Month: February 2016

  • படக்கவிதைப் போட்டி .. (50)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12650584_953119718075561_2009024006_n
    112795645@N05_rஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (13.02.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    இந்த வாரப்போட்டியின் நடுவராக கவிஞர் மதுமிதா அவர்கள் தொடருவார்கள்.

    Share
  • நெருப்பு மா மழை (1)

    ருத்ரா இ.பரமசிவன்

    ரமண மகரிஷி

    images

    குத்துப்பாறையும் புல்லும் மொய்த்த‌
    குன்றம் தன்னில் பள்ளி கொண்ட‌
    கோவணப் பெருமாள் கோலோச்சிய திரு
    அண்ணாமலை யென்னும் மலையுண்டு.
    ஆயிரம் இமயமும் அதிலே அமிழும்..அந்த‌
    அழகிய அமைதியின் புன்சிரிப்பில்
    மௌனம் மௌனம் மௌனம் மட்டுமே
    பிரம்ம சூத்திர பாஷ்யங்கள் ஆகும்.
    பேசாத மொழியில் மொழி ஏதுமில்லை.
    தமிழைத்துப்பிய வடமொழி என்றும்
    வடமொழி மற்றொரு தமிழ்மொழிஎன்றும்
    பட்டி மன்றப் பாய்ச்சல்கள் இல்லை.
    பேசாதிரு!பேசாதிரு!பேசாதிரு!
    பேசியதெல்லாம் விந்துக்கள் ஆகி
    விந்துக்கள் எல்லாம் காடுகள் ஆகி
    காடுகள் தோறும் விலங்குகள் தான்.
    வேள்வி வளர்த்து நம் தீயை எல்லாம்
    யாருக்கு கொடுக்க இயலும் அறிவாய்.
    தீயே தீக்கு தின்னக்கொடுக்க..இந்த‌
    சாம்பலுக்கு ஏது உரிமையடா?
    மறைத்து மறைத்துச் சொன்னாலும்
    காதுக்குள்ளே சொல்லூற்றி
    நாலு விதமாய் சொன்னாலும்
    அஞ்ஞானத்தின் வர்ணம் தான் அது
    அதர்மத்தின் கொடுங்காடுகள் தான்.
    மனிதன் நிழலை மனிதன் உரித்து
    மணிச்சுடர் ஆடை உடுத்துவதே
    மகா மகா திரு நிர்வாணம்.
    நிர்வாணமாய் நிற்பவருக்கு
    ஆண் குறியென்ன? பெண் குறியென்ன?
    ஆட்டங்கள் போதும்!பாட்டுகள் போதும்!
    ஆகாசத்தைக் காய்ச்சிடுவீர் அதன்
    அமுதச் சாற்றை அருந்திடுவீர்

    Share
  • நீ காட்டினாய்

     
    ருத்ரா இ.பரமசிவன்

    e5eb2d27-13d1-47ad-a7a2-6d3d3e910f98

    ஆரண்ய காண்டம்
    அன்னையின் மணி வயிறு!
    கசிவு வெளிச்சங்களில்
    அவள் முகம் தெரிகிறது
    ஆயிரம் கோடி பிரகாசமாய்.
    அவள் இன்புற்ற கீற்று உணர்ச்சிக்கோடுகளும்
    அவள் நடுக்குற்ற வெடவெடப்புகளும்
    என்னுள்
    வர்ணங்கள் பாய்ச்சின.
    ஊசிமுட்களும்
    கருப்பு இலைகளுமாய்
    அவள் காலம் தள்ளியபோதும்
    அவளது
    ஒரே ரோஜாவாய்
    அவள் நாளங்களில்
    மின்னல் வெட்டுவேன்.
    பத்து மாதங்கள் கழன்றபின்
    ஆண்டுகள் ஆண்டுகள் ஆண்டுகள்
    பல முதிர்ந்த பின்
    நானும்
    அவளுக்கு காக்காய் முள்ளாய்
    ஆன பின்னும்
    கருப்பையில் கிடப்பது
    அவள் நிழலா?
    என் நிழலா?
    உவ்வா…உவ்வா..
    ஆம்
    இது என் பழைய குவா குவா இல்லை.
    இந்த மசக்கை வாந்தியில்
    அம்மா
    நீ காட்டினாய்
    மீண்டும் ஒரு
    அம்மாவின் மொழி பெயர்ப்பு என்று!

    ===================================================

    Share
  • ஒரு இனிய பயணம் !..

    க.பாலசுப்ரமணியன் 

     

    ஈரம் கசிந்த என் கைகளைப் பிடித்துக்கொண்டு

    என் கால்சுவடுகளுக்கு இணையாகக்

    கால் பதித்து …..

    நாள்தோறும்..

    வாரம்தோறும்…

    மாதங்கள் தோறும்..

    ஆண்டுகள் தோறும்..

    கைகோர்த்துச்  செல்லும் நண்பா !

    என் காலச் சுவடே!

     

    உன் பாதங்கள் ..

    இலைச்சருகுகளை மிதிக்கும்போது..

    அவைகள் நொறுங்கும் சப்தத்தில் ..

    இடிமுழக்கங்கள்… கேட்கும்..

     

    நிலத்தில் உயிர்கொண்ட..

    நீர்த்துவலைகளில் ..

    உன் பாதங்கள் படும்பொழுது..

    தீப்பொறிகள்  தெறித்து

    பாதைகளுக்குக்

    கருவண்ணம் தீட்டும் !

     

    உன் பார்வையில் மலர்ந்த பூக்கள் ..

    கருணை வெள்ளத்தில் கனிந்து

    புதுமணத்தை காற்றில் பூசி

    நாசியின் நரம்புகளுக்கு

    நம்பிக்கை ஊட்டும் !

     

    உன்னிடம் கேட்கக் கேள்விகள் இல்லை !

    என்னிடம் சொல்லிட பதில்கள் இல்லை !

     

    உன் அமைதியின் ஆழத்தில் ..

    நான் முழுகிக் கொண்டிருக்கின்றேன்..

    உன் புன்சிரிப்பில் ..

    நான் புதிய மொழிகளை ..

    கற்றுக்கொண்டிருக்கின்றேன் !

     

    உனக்குக் கடவுள் என்ற பெயர் உண்டென்று

    யாரோ சொன்னார்கள்…

    பஞ்சபூதங்களைப் பெற்றெடுத்த

    உனக்குப் பெயர் எதற்கு?

     

    கடந்தவன் என்றால் ..

    காலனுக்கும் உருக்கொடுத்தாயோ?

    புரியாத தத்துவமே!

    புரிந்துகொள்ளக் காலமில்லை !

     

    என்  கண்களில்..

    கடவுள்களுக்குக் கலைகொடுத்த..

    காலன் அன்றோ நீ..!

     

    இந்த அமைதியான பயணத்தில்..

    உன்னோடு நானும்..

    என்னோடு நீயும்..

    எங்கே செல்கிறோம்..?

    யாருக்காக..??

    உன்னிடம் பதில்கள் இல்லை !

    என்னிடம் கேள்விகளுக்குக் குறைவில்லை..!!

     

    கையோடு கைகோர்த்து….

    காலம் காலமாய்..

    நீயும் நானும்..

    ஒரு இனிய பயணம் !

    Share
  • சமூகத்தின் பார்வையில் – மூன்றாம் பாலினம்

    சு.காந்திமதி ஆராய்ச்சியாளர்
    அரசியல் அறிவியல் மற்றும் நிர்வாக வளர்ச்சித் துறை
    காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகம்.
    காந்திகிராம்

