பா.ராஜசேகர்
அதோ
தெருவோரம்
அமர்ந்து கீரைவிற்கும்
மூதாட்டியிடம்
அவள்
சிறுகச்சிறுகச்சேர்த்த
சேமிப்பு
சுருக்குப்பையில் இருக்கும்
ஒரேஒரு
ஐநூறுரூபாய்நோட்டும்
செல்லாக்காசென
சொல்லிவிடாதீர்கள்
அவள் மனம்
சிதறிவிடப்போகிறது!
பா.ராஜசேகர்
அதோ
தெருவோரம்
அமர்ந்து கீரைவிற்கும்
மூதாட்டியிடம்
அவள்
சிறுகச்சிறுகச்சேர்த்த
சேமிப்பு
சுருக்குப்பையில் இருக்கும்
ஒரேஒரு
ஐநூறுரூபாய்நோட்டும்
செல்லாக்காசென
சொல்லிவிடாதீர்கள்
அவள் மனம்
சிதறிவிடப்போகிறது!
க. பாலசுப்பிரமணியன்
வீட்டுச் சூழ்நிலைகளும் கற்றலும்
ஒரு மனிதனுடைய சூழ்நிலைகள் அவனுடைய கல்வியின் போக்கையும் திறனையும் தரத்தையும் நிர்ணயிக்கின்றன கல்வியைப் பற்றிய பல ஆராய்ச்சிகளின் மூலம் சூழ்நிலைகள் எவ்வாறு கல்வியின் தரத்தை பாதிக்கின்றன என்பதையும் எவ்வாறு அதன் திசையை மாற்றுகின்றன என்பதையும் கல்வியாளர்கள் அறிந்துள்ளனர்.
இந்த சூழ்நிலைகளை உருவாக்குவதிலும் அதன் பலன்களை சரியான முறையில் வளர்த்து தக்க வைத்துக்கொள்வதில் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சமுதாயத்திற்கும் முக்கிய பொறுப்பு உண்டு.
ஒரு வீட்டைப் பொறுத்தவரை படிப்பதற்கான மற்றும் கற்றலுக்கான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கு தேவையானவை :
இப்படிப்பட்ட சூழ்நிலைகள் இருக்கும்பொழுது பெற்றோர்களின் ஆதரவும் தூண்டுதலும் இருக்குமானால் குழந்தைகளுக்கு படிப்பதில் ஆர்வமும் நம்பிக்கையும் வளர்ச்சி மற்றும் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கான தூண்டுதலும் கிடைக்கும். இந்தச் சூழ்நிலைகளில் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை பெற்றோர்கள் கொடுக்கும் பட்சத்தில் அவர்கள் வாழ்க்கையிலும் கல்வியிலும் சாதனைகளை படைப்பதில் உதவியாக இருக்கும் . இப்படிப்பட்ட சூழ்நிலைகள் வீடுகளில் இருக்கும் பட்சத்தில் குழந்தைகள் எந்த விதமான பள்ளிக்கூடத்தில் படித்தாலும் சாதனைப்பாதையில் முன்னேற வாய்ப்புக்கள் உண்டு. இதற்கான பல உதாரணங்களை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.
சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்தும் வாழ்க்கையில் சாதனை படித்து இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் அப்துல் கலாம் போன்ற பல பேர் அரசுப் பள்ளிகளில் படித்தாலும் வீடுகளில் இருந்த நல்ல சூழ்நிலைகளின் காரணமாக கற்றலிலும் வாழ்க்கையிலும் சாதனை புரிந்தது எல்லோருக்கும் தெரிந்ததே. இதே போன்று ஏழைக்குடும்பத்தில் பிறந்த எத்தனை பேர் பொறியியல் வல்லுனர்களாகவும் I A S அதிகாரிகளாகவும் ஆனதற்கு அவர்கள் குடும்பத்தின் சூழ்நிலைகள் காரணமாய் இருந்துள்ளனர்.
