Month: May 2014

  • ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல.. கவிஞர் வாலி!…

    கவிஞர் காவிரிமைந்தன்

    ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல..

    உள்ளத்து உள்ளது கவிதை என்பார் நாமக்கல் கவிஞர்.  அது ஊற்றுக்கண் திறந்ததும் புனலாய் வெளிப்பட்டு உருவாகும் வெள்ளம்!  கவிஞர்தம் நெஞ்சமும் அப்படித்தான்!  உள்ளத்துள் தான் உணர்ந்ததை உணர்வின் வெளிப்பாடல் கவிதை வடிவில் மொழி பெயர்த்துவிடுகிறான்!

    இதில் திரைப்படப்பாடலாசிரியரோ.. ஒருவகையில் கதையை, கருவை, கதாபாத்திர இயல்புகளை பாடல்வரிகளில் பிரதிபலிக்க வேண்டிய பணியில் ஈடுபட்டு சொற்சித்திரம்தனை இசைக் கோர்வைக்குள் அமைத்திட ஒரு வகையில் தவமே கொள்கின்றான்.  இந்தக் கற்பனைக் கலவையில் உருவாகிடும் பல்லாயிரம் பாடல்களில் – திரையில் தோன்றும் கதாபாத்திரங்களின் ஈடிலா நடிப்புத்தித்தால்.. வெள்ளித்திரையில் நம் உள்ளம் தொட்டப் பாடல்களின் வரிசையிதோ..

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா அவர்களும் அற்புத நடிப்பை அள்ளி வழங்கி நம் கண்முன்னே காட்சியளித்ததுடன் மனக்கண்முன் நிழலாடுகின்றனர்!

    ‘செல்வம்’ திரைப்படத்தில் திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில், டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா குரல்களில் உணர்வுகளை வார்த்தெடுத்து பாவங்களைச் சேர்த்தெடுத்து ஒற்றைப் பாடலில் கொட்டித்தீர்த்துள்ளார்கள்.

    கணவன் – மனைவிக்கு இடையே தாம்பத்யம் சில காலம் ஒத்திப்பபோடப்பட வேண்டும் என்று ஆரூடம் சொன்னதாலே.. தலைவி தன்னுள் எழுகின்ற அத்துணை மனப்போராட்டங்களையும் அழுத்தமாய்.. அளவாய், அற்புதமாய் வெளிப்படுத்த புன்னகை அரசியின் பூமுகம்.. நம் கண் முன்னே காட்டும் கோலங்களும்.. நாடுதல், தேடுதல், ஏங்குதல்.. அதையெல்லாம் ஒன்றாகத் தாங்குதல் என முத்திரைப் பதித்த முக பாவணைகளும் கலந்து சிவாஜியின் பெரும் பங்களிப்பும் – காண்போரை வசமாக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை!

    ஏதோ காட்சியல்ல.. இதயம் தொடும் காட்சி!  கதாபாத்திரங்கள் தத்தம் நடிப்பு முத்திரைகளால் பரிணமிக்கச் செய்த இப்பாடல் வரிகளில் வார்த்தைகளை வழங்கிய வள்ளல் வாலியாவார்!

    http://www.youtube.com/watch?v=6uNf_KRgp18

    ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல..maxresdefault

    உள்ள உணர்ச்சியை வார்த்தையில்

    வடித்துச் சொல்ல.. எண்ணம்..

    உயிரா உடலா பிரிந்து செல்ல

    நாம் பிரிந்தது எந்நாளும் கலந்து கொள்ள..

    நின்றால் நடந்தால் உன் நினைவு

    என் நினைவே அகன்றால் உன் கனவு

    கனவு ஒன்றா.. இரண்டா எடுத்துச் சொல்ல..

    நினைவும் கனவும் எனக்காக – என்

    நெற்றியில் குங்குமம் உனக்காக

    நான் உயிரா உடலா பிரிந்து செல்ல..

    குங்குமம் நிலைக்கும் குலமகளே.. நான்

    குலவிடத் துடிப்பது உன் நிழலே

    நிழலும் நினைவும் அநித்தியமே.. என்றும்

    நிலையாய் நிற்பது சத்தியமே.. சத்தியமே.. சத்தியமே!

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

     

    –ஞா.கலையரசி

    Kannadasanகவிஞர், திரைப்படப்பாடலாசிரியர், அரசியல்வாதி, இலக்கியவாதி, சிந்தனாவாதி என்ற பன்முகத்திறமைகளைப் பெற்றவர் கண்ணதாசன் என்றாலும், என்னைப் பெருமளவு பாதித்தவர் திரைப்படப்பாடலாசிரியர் கண்ணதாசனே.

    சிறுவயதில் எனக்கு மிகவும் பிடித்தது, ‘குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று,’ என்ற பாடல்.

    உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது – என்
    உள்ளம் எனும் சூரியனைக் கோபம் மூடுது
    காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது
    பேசிக் கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது

    என்று தகிக்கும் உச்சி வெயில் சூரியனை, கடுங்கோபத்தால் டென்ஷன் அதிகமாகி சிடுசிடுக்கும் உள்ளத்துக்கு ஒப்பிட்டு எழுதிய இவ்வரிகள் அப்போதே என்னை ஈர்த்துச் சிந்திக்க வைத்தன.

    ஒருவித லயிப்புடன் இப்பாடலை நான் பாடியதாலோ என்னவோ, பள்ளித் தோழிகள் அடிக்கடி இதனைப் பாடச்சொல்லிக் கேட்பது வழக்கம். ஐந்தாம் வகுப்பின் முடிவில் என் தந்தையின் பணி மாற்றம் காரணமாக வேறு ஊருக்குச் சென்று விட்டோம். ஆறாம் வகுப்பிலிருந்து பள்ளியிறுதியாண்டு வரை வேறு ஒரு பள்ளியில் படித்தேன். பழைய பள்ளித் தோழிகளின் பெயர்கள் ஒன்றிரண்டு நினைவில் இருந்ததே தவிர, அவர்களின் முகங்கள் நினைவில் இல்லை.

    கல்லூரியில் சேரத் திரும்பவும் பழைய ஊருக்கு வர வேண்டியதாயிற்று. கல்லூரியில் அடியெடுத்து வைத்த முதல் நாள், ஒருத்தி என்னைப் பார்த்து “ஏய், குழந்தையும் தெய்வமும் பாட்டு பாடுவியே, அந்தக் கலையரசி தானே நீ?” என்றாள்.

    அப்போது தான் லேசாக அவள் முகம் நினைவுக்கு வந்தது. அவள் என் ஐந்தாம் வகுப்புத் தோழி அனுசுயா. என் அடையாளத்தை மீட்டெடுத்துப் என் நட்பைப் புதுப்பிக்க உதவிய இப்பாடலை எழுதியவர், கவிஞர் கண்ணதாசன்!

    ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகவும் இனிமையானது என்று போற்றப்படும் கல்லூரி வாழ்வின் இறுதி நாளில், பாட வேண்டும் என நாங்கள் தேர்ந்தெடுத்த பாடல், கண்ணதாசனின், ‘பசுமை நிறைந்த நினைவுகளே!’ அன்றிலிருந்து இன்று வரை, அத்தினத்தில் அனைவராலும் பாடப்படும் பாடல் இது தானே?

    பசுமை நிறைந்த நினைவுகளே
    பாடிப் பறந்த பறவைகளே
    பழகிக் கழித்த தோழர்களே
    பறந்து செல்கின்றோம்

    என்பதில் ‘பறந்து’ என்பதற்குப் பதிலாகப் ‘பிரிந்து’ என்று பாடுவதாக ஏற்பாடு.

    அந்த நாளும் வந்தது. கல்லூரி முதல்வர் உட்பட பேராசிரியைகள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். விருந்து முடிந்து இறுதியில் தோழிகள் அனைவருடனும் இப்பாடலைப் பாடத் துவங்கினேன்.

    குரங்குகள் போல, மரங்களின் மீதே தாவித் திரிந்தோமே
    குயில்களைப் போலே, இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
    வரவில்லாமல், செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
    வாழ்க்கைத் துன்பம், அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே

    என்று பாடுவதற்குள்ளாகவே, பெரும்பாலோர் பாடமுடியாமல் தேம்பித் தேம்பி அழத் துவங்க, கஷ்டப்பட்டுத் தொடர்ந்து பாடி முடித்தவர்கள் ஓரிருவர் மட்டுமே.

    இப்பாடலைக் கேட்ட எங்கள் முதல்வர், “நீங்களே சொந்தமாக எழுதிப்பாடியதா?” என வினவினார். திரைப்படப்பாடல்களைப் பற்றி மிக மோசமான எண்ணம் கொண்டிருந்த அவர், இப்பாடலைக் கேட்ட பிறகு தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டார் என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன்!

    ஏற்கெனவே இதே வரிகளைப் பலமுறை பாடிப் பார்த்திருந்தும் கூட அச்சமயத்தில் முழுவதும் பாடமுடியாத அளவுக்கு, தொண்டையை அடைக்க வைத்த அவ்வளவு பொருத்தமான வரிகளைக் கொண்ட பாடல்! கல்லூரியில் காலடி வைக்காத கவிஞர், மாணவப் பருவத்தின் அனைத்து அம்சங்களையும் அழகாகச் சொல்லிப் பிரிவின் வேதனையைத் துல்லியமாக உணர்த்தி எங்களை அழ வைத்த நிகழ்வு, என்றுமே மறக்க முடியாதது. தொலைக்காட்சியில் இன்று இப்பாடலைக் கேட்டால் கூட, அந்த நாள் நினைவுகள், நேற்று நடந்தது போல, நெஞ்சிலே வலம் வருகின்றன! அந்தளவுக்கு என் மலரும் நினைவுகளில், முக்கிய இடம் பெற்ற சாகா வரம் பெற்ற பாடல் இது!

    என் கல்லூரி வாழ்வின் முதல் நாள், பழைய தோழியை அடையாளம் காணவும், இறுதி நாளை வாழ்நாள் முழுக்க நினைவில் நிறுத்தவும் உதவியவை கண்ணதாசனின் இந்த அருமையான திரையிசைப்பாடல்களே!

    பள்ளி நாட்களில் தினமும் இரவில் தந்தை, தங்கை, தம்பிகளுடன் ஒன்றாக வட்டமாக அமர்ந்து, அன்றைய தின நிகழ்வுகளையும் செய்திகளையும் அனைவருடனும் பகிர்ந்து கொண்டே சாப்பிடுவது வழக்கம். அச்சமயத்தில் என் தந்தை, அரசியல், இலக்கியம், சினிமா, நாட்டு நடப்பு பற்றிய பலசெய்திகளை எங்களுக்குச் சொல்வார்.

    ஒருநாள் தமிழலக்கியத்தை ஆழமாகக் கற்ற கவிஞர் கண்ணதாசன் திரைப்படப்பாடல்களில் இலக்கிய நயத்தை எடுத்தாண்டிருப்பது பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

    “அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையும் இருந்தார்,” என்ற பாரி மகளிரின் பாட்டின் கருத்தை மையமாக வைத்து, அன்றொரு நாள் இதே நிலவில் அவர் இருந்தார் என் அருகே” என்ற பாடலைக் கவிஞர் இயற்றியிருப்பது பற்றிச் சொன்னார்.

    தொடர்ந்து ‘அத்திக்காய்,’….என்ற பாடல் பற்றிப் பேச்சு வந்தது. அதுவரை அத்திக்காய் என்றால் அத்திமரத்தின் காய் என்று தான் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு வரியாக தந்தை விளக்கம் சொன்னபோது, எங்களுக்கு வியப்புத் தாங்கவில்லை.

    ஆர்வக்கோளாறு அதிகமாகி “உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?” என்றால் என்ன அர்த்தம் அப்பா?” என்று அவர் சொல்லாமல் விட்ட வரிக்குத் தம்பிகளுக்கு முன்னால் அசட்டுத்தனமாய் நான் கேட்டதும், அது காதில் விழாதது போல் அவர் எழுந்து கையலம்பச் சென்றதும், இதைப்போய்க் கேட்கிறாயே என்று என் தங்கை, யாருக்கும் தெரியாமல் என் காலைக் கிள்ளியதும் என் நினைவுக்கு வந்து, இப்போதும் என்னை நாணச் செய்கின்றது.

    பள்ளிப்பருவத்தில், நோட்டுகளின் கடைசிப் பக்கங்களில் திரைப்படப் பாடல்களை எழுதிவைக்கும் பழக்கம் எங்களிடமிருந்தது. தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட தப்பில்லாமல் சொல்லுமளவிற்கு அவை மனப்பாடமாயிருந்தன. மனப்பாடச்செய்யுள் பகுதியில் கண்ணதாசன் பாடல்களிலிருந்திருந்தால், வகுப்பில் எல்லோருமே முழுமதிப்பெண் பெற்றிருந்திருப்போம்! அக்காலத்தில் இரவு பத்து மணியிலிருந்து பதினொரு மணிவரை வானொலியில், ‘நெஞ்சில் நிறைந்தவை,’ என்ற தலைப்பில் திரைப்படப்பாடல்கள் ஒலிபரப்பாகும். அவற்றில் பெரும்பாலானவை கவிஞர் கண்ணதாசனுடையவை தாம். விளக்கை அணைத்து விட்டுப் படுத்துக்கொண்டே அவற்றைக் கேட்பது மனதுக்கு இதமான தாலாட்டாக இருக்கும்.

    தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
    அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

    உள்ளத்தின் கதவுகள் கண்களடா – இங்கே
    உறவுக்குக் காரணம் பெண்களடா

    போன்ற பாடல்களைக் கேட்டுவிட்டு நிகழ்ச்சி முடிவதற்கு முன்பே தூங்கிவிடுவது வழக்கம். வானொலியை நிறுத்தாமல் தூங்கிவிட்டமைக்கு அடுத்த நாள் காலையில், அம்மாவிடம் திட்டு வாங்குவது சகஜமாய் நடக்கும் நிகழ்வு.

    கவலைகளால் மனம் சோர்ந்து போயிருக்கும் சமயங்களில், கவிஞரின்
    ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

    உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக,
    மலர்கள் மலர்ந்தது எனக்காக, அன்னை மடியை விரித்தாள் எனக்காக

    அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்,
    இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்

    வாழ நினைத்தால் வாழலாம்
    வழியா இல்லை பூமியில்?
    ஆழக்கடலும் சோலையாகும் ஆசை இருந்தால் நீந்திவா

    போன்ற பாடல்களைக் கேட்கும் போது சோர்வு நீங்கி, மனதில் உற்சாகம் கரை புரண்டு ஓடும்.

    நெருங்கிய உறவுகளை இழந்து விரக்தியின் எல்லையில் நின்ற போது
    போனால் போகட்டும் போடா, இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?” என்ற பாடலை நமக்காகவே கவிஞர் எழுதியிருக்கிறாரோ என்று தோன்றும்.

    என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே
    இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே

    நிம்மதியிழந்து தூக்கத்தைத் தொலைத்த காலத்தில், இவ்வரிகள் சொல்லும் நிதர்சனம் உறைத்தது!

    முதன்முதலில் தாய்மைப்பேறை எதிர்நோக்கியிருந்த காலத்தில்,
    பூப்போல பூப்போல பிறக்கும்
    பால் போல பால் போல சிரிக்கும்
    மான் போல மான் போல துள்ளும்
    தேன் போல இதயத்தை அள்ளும்

    என்ற வரிகள் மனதை மயிலிறகால் வருடி பேருவகை அளித்தன!

    “உள்ளாடும் உயிரொன்று கண்டேன், அதன்
    உருவத்தை நான் என்று காண்பேன்?,”
    என்று முதல் குழந்தையை எதிர்நோக்கியிருக்கும் தாயொருத்தியின் கனவையும் ஏக்கத்தையும் அத்துணை நுணுக்கமாக தாம் அனுபவித்தது போல் சொல்லில் வடித்த கவிஞரை, என்ன சொல்லிப் புகழ?

    அமைதியான நதியினிலே ஓடும்- ஓடம்
    அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
    காற்றினிலும் நதியினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
    கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்

    உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
    உலகம் உன்னிடம் மயங்கும்
    நிலை உயரும் போது பணிவு கொண்டால்
    உயிர்கள் உன்னை வணங்கும்
    உண்மை என்பது அன்பாகும்
    பெரும் பணிவு என்பது பண்பாகும்

    கருணை பொங்கும் உள்ளம்- அது
    கடவுள் வாழும் இல்லம்
    கருணை மறந்தே வாழ்கின்றான்
    கடவுளைத் தேடி அலைகின்றான்

    போன்ற வாழ்வியலுக்குத் தேவையான உயரிய தத்துவங்களை எளிய மொழியில் பாமரருக்கும் புரிகின்ற மாதிரி, பொட்டில் அடித்தாற் போல் படைத்துச் சென்ற மக்கள் கவிஞரின் கவிதைகள் காலத்தை வென்று நிற்கும் சக்தி படைத்தவை!

    என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் கவிஞரின் பல்வேறு பாடல்கள் பொழுதுபோக்கு என்ற அம்சத்தைத் தாண்டி என் ஊனோடும் உணர்வோடும் கலந்து விட்ட காரணத்தினால், ‘அந்த நாள் முதல், இந்த நாள் வரை’ அவை என் மீது தாக்கத்தைச் செலுத்தி என்னை உயிர்ப்புடன் இயங்க வைப்பது, முழுக்க முழுக்க உண்மை!

    ‘காலங்களில் அவள் வசந்தம்,’ பாடல் எழுதிய கவிஞர் கண்ணதாசன் வாழ்ந்த காலம், தமிழ்த்திரையிசைப் பாடல்களின் வசந்த காலம் என்றால் அது மிகையில்லை!

    Share
  • திருமால் திருப்புகழ் (94)

    கிரேசி மோகன்

    ndra garvabhangam - acrylic on canvas. #Krishnafortoday Keshav
    Indra garvabhangam – acrylic on canvas. #Krishnafortoday
    Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————-
    ’’கண்ணன் அந்தாதி’’
    ————————————

    Chocolate Krishna. oil on canvas. - Keshav
    Chocolate Krishna. oil on canvas. – Keshav

    ஓட்டைப் பிரித்ததன், உள்ளே புகுந்தவனைத்,
    தேட்டை இடுவோர்க்கும் தேறாதான், -மாட்டைப்,
    பிடிக்காது மாயன், பதத்தைப் பிடிக்கப்,
    படிப்படியாய்க் குண்டலினிப் பாம்பு….(76)

    பாம்பணைவோன், நம்மில் பழுதகற்றும் ஞானக்காய்,
    காம்பவனே, உண்ணக் கனிபவனாம், -தீம்புலனை,
    வீழ்த்தி அடியார்தம், வாழ்வையனு பூதியினில்,
    ஆழ்த்தும் அவனன்(பு) அளிப்பு….(77)

    அளிப்பாய் இலைபூ களிப்பாய், அவன்தாள்,
    குளிப்பாய் கருணை மழையில், -புலிப்பால்,
    கொணர்ந்த சபரிக் குழந்தையைப் பெற்றோன்,
    மனம்தனில், மாதவன் மாது….(78)

    மாதவன், கேசவன், மாலவன், மோகினி,
    மா(து)அவன், ஐயப்பன் மாதாவாம், -ஆதலால்,
    அன்னையென்(று) எண்ணி, அணுகினால் காத்தருள்வான்,
    தன்னையே கன்னையன் தந்து….(79)

    தந்தம் ஒடித்தனன், தாய்மாமன் யானைக்கு,
    வந்தமா மல்லரை வீழ்த்தினன், -அந்த,
    முகுந்தனோ(டு) ஒன்ற, உகந்தவழி ஒன்றே,
    அகந்தை அழித்தல் அது….(80)

    ————————————————————————————————–

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2013_08_01_archive.html

     

    Share
  • காலம் என்பது

    இசைக்கவி ரமணன்

    isai

    காலம் என்பது காளி நடத்தும்
    கண்கட்டு வித்தை அல்லவா? அது
    கனவில் ஒருவிதம் நினைவில் பலவிதம்
    மாறும் விந்தை அல்லவா?
    தூலம் உறங்கும் வேளை, காலம்
    தொலைந்தே போகும் அல்லவா?
    தொட்ட பூமியை விட்ட போததன்
    தூரிகை மாறும் அல்லவா?

    கடிகாரத்தால் காலம் என்றும்
    கட்டுப் படுவதே இல்லை
    கடமையைச் செய்து பயன்கருதார்க்கோ
    மட்டுப் படுவதே இல்லை
    இடையில் நெளியும் நாகம் போலே
    இதனை அணிந்தவர் முனிவர்
    இன்றில் வாழ்ந்து நேற்றையும் நாளையும்
    இழந்தவர் அவரே தலைவர்!

    காலம் என்பது கடவுளுடையது
    வளர்வதும் தேய்வதும் இல்லை
    நேரம் என்பதோ மனிதனுடையது
    கரைவது தானதன் எல்லை
    காலம் என்பது எதையும் என்றோ
    கவளம் விழுங்கி விட்டது! அதன்
    கவனம் சற்றே தளர்ந்த போது
    கவிதை அதனைத் தொட்டது!!

    Share
  • வரைந்த ஓவியமும் ‘’வந்தாள் பொன்மகள்’’ வெண்பாக்களும்….

     

    ரவிவர்மா ‘’மகாலஷ்மி’’ ஓவியம் 1974 ல் வரைந்தது….சு.ரவியும் ,நானும் இஞ்சினீரிங் கொஞ்சனீரிங் படித்த பொன்னான பொறியியற்க் காலம்….எத்திராஜு முதலித் தெருவில் வெங்கடாசலபதிக்கு போட்டியாக நாமம் இட்டுக் கொண்டிருக்கும் பெரியவர் கடையில் ரவிவர்மா படங்களைப் பார்த்து மனதில் பதிய வைத்துக் கொண்டு அவசர அவசரமாக வீடு வந்து வரைவோம்….காக்கை சிறகில் மட்டுமல்ல பசுஞ்சாணி வண்ணத்திலும் பரம்பொருளை பார்த்த காலம்….சு.ரவியும் நானும் சுகமாய் வாழ்ந்த அந்நாட்களை பிற்பாடு விரிவாக பதிவு செய்கிறேன்….கிரேசி மோகன்….
    ———————————————————————————————————————

    பொன்மகள் வந்தாள்….மூன்று தேவியர்க்கும் சேர்த்து முதற்பாடல்

    crazy1

    “படைத்திடும் வாணி துடைத்திடும் துர்க்கா
    இடைபுகுந்து காக்கும் இவளும் -சடைப்பின்னல்
    ஆக இணைந்து அலகிலா ஆட்டத்தை
    பாகப் பிரிவினையில் பார்ப்பு”….