    “கவுரமான பெயரில் கடவுளை அழைப்பவர்கள் தான் மிகக் கொச்சை மொழியில் திருநங்கைகளாக அழைக்கிறார்கள். கேவலப்படுத்துகிறார்கள். இவர்களின் வாழ்க்கை நுட்பமான உணர்வுநிலை சார்ந்தது. பிறந்தது முதல் ஆணாகவோ , பெண்ணாகவோ வளரும் பருவத்தில்தான் தாங்கள் உண்மையில் யார் என்பதை உணருகிறார்கள். மூன்றாம் பாலினத்தவரின் அன்றாட சமூகத்தில் என்ன என்ன பிரச்சனைகளுக்கு உள்ளாக்கப்டுகின்றன என்பதைப் பற்றி நான் பார்த்த சிலவற்றை உங்களுக்கும் தெரியப்படுத்துகிறேன். அவர்கள் அன்றாட வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகளை சந்திக்கின்றனர் என்பதைப் பற்றி சிலவற்றை பார்ப்போம். திருநங்கைகள், அரவாணிகள் என பலப் பெயர்கள் வைத்து கூறப்படுகின்றார்கள். இவர்களுக்கு மூன்றாம் பாலினத்தவர்கள் என்று 15.04.2014 உச்சநீதிமன்றம் அங்கீகாரம் கொடுத்தது. இவர்களின் மக்கள் தொகை இந்தியாவில் 5 கோடியும் தமிழ்நாட்டில் 4,88 இலட்சம் பேர் உள்ளனர். 2011 கணக்கெடுப்பின்படி. இதில் தற்சமயம் மூன்றாம் இனத்தவரை சார்ந்த கிர்த்திகா பிரியதர்ஷினி சார்பு ஆய்வாளராக தற்சமயம் தேர்ச்சி பெற்றவர். தேர்ச்சி பெற்ற பொழுதிழும் கூட சார்பு ஆய்வாளர் பதவியில் அமர்வதற்குள் பல பிரச்சனைககளை சந்தித்து பதவியில் அமர்ந்துள்ளார். பதவியில் அமர்வதற்கு ஒவ்வொரு முறையும் நமது உயர்நீதிமன்றத்தை நாடி உள்ளார். அவரின் கடின உழைப்பிற்கும். திறமைக்கும், உரிமைக்கும் கிடைத்த பரிசுதான் சார்பு ஆய்வாளர் பதவி. இவர் படிக்கும் பொழுதே பள்ளியிலும், கல்லூரியிலும் ஒரு சிலர் செய்யும் கேலி கிண்டலுக்கு மனவுளைச்சல் ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இடையில் மூன்றாம் இனத்தவர்களுக்கென்று சமூகத்தில் பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், கோவில்கள் போன்ற இடங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித் தனியாக கழிப்பறை வசதிகள் உள்ளன. ஆனால் மூன்றாம் இனத்தவர்களுக்கு கழிப்பறை வசதிகள் செய்து தரவில்லை. இரண்டாவதாக வீடு வாடகைக்கு கேட்டால் சாதாரணமான ஆட்களுக்கு மாத கட்டணமாக 2000 முதல் 3000 வரை வசூல் செய்கின்றனர். ஆனால் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு என்றாலே 4000 முதல் 6000 வரை வசூல் செய்கின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களை விசித்திரமாகப் பார்க்கின்றனர். பொது இடங்களில் ஒரு சிலர் செய்யும் கேலி கிண்டலலால் மனவுளைச்சலுக்கு ஆளாகப்படுகின்றனர். ஒரு சிலர் செய்யும் பாலியல் செயலுக்கு ஒட்டு மொத்த மூன்றாம் இனச் சமுதாயத்திற்கே அவப் பெயர் வருகிறது. நம்முடைய சார்பு ஆய்வாளார் கிர்த்திகா பிரியதர்ஷினி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பொது மக்களிடையே உள்ள கண்ணோட்டம் மாற வேண்டும். பொது மக்கள் மூலியமாக மூன்றாம் பாலினத்தவருக்கு விழிப்புணர்வு ஏற்பட வழிவகை செய்ய வேண்டும். குறிப்பாக சேரிப் பகுதியில் உள்ள மூன்றாம் இனத்தவர்கள் மனவுளைச்சலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இது மாற வேண்டும். இப்படி செய்தல் மட்டுமே நாம் அவர்களுக்குக் கொடுத்த அங்கீகாரம் சரியானவையாக அமையக்கூடும்.

    Share
  • உலகத் தொல்காப்பிய மன்றத்தின் முதல் பொழிவு

    அன்புடையீர் வணக்கம்

     

    உலகத் தொல்காப்பிய மன்றத்தின் முதல் பொழிவு நேற்று நடைபெற்றது.
    அறிஞர் தெ.முருகசாமியின் உரையைத் தாங்களும் கேட்டு மகிழலாம்.

     

    தங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

    பணிவுடன்
    மு.இளங்கோவன்
    புதுச்சேரி,இந்தியா
    0091 9442029053

    Share
  • படக்கவிதைப் போட்டி 49 இன் முடிவுகள்

    அன்பினிய நண்பர்களுக்கு,

    12576240_949330908454442_569273548_n

    photoவணக்கம். சில நாட்கள் தாமதமாக வந்துள்ள படக்கவிதைப் போட்டி 49இன் முடிவு இது. படக்கவிதைப் போட்டியின் நடுவர் திருமதி. மேகலா இராமமூர்த்தி அவர்கள் தவிர்க்க இயலாத காரணத்தினால் திடீரென விடுப்பில் செல்ல வேண்டிய நிலையில் இடைக்கால ஏற்பாடாக பிரபல கவிஞர் மதுமிதா அவர்கள் தம்முடைய கடுமையான பணி நேரத்திலும் நமக்காக போட்டியின் நடுவராக இருப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்கள். அன்புத் தோழி மதுமிதாவிற்கு மனமார்ந்த நன்றி. தொடர்ந்து போட்டி நடைபெறும். நண்பர்கள் உற்சாகமாக கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம். இதோ அவருடைய முடிவுரை:

    வணக்கம். எனக்கு குதிரையை மிகவும் பிடிக்கும். இந்தத் தலைப்பிலேயே கவிதையொன்றும் எழுதியிருக்கிறேன். இந்தப் புகைப்படத்தையும், கவிதைகளையும் காண்கையில் உளம் உவகையுற்றேன்.

    புகைப்படம் எடுத்தவருக்கும், புகைப்படத்தைத் தேர்வு செய்தவருக்கும் பாராட்டுகள்,

    அழகிய புகைப்படம். அதற்கேற்ற விதமான கவிதை வரிகள்.

    நம்பிக்கை…

    என்னை நம்பி
    என்தலையில் பணத்தைக் கட்டி
    ஏமாந்துபோகும் மனிதனே,
    உன்னை நம்பு
    உன் உழைப்பை நம்பு..

    உன்னை நம்பி
    உழைத்து ஓடாய்த் தேய்ந்து
    உன்னை உயர்த்திய
    அன்னை தந்தையின்
    நம்பிக்கை சிதறிடாமல்
    கைகொடு..

    என்னையும் கைவிட்டுவிடாதே,
    கைப்பிடியாவது புல்கொடு…!

    -செண்பக ஜெகதீசன்… 

    செண்பக ஜெகதீசனின் இக்கவிதை நீதிக்கவிதை.

    எஸ். நித்தியலட்சுமி

    நாலு சுவருக்குள்
    என்னை அடைத்துவிட்டு
    நீ மட்டும் சுதந்திரமாக
    இருக்க வேண்டும் என் நினைக்கிறாயோ?
    மிருக வதைச் சட்டத்திலிருந்து
    என்னை காப்பாற்ற யாராவது வருவார்களா
    என்று எதிர்ப்பார்க்கிறதோ என்னவோ!

    நித்யலக்‌ஷ்மியின் இந்தக் கவிதை பெண்மனதைக் காட்டுகிறது.

    பட வரி   49
    கண்களில் கனிவோ!
     
    நான்காயிரம்  ஆண்டுகள் கிறிஸ்துவிற்கு முன்னர்
    நாளும் பழக்கிப் பாவித்த குதிரையில் 
    நாகரிகமாக இன்று ஏறிச் சவாரிக்கும் 
    நாரீமணியின் வரவுக்காகக் காத்திருக்கிறானோ பயிற்றுவிப்போன்!
    அன்றி,…பொறுத்திரு மனிதா விரைவில்
    உன் மாணவி வருவாளென்று இதமாய்
    அன்பு மொழி விழியாலே மொழிகிறதோ
    தனக்குத் தானே வாழும் குதிரை!
     
    தன் நிழல் கண்டு பின் நகரும்
    வன்முறையில் நாட்டம் இல்லாக் குதிரை
    பண்களில் பேசுமுயர் நட்புடை பரியிது
    கண்களில் காட்டுவது பெரும் கனிவோ!
    திண்ணெனும் கொம்பின்றி வலிமையானதும், மனிதக்
    கண்களிலுமிரு மடங்கு பெரிய கண்களால்
    மண்ணிலேதும் எதிர்பார்க்காத வாழ்வு எனது
    எண்ணிடு நீயும் என் மாதிரியென்கிறதோ!
     
    வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்.

    வேதாவின் கவிதை தேர்ந்த வித்தியாசமான அணுகுமுறை

    சரஸ்வதி இராஜேந்திரன்

    பந்தயக் குதிரை

    பந்தயக் குதிரை

    அரேபியாவின் இறக்குமதியே 
    அப்பாவி அழகு குதிரையே  நீ
    குதித்து ஓடியதால் குதிரையானோயோ
    பரிந்து ஓடியதால் பரி ஆனாயோ  ?
    உன்னை மனிதன் அடிமை ஆக்கி
    தன்  இஷ்டத்திற்கு ஆட்டி வைத்தான்
    ஏருழவும்  வண்டி இழுக்கவும் பயன் பட்ட நீ
    இன்று அலங்காரத்திற்கும்பந்தயத்திற்குமாய் 
    உன்னை நம்பியே இருக்கிறான் ஜாக்கி
    உன் வேகத்தை காட்டி வெற்றியை அடையகுதிரை
    ஊக்கமருந்து ஊசி போடாதே என்று இரைஞ்சுகிறதா  ?
    போட்டால்தான் வெற்றியென பாகன் நினைக்கிறானா?
    அரசியல் வாதிகளும் குதிரை சக்தியில்
    ஆரம்பித்து விட்டார்கள் ஓட்டத்தை
    தேர்தல் நேரம் வந்து விட்டதால் 
    இங்கிருந்து அங்கே அங்கிருந்து இங்கேதாவ
    குதிரை பயன் பாடு குறைந்தாலும்
    குதிரை சக்தி என்ற சொல் மட்டும் இன்றும்
    மோட்டார்களிலும் எலக்ட்ரிக் என்ஜின்களிலுமாய்

     

    சரஸ்வதி ராஜேந்திரனின் கவிதையின் தலைப்பும் எண்ணவோட்டமும் ஆற்றொழுக்கு போன்றது. வரிசையாக தேர்தல் வரை கொணர்ந்து சேர்த்துவிட்டார்.