பொதுவாக, குழந்தைகளின் பிற்காலத்தைப் பற்றி சிந்திக்கும் பெற்றோர்கள் அவர்கள் வாழ்வில் ஒரு முழு மனிதனாக வளர வேண்டும் என்ற கருத்தை மனதில் கொள்ளவேண்டியது அவசியம். பெற்றோர்களுடைய செயல்கள் குழந்தைகளின் மனஅழுத்தத்தைத் தூண்டுவதாக அமைத்தல் கூடாது. அதே போல் அவர்களுடைய கற்றலைப் பற்றிய கருத்துக் பரிமாற்றங்கள் குழந்தைகளின் தாழ்வு மனப்பான்மையை வளர்ப்பதாகவோ அல்லது அவர்களுடைய ஆற்றலையும் திறனையும் கொச்சப்படுத்துவதாகவோ இருக்கக் கூடாது. அவர்களுடைய செயல்களையும் திறன்களையும் சற்றே பாராட்டுவதாகவும் மேன்மைப் படுத்துவதாகவும் இருத்தல் அவசியம். மற்றும் அவர்களை மற்றவர்களுடன் திறன்களிலும் கற்றலிலும் துலாபாரம் செய்தல் அவர்களுடைய தனித்தன்மையை பாதிப்பதாகவும் உண்மையான வளர்ச்சியை தடைசெய்வதற்கு ஏதுவாகவும் அமையும்.
பொதுவாக குழந்தைகளின் கல்வியின் வழித்தடங்களை நிர்ணயிப்பதில் பெற்றோர்கள் தங்களுடைய நிறைவேறாத கனவுகளையும் கற்பனைகளையும் ஊட்டி வளர்ப்பதாக ஒரு கருத்து நிலவுகின்றது. இதைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் குழந்தைகளின் தனிப்பட்ட வளர்ச்சியை மனதில் கொண்டு அவர்களுடைய ஆர்வத்தை வளப்படுத்த தேவையான சூழ்நிலைகளை உருவாக்குதல் அவசியம். இந்தச் சூழ்நிலை பொதுவாக குழந்தைகளுக்கு கற்றலில் சுதந்திரத்தையும் வீட்டில் அன்பான சூழ்நிலையையும் கொடுப்பதன் மூலம் அடையமுடியும்.
வீட்டின் பொருளாதாரச் சூழ்நிலைகள் குழந்தைகளின் கல்வியின் வழித்தடங்களையும் வளத்தையும் பாதிப்பதற்கான ஆதாரங்கள் நிச்சயமாக உள்ளன. அனால் அதை சரியான முறையில் கையாளும் பட்சத்தில் அதை ஒரு மிகப்பெரிய தடையாகக் கருதவேண்டிய அவசியம் இல்லை. பல நேரங்களில் நம்முடைய தடைகளே நமக்கு வலிமையையும் முன்னேற்றத்திற்குத் தேவையான சக்தியையும் கொடுப்பதற்கு சாத்தியமாக அமையும். ஆகவே பெற்றோர்கள் குழந்தைகளிடம் பேசும்பொழுதும் கருத்து பரிமாறும்பொழுதும் அந்தத் தடைகளை முன்னேற்றத்திற்கான படிக்கற்களாக மாற்ற முயற்சிக்க வழிகளை உருவாக்க உதவி செய்ய வேண்டும்.
தொடரும்
( எம் .ஜெயராமசர்மா…. மெல்பேண் … அவுஸ்திரேலியா )
காசநோய் ஒருகாலாம் காலனாய் நின்றது
கணக்கின்றிப் பலபேர்கள் காலனிடம் போனார்கள்
மருந்துபல வந்ததனை மாற்றிவிட்ட காரணத்தால்
காசநோய் கதையிப்போ காணாமல் நிற்கிறது !
அப்போது தொடக்கமே ஆருக்கு வந்தாலும்
அவராடி அடங்கிவிடும் அவலத்தை தருகின்ற
முற்றிநிற்கும் நோயாக முழுவுலகும் பரந்துநிற்கும்
புற்றுநோயை தடுப்பதற்கு புறப்படுங்கள் மருத்துவமே !
குழந்தைமுதல் பெரியவரை புற்றுநோய் வதைக்கிறது
குணமடைய பலமருந்தும் கொடுத்துமே வருகின்றார்
என்றாலும் இந்தநோய் எதைப்பார்த்தும் அசையாமல்
எமனாக வந்துநின்று இம்சையே கொடுக்கிறது !
புற்றுநோய் வந்துவிட்டால் புறவுலகே இருண்டுவிடும்
வெற்றிடமாய் எல்லாமே விரக்தியாய் ஆகிவிடும்
சுற்றமெலாம் சூழ்ந்திருந்து துக்கத்தில் ஆழ்ந்திடுவார்
வற்றிவிடும் வாழ்வுநோக்கி மனமழுது நின்றுவிடும் !
