரமணன் அவர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. வழமையான அவர்தம் தேனிசைக் கானத்திற்கும் குறைவில்லாமல் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தேறியது. அரங்கம் ஆழ்ந்த அமைதியில் நற்சிந்தைகள் நிரம்பிய நல்லலைகளுடன் பரவியிருந்தது.

    DSC00883

    DSC00899

    சுவைபடத் தம் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் எடுத்துக்காட்டுகளுடன் மாணவர்களை வெகு எளிதாக தம் பக்கம் இழுத்துக்கொண்டார், சிறப்பு விருந்தினரான திரு. இசைக்கவி இரமணன் அவர்கள். பல்வேறு அறிஞர்களின் மேற்கோள்களை வெகு சரளமாக எடுத்துக்காட்டி அவைகளை விவேகானந்தச் சிந்தைகளுடன் ஒப்பிட்டு மிக அழகான சொற்பொழிவாக அமைத்திருந்தார்.

    DSC00889

    தலைப்பிற்கேற்றவாறு மாணவர்களின் இன்றைய நவீன வாழ்க்கை முறைமைகளையும், பின்னோக்கிய காலங்களினூடே இன்றைய மாணவர்கள் இழந்த பல்வேறு சுவையான விசயங்களையும் வெகு நேர்த்தியாகச் சுட்டிக்காட்டி மாற்றங்கள் தேவை என்பதை மாணவர்கள் ஏற்கும் வகையில் வெகு இயல்பாக விளக்கிய விதம் அருமை! அன்றைய வாழ்க்கை முறையில் அன்றாட வாழ்வியல் நடைமுறைக்கான பணிகள் வெறும் வேலையாக மட்டும் இல்லாமல், நண்பர்களுடன் சேர்ந்து இனிமையாக பொழுது போக்குவதோடு, உடற்பயிற்சிக்கான வழிகளாகவும் இருந்ததையும், தாம் ஒரு கவிஞனாக இருப்பதில் தம் மனைவி முதல் ஏனையோருக்கும் எத்துனை துன்பம் என்பதை நகைச்சுவையுடன் இதமாகக் கூறி மாணவர்களை சிரிப்புக் கடலில் மிதந்தவாறு சிந்திக்கவும் வைத்தார். இன்றைய குழந்தைகளுக்கு நவீனத்துவம் என்ற பெயரில் இயற்கையான உடற்பயிற்சி முதல் இன்னும் எத்தனை எத்தனை இழப்புகள் என்பதை சற்று வருத்தமாகவே பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியை அழகாக தமிழிலும், ஆங்கிலத்திலும் தொகுத்து வழங்கிய மாணவர்களுக்கு பரிசு வழங்கியும் உற்சாகப்படுத்தினார்.

    முதுகலை பட்டதாரி மாணவர்களின் கருத்தாழம் மிக்க வினாக்களுக்கும், பொறுமையாக அவர்கள் எளிதாக உணரும் வகையில் சிறப்பாக பதலளித்தது பாராட்டுதலுக்குரியது. பேராசிரியர்கள் சிலரும் கேள்வி நேரத்தில் பங்குபெற்று மாணவர்களையும் உற்சாகப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மாணவர்களின் ஆழ்ந்த ஈடுபாடும், பொறுப்பான போக்கும் கல்லூரியின் உயர் தரத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    DSC00895

    நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அமைந்திருந்தது, ‘சரியான இலக்கு நிர்ணயம் செய்வது மட்டுமே வெற்றிப் பாதைக்கு வழியமைக்கும்’ என்ற சிந்தையை வெகு இலகுவாக, தெளிவாக, அருமையான எடுத்துக்காட்டுகளுடன் மாணவர்களின் மனதில் பதியச்செய்ததுதான்.

    இசைக்கவி இரமணன் அவர்கள் ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லூரியில் ஆங்கிலத்திலும், தமிழிலும் ஆற்றிய உரை மாணவர்களின் மனதில் சுவாமி விவேகானந்தரின் பாதையில் பூக்கும் மலர்களின் வித்தாக ஊன்றியதோடு, நாளை ஆல விருட்சமாக வளர்ந்து விழுது பரப்பி மேலும் அவர்தம் சந்ததியினரையும் வழிநடத்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

    Share
  • நிறைகுடமாய் நீண்டதொரு பயணம்!

    சாக்லேட் கிருஷ்ணா

    பவள சங்கரி

    crazy title
    ‘மார்க்கபந்து… மொதல் சந்து… அடடா பேரு கவிதை மாதிரி இருக்கே’ – வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் , திரு. கிரேசி மோகன் எழுதி, திரு கமல்ஹாசன் பேசிய ஆரம்ப நகைச்சுவை வசனம் இதுதான்.. படம் முழுக்க வயிறு நோக சிரிக்காமல் வெளியில் வர முடியாது! உலகம் முழுவதும் 285 திரையரங்குகளில், சுமார் 400 மில்லியன் இந்திய ரூபாய்களை வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படம் இது. கமல்ஹாசன், சினேகா, பிரபு, பிரகாஷ்ராஜ், நாகேஷ், மாளவிகா போன்ற பலரும் கலக்கியிருந்த இப்படம் கிட்டத்தட்ட 10 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது! வசூலில் குறிப்பிடும் அளவிற்கு சாதனை படைத்துள்ள திரைப்படம் இது.

    ‘ஆண்டவன் சொல்றான்… அருணாச்சலம் முடிக்கிறான்’ – ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களை ஒரு அடி உயரச் செய்த உன்னத வசனத்தின் படைப்பாளர். எந்திரன் திரைப்படத்திலும் தம் தந்திர மொழியால் ஒரு கலக்கு கலக்கியிருப்பவர் நம் கிரேசி மோகன் அவர்கள்.

    crazy0

    பி.ஈ., எம்.டெக். படிப்பை முடித்ததும் சுந்தரம்-கிளேட்டனில் பொறியாளராகப் பணியாற்றியவர், எழுத்தின் மீது ஏற்பட்ட தணியாத தாகத்தால், தம் பணியை விடுத்து முழு நேர எழுத்தாளராக தம்மை மாற்றிக்கொண்டவர். நகைச்சுவையே தம் உயிர் மூச்சு என்று வாழ்பவர். இவர் பேச்சு அனைத்துமே நகைச்சுவை.. நகைச்சுவை.. நகைச்சுவைதான். தாம் துளியும் சிரிக்காமல் சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு மற்றவரை விழுந்து, விழுந்து சிரிக்க வைப்பது இவருக்கு கைவந்த கலை. திரைப்படங்களில், வசனங்களில் என்றில்லாமல் இயல்பாகவே இப்படியொரு குணம் கொண்டவர் திரு கிரேசி மோகன். திரு. கமல்ஹாசன் மூலம், அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதி திரையுலகில் அறிமுகம் ஆனவர். தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், சதி லீலாவதி, தெனாலி, அவ்வை ஷண்முகி, பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் , ஆஹா, காதலா காதலா, நான் ஈ உள்ளிட்ட நாற்பதிற்கும் மேலான திரைப்படங்களுக்கு கதை- வசனகர்த்தாவாக பணியாற்றி அனைத்து வெற்றிகளிலும் பங்கு பெற்றவர். ரஜினி, பிரபு, சூர்யா என்று முன்னணி நாயகர்கள் பலரின் படங்களுக்கு தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர். மேடை நாடகங்கள் பலவற்றை எழுதி, நடித்து, வெற்றி கண்ட இவர் எழுதிய ‘க்ரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ என்ற நாடகம் பெற்ற மாபெரும் வெற்றி, திரு. மோகன் அவர்களை ‘கிரேசி மோகன்’ ஆக்கியிருக்கிறது!

    craz2

    தாம் தம் பணியை விட்டு, முழுநேர எழுத்தாளரானதன் காரணத்தைக் கேட்டால், அவர் தம் வழமையான நகைமொழியில்,

    “எல்லோரும் சொல்வார்கள், மோகன் சுந்தரம் கிளேட்டன் வேலையை விட்டதற்குக் காரணம் சினிமா ஆசை, நாடக ஆர்வம் என்று. ஆனால் அது உண்மையில்லை. உண்மையான காரணம் நாய் பயம். சுந்தரம் கிளேட்டனில் நைட் ஷிப்ட் முடித்து வீட்டுக்கு வரும் போது ஜெமினியில் ஒரு குரூப் நாய் என்னை பிடித்துக் கொள்ளும். அப்படியே ஸ்டெல்லா மாரிஸ் வரை கூடவே வந்து, என்னை அங்கே விட்டுவிட்டுப் போய்விடும். அங்கே இன்னொரு குரூப் நாய் காத்துக் கொண்டிருக்கும். அது மியூசிக் அகாடமி வரைக்கும் கொண்டு வந்து விடும். பின் அங்கிருந்து வீடு. எனக்காகவே பிளான் பண்ணி அந்தக் காலத்தில் நாய்கள் குரூப் வாழ்ந்து வந்திருக்குமோ என்று சந்தேகம். ரிலே ரேஸ் மாதிரி என்னை அவை சுற்றிச்சுற்றி வந்தன. என்னால் முடியவேயில்லை ரொம்ப பயமாகிப் போய்விட்டது. குரைக்கிற நாய் கடிக்காது என்பதெல்லாம் பொய். நான் நம்பவே மாட்டேன். நாய் பத்தின எந்த பழமொழியையும் நான் நம்ப மாட்டேன். எனக்கு நாய் பயம் ரொம்ப ஜாஸ்தி. அதனால்தான் வேலையை விட்டேன். அதுதான் உண்மை” என்ற பதிலே வருகிறது!

    cas

    ‘இயல்’, ‘இசை’, ‘நாடகம்’ என்ற முத்தமிழில் முத்தான மூன்றாம் தமிழ் நாடகத்தமிழ். சொல் வடிவான, ‘இயல்’, சொற்களோடு இசையும் சேர்ந்த வடிவமே ‘இசை’. ‘இயல்’, ‘இசை’ மற்றும் உடல் அசைவுகளை அடிப்படையாகக் கொண்ட வடிவமே ‘நாடகம்’ என்பது. உள்ளம் உவகை கொள்ளும் வகையில் ஆடலும், பாடலும் சேர்ந்து விளங்குவது நாடகம் (நாடு+ அகம்). கலித்தொகை, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில் நாடகக் கூறுகளை காணமுடிகிறது.