    கொ.வை.அரங்கநாதன்

     அந்நிய அடிமை

    செஸ் விளையாட்டில்தான்
    உனக்கும் எனக்குமான
    முதல் அறிமுகம்

    அந்தக்கால ஆண்மைமிக்கத்
    திரை கதாநாயகர்கள்
    உன் மீதேறி கம்பீரமாய்
    இசைத்த பாடல்கள்மீது
    எனக்கு அளவற்ற காதல்

    கிண்டி மைதானத்தில்
    நீ நொண்டி அடித்து பலரை
     ஓட்டாண்டியாய் ஆக்கியதால்
    ஜெமினி பாலம் ஓரமாய்
    நீயும் சிலை வடிவானாய்

    ஆனாலும் எனக்கொன்று
    புரியவில்லை
    ஆண்டுக்கு ஒருமுறை மட்டும்
    ஓடி விளையாடும்
    எங்கள் ஜல்லிகட்டு காளைகள்மீது
    எங்களவர் காட்டும் அக்கரை
    இராணுவத்திலும் காவல்துறையிலும்
    வீரர்களை வேதனையோடு சுமப்பதோடு
    விருந்தினர் முன்னே நடனமும் ஆடும்
    உன் மீது ஏன் பிறப்பதில்லை
    ஓ    நீ
    அந்நிய தேசத்திலிருந்து வந்த
    அடிமை என்பதாலா

     

    அரங்கநாதன் அவர்களின் கவிதையின் தொனி அலாதியானதாக உள்ளது.

    முதல் பரிசுக்கு இந்த ஐந்து கவிதைகளில் கோவை அரங்கநாதன் அவர்களின் கவிதையைத் தேர்ந்தெடுக்கிறேன் .

     

    விஜயவாடாவில் நடந்த பன்மொழிக் கவிஞர்கள் சந்திப்பில் நான் எழுதி வாசித்த குதிரை கவிதை ஏனோ நினைவுக்கு வந்தது.

    அன்புடன்

    மதுமிதா

    9.02.2016

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    e4e9f96d-5a33-4f03-bb63-9cf076de729d

    புத்தபரி சுத்தனவர், பாம்பில் படுத்தது,
    நித்திய சூரிகள்நி மித்தமாய், -இத்தரையில்
    தர்மம் தழைக்க தசாவதாரம் செய்பவர்:
    கர்மம் அவரதுகொள் கை  …கிரேசி மோகன்….

    அடியேன் கோயிலுக்குப் போவதில்லை….
    நாத்திகனும் இல்லை….  காலைக் கடன் எனக்கு
    பூசலா நாயனார் போல கேசவ்லா
    நாயனார் கண்ணனை வெண்பா வழி
    வழுத்துதலே பூசை….

    ”BUDHA NILKANTH JALA NARAAYANAN”
    ———————————————————————
    ’’நேபாள நீர்மிதக்கும், நாரா யணாவந்தீர்,
    பூபாரம் போக்கிடப் பத்தாக: -பூபாள
    வேளை வருகின்றீர் , வெண்பா வடிவத்தில்,
    காலைக் கடன்நீரே காப்பு’’….கிரேசி மோகன்….

    Share
  • தொல்காப்பியத் தொடர்ப்பொழிவு

    உலகத் தொல்காப்பிய மன்றம்புதுச்சேரிக் கிளை

    தொல்காப்பியத் தொடர்ப்பொழிவு

    2

     

    உலகத் தொல்காப்பிய மன்றம் புதுச்சேரிக் கிளையின் சார்பில் தொல்காப்பியத் தொடர்ப்பொழிவு நிகழ்ச்சி புதுச்சேரி, செகா கலைக்கூடத்தில் இன்று (08.02.2016) மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை முனைவர் ப. பத்மநாபன் வரவேற்றார். காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையப் பேராசிரியர் மு.இளங்கோவன் தொடர்ப்பொழிவு குறித்த நோக்கவுரை வழங்கினார். காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் தெ. முருகசாமி தொல்காப்பியம் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் உரையாற்றினார். தொல்காப்பிய நூலின் காலம், அந்த நூலில் இடம்பெற்றுள்ள செய்திகள், தொல்காப்பியத்தைத் தமிழ் மக்கள் படிக்க வேண்டியதன் தேவையைத் தம் சொற்பொழிவில் எடுத்துரைத்தார். செ.திருவாசகம் நன்றியுரை வழங்கினார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

     

    முனைவர் மு.இளங்கோவன்
    Dr.Mu.Elangovan
    Assistant Professor of Tamil
    K. M. Centre for Postgraduate Studies,
    Government of Puducherry,
    Puducherry-605 008, India

    E.Mail : muelangovan@gmail.com
    blog: http://muelangovan.blogspot.com
    cell: +91 9442029053

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன் 

    பெருமாள் திருப் புகழ்….
    தனதந்தன தத்தன தத்ததன தனதந்தன தத்தன தத்ததன
    தனதந்தன தத்தன தத்ததன -தனதான

    திருவிண்நகர் உப்பிலியப்ப பெருமாள்
    ———————————————————————

    f4808c4f-4e79-4512-a339-aba78b681d6e
    “மனமுய்ந்துப ரத்தினில் சித்தமென உறவைந்துயெ ழுத்தவன் வெற்பருணை
    குடிவந்ததி ருட்சுழி சுத்தமன -ரமணேசர்
    புகல்கின்றஅ வித்தையை பற்றிவளர் புலனைந்தைய டக்கிவுயர்
    சுகமங்கள நிட்டையில் நிற்கவருள் -புரிவாயே

    சினம்பொங்கநு தற்கனல் ருத்திரனை மதனம்பும யக்கிட விட்டகணம்
    ஒருசம்பவ புத்திரன் ,முத்தமிழின் -முதலாளி
    குடம்வந்தஅ கத்தியன் சத்குருவின், குறமங்கையும் அத்தியும் பத்தினிகள்
    எனசெந்தில்க டற்க்கரை நிர்பயனின் -முறைமாம

    பனைமஞ்சனை இட்டழ மக்கள்மனை பறைசங்கொலி சத்தம தற்க்கிடையில்
    பிணிமுந்திட தெற்க்கெமன் தொட்டிடுமுன் -வருவாயே
    மணலுண்டக ணத்திலி டைச்சிதொழ விசுவந்தனை சொப்பிதழ் சிற்றறையில்
    முனிபுங்கவர் மட்டிலும் எட்டியதை -அருள்வோயே

    கனகம்பொழி பத்தினி பக்கமுற இணைதன்நிக ரற்றிட இத்தரையில்
    திருவிண்நகர் உப்பிலி அப்பனென -திருநாமம்
    திகழ்சங்குசு டர்ச்சுழல் சக்கிரமும் சரணம்புகு பக்தரின் பக்கமென
    அபயம்தரு நிச்சய நட்புடைய -பெருமாளே”….

    Share
  • மகா மகம் என்றால் என்ன? – மகாமகத்தின் அறிவியல் நோக்கு!

    மறவன்புலவு க. சச்சிதானந்தம்

    Dr.P.H.Anand,
    Professor Emeritus, ​

    Government College (Autonomous)/ Bharathidasan University,
    Kumbakonam-612 001, INDIA

    WEB: www.sitdm.com

     

    907db3ce-abc8-41ae-ab73-e943a9df38bc

    80b8d24b-3783-4cbc-90e9-574890c086dc

    4e495c11-cb6c-433d-a5a2-2b2973a2dea4

    8bd0143c-bea2-4e13-81cc-6267becd6710

    6282aa8d-f817-4bba-b065-cd7adb5c29ee

    Maha Magham Hour

     

    Legends pertaining to Maha Magham Hour are obscurely geocentric.  The conjectural micro-Astronomical aspects of the loci drawn in relevant legends cover large segments of Time and account for a ‘proximity principle’ in the vastitude of Astro-Geographic space, wherein distances miniature into near null-points.

                Three points of space fall within the loci; their ordinates constitute variable planarity: Kudavayil’s Amirtha Theertham is the exordium of surface-waters; Kalasanalloor’s Siv Theertham is the sub-surface middle; Maha Magha theertham of Kumbakonam is the base bearing within it a density upon which the previous two are tiered respectively in the order.  Now the points metaphorically and metonymically image a pitcher, holder of all life spores in a catena of replications that go on mythically forever.  Now the loci implicate these points as the mouth, the middle and the meniscus bottoming out of a ‘pitcher’, Aquarius or Kumbha.

                The pitcher-paradigm of a zodiacal merit and mien must be borne in mind to appreciate the Kumbha Rasi in which sun of ‘Bhaskara kshetra’ (the sacrosanct name of Kumbakonam), in all heliacal sessions through a full lunation dwells, siderially sanctioned.  Though in the solar year of our planet the sun-stay in Kumbha looks regular and definitive in time-degree, the lunation of Maha Magham year allows the sun-stay a little longer than the usual.  The calibration of this more than the usual duration is workable with two events of referable and seeable proximity in the ‘conical’ astronomical viewing of our Bharath, characteristically ‘conical’ with a sixty degree aperture cross-winning the events.  Put in common parlance, one-third of the hemisphere of the sky, the ‘eternal-shatari’ for the globe we live in, offers to our visibility.

                Geographically, with our planetary spin being what it is, the zero sixty, one-sixth of the zodiacal belt taken from the East for observation from the points in the loci aforementioned, hypothetically circumscribe the happening of ‘events’ elliptically recurring as they may be.

                The two events among other things, not un-beknown to experts and the lay alike are, of course: i. The stay of Jupiter (Guru) in Leo, ii. The stay of Full Moon in the light half month, fuller perhaps accounting for its undue ‘libration’, a few seconds more than the 54 per cent of Moon with an observable wobble on count of relative nearness to the viewers from the line of loci.

                The almanacal quartering of Aa, Kaa, Maa, Vai attests the second event.  For the first, the stellar geography with a calculus of mean deviation must evolve; the primary event is Jupiter’s (Guru’s) node-to-apsis-move near the Alpha Leonis of the six stars (five according to Surya Siddhanta) in advance of Moon’s and the Regulus (Magham or Alpha Leonis)’s move from node to apsis in advance of Jupiter’s;  after these, the longer lingering of Moon as viewable from the points in the loci in Regulus star, far on the southern edge of Zodiacal belt-line, inclining the viewers.  The indices of inclination get revealed in the ‘baanams’ of the three shrines: of Koneswara, of Amirtha Kaleswara and the Aadhi Kumbeswara.