    “பத்தவ தாரப் பணிக்குதவ பூதேவி,
    நித்திரை யோகமோ நீளாவால், -பத்தர்க்கு
    சேர அருள்சகாயம் ஸ்ரீதேவி , ஆகமால்
    தாரங் களின்தயவால் தான்”….

     

    ” காப்பு”
    ——–
    “அகழ்வாரைத் தாங்குகின்ற அக்காள்முன் வந்த ,
    முகிழ்வா ரிசமமர்ந்த மாமி -புகழ்பாட
    பாழியன்தோள் மாமன்தோப் புக்கரணம் போட்டபின்பு
    ஆழியைத்தந் தோன்தாள் அரண்”….
    சமர்ப்பணம்
    —————-
    “அன்னை இருந்த அசோகவனம் சேர்ந்தன்று
    அண்ணல் கணையாழி தந்தவள் -முன்னுச்சி
    சூடா மணிகொணர்ந்து ,தேடும் இராகவன்
    பாடொழித்தோன் பாதசமர்ப் பிப்பு”….
    “கஷ்டம் கலைந்திடும் , இஷ்டம் இணங்கிடும்
    அஷ்ட இலக்குமிகள் ஆசியால் -இஷ்டமாய்
    சுக்குமி ளக்குதி திப்பிலி என்பதின்றி ,
    லக்குமி தாராய் லயம் “….(1)

    “கள்ளம் கபடின்றி, கையேந்திய சங்கரர்க்கு
    உள்ளங்கை நெல்லி உவந்தளித்த -உள்ளத்தின்
    வீரதர் மத்தால் வியந்தவர் வேண்டிட
    கூரையைப் பிய்த்தவளைக் கொஞ்சு”….(2)

    “சுதாமன் அவலுக்கு சொர்ணங்கள் தந்தாய்
    கதாமகன் கீர்த்தியை கண்ணனுக்(கு) -இதோவென்று
    பொன்னோடு பேரை புறக்கணித்த பூவையே
    நின்னோடு சேர்ந்தகண்ணன் நார்”….(3)

    “பொன்வைக் குமிடத்தில் பூவைப்போர் மீதிவள்
    கண்வைக்க கஞ்சனும் கர்ணனே -முன்வைத்தக்
    காலைப்பின் வைக்கா கடுமுயற்சி யாளர்க்கு
    வேலை திருவினையாள் வாகு”….(4)

    “தான மவள்லீலை தர்ம மவள்வேலை
    மானம் புகுந்து மகாபலி -தானமிட்ட
    கர்வத்தை மூவடியைக் கொண்டு அடக்கிய
    தர்மத்தின் தாரம் திரு”….(5)

    “தானம் கொடுத்தமாட்டின் தாடை பிடிப்பது
    ஈனம் எனநூல் இயம்பினாலும் -மானம்
    பெரிதென்று எண்ணாமல் பிச்சை எடுப்போரை
    சிறிதென்(று) ஒதுக்குவாள் சீர்”….(6)

    ’’பண்டிதர் பின்தொடர பிச்சைக்குப் போயன்று
    கொண்டவூசிக் கஞ்சியை உண்டபின் -மண்டையில்
    கையோ(டு) அகந்தை கழவு ரமணரை
    மெய்யோடு சேர்த்தாள்பொன் மாது’….(7)

    “அக்காள்மூ தேவி அயர்ந்துறங்கும் இல்லத்தில்
    நிக்காள்ஸ்ரீ தேவிஎன்பர் நூலோர்கள் -முக்காலம்
    தூங்கும் பெருமாளின் தூய திருவடிகளை
    தாங்குவதால் தூங்காமல் தூங்கு”….(8)
    “பூணுமய பக்திக்கே பூரித் தளித்திடும்
    ஏனைய செல்விகள் ஏற்றத்தை -நாணய
    நாயகி ஏற்பது நாற்புற சுத்தத்தை
    போயகி லத்தை பெருக்கு”….(9)

    அலையில் பிறந்து அலையில் புகுந்த
    அலைதாண்டா பத்தினியை, அப்பொன் -சிலையை
    விழியில் பதித்து விரலால் ஜபிக்க
    கிழியும்பார் அவ்வறுமைக் கீத்து….(10)

    வித்தைக்கு வேண்டும் வினயம், அதிதீர
    சித்தத்தில் வேண்டும் சரிசமம் -சுத்தத்தை
    வேண்டுவாள் செந்திரு, வாசல் தெளிப்போர்க்கு
    யாண்டும் வறுமை இல….(11)

    பட்ட கடனால் பயந்தோடி பாலாஜி
    எட்டா மலையுச்சி ஏறிட -வட்டி
    அசலோடு சேர்த்தளித்தும் அந்தோ புகழில்
    முசலானாள் ஆமைக்கு முன்….(12)

    வானுகந்து வந்தீரே வகுண்ட வாசலில்
    நானகன்று சூரியாய் நிற்பதற்கு -தானமொன்று
    செய்ய வருவாளே ஸ்ரீமன்நா ராயணரின்
    கையைப் பிடித்து கனகு….(13)

    பாங்கியின் யோகத்தால் பார்த்தனுக்கு பாரதத்தில்
    சாங்கிய யோகத்தைச் செப்பியவன் -நீங்கிய
    போதுன்னை ராமன் புலம்பினான் பார்த்தனாய்
    யாதுமான லக்குமி யே….(14)

    “தரமும் தரத்தில் நிரந்தரமும், செய்யும்
    கருமத்தால் ஏழைக் குதவும் -கரமும்
    இருப்பவர் வீட்டை இமையாது காப்பாள் ,
    திருப்பள்ளி கொள்ளாள் திரு”….(15)

    “பயில்வான் இறந்தாலும் , பண்டிதனாய் வாழ்ந்த
    பயில்வோன் இறந்தாலும் பைசா -துயில்வோன்மேல்;
    வீடு வரையுறவு வீதி வரைமனைவி
    காடு வரைநெற்றிக் காசு”….(16)

    “அவலை சுசீலை அளிக்கக் குசேலன்
    கவலை களைந்தான் கிருஷ்ணன்; -அவளை
    மணந்ததால் அன்றோமால் மாங்கல்ய பிச்சை
    பணம்தந்து பெற்றான் புகழ்”….(OR ) -அவளை
    வரித்ததால் தானேமால் வாரிக் கொடுத்து
    தரித்திரம் தீர்க்கத் துணிபு”….(17)

    “நாத்தனார் வீரத்தை , கூத்தனூர் கல்வியை
    ஏத்திட ஏற்றம்தான் , என்றாலும் -பூத்தமலர்
    செவ்விதழின் மீதேளும் செல்வியருள் இல்லையேல்
    இவ்வுலகில் இல்லை இருப்பு “….(18)

    “மஞ்சள் அரிசியில் மங்கல வாத்யத்தில்
    வஞ்சியர் கல்யாண வைபவத்தில் -நெஞ்சணைந்த
    தாலியில் தங்கமாய்த் தங்கியவள் தாம்பத்ய
    வேலியைக் காக்கும்செல் வி”….(19)
    “சித்திரம் கைப்பழக்கம் , செந்தமிழ் நாப்பழக்கம்
    பத்தரை மாத்துப்பொன் பெண்பழக்கம் -உத்தம
    பக்தி வயலில் புளகநீர் பாய்ச்சிட
    முக்திநெல்லாய் விட்டெழும்உன் முன்”….(20)

    “தங்கநிற வண்டுகள் தாதுக்காய் மொய்த்திட
    பொங்கும் புளகமலர் போல்மாலின்-அங்கம்
    புளகத்தால் கூச்செறிய, பார்வையால் உண்ணும்
    அலகொத்தக் கண்ணாள் அவள்”….(21)

    நீல மலர்நாடும் நந்தவன வண்டேபோல்
    நீள விழியிரெண்டும் நாரணன் -கோலத்தைக்
    கொண்டதோர் நாணத்தால் ,காணும் விருப்பத்தால்
    அண்டமாய்ச் சுற்றும் அலைந்து….(22)

    ஏழை சிரிப்பில், எடுப்பார்கைப் பிள்ளையின்
    பேழைவாய் பொக்கையின் புன்னகையில், -வாழையடி
    வாழையாய் வந்த விகல்பமில்லா வேட்டதிர்வில்,
    தாழை எனமணக்கும் தாய்….(23)

    “உச்சிவான் தோன்றி உறுமும் இடிமின்னல்
    பச்சை மலையில் பளிச்சிடலாய் – அச்சுதன்
    மாலின் மரகத மார்பில் மகாலட்சுமி
    பாலின் நிறத்தில் பொலிவு”….(24)

    மடைதிறந்த வெள்ளமாய் மங்கலப் பார்வை
    கடைதிறந்து காணமயிர் கால்கள் -புடைத்தெழ
    எல்லையில் லாயின்பம் எம்பிரா னுக்களிப்போய்
    அல்லலில்லா வாழ்வை அளி….(25)

    “கவுத்துவம் பூண்டவன் , கொன்று மதுவைக்
    குவித்தவன் யோகத்தைக் கண்ணால் -கவுத்தவளே,
    நீலமணி பட்டதால் நீலமுற்ற பார்வையை
    பாலனென் மீது பதி”….(26)

    ’’கைடபனைக் கொன்றவன், கார்முகிலாய் சேடன்மேல்
    மெய்படரச் சாய்ந்தவன்மேல் மின்னலாய் -மையடர்ந்த
    பங்கயக் கண்களால் பார்த்தது போதுமென்மேல்
    திங்கள் விழியைத் திருப்பு’’….(27)

    “நாணுமுன் கண்களை நாணாக்கி மன்மதன்
    வேணுவின் மீதெய்து வெற்றியைப் -பூணுவான்;
    பாற்கடல் தோன்றிய பாவையே பார்வையை
    ஓர்கணம் என்மீ (து ) உரசு”….(28)

    பயிரான பூர்வஜென்ம பாவங்கள் போக்கும்
    அயிரா வதத்தில் அமர்த்தும் -உயிராக
    எண்ணினாள் தங்குவாள், ஏத்தினால் தாங்குவாள்
    கண்ணினால் காவல் கொடுத்து….(29)

     

     

    “அத்தகைய பார்வை அடியேன் மீதுபட்டால்
    எத்தகைய செல்வம் எனைச்சேரும் -குத்தகையாய்
    பத்தினி யேநீ, படியில்லை பாற்கடலில்,
    இத்தரைக்குத் தாண்டிட ஏகு”….(30)

     

    நூறிடர் தீர்த்திட பாரதம் செய்தவனின்
    மாரிடம் கொண்ட மகாலக்‌ஷ்மி -சோறிடும்
    சுத்தம் எதிர்பார்ப்பாள் செல்வம் அளித்திட
    அத்திருக்(கு)ஆ சாரம் அணி….(31)

    “குப்பையில் மாணிக்கக் கல்லாய் மிளிர்ந்திடுவாள்
    அப்பழுக்கு சேறிலவள் அல்லியாவாள் -குப்பனின்
    வீட்டுச் சுவரில் வரைந்தாலும் வந்தருள்
    கூட்டும் வரலக்ஷ்மி காப்பு”….(32)

    “சொர்ண நிறவதனம், செம்மா துளையதரம்
    வர்ணனைக்(கு) எட்டா வடிவழகு – கர்ணனை
    மிஞ்சும் உதார மனத்திற்க்(கு) உரியவளால்
    பஞ்சும் பசும்பொன்னாம் பார்….(OR )
    பஞ்சுமா கும்மாணிப் பொன்”….(33)

    “அத்தன் அரிமால் அவதா ரமாய்யெடுத்த
    பத்தையும் செய்த பணமிவளே -சத்த
    நரசிம்மன் சாந்த நிலையுற்றார் ,செல்வி
    வரசிம்மன் ஆனான் வரம்”….(34)

    “பெண்ணொருத்தி நின்றிடுவாள், பின்னிருந்து ஆடவனை
    முன்னிறுத்தி ஈவாள் முழுவெற்றி -கண்ணுறுத்தும்
    கானகத்து அல்லிலன்று காகுத்தன் ,பின்தொடர்ந்த
    ஜானகியால் கண்டான் ஜெயம்”….(35)

    நீல மலர்நாடும் நந்தவன வண்டேபோல்
    நீள விழியிரெண்டும் நாரணன் -கோலத்தைக்
    கொண்டதோர் நாணத்தால் ,காணும் விருப்பத்தால்
    அண்டமாய்ச் சுற்றும் அலைந்து….(36)

    ஏழை சிரிப்பில், எடுப்பார்கைப் பிள்ளையின்
    பேழைவாய் பொக்கையின் புன்னகையில், -வாழையடி
    வாழையாய் வந்த விகல்பமில்லா வேட்டதிர்வில்,
    தாழை எனமணக்கும் தாய்….(37)

    உத்தம பத்தினியின் உச்சந் தலைவகிட்டில்
    பத்தும் செய்யா பணமுடிப்பில் -சுத்தமாய்
    சாணத் தெளிப்பில்ஸ்ரீ சூர்ண நுதற்பிறையில்
    காணலாம் பொன்மகளின் கால்….(38)

    கன்றை விளிக்கும் கறவையின் கத்தலில்
    நன்றுரைக்கும் நல்லோர் நயவாக்கில் -வென்று
    முழங்கிடும் வீரத்தில், வேதாந்த மூச்சில்
    புழங்கிடும் பொமகள் பேச்சு….(39)

    யாப்பலங் காரத்தில் ,காப்புக் கவிதையில்
    மூப்புணர்ந்தோர் போக்கின் முதிர்ச்சியில் -நாப்பிளக்கப்
    பொய்பேசா நாவில், புறங்கூறா புத்தியில்
    தைபூசத் தான்மாமி தேசு….(40)

    ஏரோட்டி வேர்வையை, ஏமாந்த காதலால்
    நீரோட் டமான நினைவுகளை -போராட்ட
    ஊழியன் கூலி உயர்விழந்த துக்கத்தை
    தோழியாய் பொற்கை துடைப்பு….(41)

    பலியின் தலைவைத்துப் பாதாளம் பாய்ந்து
    கலிதீர்த்தக் காலிலிவள் காசாய் -ஒளிந்திருந்தாள்.
    பாதாளம் பாயும் பணமென்று சொன்னதன்
    ஆ!தாரம் அன்றோ அவள்….(or)
    ஆ!தாரம் அன்னை அருள்….(42)

    பரம்பொரு ளாதாரப் பொன்மகள் பார்வை
    தரம்தரும்சே தாரம் தவிர்த்து -வரம்தரும்
    செய்கூலி பக்திக்கு. செய்யவளால் உன்பணப்
    பைகாலி ஆகாது பார்….(43)

    “பணப்பை அரவம் படுத்த பொருளை
    கணத்தும் பிரியாத கஞ்ச -மனத்தாளே,
    ஓரக்கண்ணால் என்னை ஒருமுறை பார்த்தெனக்கு
    சேரச்செய் செல்வச் செழிப்பு”….(44)

    வாளாழி வெண்சங்கு வில்லும் கதாயுதமும்
    தோளாலும் தர்மத் தலைவனை -பாலாழி
    தோன்றிய பொன்மகள் தேர்ந்தெடுத்தக் காரணத்தால்
    மூன்றிலவன் ஆனான் முதல்….(45)

    “பாக்கள் புனைந்திடுதல் பாரதியே ஆனாலும்
    வாக்கில் பொருளாக வந்தமர்ந்து -ஆக்குவள்
    ஆசுகவி தம்மை அகிலத்தில் செல்வந்த
    காசுகவி யாய்பார் கவி”….(46)

    “கருவளர் பிள்ளையை காத்தவன் மார்பில்
    மருவத் ஸமாக மிளிரும் -திருவளர்
    கண்தானம் கொண்டதோர் காளைக்கும் வாய்த்திடும்
    சந்தான செல்வச் சிறப்பு”….(47)

    “கற்காத பேருக்கும் கோழைக் குமருளை
    துர்க்கா சரஸ்வதியர் தாரார்கள் -தர்காதி
    தர்கத்தை விட்டுநீ தாமசமாய் நின்றாலும்
    நற்காவல் பொன்மகள் நட்பு”….(48)
    “சீதையாய் ராமன்பின் சென்றளித் தாள்ஜெயத்தை
    கோதையாய் கோவிந்தன் கைப்பிடித்தாள்-ராதை
    யாகி ரசித்தாள் யதுகுலக் கண்ணனை
    பாகிமாம் பாதாம் புஜம்”….(49)

    “பிருகு குலத்தில் பிறந்த திருவே
    உருகும் அடியார்க் (கு ) உதவ -பெருகும்
    அறம்பொருள் இன்பம் அளிப்போய் , எனக்கு
    வரம்தரவா வீட்டுக்குள் வீடு”….(50)

    “சிங்கம் அரியா சனத்து மடியமர்ந்து
    பொங்கும் அவன்வெகுளி போக்கினோய் -தங்க
    வதனத்து தாயே வரவேண்டும் மாலற்
    புதனோடு பொன் சேர்ந்தாற் போல்….(51)

    “வைகுண்ட வாசல் விளக்கேற்றும் பொன்ஒளியே ,
    பைகொண்ட பாற்கடல் பாம்பணைதோன் -மெய்கொண்ட ,
    ஐவர்க்காய் அன்று அலைந்த களைப்பகல
    கைவைத்துத் தீர்ப்போளே காப்பு”….(52)

    வீரென்று காற்று வீசப் பொழிந்திடும்
    நீருண்ட மேகம் நிகர்த்தது; -சோறுண்டு
    நாளான சோகத்தை நீக்கிடும் நாரணனை
    தாலாட்டும் தாய்விழிகள் தான்….(53)

    “புத்தி பலம்வீரம் பொன்புகழ் பேருனை
    சுத்தி வலம்வரும் செல்விபதம் -ஒத்தி
    விழிநீர் அபிஷேகம் வார்த்திட பக்தி
    வழிகூறும் முக்தி வரை”….(54)

    பொன்மகள் வந்தாள் (OR ) திரு விளையாடல்….
    “வேதம் படித்தென்ன , வேதாந்தம் கற்றென்ன
    சீதரன் பாதம் சொடுக்கெடுப்போள் -பாதம்
    பணிந்திடு மானுடா, பாரதன்பின் உன்னுள்
    கனிந்திடும் காண்முத்திக் காய்”….(55)

    “கற்பை நெருப்பிலிட்ட காகுத்தன் சோதனையில்
    பொற்பூ புகுந்தெழுந்தாள் பூரணமாய் -அற்ப
    இராவணன் தீவெரிய இட்டனள் தீயை;
    இராகவன் தூதன் எரிப்பு”….(56)

    “ஆடி வெள்ளியில் தேடிவரும் தங்கமுனை
    மூடி உறங்காதே முன்கதவை -ஏடி !
    எழுந்தேலோ ரெம்பாவாய் ,எம்பிரான் பள்ளி
    விழுந்தாளை வாழ்த்தி வணங்கு”….(57)

    “நற்கா ரியப்பயன் , நான்மறை நுண்பொருள்
    பொற்கம லம்வீற்ற பேரெழில் -நற்குணங்கள்
    பூண்ட நிறைவு , பராசக் தியினம்சம்
    வேண்டும் அடியார் வரம்”….(58)

    “குமுத வதனம் ,கடல்கடைந்து வந்த
    அமுத வளர்மதி அக்காள் -துமிதம்
    தெறித்திடும் பாற்கடலில் தூங்கும் பெருமாள்
    வரித்திடும் செல்வியை வாழ்த்து”….(59)

    “சாரங்கன் வில்லுக்கு சக்தி அளித்திடும்
    கூரம்புக் கண்களைக் கொண்டவளே , -ஓரங்கை
    பங்கஜம் ஏந்தமறு பொற்கரத்தால் பாலிக்கும்
    அங்குசம்நீ ஆனைநான் ஆள்”….(60)
    “முனிபிருகு வாரிசே மூவா முகுந்தன்
    பணிகாத்தல் பக்க பலமே -அணிபொற்
    சரமே அவன்மார் சரோஜமே தாமோ
    தரனுகக்கும் தாயே துதிப்பு “….(61)

    “கண்பறிக்கும் காந்தி , கமல முகம்கண்கள் ,
    விண்பரப்பில் எண்திசையாய் வீற்றிருந்து -மண்பிறப்பை
    நோக்கி இயக்குவாள், நந்த குமாரனை
    ஏக்கமுற வைக்கும் எழில்”….(62)

    ’’பொறிகளுக்கு எட்டாத போகமே, ஞான
    வரிகளுக்(கு) உட்பட்ட வாக்கே -தறிகளுக்கு
    ஈடான வேகத்தில் இற்றிடாத நூலாகத்
    தேடும் ரமணஎளி தே’’….(63)

    “வாள்எதிர்த்தால் நந்தகி , வில்எதிர்த்தால் சாரங்கி
    ஆள்எதிர்த்தால் வெண்சங்கு ஆழிவட்டம் -கோள்எதிர்த்தால்
    கால்எதிர்த்த கூற்றனின் மேலுதைத்த வீரதுர்க்கா
    நூல்எதிர்த்தால் வாணிஅவள் நா”….(64)

    “பேராசை பின்சென்று போனால் பெருநஷ்டம்
    பாரீசன் போனானே பத்தினியால்- மாரீச
    மானென் (று) அறிந்தும் மயர்வுற்ற ராமனைத்
    தானன்று சோதனைசெய் தாள்”….(65)

    “சாரங்கன் வில்லுக்கு சக்தி அளித்திடும்
    கூரம்புக் கண்களைக் கொண்டவளே , -ஓரங்கை
    பங்கஜம் ஏந்தமறு பொற்கரத்தால் பாலிக்கும்
    அங்குசம்நீ ஆனைநான் ஆள்”….(66)

    “சிலையை வளைக்கவந்த ஸ்ரீராமன் ,செம்பொன்
    சிலையான சீதையால் சொக்கி -சிலையாகி ,
    மற்றவர் வாய்ப்பை மறந்திட , கைவில்லை
    இற்றிட வைத்தாள் இவள்”….(67)

    “தரித்திரமாய் வந்தாடும் தாண்டவக் கோனை
    உருத்தெரியா வண்ணம் ஒசித்து -சரித்திரமாய்
    செய்தெதிர் காலத்தை சீரும் சிறப்புமாய்
    பெய்தா தரித்தளிப்பாள் பொன்”….(68)

    “கோதையாய் ,கோகுலக் கூட்டத்து தாதியாய்,
    ராதையாய் வந்தவனை ரட்சித்தோள் -கீதையாய்
    வாக்கில் புகுந்துவந்த பாக்கிய லஷ்மியே
    காக்கும் கடவுளுக்கு காப்பு….(OR )
    காக்கும் திருமஞ்சக் காப்பு”….(70)