    நாடக வழக்கினைப் பற்றித் தொல்காப்பியம் ,

    “நகையே அழுகை இளிவரல் மருட்கை
    அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
    அப்பா லெட்டாம் மெய்ப்பா டென்பர்-” என்கிறது.

    கி.பி.18ஆம் நூற்றாண்டளவில், இராமநாடகக் கீர்த்தனை, நந்தனார் சரித்திரக் கீர்த்தனை போன்ற நாடகங்கள் மிகப் புகழ் பெற்றிருந்தாலும், கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே நாடகம் அதிவேக வளர்ச்சி பெறலாயிற்று. 20 -ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் ஐம்பதாண்டு காலம் தமிழ் நாடகக் கலைக்குப் பெரும் பங்காற்றியவர்கள் தி .க.சங்கரன் ,தி.க .முத்துசாமி ,தி .க .சண்முகம் ,தி.க. பகவதி ஆகியோர் . தமிழ் மரபுவழி நாடகங்கள் சீரான வளர்ச்சியினை எட்டியபோது தி.க.சண்முகத்தின் இராஜராஜசோழன் , மற்றும் நாடகக் காவலர் என்று பாராட்டப்பட்ட திரு. ஆர் .எஸ் . மனோகர் அவர்களின் “இலங்கேஸ்வரன் ” என்ற நாடகத்தின் மூலமும் தமிழ் நாடகக் கலை மிகவும் பிரபலமடைந்தது எனலாம். நாடகத் துறையில் ஆழமாகத் தம் தடம் பதித்தவர்கள் பலர். காசி விசுவநாத முதலியார், தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள், பரிதிமாற் கலைஞர், பம்மல் சம்பந்த முதலியார், திண்டிவனம் ராமசாமி ராஜா, பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, நவாப் ராஜமாணிக்கம், எம்.ஆர்.ராதா, ஆர்.எஸ்.மனோகர் , கிரேசி மோகன், எஸ்.வி. சேகர், ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளாக தமிழ் நாடகங்கள் ,ஏற்றம் கண்டு, காலந்தோறும் சமுதாய மலர்ச்சிக்கும் , மாற்றத்திற்கும் களனாக விளங்கி வருகிறது என்பது வெள்ளிடைமலை.

    cmy

    ஒரு நாடகத்திற்கு அதன் களன் என்பதே அடிப்படை. நாடகம் இவ்வளவு கால நேரம் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற வரையறை ஏதும் இல்லாதலால், புனையப்படும் நாடகம் நடிப்பவரின் மெய்ப்பாடு, குரல் அழுத்த வேறுபாடு போன்றவற்றின் மூலம் வசனங்களை மெருகூட்டி, காண்போரை வசீகரிக்கச் செய்யும் வகையில் அதன் கால நீட்டிப்பும் நிர்ணயிக்கப்படுகிறது. நாடகங்கள், சமூக நாடகங்கள், புராண இதிகாச நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், நகைச்சுவை நாடகங்கள், அரசியல் நாடகங்கள் போன்ற பல வகைகளில் இருந்தாலும், சமீபத்தில் இப்படி எந்த கட்டுக்குள்ளும் அடங்காத ஒரு வித்தியாசமான களனில் அமைந்த ஒரு நாடகம் காணும் வாய்ப்பு அமைந்தது. அந்த நாடகத்தைக் காணும்போது,

    ‘எழுத்தாளர்கள், ஓவியர்கள், கவிஞர்கள் என்று படைப்பாளிகளுக்கு ஒரு தரம் இருக்கிறது. அது தராதரம் இல்லாததாக ஆகிவிடக் கூடாது. அதில் ஒருவனுக்கு கவனம் இருக்க வேண்டும். பணத்துக்காக நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கும் போதுதான் தரம் கீழே இறங்குகிறது. அவ்வாறு செய்வது அவன் சார்ந்த துறைக்கே துரோகம் செய்வதாகும். நகைச்சுவை என்னுடைய வீடு. அதில் நான் என்ன செய்தாலும், எதை எழுதினாலும் அதன் தரம் கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது எனது பொறுப்பு. அதைத்தான் நான் செய்து கொண்டு வருகிறேன்’ என்று தன்னிலை விளக்கம் அளிக்கும் திரு கிரேசி மோகன் அவர்கள் இதைத் தவறாமல் கடைப்பிடிப்பவரும்கூட என்பதையும் ஏற்றுக்கொள்ள முடிந்தது.

    ‘சிரி, சிந்தி. சிந்திக்க முடியவில்லையா, சிரி, மீண்டும் சிரி – இதுதான் எனது நாடகங்களின் கருத்து. ஏனென்றால் சிரிப்பதையே மிகப் பெரிய சமூகச் சீர்திருத்தமாக நான் கருதுகிறேன்’ என்று இயல்பாகக் கூறும் திரு கிரேசி மோகன் மேலும், ‘நகைச்சுவை மூலம் நீங்கள் சமுதாயத்திற்கு என்ன சேவை செய்திருக்கிறீர்கள் என்று கேட்டால், நகைச்சுவையே மிகப்பெரிய சேவை என்பேன். நான் சமுதாயத்தை மாற்றுவதற்காகப் போராடுகிறேன். அதற்காக என் வியர்வையை, இரத்தத்தைச் சிந்தி, அதைப் பேனாவில் மையாக ஊற்றி எழுதுகிறேன் என்றெல்லாம் ஒருவர் சொன்னால் அதெல்லாம் சும்மா பம்மாத்து. சுத்த பேத்தல். எந்த எழுத்தாளராலும் சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துவிட முடியாது. சமுதாயத்தில் நிறைய புரையோடிப் போன அல்சர்கள், அப்பெண்டிசைடிஸ்கள் இருக்கின்றன. அவற்றை குணமாக்குவதற்கு நிறைய டாக்டர்கள் வேண்டும். ஆனால் இந்த எழுத்தாளர்கள் அந்த டாக்டர்கள் கிடையாது. அந்த social doctors யார் என்று கேட்டால் அவர்கள்தான் மதர் தெரஸா, சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி, பாரதி போன்றவர்கள்’ என்கிறார்.

    அமெரிக்கா, துபாய், மஸ்கட், குவைத், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, ஹாங்காங் என்று பல்வேறு நாடுகளுக்கும் சென்று நாடகம் நடத்தி பெரும் வரவேற்பு பெற்றுள்ளவர். அமெரிக்காவில் மட்டுமே நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள் நடத்தி சாதனை புரிந்துள்ளார். 1979ல், தம் சொந்த நாடகக் குழுவான ‘கிரேசி கிரியேஷன்ஸ்’ என்பதைத் தொடங்கியுள்ளார். தனது தம்பி திரு. மாது பாலாஜியுடன் இணைந்து இன்றுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்கள் நடித்து சாதனை படைத்துக்கொண்டிருக்கிறார். மேரேஜ்இன் மேட் இன்சலூன் , கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம், கிரேசி கிஷ்கிந்தா, மீசையானாலும் மனைவி, போன்ற இவருடைய பல நாடகங்கள் பிரபலமானவை. அந்த வரிசையில் , தற்போது மிகப் பிரபலமாக, சாதனைப் படைத்துக்கொண்டிருக்கும், ‘சாக்லேட் கிருஷ்ணா’ நாடகம் குறித்து திரு கிரேசி மோகன் அவர்கள்,

    “6 வருடங்களுக்கு முன்பு அரங்கேற்றம் ஆனது ‘சாக்லேட் கிருஷ்ணா’….. கிட்டத்தட்ட 750 முறைகள் உலகம் முழுவதும் போட்டது….500 வது ஷோ அமெரிக்காவின் ஹ்யூஸ்டன் நகரில் நிகழ்ந்தது…. 600 வது ஷோ சிங்கப்பூரில்…. இந்த பிரும்மாண்டமான வெற்றிக்குக் காரணம், எனக்குத் தோன்றிய வரையில், என் எழுத்தோ, நடிப்போ அல்ல…. 36 வருடங்களாக ‘கூட்டுக் குடும்பமாக’ வாழும் ‘கிரேசி கிரியேஷன்ஸ்’ குழு உறுப்பினர்களின் ஒற்றுமையே… மேலும் கடவுள் கண்ணனின் அருள்…. லாஜிக்கை மீறிய மேஜிக் ஹ்யூமர்…. மேஜிக்கோடு ஹுமரையும் இணைத்ததால் இந் நாடகம் இன்னமும் கூஜிக்ஜிக் ரெயில் போல ஓடிக்கொண்டிருக்கிறது…. ஒவ்வொரு முறையும் வெளியூர் செல்லும் போது ‘வெண்பாவில்’ கண்ணனை வேண்டி துணைக்கு அழைப்பேன்” என்கிறார்.