                The ‘baanams’ of these Siva lingas, it is said, do indicate by their graded slant, pointing to the southern side of the zodiacal belt within the perceptible sixty degrees from the Eastern Horizon from the loci, the Alpha Leonis, the brilliant star in question.

                The proximity of the three-in-one loci of the metaphoric pitcher’s mouth, middle and earth-merged meniscus subtend the proximal arc of events above to a maxima as following motions and mean deviations occur: As the mouth of the pot is open to eye the sky, much has been written by authorities like Kudavayil Balasubramaniam and Tho. Mu. Bhaskara Thondaiman in their works.

                The foremost is the star in the conjunction event.  The asterism takes the name ‘Magham’.  The name means ‘mighty’; it entails a plural ‘maghas’.  The manes of the departed and ancestors and pitrus (fathers) are the regents of this asterism.  It is tenth in Hindu and ninth or eight or seventh in Arab, Chinese and other siddhanthas accordingly.

                The Lunar Mansion of this asterism resembles a House!  With five starts (which exactly is the fifth is still a matter of dispute between systems of Astronomy since the days of Ptolemy) according to several authorities, the southernmost is deemed the junction star.  In Khandakataka a sixth is included to make the constellation appear as a ‘Sickle’.  In and owing to this inclusion Alpha Leonis alias Regulus 129o 49’, 0o 27’ N is positioned in the forehead of the Lion.  On right ascension lion’s forehead is first viewed; the most brilliant Regulus cannot escape notice.  The Arab name for this asterism is aj-Jabbah meaning the forehead of the Lion.  For us in the tropical region, the situation of aj-Jabbah, with four of first or second magnitude at times dimming as Cepheids, is far southward of the ecliptic.  However ‘Magham’ Regulus is consistently of the first magnitude.  In Heliacal rising, magha becomes visible at 14 degrees.  The prospect of early visibility is significant; for the daily rate of motion apparent from our geocentric paradigm is merely the time-motion commensurate with the time-degree.

                The longitude of Jupiter (hereafter referred to as ‘amarejya’ [The Teacher of IMMORTALS AMRTHA]) is less than that of the Sun as he rises in the East; as is with Venus, Mercury, Mars and Saturn, of them Venus and Mercury when retrograding.  The mention of these other planets is to appreciate the enhanced degree of visibility of ‘Amarejya’ (Jupiter) through ‘oblique ascension’.  The junction star represents the Asterism in question and is of the second class when visible at 14o, in respect of magnitude it is between first and second class, its brilliancy notwithstanding.  Long continued observation will reckon the ‘proximity principle’ involved.

                In the light half month after a fixed number of respirations, Moon (‘Himarashmy’ as would be called hereafter) turns full to view close to sunset.  Himarashmy in Sisira Ritu is fuller in Maasi and yet more full in the Maha Magham conjunction on two counts: by wobble going beyond 54 per cent in terms of Moon’s ‘Libration’ and by apogee position lingering longer.  Calculations by experts explain this.  For practical observers from the loci, the three places in and southeast of Kumbakonam, the southern junction star’s trek glances the asymptotic.  It commences from Konesan and edges in to Kalasanalloor to culminate in Kumbesam.  The infinitesimal proximity in the face of astronomical distances, still merits through proportion.  The nearest reference event is the longer full moon of Manmatha years Maasi.  In Barhastyamana the event repeats 144 years once and in respect of siderial long stay in the zodiac accommodating ‘Amarejya’ (Jupiter) of the system in oblique ascension, it is further raised through one more power.  The recursive pattern is time-spaced or ‘chronotoped’ as it were across one thousand seven hundred and twenty nine years.  This number (of years) is unique.

                The current year is Time-degreed three times, self-replicating the duration as Unity Cubed!  With the star’s ascension, in the East within the first sixty degrees, in the Cone’s Western Southwestern edge of the ecliptic the Full Moon and Jupiter join, the former a whit swifter to reach up the latter with its siderial revolution and rise in the month named after the asterism with which Sun wheels in opposition.  (As apollonian, the Sun-stay in Bhaskaraksetra, is masculine to dominate the day time, the preferred fore-noon period).  As libations mark the day time, civil savana time is styled in respect of the siderial and the patriarchate with little distinction of day from night, in the loci.  The lunar time proceeds from the solar; the sidereal revolution Time in terms of Moon’s nodal position is greater than Jupiter’s; which is why a recursion of its co-inherence of normal linking it with Jupiter and Alpha Leonis from the Kumbakonam loci re-presenting Sun-in-Pitcher is after, approximately 20736 lunations.

                Though after 232 lunations or so verisimilar heliacal risings of Sun and Moon occur from Earth’s point of view and they occupy with Earth relatively similar positions in terms of nodes either during inferior or superior conjunction, it takes thousands of lunations to make relatively similar moves in terms of both axis and node of Moon the Himarashmi (having cool rays), and this is the nearest reference event.  It may so be conjectured that such an event have taken the savanna time some 1728 earth years ago which in Barhaspatyamana work out 144 Jupiter years.  Number 12 may look cardinal and arithmetic but its role in 24 sines and the arc of 30o (the sub division of the arc being 3o 45’) in Maasi satisfy Indo-Astronomic view of events discussed.

                Founded on this, a count up towards the optimal conjunction takes a minimum 52 to 60 minutes (12/12 to 12/14) on 22nd February 2016, after sun set.  It may be surmised that the optimal is arrived at, counting on the heliacal  rising of celestial bodies in reference and their gravity centres and longitudes and not on the geometric centres.  The paradigm is with respect to 10o 58’ N of Kumbakonam; thus it falls between 7.06 pm and 7.14 pm on that day; yet through parallax this may advance through 2 to 3 hours in the afternoon; and the sacrosanct Bhaskarakshetra reckons the forenoon  and noon of the day as fit for libations .  With events of Himarashmi and Amarejya in ascension given their due in due season, we may look at the legendary side of things.

                As the legend goes, nine numinous rivers Ganga et al. were defiled by multitudinous sins of being that bathed in them to wash away all their illicit murkiness; the Rivers got sullied.  The River Deities prayed Kayilai Shiva Lord who metamorphosed the Water – Deities into virgins and exhorted them to rush southward and take a dip in three purgatorial theerthas; Lord specified the precise temporal-spatial junction; Sun in Kumbham; Jupiter in Simham; and Full Moon in Regulus; He ordained them to stay concurrently during the month of Maasi (Magha) and to bathe in the three water-spas when Jupiter abides in Leo (Simha) and they should repeat this expiatory therapy once in every twelve years.  The water-virgins took to kumbhesa theertham, then to Siva theertham and moved to Amirtha Theertham of Kudavayil.  Of a sudden, to their dismay the Amirtha theertham sank underground.  Vexed over their incomplete, aborted passaging through depuration process, they felt Sin-bothered, Sin-beaten, Sin-laden, Sin-assailed, Sin-plagued, Sin-cankered, and Sin-struck by a phagedaenic stroke.  They pleaded to the Lord of Konesam; an ethereal voice addressed them:

    “A lapse on your part is the cause of this anomaly.  Having known the concurrent space and time, you ought to have progressed along the locus of points.  As eye to sensoria five is face (head) (forehead) to body.  The pitcher of immortal spores of life is laid up spliced in discreet three parts; its mouth is Amirtha theertha surface waters; its middle is Siva theertha of buoyancy; its deep is Kumbakonam’s mighty ‘Magha theertha.  Top down dip is holy.  Gravity the basic bed rock or evil, to get rid of, obey you must an order non-contingent. Now made aware of the preposterous haste of yours, through us, the sunk Amirtha theertha shall swell.  Yet, be soused and stay poised concurrently…..” and the voice faded into profound silence.

                Thus in the legend the rule of proximity and concurrence and the mandatory compresence of the fluid water-virgins in three sites for a whole luni-solar month once in twelve Earth years is stressed.

                After this much legend what excuse!  Legandary mahamagham hour is hitched to proximal sites in a certain order of vectors.  The vectors connecting the three proximal points of theerthas in the loci is a miniature of the normal soldering the moves of ‘himarashmi’, ‘amarejya’ and Regulus or Magha of Khandakataka driven by provector winds.

                For us all, the order of vector is Indo-centric and anthropocentric.  The depuration and expurgation are two deviant acts.  Even within waters as surrogate elixir of life eternal, plumbing the depth counts from aquatic top to chthonic deep; and hence the vector.

                Ganga et al., is an order of water current North-South.  Nine picked Rivers ingather in the sojourn, to undo the sin-drome they have been, are and would be in and through.  While expiation in ritualistic, expurgation is physical, topographically viewable ocular enactment; depuration is a periodic time scale related recycling of a primal virgin state!  Mythopoeic sun ducks down into kumbha with the Apollonian masculinity as opposed to Moon with ‘Cool-rays’ in the after heat of heliacal rise into the Leo starring the feminine cycles frustrated or otherwise.  About 163 cycles go deterged repeatedly, every time the conjunction and opposition occur of Moon and Sun respectively.  Geographically unclean cleanse their courses to reflow as perennials.  This hypostatic view of the fluvial gross is imposed on Time-endorsed spread of an epidemic sin and inoculation of beings against the sin’s outbreak again.

