கவிதைகள்

தமிழரின் நாக்கு!

ஏறன் சிவா  மீன்புலிவில் வேந்தருடை மெய்யுரைக்கத் தமிழர்நா கூசாது! — அவர் வான்முட்டும் வரலாற்றை வகுத்துரைக்கத் தமிழர்நா கூசாது! — இங்கே காண்!தமிழர் அறிவியலைக் கணத்துரைக்கத் தமிழர்நா கூசாது! — பாரில் நான்தமிழன் எனப்பெருமை நவில்வதற்குத் தமிழர்நா கூசாது! வெல்நாட்டுப் போர்வெற்றியை விளக்குதற்குத் தமிழர்நா கூசாது!  — அவர் வல்கோட்டைக் கட்டியதை வாயுரைக்கத் தமிழர்நா கூசாது! — அணைக் கல்கோட்டைக் காலத்தைக் கணித்துரைக்கத் தமிழர்நா கூசாது! – தமிழ்ச் சொல்கோட்டைப் பெரிதென்றுச் சூளுரைக்கத் தமிழர்நா கூசாது! நெல்விளைக்கும் வேளாண்மையின் நெறியுரைக்கத் தமிழர்நா கூசாது! — ...

Read More »

குறளின் கதிர்களாய்…(296)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்…(296) உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை யற்றே தவத்திற் குரு. – திருக்குறள் – 261 (தவம்) புதுக் கவிதையில்… உண்டி சுருக்கல் போன்ற நோன்புகளால் தம் உயிருக்கு வரும் துன்பங்களைப் தாம் பொறுத்தலும், பிற உயிர்களுக்குத் துன்பம் தராதிருத்தலும் ஆகிய அளவினதே தவத்திற்கு வடிவமாகும்…! குறும்பாவில்… தவத்தின் வடிவம் இதுவே,   தன்னுயுயிருக்கான துன்பம்பொறுத்தல், பிறவுயிரைத் துன்புறுத்தாதிருத்தல் ஆகியவற்றின் அளவினதே…! மரபுக் கவிதையில்… உண்டி சுருக்கல் போலுள்ள உயர்தர நோன்புகள் பலவற்றால் அண்டிடும் தம்முயிர்த் துன்பங்கள் அனைத்தையு மொன்றாய்த் தாம்பொறுத்தும், ...

Read More »

உலகம் பெரிது

அண்ணாகண்ணன் இந்தப் பாடலை   ஆசிரியர் அண்ணாகண்ணன் குரலில் இங்கே கேட்கலாம்:   உலகம் பெரிது உலகம் பெரிது எதற்கும் அஞ்சாதே – நீ திலகம் உறுதி. எந்த நெற்றியில் என்பது பிற்பாடே! ஒருவர் மறுத்தால் ஒருவர் ஏற்பார் கவலை கொள்ளாதே ஒன்றில் குறைந்தால் ஒன்றில் கூடும் எதற்கு கண்ணீரே? ஒருவழி அடைத்தால் மறுவழி திறக்கும் உத்திர வாதம்இது. ஒருவிதை பிழைத்தால் மறுவிதை முளைக்கும் வாழ்வின் விளக்கம்இது. உழைப்பில் உண்மை; இலக்கில் மேன்மை உனக்குள் இருக்கிறதா? கனவு மெய்ப்படும்; கைவசம் ஆகும் காலம் இருக்கிறது. விழியே ...

Read More »

யாருடைய வரையறை?

சு. திரிவேணி, கோயம்புத்தூர் ஒரு மாதமாகக் களைகட்டிவிட்டது துறை. கல்லூரியின் வேலைநாள் முதல் விருந்தினர் வரை வேலைகள் வரையறுத்து வரம்புகள் தீர்மானித்துப் போகிறது விழாவின் பயணம். பயணம் நிறைவடைகையில் ஆரவாரம் ஆரம்பமாகிறது. விழாக்கோலமே மகிழ்வைத் தருகிறது. பரபரப்பும் பரவசமும் பார்ப்பவர் முகத்திலும் புன்னகையை வரவழைக்கிறது. எல்லாம் சரிதான்… அணிகலன்களும் மலர்மாலைகளுமாய் அலங்கரித்துக் கொண்டு மாணவிகளும் ஆளுமை உணர்வு ததும்பும் ஆடைகளில் புனைவுகளின்றி மாணவர்களும் வரவேண்டுமெனக் கண்டறிந்து வரையறுத்தவர் யார் என்பதுதான் அறியப்படவில்லை!