எப்படி வருமென்று எவர்க்குமே தெரியாது
அப்படி வந்துவிட்டால் அதுஅவர்க்கு பெருந்துன்பம்
தப்பிவிட மாட்டோமா எனவெண்ணும் ஏக்கத்தால்
தவியாய்த் தவிப்பதுவே பெருந்தவிப்பாய் ஆகிவிடும் !
பலவிதப் புற்றுநோய்கள் பலருக்கும் வருகிறது
சிலருக்கு சுகம்வந்து சிறிதுகாலம் வாழ்ந்திடுவர்
புற்றுநோய் பற்றிக்கொண்டோர் புலம்பிநின்று அழுதிடுவர்
அழுதிடுவார் கவலைபற்றி அதுவலட்டிக் கொள்வதில்லை !
புகைபிடித்தால் புற்றுநோய் வருமென்று சொன்னாலும்
புகைத்தபடி புற்றுநோய் விளம்பரத்தில் புகைவிடுவார்
அவர்க்குப்பகை புகையென்று அறிந்து அவரிருந்தாலும்
அவர்புகையை ரசித்தபடி ஆனந்தம் கொண்டிடுவார் !
விழுப்புணர்ச்சிக் கூட்டங்கள் பலசென்று வந்தாலும்
விழுப்புணர்ச்சி அவரிடத்தில் விழித்தபடி தானிருக்கும்
விழுந்தெழும்பி விவரீதம் அவருக்கு வந்தபின்னர்
விழிபிதுங்கி வேதனையில் வெந்துஅவர் துடித்துநிற்பார் !
புற்றுநோய் கோரமதை புரிந்துணர்ந்து கொள்ளவேண்டும்
புற்றுநோய் விழிப்புணர்வை பூரணமாய் பெறவேண்டும்
அற்பமெனப் புற்றுநோயை அலட்சியமாய் பார்க்காது
ஆரோக்கியம் நல்வாழ்வு அமைந்துவிட வேண்டிநிற்போம் !
நாகேஸ்வரி அண்ணாமலை
அமெரிக்காவின் நியுயார்க் மாநிலத்திலுள்ள யூடிகா என்னும் ஊரில் உள்ள, போதைப்பொருள் விற்றதற்காகக் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சீர்திருத்தச் சிறையில் நடந்த கொடுமையைப் பற்றி அறியும்போது குலை நடுங்குகிறது.
ஜூலை ஆறாம் தேதி திடீரென்று இந்தச் சிறையைக் கண்காணிக்கும் நாற்பது அதிகாரிகள் சிறைக்கு வந்து அங்கு இருக்கும் கைதிகளைத் துன்புறுத்த ஆரம்பித்தார்கள். மூன்று நாட்களுக்கு முன்னால் ஒரு அதிகாரி சிறையில் காயமடைந்ததாகவும் அதற்கு சிறைக் கைதிகளே காரணம் என்று அனுமானித்து முப்பத்திரெண்டு கைதிகளுக்கும் மேலானவர்களை அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்கள். அந்த அதிகாரி வளைக்கக்கூடிய ஒரு நாற்காலியில் அமர்ந்து கால்களை முன்னால் உள்ள ஒரு மேசையில் வைத்துக்கொண்டு ஒரு நாவலைப் படிக்க முயன்றிருக்கிறார். ஆனால் கண்களை என்னவோ மூடிக்கொண்டிருந்தார். திடீரென்று அந்த நாற்காலியிலிருந்து விழுந்து தலையில் காயம் பட்டு மயக்கம் அடைந்திருக்கிறார். இரு கைதிகள் அதைக் கண்டு அவருக்கு உதவ விரைந்திருக்கிறார்கள். அதிகாரிகள் தங்களுக்கு அவசர உதவி தேவைப்பட்டால் உதவி கோருவதற்காக வைத்திருந்த அவசர அலார பட்டனை அழுத்த முயன்றிருக்கிறார்கள். கண் விழித்த அவர் ‘வேண்டாம்’ என்று கூறியும் அதற்குள் அவர்கள் பட்டனை அழுத்திவிட்டார்கள். உதவிக்கு வந்த அதிகாரிகள் அதிகாரி காயமடைந்திருப்பதையும் அவர் அருகே இரண்டு கைதிகள் இருப்பதையும் பார்த்து அவர் காயமடைந்ததற்கு அந்தக் கைதிகள்தான் காரணம் என்றும் அது திட்டமிட்டுச் செய்த சதி என்றும் கூறி அவர்கள் இருவரையும் தனி செல்லுக்கு மாற்றித் துன்புறுத்தியிருக்கிறார்கள். அந்த அதிகாரிக்கு நடந்தது பற்றிய உண்மையை அறிய அந்த அறையில் கேமரா எதுவும் இல்லை. இந்தச் சம்பவம் நடந்த பிறகு அந்த அதிகாரி இரண்டு மாத மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். பத்திரிக்கைக்காரர்கள் அவரைப் பேட்டி காண முயன்றபோது ஒத்துழைக்கவில்லை. அதன் பிறகு அந்தக் கைதிகள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒருவரை மட்டும் இன்னொரு சிறைக்கு மாற்றியிருக்கிறார்கள். சிறையில் இன்னொரு கைதி அடிக்கடி அந்த அதிகாரியிடம் ‘ஒரு நாள் நீங்கள் இந்த நாற்காலியிலிருந்து விழுந்துவிடப் போகிறீர்கள்’ என்று ஜோக்கடிப்பாராம். அதேபோல் விழுந்திருக்கிறார்!
அந்த அதிகாரி நாற்காலியிலிருந்து கீழே விழுந்து மூன்று நாட்கள் கழித்து – அதாவது ஜூலை ஆறாம் தேதி – அதிகாரிகள் சிறைக்கு வந்து முப்பத்தி இரண்டு கைதிகளைப் பலவாறாகத் துன்புறுத்தியிருக்கிறார்கள். இவர்கள் உண்மையில் என்ன நடந்தது என்று கைதிகளை விசாரிக்க வந்தவர்கள். கைதிகளிடம் கடுமையாக நடந்துகொண்டால்தான் உண்மையை வரவழைக்க முடியும் என்று நினைத்து அவர்களைத் துன்புறுத்தியிருக்கிறார்கள். கூச்சலிட்டுக்கொண்டு உள்ளே நுழைந்த அதிகாரிகள் கைதிகள் எல்லோரையும் தரையில் படுக்குமாறு ஆணை பிறப்பித்திருக்கிறார்கள். சிலரைச் சுவரில் மோதி அவர்கள் மூக்கை உடைத்திருக்கிறார்கள்; ஒருவரின் ஆசனத் துவாரத்தில் இரும்புக் குழாய்களை நுழைத்திருக்கிறார்கள்; ஒருவரின் நெஞ்சில் மேல் ஏறி நின்றுகொண்டு பலவாறாக அவரை உதைத்திருக்கிறார்கள்; ஒரு வெள்ளை இனக் கைதி அதிகாரி விழுந்ததற்கு கைதிகள் யாரும் பொறுப்பில்லை என்று சொன்னதற்கு அவரை ‘வெள்ளை இனத்தவனான நீ எதற்காக இவர்களைக் காப்பாற்ற முயல்கிறாய்?’ என்று மிரட்டியிருக்கிறார்கள். அங்குள்ள கைதிகளில் கிட்டத்தட்ட எல்லோரும் கருப்பர்கள் மற்றும் ஹிஸ்பானியர்கள். ஹெர்னியா ஆபரேஷன் செய்துகொண்ட ஒரு கைதியை உதைத்துத் தரையில் தள்ளிவிட்டு எழுந்திருக்கும்படி கூறிய அதிகாரி கைதி எழுந்திருக்க முயன்றபோது அவர் ஆபரேஷன் செய்துகொண்ட இடத்திலேயே உதைத்தாராம். தன்னுடைய பால் அடையாளத்தை (sex identity) மாற்றுவதற்காக மருந்துகள் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒரு கைதியின் மருந்துகளைத் தரையில் போட்டு மிதித்து ஒரு அதிகாரி பாழாக்கினார். அவர் படித்துக்கொண்டிருந்த ஆண்டர்ஸன் கூப்பெர் என்னும் பெயர்பெற்ற பத்திரிக்கையாளர் எழுதிய புத்தக்கத்தை (இவரும் ஓரின ஈர்ப்பு இனத்தைச் சேர்ந்தவர். அவரும் அவருடைய தாயும் அவருடைய அந்த நிலையை எப்படிக் கையாண்டார்கள் என்பது பற்றிய புத்தகம்) கிழித்துப் போட்டிருக்கிறார்கள். கைதிகளின் உடைமைகளைத் தரையில் போட்டுப் பாழாக்கியிருக்கிறார்கள். வெள்ளை இனக்கைதிகளை நோக்கி, ‘நீங்கள் நம் இனத்திற்கே இழிவு தேடிக் கொடுப்பவர்கள் என்று கூறினாராம் ஒரு அதிகாரி. கருப்பு இனத்தைச் சேர்ந்த கைதிகளையும் ஹிஸ்பானிய இனத்தைச் சேர்ந்த கைதிகளையும் அவர் காட்டிக் கொடுக்கவில்லை என்பதால் அவர்களை இப்படி வசைபாடியிருக்கிறார்கள். முப்பத்தி இரண்டு கைதிகளையும் அடித்துத் துன்புறுத்திய பிறகு அந்த இடம் புயல் அடித்து ஓய்ந்த இடம்போல் இருந்ததாக ஒரு கைதி கூறியிருக்கிறார்.