                The blind spot in the Astronomical discourse of conjunction in question is the desirability of reversals to stages prior to getting adulterated by bastardy etc., through down to earth dippings and dumpings on the river bed.  The warped logic is to colonize the thoughtful mind with a specific time degree when the exogamic river-wedding-a-pool might occur; and for that instant to last longer than a day, the conjunction is azimuthally conveyed and debriefed as one that stretches through a complete lunation in ‘Sisira-ritu’, that is Jan-Feb; but the present Mahamagham  falls on a week after the ‘ritu’; making the absolution of sins or impurities and making the liberations for the same as variables and a relative set of enactments to avert defilement.  While the hushed cry is of ‘pollution’ physical and spiritual in the planetary sense and concern, the signified hour is a deliberate celebration of the conjunction per se as celestial event horizoning the like of their occurrence some seventeen centuries ago.  Astronomy and Geography of the sky, if we may call the plotting of the events in question so may throw more light on the impact of the Siderial side of this argument as would the readership expect in their private experience.

    Note: The authors admit they have used technical terms, they cannot do without, that are too few to the experts and too many to the lay perhaps.

     

    Authors:

     

    Dr. P.H.Anand,

    Professor Emeritus, Government Arts College (Autonomous), Kumbakonam.

    Professor S.A.Sankaranarayanan,

    Visiting Professor, Sri Sankara College, Kumbakonam.

    Email: phanand@gmail.com

     

     

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    பிப்ரவரி 8, 2016

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  மாணவி திருமிகு. உதயகீர்த்திகா அவர்கள்

    உதயகீர்த்திகா

     

    வல்லமையின் இந்த வார வல்லமையாளர், உக்ரைன் நாட்டிலுள்ள, உலகின் சிறந்த விண்வெளிக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ‘கார்க்கிவ் யுனிவர்சிட்டி ஆஃப் ஏர்ஃபோர்ஸ்’ (Kharkov Air Force University, Ukraine) இல் ‘ஏரோ ஸ்பேஸ் இன்ஜினீயரிங்’ (Aerospace engineering) படிக்கும் மாணவி திருமிகு. உதயகீர்த்திகா அவர்கள். இவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர், வல்லமையின் அறிவியல் எழுத்தாளரான திரு. சி. ஜெயபாரதன் அவர்கள். அவருக்கு வல்லமைக் குழுவினரின் நன்றிகள் உரித்தாகிறது.

    தேனியின் அல்லிநகரம் என்ற ஊரினைச் சேர்ந்த, ஓர் எளிமையான சராசரி இந்தியக் குடும்பத்தில், தனியார் நிறுவனமொன்றில் குறைந்த ஊதிய வேலையிலிருப்பவரும், சிறுகதை எழுத்தாளரும் ஓவியருமான திரு. தாமோதரனுக்கும், தட்டச்சுப் பணிபுரியும் திருமதி. அமுதாவிற்கும் ஒரே செல்ல மகளாகப் பிறந்தவர் உதயகீர்த்திகா. குழந்தைப் பருவத்தில் இருந்தே வானவியல் பற்றிய ஆர்வம் கொண்டவர். பள்ளி நாட்களில் நிலா, வானம், அண்டம், விண்வெளி, விண்வெளி வீரர் என விண்வெளி தொடர்பான நூல்களைத் தேடித் தேடிப் படித்துத் தகவல்களை குறிப்பெடுத்துக் கொள்வதிலும், விண்வெளி தொடர்பான போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகளைக் குவிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். அவரது தந்தையும் ஆய்வுக்குத் தேவையென மகள் கேட்கும் விலை அதிகமான நூல்களையும் வாங்கிக் கொடுப்பதற்காக ஒரு வேளை உணவைத் தியாகம் செய்யத் தயங்காதவர்.

    2011-ம் ஆண்டு தேசிய அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்பில் நடைபெற்ற புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் தனது ஆய்வைச் சமர்ப்பித்து,‘Inspire Award’ விருதும், 2012-ம் ஆண்டு மகேந்திரகிரியில் உள்ள விண்வெளி ஆய்வு மையம் சார்பாக மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையில் நடத்தப்பட்ட ‘சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் விண்வெளி ஆய்வின் பங்கு’ என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் பரிசும், 2014-ம் ஆண்டு அதே விண்வெளி ஆய்வு மையம் நடத்திய ‘வழி நடத்தும் விண்வெளி’ என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியிலும் மாநில அளவில் முதல் பரிசும் பெற்றுள்ளார். மேலும் இவர் பெற்ற பல பரிசுகளின் பட்டியல் கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

    உதயகீர்த்திகா1பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் பள்ளியின் முதல் மாணவி, அறிவியல் பாடத்தில் நூற்றுக்குநூறு, ப்ளஸ் டூ தேர்விலும் நல்ல மதிப்பெண்களைப் (1030 ) பெற்றவரான உதயகீர்த்திகா தமிழ்வழிக் கல்வி பெற்றவர். விண்வெளி ஆய்வு பற்றி படிக்க விரும்பி தனது ஆய்வுகள், கட்டுரைகள், பெற்ற பரிசுகள், மதிப்பெண்கள் ஆகியவற்றைச் சமர்ப்பித்து கார்க்கிவ் யுனிவர்சிட்டி ஆஃப் ஏர்ஃபோர்ஸ் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்த பொழுது அங்குப் படிக்க உதவித் தொகையும் வழங்கப்பட்டுத் தேர்வு செய்யப்பட்டார். மேற்கொண்டு, நான்காண்டு படிப்பிற்குத் தேவையான சுமார் 12 லட்சம் ரூபாய் செலவிற்காக, வங்கியில் கொஞ்சம் கல்விக் கடன், பிற இடங்களில் கடன் என ஒரு 7 லட்சம், உதவும் உள்ளங்கள் நீட்டிய உதவிக்கரங்கள் வழங்கிய தொகை எனச் சேகரித்தது போக, நடிகர் ராகவா லாரன்ஸும் ஆனந்த விகடனும் இணைந்து செயல்படுத்தும் ‘அறம் செய விரும்பு’ திட்டத்திலும் விண்ணப்பித்தார். மீதம் உள்ள தொகைக்கு 1.80 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி நடிகர் ராகவா லாரன்ஸும் உதவி செய்துள்ளார்.

    தனக்கு ஊக்கமளித்து உறுதுணையாக இருக்கும் தனது அப்பாவிற்காக விண்வெளி ஆய்வில் வெற்றிபெறுவதுதான் தான் செய்யும் கைமாறு எனக் கூறும் உதயகீர்த்திகா, “அறிவியல் என்றால் மருத்துவத்துறையை மட்டுமே நோக்கியதாக இருக்கிறது பெற்றோர்களின் இலக்கு. மகன்களைத் துணிச்சலுடன் ஆராய்ச்சிப் படிப்புகளை நோக்கி நகர்த்தும் பெற்றோர், தங்கள் மகள் அதை நோக்கி நகர்வதை அவ்வளவாக விரும்புவதில்லை. இந்தத் தயக்கம்தான் பெண்களை, குறுகிய வட்டத்துக்குள்ளேயே நிறுத்திவிடுகிறது. எல்லைதாண்டி சிந்திக்கவிடாமல் முடக்கிவிடுகிறது. உண்மையில் அறிவியல் அறிவில் ஆண்களைக் காட்டிலும் சிறந்து விளங்கும் திறமை பெண்களுக்கு இருக்கிறது. அதைத்தான் வரலாறும் சொல்கிறது … விண்வெளி ஆய்வு தொடர்பான பொறியியல் படிப்பை முடித்து விண்வெளி வீராங்கனையாகவும், அப்துல்கலாம் போல மிகச்சிறந்த விஞ்ஞானியாகவும் ஆவேன். உக்ரைன் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்துவிட்டு, இந்திய விண்வெளி ஆய்வுத்துறைக்கு எனது பங்களிப்பைச் செலுத்துவேன். ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு உதவியாக இருப்பது, அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி, ஏழை மாணவர்களும், விண்வெளி ஆய்வு தொடர்பான கல்வி கற்பதற்கு வழிவகை செய்வேன்,” என்று பத்திரிக்கைகளுக்கு வழங்கிய நேர்காணல்களிலும் குறிப்பிட்டுள்ளார்.

    உயர்ந்த குறிக்கோள்களையும், நோக்கங்களையும் கொண்டுள்ள உதயகீர்த்திகாவின் முயற்சிகள் வெற்றியடைந்து விண்வெளி ஆய்வுகள் பலசெய்து நாட்டிற்குப் பெருமை தேடித்தரவும், இளைய தலைமுறையினருக்கு சிறந்த முன்மாதிரியாக இருந்து வழி நடத்தவும் வல்லமைக் குழுவினரின் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    _______________________________________________________
    தகவல் பெற்ற இடங்கள்:
    தேனி பெண்ணின் விண்வெளி கனவு..
    http://siragu.com/?p=19568

    உதயகீர்த்திகா… நிறைவேறும் விண்வெளிக் கனவு!
    http://www.vikatan.com/news/article.php?aid=55240

