Tag Archives: மலர் சபா

நான் அறிந்த சிலம்பு – 224

-மலர் சபா  மதுரைக் காண்டம் – அழற்படு காதை பவளம் போன்ற சிவந்த நிற மேனியுடையவன்; ஆழமான கடல்சூழ் உலகை ஆள்கின்ற மன்னனைப் போல முரசு, வெண்கொற்றக்குடை, வெண் சாமரம், நெடுங்கொடி, புகழ்வாய்ந்த அங்குசம், வடிவேல், வடிகயிறு இவற்றைக் கையில் ஏந்தியவன்;            எண்ணில் அடங்காத பகை அரசர்களைப் போரில் புறமுதுகிட்டு ஓடச் செய்தவன்; இந்நிலவுலகம் முழுவதையும் தன் குடையின்கீழ்க் கொண்டுவந்து செங்கோல் செலுத்தி, தீவினைகளை அகற்றி, வெற்றிகள் கொண்டு, தன்பெயரை நிலைநிறுத்தும் வண்ணம் புகழினை வளர்த்துக் குறிஞ்சி, ...

Read More »

நான் அறிந்த சிலம்பு – 223

-மலர் சபா  மதுரைக் காண்டம் – அழற்படு காதை அரச பூதம்  வெற்றி பொருந்திய வெங்கதிர் போன்ற மேனியுடையவன்; ஒளி குன்றாத மணிகளைக் கழுத்தில் அணிந்தவன்;                               உச்சந்தலையில் முடி முதல் கால்களில் கழல்வரை அரசர்க்குரிய அணிகள் அணிந்தவன்; செண்பகம், கருவிளை,செங்கூதளம் ஆகிய பூக்களோடு குளிர்ச்சியான நீர்ப்பூக்களையும் சேர்த்துத் தொடுத்த மாலை அணிந்தவன்; பலவகைப் பூக்களால் ஆன அசைந்தாடும் மாலைகளை அணிந்தவன்; சூரியன் தன் கைகளால் ...

Read More »

நான் அறிந்த சிலம்பு – 222

-மலர் சபா மதுரைக் காண்டம் – அழற்படு காதை பிராமண பூதம் பசுமையான முத்துவடம் பூண்ட நிலவுபோல் மிக்க ஒளி பொருந்திய உடல் உடையவன்; ஒளிரும் முத்துகளால் செய்த அணிகள் அணிந்தவன்; வெண்தாமரை, அறுகம்புல், நந்தியாவட்டைப்பூ இவற்றைத்தன் தலையில் அணிந்தவன்; நுட்பமான நுரை போன்ற              மெல்லிய ஈர ஆடையைத் தன் மேனியில் அணிந்தவன்; மலராத வட்டிகை, விளம்பொரி, வன்னிகை, சந்தனம், கொட்டம் ஆகிய வாசனைப் பொருட்களைச் சேர்த்து அரைத்துப்பூசிய மார்பை உடையவன்; தேன், பால், சர்க்கரை ஆகியவற்றைச் ...

Read More »

நான் அறிந்த சிலம்பு – 221

-மலர்சபா மதுரைக் காண்டம் – அழற்படு காதை மன்னவன் மாண்டதை அறியாமல் மற்றோர் அசைவற்றிருத்தல் கண்ணகியின் ஏவலின்படி தீக்கடவுளின் எரிமுகம் திறந்தது; காவல் தெய்வங்கள் தம் பணி விடுத்துக் கோட்டை வாயிலை விட்டு நீங்கினர். அரசர்க்கெல்லாம் அரசன் பகைவரைப் போரில் வெல்லும் பாண்டிய மன்னன் தன் தவற்றால் வளைந்த செங்கோலைத் தன் உயிர் கொடுத்து நிமிர்த்தினான். பெரிய நிலமகளுக்குத் தன் செங்கோல் நலம் காட்ட, கற்பில் சிறந்த தன் மனைவியோடு மன்னன் அரியணையிலேயே இறந்தான். அரசனும் அரசியும் மாண்டதை அறியாமல் ஆசான், தலைமைச் சோதிடன், ...