    ’’ ஏறுக்கு மாறான நூறுக்கு தோல்விதர
    பாருக்கு வந்தபளு போக்கிட, -போருக்குக்
    காரண பாஞ்சாலி கூந்தல் விரிப்பிருந்து
    நாரணர்க்கு செய்தாள் நலம்’’….(OR)
    நாரணர்க்கு தோள்கொடுத்த நட்பு’’….(71)

    “பொன்னாத்தா, தாமரைப் பூவாத்தா, தாங்கிடும்
    மண்ணாத்தா, பின்வந்த சின்னாத்தா, -பண்ணாத்தான்,
    நன்னாத்தான் பாடிய, நாச்சியார் காதலுக்கு
    கண்ணாத்தா வாயிருந்து காப்பு”….(72)

    “ஊடலில் பாற்கடலை உக்கிரமாய் பொங்கவைத்து
    தேடலில்மால் வாட, திருவிளை -ஆடலாய்,
    ஆடிவரும் தங்கமிவள் அக்காள் நிலத்தடியில்
    ஓடிக் கரியாய் ஒளிவு”….(73)

    “பாலுக்(கு) அழும்சேய்க்கு பார்வதியால் ஞானம்
    கோலக் கவிக்கு கலைவாணி -சேலைத்
    தலைப்பிட்டு செல்வத்தை தாமரையாள் தந்து
    இலைமேல்நீர் பற்றை இடும்”….(74)

    “ஆர்த்த கடலில் அரிமால் அவதாரப்
    பூர்த்தி வரையில் பொறுமையாய் -காத்துக்
    கிடக்கும் திருமகளே காக்கும் கடவுள்
    எடக்கு மடக்கல்ல ஈது”….(75)

    “அகலாது கல்லில் அடைந்து கிடந்த
    அகலிகை மீண்டாள், அதனை -உகந்தது,
    ஏகபதி நோன்பிருந்து ஏத்திய தாலன்றோ
    ராகவன் பாத ரசம்”….(76)

    “வண்ணான் சொல்ல வரித்த மனையிவளை
    சொன்னான் வனத்திற்கு செல்லென்று -பின்னாளில்
    தந்தை கதைசொல்ல தந்தாள் இருபிள்ளை
    விந்தை இவள்செய் விதி”….(77)

    அண்ணலும் நோக்கினான், அன்னையும் நோக்கினாள்
    அண்ணலவன் நோக்கம் அவதாரம் -அன்னையவள்
    நோக்கமோ அக்காள் நிலமடந்தை மாந்தரை
    காக்கும் கருணை குணம்….(78)

    “குத்திய காகத்தைக் குத்திய காகுத்தன்
    பத்தினி தெய்வத்தைப் போற்றிடுவோம் -இத்தரையில்
    இன்னல் வருங்கால் இவளைத் துதித்திட
    அண்ணல் அபயம் அளிப்பு”….(79)

    ’’தீதண்டும் வேளை, திருக்கரம் ஏந்திடும்
    கோதண்ட ராமன் கரம்பிடித்த -மாதண்டி(மாதை அண்டி)
    வாழப் பழகிடு , ஆழ்நிலை யோகத்தில்
    ஏழைக் குசேலா எழு’’….(80)

    “ஏழுமலைக்(கு ) ஏதிந்த ஏற்றம் எனப்பார்த்தால்
    கீழ்அமர்ந்த வல்லியிரு கைகளால் -ஊழ்அழுந்த
    வந்தவரை கேள்வனின் வட்டிக் கடன்தீர்க்க
    உந்துகிறாள் உண்டியலுக் குள்”….(81)

    ’’வள்ளென்று பேசாதே, தள்ளென்று கூறாதே
    உள்ளொன்று வைத்து உரைக்காதே -கொல்லென்று
    பூத்த கமலத்தாள் , பொல்லாத வர்களுக்கு
    ஏத்த வளல்ல எதிர்’’….(82)

    “எட்டுவகை செல்வங்கள் ,எட்டு வகைசுகங்கள்
    கிட்டும் அவள்கடைக் கண்ணொன்று -பட்டால்;
    முராரி சகியால் முகாரி இசைக்கும்
    பராரிக்கும் வாழ்வில் பொருள்”….(83)

    “வாழ்வில் பொருளிருந்தும் வாழ்வின் பொருளறியா
    தாழ்வில் புகமறுப்பாள் தங்கமகள் -ஊழ்வினை
    தந்த பொருளைத் திரும்ப எடுத்தழிப்பாள்
    சிந்தையின் செல்வச் செறுக்கு”….(84)

    குறுக்குவழி சென்று குவித்த பணத்தால்
    செறுக்கு மரச்சரிவில் செல்லும், -கிறுக்குத்
    தனம்பித்தம், செல்வி திருத்தாள் துதிக்கும்
    மனம்தான்பொன் செய்யும் மருந்து….(85)

    “வெண்பட் டுடுத்திப்பூ வெண்மல்லித் தார்சூடி
    மென்பட்டுத் தாமரை மீதிருந்து -கண்கொட்டா
    ஞானியர் காட்சியே , நாணமுறக் கண்ணளிப்பாய்
    ஆணில் உயர்ந்த அரிக்கு”….(86)

    “எட்டுதிக்கு யானைகள் ஏந்திவரும் கங்கையால்
    அட்டமா லஷ்மிக் (கு ) அபிஷேகம் -கட்டுக்(கு)
    அடங்கா கடலரசன் ஆருயிர் பெண்ணே
    தடந்தோள் மாலனமு தே”….(87)

    “வீரத் துணிச்சலை (தைரியம் ), வெற்றிக் கனிச்சுவையை ( விஜயம் )
    ஈரப் பசைநெஞ்சுக்(கு) ஈகையை (தனம் )-சேரும்
    மனைமக்கள்(சந்தானம்) வித்தை(வித்யா) முளைக்கதிர்(தான்யம்), எட்டு
    முனையானை(அஷ்ட திக் கஜங்கள்) ஆதி முடிப்பு”….(88)

    “வாரிசம் ஓர்கையில், வெண்குடை ஓர்கையில்
    ஆறுதல் கூட்டும் அபயத்தை-வேறிரு
    அங்கைகள் தாங்கிடும் ஆதி இலக்குமி
    பங்கயத் தாளைப் பணி”….(89)

    “அம்புஜஅங் கைகள் அபயவரம் முத்திரையில்
    அம்புஜம் ஏந்தும் அடுத்தயிரு-அம்புஜங்கள்,
    வெண்பட் டுடுத்துமைஸ் வர்ய இலக்குமியை
    பொன்கொட்ட வேண்டிப் பணி”….(90)

    “ஆறில் அபயம் அளித்திடப்பொன் , ஐந்தில்விண்
    சோறமுதம், வில்லம்பு , சங்காழி -வாரிசத்தை
    தாங்கும்செம் பட்டு தனலஷ்மி தேவியை
    பாங்குற ஏத்திப் பணி”….(91)

    “கன்னல் ,இரண்டு கமலம் ,கதைகதலி
    செந்நெல் ,அபயவரம் சாதிப்பாள்-தன்எண்கை
    தாங்கிபச் சையணிந்த தான்ய இலக்குமியை
    பாங்கிஎன எண்ணிப் பணி”….(92)

    “கஜங்கள் குளிர்விக்க ,கையம் புஜங்கள்
    நிஜம்கொள் அபயவரம், நீள்அம்-புஜங்கள்
    தரிக்கப்பச் சையணிந்த தாய்கஜ லஷ்மி
    பரத்தினும் மேலாம் பணி”…(93)

    “இடையில் குழந்தை இரண்டிளநீர் கும்பம்
    படைவாளும் கேடயமும் பற்றி -அடையாள
    சேய்அபயம் காண்பிக்கும் சந்தான லஷ்மியை
    போய்அபலை ஆகப் பணி….(OR )
    போய்சுபம் காணப் பணி”….(94)

    ’’வரிசங்கு, வீச்சாழி, வில்லம்பு, சூலம்
    வரஅபயம், புத்தகம், வீற்றெண் -கரத்தாள்,
    வறுமை சிவப்பணிந்த வீர இலக்குமியை
    பெருமையாய் சென்று பணி’’….(95)

    “பாசம்,வெண் சங்கு, படைதிகிரி, கேடயம்
    வீசும்வாள், வாஞ்சை வரஅபயம்-பூசும்
    திலகநிறக் கூறையாள் திக்விஜய லஷ்மியை
    புளகநீ ராட்டிப் பணி”….(96)

    “பூனைக்குப் போய்மணி பூட்டிய கர்வத்தில்
    ஆனைக்கு லாடம் அடித்தேனே ! -மோனை
    எதுகை வரக்கண்(டு) எழுதப் புகுந்தேன்
    பதுமையே கொள்ளென் பழுது”….(97)

    “திருமஞ் ஜனக்காப்பே, தீயிட்ட போதும்
    கருமை யுறாதங்கக் காப்பே, -திருமகளே,
    பாதுகை இல்லாத போதும்மால் பாதகாப்பே,
    கோதுகைவெண் பாபாது காப்பு”….(98)

    “மாவீரன் பாரதியின் மேதமை இல்லாது
    தீவிரலைத் தீண்டினால் தீய்ந்திடுமே! -பூவீற்ற,
    தொட்டால் தகதகக்கும் தங்கமுந்தன் கண்பார்வை
    பட்டால் துலங்குமென் பா”….(99)

    (OR)
    “மாவீரன் பாரதியின் மேதமை இல்லாது
    தீவிரலைத் தீண்டினால் தீய்ந்திடுமே! -பூவீற்ற,
    பட்டால் தகதகக்கும் பொன்மக ளுன்பார்வை
    தொட்டால் துலங்கும் தமிழ்”….(99)

    “ஈர துணியால் இறுக முடிந்துபசி
    ஆற முடிக்கும் அரும்பணியில் -வீரத்
    திருமகள் சேர்ந்தெட்டு தோள்கொடுத்து, வானக்
    கருமுகிலாய் தீர்ப்பாள் கலி”….(100)

    “வாடும் பயிர்கண்டு வாடிய வள்ளலார்
    தேடும் அருட்ஜோதி தெய்வத்தை -நாடி
    அழைத்த வருக்குமுன்பு ஆதிலஷ்மி சேர்த்து,
    செழித்திடப் பெய்வாள் செடிக்கு”….(101)

    “தாத்தாக்கை கோர்த்து தெருத்தெருவாய் சென்றன்று
    சேர்த்தாள் தமிழின் சுவடிகளை -ஆத்தாவால்
    ஐம்பெருங் காப்பியத்தை ஐஸ்வர்ய மாய்பெற்றோம்,
    பைம்பொழில்வாழ் பங்கஜத்தைப் போற்று”….(102)

    “கொள்ளை அடிக்கவந்த கும்பினிக் காரனைக்
    ‘வெள்ளையனே போவெளியே’ விண்டுரைத்த -பிள்ளை
    மகான் சுதந்திரத்தை மீட்டபோது, இட்ட
    லகான்விஜய லஷ்மியின்லீ லை”….(103)

    ’’மூப்பினை ஏற்றதிய மானளித்த நெல்லியை
    சாப்பிடாது சென்றாள் சாவெதிர்த்து -தோப்பில்
    தனிமரமாம் அவ்வையை, தைரிய லஷ்மி
    பனிமலைஈ சன்பால்வைப் பு’’….(104)

    ’’ஏழை இருபத்தி ஏழை பிரசவித்து
    பாழும் வறுமையால் பாடுற -தோழனுக்கு
    கண்ணன்சம் பத்தைக் கொடுத்திட வைத்தது
    அன்னைசந் தானலஷ்மி அன்பு’’….(105)

    “அச்சம் தவிர்த்திடும் , ஆண்மை பெருக்கிடும்
    உச்சப் புகழில் உலவவிடும் -பச்சைமால்
    இச்சைக் (கு) உரிய இகபர தேவதையே
    பிச்சையிடு ஞானப் பிடிப்பு”….(106)

    “அம்பிகை பொன்மகளை ஆரா தனைசெய்து
    நம்பினோர் கெட்டதில்லை நானிலத்தில் -சொம்பிலே
    தேங்காய் மாவிலை தண்ணிள நீர்வைத்து
    பாங்காய் இவளைப் பணி”….(107)

     

    ’’வேதம் வளையல், விளக்கும் உபநிடதம்
    பாதச் சதங்கை, புராணங்கள் -காதணி,
    கோதை திருப்பாவை கொண்டாள் புடவையாய்,
    பேதையென் பாபாதப் பூ’’….(108)

     

    வாயார வாழ்த்து வடவேங் கடன்நெஞ்சத்
    தாயாரை, பூவாழ் திருமகளை -ஓயாமல்
    அன்னை கடைக்கண் அனுக்கிரகம் கொண்டோர்முன்
    முன்னை வினைகள் முடம்…(109)

     

    Share
  • பூமியில் அடித்தட்டு அதிர்வுப் பெயர்ச்சி இல்லாது [Plate Tectonics] உயிரினங்கள் பெருகச் சூழ்வெளி உதவியிருக்க முடியாது

    Plate tectonics Model

    (Subduction Zones Drift & Sea-Floor Spreading) 

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

     

    http://classroom.synonym.com/science-projects-earths-changes-18295.html

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Cm5giPd5Uro

    கால்பந்து ஒட்டுபோல் தையலிட்ட

    கடற் தளத்தின் மேல்

    கோல மிட்டுக்

    காலக் குயவன் எல்லை வரைந்த

    ஓவியப் பீடங்கள்

    நடம் புரியும்

    கடலில் மிதந்து !

    நண்டு போல் நகர்ந்து,

    கண்டத் தட்டுகள் இங்குமங்கும்

    துண்டு துண்டாய்ச் சேரும்,

    பிரியும் கடல் சூழ்ந்திட !

    நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு

    முந்தி இந்தியா

    ஆமைபோல் உந்தித் தவழ்ந்து

    ஆசியாக் கண்டமுடன்

    முட்டி மோதிப் படிப் படியாய்

    உயர்ந்துள்ளது

    எட்டாப் பனிச் சிகரமாய்

    இமய மலை !

    +++++++++++++

     

    jay

    நாம் அறிந்தபடி அடித்தட்டு பெயர்ச்சி உயிரினப் பிறப்புகளுக்கு மிகவும் முக்கியமானது.   பாறைக் கோள் [Rocky Planet] மனிதக் குடியேற்றம் பற்றிச் சொல்ல வந்தால், எண்ணிக்கையில் பேரளவு பெயர்ச்சிகள்  நேர்வது, பெருந்தேவை என்பது எங்கள் கணக்குப்படி தெரிய வருகிறது.  சூரிய மண்டலத்தில் நமது பூமியே பாறைப் பெருங் கோள் என்பதும்,  உயிரினம் வாழத் தகுதி உள்ள ஒரு கோள் என்பதும் எதிர்பாராது  நிகழ்ந்தவை அல்ல.  மீள்சுற்று இயக்கங்கள்  பாறைக் கோள்களில் உயிரினம் வசிக்கப் பெரும்பங்கு ஏற்கின்றன.   அடித்தட்டுகள் நகவர்தாலும், எரிமலைப் புகைமூட்டம்  எழுவதாலும், பாறைகளுக்குள் அடைபட்ட ஆக்சிஜென், கார்பன்டையாக்சைடு போன்ற சிக்கலான இரசாயன வாயுக்கள் வெளியேறி, மீள்சுற்று நிகழ்ச்சியில் சூழ்வெளியில் தொடர்ந்து பயனளிக்கின்றன.

    டையானா வாலன்சியா,  ஹார்வேர்டு பல்கலைக்கழகம்

    Plate tectonics -1

     

    “இந்திய உபகண்டம் 40 மில்லியன் ஆண்டுகட்கு முந்தி வெகு வேகமாக ஆசியக் கண்டத்தை நோக்கி வந்து மோதியது. ஆனால் அப்படி இந்தியா மோதியது ஒரு தடவை மட்டுமில்லை. [பலமுறையாக இருக்கலாம்]. இந்த முடிவு இமயமலை எவ்விதம் நகர்கிறது என்னும் யூகிப்பைப் பெருமளவில் மாற்றப் போகிறது. புகழ் பெற்ற அடித்தட்டு நகர்ச்சி [Plate Tectonics] பற்றிய கால யுகம் இந்த முடிவால் மாற்றம் அடையும். இந்திய உப கண்டம் ஆண்டுக்கு 10 செ.மீ. [4 அங்குலம்] நகர்கிறது. 10 மில்லியன் வருடங் களுக்குப் பிறகு 1000 கி.மீடர் [600 மைல்] நகர்ந்திருக்கும். புவி & அண்டக் கோள் விஞ்ஞான இதழில் [Earth and Planetary Science Letter] இந்த அரிய, புதிய விளைவுகள் வெளியிடப் படும். “

    ஆலிவர் ஜொகட்ஸ்  [Oliver Jagotz]  [Boston MIT Assistant Professor of Geology]

    முன்னுரை:

    பிரபஞ்சத்தின் அண்டங்கள், பஞ்ச பூதத்தின் அங்கங்கள், உலகத்தில் வாழும் உயிரினங்கள் எல்லாம் சக்தி மயத்தால் முறையே ஓர் ஒழுக்க நியதியைப் பின்பற்றி இயங்கினாலும், அவற்றின் இயக்கத்திலும் வடிவத்திலும் தொடர்ந்து மாறுபாடுகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வேறுபாடுகளை நோக்கும் போது, பிரபஞ்ச நியதிகள் முற்றிலும் சீரானவை என்றோ அல்லது முழுவதும் சீரற்றவை என்றோ அழுத்தமாகச் சொல்லமுடியாது. ஆனால் நமக்குத் தெரிந்த பிரபஞ்சக் கோட்பாடு களைச் [Laws of the Universe] ‘சீரற்ற ஒழுங்கு நியதிகள் ‘ [Disorderly Order Hypothesis] என்று இரண்டு முரண்பாடுகளையும் இணைத்து நாம் விளக்கம் சொல்லலாம்!

    Moving Himalayas

     

    அட்லாண்டிக் பெருங்கடல் மெதுவாக அகன்று வருகிறது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது! ஆனால் பசிபிக் பெருகடல் மெதுவாகக் குறுகிக்கொண்டு வருகிறது! ஈரோப்பில் இருக்கும் ஆல்ஃப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் அதிகமாகிக் கொண்டே போகிறது! பூதக் கண்டம் ஆஃப்பிரிக்கா செங்கடல் வட முனையில் பிளக்கப் போகிறது!  இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டம் அடித் தட்டுக்கு மேல் புகுத்தி, அழுத்தி அவற்றின் உயரத்தை மிகை யாக்கிய வண்ணமா யிருக்கின்றன! ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன!

     

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=JmC-vjQGSNM

    [Plate Tectonics]

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=L8CT3UHp0IE

    [The Formation of Himalayas]

     

    Fig 1A Ages of Plates

     

    450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆஃபிரிக்காவின் ஸகாராப் பாலையின் மீது துருவப் பனிக்கூண்டு [Polar Ice Dome] படிந்து கிடந்தது. அதை மெய்ப்பிக்க அல்ஜீரியா பாலைவனத்தில் பனிப்பாறை செதுக்கிய கற்பாறைகள் இப்போதும் பிழைத்திருப்பதை காணலாம். பூர்வக் காந்தத்தைச் [Paleo-magnetism] சோதிக்கும் போது அல்ஜீரியா பகுதி ஒருகாலத்தில் தென்துருவத்தில் பனிமூடிக் கிடந்திருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது. அல்ஜீரியா பகுதி இப்போது பூகோளத்தின் வளைவில் பெயர்ச்சியாகி 8000 மைல் தூரம் வடக்கே நகர்ந்துள்ளது. 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆஃபிரிக்காவின் ஸகாரா பாலைவனம் தென் துருவத்தில் இருந்து பனிப்பாறையால் மூடியிருந்த காலத்தில், பூமத்திய ரேகை வட அமெரிக்காவின் மத்தியப் பகுதி வழியாகச் சென்றிருக்க வேண்டும். குளிர்ப் பிரதேசங்களான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற இடங்களில் நிலக்கரிச் சுரங்கங்கள் அந்த யுகத்தில்தான் தோன்றி யிருக்க வேண்டும் ‘.

    டாக்டர் ரோட்ஸ் ஃபேர்பிரிட்ஜ்கொலம்பியா பல்கலைக் கழகம்.

     

    Fig Continents Drifts

     

    கடலடித் தட்டுகள் நகர்ச்சியின்றி உயிரினங்கள் விருத்தி நேர்ந்திருக்காது 

    நமது நீர்க்கோள் நம் கண்முன்பு மாறி வருகிறது.  அதனால் அநேக உயிரினப் பிறப்புகள் விளிம்பு முனையில் உள்ளன.   நாம் வாழும் பூகோளமானது நிறை குன்றிச் சிறிதளவு சிறுத்திருந்தால், கண்டங்களை நகர்த்தி, மலைகளை எழுப்பும் அடித்தட்டுப் பெயர்ச்சிகள் [Plate Tectonics] நேர்ந்திருக்கா !   அடித்தட்டு நகர்ச்சி இல்லையேல் வாயுச் சூழ்வெளி அமைப்பின்றி உயிரினங்களே பூமியில் தடம் வைத்து நடமாடி இருக்க முடியாது.

    புதிய ஆராய்ச்சியின்படி பூர்வீகத்தில் பூமிக்கு நேர்ந்த பூதப்பளு தாக்குதலால், அடித்தட்டு நகர்ச்சியும் தொடங்கி நமது நீர்க்கோள் உயிரன வசிப்புக்கு ஏற்ற நட்புக் கோளாய் மாறியது என்று தெளியாய் அறியப்படுகிறது.   சுமார் 3.26 பில்லியன் ஆண்டுகட்கு முன்னார், சுமார் 25 மைல் [60 கி.மீ.] அகலமுள்ள ஓரண்டம் பூமியில் எங்கோ மோதி, அதன் பூதள விளைவுச் சான்றுகள் தென் ஆப்பிரிக்கப் பகுதியில் இருந்தது தெரிகிறது.   அந்த  மோதலைப் பற்றி 2014 ஏப்ரலில் டோனால்டு லவ் [Donald Lowe] என்பவர்  பூதளவியல் வெளியீட்டில் [Journal of Geochemistry, Geophysics & Geosytems] எழுதியுள்ளார்.  அந்த யுகத்தில் உயிர் நுண்ணிகள் [Microbiological beings] மட்டும் இருந்ததாக அறியப் படுகிறது.   அவை அந்த மோதலில் பெரிதும் பாதிக்கப் பட்டதாகத் தெரிகிறது.   சுமார் 3 பில்லியன் ஆண்டுக்கு முன்புதான் அடித்தட்டுப் பெயர்ச்சியே ஆரம்ப மானது என்றும் டொனால்டு லவ் கூறுகிறார்.   தோன்றிய பூகோள   உயிரினங்கள்  ஏற்பட்ட அடித்தட்டு பெயர்ச்சி விளைவுகளுக்குத் தம்மைத் தகுதியாக்கிக் கொண்டன என்றும் கூறுகிறார்.