    காணொளி:
    https://youtu.be/cFv90F0TeEo

    _______________________________________________________
    உதயகீர்த்திகா பெற்ற பரிசுகளும் விருதுகளும்:
    * 2005-ஆம் ஆண்டு திண்டுக்கல் நேருகலைமன்றம் சார்பாக மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவியருக்கிடையே நடைபெற்ற ஓவியப்போட்டியில் முதற்பரிசு.
    * 2007-ஆம் ஆண்டு மதுரை உயர்மாவட்ட பல்சமய உரையாடல் பணிக்குழு சார்பாக நடத்தப்பட்ட உரையாடல் போட்டியில் மூன்றாம் பரிசு.
    * 2007-ஆம் ஆண்டு தேனி மேரிமாதா மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் இரண்டு நிமிடங்களில் 53 திருக்குறள்களை ஒப்புவித்து 2-ஆம் பரிசு.
    * 2009-ஆம் ஆண்டு என்னுடைய கவிதை, கட்டுரை, ஓவியம் மற்றும் கல்வித்திறன்களைப் பாராட்டி, பாரதியுவகேந்திரா என்ற தன்னார்வ நிறுவனம் சார்பாக, “யுவஸ்ரீகலாபாரதி’ என்ற விருது.
    * 2010-ஆம் ஆண்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் குழந்தைகள் தினவிழாவையொட்டி மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கிடையில் நடத்தப்பட்ட குழந்தைத் தொழிலாளர்முறை ஒழிப்பு பற்றிய கட்டுரைப் போட்டியில், முதல் பரிசாக தங்கப் பதக்கம் பெற்றேன்.
    * 2010-ஆம் ஆண்டு தேனி ஜூனியர் சேம்பர்ஸ் இண்டர்நேஷனல் என்ற அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு போட்டியில் முதற்பரிசு.
    * 2011-ஆம் ஆண்டு மத்தியஅரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை சார்பில் நடத்தப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புப் போட்டியில், அறிவியல் கண்டுபிடிப்பைச் சமர்ப்பித்ததற்காக, அறிவியல் விருது.
    * 2011-ஆண்டு என் கவிதை, ஓவியம், கட்டுரை மற்றும் கல்வி ஆற்றலைப் பாராட்டி, மதுரையில் உள்ள ரோஜா கலைமன்றத்தின் சார்பில் சுவாமி விவேகானந்தர் விருது. 2012-ஆம் ஆண்டில் தேனி மாட்டஅளவில் பள்ளி மாணவ-மாணவியருக்கிடையில் நடத்தப்பட்ட தனித்திறன் மற்றும் நாட்டுப்புற நடனம் போட்டியில் முதற்பரிசு.
    * 2013-ஆம் ஆண்டு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றதற்காக பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்.
    * 2013 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் சர்வதேச நுகர்வோர் தினவிழாவை முன்னிட்டு மாவட்டஅளவில் உள்ள பள்ளிமாணவ-மாணவியருக்கிடையில் நடத்தப்பட்ட விழிப்புணர்வுக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு.
    * 2012-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள விண்வெளி ஆய்வு மையம் சார்பில் “சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் விண்வெளி ஆய்வின் பங்கு’ என்ற தலைப்பில் மாநிலஅளவில், நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில், பெங்களுரு இஸ்ரோ மைய விஞ்ஞானி இராம கிருஷ்ணனிடமிருந்து விருது பெற்றேன்.
    * 2014-ஆம் ஆண்டும் மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) சார்பில் மாநிலஅளவில் பள்ளிமாணவ-மாணவியருக்கிடையில் “வழிநடத்தும் விண்வெளி’ என்ற தலைப்பில் நடத்தப்பட்டக் கட்டுரைப் போட்டியில் முதற்பரிசு. இதன் மூலமாக பெங்களூரில் உள்ள விண்வெளி ஆய்வுமையத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகளையும் பி.எஸ்.எல்.வி., மங்கள்யான் ராக்கெட்டுகளை உருவாக்கிய விஞ்ஞானிகளையும் சந்தித்துப்பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    _______________________________________________________

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 53

    எல்ஸாஸ் சமூக அருங்காட்சியகம் (2), ஸ்ட்ராஸ்போர்க், பிரான்சு

    முனைவர்.சுபாஷிணி

    ஸ்ட்ராஸ்பொர்க் படுகொலை நிகழ்வு என்பது ஐரோப்பிய வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் வன்முறை சமபவங்களின் பட்டியலில் நிச்சயமாக இடம்பெறும் ஒரு நிகழ்வு. காதலர் தினம் என நாம் இப்போது கொண்டாடும் பெப்ரவரி 14ம் தேதி, 1349ம் ஆண்டில் ஒரு கொடூர சம்பவமும் நிகழ்ந்துள்ளது. அதாவது, இதே நாளில் 1349ம் ஆண்டில், ஸ்ட்ராஸ்பொர்க் நகரத்தில் வசித்து வந்த யூதமக்களை அவ்வூர் மக்கள் உயிருடன் பிடித்து கொளுத்தி கொன்ற கருப்பு நாள் இது என்றும் குறிப்பிடலாம். யூதர்களில் பலர் கொல்லப்பட்டும், இருந்த ஏனையோர் அந்த நகரத்தை விட்டே அகற்றப்பட்ட நிகழ்வும் இந்த நாளிலும் அதன் தொடர்ச்சியான நாட்களிலும் இந்த நகரில் நடந்தது.

    asu

    1348ம் ஆண்டின் வசந்தகாலம் தொட்டே யூதர்களின் மீதான வெறுப்புணர்ச்சி என்பது இப்பகுதியிலும் அதன் சுற்றுப் புறத்திலும் பரவி வர ஆரம்பித்தது. இதன் அடிப்படையில் இப்போது சுவிஸர்லாந்தின் ஒரு முக்கிய நகரமான பாசலிலும், இன்றைய ஜெர்மனியின் தென்மெற்கு நகரங்களில் ஒன்றான ஃப்ரைபுர்க் நகரிலும் அதே ஆண்டின் நவம்பர் மாதத்தில் யூதர்களை உயிருடன் பிடித்துக் கொல்லும் நிகழ்வுகள் நடந்தன. அதன் தொடர்ச்சியாக 1349ம் ஆண்டில் பெப்ரவரி 14ம் தேதி ஸ்ட்ராஸ்பொர்க் நகரத்திலிருந்து ஒட்டு மொத்தமாக யூதர்கள் அகற்றப்பட்டார்கள்.

    இந்த வன்கொடுமைகளுக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது யூதர்களின் பொருளாத மேண்மை தான். ஐரோப்பாவின் அன்றைய நகரங்கள் பலவற்றில் பணம் வட்டிக்குக்கொடுத்துப் பெறும் வகையில் செல்வாக்குடன் யூதர்கள் இருந்தார்கள். பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பது யூதர்களுக்கும் ஏனைய பிற சமூகங்களுக்குமிடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாட்டை ஒத்ததாக அமைந்த நிலை, பொருளாதார ஆதிக்க நிலை ஆகிய யூதர்கள் மீதான பரவலான வெறுப்புணர்ச்சியை ஏனைய சமூகத்தினரிடம் உருவாக்கியது. இதே நிலை தான். 20ம் நூற்றாண்டின் ஆரம்ப கால சூழலில் ஜெர்மனியில் யூதர்களின் இன அழிப்பு நிகழ்வுக்கும் நாஸி சிந்தனை எழுச்சிக்கும் காரணமாக அமைந்தது என்பது மறுக்கப்பட முடியாத ஒன்றே.

    ஸ்ட்ராஸ்பொர்க் நகரத்தில் 1349ம் ஆண்டு வாக்கில் ஏற்கனவே இருந்த யூதர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியோடு அப்போது மிக வேகமாகப் பரவி பலரது உயிரைக் கொன்ற ப்ளேக் நோயும் ஒரு முக்கிய காரணமாகவே அமைந்தது. யூதர்கள் தான் இந்த ப்ளேக் நோய் பரப்பும் நச்சை கிணற்று நீரில் கலந்து விட்டதாகச் சொல்லி அதனையே ஒரு காரணமாக வைத்து யூதர்களைப் பிடித்து வந்து உயிரோடு கொளுத்திக் கொன்றனர். இந்த ப்ளேக் நோய், அது ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றை நினைவு கூறும் வகையில் ஐரோப்பாவின் பல நகரங்களில் பெப்ரவரி மாதம் திருவிழாக்கள் நடைபெறும் அதில் மக்கள் கொடூரமான வகையில் முக அலங்காரம் செய்து கொண்டு அசுரன், பேய் பூதம், அங்கவீன மனிதர்கள் என்ற வகையில் ஆடையலங்காரம் செய்து கொண்டு தெருக்களில் ஊர்வலம் வருவர். இன்று கேளிக்கை நிகழ்வுகளில் ஒன்றாகிப்போன ப்ளேக் நோய் திருவிழா ஐரோப்பாவை கடந்த 1000 ஆண்டுகளில் தொடர்ச்சியாக அவ்வப்போது தாக்கி மக்கள் தொகை எண்ணிக்கையில் மிகப் பெரிய எண்ணிக்கை குறைய ஒரு காரணமாக அமைந்ததை மறந்து விட முடியாது.

    as1

    இப்படி பல வரலாற்று சம்பவங்கள் ஸ்ட்ராஸ்போர்க் நகரிலே நடந்துள்ளன. அப்படியான பல தகவல்களை உள்ளடக்கிய எளிமையான ஒரு அருங்காட்சியகமாகவே இந்த எல்சாஸ் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. எல்சாஸ் மக்களின் வரலாற்றையும் வாழ்க்கை முறையையும் பிரதிபலிக்கும் 5000க்கும் மேற்பட்ட காட்சிப்பொருட்கள் இங்குள்ளன.

    as2

    ஆண் பெண், குழந்தைகளுக்கான பாரம்பரிய உடை, காலணிகள் தலையலங்காரப் பொருட்கள் ஆகியன ஒரு பகுதியில் உள்ளன. வீட்டு பொருட்களான படுக்கை அறை அமைப்பு, அலமாரி, சாப்பாட்டு மேசை, சமையல் பொருட்கள், விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், ஆகியன ஒரு தளத்தில் சேகரித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    as3

    இப்பகுதியின் வரலாற்றுச் சம்பவங்களைச் சொல்லும் பட்டயங்கள், ஆவணங்கள், நில வரைபடங்கள் ஆகியன ஒரு பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

    as4
    இந்த அருங்காட்சிகத்திற்கு உள்ளே சென்று பார்த்து வர கட்டணம் தேவையில்லை. இது மையச் சாலை பகுதியிலேயே அமைந்திருக்கின்றது. இந்த அருங்காட்சியகத்தின் முகவரி 23-25 quai Saint-Nicolas, 67000 Strasbourg. எல்சாஸ் சமூகத்தினரின் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள்ள விரும்புவோரும், ஆய்வு செய்ய விரும்புவோரும் நிச்சயம் சென்று பார்த்து வர வேண்டிய அருங்காட்சியகங்களில் இது முக்கியமானது.

    as5

    ஸ்ட்ராஸ்பொர்க் நகரத்தில் மேலும் சில முக்கிய அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றியும் பிரிதொரு முறை எழுதுகின்றேன்.