Read More »

நான் அறிந்த சிலம்பு – 219

மதுரைக் காண்டம் 11. வஞ்சின மாலை மலர் சபா அரசோடு மதுரையையும் அழிப்பேன் என்று கூறிக் கண்ணகி மதுரையை விட்டு நீங்குதல் “அப்படிப்பட்ட ஊரில் பிறந்த நானும் ஒரு கற்புடைய பெண் என்றால் மதுரை நகரை மட்டுமன்றி மன்னனையும் அழிக்காமல் விடமாட்டேன்; இதை நீ நிச்சயம் காண்பாய்” எனக் கூறிக் கோவிலை விட்டு நீங்கினாள்.   கண்ணகி தன் இடமுலையைத் திருகி எடுத்து மதுரையின் மேல் எறிதல் “நான்மாடக் கூடலான மதுரை நகரின் ஆண்களும் பெண்களும் தேவர்களும் தவத்தோரும் நான் சொல்வதைக் கேளுங்கள்.   நான் விரும்பிய ...

Read More »

நான் அறிந்த சிலம்பு – 218

–மலர் சபா மதுரைக் காண்டம் 11: வஞ்சின மாலை வேறு ஒருவன் தன்னைத் தவறாகப் பார்ப்பது கண்டு, “நிறைமதி போன்ற முகத்தைக் குரங்கு முகம் ஆக்குக” என்று கூற, அவ்வாறே அந்த முகத்தில் இருந்து,    வெளியூர் போன கணவன் வீடு திரும்பியதும் குரங்குமுகம் நீக்கி இயல்பான முகம்கொண்ட சிவப்பு மணிகள் பொருந்திய மேகலை அணிந்த அல்குலை உடைய அவளும் ஒரு பத்தினிப் பெண். மகளிர் அறிவு என்பது அறியாமை உடையது என மேலோர் கூறிய வார்த்தையின் அர்த்தம் உணராது பின்வருவது பற்றி ஆராயாது, ...

Read More »

நான் அறிந்த சிலம்பு – 217

மதுரைக் காண்டம் 11. வஞ்சின மாலை மலர்சபா     புகழ்மிக்க அரசன் கரிகாலன் மகள் ஆதிநந்தி. வஞ்சி நகரத்தின் தலைவன்  அவள் கணவன் ஆட்டனத்தியைக் காவிரி நீர் அடித்துச் சென்றது. ஆதிமந்தி ஆறு ஓடும் வழியாகத்  தானும் ஓடிச்சென்று, “கல்லைப்போன்ற தோள்உடையவனே! நீ எங்கே இருக்கிறாய்?” எனக் கூவிப் பலமுறை அரற்ற, கடல் உடனே ஆட்டனத்தியை அவள் முன் நிறுத்தியது. காதலனைத் தழுவிக்கொண்டு பொற்கொடி போல வந்த  அவளும் ஒரு பத்தினிப் பெண்.   மணல் நிறைந்த கடற்கரைச் சோலையில் தங்கி, பொருள் ...

Read More »

நான் அறிந்த சிலம்பு – 211

  மதுரைக் காண்டம் 10. வழக்குரை காதை கண்ணகி வாயிலோனுக்கு அறிவித்தல் இங்ஙனம் பாண்டிமாதேவி தன் தீயகனா பற்றி உரைத்தாள். திருமகள் உறையும் மார்பை உடைய மன்னன் அரசி கூறியதைக் கேட்டபடி இருந்தான். அச்சமயம் அரசன் வாசலை அடைந்தாள் கண்ணகி; அங்கே நின்றிருந்த காவலனை நோக்கி, “வாயிற் காவலனே! வாயிற் காவலனே! அறிவு முற்றும் இல்லாதவனாக, கொஞ்சம் கூட அறநினைவு இல்லாதவனாகவும் அரச நீதி தவறியவனுமாகிய பாண்டிய மன்னனின் வாயிற் காவலனே! பரல்களை உடைய ஜோடிச் சிலம்புகளுள் ஒன்றை மட்டும் கையில் ஏந்தியவள், தன் ...