     

    Fig 2 Major Plates

     

    நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு முந்தி இந்திய உபகண்டம் வடதிசை நோக்கி நகர்ச்சி

    பாஸ்டன் மாஸ்ஸெசுஸெட்ஸ் தொழில் நுணுக்கக்  கூடத்தின்  விஞ்ஞான வல்லுநர்கள், இந்தியா ஆசியா வுடன் முட்டி மோதிய  அடித்தட்டு நகர்ச்சி 40 மில்லியன் ஆண்டுகட்கு முந்திதான் நிகழ ஆரம்பித்தது என்று   இப்போது கண்டு பிடித்துள்ளார்கள்.   இதுவரை 50 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு என்று கணிக்கப் பட்டிருந்தது.   சமீபத்தில் இமய மலைச் சரிவுகளில் தேடி அறிந்த மூலக / மூலக்கூறு உலோகச் சான்று களை வைத்து அந்த நிகழ்ச்சி 10 மில்லியன் ஆண்டுகட்குப்  பிந்தி [50-10=40] நேர்ந்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்கள்.   இமயமலைத் தொடர்களில் தற்போது  இரண்டு வெவ்வேறு அரங்குகளில் எடுத்த மாதிரிப் பாறைகளை  ஆராய்ந்ததின் விளைவுகள்தான் இந்த முடிவை வெளியிட ஆதாரமாக இருந்துள்ளன. இப்போது நாம் காணும் இந்தியா 50 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு சிறிய பரப்புள்ள  உபகண்டமாய் இருந்திருக்கும். இந்தியாவின் எத்தனை வடபுறப் பரப்பளவு யுரேசியக் கண்டத்தின் அடியிலே நகர்ந்துள்ளது என்று அறிந்து கொள்வது கடினம். ஆனால் இந்திய அடித்தட்டு எந்த வேகத்தில் நகர்கிறது என்று நுட்பமாய்த் தெரிவதிலும், எப்போது ஆசியத் தட்டுடன் மோதியது என்று தெரிவதின் மூலமும் விடை கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார். இமயத்தின் பல்வேறு சிகரங்கள் அவற்றின் கீழியங்கும் பூதப் பெரும் அடித்தட்டு நகர்ச்சி விசைகளால் எழுப்பப் பட்ட கோபுரங்களே.

     

    Fig 1 North America's Shaping

     

    முந்தைய கணிப்புகளின்படி இந்திய-யுரேசிய மோதல் விரைவான வேகத் தாக்குதல் ஏற்பட்டது சுமார் 50 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு நேர்ந்த தாகக் கருதப் பட்டது. இடையில் தூளாக்கப்பட பாறைகளே பிறகு இமயமலைச் சிகரமாக உயர்ந்தன என்பது மாதிரி ஆதாரங்களை வைத்து ஊகிக்கப்படுகிறது. இந்தப் பேரளவு மோதலே அடித்தட்டு நகர்ச்சி தாக்கங்களில் பெரும் கொந்தளிப்பு நிகழ்ச்சியாக கருதப் படுகிறது. அந்த அசுர மோதலில் பெரும்பான்மையான இந்தியப் பகுதி யுரேசியத் தட்டின் கீழ் புகுந்துவிட்டது என்று ஊகிக்கப் படுகிறது.  இந்திய-யுரேசிய மோதலை உறுதியாகத் தெரிந்து கொள்ள அதுபோல் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். கடந்த 2 மில்லியன் ஆண்டுகளாக ஆஸ்திரேலியக் கண்டத்தின் அடித்தட்டு அருகில் உள்ள “சுந்தா வளைவு” [Sunda Arc] என்னும் பற்பல தீவு மந்தைகளைத் மோதி வருகின்றன. அந்த மோதல்களை ஆராய்ந்து, முந்தைய இந்திய மோதல்கள் எப்படி நேர்ந்தன என்று கண்டறிந்தனர்.

     

    Fig Zigzaw Puzzle

     

    வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் மெல்ல மெல்ல நகர்ந்து இடைவெளியை அகலமாக்கி வருகின்றன! அமெரிக்காவில் காலிஃபோர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் வடபுறமாகச் சரிந்து கொண்டிருக்கிறது! மைய அட்லாண்டிக் கடற்தட்டுப் பிறழ்ச்சிப் பீடம் [Mid-Atlandic Tectonic Plate Ridge] குறுக்கே வெட்டிச் செல்லும் ஐஸ்லாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்ஸி [Surtsey, Iceland] என்னும் தீவு 1963 நவம்பர் 14 இல் வட அட்லாண்டிக் கடலில் திடீரென எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது! ‘கடற்தளங்கள் நீட்சியைக் கண்டுபிடித்து விளக்குவது நம் கையில்தான் இருக்கிறது. மைய அட்லாண்டிக் பிறழ்ச்சிப் பீடத்தின் இருபுறமும் உள்ள கடற்தளம் ஆண்டுக்கு சுமார் ஓரங்குல நீளம் நகர்ந்து கொண்டு வருகிறது. கடற்துளையில் எடுத்த மாதிரிகள் வடிகால் புழுதிக்கும், அடிக்கடற் பாறைக்கும் இடையில் உள்ள எல்லையைக் காட்டின. அத்துடன் அவை எத்துணை இளைய பருவத்தை உடையவை என்று வயதைக் காட்டி, அடிக்கடல் பூர்வப்படிவங்கள் [Undersea Basement Fossils] வெஜினரின் [Alfred Wegener (1880-1930] மகத்தான கண்டங்களின் புலப்பெயர்ச்சி நியதியை மெய்ப்பித்தது ‘.

    டாக்டர் ஆர்தர் மாக்ஸ்வெல் [Co-Leader, Wood Hole Oceanographic Institution]

     

    ‘ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே மத்தியதரைக் கடல் பிரதேசம், நீரில்லாத இரண்டு மைல் ஆழக் குழியாக உப்புக் கலவைப் பொருள் மிகையாகக் கொண்டிருந்தது. அட்லாண்டிக் கடலை ஜிப்ரால்டர் பெரு மலைத்தொடர் மறைத்து, ஒருசில நதிகள் மட்டும் சேரும் மத்திய தரைக் கடல் வெள்ளம் அனைத்தும் ஆவியாகப் போனது. கப்பலின் துளைக்கருவி வெகு ஆழத்தில் தோண்டிப் பார்த்ததில், பல பகுதிகளில் பாலைவன வெப்பத்தில் காய்ந்துபோன ஆயிரக் கணக்கான அடி உயர உப்புக் குளங்களும், ஏரிகளும் காணப்பட்டன ‘.

    டாக்டர் வில்லியம் ரயான், [Glomar Challenger Deep Sea Exploration (1970)]

    அட்லாண்டிக் பெருங்கடல் மெதுவாக அகன்று வருகிறது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது! ஆனால் பசிபிக் பெருகடல் மெதுவாகக் குறுகிக்கொண்டு வருகிறது! ஈரோப்பில் இருக்கும் ஆல்ஃப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் அதிகமாகிக் கொண்டே போகிறது! பூதக் கண்டம் ஆஃப்பிரிக்கா செங்கடல் வடமுனையில் பிளக்கப் போகிறது!

    Half Globe

    இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டம்  அடித்தட்டுக்கு மேல் புகுத்தி, அழுத்தி அவற்றின் உயரத்தை மிகை யாக்கிய வண்ணமா யிருக்கின்றன! ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன! வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் மெல்ல மெல்ல நகர்ந்து இடைவெளியை அகலமாக்கி வருகின்றன! அமெரிக்காவில் காலிஃபோர்னியா கடற் கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் வடபுறமாகச் சரிந்து கொண்டிருக்கிறது! மைய அட்லாண்டிக் கடற்தட்டுப் பிறழ்ச்சிப் பீடம் [Mid-Atlandic Tectonic Plate Ridge] குறுக்கே வெட்டிச் செல்லும் ஐஸ்லாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்ஸி [Surtsey, Iceland] என்னும் தீவு 1963 நவம்பர் 14 இல் வட அட்லாண்டிக் கடலில் திடாரென எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது!


    தென்துருவத்தில் இருக்கும் அண்டார்க்டிகாவில் முதலில் 1967 ஆண்டிலும், அடுத்து 1969 ஆண்டிலும் நெடுத்தொடர் மலைகளின் [Transantarctic Mountains] பனிபாறைகளில் டைனோசார்ஸ் காலத்திய நிலத்துறை விலங்குகளின் பூர்வப்படிவத் துணுக்குகளைக் [Fossil Fragments of Land Creatures] கண்டுபிடித்து, அமெரிக்க தேசீய விஞ்ஞான அறக்கூடம் [National Science Foundation] உளவு செய்தது.

     

    Vaious Zones

     

    அந்த மாதிரிகளில் ஒன்று செம்மறி ஆடு போல் ஊர்ந்திடும் விலங்கான லிஸ்டிரோசாரஸ் [Lystrosaurus]. அண்டார்க்டிகாவில் முதன்முதல் கண்டுபிடிக்கப் பட்ட முதுகெலும்புள்ள பூர்வ மூலப்படிவம் [Index Fossil] அந்த விலங்கு. அந்த விலங்குகள் ஆஃபிரிக்கா, இந்தியா, சைனா ஆகிய நாடுகளில் 180-225 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக அறியப்படுகின்றன.


    குலோமர் சாலஞ்சர் கடற்துளைக் கருவி 1968 ஆம் ஆண்டு போட்ட முதல் துளையில் மெக்ஸிகோ வளைகுடாவில் 12,000 அடி ஆழத்தில் நுழைந்து பெட்ரோலியம் கச்சா ஆயில் இருப்பதைக் கண்டுபிடித்தது! இதுவரைக் கடலில் இத்தனை ஆழத்தில் ஆயில் ஒளிந்துள்ள தென்று யாரும் ஊகித்தது கூட இல்லை! மூன்றாவது துளையை அட்லாண்டிக் கடற்தளத்தில் தோண்டி, அட்லாண்டிக் கடல் மெய்யாக அகன்று வருகிறது என்று கண்டு பிடித்தது. 1968 ஆண்டு இறுதியில் ஆஃபிரிக்காவின் மேற்திசையில் சென்று, மைய அட்லாண்டிக் கடற்தட்டுப் பீடத்தின் தென்புற மிருந்து துவங்கி இருபுறமும் தொடர்ந்து துளைக்கு மேல் துளையிட்டு மாதிரிகளைச் சோதித்து மகத்தான கடற்தட்டு மெய்ப்பாடுகளைக் கண்டு பிடித்தது. குலோமர் கப்பல் நான்கு வருடங்களாகப் பணி செய்து சுமார் 400 துளைகளைக் கடற் பாறைகளில் தோண்டி பல அரிய புதிய பூகோளச் செய்திகளைக் கூறி யிருக்கிறது. உலகக் கண்டங்களை விட, கடற்தளங்கள் இளைய காலத்தவை என்று கண்டுபிடித்துள்ளது. பூர்வ வடிகால் புழுதிகள் [Oldest Sediments] 160 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் உண்டாகி யிருக்கின்றன என்று கண்டுள்ளது.அதற்கு முரணாகச் சமீபத்தில் உளவிய கிரீன்லாந்தின் பாறைகள் சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று காட்டி யுள்ளது. பூகோள விஞ்ஞானிகள் தற்போது பூமியின் முழு வயதை 4.5 பில்லியன் ஆண்டாகக் கணிக்கிறார்கள். ஆனால் பூகோளக் கடற்தளத்தின் வயதை சுமார் 180 மில்லியன் ஆண்டாகத்தான் மதிப்பிடுகிறார்கள். 1970 இல் குலோமர் கப்பல் ஆய்வாளர்கள் ஆஃபிரிக்கா கண்டம் வடதிசை நோக்கி மெதுவாக நகர்ந்து, மத்தியதரைக் கடல் அகலத்தைக் குறுக்கி வருகிறது என்று நிரூபித்திருக்கிறார்கள். அந்த நகர்ச்சியால் கடற்தட்டுகள் பிறழ்ந்து, எப்போதாவது ஸிசிலியில் உள்ள எட்னா சிகரத்தில் [Mount Edna, Sicily] எரிமலைக் குமுறலையும், கிரீஸ், துருக்கி ஆகிய நாடுகளில் நில நடுக்கத்தையும் உண்டாக்குகின்றன! படிப்படியாக அழுத்தி மத்திய தரைக் கடற்தட்டு மடங்கி ஆல்ஃப்ஸ் மலைத் தொடரை உயர்த்திக் கொண்டே போகிறது என்றும் கூறி யிருக்கிறார்கள்!

    சுனாமி உண்டாக்கிய சுமாத்திரா கடற்தட்டுப் பிறழ்ச்சி:

    இந்தோனேசியாவுக்கு மேற்கே சுமாத்திரா தீவுக்கு அருகே கடற்தளத்தில் அதே கோணத்தில் சாய்திருக்கும் சுமாத்திர நிலநடுக்கப் பழுது [Sumatran Fault] சுமார் 1100 மைல் நீளத்தில் இருப்பதாக அறியப்படுகிறது. 2004 ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி வெடித்த கடற்தள பூகம்பத்தில் பூதவடிவில் எழுந்த சுனாமி கால் மில்லியன் நபர்களைக் கொன்றதோடு, பனிரெண்டு நாட்டுக்குக் கடற்கரை நகரங்களைத் தகர்த்து விட்டது.

     

    நிலநடுக்கத்தின் போது மாபெரும் ஆற்றல் மிக்க அசுர சுனாமியை எழச்செய்த கடற்தள முறிவின் நீளம்: சுமார் 700-800 மைல், அகலம்: 60 மைல்! அதாவது 48,000 சதுர மைல் [800×60] பரப்பும், பல ஆயிரம் அடி ஆழமுள்ள கடல் வெள்ளத்தை செங்குத்தாகத் தூக்கிப் பல முறைக் குலுக்கிப் போட்டுச் சுனாமிப் பேரலைகள் கரைநோக்கி அடுத்தடுத்துப் படையெடுத்துள்ளன! அபார ஆற்றல் கொண்ட அந்த அசுர நிலநடுக்கத்தைத் தூண்டிய கடற்தட்டுப் பிறழ்ச்சிப் பழுது [Plate Tectonic Fault] சுமாத்திரா பழுது! பல்லாண்டு களாக இக்கடற்தட்டுப் பழுது எண்ணற்ற நிலநடுக்கங்களை உண்டாக்கியுள்ள பூகம்பத் திடலாக இருந்து வருகிறது. 1833 ஆம் ஆண்டில் அதே பழுதுத் தொடரில் மிகப்பெரும் பூகம்பம், Mw:9 [Mercalli Scale] அளவு நிர்ணயத்தில் எழுந்து பேரழிவு செய்துள்ளது.. சுமாத்திரா தீவு 1100 மைல் நீளமும், 250 மைல் அகலமும் கொண்டது. தீவுக்கு மேற்கே 180 மைல் தூரத்தில் அதன் முழு நீளத்திற்கும் இணையாக, ஒரு பயங்கர நில அதிர்வுப் படுகுழி காணப் படுகிறது. சுமாத்திரா பூகம்ப பழுதுக்குழி [Sumatran Fault Trench] குமுறிக் கொண்டிருக்கும் உலகக் கடற்தளப் பிறழ்ச்சிக் குழிகளிலே மிகப் பெரியது. அன்னத்தின் கழுத்துபோல் வளைந்த அந்தப் பூகம்ப பழுது 1100 மைல் நீண்ட தாக தீவுக்கு இணையாகக் கடற்தளத்தில் தோன்றி யிருக்கிறது. கடற்தட்டுத் திணிப்பால் [Ocean Plate Subduction Process] வளர்ந்திருக்கும் சுமாத்திராவின் மலைத்தொடரும், பழுதுக் குழிக்கு இணையாக மலைப் பாம்புபோல் படுத்துக் கிடக்கிறது!

     

    Fig Drift Maps

     

    மெஸோசாயிக் யுகத்தின் [Mesozoic Era] ஆரம்ப காலத்தில், அதாவது 240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு குமுறிக் கொண்டிருந்த கடற்தட்டுத் திணிப்பு அரங்கத்தில் [Subduction Zone], சுமாத்திரா தீவு அமைந்துள்ளது. அந்த நாட்டிய அரங்கம் சுமாத்திரா தீவு போல் இணை யாகச் சாய்ந்த கோணத்தில் நீண்டு வளைந்துள்ளது. பல மில்லியன் ஆண்டுகளாக படிப்படியாகக் கடற்தட்டுத் திணிப்பால் உண்டான கருங்கல் குன்றுகளில் மாதிரிகளை எடுத்து ஆராய்ந்ததில் கீழிருக்கும் கடற்தட்டின் உயர அளவுகளையும், பண்புகளையும் கண்டிருக் கிறார்கள். அவை யாவும் திணிப்பைச் சார்ந்த கருங்கல் வகையான, நிலநடுக்கத் தன்மை கொண்ட கால்க்-ஆல்கலைன் ரகத்தைச் [Subduction Related I-type, Volcanic Arc, Calc-Alkaline type] சேர்ந்தவை.

     

    கருங்கல் மாதிரியில் உள்ள ஸ்டிராஞ்சியம் ஏகமூலத்தின் ஆதி விகிதத்தை [Strontium Isotope Initial Ratio] உளவு செய்தால், திணிப்புத் திடல் கலந்துள்ள பூதளக் குழம்பின் மேற்தட்டு பகுதியைச் [Magmas from Upper Mantle with Subduction Contamination] சேர்ந்ததாக அறியப் படுகிறது. ஆர்கான் ஏகமூலங்கள் [Ar40-Ar39 Dating], ருபீடியம், ஸ்டிராஞ்சியம் கதிரியக்கத் தேய்வு காலத்தை [Rubidium-Strontium (Rb-Sr) Dating] ஆராய்ந்து, சுமாத்திரா குன்றுகளின் கருங்கல் மாதிரிகளின் வயதைக் காண முடிந்தது. கருங்கற்கள் 5.5 முதல் 192 மில்லியன் ஆண்டு வயதுகளைக் கொண்டிருந்தன. [Sulit Granite: 192 Ma], [Lassi Pluton: 52 Ma], [Lolo Pluton: 12 Ma], [Sungaipenuh Granite: 5.5 Ma] [Ma (Million Years Ago)]. சுமாத்திரா பாறைகளில் காந்தசக்தி ஜுராஸிக் யுகத்தின் [Jurassic Era] ஆரம்பத்தில் சுமார் [193-15 Ma] மில்லியன் ஆண்டுகளுக்கு இடையிடையே ஏற்பட்டுள்ளது என்பதும் அறியப்பட்டது.

     

    Conitinental drift


    கண்டத் தீவுகளுக்கும் கடற் தீவுகளுக்கும் உள்ள வேறுபாடுகள்:

    உலகிலே உண்டாகி யிருக்கும் தீவுகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். 1. கண்டத் தீவுகள். 2. கடற் தீவுகள். கண்டத் தீவுகள் [Continental Islands] என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம். பெருங் கண்டத்துடன் அதன் அருகே தணிந்த கடல் ஆழத்தில் தளப்பரப்பால் இணைக்கப்பட்ட தீவே, கண்டத் தீவு என்று அழைக்கப்படுகிறது. இலங்கைத் தீவு உப கண்ட மான இந்தியாவின் கண்டத் தீவு என்று சொல்லலாம். கடந்த 20,000 ஆண்டுகளில் பெருங் கண்டத்துடன் பிணைந்து கொண்ட தீவுகளே அப்பெயரைப் பெறுகின்றன. கண்டத் தீவுகளில் உள்ள சில செடி கொடிகள், உயிர் ஜந்துகள் [Fauna & Flora, Species] பெருங் கண்டத்தில் உள்ளவை போல் இருக்கின்றன.

     

    குறிப்பிட்ட இடத்தில் பிறந்து விருத்தி யாகும் ஜந்துகள் [Endemic Species] அங்கு இருப்பது அபூர்வந்தான். கடற் தீவுகள் [Ocean Islands] என்றால் என்ன ? பூமியின் உட்கருவிலிருந்து கடற்தளத்தில் துளையிட்டு எரிமலைகள் சீறி எழுந்து, கடல் ஆழத்தில் உண்டாக்கப்பட்ட தீவுகள் இப்பெயரால் அழைக்கப்படுகின்றன. ஹவாயி தீவுகள், ஐஸ்லாந்து தீவுகள் ஆகிய வற்றை இவற்றுக்கு உதாரணமாகக் கூறலாம். கண்டங்களை ஒட்டாமல், கண்டங் களுக்கு அப்பால் உண்டானவை இத்தீவுகள். மைய அட்லாண்டிக் பிறழ்ச்சித் தட்டுக் கடற்பீடம் குறுக்கே செல்லும் ஐஸ்லாந்தில் உள்ள சூர்ட்ஸி [Surtsey, Iceland] என்னும் தீவு 1963 நவம்பர் 14 இல் வட அட்லாண்டிக் கடலில் எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது! அத்தீவுகள் எப்போதும் ஒரு பெருங் கண்டத்துடன் பிணைக்கப் படுவதில்லை. செடி, கொடிகள், விலங்கினங்கள் கடல் வழியாகக் கொண்டு செல்லப்பட வேண்டும். கடல்மீது வந்த தாவர இனங்கள், விலங்கினங்கள் மட்டுமே அத்தீவுகளில் பிழைத்திருக்க முடியும். நிலப் புதுநீரில் வளரும் மீனினம் போன்ற பலதரப்பட்ட உயிர் ஜந்துகள் அந்த தீவுகளில் கிடையா. கண்டத்திற்கு அப்பாலிருக்கும் கடற்தீவுகளில் புத்தின ஜந்துகள் வளர்ச்சிக்கு மையமாக [Centres of Speciation] இருக்கின்றன. குறிப்பிட்ட இடவிருத்தி ஜந்துகள் [Endemic Species] வளர இத்தீவுப் பகுதிகளின் சூழ்நிலைகள் உதவுகின்றன.