    அடுத்த பதிவில் மேலும் ஒரு நாட்டில் உள்ள ஒரு அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கின்றேன். தொடர்ந்து வரவும்.!

    Share
  • உன்னையறிந்தால் ….. (41)

    நிர்மலா ராகவன்

    நீங்கள் ஒரு ஹெலிகாப்டரா?

    உனையறிந்தால்11
    கேள்வி: இடைநிலைப்பள்ளி மாணவனான நான் எது செய்தாலும், அதில் ஏதாவது தப்பு கண்டுபிடித்து, கண்டனம் தெரிவித்துக்கொண்டே இருக்கிறார்கள் என் தாய். அவர்கள் சொல்லும் வழியைத்தான் கடைப்பிடிக்க வேண்டுமாம். எனக்குப் பித்துப் பிடித்துவிடும்போல இருக்கிறது. எங்கள் இருவரில் யாரிடம் கோளாறு?

    பதில்: நிச்சயம் உன்மேல் ஒரு தவறுமில்லை.

    ஹெலிகாப்டர் எப்படி ஒரே இடத்தில் சுற்றுமோ அதுபோல தம் குழந்தையை ஓயாது கண்காணிக்கும் உங்கள் தாய் போன்ற பெற்றோரை ஹெலிகாப்டர் பெற்றோர் என்று வர்ணிக்கிறார்கள்.

    `பிறர் என்ன சொல்லி விடுவார்களோ!’ என்றஞ்சி, மிகுதியாக கவனம் செலுத்தி, மகன் எது செய்யும்போதும் கூடவே இருப்பார்கள் சில பெற்றோர். `அப்போதுதானே அவனைப் பிறர் மெச்சுவார்கள்!’ என்று அவர்கள் எண்ணியதற்கு நேர்மாறாகத்தான் நடக்கும்.

    நாளடைவில், எதற்கும் அம்மாவின் கையை எதிர்பார்க்கும் நிலை வரும் பையனுக்கு. சுதந்தரமாக எதையும் செய்துகொள்ள சோம்பல், ஒரு கையாலாகாத்தனம். பிற்காலத்தில் தாங்கள் எதிர்கொள்ள நேரிடும் இழப்பு, தோல்வி, ஏமாற்றம் முதலியவற்றைத் தாங்கிக்கொள்ளும் மனோதிடத்தைப் பலர் இப்படித்தான் — பெற்றோரின் மிகையான அக்கறை, பாதுகாத்தல், கண்காணிப்பு முதலியவற்றால் –இழந்துவிடுகிறார்கள். .

    பெற்றோர், அல்லது ஒரு சிறுவனைப் பார்த்துக்கொள்ளும் தாத்தா-பாட்டி, வெவ்வேறு காரணங்களால் இப்படி ஆகிவிடுகிறார்கள்.

    1.நிறையப் படித்திருக்காதவர்களாக இருந்தால், தாம் அடையமுடியாத வெற்றிகளைத் தம் பிள்ளைகளாவது அடையவேண்டும் என்ற வெறியே இவர்கள் போக்கை நிர்ணயிக்கிறது.

    2.பிறர் குழந்தைகள் எதையும் செவ்வனே செய்து முடிப்பதைக் கண்டு, தாம் பெற்றவை அவர்களை மிஞ்ச வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை இன்னொரு காரணம். எங்காவது தொய்வு ஏற்பட்டு, தோல்வி அடைய நேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்ற அவர்களது கலக்கம் பிள்ளைகளையும் தொத்திக்கொள்கிறது என்பது இவர்களுக்குப் புரிவதில்லை.
    3.தனது பிள்ளை செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் தப்பு கண்டுபிடித்துக்கொண்டே இருப்பவருக்குத் தாழ்மை உணர்ச்சி மிகுந்திருக்கும். `என்னைப்போல்தானே என் மகனும் இருப்பான்!’ என்று அர்த்தமற்ற கவலை சூழ, அவன் அப்படி ஆகாதிருக்க பெருமுயற்சி எடுத்துக்கொள்வதாக எண்ணி, குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார். உண்மையில், அவனை அவன் போக்கில் விட்டால் இன்னும் வேகமாக முன்னேறுவானே!

    4.பிள்ளைக்கு எத்தனை வயதானாலும், அவனைச் சின்னக் குழந்தையாகவே பாவித்து, ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வது அன்பு மிகுதியால் அல்ல. எங்கே மகன் பெரியவன் ஆனதும் தன்னை நிராதரவாகவிட்டுப் போய்விடுவானோ என்ற இனம்புரியாத பயம். அல்லது, `குழந்தைதானே!’ என்ற சப்பைக்கட்டு, எந்த வயதிலும்.

    கதை: அந்த எட்டு வயதுப் பையனுக்கு ஒவ்வொரு வேளையும், அம்மா அல்லது பாட்டி சோற்றைப் பிசைந்து வாயில் ஊட்டுவார்கள். யாராவது கேட்டால், `அவன் ரொம்ப நிதானமாகச் சாப்பிடுவான். கீழே ஒரேயடியாக இறைப்பான்!’ என்று காரணம் சொல்வார்கள்.

    பல சிறுவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். சாப்பிட்டு முடித்ததும், அந்த இடத்தை அவர்களையே சுத்தம் செய்யச்சொன்னால், சில ஆண்டுகளில் கீழே சிந்தாது சாப்பிடப் பழகுவார்கள்.

    எந்த வயதிலும், சிறுவன் தானே ஒரு காரியத்தை ஏதோ தனக்குத் தெரிந்த விதத்தில் செய்துவிட்டு, அது சரியாக இல்லாதுபோனால், அதை எப்படி சிறப்பாகச் செய்யலாம் என்று சொல்லிக் கொடுக்கலாம். தோல்வி அடைந்தாலும், அதிலிருந்து கற்கலாம் என்ற அறிவைப் புகட்ட வேண்டுவது பெற்றோரின் கடமை. அதைவிட்டு, செய்வதற்கு முன்னரே எதற்குக் கண்டனம்?

    இபம்மாதிரியான சிறுவர்கள் திருமணமான பின்னரும் மனைவி தன்னைக் கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதாவது, இவர்களும் ஹெலிகாப்டராகி விடுகிறார்கள்.

    `உடம்புக்கு ஏதாவது வந்தால், என் கணவர் குழந்தையாகி விடுவார்!’ என்று பெண்கள் பெருமையாகப் பேசிக்கொள்வதைக் கேட்டிருக்கிறேன். ஆரம்பத்தில் பெருமையாகத் தோன்றுவது நாளடைவில், எரிச்சலைத்தான் உண்டுபண்ணும்.

    சிறு வயதில் (ஹெலிகாப்டர்) பெற்றோர் சொல்வதை அப்படியே கடைப்பிடித்து நடந்துவிட்டு, பின் அதே அதிகாரத்தை கொண்டவனுக்கு அளிக்கிறார்கள் பெண்கள்.

    இம்மாதிரியான பெண்கள் தம்மை அப்படி வளர்த்த பெற்றோரை வெறுப்பதாகச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். `உன்மீது உன் தாய் அவ்வளவு பாசமாக இருந்தார்களே! நீ இப்படி அவர்களை ஓயாமல் பழிப்பது நன்றாக இல்லை!’ என்று நான் நாற்பதுக்கு மேற்பட்ட ஒருத்தியைக் கண்டித்தபோது, அவளுக்கு அழுகை வந்துவிட்டது. `என் நிலையிலுள்ள எல்லாருமே இப்படித்தான், தெரியமா?’ என்று பதிலளித்தாள், வீம்புடன்.

    ஓயாது தொணதொணத்தாலும், பெற்றோருக்கு தம் பெண்ணின் நலனில் இருந்த அக்கறை அவளை அதிகம் புரிந்துகொள்ளாத கணவனுக்கும் இருக்குமா என்பது யோசிக்க வேண்டிய இன்னொரு விஷயம்.

    `முட்டாள்!’ என்று பிறர் எதிரிலேயே மனைவியை எதற்கெடுத்தாலும் பழிப்பார் அந்தப் `பெரிய’ மனிதர். மனைவி எது செய்தாலும், அவர் சொன்னபடிதான் இருக்கவேண்டும். அவளும் மறுபேச்சின்றி அதை ஏற்றுக்கொண்டாள். எப்போதும் கணவரது சுகத்தையே அவள் நாடவேண்டும் என்ற எதிர்பார்ப்பில், தன் ஆற்றலை அவள் முழுமையாக வெளிக்கொணர முடியாது தடுத்துவிட்டார். தன்னை மிஞ்சிவிடுவாளோ என்ற அச்சமாகக்கூட இருக்கலாம்.

    திருமணமான புதிதில் இம்மாதிரி ஒரேயடியாக விட்டுக்கொடுத்த பெண்கள், சில வருடங்களுக்குப்பின் வெறுமையாக உணர்கிறார்கள். மனம் சஞ்சலமடைய, உடல் உபாதைகளும் எழுகின்றன.