Read More »

நான் அறிந்த சிலம்பு – 210

-மலர் சபா மதுரைக் காண்டம் 10: வழக்குரை காதை ஒளிவீசும் அழகிய அணிகலன்கள் அணிந்தவர்கள் கண்ணாடியும் கலன்களும் ஏந்தியவர்கள் புதிய நூலாடை, பட்டாடை ஏந்தியவர்கள் கொழுவிய வெள்ளிலைச் செப்புகளை ஏந்தியவர்கள் வண்ணப்பொடிகள் சுண்ணம் கத்தூரிக் குழம்பினை ஏந்தியவர்கள்  மாலைகள் கவரிகள் அகிற்புகைகள் தாங்கியவர்கள் கூனர் குறளர் ஊமர் இங்ஙனம் கூடிய குற்றவேல் புரியும் மகளிர் புடைசூழ நரை கலந்த கூந்தலுடைய முதுமகளிர் இவர்கள் அனைவரும் உலகம் காக்கும் பாண்டிய மன்னன் தேவி நீடூழி வாழ்க எனப் புகழ்மொழிகளால்  வாழ்த்தி நிற்க… சேவை புரியும் மகளிரும் காவல் ...

Read More »

நான் அறிந்த சிலம்பு – 209

-மலர் சபா மதுரைக் காண்டம் 10: வழக்குரை காதை பாண்டிமாதேவியின் தீக்கனா கண்ணகி பாண்டியன் அரண்மனைக்குச் சென்ற அந்தக் காலைநேரத்தில் பாண்டியன் மனைவி கோப்பெருந்தேவி தான் கண்ட தீய கனவினைப் பற்றி தோழியிடம் உரைக்கிறாள்.                               நம் மன்னனின் குடையும் செங்கோலும் கீழே விழுந்திட வாயிலில் உள்ள மணி அசைந்து ஒலித்திட அந்த ஓசையைக் கனவினில் நான் கேட்டேன். நான்கு திசையும் அதிர்ந்திடக் கண்டேன். ...

Read More »

நான் அறிந்த சிலம்பு – 207

–மலர் சபா மதுரைக் காண்டம் – 09: ஊர்சூழ் வரி கண்ணகி கோவலனைத் தழுவுதலும், அவன் உயிர்பெற்று எழுந்து பேசுதலும் இவ்வாறெல்லாம் அழுது புலம்பினாள் கண்ணகி. இலக்குமி வசித்துவரும் கோவலனின் பொன்மார்பு தன் மார்போடு பொருந்துமாறு அவள் அவனைத் தழுவிக் கொண்டாள். அப்போது கோவலன் உயிர்பெற்று எழுந்தான். “முழுநிலவு போன்ற உன் முகம் ஒளி குன்றிவிட்டதே” என்றே அவன் கூறி, அவளுடைய கண்ணீரைத் தன் கைகளால் துடைத்தான். தன் பாதத்தைக் கண்ணகி பற்ற, கோவலன் வானுலகு செல்லுதல் கண்ணகி ஏக்கம் கொண்டு அழுது, நிலத்தில் வீழ்ந்து, ...