    Carbon Cycle in the Earth

    கடலில் மூழ்கிய தமிழகத்தின் தென்திசைக் குமரிக் கண்டம்

    1960 ஆம் ஆண்டில் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிதிக்கொடை அளித்து, இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த உளவில், தமிழகத்தின் கன்னியா குமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்திருக் கிறார்கள். முதலாக கப்பலில் சென்று ஒலிச் சமிக்கை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். அத்திட்டம் ஏனோ 1960 ஆண்டுக்குப் பிறகு தொடரப்பட வில்லை! 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரைப் படங்களில், குமரிக் கண்டத்தின் பூர்வீக அமைப்பு நிலை காணப்படுகிறது. அரபிக் கடலுக்குத் தெற்கில், லட்சத் தீவுகள் நீட்சியில் மால்டிவ் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ [Chagos, Archipelago] வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த [கி.மு.8000] பனி யுகத்தின் போது [During the Ice Age] இந்து மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.

     

     

    பனி யுகத்தில் எங்கோ பனி திரண்டு நீர் சுண்டிப்போய் உலகெங்கும் கடல் மட்டநீர் தணிவாக இருந்தது. அப்போது உலகத்தில் கண்டங்கள், தீவுகள் பல பகுதிகளில் பிணைந்திருந்தன! ஐரோப்பாவுடன் இங்கிலாந்து, பிளாரிடாவுடன் கியூபா தீவு, ஆஸ்திரேலியாவுடன் பப்பா நியூகினி தீவு, தமிழகத்துடன் இலங்கைத் தீவு, சுமாத்திரா ஜாவா போர்னியோ தீவுகள் தென் கிழக்காசியாவின் பெருந்தளத்துடன் இணைந் திருந்தன என்று கருதப்படுகிறது! இலங்கை தமிழகத்துடன் இணைந்திருந் ததற்கு, இப்போதும் தெரியும் தணிவாக உள்ள கடல்மட்ட நீர் நிலையே சான்றாக இருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்து வால்மீகி முனிவர் எழுதிய இராம கதையில், அனுமார் படையினர் பாறாங் கற்களைக் கொண்டு வந்து, ஈழத்தின் தணிந்த கடற்தள மீது கற்பாலம் கட்டிக் கடந்திருப்பது அறியப்படுகிறது. பனியுகம் மாறி வெப்பம் மிகையான காலத்தில் பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் மெதுவாக படிப்படியாக உயர்ந்து குமரிக் கண்டம் மூழ்கிப் போயிருக்கலாம் என்று உறுதியாக நம்ப இடமிருக்கிறது. அதன் விளைவில் குமரிக் கண்டம் சிதறி ஆஃபிரிக்கா முதல், ஆஸ்திரேலியா வரை உள்ள மடகாஸ்கர், லட்சத் தீவுகள், அந்தமான் தீவுகள், இந்தோனியாவின் தீவுகள் போன்றவை பிரிவு பட்டன என்று ஒரு சாரார் குறிப்பிட்டுள்ளார்கள்.

     

    Fig Mosaic Plates

    ‘லெமூரியா கண்டம் ‘ [Lemuria Continent] இந்து மாக்கடல் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்று முதலில் கூறியவர் 19 ஆம் நூற்றாண்டு பூதளவாதி பிலிப் ஸ்கிலேட்டர் [Geologist, Philip Sclater]. விக்டோரியன் டார்வின் நியதியைப் பின்பற்றுவோர் மடகாஸ்கர் தீவில் மட்டும் தனித்து வாழும் லெமூர் குரங்குகளை [Lemurs] எடுத்துக் காட்டி யிருக்கிறார்கள். அவற்றின் பூர்வப்படிவப் பிரதிகள் [Fossils of Lemurs] ஆஃபிரிக்காவிலும், தென் கிழக்காசியாவிலும் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஜெர்மன் டார்வின்வாதியான ஏர்னெஸ்ட் ஹேக்கல் [Ernst Haeckel] ஆதி லெமூரியாவின் உயிர் மூலவிகள் [Genes] யாவும் இந்து மாக்கடலில் மூழ்கி மடிந்ததால் காணாமல் போயின என்று கூறியதை எடுத்துக் கொண்டு பிலிப் ஸ்கிலேட்டர் லெமூரியா கண்டம் (குமரிக் கண்டம்) ஒன்று ஆங்கே இருந்திருக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.

     


    ++++++++++++++++++++++++++

    From: http://www.sepiamutiny.com/sepia/archives/004456.html

     

    (தொடரும்)

    தகவல்

    1. The Continental Mosaic -Reader ‘s Digest Atlas of the World [1987]

    2. Hutchinson Encyclopedia of the Earth By Peter Smith [1985]

    3. Earth ‘s Restless Crust -ABC ‘s of Nature, Reader ‘s Digest [1984]

    4. The Long Journey of Continents By: Ronald Schiller -The Marvels & Mysteries of The World Around US, Reader ‘s Digest Publication [1972]

    5. Continental Drift & Plate Tectonics [www.zephryus.co.uk/geography/home.html] (Mar 20, 2003)

    6. Pangaea, Gondwana, Laurasia, Plate Tectonics, Alfred Wegener From: Wikipedia Encyclopedia

    7. Theory of Continental Drift By: Jim Cornish, Newfoundland, Canada (Sep 2001)

    8. Continental Frift, Geology & Oceanography. [Several Internet Articles]

    9. Everyday Geography By: Kevin McKinney (1993)

    10  Eduard Suess, Austrian Scientist From: Wikipedia Encyclopedia

    11 Our Changing Earth By: Tusco Wilson Ph.D. Frontiers of Science, National Geographic Society [1982]

    12 This Changing Earth By: Samuel Matthews, National Geographic Society [Jan 1973]

    13 Our Restless Planet Earth Rick Gore By: National Geographic Society [Aug 1985]

    14 Fossils, Annals of Life Written in Rocks By: David Jeffery, National Geographic Society [Aug 1985]

    15 The Earth ‘s Fractured Surface By: National Geographic Society [1995]

    16 Physical Earth By: National Geographic Society [1998]

    17 The Shaping of a Continent, North America ‘s Active West [1995]

    18 National Geographic Picture Atlas of our World [1990]

    19 Differences Between Continental & Oceanic Islands [www.abdn.ac.uk/zoohons/lecture1]

    20 The Evolution of the Sumatran Earthquake Fault System, Indonesia, Andy McCarthy. Ph.D. [July 9, 2002]

    21 Isotopic Dating of Sumatran Fault System By: Imtihanah & MPhil

    22 The Sumatran Fault System By Professor Kerry Sieh & Danny Natawidjaja [Nov 1999]

    23 Kumari Kandam & Lemuria [http://en.wikipedia.org/wiki/Lemuria_(continent)

    24 Kumari Kandam By: Chitta Ranjan Myilvaganan, Sydney, Australia. [Jan 30, 2005]

    25. http://www.sepiamutiny.com/sepia/archives/004456.html  (May 22, 2007)

    26. http://www.crystallotus.com/Lemuria/04.htm

    27.  http://en.wikipedia.org/wiki/Lemuria_(continent) [July 3, 2011]

    28.  http://en.wikipedia.org/wiki/Kumari_Kandam [July 7, 2011]

    29.  India Joined with Asia 10 million years later than previouly thought By:  Jennifer Chu, MIT News Office, Boston, MA [February 14, 2013]

    30. http://en.wikipedia.org/wiki/Continental_drift  [February 15, 2013]

    31. http://education.nationalgeographic.com/education/encyclopedia/continental-drift/?ar_a=1

    32.  https://mail.google.com/mail/?ui=2&shva=1#all/13d12f58198ec527  [Long-Lost Continent Found ? Fragments Of ‘Mauritia’ May Be Buried Beneath Indian Ocean]

    33.  http://www.huffingtonpost.com/2013/02/25/lost-continent-mauritia-found-indian-ocean_n_2759797.html  [Long-Lost Continent Found ? Fragments Of ‘Mauritia’ May Be Buried Beneath Indian Ocean]

    34.  http://education-portal.com/academy/lesson/plate-tectonics-a-unified-theory-for-change-of-the-earths-surface.html#lesson

    35   http://www.astrobio.net/news-exclusive/plate-tectonics-could-be-essential-for-life/  [February 19, 2009]

    36.  https://www.google.ca/search?client=opera&hs=HAx&q=Plate+tectonics+and+life+on+earth&spell=1&sa=X&ei=GNyAU6CVJYaq8AGC_4GgAg&ved=0CCoQvwUoAA&biw=1361&bih=89

    37.  http://www.ethlife.ethz.ch/archive_articles/120223_Simulation_subduktion_su/index_EN  [February 23, 2012]

    38.  http://www.dailygalaxy.com/my_weblog/2014/05/without-plate-tectonics-life-on-earth-might-never-have-gained-a-foothold-harvard-smithsonian-center-.html  [May 7, 2014]

    **********************

    S. Jayabarathan   [jayabarathans@gmail.com  (May 24, 2014)

    http://jayabarathan.wordpress.com/

    +++++++++++++++++++++

     

    Attachments area

    Plate Tectonics in action

    Plate Tectonics

    Formation of The Himalayas
    Share
  • அழைக்கும் தொலைவில் ஆண்டவன்

    இசைக்கவி ரமணன்

    நீ வேண்டும்! எனக்கு
    நீதான் வேண்டும்!!

    அம்மா, வாசலில் விளையாடிக் கொண்டிருக்கும் மகனை அவசரமாக அழைக்கிறாள். `வருகிறேன்,` `வந்துகொண்டிருக்கிறேன்` என்றா சொல்கிறான்? `இதோ வந்துட்டேம்மா!` என்றல்லவா கூவி, தனது கூவல் முடியுமுன்னே மூச்சிரைக்க அம்மாவின் முன்னே வந்து நிற்கிறான்? உலகத்தில் அன்றாட நடப்பே இப்படி இருக்க, எல்லோர்க்கும் தந்தையான இறைவன் அழைத்தால் வரமாட்டானா என்ன?

    siva (4)இறைவன் யார்? எங்கும் இருப்பவன். எப்போதும் இருப்பவன். எல்லாமாகவும் இருப்பவன். எல்லோருக்கும் சம அளவில் இருப்பவன். மனிதர்கள், தேவர்கள், ஏன், அரக்கர்கள், விலங்கினங்கள் போன்ற எல்லா உயிர்களுக்கும் சம தொலைவில் இருப்பவன். எல்லோர்க்கும் தந்தை இறைவன்! அவன் நல்லோர்க்கும் தீயோர்க்கும் தலைவன்! ஆம், கடவுள் அனைவருக்காகவும் இருக்கிறான் என்பது மட்டுமல்ல. ஒவ்வொருவருக்கும் அவன் முழுமையாக இருக்கிறான்! `அவன் எனக்கே எனக்கு!` என்று ஒவ்வொருவரும் உரிமை கொண்டாடும் வண்ணம் இருக்கிறான். (‘’Not only God is available for all, all of God is available for everyone!’’) அப்படி இருப்பவனை அழைப்பதென்ன, அவன் அதன் பிறகு வருவதென்ன?

    இதயக் கமலத்தில் அவன் இருக்கிறான் என்பதை உணர்வதே அழைத்தல்! உணர்ந்த அந்தக் கணத்தில், அவன் உள்ளில் தெரிவான். வெளியில் விரிவான். உள், வெளி என்னும் கோடழிந்து, ஒன்று பலவாக நின்று விளங்குவதை உணர்த்துவான். திருவள்ளுவர், `மலர்மிசை ஏகினான்,` என்று கடந்த காலமாகச் சொல்கிறார். காலம் என்கின்ற கட்டுப்பாடு கடவுளுக்கு ஏது? எல்லாவற்றையும் ஏற்கனவே ஆண்டு முடித்துவிட்டவன் என்பதால்தானே அவனை ஆண்டவன் என்கிறோம்? உள்ளே இருக்கிறான் என்று உணர்ந்த கணம், உள்ளக் கமலம் விரியும். அங்கே இறை, ஒளிமயமாக வீற்றிருப்பது தெரியும்! ஆக, ஏற்கனவே அங்கே அவன் இருப்பதனால்தான் `ஏகினான்`என்றார் வள்ளுவர்.

    மாணிக்க வாசகப் பெருமான், `அவனருளாலே அவன்தாள் வணங்கி,` என்னும் அமர வாசகத்தைச் சொல்வதற்கு முன்னால், அந்த அற்புத நிலைக்கான காரணத்தைப் பொன்னில் பொறிக்க வேண்டிய தேன்தமிழ்ச் சொற்களிலே சொல்கிறார், `சிவனவன் என்றன் சிந்தையுள் நின்ற அதனால்,` என்று. இந்த உணர்வுதான், சிவனையே நேரில் வரவழைத்தது. பரியை நரியாக்கி, அவருடைய உலகாய குற்றத்திற்காக அவருக்கு சிறைவாசத்தைத் தந்து, நரியைப் பரியாக்கி, அவருடைய மட்டற்ற சிவநேயத்திற்காக அவருக்கு சிவலோகமும் தரவைத்தது.

    அவன், இருக்கிறான். அவன், என் உள்ளத்தில் நன்றாக வீற்றிருக்கிறான் என்னும் நம்பிக்கையோடு, முழு உணர்வோடு, அவனே கதியென அழைத்தவர்களுக்கு அவன், `நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய்,` வந்து பணிவிடை செய்தான்! இன்றும் செய்து வருகிறான்!

    எல்லாம் அவனுடையதே என்பதனால் எதையும் அவனிடம் கேட்கலாம்தான். ஆனால், இரண்டு முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்:

    கேட்டதைக் கொடுத்துவிடுவான்
    கொடுத்தவுடன் மறைந்துவிடுவான்

    உலக வாழ்க்கையில் கூட, நாம் எவரிடம் என்ன கேட்கவேண்டும் என்று சிந்தித்துத்தானே கேட்கிறோம்? சச்சின் டெண்டுல்கரிடம் சங்கீதம் கற்றுக்கொள்ளப் போகிறோமா? பூக்கடையில் நெய்வாங்கப் போகிறோமா? எங்கே என்ன கிடைக்கும், எவரிடம் எதைக் கேட்கலாம் என்ற அறிவும் இங்கிதமும் நமக்கு இல்லாமலில்லை. ஆனால், அருகம் புல்லிலிருந்து ஆன்ம விடுதலை வரை, எதையும் வழங்கவல்ல இறைவனின் முன்னிலையில் இந்த அறிவும் இங்கிதமும் நம்மில் பெரும்பாலானவருக்கு இல்லை என்பதே உண்மை. உலக வாழ்வில் மண்டிக் கிடக்கும் கவலைகளும் கலகங்களுமே இதற்கு நிரூபணம்.

    ஒரு ஞானி சொல்கிறார், ‘The problem with desires is that they get fulfilled; if not today, tomorrow. So, one should be careful in desiring only desirable things!’ என்ன ஆழமான வாசகம்! ஆம், ஆசைகளில் இருக்கும் ஆபத்து, இன்றில்லையானால் அவை நாளையேனும் நிறைவேறிவிடும் என்பதுதான்! பல ஆசைகள் நம்மை பந்தத்தில் இறுக்கும். சில ஆசைகள் நம்மை விடுதலையில் உய்க்கும். `எனது தேசம் மேன்மை அடையவேண்டும், நான் வாழும் சமுதாயம் நலிவுகள் நீங்கி நலம்பெறவேண்டும்,` என்பன போன்ற ஆசைகள் ஒருவனை ஒருபோதும் கட்டுப்படுத்தாது. அல்லாமல், அதுவேண்டும் இதுவேண்டும் என்று வேண்டும்போது அவற்றைத் தந்துவிட்டு, அக்கணமே மறைந்துவிடுகிறான் ஆண்டவன் என்பதே சான்றோர்கள் நமக்குக் கூறியுள்ள எச்சரிக்கை.

    அவனிடம் அதையும் இதையும் கேட்காமல், அவன்தான் வேண்டும் என்று உறுதியாக நின்றால், அவன் வராமலிருக்க முடியுமா? தன்னைத் தராமல்தான் இருக்க முடியுமா?

    ஒரு பொருட்காட்சி. அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு உற்சாகமாகச் செல்கிறான் பையன். எதைப்பார்த்தாலும் வேண்டும்போல் தோன்றுகிறது. குடைராட்டினம், பஞ்சுமிட்டாய், பரிசல் போன்ற பொரித்த அப்பளம், இன்னும் என்னென்னவோ! பார்த்ததையெல்லாம் கேட்கிறான் குழந்தை. அம்மாவும் சலிக்காமல் வாங்கித் தருகிறாள்.

    திடீரென்று, கூட்டத்தில் பையன் அம்மாவின் பிடியிலிருந்து நழுவி, தொலைந்துபோய்விடுகிறான். அனைத்தாலும் கவரப்பட்ட அந்த அரங்கத்தில், எதுவுமே கண்ணில் படாமல் அவன் அம்போவென்று நிற்கிறான். அடிமனத்திலிருந்து துயரம் பொங்க ஓவென்று அழுகிறான். காவல் துறையினர் பார்க்கிறார்கள். இது அம்மாவின் பிடியைவிட்டுத் தொலைந்த குழந்தை என்பதை உடனேயே புரிந்துகொண்டு அதைச் சமாதானம் செய்ய முயல்கிறார்கள். `பையா, அம்மாவைக் கண்டுபிடிக்கலாம், இந்தா அப்பளம்.`

    — வேண்டாம், எனக்கு அம்மாதான் வேண்டும்

    `அம்மாவிடம் போகலாம் தம்பி, அழாதே, இந்தா பஞ்சு மிட்டாய்.`

    — வேண்டவே வேண்டாம் எனக்கு அம்மாதான் வேண்டும்

    `வா, குடைராட்டினத்தில் மூன்று சுற்று சுற்றலாம்.`

    — ஒண்ணுமே வேணாம், அம்மாதான் எனக்கு வேணும்….`

    இலவசமாகவும், நிறையவும் எதைக் கொடுத்தாலும் எதிலும் விருப்பமின்றி கண்ணில் தெரியாத அம்மா ஒன்றே குறியாகி அழுகிறது குழந்தை. இதைத்தான் ரவீந்திரநாத் தாகூர்,

    நீ வேண்டும்! எனக்கு
    நீதான் வேண்டும்!!

    என்று கீதாஞ்சலியில் இறைவனிடம் பாடுகிறார்.

    அவனிடமிருந்து பெறும் வேறு எதனாலும் நீடித்த இன்பமோ, நிலையான நிம்மதியோ கிடைக்கப்போவதில்லை. இதை நாம் உணரும் வரையில், கோரிக்கைகள் நம் உள்ளத்தில் அலையலையாகப் பெருகிக்கொண்டுதான் இருக்கும். கேட்டுக் கேட்டுப் பெற்றுப் பெற்று, எதிலும் திருப்தி வராமல், எதிலும் சலிப்பே நேரும்போதுதான் நாம் உள்ளே திரும்ப எத்தனிக்கிறோம். அதற்காகவே உள்ளே அவன் காத்திருக்கிறான்.

    நாம் என்ன கேட்டாலும் அளிக்கவல்லவன், எல்லாவற்றுக்கும் மேலான ஒன்றை நமக்கு வழங்குவதற்காகக் காத்திருக்கிறான், நாம் கேட்டால்! விழைந்தால்! அதுதான் வேண்டும் என்று அடம்பிடித்தால்! அதுதான் அவன்! எனவே, தாகூரின் பல்லவியை வாங்கிக்கொண்டு, நாம் இன்னும் இரண்டு வரிகளைச் சேர்த்துக் கொண்டு இப்படிப் பாடலாம்:

    வேறு
    நினைவறியாத
    நிலை விரும்பாத
    மனம் முழுதாக
    மலர்ந்திருக்கும், அந்த

    நீ வேண்டும்! எனக்கு
    நீதான் வேண்டும்!!

    அந்தக் குருட்டு தர்பாரில், அனைவரின் முன்னே அவமானப் படுத்தப்பட்டபோது, பாஞ்சாலி என்ன செய்தாள்? மந்திரங்களை ஜெபித்தாளா? தோத்திரங்களைச் சொன்னாளா? அரற்றினாளா? `கண்ணா! இது உனக்கு நியாயமென்று தோன்றுமானால், எனக்கும் இது சம்மதமே!` என்ற தெளிவில் சரணடைந்தாள். அந்தக் கணமே, ’ தம்பி கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய், அவை வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே!` “நான் கடலில் எறியப்பட்டு, சுறாக்கள் என்னைக் கடித்துக் குதறவேண்டும் என்பதுதான் உன் விருப்பமென்றால் எனக்கது சம்மதமே,` என்னும் மனநிலைதான் சரணாகதி.

    `எது நடந்தாலும், நடக்காது போனாலும், அது இறைவா உன் சித்தம். அது என் நலன் கருதியே, என் நன்மைக்காகவே!` என்றிருப்பதே பக்தன், யோகி, ஞானி அனைவருக்கும் பொதுவான நிலை. அந்த நிலையில் இருந்து அழைத்தவர்களுக்குக் கடவுள் எப்போது கூப்பிடும் தொலைவில் பணிசெய்யக் காத்திருந்தான்!

    `அழைத்தால் வருபவனே ஆண்டவன்,` என்ற ஆந்திர வசனம்தான் எத்தனை உண்மை!

    Share
  • திருமால் திருப்புகழ் (93)

    கிரேசி மோகன்

    Mahavishnu on Anantha and Garuda. Oil and canvas. #Krishnafortoday Keshav
    Mahavishnu on Anantha and Garuda. Oil and canvas. #Krishnafortoday
    Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)…. ————————————————————– ’’கண்ணன் அந்தாதி’’ ———————————–

    Gitamrita: the milk of the Upanishads. Watercolor. #krishnafortoday Keshav
    Gitamrita: the milk of the Upanishads. Watercolor. #krishnafortoday
    Keshav

    அலர்ந்திடும் செந்தா மரையாளுன், மார்பில், கிளர்ந்திடும் சந்தனச் சேற்றில், -விளைந்திட, பாற்கடல் மத்தியில், பாம்பணை மெத்தையில் ஊர்கலி தீர்த்துக்கொள், ஓய்வு….(71) ஓய்!உமக்கு, ஓய்வெடுக்கப் பாய்விரிப்பான்; ஆதிசேடன் சாய்ந்திட, சிம்மா சனமாவான்; -வேய்ந்த, குடையாவான் நின்றிட; காலணியாய்ப் போய்வர; கடனாயுன் வாழ்வைக் கொடு….(72) கொடுப்பதில் கர்ணன், எடுப்பதில் கள்ளன் அடித்துத் திருத்தலில், அன்னை, -மிடுக்குடன், ஆசை தொலைத்தவன், ஆட்டத் துணையாக, வேஷம் கலைத்திடும் விஷ்ணு….(73) விஷ்ணுவின் நாமங்கள், வேண்டும் பலனளிக்கும், உஷ்ண வினையை உருக்கிடும், -கஷ்டதசை, துஷ்டன், நமைக்கண்டு தூர ஒதுங்கிடும், நிஷ்டைக்(கு) இழுத்திடும் நூல்….(74) நூலறியேன், மண்ணளந்த தாளறியேன், மல்லாண்ட தோளறியேன், ஞானவிளக் காளறியேன், -மாலரியே, தேசிகனாய் வந்தெனக்(கு), ஆசை அடங்கவைத்து, ஊசிவாயில், ஒட்டகத்தை ஓட்டு….(75)….கிரேசி மோகன்…. ———————————————————————————————————————- படங்களுக்கு நன்றி: http://kamadenu.blogspot.in/2014_02_01_archive.html

    Share
  • வரைந்த ஓவியமும் வெண்பாவும்!