    வேண்டுதல் வெண்பாக்கள் இதோ ; http://www.vallamai.com/?p=54292

    இந்த நாடகம், அரங்கு நிறைந்த காட்சியாக, பெருவாரியான இரசிகர்களைக் கவர்ந்திருப்பதன் காரணம், இதன் வித்தியாசமான கதைக்களமும்தான். பொதுவாக, பக்திக் கதைகளில், பக்தன் வேண்டிக் கொள்ள கடவுள் காட்சி தந்து, என்ன வரம் வேண்டும் என்று கேட்பார். அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வார். ஆனால் சாக்லேட் கிருஷ்ணாவில், முற்றிலும் மாறுபட்ட வகையில், சாக்லேட் கம்பெனியில் வேலை செய்யும் மாது, சாக்லேட்கள் கொஞ்சமும் விற்காதலால், அலுவலகத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார். கிருஷ்ணரை வேண்டிக்கொள்பவர் முன் பெருமான் தோன்றுகிறார். ஆனால் அவர் மாதுவுக்கு வரம் தருவதற்காக வருவதில்லை. தன்னுடைய சில பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பூமிக்கு வருகிறார். அர்ச்சுனரும் கிருட்டிணரும் நட்பாக இருந்தது போல, மாதுவுடன் மிக யதார்த்தமான நல்ல நண்பனாக இருந்து அவருக்கு என்ன உதவிகள், எப்படி செய்து விட்டுப் போகிறார் என்பதுதான் கதை. இதில் நிறைய மாயாசாலங்களும் செய்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து திரு கிரேசி மோகன் அவர்களிடம் கேட்டபோது, இதற்காகத் தானே மேஜிக் கற்றுக் கொண்டிருப்பதாகக் கூறி ஆச்சரியமேற்படுத்துகிறார்.

    crazy3

    ஸ்ரீகிருஷ்ணர் (கிரேசி மோகன்) திடீரென்று கை நீட்டினால் மாயமாக கையில் புல்லாங்குழல் வரும். ஆண்டாள் கிளி வேண்டும் என்று கேட்டு ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து தொலைபேசியில் அழைக்க, அப்போது, கிருஷ்ணர் ஏதோ மந்திரம் போட்டதும், அங்கிருந்த ஒரு துணி கிளியாக மாறி, அப்படியே பறந்து போய்விடும். இந்த இடத்திலெல்லாம் அரங்கமே அதிரும் அளவிற்கு கைதட்டல் பெறுகிறார். இந்த வகையில் இந்நாடகத்தில் குழந்தைகளைக் கவரும் அம்சங்கள் நிறையவே இருக்கின்றன. அனைவரும் குழந்தைகளாகி மனம் விட்டுச் சிரிக்கவும் முடிகிறது. கிட்டத்தட்ட 1 .40 மணி நேரம் ஒரு நிமிடமாகக் கரைந்தது நிகழ்ச்சி முடியும்போதுதான் தெரிந்தது. பங்குபெற்ற கலைஞர்கள் அனைவரும் தங்கள் பங்கை மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

    நாடகத்தின் இறுதியில் கிருட்டிணர் தாம் வந்த வேலை முடிந்துவிட்டது, திரும்பிச் செல்லப்போவதாகச் சொல்லும்போது, மாது சோகமே உருவாக, ‘போய்த்தான் ஆகவேண்டுமா கிருஷ்ணா’ என்று கேட்டு கண்கலங்கும் போது, உடன் நம்மையும் உள்ளம் நெகிழச் செய்யும் அத்தருணமே இந்நாடகத்தின் பூரண வெற்றி முழுமையாகப் புலப்படுகிறது!

    ‘நமது அறிவை, ஆர்வத்தை கடவுள் நமக்குக் கொடுத்த திறமையைக் கொண்டு வாசகர்களையோ, பார்வையாளர்களையோ இப்ப இருக்கும் கட்டத்தை விட்டு அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல முடிகிறதா அல்லது அதே கட்டத்தில்தான் அவர்களை வைத்திருக்கிறோமா என்று பார்க்க வேண்டும். அட்லீஸ்ட் கீழே இறக்காமலாவது இருக்கிறோமா என்று பார்க்க வேண்டும். அதுதான் ஒரு படைப்பாளியின் தார்மீகமான கட்டுப்பாடாக இருக்க வேண்டும்’ என்று சமுதாய நற்சிந்தையுடன் கூறும் திரு கிரேசி மோகன் அவர்களுக்கு, ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம், இன்று பாரதி விருது வழங்கி கௌரவிப்பது சாலத்தகும்!

    திரு.கிரேசி மோகன் மென்மேலும் சாதனை படைக்க வல்லமையின் மனமார்ந்த வாழ்த்துகள்!

    Share
  • உடலும் , மனமும் இணையும் தருணம்!

    பவள சங்கரி

    அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில், கிளப்மெட்ரோ என்ற உடற்பயிற்சி நிலையத்தின் யோகாசனப் பயிற்சியாளர் திருமிகு லிண்டா அவர்களுடன் ஒரு நேர்காணல்!

    DSC00440

    இயந்திரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கை முறையில் மனமும், உடலும் ஒருசேர அமைதி பெற மிக நல்ல உபாயம் யோகாசனம். கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை. யோகாசனம் என்பது உடற்பயிற்சி மற்றும் ஆசனங்களைக் குறிப்பது . அனுதினமும் முப்பது நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை பயிற்சி செய்தால் வெகு விரைவிலேயே நல்ல பலனை அடைய முடியும். தியானம் நம்மை நாமே உணரச் செய்கிறது. மனதை ஒருமுகப்படுத்துவதே தியானம். சாதி, மதம், இனம், மொழி, நாடு, ஆண், பெண் வயது என எந்த வேறுபாடுமின்றி மனதோடு உடலை இணைத்து பயிற்சி செய்வதே யோகம். தியானத்தின் மூலம் பூரண மன அமைதி பெற முடியும். இருதயத்தின் படபடப்பு குறைவதோடு, நினைவாற்றலும் அதிகரிக்கும். அமைதியான, ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்துவதால் வேலை செய்யும் ஆற்றல் அதிகரிக்கும். இரத்த அழுத்தம், ஆத்துமா போன்ற அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடிவதோடு ஆயுளும் கூடும். ஏற்கனவே உள்ள நோயின் உபாதைகளை படிப்படியாகக் குறைத்து, அதனை கட்டுக்குள் வைக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியம் கூடும். நரம்பு, இரத்த ஓட்டம், ஜீரணம் போன்ற உடலின் மண்டலங்கள் அனைத்தும் சீரடையும் வாய்ப்பு அதிகரிக்கும். இளமையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்.

    DSC00417

    5000 ஆண்டுகளுக்கு முன்னரே நம் தமிழ் நாட்டுச் சித்தர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் வகையில் ஆய்ந்தறிந்த அறிவியல் உண்மை யோகாசனம் என்பது.

    DSC00418

    ஓகம் என்று சித்தர்களால் வழங்கப்பட்ட சொல்தான் உயிரும் மெய்யும் கூடும் கலை. இச்சொல்தான் மருவி வடமொழியில் யோகம் என்று அழைக்கப்படுகிறது. உடலும் மெய்யும் ஒன்றாக இருப்பினும் உயிரைத் தனியே நம்மால் உணர முடிவதில்லை. ஆனால் யோகக் கலையை உளப்பூர்வமாக பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போது உயிருக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை நம்மால் அறிய முடியும் என்பது சித்தர்களின் வாக்கு. அதனால் உயிரையும் உடலையும் பாதுகாக்கும் உத்தியை அறிவதும் எளிதாகிறது . தினமும் காலை மற்றும் மாலையிலும், அல்லது காலையில் மட்டுமாவது இப்பயிற்சியை பழகி வந்தால், நம் உடலோடு உயிரும் புத்துணர்வு பெறுவதை அறியலாம். யோகாசனத்தை முதன்முதலாகப் பழக விரும்புபவர் குறைந்தது ஒரு வார காலமாவது நன்கு பயிற்சி பெற்ற ஒரு குருவிடம் ஒழுங்காகப் பயிற்சி எடுத்துக் கொள்ளுதல் நலம்.

    உலக அளவில் பல நாடுகளில் யோகப்பயிற்சிகள் பரவியுள்ளன. அமெரிக்காவில் யோகாசன வகுப்பில் பயிற்சி பெற பல எதிர்பார்ப்புகளுடன் சென்றபோது சில ஆச்சரியங்களும் காத்திருந்தன. ஆம் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்துடன் அமைதியான தியானத்தில் ஆரம்பித்து, ‘சிவாய நம’ என்ற திருமந்திரமும் தொடர, சீன யோக மந்திர மெல்லிசை மற்றும் மேலை நாட்டு மிக மெல்லிய மதுர கீதங்களுடன் மிக இனிய அனுபவங்களாக அமைந்திருந்தது லிண்டா அவர்களின் யோகாசன வகுப்பு!

    யோகாசனம் செய்வதற்குரிய பொதுவான நியமனங்கள்:

    yoga

    * பொதுவாக காலை நேரங்களில் ஆசனங்களைப் பழகுவதே சிறந்ததென்றாலும் மாலையில் செய்ய வேண்டிய தேவை வரும்போது, உணவு உண்டு மூன்று மணி நேரத்திற்கு பின்னரே, அதாவது உணவு செரிமானம் ஆன பிறகே யோகப்பயிற்சி செய்தல் வேண்டும். காலையில் எழுந்தவுடன் காபி அல்லது தேநீர் அருந்தும் வழமையுடையவர்களாயின் பானம் அருந்திய அரை மணி நேரத்திற்குப் பின்னரே பயிற்சிகளைச் செய்தல் வேண்டும்.

    * அன்றாடம் ஆசனங்களைச் செய்வதற்கு ஆரம்பிப்பதற்கு முன்பு உடலைத் தயார் நிலைப்படுத்துவதற்காக சில எளிய முன் பயிற்சிகள் செய்தல் வேண்டும்.

    * ஒவ்வொரு முறையும் ஆசனத்தின் முடிவில் இரு முறைகள் மூச்சை நன்றாக இழுத்து விட்டு ஆசுவாசம் கொள்ளல் வேண்டும்.

    * ஆசனங்களைச் செய்யும் போது அது உடலுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல், தங்களால் இயன்ற அளவிற்கு மிக இலகுவாகச் செய்யும் வண்ணம் இருத்தல் நலம்.

    * அதேபோல ஆசனங்களைச் செய்து முடிக்கும் போது 5 முதல் 10 நிமிடங்கள் வரை சவாசனம் என்ற ஓய்வு ஆசனம் செய்த பிறகே முடிக்க வேண்டும்.

    DSC00435

    * இறுதியாக பிராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சி செய்து, 10 முதல் 20 நிமிடங்கள் வரை மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்வது மேலும் நன்மையளிக்கும்.

    * தினசரி அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக யோகாசனப் பயிற்சி செய்வது சிறந்த பலன் அளிக்கக்கூடியது.