Read More »

நான் அறிந்த சிலம்பு – 205

-மலர் சபா மதுரைக் காண்டம் – 09: ஊர்சூழ் வரி மக்கள் கோவலன் இறந்து கிடந்த இடத்தைக் கண்ணகிக்குக் காட்டுதல் மக்களில் சிலர், கண்ணகிக்குக் கோவலன் இறந்து கிடந்த இடத்தைக் காட்ட முன்வந்தனர். அவனைக் கண்ட செம்பொன்னால் செய்யப்பட்ட கொடி போன்ற கண்ணகியைக் காண்பதற்கும் பொறுக்காமல் கதிரவன் தன் சிவந்த கதிர்களைச்    சுருக்கிக் கொண்டு மேற்கில் விரைந்து மறைந்தான். அக்காட்சியைக் கண்ட மாலைப்பொழுதில் பூத்து உதிர்ந்த பூங்கொடி போன்ற கண்ணகி தன் கணவன் அருகில்சென்று அழுது புலம்பினாள். அவளுடன் சேர்ந்து மக்களும் அழுததால் ...

Read More »

நான் அறிந்த சிலம்பு – 204

-மலர் சபா மதுரைக் காண்டம் – 09: ஊர்சூழ் வரி மதுரை மக்கள் கண்ணகியின் நிலைக்கு இரங்கிக் கூறுதல் நீங்காத துன்பத்தை இப்பெண்ணுக்கு உண்டாக்கியதால் நம் அரசனின் வளையாத செங்கோல் வளைந்துவிட்டது; இதற்குக் காரணம் என்னவோ! மன்னவர்க்கெல்லாம் மன்னன் திங்களை ஒத்த குடையும் வாளினையும் உடைய வேந்தன் தென்னவன் பாண்டியன் கொற்றம் சிதைந்தது; இது எதனால் நிகழ்ந்ததோ! உயிர்களைக் குளிர்விப்பவன் வீரம் வாய்ந்த வேலினை உடையவனின்   குளிர்ந்த வெண்கொற்றக்குடை வெம்மை பரப்புகிறதே; இது எதனால் நிகழ்ந்ததோ! செம்மையான பொன்னால் ஆகிய சிலம்பைத் தன் கையில் ...

Read More »

நான் அறிந்த சிலம்பு – 203

-மலர் சபா மதுரைக் காண்டம் – 09: ஊர்சூழ் வரி “கதிரவனது சொல்லைக் கேட்ட கண்ணகி, எஞ்சிய ஒற்றைச் சிலம்பை ஏந்தி நகரினுள் புக்கு, நகர மாந்தரை நோக்கி முறையிட்டு அழுதல்“ கதிரவன் இங்ஙனம் மறுமொழி தந்தான். அதைக் கேட்டதும், சங்குகள் அறுக்கப்பட்டுச் செய்த வளையல்களைக் கையில் அணிந்த கண்ணகி, அங்கே கணமும் நில்லாமல், தன்னிடமிருந்த ஒற்றைச் சிலம்பைக்    கையில் ஏந்தி நகருக்குள் சென்றாள். “முறைதவறி நடக்கும் அரசனின் ஊரில் வசிக்கின்ற பத்தினிப் பெண்டிரே! ஒரு செய்தி கேட்பீர்களாக! என்னிடம் இருக்கும் இச்சிலம்பு ...

Read More »

நான் அறிந்த சிலம்பு – 202

-மலர் சபா மதுரைக் காண்டம் – 08: துன்ப மாலை ஆய்ச்சியர் முன்னிலையில் கதிரவனை விளித்து ‘என் கணவன் கள்வனோ‘ என வினவுதல் காண்பீர்களாக! தானே வாய்த்த தீயின் காரணமாய் நிகழ்ந்த குரவைக் கூத்தினைக் கண்ட இடையர்குல இளமகளிரே! நீங்கள் அனைவரும் கேட்பீர்களாக! இடையர்குல இளமகளிரே!                       நீங்கள் கேளுங்கள்! காயும் கதிர்களையுடைய சிவந்த சூரியனே! பாய்ந்து வரும் அலைகள் உடைய கடலை வேலியாகக் கொண்ட இவ்வுலகில் நிகழ்கின்ற அனைத்தும் ...

Read More »