    கிரேசி மோகன்

     

    அவாவடக்கி சும்மா அமர்ந்த சிவனுக்கு
    சவால்விடு கின்றாள் சிவசக்தி, -குவாகுவாக்கள்(வேழன் +வேலன்)
    கேக்கிறார்கள் என்னை, குடும்பத் தலைவரெங்கே!,
    ஆக்கியசோ றுண்ணா(து) அடம்’’….கிரேசி மோகன்…

     

    crazy

     

     

    Share
  • இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் பள்ளி 100 % தேர்ச்சி

    எஸ்.வி. வேணுகோபாலன்

    குறிச்சி ஐ பி இ ஏ பள்ளி 100 சதவீத தேர்ச்சி !

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குறிச்சி சிற்றூரில் இயங்கி வரும் இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சி சாதனை புரிந்துள்ளனர். மாணவி நிஷா ஸ்ரீ 461 மதிப்பெண்கள் பெற்று முதலாவதாக வந்துள்ளார். ஆயிஷா சித்திகா சமூக அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். தேர்வு எழுதிய 22 மாணவர்களில் 12 பேர் 400 க்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் 13 பேரும், சமூக அறிவியலில் 16 பேரும் 90க்கு அதிகமான மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

    தமிழ் வழி மற்றும் செயல்வழி கல்வி முறையில்இயங்கும் இந்தப் பள்ளியை நடத்தி வரும் ஐ பி இ ஏ கல்வி அறக்கட்டளை தலைமை அறங்காவலரும், இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் சங்க பொதுச் செயலாளருமான கே கிருஷ்ணன், தாளாளர் சோமசுந்தரம் மற்றும் கல்விக் குழு தலைவர் லட்சுமி கோவிந்தராஜன், கல்விக்குழு உறுப்பினர்கள் தி தனபால், மாதவன், அமல்ராஜ், ஜி பாலச்சந்திரன், ரவி ஆகியோரும், தலைமை ஆசிரியை வாசுகி அவர்களும் தேர்ச்சி பெற்ற மாணவர்களை நேரில் சென்று வாழ்த்தினர்.

    சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வரும் மாணவர்களது உயர்வுக்குப் பாடுபடும் அர்ப்பணிப்பு மிக்க பள்ளி ஆசிரியர்களை கல்வி அறக்கட்டளை அறங்காவலர் குழு பாராட்டியது.

    கல்வியாளர் எஸ் எஸ் ராஜகோபாலன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர் பேரா. மணி, குறிச்சி பள்ளியின் வழிகாட்டிகளில் முக்கியமானவரான தோழர் ஜே கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டு செய்தி அறிந்தவர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.

    வழக்கம்போலவே, ஹோமியோபதி மருத்துவ தம்பதியினர் பி வி வெங்கட்ராமன்-ஜெகதா இருவரும் இரவு பத்தரை மணிக்கு எங்கள் வீட்டுக்கு வந்து, பள்ளி மாணவர்கள்-ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லுமாறு கேட்டுக் கொண்டு, ரூ 5000 நன்கொடை வழங்கிவிட்டு விடைபெற்றனர்.

    இந்தப் பள்ளியின் வெற்றிகரமான இயக்கம் இத்தகு அன்பர்கள் பலரது தொடர் பங்களிப்பும், ஊக்க மொழியும், அக்கறையும், கரிசனமும்தான்!

    ***********

    Share
  • மறக்க முடியாத மதுரை – 1

    இசைக்கவி ரமணன்

    மறக்க முடியாத மதுரை – 1

     1284024732863_f

    மதுரைப் பேருந்து நிலையம். அப்போது மாட்டுத் தாவணிக்கு மாறவில்லை. (ஓ! விளக்கவில்லையென்றால் விபரீதமாகிவிடும். மாட்டுத் தாவணி என்பது மேலூர்ச் சாலையில் உள்ள ஓர் இடம். மற்றபடி, விசித்திரங்கள் நிறைந்த மதுரையில் கூட மாடு, தாவணி எல்லாம் போட்டுக் கொள்ளாது. எங்கேயும் எதைப் போடுமோ அதைத்தான் இங்கேயும் போடும்!) சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் என்று சொன்னால்தான் புரியும். நெரிசலின் தலைநகரம் மதுரை என்றால், அந்த பஸ் ஸ்டாண்டு அதை இயக்கும் இதயம். பாம்பு கூட நுழைய முடியாத அந்த நெருக்கடியில், பஸ்ஸெல்லாம் எப்படித்தான் வருமோ செல்லுமோ மீனாட்சிக்கே வெளிச்சம். அதை விளக்க நமக்கு மதுரை மொழியைத்தான் நாட வேண்டும், ‘ஒரே கரச்சல்!’ அதுதான் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட். வேறு விதமாக அதை விளக்கவே முடியாது.

    புகைப்படம் : ரமணன்
    புகைப்படம் : ரமணன்

    கண்ணகி எரித்த கந்தக பூமியின் தாக்கமோ, வருடத்திற்குப் பதின்மூன்று மாதங்கள் துரத்தித் துரத்திக் கொளுத்தும் வெய்யிலின் தாக்குதலோ, பாண்டி நாட்டின் பழைய போர்களின் ஞாபக மிச்சமோ தெரியாது சாமி, மதுரையில் கோபத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இல்லை. எந்தக் காரணமும் இல்லாமல் கோபப்படுவார்கள். கே.பி.சுந்தராம்பாள் எடுத்த எடுப்பிலேயே எட்டுக்கட்டையை எட்டுவதுபோல், முதலிலேயே உச்சத்திற்குப் போய், அப்புறம் தேவைப்பட்டால், கொஞ்சம் இறங்குவார்கள். அப்படி இறங்குவதற்காய் வருத்தப்பட்டு, கோபத்தைப் பெருமூச்சில் விசிறிப் பாதுகாத்து வைத்துக் கொள்வார்கள்.

    ஒரு பேருந்தில் கொத்துக்கொத்தாய் மக்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். புழுக்கத்தில், வியர்வை உறைந்து ஒட்டிக்கொண்டு நகர முடியாமல் நிற்கிறார்கள். துளிகூடச் சத்தமே இல்லை. திடீரென்று, ஒருவன் கூச்சலிட்டது கேட்கிறது. அவன் யாரையோ எதற்கோ தாக்கித் திட்டுகிறான். ஒன்றும் புரியவில்லை. ஒருவன், குடும்பத்தோடு இறங்கினான். மூச்சு விட்டுக் கொண்டார்கள். அவன், குடும்பத்தாரைக் கொஞ்சம் தொலைவில் நிற்குமாறு சொல்லி அவர்கள் கூடவும் வந்தான். அந்தக் கருப்பு முகத்தில் கோபத்தின் சிவப்பை நான் காணவில்லை. அமைதியாகத்தான் தெரிந்தான். அந்தக் குடும்பத்தில் யாரோ ஒரு நபர், ‘வேணாம்ப்பு! வந்த சோலியப் பாத்துகிட்டுப் போயிருவமே,’ என்றார். பதிலுக்கு அவன் முறைத்த முறைப்பில், அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். அந்தக் குடும்பத்தில் பல பெண்கள் இருந்தார்கள். யாரும் அவனைத் தடுக்கவில்லை! அவன், சுறுசுறுப்பாக வந்து, அந்தப் பேருந்தருகே நின்று, ‘எங்கடா அவன்?’ என்றான். அவன் கையில் உள்ளே நடந்த கலாட்டாவில் அடிபட்டிருந்ததால் எண்ணெய் பூசிக்கொண்டு வந்திருந்தான். யாரும் பதில் சொல்லவில்லை. இவன் உள்ளே ஏறினான். இவன் யாரைத் தேடினானோ அவனை கீழே இருந்து நான் பார்க்க முடிந்தது. முகமெல்லாம் பீதி; உள்ளே நுழைந்து அவன் வர வர, மற்றவர்களோடு கலந்து தப்பிவிடலாம் என்ற இவன் நம்பிக்கை கரையக் கரைய, ‘நான் ஒண்ணும் வேணுமின்னு..’ என்று சொல்லி முடிக்குமுன் அவன் அப்படியே இழுக்கப்பட்டு வண்டியை விட்டு வெளியே எறியப்பட்டு, அப்புறம், கொத்துப் பரோட்டாதான்.. கதறல்கள் சினத்தீக்கு நெய்போலும்! ஏதோ ஒரு கணக்கு வைத்திருக்கிறார்கள், அது முடியும் வரை அடிக்கிறார்கள். அடிவாங்குபவன் காயத்துக்கும், இவர்கள் நிறுத்துவதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை! மஞ்சவேட்டி அணிந்து, ஜிப்பாவில், விரல்நுனியில் அருவாளைத் தாங்கி வீதிக்கு வந்துவிட்டால், ‘சோலிய முடிக்காம திரும்பக் கூடாது!’ ஆமா!

    ramananகோபம் போலவே கொண்டாட்டமும் உச்சம்தான் மதுரையில். ஏதோ சின்னப் பண்டிகை என்றால் ஊர்கொள்ளாத கூட்டம் வந்துவிடும். உலகத் தமிழ் மாநாட்டை (1981) வேறெங்கேனும் நடத்தியிருந்தால் அத்தனைக் கூட்டம் வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். சித்திரைத் திருவிழா போன்ற ஒரு மக்கள் திருவிழாவைத் தமிழ்நாட்டில் வேறெங்கும் நான் கண்டதில்லை. கள்ளர்கள் தோல் பையிலிருந்து நீர் பாய்ச்சும்போது கூடக் கோபமாகத்தான் சிரிக்கிறார்கள்! எப்போதும் ஒரு வீச்சரிவா விளிம்பில்தான் இருக்கிறார்கள்! கூடவே ஒரு கத்தி போன்ற நியாய உணர்வும் இருக்கிறது. அதுவும் கூடக் கோபமாகவே வெளிப்படுகிறது.

    தோழர் கண்ணன், நரசிம்மர், இரணியனை நாராய்க் கிழித்துவிட்டு, ‘தம்பி, ஏதோ நடந்தது நடந்திருச்சு; ஒண்ணும் மனசுல வச்சுக்க வேணாம்,’ என்று சொல்வதைப்போல, ‘அதான் மன்னிச்சக்குன்னு சொன்னேன்ல?’ என்று முகமெல்லாம் கண்கொப்பளிக்க, இடி முழுங்க மன்னிப்புக் கேட்பார்.

    இன்னும் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில்தான் இருக்கிறோம்!

    ஒரு சின்னக் கடை. அதிலே ஒரு வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கிறது. ஒருவர் ஏதோ துவாலையோ சோப்போ வாங்க வந்திருக்கிறார். கடைக்காரர் விலையைச் சொன்னதும் கூச்சல் போட ஆரம்பித்து விட்டார். வெளியூர்க்காரர்.

    ‘நான் கேட்டது ஒரு துண்டு எவ்வளவுன்னு? நீ என்ன மூணுக்கு வெல சொல்றியா?’

    – அட, ஒண்ணுதாங்க நான் சொன்னது!

    ‘யோவ்! எல்லாம் எனக்குத் தெரியும்யா! நான் கேட்ட வெலக்குக் குடு!’

    – கட்டுப்படி ஆகாதுங்களே! நீங்க சொல்றது அஞ்சு வருசத்துக்கு முன்ன இருந்த வெல! இப்ப ஏறிப் போச்சுதுங்களே!

    ‘யோவ்! எல்லாம் எனக்குத் தெரியும்யா’ என்று வாக்கியத்தை முடிப்பதற்குள், கடைக்காரர், கடையை விட்டு வெளியே வந்தார். ஆஹா! ஒரே நாளில் இரண்டு கொத்துப்பரோட்டா தரிசனமா என்று யோசிக்கலானார்கள் சுற்றி இருந்தோர். அவரோ, ஒரு ஸ்டூலைப் போட்டு, வாங்க வந்தவரை,

    – வாங்க! இதில உக்காருங்க!’ என்றார்.

    வாங்க வந்தவரோ குழப்பமாகி, ஆனால் உட்கார்ந்து கொண்டு,

    ‘இப்போ எதுக்கு என்ன ஒக்காரச் சொன்னெ?’ என்று கேட்டார்.

    கடைக்காரர், கைகளைக் குறுக்கே கட்டிக் கொண்டு,

    – ஒண்ணுமில்லீங்க! எ..ல்..லா..ம்.. தெரிஞ்ச ஒருத்தர நாங்க இப்பத்தான் மொதமொத பாக்குறோம், அதான்!’ என்றார்.

    மதுரைச் சொல்லுக்கு நிகராகுமா வீச்சரிவாள்?!

    Share
  • திருமால் திருப்புகழ் (92)

     

     

    கிரேசி மோகன்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————
    ’’கண்ணன் அந்தாதி’’
    ———————————–

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    அழகவன் கோலம், அழகவன் ஜாலம்,
    அழகவன் லீலா அபங்கம், -பழக,
    அழகனவன் நட்போ, அலுக்காத கற்பு,
    பொழுதுமவன், பொற்பைப் புணர்….(66)

    புனர்வசுவே, பக்திப் புயல்அனுமர்க்(கு) ஈடாய்,
    உணர்வுக்(கு) உணவாம் உன்னைக், -கணமேனும்,
    தாரகத்தால் தேடும், தவவலிவைத் தந்தருள்வாய்,
    ஏ!ரகு ராமா எனக்கு….(67)

    எனக்கும், உனக்குமிங்(கு) ,ஏற்பட்ட பந்தம்,
    கணக்கு வழக்கில்லை கண்ணா, -பிணக்காய்,
    நடுவந்த மாயையால் ,நாமிருவர் ஆனோம்,
    முடவன்நான், கொம்புத்தேன் நீ….(68)

    நீயாக நானாகும், நாளாம் அதுவரை,
    தீயாய்த் திரியாய்த், தனித்திணைவோம், -சேயாகி,
    வாயார உண்ணவா, தாயாகி ஊட்டவா,
    மாயோனுன் இன்பம் மயர்வு….(69)

    மயர்வறு நெஞ்சம், உயர்வுறு உள்ளம்,
    அயர்விலா ஆற்றல் அளிப்பான், -துயர்வரும்,
    முன்பே வருவான் ,முகுந்தன் முடக்கிட,
    அன்பே சிவமாய் அலர்ந்து….(70)

    ——————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/

     

    Share
  • அன்னை அந்தாதி

    கிரேசி மோகன்

    AnmeDT1305201407

    கட்டளைக் கலித்துறை
    —————————————-
    காப்பு
    ——–images (1)

    துலங்குவெண் நீறு துனிப்பிறை கோடு துணைக்கரங்கள்
    இலங்கரன் பாகம் இடப்புறம் ஏகும் இமையவளின்
    வளம்புகழ் வீரம் வணங்கியந் தாதி யினிலுரைக்க
    களம்புகுந் தானை முகத்தனைக் கொன்றோன் பதமரணே….(1)

    அரனும் அரியும் அயனும் அளிக்க இயன்றிடாத
    வரம்தரும் கற்பக வல்லியின் பாதம் வழுத்திடுவோர்
    நரனாய்ப் பிறந்து நடைபிண வாழ்வில் நலிந்திடாது
    பரணப் பரத்துப் பதவியால் வெல்வர் பிறப்பிறப்பே….(2)

    பிறவா வரம்தரும் மாறிப் பிறந்தால் எமன்கரத்தால்
    இறவா திருந்திடச் செய்யும் இதய குகைதனிலே
    மறவா தெழுந்தரு ளும்பார், மகனே எனவழைத்து
    உறவாம் அபிராமி மாதா உறவிந் துலகினிலே….(3)images (2)

    உலகவள் நெற்றி விழிவந்து காய்ந்த ஒளித்துகளே
    திலகமாய் அங்கு திகழும் பரிதியும் திங்களுமே
    உலவிடும் செவ்வாய் புதன்வ்யாழன் வெள்ளி கிரகமெலாம்
    கலகங்கள் செய்யா கதியென் றவள்பாதம் கொள்ளுமினே….(4)

    கொள்பவள் கற்பகம், வெல்பவள் காளி, கவிபுனையச்
    சொல்பவள் பாரதி, செல்வமகள் லஷ்மி, சேர்த்தணைத்து
    செல்கையில் தாயார், சினந்திட தோப்பனார், நேசமதை
    நல்கிட நண்பன் நலம்தரு தோழியின் நானிலத்தே….(5)

    அவளை நினைத்து அவலை இடித்தால் அவளசையாள்
    அவளைத் துதித்தல் அவளை ஸ்மரித்தல் அவளருளே
    அவளே நமக்குள் அவளாய்த் திளைத்தால் அதுயிகமே
    அவளில் கலந்து அவளாய் முடிந்தால் அதுபரமே….(6)….

    பரசிவ வெள்ளம் பராசக்தி உள்ளம் புரிந்துணர்தல்
    பெறுதவம் ஆகும் பிரபஞ்சம் வந்து பிறந்திறக்கும்4818364
    உறுமவம் நீங்கும் உலகிதன் மாய உருவொழிந்து
    சருவமும் சக்தி உருவெனும் உண்மை வசப்படுமே….(7)

    வசமான சித்தி விஷமாம் அதனை விரும்பிடாதே
    நிசமான கூலி யசமானி அம்மா நிழல்துணையே
    அசலான தெய்வம் அவளுண்டு வேறே அணுக்கமெலாம்
    பசையாகக் கம்பளிப் போர்வையில் ஒட்டும் பிசுபிசுப்பே….(8)
    பிசுபிசுத் தோடும் பிறவிப் பிணிகள் கொசுக்கடியாய்
    தசகத் தலைகள் துணித்தவன் தங்கை திருவடிமுன்
    திசையெட்டு தீவளி அப்புமண் எங்கும் திகழ்பவளை
    வசனித்த பட்டர் அபிராமி அந்தாதி வாழ்த்துமினே….(9)

    வாழ்த்த வயதுண்டு வல்லாள் அவளென்றும் வாலையடா
    பாழ்தவம் பூணும் விரதங்கள், பக்தியே போதுமடா
    நாழ்பட நாழ்பட நம்பிக்கை சேர்த்திடும் நாயகிமுன்
    தாழ்வு உயர்வெலாம் தாயவள் கண்முன் தளசமமே….(10)

    சமமவள் நோக்கு சரியோ தவறோ சரணடைய
    இமையெனக் காத்து இருகரம் நீட்டி இகபரத்தைabiramii
    அமைவுறச் செய்வாள் அபிராமி அன்னை அவளிருக்க
    சமயமாய் வீணே சடங்குகள் செய்தல் சிரிசிரிப்பே….(11)

    சிரித்திட மாதுளை, சம்புமுன் கொவ்வை, சினமடைந்து
    முறைத்திட பாகல், முறுவலில் முல்லை, முனிகணங்கள்
    சிரத்தினில் காய்ந்து சிவப்பழம் ஆகிடும் செவ்விதழை
    தரித்திடும் தாய்முன் தலைவணங் கித்தாள் தொழல்தவமே…(12)

    தவமறியேன் தான தர்ம மறியேன் திருமுறைகள்
    விவரமாய் கூறும் வழிய றியேன்தாள் வணங்கிடுவோர்
    சிவமறியேன் சக்தி வழிபா டறியேன் சலித்திடும்
    அவமறிந்தேன் அம்மா அதனால் வந்தேன் அருள்பெறவே….(13)

    பெறவந்தேன் பேரின்பம் பிச்சி யுனைப்போற்றி பாசுரங்கள்
    அரவிந்த தாதுவை அள்ளும் அளிபோலே அம்பிகையே
    குறவன்தன் பெண்வள்ளி கொண்டவன் கையில்வேல் கொள்ளவன்று
    தரவந்த துள்ளலில் தந்தருள இங்கு வாவுமையே….(14)

    images (3)
    வாயுண்ட தாம்பூலம் சிந்த வரதன் வரகவியாம்
    வாயென்றும் பேசாத மூகனோ வாக்கிற்(கு) அதிபதியாம்
    வாயென்ற பட்டர்க்கு வானத்தில் வந்த வளர்பிறையே
    தாயென்ற போர்வையில் தந்தைக்(கு) இணையான தத்துவமே….(15)

    தத்துவக் கோலுக்குத் தேறா தருகற் பகமவளாம்
    சத்தியம் தர்மங்கள் சார்ந்தோர் சிந்தையிலும் சிக்கவொணா
    பத்தினி பக்தர்தம் பித்துக்(கு) அடிமையாம் பிச்சியவள்
    உத்தமி ஈசர்தம் உடலி டபாகம் உற்றவளே….(16)

     

    படங்களுக்கு நன்றி 

     

    Share
  • பொன் மழையெனத் தா கவிதைகளே!

    கே. ரவி

     

    (23-05-2014 வல்லமை இதழில் “வாணியைச் சரண்புகுந்தேன்” என்ற தலைப்பில் வெளியான இசைக்கவி ரமணனின் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் கவிதையும், சிந்தனையைத் தூண்டும் கட்டுரையும் அற்புதம்.
    1993-ல் என் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இனிய குரலில் பாடி வெளிவந்த ‘தெய்வ கானாம்ருதம்’ இசைப்பேழையில் இடம்பெற்ற என் கலைமகள் கவிதையை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.)