    * யோகாசன பயிற்சியில் தியானம், மூச்சுப்பயற்சி ஆசனம் இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது. ஆகவே, சில நிமிடங்கள் தியானம், பிறகு பிராணாயாமம் , அதன் பிறகு ஆசனங்கள் செய்வது நல்லது. நீர் ஆகாரமாக இருந்தால், அருந்திய பின் அரை மணி நேரம் கழிந்த பின்பும், எளிய சிற்றுண்டியாக இருந்தால் இரண்டு மணி நேரம் கழித்தும், முழுமையான ஆகாரமாக இருந்தால் நான்கு மணி நேரம் கழித்தும் யோகப்பயிற்சிகளை செய்யவும்.

    * யோகப் பயிற்சி முடிந்த பின்பு வியர்வை அடங்கிய பின்னால் தான் குளிக்க வேண்டும்.

    * யோகாசனப் பயிற்சி செய்து முடித்த பின்பு 15 நிமிடங்களுக்குப் பின்னர் ஆகாரம் எடுத்துக்கொள்வது நலம்.

    திருமிகு லிண்டா அவர்களிடம் யோகாசனம் குறித்து கேட்ட செவ்வி மற்றும் அவர் அளித்த விடைகளும் இதோ :

    DSC00439

    1. Could you please tell me why did you choose ‘Yoga’ as your career in particular?

    Linda : I actually chose a career in fitness, which I still love after many years. However, fitness can be rough on the physical body and I became very stiff and sore and decided to try yoga as a means to relieve this. This began my Yoga Journey in 2002. I then enrolled in the American Yoga Academy for my 200 hour teacher training and after that 40 hour training in an Iyengar style and I have been teaching yoga ever since.

    yoga pho

    2. what is the PHILOSOPHY OF YOGA?

    Linda : A simple Philosophy of Yoga is that the Mind, Body and Spirit are all connected.
    Yoga is a collection of spiritual techniques and practices; however, most yoga which is practiced in the West is Hatha Yoga and focuses on movement of the body mostly and eventually clearing the mind thru breath.

    DSC00438

    3. Is yoga a collection of spiritual techniques and practices?

    Linda : Spiritual techniques are usually not included, especially in a gym setting.

    4. About : The Bhagavad Gita, The Upanishads, Vedas – Is there any connectivity with Yoga?

    Linda : Bhagavad Gita, the Upanishads, and Vedas all reference yoga so there is a definite connection between them.

    5. Do we need to Practice Yoga at Home?

    DSC00430

    Linda : Yes, I believe that you should practice yoga at home especially during times of stress or tightness in the body. Those with chronic issues should practice yoga daily if possible. Yoga in general is great for the immune system and overall state of being.

    6. whether there is any yoga practice where one can get relief for chronic diseases?

    Linda : Yoga certainly can provide relief for chronic diseases. Examples are hip openers for sciatica and backbends to stimulate the kidneys.

    7. Sankhya philosophy, one of the oldest and most influential of the six systems (darshans) of Indian thought, has had a profound impact on the beliefs, values and concepts used in… what do you say?

    Linda : Sankhya philosophy – I am not familiar with this philosophy and do not know if there is a connection to yoga.

    8. What is commonly considered Yoga in the West is in actuality just one of the many paths of Yoga, and is technically called Hatha Yoga. The oldest and most widely used ancient text on the physical practices of Hatha Yoga is the Hatha Yoga Pradipika. Do you agree?

    Linda : Yes, the texts of Hatha Yoga Pradipika begin with the physical postures of yoga (Asana) and once strength and flexibility of the body are obtained, thus aiding to rid the body of disease, then breathing techniques begin as a way to bring energy to the body and control the mind and thus release stress (physical and mental stress). From there the Yoga Pradipika can be a guideline to go deeper into Yoga if the participant desires.

    DSC00431

    9. What is Mudra? can you explain about techniques of the Pranayama :-

    Linda : A mudra is like a gesture or a position designed to let energy flow to different areas of the body. It is said that disease is caused by interruption of the flow of energy to the body. The most common mudra is touching the thumb and the index finger. Pranayama is simply breathing and there are many breathing techniques. For example Alternate Nostril Breathing (Nodhi Sodhana) is done to calm the nervous system while Kapalabahti is invigorating. These are breathing exercises in additional to Asana practice. During Asana practice the breath should be full and deep, approximately 6 seconds and used as a way to distract the mind so that you are fully immersed in your Asana practice. During challenging postures, the breath can be used as a means of drawing energy and during relaxing postures, or stretching, the breath can be used as a means of sinking deeper into the posture.

    10. The Hatha Yoga Pradipika gives us a valuable map to these deeper practices of yoga, as well as providing the knowledge and tools to travel to these depths if we so choose. Is it correct?

    Linda : Yes, the Hatha Yoga Pradipika is like a map of yoga which begins with Asana.

    DSC00432

    11. What are the moral, ethical and societal guidelines for practicing yoga?

    Linda : The moral, ethical and societal guidelines for practicing yoga are the “5 Yamas of yoga” which are like rules of behavior: nonviolence, truthfulness, living without excess gluttony, living without unnecessary possessions and non-stealing. Striving for a healthier and more peaceful life.
    Yes, certainly in 2014 we can all use some guidance to live an honest and ethical life and focus less on material possessions and to treat our bodies with respect.

    12. Is yoga helpful for those with Scoliosis?
    (Scoliosis, a condition that leads to lateral curvature of the spine, affects 6 million people in the U.S., from infants to the elderly. The most common age of onset is 10-15 years, and 85 percent of cases are idiopathic.)

    Linda : For those with Scoliosis, especially adolescents, yoga can especially helpful. Side Plank done on only 1 side (the side with the curvature) can help to reduce the curvature without surgery. In severe cases of scoliosis yoga in addition to surgical procedures can be extremely helpful.

    உலகம் முழுவதும் ஒரு கிராமமாக சுருங்கிவிட்ட இந்த காலத்தில், நல்ல விசயங்கள் எங்கு இருந்தாலும், நாடு, இனம், மொழி, மக்கள், மதம் என்ற பேதமில்லாமல் அதை ஏற்றுக்கொண்டு தம் வாழ்வை வளப்படுத்திக்கொள்ளும் பக்குவம் நம் மக்களிடையே வேர்விட ஆரம்பித்துவிட்டதற்கு ‘யோகாசனம்’ என்ற நம் நாட்டுச் சித்தர்களின் அரிய கலை, அமெரிக்காவில் பரவி, அமெரிக்க மக்களிடையே பெரும் நம்பிக்கையை வளர்த்திருப்பதே அதற்கு சான்றாக அமைந்துள்ளது.

    Share
  • திருமதி செல்லபாப்பா கீரன் அவர்களுடன் ….

    பவள சங்கரி

    இறையருள் பெற்ற பிரபல சொற்பொழிவாளர், உபன்யாசகர், கனீர் என்ற வெண்கலக் குரலுக்குச் சொந்தக்காரர், அமரர் புலவர் கீரன் அவர்களை மறந்திருக்க வாய்ப்பில்லை. புலவர் கீரன் அவர்களின் கம்பராமயணம், மகாபாரதம், திருவிளையாடற் புராணம், திருவெம்பாவை போன்ற சொற்பொழிவுகள் மிகவும் பிரபலம். மடை திறந்த வெள்ளம் போல, தெளிவான, எளிமையான விளக்கங்களுடனான அவருடைய உபன்யாசம் கேட்போரை மெய்மறக்கச் செய்யும் வல்லமை பெற்றவை. அவர்தம் உரையில் பாடல்களுக்கு அழகாகப் பதம் பிரித்து, எளிய நடையில் விளக்கங்களும் அளித்து அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் சொற்பொழிவாற்றுவார்.

    keeran

    ‘கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்’ என்பார்கள். அந்த வகையில் புலவர் கீரன் அவர்களின் துணைவியார் திருமதி செல்ல பாப்பா கீரன் அவர்கள் மிகச் சிறந்த எழுத்தாளரும், பேச்சாளரும் ஆவார். தற்போது அம்மையார் தம் மகனாருடன் அமெரிக்காவில் வசித்துக்கொண்டிருக்கிறார். அம்மையாரைத் தொடர்புகொண்டு பேட்டி எடுத்தபோது 75 அகவையைக் கடந்தவரின் நினைவாற்றலும், எழுத்துத் திறனும் ஆச்சரியப்பட வைத்தன. இதோ அம்மையாரிடம் நாம் கேட்டிருந்த வினாக்களுக்கு அவர்கள் அளித்துள்ள விரிவான பதில்கள் அவர்தம் கையெழுத்து வடிவிலேயே காணலாம். புலவர் கீரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு உட்பட பல நூல்கலை எழுதிக்கொண்டிருப்பவர். அம்மையார் அவர்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ள மேலே படிக்கலாம்.

    வினாக்கள்:

    1. தங்கள் பெற்றோர் பற்றியும் அவர்கள் தமிழ் ஆர்வம் குறித்தும் கூறுங்கள்

    2. இளம் வயதிலேயே தமிழிலும், இலக்கியத்திலும், எழுதாற்றலும், பேச்சார்வமும் ஏற்பட்டதா?

    3. ஐயா உயர்திரு புலவர் கீரன் அவர்களுடனான காதல் வாழ்க்கைக்கு உங்கள் இலக்கிய பங்களிப்பு எந்த அளவில் இருந்தது?

    4. தங்களுடைய எழுத்துப் பணிகள் பற்றி கூறுங்கள்

    5. இலக்கியத்தில் தங்களுக்குப் பிடித்த கதாப்பாத்திரங்கள். பிடித்ததற்கான காரணங்கள்

    6. மகாபாரதம் மற்றும் வில்லிப்புத்தூரார் பாரதம் ஆகியவற்றில் தாங்கள் கண்ட வேறுபாடுகள்

    7. கம்ப இராமாயணம் மற்றும் வால்மீகி இராமாயணம் ஆகியவற்றில் தாங்கள் காணும் வேறுபாடுகள் அல்லது சிலேடைகள் குறித்து கூற முடியுமா?

    8. மூன்று தலைமுறைகளைக் கண்ட தங்களுடைய பார்வையில் சமுதாய மாற்றங்களும், குறிப்பாக பெண்களின் வாழ்க்கை முறைகளும் எவ்வாறு உள்ளது – மாற்றங்கள் தேவையென்றால் அது எந்த வகையில் வேண்டும்?