Read More »

நான் காற்றுவாங்கப் போனேன் ஒரு க‌‌‌‌‌ஷ்டம் வாங்கி வந்தேன்!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா பெல்பேண், அவுஸ்திரேலியா நான் காற்றுவாங்கப் போனேன் ஒரு க‌‌‌‌‌ஷ்டம்வாங்கி வந்தேன் அதைக் கேட்டு வாங்கவில்லை இப்போ கிலிக்குள் நிற்கிறேனே நான் காற்றுவாங்கப் போனேன் தொண்டை வரண்டு வருது எனக்கு தும்மல்கூட வருது உடலும் வலியாய் இருக்கு இப்போ உள்ளம் பயத்திலிருக்கு நான் காற்றுவாங்கப் போனேன் எச்சில் விழுங்கும் போதும் எனக்கு எரிச்சலாக இருக்கு மூச்சை இழுத்து நிற்க இப்போ சோர்வு அதிகமாச்சு நான் காற்றுவாங்கப் போனேன் பழத்தைக் கடித்துப் பார்த்தேன் அதன் இனிப்புத் தெரியவில்லை மலரை நுகர்ந்து பார்த்தேன் அதன் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(295)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(295) மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி மறைந்தொழுகு மாந்தர் பலர்.         – திருக்குறள் -278 (கூடாவொழுக்கம்) புதுக் கவிதையில்… உள்ளத்தின் உள்ளே அழுக்குடன் மாண்புடைய துறந்தார்போல் பலமுறை நீராடி தூயவர் போல் மறைந்தொழுகும் மாந்தர் பலர் உள்ளனர் பாரினிலே…! குறும்பாவில்… மனதினில் தூய்மையின்றி மாண்புடைத் தூயோர்போல் நடித்து நீராடி மறைந்தொழுகுவோர் பலருளர் மேதினியில்…! மரபுக் கவிதையில்… உள்ள மதிலே அழுக்குடனே      உடலைத் தூய்மை செய்திடவே கள்ள மனதை மறைத்தேதான்      கண்ட போதெலாம் ...

Read More »

ஆட்கொல்லி

சி. ஜெயபாரதன், கனடா ஆட்கொல்லி , ஆட்கொல்லி நச்சுக் கிருமி இது ! உடனே கொல்லாத நாட்கொல்லி  இது ! யுகப்போராய் ஞாலத்தில் தீப்போல் பற்றிவரும் காலக் கிருமி இது ! மனிதரால் உண்டாகி, மனிதரால் பரவி, மனிதரைக் கொல்லும் கிருமி இது ! உலகை ஒன்றாக்கி, ஒருவரை ஒருவர் மதித்து, உதவி செய்ய இணைத்த கிருமி  இது ! ஒளிந்திருந்து சில நாளில் உயிரைக் குடிப்பது ! கடவுளுக்கு அஞ்சாதவன் குடலும் நடுங்குது ! குவலயம் ஒடுங்குது ! கத்தியின்றி ரத்த மின்றி ...

Read More »