    பூமலர்வது போலுயிரிடை நீமலர்வதனால்goddess-saraswati-learning
    நீமலர்ந்ததும் மனமுழுவதும் தீவளர்வதனால்
    தீமலரென நானழைத்ததும் வாகலைமகளே
    தீச்சுடரிடை தேன்மழையெனத் தாகவிதைகளே
    தீச்சுடரிடை தேன்மழையெனத் தாகவிதைகளே

    நீர்நிலைகளில் மீன்புரள்வது போல்நினைவிடையே
    கார்முகில்களும் தாரகைகளும் தாமுலவிடவே
    வெண்ணிலவென வேயெழுந்திடும் புன்னகையொளியே
    புன்னகையிடை பொன்மழையெனெத் தாகவிதைகளே
    புன்னகையிடை பொன்மழையெனெத் தாகவிதைகளே

    புல்நுனிகளில் வெண்பனித்துளி வந்தமர்வதுபோல்
    என்னுணர்விலும் உன்சதங்கைகள் நின்றசைந்திடுமே
    கண்மணிகளில் விண்மணிகளின் நிழல்விரிவதுபோல்
    உன்சதங்கைக ளில்கவிதைகள் வந்துயிர்த்திடுமே
    உன்சதங்கைக ளில்கவிதைகள் வந்துயிர்த்திடுமே

    15-11-1990
    கே.ரவி

    Share
  • வாணியைச் சரண்புகுந்தேன்

    இசைக்கவி ரமணன்

     goddess_saraswati_seated_on_her_mount_or98

    கற்பூர மேனி இவள் கற்பனை வேணி
    கல்விக்குத் தோணி இவள் கவிதைக்குள் தேனீ
    ஒவ்வொரு சொல்லையும் ஆள்கின்ற ராணி
    உள்ளத்தில் பொங்கிடும் பேரின்பக் கேணி
    ஏழைக்கு ஏணி எங்கள் செந்தமிழ் வாணி!

    உள்ளக் கமலத்தை ஊடுருவி, அங்கு02
    ஊசி முனையொளி யாய்ச் சிரிப்பாள்
    மெள்ள மிக மெள்ள இதழ்கள் விரித்தே
    பேதையை மேதையாய்ச் செய்திடுவாள்
    பள்ளத்தில் வீழ்ந்து தவித்தவனை, வண்ணப்
    பல்லக்கில் ஏற்றி அமர்த்திடுவாள்
    சற்று மிகச் சற்று கர்வங்கொண்டால், அவள்
    சாவற்ற சகதியில் தள்ளிடுவாள்!

    முத்து மழைத்துளி வீழ்கையிலும், நடு
    முற்றத்தில் நிலவொளி சூழ்கையிலும்
    சின்ன ரொம்பச் சின்னச் சத்தத்திலும், அவள்
    வன்னச் சிரிப்பொலி கேட்டிருக்கும்
    கத்துங் கடலினில் காற்றுவந்து, அந்த
    ககனம் நடுங்கிட ஓங்குகையில், அவள்
    காலின் சதங்கைகள் கேட்டிருக்கும், அதில்
    கவிதையின் கர்ச்சனை போட்டியிடும்!

    வாழ்வு தருவது வாணியின் பாதம்
    வந்து பணிந்திடு வாழ்வெலாம் கீதம்
    ஆழ்மனத் துள்ளே அவளடி நாதம்
    அன்பில் விளைவது தானவள் வேதம்
    தோழமை யாய்வரும் தோள்களினை, நம்
    தொல்லைகள் தீர்க்கின்ற தாயிவளை
    பாழில் நன்செய்தரும் பாதத்தினை, நாம்
    பற்றிடுவோம் அருள் பெற்றிடுவோம்! (நவ.11,2012)

    – ரமணன்

     

    `விடையற்ற கேள்விகளின் வெளிச்சப் புள்ளி`
    –கவிஞர் ஹரிகிருஷ்ணன்

    கால மயக்கம்

     

    எது வேத காலம் என்னும் ஏகோபித்த முடிவு இன்னும் ஏற்படவில்லை. பண்டிதர்கள் ஒருவர்க்கொருவர் மாறுபடுவது ஒருபுறம் இருக்கட்டும். ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆராய்ச்சியை அரசியலும், மதங்களும் ஆளும்படி விட்டுவிட்டார்கள். அதனால் அவர்களில் ஒருவர் கூறுவதை இன்னொருவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தொடர்ந்து நிலவும் இந்தப் பெருங்கூச்சலின் நடுவே, நமக்குச் சற்றேனும் தெளிவாகத் தெரியும் தகவல்கள் இருக்கத்தான் செய்கின்றன:

    1. ரிக்வேதம் கி.மு. 1600 ஐச் சேர்ந்தது என்றார்கள். துவாரகையில் மேல்மட்டத்தில் நடந்த ஆராய்ச்சியே அந்தக் கண்டுபிடிப்புகளை கி.மு. 1200 என்று தேதியிட்டது. மொத்தம் ஏழு மட்டங்கள் உள்ளன. அதில், இந்தக் கூற்று, மேல்மட்ட ஆராய்ச்சியால் வந்த கண்டுபிடிப்பு! அப்படியானால், ரிக் வேதத்திற்கும் துவாரகைக்கும் இடைப்பட்ட காலம் 400 ஆண்டுகள்தானா? என்ன பிதற்றல் இது?

    2. மஹாபாரதத்தின் காலம் கி.மு. 2550 லிருந்து கி.மு. 3212 வரை என்று கொள்வதற்கான ஆரய்ச்சி பூர்வமான தகவல்கள் இருக்கின்றன. அப்படியானால், ராமாயணக் காலம்? 3000 ஆண்டுகளேனும் முந்தியிருக்காதா? ராமன், இக்‌ஷுவாகு குலத்தில் 92 ஆவது அரசன் என்று ஒரு கணிப்பும் 62 ஆவது அரசன் என்று ஒரு கணிப்பும் இருக்கிறதென்று கேள்விப்படுகிறோம். அவனுக்குப் பல தலைமுறைகள் முன்பு ஹரிச்சந்திரன் ஆண்டான் என்பதையும் மனதில் கொள்ளவேண்டும். ஹரிச்சந்திரன் காலத்திலேயே, காசி, உலகத்திலேயே மிகப் பழமையான நகரமாகக் கருதப்பட்டிருக்கிறது. எனில் திலீபன் காலம் எது?

    3. ரிஷிகள் சரஸ்வதி நதியின் கரையில்தான் வாழ்ந்தார்கள் என்றும், புவியியல் மாற்றங்களால் அந்த நதி புதையுண்டு போன பிறகு, அவர்கள் சிந்து நதிக்கரைக்குப் புலம் பெயர்ந்தார்கள் என்றும், அதன்பின் கங்கைக் கரைக்கு வந்தார்கள் என்றும் கேள்விப்படுகிறோம். இதில் சிந்து சமவெளி நாகரிகத்தின் காலமெது? உயர்ந்த நாகரிகத்தைக் கடைபிடித்த அந்த மனிதர்கள் என்ன மொழி பேசினார்கள்? தெரியவில்லை. பாண்டங்களில் கிடைத்த சித்திரச் சின்னங்கள் இன்னும் புதிராகவே தொடர்கின்றன.

    4. ஒரு சமூகம், ஒரு குறிப்பிடத்தக்க நாகரிக நிலையை எய்துவதற்கு எத்தனை நூற்றாண்டுகள் பிடித்திருக்க வேண்டும்?

    இவற்றையெல்லாம் மனதில் வைத்துப் பார்க்கும்போது, வேத காலம் என்பது குறைந்தபட்சம் 10,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று நாம் கொள்ளலாம்.

    சரஸ்வதி யார் அல்லது என்ன?

    அவள் நதியா? இல்லை, அறிவின் தாயா? என்ற சர்ச்சையில் இன்னும் பண்டிதர்கள் ஈடுபட்டிருக்க, `அவள் இரண்டும்தான்` என்று என் குருநாதர் சொன்னதால் என்னைப் பொறுத்தமட்டில், அவர் வாக்கே இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி, அல்லது, ஹரி சொன்ன `வெளிச்சப் புள்ளி.`

    ரிக்வேதம் சரஸ்வதியைப் பற்றிப் பாடும் ஸுக்தங்களை மேலோட்டமாகப் பார்த்தால் அவை ஒரு நதியை வர்ணிப்பது போலவும், உள்ளாழ்ந்து பார்த்தால் அவை ஒரு தெய்வ சக்தியைக் குறித்துப் புகழ்வது போலவும் தோன்றுகிறது என்கிறார்கள் பெரியோர்.

    நதியை ஒரு பக்கத்தில் விட்டுவிட்டு, தேவியைப் பார்ப்போம்!

    சரஸ்வதி என்பது சத்தியம் என்னும் செம்பொருளிலிருந்து இறங்கிவரும் ஓர் ஊக்கத்தின் சக்தி. அது மாமுனிகளின் சித்தத்தில் தெளிவான ஞானமாக தரிசனமாகிறது. அந்தத் சித்தத்திலிருந்துதான் வேதக் கவிதைகள் வெளிப்பட்டன. சத்திய தரிசனம் கண்டவனே ரிஷி. ரிஷி என்றாலே காண்பவன் என்று பொருள். ரிஷியே கவி. சத்தியத்தின் வெளிப்பாடே கவிதை. அறியாமையே அனைத்துப் பாவங்களுக்கும் காரணம். ரிஷிகளின் கவிதையே அந்த அறியாமையைக் களையும் மருந்து. ஆம், சத்தியமே, அவித்தைக்கு முறிவு.

    சரஸ்வதி ஆனந்தமான உண்மைகளைத் தூண்டுபவள். (ஸுன்ருதானாம் சோடயித்ரி) சித்தத்தில், சத்தியத்த்தின் முறையான மனனங்களை விழிக்கச் செய்பவள். (சேதந்தி சுமதினாம்) அனைத்து எண்ணங்களையும் அல்லது புத்தியை (திய) ஒளிதிகழச் செய்கிறாள். (விராஜதே)

    ஸுக்தம் குறிப்பிடும் ஸமுத்ரம் கடல் அல்ல, அது இதயத்தில் கொழிக்கும் இறைவெள்ளம். ஆம், ஸமுத்ரத்திற்கு முன் ஹ்ருத வருகிறது. பின்பு, க்ருத அதாவது தெளிவு வருகிறது.

    குறைந்தது இரண்டு விதமாகப் பொருள்கொள்ளும்படி விளங்குகிறது வேதத்தின் பாஷை.

    வாக் தேவி:

    சத்தியத்தைக் கேட்கச் செய்யும் சக்தி சரஸ்வதி. சத்திய ரீங்காரமே ஸ்ருதி எனப்படுகிறது. வாக் என்பது பேச்சல்ல!

    தீயென்றால் காடெரியத் தேனென்றால் பூமகிழ
    வாய்நின்ற பேரருளே வாக்கு

    நாம் பேசுவது பேச்சு. ரிஷிகளின் பேச்சு வாக்கு. `மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்,` என்றான் பாரதி. அது வாக்கு. ஏன்? அது உச்சத்தில் இருக்கும் சத்தியம் என்னும் பிரக்ஞையிலிருந்து வருவது. மாமுனிகளின் மூலம் மந்திரங்களாக வெளிப்படுவது. மகத்தான செயல்களை நொடியில் செய்வது.

    பவபூதி சொல்வதைக் கேட்போம்:

    `எத்தனை நல்ல மனிதர்கள் என்றாலும், அவர்களுடைய பேச்சு என்பது, அவர்கள் மனதில் ஏற்கனவே இருக்கும் எண்ணங்களுக்கு ஏற்பவேதான் இருக்கும். ஆனால், ஒரு முனிவரின் வாக்கு என்பது அவருடைய மனதிலிருந்து வருவதில்லை. அது எல்லாவற்றுக்கும் மேலான சத்திய சித்தம் என்னும் தளத்திலிருந்து நேரடியாக வருவது. அப்படி அது வெளிப்படும்போது, அந்த முனிவரைச் சுற்றியுள்ள சூழல் அல்லது உலகத்தையே மாற்றவல்ல ஆக்கசக்தி வாய்ந்ததாக அது விளங்குகிறது. அது அறியாமையை அழிக்கவல்லது.“

    இதையே ஸ்ரீ அரவிந்தர் வாயிலாகக் கேட்போம்:

    `சத்தியம் என்பது நம்மை ஒளியாய், அல்லது ஒளியின் குரலாய் வந்தடைகிறது. அது நம் புத்தியில் ஒரு மாறுதலை நிகழ்த்துகிறது. நம்மிலும் நம்மைச் சுற்றிலும் ஒரு தெளிவை வலிந்து வழங்குகிறது. எண்ணத்தில் நின்ற சத்தியம், காட்சியாய் விரிகிறது. அந்த சத்திய தரிசனம் ஆன்ம சத்தியமாய் நிலைபெறுகிறது. அதுவே உணர்ச்சி, புத்தி, செயல் யாவற்றையும் சத்தியத்தின் புறப்பாடாகவே ஆக்கிவிடுகிறது. இதுவே வேதத்தின் ஜீவக் கோட்பாடு.“

    சரஸ்வதீ ஸுக்தம் (இலா, சரஸ்வதி, பாரதி:)

    சரஸ்வதி என்னும்போது, ரிக்வேதம் இலா, சரஸ்வதி, பாரதி என்னும் மூன்று தெய்வங்களைச் சேர்த்தே கொண்டாடிப் போற்றுகிறது. மஹி என்னும் பெயரும் உண்டு. மஹியும் பாரதியும் ஒன்று என்பர் பெரியோர். மனுவின் பிள்ளை இல பெண்ணாகி இலாவானான் என்று புராணக் கதை ஒன்று உண்டு. ஆனால், இந்த மூன்று தெய்வங்கள், சத்திய வேள்வியில் ஈடுபட்டிருப்பவனுக்கு பார்வை, கேட்டல், மற்றும் விரிவு மூன்றையும் வழங்குகின்றனர். பாரதி என்பவள் அகண்ட பிரகாசம். இலா, அவ்வொளியின் அகண்டத்திற்கு ஏற்பவே, அதைச் சித்தத்தில் ஒளியாக்கித் தருபவள். ஊக்கத்தைத் தரித்தவளான சரஸ்வதி, அந்த ஒளியை, அதாவது சத்தியத்தைக் கேட்கச் செய்கிறாள்! இந்த சக்திகளெல்லாம் பார்க்கக் கூடிய வடிவில் தெரிபவை!

    0001Saraswathi_maa_Godess (1)

    மங்கலமான சத்தியங்கள் மண்டிக் கிடப்பவள்
    மனதில் ஆனந்த எண்ணங்களை விழிப்புறச் செய்பவள்
    அந்த சரஸ்வதி இந்த வேள்வியை ஏற்கட்டும்!

    (சோதயித்ரி ஸுந்ருதானாம் சேதந்தி ஸுமதீநாம்
    யக்ஞம் ததே ஸரஸ்வதீ! 1:3:11)

    சித்தத்தில் தரிசனத்தைச் சிந்திக்கும் வண்ணம் நிகழவைத்து
    சத்தியமாம் பெருவெள்ளத்தை விழிப்புறச் செய்பவள் சரஸ்வதி
    அத்தனை எண்ணங்களையும் ஒளியுறச் செய்கிறாள்1

    (மஹோஅர்ண: ஸரஸ்வதீ ப்ரசேத்யதி கேதுனா
    தியோ விஸ்வா விராஜதி 1:3:12)

    தூய்மை நல்குபவள் சரஸ்வதி. நிறைவால் நிறைந்திருப்பவள். சித்தத்தில் ஞானமாய்ச் செழித்திருப்பவள். நம் வேள்வியை ஏற்பளாக!

    (பாவகா ந: ஸரஸ்வதீ வாஜேபிர் வாஜினீவதீ
    யக்ஞம் வஷ்டு தியாவசு: 1;3:10)

    நிறைவால் நிறைந்திருப்பவள். செழுமையின் ஆற்றல் மிகுந்தவள், சித்தத்தில் ஞானத்தைப் பாதுகாப்பவள், எங்களைக் காப்பாற்றட்டும்!

    (ப்ரணோ தேவீ ஸரஸ்வதீ வாஜேபிர் வாஜினீவதீ
    தீனாம் அவித்ரி அவது 6:61:4)
    வாக் ஸுக்தம் : ரிக்வேதம் 10:125

    இந்த ஸுக்தம், வாக் என்னும் பெண் ரிஷியின் மூலம் வெளிப்பட்டது. வேதத்தில் குறைந்தது 25 பெண் ரிஷிகளைக் காணலாம். அவர்களுள், வாக் என்னும் ரிஷி சிறப்புக்குரியவர். ஸ்ரீ ஸுக்தம் அவர்மூலம்தான் வெளிப்பட்டிருக்கிறது. அதில் அவரே பராசக்தியாக வெளிப்பட்ட அபூர்வ இடம் உண்டு. `ஷுத்பிபாசா மலாம்ஜ்யேஷ்டாம் அலக்‌ஷ்மி நாசயாமி அஹம். `பசி தாகம் போன்ற முன்னர் தோன்றிய அசுத்தங்களை, துர்பாக்கியங்களை நான் விரட்டியடிக்கிறேன்` என்று அம்பிகையே மொழிகிறாள்! அதே ரிக்கின் அடுத்த வரி அம்பிகையை இறைஞ்சுவதாக அமைந்திருக்கிறது!

    அந்த வாக் ரிஷியின் மூலம்தான் இந்த வாக் ஸுக்தமும் வெளிப்பட்டது.

    வாக் என்பது பேச்சல்ல என்று ஏற்கனவே பார்த்தோம். அது சத்தியத்தின் இதயத்திலிருந்து வருகின்ற ஊக்கம். அண்டம் முழுதும் படைப்பில் நீக்கமற நிறைந்திருக்கும் ஆர்வம். அறிவின் ஆக்கத்தின் ஊற்று.

    எனவே. ஸுக்தம், `நான் ருத்திரர்கள், வசுக்கள், ஆதித்யர்கள், மித்ரன், வருணன், இந்திரன், அக்னி, அஸ்வினி தேவர்கள் இவர்களுடன் நடக்கிறேன், தாங்குகிறேன்,` என்னும் போது வாக் என்பதன் பொருள், பெரும் பிரமிப்பில் நம்மை ஆழ்த்துகிறது.

    `உயிர்கள் உண்பதும், காண்பதும், கேட்பதும், ஏன், சுவாசிப்பதும் என்னுடைய சக்தியால். சித்தத்தை என்பால் வைக்காதவர்கள் சிதைவுறுகிறார்கள். யாரை விரும்புகிறேனோ, அவனை வலிவுடையோன் ஆக்குகிறேன். அவனை ரிஷியாய் ஆக்கி, ஞானத்தைத் தந்து, பிரம்மத்தில் நிலைபெறச் செய்கிறேன்.

    ஒரு பெண்மூலம், இந்த மகாசக்தி பேச்சாகவும் வெளிப்பட்டிருக்கிறது என்பது நம்மை வாய்புதைக்க வைக்கிறது.

    மேதா ஸுக்தம்

    `நீ வருவதற்கு முன்னர், வருத்தம் தரும் பேச்சுக்களில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். எங்களை மகிழ்ச்சியுடன் அணுகும் அறிவின் தேவியே வருக! மங்கலமானவளே, மென்மனம் கொண்டவளே, எங்கும் நிறைந்திருப்பவளே வருக! நின் வருகையால், நாங்கள் ஒளி பெற்று, பரம சத்தியத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தும் வல்லமை பெறுவோமாக!` என்றே துவங்கும் இந்த ஸுக்தம் எதைப்பற்றிப் பேசுகிறது என்பதை விளங்கிக் கொள்வது சிரமமாக இல்லை. அறிவார்ந்த உணர்வே மேதா. Conscious awareness! Conscious intelligence!

    `தேவியே! நின்னருள் பெற்றோர் ரிஷியாகலாம். செல்வங்கள் யாவும் பெறலாம். பிரம்ம ஞானம் எய்தலாம். பலவிதமாய்ப் பல்கும் ஐஸ்வரியங்களைப் பெறலாம். எம்மீது மகிழ்ச்சி கொண்டு, அறிவோடு கூடிய செல்வங்களையே அளிப்பாயாக! சரஸ்வதி தேவியின் அறிவு, என்னுள் அருளப்படட்டும்!`

    இவள்தான் வாணி!

    இவள் அறிவுத் தெய்வமல்ல, அறிவின் தெய்வம்! இவளுடைய நாதத்திலிருந்தே படைப்பு. சொல்லப்போனால், இவளுடைய வாக்கே இந்த சிருஷ்டி. எனவே, இவள் தேவதையல்ல, இவளுக்கு மேல் இன்னொரு சக்தி இல்லையென்னும்படி இருக்கின்ற பராசக்தியே இவள்.

    இந்த வாணியைத்தான் பாரதி சரண்புகுந்தான். அதனாலேயே அவனில் பாரதி பூரணமாய்க் குடிகொண்டாள். வேதங்களை நேரடியாகப் பயின்றவன் பாரதி. எனவே, அவன், ஒரு தெய்வத்தைப் பற்றிப் பாடினால் அதில் வேதத்தின் சொற்கள், வேதத்தின் பொருள், வேதத்தின் கொள்கை இவை காணப்படுவதில் வியப்பில்லை. சரஸ்வதியைப் பற்றிய, மேற்குறிப்பிட்ட விளக்கங்களை மனதில் வைத்துக்கொண்டு, பாரதியின்,

    ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் – அதை
    அன்னை எனப்பணிதல் ஆக்கம்!

    என்னும் வரிகளை நோக்கும்போது நமக்கு மெய் சிலிர்க்கிறது!

    ..நாதமோ டெப்பொழுதும் –என்றன்
    நாவினிலே பொழிந்திட வேண்டும்…

    கண்மணி போன்றவரே
    அண்மையில் இருந்திடுவீர் – இனி
    அடியனைப் பிரிந்திடல் ஆற்றுவனோ!

    என்று அவன் பாடிய பாடல் ஸரஸ்வதி ஸ்தோத்திரம் எனப்படுகிறது. ஆனால் இது வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, பாரதி, ஸரஸ்வதி, மஹி, வாக் எல்லோரையும் ஒருங்கே சேர்த்துத் துதிப்பது போலவே இருக்கிறது.

    உள்ளதாம் பொருள் தேடியுணர்ந்தே
    ஓதும் வேதத்தின் உள்நின்று ஒளிர்வாள்
    கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
    கருணை வாசகத் துட்பொருளாவாள்

    என்னும் வரிகள் ரிக் வேத விளக்கமாகவே தெரிகின்றன.

    வஞ்சமற்ற தொழில்புரிந்துண்டு
    வாழும் மாந்தர் குலதெய்வமாவாள்
    வெஞ்சமர்க் குயிராகிய கொல்லர்
    வித்தை யோர்ந்திரு சிற்பியர் தச்சர்
    மிஞ்சநற்பொருள் வாணிகஞ் செய்வோர்
    வீர மன்னர், பின் வேதியர் யாரும்
    தஞ்சமென்று வணங்கிடுந் தெய்வம்
    தரணி மீதறி வாகிய தெய்வம்..

    இதுவும் வேதக் கொள்கையே! ஸரஸ்வதியைத் தொழில்களோடு இணைத்துப் பார்க்கும் தரிசனம் ஸ்ரீ அரவிந்தருடையது. அவர்தான் பாரதியின் நண்பராயிற்றே! அவர்கள் இதைப் பற்றி விவாதித்திருக்கலாம்.