    9. ஈ.வே.ரா. பெரியார் அவர்கள் தமிழில் ஏற்படுத்தியுள்ள எழுத்து மாற்றங்கள் குறித்த தங்கள் கருத்தை அறியத் தாருங்கள்.

    10. இளம் தமிழ் ஆர்வலர்களுக்கு தாங்கள் சொல்லும் செய்தி.

    11.தமிழ் நாட்டிலேயே பிறந்து, வளர்ந்தும் தமிழ் சரியாக பேச முடியாமலோ அன்றி பேச விரும்பாமலோ இருக்கும் தமிழர்கள் நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    mrs

    திருமதி செல்லபாப்பா கீரன் அவர்களின் விடைகள்:

    akee1

     

    akee2

    akee3

    akee4

    akee5

    akee6

    akee7

    akee8

     

    akee9

    akee10

    akee11

    akee12

     

    akee13

    akee14

    akee15

    akee16

    akee17

    akee18

    akee19

    akee20

    akee21

    akee22

     

    திரு. புலவர் கீரன் அவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்க : http://manoranjitam.wordpress.com/2012/02/25/pulavar-keeran-downloads/

    Share
  • ஸ்ரீ ஹரி ஓம் அம்மா!

    பவள சங்கரி

    “துறவியரில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் காமத்தையும் செல்வத்தையும் துறந்துவிட்ட பிறகும்கூட, பெயர், புகழ் ஆசையால் விலங்கிடப்படுகிறார்கள். மாபெரும் உள்ளங்களுக்கும் கடைசியாக உள்ள பலவீனம் புகழில் உள்ள ஆசை”
    சுவாமி விவேகானந்தர்

    நம் இந்தியத் திருநாடே ஆன்மீகம் என்னும் அடித்தளத்தின்மீது கட்டப்பட்ட ஒரு மாபெரும் கோட்டை என்பதே உலகறிந்த உண்மை. நம் நாட்டில் மட்டுமே பல மதங்கள், பல இனங்கள், பல தெய்வங்கள், ஒவ்வொன்றிற்கும் ஒருவிதமான தத்துவங்கள், எண்ணற்ற வழிபாட்டு முறைகள் என்று திரும்பிய புறமெல்லாம் ஏதோவொரு ஆன்மீகச் சின்னம் நம் கண்ணில் பட்டவாறே இருக்கும். அந்த வகையில் துறவறம் பூண்டு, நாட்டை விட்டு காட்டில் சென்று தவம் புரிந்த சங்க காலத்தின் சக்கரவர்த்திகளாகட்டும், சகல செல்வங்களும் கொட்டிக்கிடக்க, எந்தச் சுகமும் தேவையில்லை என்று துறந்து தெருவில் இறங்கிச் செல்லும், செல்வந்தராகட்டும், நாகரீக உலகில் பிறந்து, வளர்ந்தாலும் இளமை முதல் எதிலும் எதுவித நாட்டமும் இன்றி, இறைமையை அல்லும், பகலும் மனதிலேற்றி மெல்ல, மெல்ல துறவை நாடியோராகட்டும், அனைவரின் இலக்கும் இறைவனை அடைவது என்பதோடு, உள்ளத் தூய்மையும், அதனால் பெறக்கூடிய மன நிம்மதியும்தான். அந்த வகையில், இறைவனின் படைப்பில் ஒவ்வொரு மலரும் ஒரு தனிப்பட்ட குணமும், மணமும், நிறமும் கொண்டிருப்பது ஆச்சரியப்படத்தக்கது. இயல்பாகவே பெண்கள் இளம் வயதிலிருந்தே, தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் தனி விருப்பம் கொண்டவர்களாக இருப்பவர்கள். ஒரு இளம் பெண் மனதில் ஆசா, பாசங்கள் அனைத்தும் மறைந்து, அன்பும், அமைதியும், பேரானந்தமும் நிலைத்து நிற்கும் வண்ணம் துறவு நிலையை தேர்ந்தெடுப்பது என்பது சாமான்ய காரியம் அல்ல. பிறவியிலேயே அப்படி ஒரு எண்ணம் வாய்க்கப் பெற்றவர்களுக்கே இது சாத்தியம் என்பதே நிதர்சனம்.

    வண்ண வண்ணச் சிற்றாடையுடன், சிங்காரம் செய்து, இன்பமாய் வலம் வரும் காலத்தில், பாண்டியும், பல்லாங்குழியும் விளையாடும் பருவத்தில், தூய வெண்ணாடையை உடுத்தி, அதே தூய்மையை உள்ளத்திலும் புகுத்தி, மங்கையரில் தாம் ஒரு தனி ரகம் என்பதை ஆச்சரியமாகக் காணச் செய்துள்ளவர் ஸ்ரீ ஹரிஓம் அம்மையார் அவர்கள். தம் இளம் பருவத்திலேயே இறைவனின் மீது நாட்டம் கொண்டு, இயற்கையாய் ஒரு இளம் பெண்ணிற்கு உள்ள எந்த உணர்வினாலும் ஆட்படாமல், அறிவும், இறைமையும் தம் இரு கண்களாக எண்ணி தம் வாழ்நாளைத் தவமாக கழித்துக் கொண்டிருப்பவர். அதற்கு இணையான ஆசிரியப் பணியில் தம் கடமையைச் செவ்வனே நிறைவேற்றி, எண்ணிலடங்கா பெண் குழந்தைகளை ஒழுக்கச் சீலர்களாக உருவாக்கியுள்ள பெருமை அம்மையாரையேச் சேரும். தாம் புனிதமாகக் கருதியத் தம் ஆசிரியப் பணியிலும், மற்ற ஆசிரியர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் திகழ்ந்தவர், 72 வயது நிரம்பிய ஸ்ரீஹரிஓம் அம்மையார் அவர்கள்.

    ஒரு மனிதரின் தனிப்பட்ட அடையாளத்தை அவருக்கே புரிய வைப்பவரே நல்லாசிரியர் என்பவர். இளம் சிறார்கள், ஊக்கம், தன்னம்பிக்கை , விடா முயற்சி ஆகிய நற்பண்புகளைக் கொண்டு ஒரு நாட்டின் சிறந்த குடிமகனாக உருவாகுவதற்கு ஆசிரியத் தொழில் பெரும்பங்கு வகிப்பதை எவரும் மறுக்க இயலாது. அந்த வகையில் சுயநலம் மட்டுமே கருத்தில் கொண்டு, தம் ஆன்மா கடைத்தேற வழிவகுக்கும் எண்ணம் மட்டுமேயன்றி, சமுதாயத்திற்கும் தம்மால் ஆன சேவையைச் செய்துள்ள மன நிறைவையும் பெற்று ஈரோடை மாநகரின், அவல் பூந்துறை கிராமத்தில், பெரியமணியம்பாளையம் என்னும் புனிதமான இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூர்ண வித்யா குருகுலத்தில் தம் தவ வாழ்க்கையை மேற்கொண்டிருக்கும், அம்மையாரைச் சந்தித்து உரையாடினோம்.

     paval

    வினா : துள்ளி விளையாடும் பருவத்திலேயே, தூய வாழ்வைப் பற்றிய சிந்தை தோன்றியதன் பிண்ணனி குறித்து அறியத் தாருங்கள் அம்மா.

    அம்மா: ஆம். இளம் வயதிலேயே எனக்கு ஆழ்ந்த வாசிப்பின்பாற் ஈடுபாடு ஏற்பட்டது. அதுவே எனக்குக் கிடைத்த வரமாக எண்ணுகிறேன். பத்து, பன்னிரெண்டு வயதிலேயே, மு.வரதராசனார் புத்தகங்களும், கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ எனும் புதினமும் என்னை அதிகமாகவேக் கவர்ந்தன. ஆன்மீகமும், சரித்திரமும், தேச பக்தியும் என்னை ஆட்கொண்டது என்றே சொல்ல வேண்டும். நல்ல வாசிப்பு, ஒரு நல்ல மனிதனை உருவாக்குகிறது என்பதற்கு ஆதாரமே என் வாழ்க்கை. வளர் இளம் பருவத்திலேயே மற்ற குழந்தைகள் போல இயல்பான இச்சைகள் எதுவுமே எனக்கு இல்லாமலே போனது. வெள்ளை ஆடை உடுத்துவது மட்டுமே என் விருப்பமாக இருந்தது. உடன் பயின்ற மாணவர்களுக்கும் நான் ஒரு வித்தியாசமான பிறவியாகவே காட்சியளித்திருக்க வேண்டும் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது.

    pavala2

    வினா : ஆன்மீகப் பாதையில் தங்களின் வளர்ச்சி பற்றி சொல்லுங்களேன்

    pavala1அம்மா: நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக, என் பள்ளிக் கல்வியுடன், பற்றில்லாத ஒரு நிலையும் என்னையறியாமல் என்னுடன் வளர்ந்து வந்தது என்றே சொல்ல வேண்டும். பெற்றோர் (இவர் தந்தை பிரபலமான ஒரு மருத்துவராக இருந்தவர்) சகோதரிகள் என அனைவரும் என்னுடன் இருந்தபோதும், தனிமை மட்டுமே என் உள்ளொளியை பெருகச் செய்தது என்றே சொல்ல வேண்டும். அதன் காரணமாகவே என் முதுகலை கல்லூரிப் படிப்பை முடித்தவுடனே, வினோபாஜியின் மடத்தில் சென்று இரண்டு ஆண்டுகள் தங்கிவிட்டேன். அங்குதான் தேசபக்தியும், என் ஆன்மீகமும் இணைந்த பயணம் தலை தூக்கியது. வினோபாஜியின் உரைகள் என்னை மென்மேலும் பண்படுத்தியதோடு, என் ஆன்மீகத் தேடலுக்கும் நிறைய நூல்கள் களம் அமைத்துக் கொடுத்தன. கட்டுப்பாடான வாழ்க்கைக்கும் தயாராக முடிந்தது.

    வினா : தேச பக்தியும், துறவும் ஒன்றிணைந்து பயணிக்க இயலுமா?