அதன் பிறகு கைதிகளை அந்த இடத்தைச் சுத்தம் செய்யச் சொன்னார்களாம். அவர்கள் முன்னாலேயே கைதிகளின் உடைமைகள்மேல் அதிகாரிகள் சிறுநீர் கழித்தார்களாம்.
‘இதையெல்லாம் வெளியில் சொன்னால் மறுபடி வந்து உங்களைத் தொலைத்துவிடுவோம்’ என்று மிரட்டினார்களாம். அப்படியும் எப்படியோ இந்தக் கொடூரம் வெளியே தெரிந்து நவம்பர் 2-ஆம் தேதி இரண்டு பெரிய அதிகாரிகள் பதவியிலிருந்து தற்காலிகமாகப் பதவிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
சட்டம் கோலோச்சும் அமெரிக்காவில், ஒளிவுமறைவில்லாத ஆட்சியை (transparent government) வலியுறுத்தும் அமெரிக்காவில், ஒபாமா ஜனாதிபதியாக இருக்கும் அமெரிக்காவில் இப்படி நடந்திருக்கிறது. வெள்ளை இனம்தான் உயர்ந்தது என்று நினைக்கும், கருப்பர்கள், புதிய குடியேறிகள் (இதில் சிலர் விசா இல்லாமல் திருட்டுத்தனமாக வந்தவர்கள்), மாற்றுத் திறனாளிகள், ஏழைகள், பால் உணர்வில் மாறுபட்டவர்கள் ஆகியோர்களின் நலன்களுக்கு எதிராகப் பேசிவரும் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக ஆவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் ஜனாதிபதியான பின் அமெரிக்காவில் இவர்களின் நிலை என்ன ஆகும் என்று எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
நிர்மலா ராகவன்
முதியோரும் சந்ததியினரும்
`என் பெற்றோர் முதியோர் இல்லத்தில் இருக்கிறார்கள்!’ என்பவர்களைக் கொடுமைக்காரர்களாகச் சித்தரிக்கின்றன கதைகள்.
அவர்கள் இப்படிச் சொல்வது, `நானும் என் குடும்பத்தினரும் சுதந்திரமாக, அவர்கள் தொணதொணப்பில்லாமல் நிம்மதியாக இருக்கிறோம்!’ என்று பிறர் அர்த்தம் புரிந்துகொள்ள வழிவகுக்கிறது.
மாறும் காலம்
நூற்றிருபது ஆண்டுகளுக்குமுன்தான் மனிதனின் சராசரி வயதே நாற்பதுதானாமே! அப்போது இந்த பிரச்னைகள் இருந்திருக்காது.
இக்காலத்திலோ, வயதானவர்களுக்குப் பொருளாதார சுதந்திரம் இருந்தாலும், இளமையிலிருந்த உடல் வலு, ஆரோக்கியம், ஞாபகசக்தி போன்றவை கணிசமாகக் குறைந்துவிடுகின்றன. அப்போது அவர்களுக்குப் பெருமையளித்தவைகளை இழந்துவிட, அதிர்ச்சியடைகிறார்கள். பிறர் தங்களைக் குறைவாக எடைபோட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் தம் அதிகாரத்தை அதிகரித்துக்கொள்கிறார்கள்.