அன்பின் உறவே

சக்தி சக்திதாசன் நான் இங்கிலாந்திலே நீயோ தாயகத்திலே வசதிகள் நிறைந்தது இதுவென்றும் வசதிகள் வளர்ந்திடும் நாடு அதுவென்றும் வாயோயாது உரைத்திடும் பலருண்டு ஆனால் இன்றோ! உனக்கும் ஊரடங்கு எனக்கும் ஊரடங்கு வசதிகள் நிறைந்திடினும் வசதிகள் வளர்ந்திடினும் வேறுபாடு தெரிந்தா கொரோனா நுழைந்தது ? எனக்கொரு மதம், உனக்கொரு மதம் எனக்கொரு மொழி, உனக்கொரு மொழி நானொரு நிறம், நீயொரு நிறம் நீயொரு ஜாதி, நானோரு ஜாதியென எத்தனை, எத்தனை பேதமை பார்த்து வக்கிரமாக பற்பல உயிர் கொய்தோம் அகிலம் முழுவதும் நிறைந்திட்ட மாந்தர் அனவரும் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(294)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்…(294) தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்.        – திருக்குறள் –305 (வெகுளாமை)  புதுக் கவிதையில்… தன்னைத் தான் துன்பம் வராமல் காத்துக்கொள்ள விரும்பிடில், தன் மனத்தில் கோபம் வராமல் காத்திட வேண்டும்.. அவ்விதம் காவாதபோது, அச்சினம் தன்னையே அழித்திடும் துன்பங்கள் தந்தே…!  குறும்பாவில்… தன்னைத்தான் காத்திடக் கோபம் தன்மனதில் எழாமல் காத்திடவேண்டும், இலையேல் தன்னையேயழிக்கும் அக்கோபமே…! மரபுக் கவிதையில்… தனக்குத் துன்பம் வந்திடாமல்      தன்னை யொருவன் காத்திடத்தன் மனதில் சினமது ...

Read More »

மூவர் வாழ்க!

ஏறன் சிவா  தன்நாட்டின் எல்லைக்குள் தொழில்கள் செய்யத் தரையிரங்கி வந்தவர்கள்; இங்கி ருக்கும் பொன்வளத்தைக் கண்டுமனப் பேரா சையால் போர்செய்து; தந்திரங்கள் பலவுஞ் செய்து; மண்பிடித்தார்! மக்களினை அடிமை செய்து மலைவளங்கள் தொடங்கி,கடல் வளத்தை யெல்லாம் அன்னியர்கள் சுரண்டுகின்ற அவலங் கண்டே அகங்கொதித்தார் எரிமலைபோல் அங்கே மூவர்! அயலானை விரட்டுதற்கு அமைதிப் போரா? ஆகாது அகிம்சையின் பாதை என்று புயமுயர்த்தி, தோளுயர்த்தி, குரலு யர்த்தி போர்செய்யப் புறப்பட்டார் அந்த மூவர்! புயலொன்று குடிசைக்குள் புகுந்தாற் போல புகுந்தார்கள் அன்னியர்தம் கோட்டைக் குள்ளே! பயமின்றி, சிறுதுளியும் தயக்க மின்றி பற்றவைத்தார் விடுதலையின் ...

Read More »

தனித்திருப்போம் விழித்திருப்போம்

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா,  மெல்பேண், ஆஸ்திரேலியா நிலைபெறுமா றெண்ணிநிற்க நீள்புவியில் விரும்பிடுவோம் அலைபாயும் மனமதனை அடக்குதற்குத் துணிந்திடுவோம் நிலையில்லாப் பொருளையெலாம் நினைப்பினின்று அகற்றிடுவோம் நெஞ்சமதில் இறைநினைப்பை நிரந்தரமாய் இருத்திடுவோம்! ஏகாந்தம் இனிதென்று  எப்போதோ இயம்பியதை வாழ்நாளில் கடைப்பிடிக்க  வாய்க்கும்நிலை வந்திருக்கு தனித்திருப்போம் விழித்திருப்போம் தலையிடிகள் ஓடிவிடும் நாமெடுக்கும் எச்சரிக்கை நாட்டையுமே காத்திடுமே! சுத்தமே சோறிடும் என்பதனை மனமிருத்தி நித்தமுமே சுத்தமதை நிரந்தரமாய் ஆக்கிடுவோம் பயங்கொள்ளல் ஆகாது எனச்சொன்ன பாரதியை உளங்கொண்டு செயற்பட்டால் கலங்கல்நிலை தெளிவாகும் ! மஞ்சளது முக்கியத்தை மனமமிப்போ உணர்கிறது வேப்பிலையின் மகத்துவமும் விரிவடைந்து போகிறது துளசியிலை ...