    அம்மா: இல்லை. என்னைப் பொருத்தவரை தேசப்பற்றும், என்னுள் இருந்த கலைப்பற்றும் என் ஆன்மீக வாழ்க்கைக்குத் தடையாகவே இருந்தது. நாட்டியம், பாடல், கவிதை எழுதுவது போன்ற கலைகள் நான் கற்றிருந்தேன். ஆனாலும் அதைச் சுமக்க விரும்பாமல் விட்டுவிட்ட பின்புதான் என் துறவு வாழ்க்கை சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதாவது எதுவுமற்ற வெறுமையே வழிபாடு என்ற நிலை அரும்பியது. எந்தத் தேவையும் இருக்கவில்லை. தம் தொண்ணூறு வயதுகளில் இருந்த வினோபாஜியின் அறிவுரைகளும், வாழ்க்கை முறைமைகளும் எனக்குள் பெரும் மாற்றத்தையே ஏற்படுத்தியது. அதன் பின் ஆசிரியத் தொழிலைத் தேர்ந்தெடுத்து, மாணவச் செல்வங்களுக்கும் நல்ல ஆன்மீக ஒழுக்க நெறியுடன் இயைந்த கல்வியைப் புகட்ட முடிந்தது. என்னுடைய இந்த எழுபத்தி இரண்டு வயதிலும், இன்று திருமணம் ஆகி நல்ல நிலையில் வாழும் பெண்கள் பலர் தங்கள் அமைதியான வாழ்வின் ஆதாரமாக என் பயிற்சி முறைகள் இருந்துள்ளது என்று மகிழ்வுடன் சொல்வதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

    வினா: துறவு வாழ்க்கையை தேர்ந்தெடுத்த ஒருவர் நாட்டிற்கான சேவை ஏதும் செய்யத் தேவையில்லையா? குறிப்பாக அரசியலில் அவர்கள் ஈடுபடலாமா?

    அம்மா : தேவையில்லை. சும்மா இருத்தலே துறவறம். (உண்மையான துறவிகளுக்கு). அவர்களின் இருப்பே நன்மை. ஏதும் செய்ய வேண்டிய தேவையே இல்லை.

    வினா: புரியவில்லை அம்மா. சும்மா இருப்பதில் யாருக்கு என்ன நன்மை விளையப் போகிறது. நாட்டிற்கும், வீட்டிற்கும் நம் சக மனிதர்களுக்கும் கூட எந்த சேவையும் செய்யாமல் சும்மாயிருப்பதில் தன்சுகம் காண்பதன்றி வேறு என்ன நன்மை விளையப்போகிறது.

    அம்மா: ஆம். உண்மையான துறவு நிலையை மேற்கொண்டிருப்பவர்களின் இருப்பே நாட்டிற்கு நலம் விளைவிப்பவை. ஒரு தீபச் சுடர் போல ஒளி பரவும். அந்த ஒளியில் எண்ணற்ற நலம் பெருகும்.

    வினா: அப்படி ஒரு நல்ல அலை பரவும் என்ற நம்பிக்கையில் வாழ்நாள் முழுவதும் ஏதும் செய்யாமலே காத்திருப்பது சரியா? அப்படி ஒரு நிலை வந்துவிட்டது என்பதை ஒருவரால் உணர முடியுமா?

    அம்மா: நிச்சயம் உணர முடியும். உண்மையான துறவு நிலையில் இருப்பவர்களுக்கு அந்த பேருண்மையை உணர முடியும். உள்ளத்தில் ஒரு நிரந்தர மகிழ்ச்சியும், அமைதியும் குடிகொண்டிருக்கும். தன்னைச் சுற்றி இருக்கும் சகல சீவன்களும் அதன் பலனை அனுபவிக்கவும் முடியும்.

    வினா: அம்மா, தவறாக எண்ண வேண்டாம். என் ஐயம் தீர வேண்டியே இப்படி ஒரு வினா. துறவு நிலையில் இருப்பவர்கள் ஏதும் செய்யாமல் சும்மா இருப்பதே நலம் என்ற தங்களின் வாதம் உண்மையென்றால், சுவாமி விவேகானந்தர் நாடு முழுவதும் சுற்றி மக்களுக்கு நாட்டுப் பற்றை ஏற்படுத்தியதோடு, பல வெளிநாடுகளுக்கும் சென்று நம் நாட்டின் பெருமையை பரவச் செய்தாரே அந்த துறவறமும் சரிதானே?

    அம்மா: நிச்சயமாக ஆம். சுவாமிஜி, நாட்டின் அப்போதையத் தேவையைக் கருத்தில்கொண்டு, மக்களுக்கு தேசப்பற்றுpavala4 வளரவேண்டும், சுதந்திரப் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கில் தம் செயல்களை மேற்கொண்டிருந்தார். அதனால் நாட்டில் பெரும் நன்மைகளும் விளைந்தது. இந்து மதத்தை எப்படியும் உயர்வான நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஒரு விதத்தில் அது அவருடைய மறைமுகமான ஒரு சுதந்திரப் போராட்டம் என்றே சொல்ல வேண்டும். நம் இந்தியாவில் சமஸ்கிருதம், வேதங்கள், உபநிசத்துகள் போன்ற பல அற்புதமான வளங்கள் இருக்கின்றன என்பதை உலக அரங்கில் எடுத்துச் சென்றார். அவருடைய உள்நோக்கம் துறவறம் என்பதைக்காட்டிலும், நாட்டுப் பற்று என்பதிலேயே இருந்தது. ஆனாலும் அவரும் தனக்குள் ஏதும் இல்லாமலேதான் இருந்தார். துயரப்படுவோருக்காக அவர் மனம் அழுதாலும், அவருக்குள் தனிப்பட்ட எந்தவிதப் பற்றும் இல்லாத வெறுமையே இருந்தது. அதுவே அவருக்கு வெற்றியையும் தந்தது.

    வினா: அப்படியானால் துறவு நிலையிலும் வேறுபாடுகள் உள்ளது என்கிறீர்களா?

    அம்மா : ஆம். அவரவர் சூழலுக்கேற்ப மாற்றங்கள் உண்டு. வாழ்க்கையில் படாத துன்பங்களெல்லாம் பட்ட பின்பு, துறவு நிலையைத்
    தேர்ந்தெடுத்தவர் பலர் மிகவும் மனம் ஒன்றிய நிலை துறவில் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

    வினா : காலம் குறித்து தங்களுடைய கருத்து என்ன? எதிர்காலம் பற்றி தங்களால் சொல்ல முடியுமா?

    அம்மா: காலம் என்பதில் எனக்கு நம்பிக்கையே இல்லை. இறந்த காலம் முடிந்துபோன ஒன்று. எதிர்காலம் நம் கையில் இல்லை. நிகழ் காலமென்றாலும் அடுத்த நொடி என்றாலே அது முடிந்துபோன காலம். ஆக காலம் என்பது இல்லாத ஒன்று. இருப்பில் இல்லாமல் ஓடிக்கொண்டே இருப்பது…

    வினா : உங்கள் குடும்பம் பற்றி?

    அம்மா: ஒரு சன்யாசிக்கு இந்த உலகமே குடும்பம்தான். அவர்களுக்கென்று தனிப்பட்ட குடும்பம் இல்லை என்றாலும், தாய் தந்தை இல்லாமல் எவரும் பிறக்க முடியாது. என் தந்தை ஒரு பிரபல மருத்துவராக இருந்தவர். தாய் மிக நல்லதொரு ஆத்மா..

    வினா: குடும்பம் எனும் சாகரத்தில் நீந்தி இன்ப துன்பங்கள் அனைத்தும் கடந்த நிலையில் பிற்காலங்களில் சன்னியாசம் பெறுவது நல்லதா? அது தேவையா?

    அம்மா: நம் இந்து மதம் இதை வானப்பிரஸ்தம் என்று முழுமையாக ஆதரிக்கிறது. நம் முன்னோர்கள், அரசர் முதல் ஆண்டி வரை எண்ணற்றோர் அப்படி வானப்பிரஸ்தம் சென்றுள்ளார்கள். இன்றும் வயதான காலத்தில் பெற்றோர் பிள்ளைகளை விட்டு விலகி இருத்தலே நலம். அதற்காக காவி உடுத்தி காட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதல்ல. மனதில் எந்த எதிர்பார்ப்பும், ஆசைகளும் இன்றி தனிமையில் அமைதியான நிலையை மேற்கொள்வதே தவம். வாழ்ந்து முடித்தவர்கள் வாழ வேண்டியவர்களுக்கு வழி விட்டு விலகி இருத்தலே சிறந்த தவம்.

    வினா: அப்படியாயின் கூட்டுக் குடும்பம் என்ற ஒரு விசயமே தேவையில்லையா? தாத்தா, பாட்டி என்ற உறவு குழந்தைகளுக்கு அத்தியாவசியம் இல்லையா?

    அம்மா: எல்லாம் ஒரு எல்லைக்குட்பட்டு இருந்தாலே அமைதியான வாழ்க்கை கிடைக்கும். குடும்பத்தில் உழன்று கொண்டே இருப்பதால், தன் மன அமைதி, இறை நிலை ஆகிய அனைத்தும் இழக்க வேண்டியும் வந்துவிடுகிறது. மின் கட்டணமும், பால் அட்டையும், காய்காரி பிரச்சனையிலேயே வாழ்க்கையை ஓட்டிவிட்டு ஆன்மா கடைத்தேறும் வழியறியாது திகைத்து நிற்பதே முடிவாகிவிடும். அவரவர் கடமையை அவரவர் காலமறிந்து செய்வதே சிறந்த தவம். அதுவே மன அமைதிக்கும் வழி.

    வினா: புனிதப் பயணங்கள் செல்வது தேவையா?

    அம்மா: புனிதப் பயணங்கள் செல்வதன் மூலம் மனம் தூய்மை அடைகிறது. நம் முன்னோர்கள், புண்ணிய ஆத்மாக்கள் பாதம் பதிந்த மண்ணையும், ஆதிசங்கரர் போன்ற மகான்கள் கண்ணுற்ற தெய்வங்களை நாமும் தரிசிக்கும் போது நல்ல அலைகள் பரவும் வாய்ப்பு அதிகமாகிறது.
    ஆனால் ஒரு துறவிக்கு அதுவும் தேவையில்லை. தானே இறைவனுமாய் இருப்போரே உண்மையான துறவிகள். காட்டில் சென்று அமைதியாக தனிமையில் வாழுவதே சிறந்த தவம்.