காலம் மாறிக்கொண்டிருக்கிறது, நம்மால் மாற முடிகிறதோ, இல்லையோ, நம் சந்ததியினர் அதற்கேற்ப நடந்துகொண்டால்தான் அவர்கள் வயதையொத்த பிறருடன் இணைய முடியும் என்பதை முதியோர் புரிந்துகொண்டால் பிரச்னையே எழாது.
எது முக்கியம்?
இன்றைய இளைய தலைமுறைக்கு உறவுகளைவிட நண்பர்கள் முக்கியமாகிவிட்டது. உள்ளூரில் மட்டுமின்றி, வெளிநாட்டிலிருக்கும், முகம் அறியாதவர்களுடனும் CHAT செய்வதில் (அரட்டை அடிப்பதில்) ஓர் ஆனந்தம்.
`இதே ஊரிலிலிருக்கும் பெரியம்மா வீட்டுக்கு வருஷத்துக்கு ஒரு முறைகூடப் போகாமல், அப்படி என்னதான் கம்யூட்டரோ, ராத்திரி பகலா!’ என்று ஒரு பாட்டி அலுத்துக்கொள்கிறாள் என்று வைத்துக்கொள்வோம்.
உறவினர் தாம் செய்வது எல்லாவற்றிலும் குறை காண்கிறார்கள். நண்பர்கள் என்றால், தாம் எது செய்தாலும் ஆதரித்து, பாராட்டுபவர்கள் என்று தோன்றிப்போகும் இளவயதினருக்கு. நண்பர்களும் இந்த மனப்பான்மைக்குத் தூபம் போடுவார்கள். (`எங்க வீட்டிலேயும் இப்படித்தான்! இந்த வயசானவங்களுக்கே MANNERS கிடையாது. MISBEHAVE பண்ணுவாங்க!’).
`நல்லது’ என்று எண்ணி ஏதாவது சொல்வது ஒருவருக்குக் கெட்ட பெயர்தான் வாங்கிக்கொடுக்கும். குடும்பத்தில் பிறர் செய்வதில் குறுக்கிடாமல் இருக்கும்வரைதான் எவருக்கும் மரியாதை நிலைக்கும்.
என் அனுபவம்
`எங்கள் காலத்தில், அந்தந்த வாரப் பாடத்தை சனி ஞாயிறுகளில் படிப்போம்,’ என்று ஒரு முறை நான் என் வகுப்பில் சொல்லப்போக, ஒரு மாணவி, `உங்கள் காலத்தில் டி.வி கிடையாது. இப்போது அப்படியா?’ என்று எதிர்க்கேள்வி கேட்டாள்.
படிப்பதைவிட, படித்து முன்னுக்கு வருவதைவிட, பொழுதுபோக்கு முக்கியம் என்று ஆகிவிட்டது. அறிவுரையை `தொணதொணப்பு’ என்று எண்ணி எதிர்த்துப் பேசுபவர்களை, `எப்படியோ தொலையுங்கள்!’ என்று விட வேண்டியதுதான்.
கூட்டுக்குடும்பமா?
ஒருவர் வாழ்வில் இன்னொருவர் குறுக்கிடுவது கசப்பை விளைவிக்கும். அவரவர் வயதுக்கும் அனுபவத்திற்கும் ஏற்றபடி நடக்கும் சுதந்திரம் இருந்தால்தான், குடும்பத்தில் அமைதி நிலவும்.
கதை:
போன தலைமுறையைச் சேர்ந்த ஒரு பெண்மணி பெரிய நகரங்களில் வாழ்ந்து, மெத்தப் படித்தவள். கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டாள். மாமியார் வீட்டுக்குப் போகும்போதெல்லாம் அவர்களது கெடுபிடியால் அதிர்ந்துபோனாள். இருப்பினும், `பெரியவர்கள் பேச்சைக் கேட்டு நடந்துகொள். அப்போதுதான் பிறந்த வீட்டுக்குப் பெருமை!’ என்ற தாய் சொல்லைத் தட்டாது வாழ்ந்தாள்.