Read More »

இசைக்கவி ரமணனின் கவிதை

இசைக்கவி ரமணன் இந்தக் கவிதையை இசைக்கவி ரமணனின் குரலில் இங்கே கேட்கலாம் தொங்கிச் சுழலும் உலகத்தைத் தொற்றிச் சுழற்றும் நோயொன்று பங்கம் செய்தது நம்வாழ்வை பணமும் இதன்முன் வெறும் ஏழ்மை எங்கே இருந்து வந்ததென இடத்தைச் சொல்லி என்னபயன்? எங்கும் அதுவாய் ஆகிறதே எல்லாம் பாழாய்ப் போகிறதே! நம்பிக் கைகள் ஒருபக்கம் நடுக்கங் கள்பல ஒருபக்கம் தெம்புடன் இருந்து பார்த்தாலும் தெரியா தேஇதன் நிசப்பக்கம்! வம்புச் சண்டை கிளப்பாமல் வதந்தி களினைப் பரப்பாமல் கும்பிடு போட்டுக் கைகழுவிக் குடிலில் ஒடுங்கும் காலமிது! பொறுமை தேவை ...

Read More »

கவிவருத்தம் தந்த கலிவிருத்தம்

கொடியேறி குடையாகி அடியேற்றி மகமாயி கொடிதான கொரானா மகிடனாய் வதமேவ படியேறி மருந்தாகி பரவாத படியாக குடியேறி வந்தாளே குவலயம் காக்கும்படி ஓங்கார ஒளிசோதி ரீங்கார ஒலியாகி ஆங்கார அரக்கரை அடங்கா பிணியோட தேங்காது வேம்பிடை தெரியாத படியாக தூங்காது நீக்கினளே நிமிர்ந்தெழு மானிடமே திரிசூலக் கூராகும் திகம்பர நேராகும் அடிகூட செம்மையா குங்கும நிறமேறி அதான மருந்தாய் அன்னை ஆகிவிட கலிகால நேராகும் காளியடி பணிவோமே கோதையைப் பழித்தனர் கீதையைக் கடிந்தனர் பாதையைப் பிரித்தனர் பகைமையை வளர்த்தனர் போதையில் அந்தணர் மறையினைைக் கிழித்தனர் ...

Read More »

மழைகூட இவர்களுக்கு வாழ்த்துக்கூறி நிற்கிறதே!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண், ஆஸ்திரேலியா வாழையிலை குடையாக வதனமெலாம் மலர்ச்சியுற விண்ணின்று பன்னீராய் மழைத்துளிகள் சிந்திடவே நாளைதனை நினையாமல் நனையுமந்தத் திருக்கோலம் பார்ப்பவரின் மனமெல்லாம் பக்குவமாய்ப் பதிந்திடுமே! உலகநிலை தனைமறந்து உளமகிழ்வு முகம்காட்ட மழைநனையும் அழகுநிலை மனமதனில் அமர்கிறதே களங்கநிலை காணாத காதல்நிறை பிணைப்பாக கைதொட்டு நிற்குநிலை களிப்பூட்டி  நிற்கிறதே! ஏழ்மையது எழிலாக இங்குருவாய் ஆகியதே ஆழமுடை  அன்புநிலை அருகணைந்து தெரிகிறதே வாழையிலை மகிழ்வுடனே காதல்கண்டு மகிழ்கிறதே மழைகூட  இவர்களுக்கு வாழ்த்துக்கூறி நிற்கிறதே!

Read More »

குறளின் கதிர்களாய்…(293)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்…(293) பகுத்துண்டு பல்லுயி ரோம்புத னூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை.                               – திருக்குறள் – 322 (கொல்லாமை)  புதுக் கவிதையில்… பிற உயிர்களை வதைக்காமல் பசித்த உயிர்களுக்குப் பகுத்துக் கொடுத்து உண்டு பல உயிர்களைக் காத்தல், அறநூலார் தொகுத்தளித்த அறங்களிலெல்லாம் தலையாய அறமாகும்…! குறும்பாவில்… பசித்த உயிர்களுக்குப் பகிர்ந்தளித்துண்டு பல்லுயிர் காத்தல், அறநூலோர் தொகுத்த அறங்களிலெல்லாம் முதன்மையானதே…! மரபுக் ...

Read More »