    வினா: வினோபாஜியின் ஆசிரமத்தில் இருந்தபோது நீங்கள் கற்றுக்கொண்டவைகள் எவை?

    booksஅம்மா: ‘கேதாரேஷ்வர் தாம்’ நதிக்கரையில் உள்ள அந்த ஆசிரமத்தில், வாழ்க்கையின் நெறி முறைகள் அனைத்தும் அங்குதான் கற்றேன். வினோபாஜியின் ஆசிரமத்தில் என்னுடைய இரண்டாண்டு வாழ்க்கையில் நான் தவ வலிமையும், யோகமும், வேத சாத்திரங்கள் மற்றும் உபநிசங்களும் ஞானமாய் பெற்றேன். ஒரு வேளை உணவு மட்டுமே உயிர் வாழப் போதுமானது என்று அங்கு பழகி வந்ததை கடந்த ஐம்பது ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறேன். அதனால்தானோ என்னவோ இந்த 72 வயதிலும் பூரண ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். அவரவர் உழைப்பிற்கேற்ற உணவு எடுத்துக்கொள்வதே சிறந்தது. சத்தான உணவு எடுத்துக்கொள்வது அவசியம் என்றாலும், கூலித் தொழிலாளி தன்னுடைய கடிமான வேலைக்குப் பிறகு சாப்பிடும் அதே அளவு உணவை உடலுழைப்பு அதிகம் இல்லாத அலுவலக அறையில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்க்குத் தேவையில்லை. அந்த வகையில் துறவு நிலையில் சும்மா இருப்பவர்கள் இன்னும் கட்டுப்பாடான உணவுப் பழக்கம் கொள்வதே சரியாகும்.

    வினா: தியானம் யாருக்கெல்லாம் அவசியம்?

    அம்மா: தியானம் அனைவருக்கும் அவசியமான ஒன்று. குறிப்பாக குடும்பத்தில் உள்ளவர்கள் அன்றாடம் இருபது நிமிடங்களேனும் செய்ய வேண்டியது அவசியம். நான் தியானம் பயின்றது, தம்மகிரியில் கோயங்காவிடம். அதன் பிறகு தயானந்த சரசுவதி சுவாமிகளிடம் தியானம் பயின்றேன். நான் மிக அதிகமாகக் கற்றுக்கொண்டது என்றால் அது நுவரேலியாவில், காயத்ரி பீடத்தின், காயத்ரி சுவாமிகளிடம்தான். “கடைசி காலத்தில் நீ ஸ்ரீலங்காவில்தான் வந்து சேருவாய்” என்றும் சொல்லியிருக்கிறார் சுவாமிகள். தியானம் அன்றாடம் பயிற்சி செய்வதன் மூலமாக ஒரு மணி நேரத்தில் செய்யும் வேலையை அரை மணியில் முடிக்க முடியும்.

    வினா : இன்றைய பெண்களின் நிலை பற்றி?

    அம்மா: என் கருத்து சற்று மாறுபட்டும் இருக்கலாம். பாரதி சொல்வான், ‘பெண்ணை வீட்டிற்குள் பூட்டி வைத்த விந்தை மனிதர் தலை சாய்ந்துவிட்டார்’ என்று. ஆனால் அன்று பெண்களை அப்படி வீட்டில் பொத்தி வைத்திருந்ததாலேயே நம் இந்தியக் கலாச்சாரம் காப்பாற்றப்பட்டிருந்தது என்றே சொல்லலாம். அன்றைய காலகட்டத்தில் அது மிகவும் அவசியமானதாகவே இருந்தது. பல ஆயிரம் வருடங்களாக அந்நியர் பூந்துவிட்ட நாடு இது. நம்நாட்டில் திலகவதியார், மைத்ரேயி, மங்கையர்கரசியார் போன்ற எத்துனை மாதரசிகள் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். அவர்களெல்லாம் கட்டுப்படுத்தப்பட்டவர்கள் அல்ல. அவர்களுக்குரிய சுதந்திரமும் இருக்கத்தான் செய்தது.

    இன்றைய நிலையில் ஒரு பெண் அநாவசியமாக, இரவு நேரங்களில், பாதுகாப்பற்ற சாலைகளில் அச்சத்துடன் செல்வதைக் காட்டிலும், வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்பதே முழுமையான சுதந்திரம் என்றே கூற முடிகிறது. பெண்கள் என்றுமே தங்களுக்கென ஒரு கட்டுப்பாடு வைத்துக்கொண்டு அதற்குள் வாழ்வது மட்டுமே சிறந்ததொரு வாழ்க்கை. சுதந்திரம் என்ற பெயரில் தேவையற்ற செயல்களைச் செய்து மாட்டிக்கொள்வதில் அல்ல சுதந்திரம். இன்று பெண்கள் கட்டாயமாக பணிக்குச் செல்ல வேண்டிய நிலையில், ஆக்கப்பூர்வமாகச் செயல்படும் துணிவு, அதாவது, அச்சமின்றி பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பக்குவம் உள்ளவர்கள் மட்டுமே அதற்குத் தகுதியுடைவராகிறார். அதுமட்டுமல்லாமல், பெண்கள் பணிக்குச் செல்வதால், குழந்தை வளர்ப்பு பெரும் சவாலாகிவிடுகிறது. குழந்தைகளிடம் சில மணி நேரங்கள் செலவிடுவது கூட பெற்றோருக்கு இயலாமல் போகிறது. இதனால் இன்று குழந்தைகளின் மன நிலைகளிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. சம நிலை என்பதிலெல்லாம் பெரும் அர்த்தம் இல்லை. அவரவர் கடமையை அவரவர் சரிவர செய்வதே சிறந்த சமத்துவம். இயற்கையோடு இயைந்த வாழ்க்கையே இனிமையான வாழ்க்கை. அதை உணர்ந்து வாழவேண்டியதே இன்றைய தேவை.

    மெய்ஞ்ஞான உணவை ஊட்டியது போதாது என்று நினைத்த அன்னை எங்களுக்கு அரிசிச் சாதமும், கொத்தமல்லித் துகையலும், தேங்காய் எண்ணெயும் கலந்து, தம் கைகளால் பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொடுத்து வயிரையும் நிறையச் செய்தார்கள். மதிய நேரமான அந்த பகல் வேளையிலும், திறந்த வெளித் திண்ணையில், நல்ல நினைவலைகளின் பகிர்வுகளோடு, நிலாச்சோறு உண்ட மன நிறைவையும் ஏற்படுத்திய அன்னையை நெஞ்சில் சுமந்தபடி, அமைதியாக அவர் சிந்தைகளை அசை போட்டபடியும் வந்து சேர்ந்தோம், எங்கள் கடமைகளைத் தொடர….

    Share
  • திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயுடனான நேர்காணல்

    ‘With You, Without You’
    திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயுடன் ஒரு நேர்காணல்
    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

    a

    பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான இலங்கையைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயின் ‘With You, Without You’ (உன்னுடன், நீயில்லாமல்) எனும் திரைப்படமானது, கடந்த ஜூன் மாதத்திலிருந்து இந்தியத் திரையரங்குகளில் திரையிடப்பட திட்டமிடப்பட்டிருந்தது.

    d

    யுத்த கால இலங்கையைப் பின்புலமாகக் கொண்ட இத் திரைப்படமானது, ஒன்று சேரவே முடியாத இடைவெளியை ஏற்படுத்திச் சென்ற மோதலொன்றின் இடையே, தற்செயலாகச் சந்திக்க நேரும் இருவரைச் சுற்றி பின்னப்பட்ட கதையாகும். அவர்கள் இருவருக்கும், அந்த இடைவெளியை அழித்து ஒன்று சேர காதல் உதவுமா அல்லது அவர்களது இறந்த காலமானது தொடர்ந்தும் நிகழ்காலத்தைப் பாதித்துக் கொண்டேயிருக்குமா என்பதைப் பற்றியே இத் திரைப்படம் பேசுகிறது.

    இந்தத் திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகை அஞ்சலி பட்டீலுக்கு, இத் திரைப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக 2012 ஆம் ஆண்டு நடந்த இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. அத்தோடு இத் திரைப்படமானது, லண்டன் BFI, சிக்காகோ, ஹொங்கொங், கேரளா மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றிலும் திரையிடப்பட்டுள்ளது.

    b

    கேள்வி – ‘With You, Without You’ திரைப்படமானது தஸ்தாவேஸ்கியின் ‘A Gentle Creature’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இந் நாவலின் கதையை, இலங்கையின் யுத்த காலத்தோடு தொடர்புபடுத்தலாம் என உங்களுக்கு ஏன் தோன்றியது? அவ்வாறு உங்களுக்குத் தோன்றச் செய்தது எது?

    பதில் – வளர்ந்துவரும் திரைக்கதையாசிரியர் ஒருவர், இந் நாவலை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் யுத்த காலப் பின்னணியில் தான் எழுதிய கதையை என் கவனத்தில் கொண்டு வந்தார். தஸ்தாவேஸ்கியின் இந் நாவலானது, பல தளங்களில் விரியும் படைப்பு. அதன் ஒரு தளமானது நுகர்வுக் கலாசாரம், மானிடத் தொடர்புகளை சீர்குலைப்பதை விவரிப்பதாக அமைந்திருப்பதாக பல விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தக் கருவானது, அகிலம் முழுவதற்கும் பொருந்தக் கூடியதாகவும், நிரந்தரமானதுமென நான் சிந்தித்தேன்.