    வாணி யார்? இதோ பதில்:

    வாணி கலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
    ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
    காணுகின்ற காட்சியதாய்க் காண்பதெல்லாங் காட்டுவதாய்
    மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே தொழுவோமே!

    அறிவுமுத்து மாலையினாள் என்னும் சொற்றொடர் சிந்திக்கத் தக்கது. சனாதன தர்மத்தில் அறிவைப் பேணும் வழக்கம் உண்டே தவிர, அறிவைத் தொழும் வழக்கம் இல்லை. அப்படிச் செய்தல் அறியாமை என்று நம் முன்னோர்களின் முடிவு. ஓர் உபநிடதம் சற்றுக் கடுமையாகவே சொல்கிறது, `அறிவை மதியாதவன் முட்டாள். அறிவை வணங்குபவன் அடிமுட்டாள்,` என்று. ஏன்? அறிவு, ஒரு கருவியாக மட்டுமே இருக்க வேண்டும். அதை நாம் ஆள வேண்டும். கருவியை எஜமானனாக்கித்தான் வேதத் திருவிழியாளுக்கு, மிக்க பல்லுரையெனும் கருமை யிட்டார்கள் பண்டிதர்கள். அது நம்மை ஆண்டால், நாம் ஆணவத்தின் வசம் இருக்கிறோம் என்றே பொருள். எனில், நம் அறிவு கனியாது, தெளிவடையாது. வேதத்தின் உட்பொருள் காணாது. பேச்சோடு நின்றுவிடும். வாக்கு வராது. இதைத்தான், என்னென்னவெல்லாம் அறிவுகளோ அதை முத்துமாலைகளாக்கி அணிந்திருக்கிறாள் வாணி என்கிறான் பாரதி. பாரதியின் இந்தப் பார்வை அவன் எவ்வளவு உயரமானவன் என்று நமக்குக் காட்டுகிறது.

    அந்த தேவியைச் சிறுவயதில் நேரிலும் கண்டவனாதலின் அவன் அவள் மேல் காதலே கொண்டு `பகற் பேச்சும் இரவிற் கனவும் அவளிடை வைத்த நினைவையல்லால் பிற வாஞ்சையுண்டோ?` என்று கலைமகளிடம் காதல் வயப்பட்டதை வர்ணிக்கிறான்.

    மஹா காளியின் புகழ் பாடப் புகுந்தவன்,

    வேதமாய் அதன்முன்னுள்ள நாதமாய் விளங்குமிந்த
    வீரசக்தி வெள்ளம் விழும் பள்ளம் – ஆக
    வேண்டுநித்தம் என்றன் ஏழை உள்ளம்

    என்று வாணியைத்தானே பார்த்துப் பாடுகிறான்!

    ஒரு கணம்கூட, தான் பேசக் கூடாது. தனது எண்ணம் என்ற ஒன்றிருந்து அது எத்தனை சிறப்பானதாக இருந்தாலும் அது சொல்லாக வெளிப்படுவதில் பாரதிக்கு சம்மதமில்லை. அவளுடைய வாக்கே இவனது நாவினின்று வெளிப்பட வேண்டும் என்பதே அவன் தவம்:

    வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு ளாக விளங்கிடுவாள்
    தெள்ளுகலைத்தமிழ் வாணி நினக்கொருவிண்ணப்பஞ் செய்திடுவேன்
    எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி இராதென்றன் நாவினிலே
    வெள்ளமெனப் பொழிவாய் சக்தி வேல் சக்திவேல் சக்திவேல்!

    அவள் வெளிப்பட்டால்தான், வேதக்கருப்பொருள் தன்னைப் புறந்தள்ளி வெளிப்பட்டால்தான் அது கவிதை, மந்திரச் சொல், வாழ்ந்த பயன். அல்லவெனில், `நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெடப் புழுதியில்` எறிந்த கதைதான்.

    ஓர் அரிய அக அனுபவத்தை வைக்கிறான், பராசக்தி என்ற கவிதையில். எல்லாமாகி இருப்பவள் பராசக்தி. அவளே கதையும் கவிதையும் சித்திரமும் சிற்பமும் நாடகமுமாய்ப் பல்கும்போது வாணியாகிறாள். காவியம் பாடென்கிறாள் வாணி. தன் கால்களைத் தவிர வேறெதையும் நினைக்காதே என்கிறாள் பராசக்தி. அல்லாடுகிறது மன்றாடும் கவிஞனின் மனம். (கவிதை..)

    இந்த அற்புதக் கவிதையில்,

    சொல்லினுக் கெளிதாக நின்றிடாள்
    சொல்லை வேறிடம் சொல்ல வழிவிடாள்

    என்னும் வரிகள் பராசக்தி, வாணி இருவருக்குமே கச்சிதமாகப் பொருந்தும்! அவர் இருவரல்லவே!

    சரி, வாணியைப் பற்றி இவ்வளவு சேதிகளைத் தெரிந்துகொண்டோம். பாரதிக்கும் பாரதிக்கும் உள்ள பரவசமான பந்தத்தைக் கண்டோம். நமக்கும் வாணியருள் வேண்டுமென்று தோன்றுகிறது. அவளிடம் எதை எப்படிக் கேட்க? கவலையே வேண்டாம், பாரதியின் இந்தப் பாடலைச் சொன்னால் போதும்:

    தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல்
    சிந்திப்பார்க்கே
    களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல்
    கண்ணீர்த்
    துளிவர உள்ளுருக்குதல், இங்கிவையெல்லாம் நீயருளும்
    தொழில்களன்றோ!
    ஒளிவளரும் தமிழ்வாணி அடியனேற் கிவையனைத்தும்
    உதவுவாயே!

    இந்தப் பாட்டை, பாஞ்சாலி சபதத்தில் சூதாட்டச் சருக்கத்திற்குக் கடவுள் வாழ்த்தாக வைத்தான்! அறியாமையின் சூதிலிருந்து நம் ஆன்மா தப்பி, அகண்டப் பிரகாசமாகத் திகழவேண்டுமானால், அவளே கதி!

    இறுதியாக, தன்னுடைய ஸரஸ்வதி வணக்கம் என்னும் பாட்டில், வாணிக்கு அழகான வடிவம் தந்து அவளைச் சரணெய்துகிறான்:

    வெள்ளைக் கமலத்திலே – அவள்saraswati-goddess-of-music-CJ28_l
    வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள்
    கொள்ளைக் கனியிசைதான் – நன்கு
    கொட்டுநல் யாழிசை கொண்டிருப்பாள்
    கள்ளைக் கடலமுதை – நிகர்
    கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொலவே
    பிள்ளைப் பருவத்திலே – எனைப்
    பேணவந்தாள் அருள் பூணவந்தாள்!

    அவள் வீற்ற இடம், உள்ளமாகிய வெள்ளைக் கமலம். வெள்ளை என்னும் சொல்லுக்குத் தூய்மை என்பது மட்டும் பொருளல்ல. அறிவின்மை என்றும் பொருளுண்டு! வெள்ளந்தி என்று சொல்வதில்லையா, அதுதான்! மேலு, எந்த நிறத்தின் சாயலையும் ஏற்காத தன்மை என்றும் பொருளுண்டு. அறிவை வைத்துக்கொண்டு அவளை அணுக முடியாது! நான் ஒன்றுமே இல்லை, எனக்கு ஒன்றுமே தெரியாது என்பது பணிவு. தெரியும், தெரியாது என்னும் சிந்தனைகளே இல்லாமல், ஒரு சின்னக் குழந்தையின் வெகுளித் தன்மையோடு வளையவருவதுதான் கள்ளமற்ற உள்ளமாகிய வெள்ளைக் கமலம்! தஞ்சம் விழைகிறேன், சரணம் எய்தவேண்டும் என்னும் நினைப்பும் இல்லாமல் தாயென்னும் கடலைச் சேரத் தாவிவரும் நதியைப்போல் இருப்பதுதான் அவன் சொல்லும் பிள்ளைப் பருவம்!

    அப்படிப்பட்ட உள்ளத்தில்தான் அவள், அவளாகவே வந்து வீற்றிருப்பாள். அதுதான் அவளுக்கு உகந்த இடம். அதுதான் அவளுக்குத் தக்க ஆசனம். எனவே, தனது தகுதிக்கேற்ற இடத்தில் தான் அமர்ந்திருக்கும்போது இசைக்கப்படும் புகழை அவள் ஏற்றிருப்பாள்!

    கனி என்பது, கொள்ளையடிக்கத் தூண்டுவது. அவளுடைய கனியிசையோ நம் இதயங்களைக் கொள்ளையடிப்பது!

    அவளுக்கு இந்தப் பிள்ளையின் வெள்ளை உள்ளத்தில் என்ன வேலை? இப்படிப்பட்ட பிள்ளையைத்தான் அவள் தேடிக்கொண்டிருந்தாள்.

    எதற்கு? கவிதை என்னும் வரத்தை அருளுவதற்கு!

    ஏன்? எனக்கு இது தெரியும், அதுதான் தெரியாது என்னும் நினைப்புக்கள், பேதங்கள் இல்லாத பிள்ளை உள்ளம்தான் தான் வழங்கும் கவிதைக்கு ஏற்ற உள்ளம்.

    எப்படிப்பட்ட கவிதையாம்? கள்ளை நிகர்த்தது – மயக்கமே வடிவாய் இருப்பது, மையலைத் தருவது, பழகப் பழகப் பெருமை கூடுவது! கடல் அமுதை நிகர்த்தது – சாகரத்தின் சாறு! உயிரின் இதயம்! அடர்த்தி, திரட்சி!

    கவிதை அமரவிதை. அதைப் பயில்வதற்குத் தேவை அசுர சாதகம்! எனவே, ஏற்ற இடத்தில் வீற்றிருந்து, புகழை ஏற்றபடி இசைத்துக்கொண்டிருக்கிறாள் வாணி.

    வேதத் திருவிழியாள் – அதில்goddess-saraswati-ma-big
    மிக்கபல்லுரை யெனும் கருமையிட்டாள்
    சீதக் கதிர்மதியே – நுதல்
    சிந்தனையே குழலென்றுடையாள்
    வாதத் தருக்கமெனும் – செவி
    வாய்ந்த நற்றுணிவெனும் தோடணிந்தாள்
    போதமென் நாசியினள் – நலம்
    பொங்குபல் சாத்திர வாயுடையாள்

    வியாக்கியானங்களால் தொலைந்து போனது வீதியில் வளையவந்த சத்தியம். ஆயிரம் ஆண்டுகளாக எத்தனை புத்தகங்கள், கட்சிகள், பிரிவுகள், சண்டைகள்! ’இதோ சத்தியம்!’ என்ற பரவச அனுபவத்தின் வெளிப்பாடு வேதம். அனுபவம் இல்லாதது வியாக்கியானம். “Experience has no language and language has no experience,” என்பார் என் குருநாதர். விளக்கம் என்பது விகாரப்படுத்தும் அபாயம் உள்ளது; மேலும் தோதாய் இருப்பதற்குப் பதிலாக ஊறு விளைவிக்கும் தன்மையுடையது என்று பாரதியே குறிப்பு எழுதுகிறான்.

    எனவே வேதங்களே விழிகள். அதுவும் கருவிழிகள். விழிகள் கருமை. வேதம் என்னும் அறிவு தரும் வெளிச்சம் வெண்மை!

    நெற்றி எப்போதும் குளிர்ச்சியாக இருக்குமாம் வாணிக்கு. கவலைச் சூடு ஞானத்தின் தாய்க்கு ஏது?! எந்த இரவானாலும் தனது தண்மை மாறாத சந்திரனே நெற்றி – சீதக் கதிர்மதி – என்கிறான். அதென்ன கதிர் மதி? நிலவின் அமுதக் கிரணங்கள் என்று பொருள் கொள்ளலாம். அதைவிடவும் சிறப்பாக இன்னொன்று சொல்லலாம். கதிரவனின் கொடைதானே மதியின் ஒளி? எப்போதும் வெப்பமாக இருக்கும் கதிரவனின் கொடை, எப்போதும் குளுமையாகவே இருக்கும் சந்திரன்! ஆஹா! சிந்தனைமயமானது அறிவு. தெளிவுமயமானது ஞானம்! கேள்விகள் ஓய்வைத் தராது என்றாலும் கேள்விகள் இல்லாமல் உள்ளேயே வீற்றிருக்கும் ஒய்யாரமான ஓய்வை நாடுகின்ற நாட்டம் எப்படி வரும்?

    ஞானம் ஞானமாய், வளர்ச்சியும், மாறுதலும், தேய்தலும் இல்லாமல் தானாய்த் தானிருக்க, மானுடர்க்கும், மற்றைய உயிரினங்களுக்கும் அவரவர் நிலைக்கு ஏற்பப் புரியும்படி அதை இறக்கி வழங்க வேண்டுமே! அதுதான் சிந்தனைக் கூந்தல்! நேர்த்தியான கூந்தல் எப்படி இருக்கும்? கரிய அருவியாய், கற்றை கற்றையாய் இருக்கிறது அவள் கூந்தல். ஒவ்வோர் இழையும் தனித்தனியாய், ஒட்டுமொத்தமான சேர்க்கையாய், உறுதியாய், நெகிழ்வாய், இன்பமே இயல்பாய், சுவாரசியமான சுருள்கள் கொண்டதாய்! சிந்தனையும் அப்படி இருக்கவேண்டும்.

    அனுபவத்தை நோக்கிய பிரயத்தனம் நமது சிந்தனை. அனுபூதியாக இறங்கி வருவது அவளுடைய சிந்தனை!

    வாதம், தருக்கம் என்னும் இரண்டு செவிகள். அதில் நல்ல துணிவென்னும் தோடு! வாதம் என்பது உரையாடல், discussion. தருக்கம் என்பது நியாயமாகப் படிப்படியாகப் பேசுதல், logic. ஒன்றில்லாமல் ஒன்றில்லை. இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா? என்பார் கண்ணதாசன். இரண்டு செவிகள் இரண்டு விதமாய்க் கேட்கக் கூடாது! உரையாடல், அதாவது வாதம் என்பது உண்மையை அறியவே! எனவே அது நியாயமாக இருக்கவேண்டும். பாரபட்சமின்றி இருப்பதே நியாயம்! வாதம் உண்மையை அறிவதற்காக! தருக்கம், தாவி ஒரு முடிவுக்குப் பிடிவாதமாக வராமல், அந்த உண்மையைப் படிப்படியாக அறிவதற்காக!

    சரி, வாதமும் தருக்கமும் வாயால் நிகழும் செயல்கள். அவற்றை ஏன் வாணியின் செவிகளாக்கினான்? வாதிப்பதிலும் தருக்கிப்பதிலும் இருக்கும் ஆர்வத்தைக் காட்டிலும், உண்மையைக் கேட்பதில்தான் கூடுதல் ஆர்வம் இருக்கவேண்டும்! அவளுடைய செவிகளே அழகான செவிகள். கச்சிதமான இணை பொருந்திய செவிகள். ஏனென்றால், அவளே வாதம், தருக்கம் இவற்றின் இலக்கான உண்மை. அதுவே அவளுடைய ஞானமாகிய வீணையின் இசை. அதை அவளே கேட்டுக்கொண்டிருக்கிறாள்! எப்படி, படைப்பின் கதையை, கணபதியின் பரந்த காதுகள் கேட்டுக்கொண்டிருக்குமோ அப்படி!

    அறிவாய் விரிந்த விழிகள் வேதம்; தெளிவாய்க் குளிர்ந்த மதியே நெற்றி; மற்றவர் தழைத்து ஓங்க, தான் தழைத்து இறங்கும் சிந்தனையே கூந்தல்; ஞானமென்னும் கொள்ளைக் கனியிசை; வீற்றிருக்க வெள்ளை உள்ளம்; அந்த இசையைக் கேட்டுக்கொண்டிருக்க சீரான இரு செவிகள்!

    துணிவென்னும் தோடு? சிந்திக்கவும், பேசவும் துணிவு வேண்டும்! அந்தத் துணிவைப் படிப்போ, பணமோ, பதவியோ, அழகோ, திறமைகளோ தராது! உண்மைதான் தரும்! உண்மையை அறிவது முடிவு. உண்மையை அறிந்தே தீருவேன் என்னும் ஆர்வமே துணிவு! இது ஆயுதத் துணிவு அல்ல! அழகான அணிகலத் துணிவு!

    வாணிக்கு, நமது கல்வியைக் காட்டிலும், உண்மையை அறியவேண்டும் என்னும் ஆர்வமே இன்பம் தரும். எனவே, உண்மையைத் துணியத் துணிவோமாக!

    வாயால் வெளிப்படுவதல்லவா போதம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்! இவன், நாசி என்கிறானே! போதம் என்பது வார்த்தையில் வருவதில்லை. அதற்கு அப்பாற்பட்டது. மெளனத்தின் முரசு அது. உயிருக்கு உயிரானது அது. எனவெ அது சுவாசத்தின் வழியே வருவது! ஞானம் என்பது சுவாசமாக வேண்டும்! அப்படிச் செய்வதுதான் போதம்! அது பேச்சில் வராது. சர்ச்சைக்குரிய, பாரதி ”சங்கையில்லாதன சங்கையாம்” என்று குறிப்பிடும் சாத்திரங்களே வாய் மூலம் வெளிப்படுவன என்பதனால் சாத்திர வாயுடையாள்!

    கற்பனைத் தேனிதழாள் – சுவைக்aras1
    காவிய மெனுமணிக் கொங்கையினாள்
    சிற்பமுதற் கலைகள் – பல
    தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப்பாள்
    சொற்படு நயமறிவார் – இசை
    தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறிவார்
    விற்பனத் தமிழ்ப்புலவோர் – அந்த
    மேலவர் நாவெனும் மலர்ப்பதத்தாள்!

    இதழில் தேன் என்பது பருகுவோரின் கற்பனைதானே! ”பாலொடு தேன்கலந்தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்” என்பாரே திருவள்ளுவர்! காதலில் கற்பனை அனுபவம்; அனுபவம் கற்பனை அன்று! இதழில் தேன் என்னும் கற்பனை, பருகப் பருகப் பெருகும் அனுபவம்!

    இங்கே வாணியே அனுபவங்களுக்கெல்லாம் அனுபவம். அறியாமையில் உழலும் நமக்கோ அது வெறும் கற்பனைதான். ஆனால், அந்தக் கற்பனையும் அவளுடைய கொடைதான் அல்லவா? அவள்தான் தன்னைப் பற்றிய கற்பனையை நமக்குத் தருகிறாள்! தேனொழுக்காக!

    ”ஏந்திள முலை” என்பார் இளங்கோ. மணிக்கொங்கை என்கிறான் பாரதி. முத்திரை போன்ற மகுடம் தரித்த கொங்கை. வனப்பு, திரட்சி, உறுதி, மிருதுத்தன்மை எல்லாம் சேர்ந்தது! காவியம் என்றால் அப்படி இருக்க வேண்டும்!

    கலைகளே அவளது கரங்கள்! கலைகள் என்னும் கரங்கள் மூலம் அவள் நம்மை அள்ளிக்கொள்கிறாள்; ஆதரிக்கிறாள்! கடுந்தவம் புரிந்து அடைவதைக் காட்டிலும் கலைகள் மூலம் இறையை அடைதல் எளிதென்பதைக் காட்டுகிறாள். அவள், கலை வாணியன்றோ!

    வெள்ளையான உள்ளக் கமலம் அவளுடைய உறைவிடம்; வேதமே விழிகள்; தண்மை மதியமே நெற்றி; வாதமும் தருக்கமுமே செவிகள்; துணிவே தோடு; போத நாசி; சாத்திர வாய்; கற்பனைத் தேனின் ஊற்றே இதழ்; காவியக் கொங்கை; கலைகள் கரங்கள்.

    சரி, பாதம்? அது எதுவாம்? எங்காம்?

    சொல்லின் நயமறிந்தவர்கள்; அது இசையோடு தோய்வதால் வரும் சுவையறிந்தவர்கள்; கற்பனைக்கு அப்பாலிருக்கும் ஓர் உந்துசக்தியின் விவரங்கள் அறிந்த விற்பன்னர்கள்; சுருங்கச் சொன்னால் தமிழ்க் கவிஞர்கள். அவர்களுடைய நாவிலே இவள் பாதமாம்! இல்லை இல்லை, அவர்களுடைய நாவே இவள் பாதமாம்!

    வாணியைச் சரண்புகுந்தேன் – அருள்
    வாக்களிப் பாளெனத் திடம்மிகுந்தேன்
    பேணிய பெருந்தவத்தாள் – நிலம்
    பெயரளவும் பெயர் பெயராதாள்!

    அப்படிப்பட்ட வாணியை நான் சரணடைகிறேன்! தீயென்றால் காடெரிய, தேனென்றால் பூமகிழ, வாய்நின்ற பேரருளே வாக்கு என்பேன் யான். அந்த வார்த்தைக்கு அப்பாலிருக்கும் மந்திரச் சொல்லின் மூலமான அருள் வாக்கை அவள் எனக்குக் கட்டாயம் அளித்தே தீருவாள் என்று நம்புகிறேன்.

    10177944_10152066284717919_2650350124425779658_nநம்புகிறவனுக்கு ஐயங்கள் இருக்கக் கூடாது. சரணம் எய்திய பிறகு கவலை இருக்கவே கூடாது. நான் கேட்பேன் அவள் தருவாள். இது நம்பிக்கை. எனக்குத் தரவே அவள் என்னைப் பணியவைத்தாள். இது சரணாகதி. “In faith there is distance; in surrenderthere is none. In faith, there is you and Him; in surrender, you jump into Him,” என்பார் குருநாதர்.

    உலகம் இருக்கும் வரைக்கும் அவளுடைய பெயர் இருக்கும். அவளுடைய பெயரே அவளுடைய உருவம். அது கல்லாலோ, பொன்னாலோ செய்ததல்ல. ஞானம் விழைவாரின் மோனத் தவத்தால் எழுந்தது! மோனக் கவிஞர்களின் கானப் பெருக்கால் விளைந்தது!

    தவத்தால், கவிதையால் பேணி வளரும் பெரும் தெய்வம் வாணி. அவள், அந்தத் தவத்தின், அந்தக் கவிதையின் முடிவாம் ஞானத்தால் நம்மைப் பேணுவாள்.

    திருஞான சம்பந்தரோடு அடியார்கள் ஜோதியில் கலந்ததுபோல்
    பாரதியோடு நாமும் வாணியைச் சரண்புகுவோம்!

    Share