    தம்பதியர் இருவரில் யாராவது ஒருவரோ, அல்லது இருவருமேயோ விட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தால், சண்டை வராமலிருக்கலாம். ஆனால், மகிழ்ச்சி இருக்குமா?

    ஓர் ஆங்கிலேயத் தம்பதி வீட்டுக்குப் போயிருந்தேன். `எனக்கு ஒரு டம்ப்ளர் கொண்டு வா,’ என்று கணவர் ஏவ, பத்து வருட காலம் அவருடன் இணைந்திருந்த மனைவி, `தானே போய் எடுத்துக்கொள்!’ என்று அயராமல் பதிலளித்தாள். எனக்கோ ஒரே திகைப்பு. இளவரசி டயானா தன் திருமணத்தின்போது, OBEY (கீழ்ப்படிகிறேன்) என்ற வார்த்தையை நீக்கச் சொன்னதுதான் நினைவு வந்தது.

    இப்போதெல்லாம் இளம்பெண்கள், இல்வாழ்வில் தோழமை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நட்பில் ஒருவரையொருவர் தட்டிக் கேட்கலாம், திருத்தலாம். புரிந்துணர்வு இருக்கும். இருவருக்குமிடையே ஒரு நல்ல இடைவெளி அமையும். தாம் விரும்பியதை விரும்பியபடி செய்துவிட்டு, அதை ஒருவரோடொருவர் பகிர்ந்துகொள்வர்.
    இதை விட்டு, ஓயாமல் மற்றவர் செய்வதைக் கண்காணிப்பதிலேயே தன் நேரத்தைச் செலவிட்டு, அதிலும் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டிருந்தால் மூச்சுத் திணறுவதுபோல் இருக்குமே! இம்மாதிரியான அம்மா-பிள்ளை, அல்லது கணவன்-மனைவி உறவால் யாருக்கு இன்பம்?

    தொடருவோம்.

    Share
  • கற்றல் -ஒரு ஆற்றல் (15)

    க. பாலசுப்பிரமணியன்

    ஆரம்ப நிலையில் பள்ளிகளில் குழந்தைகளின் பராமரிப்பு

     education

    புதிய சூழ்நிலைகளையும் புதிய உறவுகளையும் சந்திக்கின்ற குழந்தையின் உணர்வுகளைப் பார்த்தோம். இந்தப் புதிய சூழ்நிலைக்குத் தன்னைக் கொண்டுவிடும் தாயோ அல்லது மற்ற உறவினர்களைக் காணும் குழந்தையின் மனதில் இவர்கள் நம்மை விட்டு நீங்கி விடுவார்களோ அல்லது இந்த உறவு தற்காலிகமாக மறைந்துவிடுமோ என்ற பயம் ஏற்படுகின்றது.

    பள்ளியின் உள்ளே நுழைந்ததும் இதுவரை தனக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றிக் கேட்கும் பொழுது அது ஒரு புதிராகவோ அல்லது தன்னம்பிக்கையைத் தாக்குவதாகவோ தோன்றுகிறது. அந்த விஷயங்களை தன்னோடு இருப்பவர்கள் வேகமாக கற்றுக்க கொள்ளும் பொழுது தன்னுடைய குறைபாட்டை வெளிப்படுத்துவதாகவோ அல்லது தனது இயலாமைக்கு ஒரு வெளிச்சமாகவோ தெரிகின்றது. எனவே இங்கே நாம் மீண்டும் வரலாமா வேண்டாமா என்ற ஓர் கேள்விக்குறி மனதில் தோன்றுகின்றது.

    இந்த பய உணர்ச்சிகளுக்கு வடிகாலாக அழுகை அமைகின்றது. “அழக்கூடாது” என்று கட்டுப் படுத்தும் ஆசிரியர்கள், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும்பொழுது அந்தக் கட்டுப்பாடு மனதிற்கு உகந்ததாக இருப்பதில்லை.

    பள்ளிக்கு வரும்பொழுது ஒரு சீருடை அணிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்ற குழந்தை அதை அநேகமாக விரும்புவதில்லை. கழுத்தில் ஒரு tie, இடுப்பில் பெல்ட், காலில் பாதணிகள், முதுகில் தொங்கும் பை ஆகிவை ஒரு குழந்தையின் சுதந்திரத்திற்கு சவாலாக அமைகின்றன. விருப்பங்களுக்கு மாறாக இருக்கின்ற இந்த செயல்களால் தன்மீதும் பள்ளியின் மீதும் ஒரு விருப்பமற்ற சூழ்நிலை  உருவாகின்றது.

    இத்தகைய சூழ்நிலைகளில் வருகின்ற குழந்தையை பள்ளியில் எவ்வாறு கவனத்தோடு உறவாடவேண்டும் என்பது எல்லா ஆசிரியர்களும் புரிந்துகொண்டு செயல் படுத்தவேண்டிய ஒரு விஷயம். மறைமுக முறையிலே அறிவுக் கருத்துக்களை வைத்தல் அவசியம். ஆடல், பாடல், விளையாட்டு மூலமாக  தன்னம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும். இதுவே கற்றலுக்கான அடிப்படையாக அமைகிறது.

    மேலைநாடுகளில் பள்ளிக்கு முதல் நாள் வருகின்ற குழந்தைக்கு ஒரு மிகப் பெரிய விழாவே காத்திருக்கும். ஏதோ ஒரு மகிழ்ச்சியான இடத்திற்கு வருகை தருவது போல் இருக்கும். எவ்வாறு ஒரு குழந்தை ஒரு உயிரியல் பூங்காவில் வேடிக்கை பார்க்கச் செல்கின்றதோ அவ்வாறே ஒரு மனநிலை இருக்கும். பள்ளிகள் இந்த கருத்தை மனத்தில் வைத்து செயல் படுத்துதல் அவசியம்.

    பள்ளிகளில் ஆரம்ப நிலை ஆசிரியர்கள் இந்த நிலையை உருவாக்க என்ன செய்தல் வேண்டும்?

    1. ஆசிரியர்களின் உடல் மொழி

    ஆசிரியர்களின் உடல் மொழி அன்பும் கருணையும் கனிவும் உள்ளதாக இருத்தல் மிக அவசியம். பல நேரங்களில் ஆசிரியர்களின் உடல் மொழிகள் நல்ல உறவை ஏற்படுத்தவோ அல்லது இருக்கின்ற நல்ல உறவை தடுமாற வைக்கவோ காரணமாக இருக்கின்றன. கனிவுள்ள பார்வை, இதமான சொற்கள், முகத்தில் புன்சிரிப்பு , நெருங்கிய உறவாடல், சமநிலையுடன் உறவாடல், கோபமின்மை, அமைதி, விளையாட்டுத்தன்மை, எப்போதும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகம் .. இன்னும் எவ்வளவோ..!!

    2. ஆசிரியர்களின் பேச்சுத் திறன்கள்..

    குழந்தைகளுடன் பேசும் பொழுது அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில், அவர்கள் புரிந்து கொள்ளும் மொழியில், பக்கம் இருந்து, அன்பான வார்த்தைகளால் பேசவேண்டும். ஆசிரியர்களின் பேச்சுக்களும் உடல் மொழியும் குழந்தைகளால் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டவுடன் குழந்தைகள் அதற்குத் தக்கவாறு நடந்து கொள்கின்றன.

    பல ஆண்டுகளக்கு முன்னால் ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சி.– U K G வகுப்பில் படிக்கின்ற ஒரு குழந்தையை இழுத்துக்கொண்டு ஓர் ஆசிரியை பள்ளி முதல்வரின் அறைக்குள் நுழைந்து குழந்தையைப் பற்றி வசைமாரி பொழிந்து கொண்டிருந்தார். ” நீங்கள் உடனே இந்தக் குழந்தையை பள்ளியிலிருந்து நீக்கி விடவேண்டும். இல்லாவிட்டால் மற்ற குழந்தைகள் கெட்டுப்போய் விடுவார்கள் ” என்று சொன்னார்.

    முதல்வர் ஆசிரியையிடம் “என்னம்மா நடந்தது ” என்று வினவ.. “இவள் என் கன்னத்தில் அறைந்து விட்டாள் ” என்று கோபத்தில்  சொன்னார். அங்கே அமர்ந்திருந்த எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. முதல்வரின் சொல்கேட்டு அந்த ஆசிரியை அந்தப் பெண் குழந்தையை அந்த அறையிலேயே விட்டுச் சென்றார். சிறிது நேரம் கழித்து அந்தக் குழந்தை அருகில் சென்று நான் “உன் பெயர் என்னம்மா” என்று கேட்க அன்போடு அவள் தன் பெயரைச் சொன்னாள். ” ஏம்மா உங்க டீச்சரைக் கன்னத்தில் அடிச்சே? ” என்று கேட்க “சார், அவங்க பொய் சொல்றாங்க..முதல்ல அவங்கதான் என் கன்னத்தில் அடிச்சாங்க.. அப்புறம்தான் நான் அவங்க கன்னத்தில் அடித்தேன்.”  என்றாள்.

    குழந்தையிடம் அருகே சென்று அமர்ந்து அந்த ஆசிரியை ஏதோ கேட்க, பதில் தெரியாத குழந்தையை ஆசிரியை கன்னத்தில் அடிக்க.. அந்தக் குழந்தை அதையே திருப்பிச்செய்ய.. ” இது ஒரு இனிய நாடகம்.. நியூட்டனின் மூன்றாம் விதி….. செயலுக்கு எதிர் மறைச்செயல்

    குழந்தைகளின் உடலும் உள்ளமும் புண்ணாகாத வண்ணம் உறவாடுதல் ஒரு கலை… திறன்.. ஆசிரியர்களும் பெற்றோர்களும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு இனிய கற்றல்.!

    தொடருவோம்.

    Share