    இலங்கையும் மூடிய பொருளாதாரத்திலிருந்து திறந்த பொருளாதார சமூகத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால், இது பொருத்தமான உருவகம் என நான் உணர்ந்தேன். யுத்தம் எனப்படுவது வலியவர்களது ஆட்சி அதிகாரங்களுக்காக, மக்களுக்கிடையே ஏற்படக்கூடிய மோதலாகும். இந் நாவலின் கதையானது ஆண்மையை சீர்தூக்கிப் பார்க்கும் கதையொன்றென இந் நாவலை வாசிக்கும்போது எனக்குத் தோன்றியது. யுத்த காலத்தில் இலங்கைக்குள் நிலவிய ‘ஆண்மையை’ விமர்சனம் செய்வதற்கு இக் கதையின் மூலமாக எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

    பிரதான கதாபாத்திரங்கள் இரண்டுமே இனங்களால் வேறுபட்டும், யுத்த களத்திலிருந்து வந்தவர்களாகவும் இருப்பின், அவர்களது தொடர்புகளையும், எதிர்நோக்கும் சவால்களையும், பல பரம்பரைகளாக நிகழ்ந்த யுத்தத்தின் பின்னர் வழமைக்குத் திரும்ப முயற்சிக்கும் முழு இலங்கையின் நிலவரத்தையும் ஒரு உருவகமாகப் பயன்படுத்தலாம் என எனக்குத் தோன்றியது. இரு தரப்பினருமே அடுத்தவரின் கோணத்திலிருந்து பார்க்க ஆரம்பிக்காத வரையில் அமைதி ஏற்படாது என நான் நம்புகிறேன். இச் சிறு நாவலை, பல தடவைகள் வாசித்த பின்னரே நான் திரைக்கதையை எழுதினேன்.

    கேள்வி – திரைப்படத்துக்கான பணம் எங்கிருந்து வந்தது?

    பதில் – இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட ஆகார் எனும் அமைப்பின் மூலமாக ஆதாரப் பணம் கிடைத்தது. தெற்காசியாவில் நிலவும் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் ஆவணப்படமொன்றை உருவாக்கித் தரும்படி அவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டனர். ஆரம்பத் திரைக்கதையை வாசித்து முடித்ததன் பிற்பாடு, எனது விருப்பத்திற்கேற்ப இத் திரைப்படத்தை உருவாக்க அவர்கள் அனுமதித்தார்கள். மேலதிக செலவுகளை இலங்கைத் தயாரிப்பாளர்கள் இருவர் ஏற்றுக் கொண்டார்கள்.

    கேள்வி – இத் திரைப்படம், இதுவரையில் இலங்கையில் திரையிடப்பட்டிருக்கிறதா? இலங்கையில் திரையரங்குகள் மூடப்படுவதானது, திரைப்படங்களைத் திரையிடுவதில் பாதக விளைவுகளை ஏற்படுத்துவதாக நீங்கள் முன்பு கூறியிருக்கிறீர்கள். இப்பொழுது அந் நிலவரத்தில் மாற்றமேதும் உள்ளதா?

    பதில் – இத் திரைப்படமானது இன்னும் இலங்கையில் திரையிடப்படவில்லை. இது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டதாகும். இலங்கையில் தற்போதிருக்கும் திரையரங்குகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறும்வரை நான் காத்திருக்கிறேன். இப்போது, நாம் உரையாடும் இக் கணம் வரை கூட அவ்வாறான மாற்றம் ஏதும் இடம்பெறவில்லை. திரையரங்குகள் மூடப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந் நிலையில், திரையரங்குகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றம் பெறாவிடில், இன்னும் பல திரையரங்குகள் மூடப்பட்டு நிலைமை இன்னும் மோசமாகும்.

    c

    கேள்வி – இத் திரைப்படம், இந்தியத் திரையரங்குகளில் திரையிடப்படுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    பதில் – நானென்றால், எனக்கு இவ்வளவு காலம் நடந்தவற்றில் சிறந்ததாக நினைப்பது அதைத்தான். ஏனென்றால் இந்தியா எனப்படுவது எனக்கு மிகச் சிறப்பான ஒரு இடம். சரியாகச் சொல்வதானால் என்னுடைய இரண்டாவது வீடு போன்றது அது. சினிமா என்பதால் மாத்திரமல்ல, எல்லாவற்றினாலும். நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில், இத் திரைப்படத்தைத் தயாரித்திருப்பது இந்தியத் தயாரிப்பாளர்கள் என்பதால் மட்டுமல்ல. சென்னையிலுள்ள பிரசாத் கலைக்கூடத்திலேயே பிற்தயாரிப்பு வேலைகள் நடைபெற்றன. இத் திரைப்படத்தைத் தொகுத்தது தேசிய விருது பெற்ற தொகுப்பாளர் திரு.ஏ.ஸ்ரீகர் ப்ரஸாத். ஒலி வடிவமைத்தது ஒரு இந்தியக் கலைஞர். பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது, தேசிய விருது பெற்ற இந்திய நடிகை அஞ்சலி பட்டீல். இவர்கள் அனைவருமே இவ்வளவு ஈடுபாட்டோடு இத் திரைப்படத்தில் பணியாற்றியமையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இத் திரைப்படத்தை இந்தியாவில் திரையிடுவதே இவர்களுக்கு வழங்கக் கூடிய அதியுயர் விருதுகளாகும்.

    கேள்வி – இலங்கை திரைப்படத் துறையில் இருக்கும் மோசமான நிலைமைக்கு ஏற்ப, நீங்கள் இத் திரைப்படத்துக்காக செலவிட்ட பணத்தை மீளவும் எவ்வாறு பெற்றுக் கொள்வீர்கள்?

    பதில் – திரையரங்குகளில் திரையிடுவது, செய்மதி தொலைக்காட்சி மற்றும் DVD உரிமையை வழங்குதல் போன்ற வரையறுக்கப்பட்ட வழிமுறைகள் மாத்திரமே இப்போதைய நிலைமையில் தயாரிப்பாளர்களின் கையில் உள்ளது. இலங்கையில் திரையிடப்படும் திரைப்படங்களில் 95% ஆனவை, படத்துக்காக செலவழிக்கப்பட்ட பணத்தைக் கூட மீளப் பெற்றுத் தராதவை. எதிர்காலத்தில் எமது நிலைப்பாட்டுக்காக செய்மதி தொலைக்காட்சியில் திரையிடும் உரிமையை வழங்குவது, Video on demand, ITunes downloads, Vimeo, Netflix, Amazon, YOUTUBE streaming ஆகிய வலைத்தளங்களில் பதிவேற்றுவது போன்ற பணம் ஈட்டக் கூடிய வழிமுறைகளில் ஈடுபட நேரிடும். திரைப்படக் கலைஞர்கள் தேசிய சந்தையைத் தாண்டிச் சென்று, வேகமாக முன்னேறிவரும் தொலைத்தொடர்பு ஊடகங்களினூடாக பயனைப் பெற்றுக் கொள்வது நல்லதென நான் நம்புகிறேன்.

    கேள்வி – நீங்கள் இந்திய நடிகை அஞ்சலி பட்டீலைத் தேர்ந்தெடுத்தது எப்படி?

    பதில் – இந்தக் கதாபாத்திரத்தைக் குறித்து நான் இந்திய ஒலி சீரமைப்புக் கலைஞர் தபாஸ் நாயக்கிடம் விபரித்ததன் பின்னர், அவர் அஞ்சலி பட்டீலின் புகைப்படங்கள் சிலவற்றை என்னிடம் அனுப்பியிருந்தார். நான் சென்னையில் ஏற்பாடு செய்திருந்த நடிகர்கள் தேர்வு நிகழ்விற்கு அவரை அழைத்திருந்தேன். தேர்வுக்காகப் பலரும் வந்திருந்தபோதும், அவருக்குள் இருந்த அப்பாவித்தனத்தையும், முரட்டுத்தனத்தையும் ஒன்றாகக் காட்டும் திறமையானது, ஏனையவர்களை விடவும் அவரிடம் மிகைத்திருந்ததைக் கண்டோம். அவர் அக் கதாபாத்திரத்துக்கு பொருத்தமானவராக இருப்பார் என நாங்கள் தீர்மானித்தோம். அவருக்குள்ளிருந்த நன்னெறிகளுக்கிணங்க வேலை செய்யும் குணம், ஈடுபாடு மற்றும் தொழில்முறை நேர்த்தி ஆகியன என்னை வியப்புக்குள்ளாக்கியது. எனது தேர்வு மிகப் பொருத்தமாக அமைந்ததையிட்டு மிகுந்த திருப்திக்குள்ளானேன்.

    கேள்வி – இந்தியாவும், இலங்கையும் திரைத்துறை மூலமாக சம்பந்தப்பட்டிருப்பது எவ்வாறு? கூட்டுறவாக இணைந்து இயங்குவதற்கான சாத்தியங்கள் எவ்வாறு உள்ளது?

    பதில் – எனது அனேகத் திரைப்படங்களின் பிற்தயாரிப்பு வேலைகளைச் செய்தது சென்னையில்தான். ஸ்ரீகர் ப்ரசாத், தபாஸ் நாயக் போன்ற முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களோடு இணைந்து பணியாற்றக் கிடைத்தமை எனது அதிர்ஷ்டம்.

    அநேகமான இந்திய திரைத்துறைக் கலைஞர்கள் தம் படப்பிடிப்புக்களுக்காக இலங்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். யுத்தத்தின் பின்னர், திரு.அநுராக் காஷ்யப், தனது Bombay Velvet திரைப்படத்தின் அனேக காட்சிகளை இலங்கையில் படமாக்கினார். எதிர்காலத்தில் நான், இன்னும் பல இந்தியக் கலைஞர்களோடும், தொழில்நுட்பக் கலைஞர்களோடும் இணைந்து பணியாற்றவும், இந்தியக் கூட்டுத் தயாரிப்புக்களில் பங்குகொள்ளவும் எதிர்பார்த்திருக்கிறேன். வூடி ஆலன் சொன்னது போல, வெற்றியின் 80% ஆனது, காட்சிப்படுத்துவதாகும். நெருங்கிய அயலவர்களாக நாம் ஒருவருக்கொருவர் வாயில்களில் அவர்களுக்காக முன் நிற்போம். அந்த ஒற்றுமையின் பலனாக நலன்கள் கிடைக்கப் பெறும் விதத்தைப் பார்த்திருப்போம்.

    ***************************

    Share