அவளே மாமியாராக ஆனபின், அதே மரியாதையை தன் மகன்களின் மனைவிகளிடமிருந்து எதிர்பார்த்தாள். அவர்கள் மறைமுகமாகவோ, நேரிடையாகவோ அவளை எதிர்க்க ஆரம்பித்தார்கள். அவர்கள் தனிக்குடித்தனம் போனபின்னரும், `அறிவுரை கூறாமல் எப்படி!’ என்று விடாப்பிடியாக அவர்கள் செய்வதில் குறுக்கிட ஆரம்பித்தாள். அவர்கள் மாறுவதாக இல்லை. அவளுக்குத்தான் கெட்ட பெயர், ஓயாது அதிகாரம் செய்கிறவள் என்று. தன் இளமைக் காலத்தில் பொறுக்க முடியாததை எல்லாம் பொறுத்துப்போனோமே, இப்போது ஏன் இளவயதினர் அப்படி இல்லை என்ற குழப்பம்தான் மிச்சம்.
வயதேற ஏற
சிறு வயதில் பாட்டி தாத்தாவின்மேல் பேரக்குழந்தைகள் பாசம் வைத்திருக்கலாம். ஆனாலும், பதின்ம வயதில் அவர்களுடைய `நச்சரிப்பை’ ஏற்க முடியாது, எதிர்க்க ஆரம்பிக்கிறார்கள்.
இதைத் தவிர்க்க, பேரன் பேத்திகளின் அன்றாட நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டலாம் — அளவோடு. முதியவர்கள் தமது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைச் சுவாரசியமாக, கதைபோல் சொல்வது நல்லது.
உதாரணம்: என் மூத்த மாமாவின் மனைவிக்குக் கல்யாணத்தின்போது ஐந்து வயது! இது நடந்து நூறு வருடங்கள் ஆனபோதும், இன்று கேட்பதற்கு வியப்பாக இருக்கிறதல்லவா? (இதற்குத்தான் அந்தக் காலத்தில் உணவருந்தும்போதும், உறங்க வைக்கும்போதும் கதை சொல்லும் வழக்கம் வைத்திருந்தார்களோ?).
கதை கேட்ட சுவாரசியத்தில், தம்மையுமறியாமல், தம்மைப் பாதித்தவற்றைப் பகிர்ந்துகொள்வார்கள் சிறுவர்கள். மௌனமாகக் கேட்டுக்கொண்டால், அவர்களது மனநிலையைப் புரிந்துகொள்ள முடியும். எப்போதாவது அறிவுரையை நாடும் அளவுக்கு நட்புணர்வு மிகும்.
நமக்கென ஒரு பொழுதுபோக்கு
படிப்பது, இசையை ரசித்துக் கேட்பது, நண்பர்களுடன் உரையாடுவது, கணினி, தொலைகாட்சி — இப்படி எதையாவது தேர்ந்தெடுத்துக்கொண்டால், தினமும் நம் பொழுது இனிமையாகக் கழியும். பிறரது போக்கில் குற்றம் கண்டுபிடிக்க அவகாசமோ, அவசியமோ இராது.
ஆனால், மற்றவர் மெச்ச வேண்டும் என்ற எதிர்பார்ப்பைத் தவிர்ப்பது நல்லது. நமக்குப் பிடித்ததைச் செய்தால்தானே நிறைவு கிட்டும்?
தொடருவோம்
இன்னம்பூரான்
18 11 2016
நீதிதேவதை இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கும்போது சென்னை உச்சநீதிமன்றத்தின் கிளை மதுரையில் ஜூலை 24, 2005 அன்று துவக்கப்பட்டது. அந்த விழாவுக்குத் தலைமை வகித்த சென்னை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆற்றிய உரையில், ஒரு தென்றல் வீசியது என்கிறார், ஒரு பிரபல மூத்த வழக்கறிஞர். அவருடைய மைந்தன் உச்சநீதி மன்றத்தில் நீதிபதி என்றால்,பார்த்துக்கொள்ளுங்கள், பெரியவரின் பெருமையை.
தென்றல்: மக்களின் மேலாண்மைதான் குடியரசின் இலக்கணம். நீதிபதிகள், பிரதிநிதிகள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் எல்லாருமே மக்களின் ஊழியர்கள்; அதற்கு அவர்கள் பெருமிதம் கொள்ளவேண்டும். அத்துடன் நிற்காமல் வீசிய தென்றல், அந்த ஆளுமை படைத்த மக்கள் ஊழியர்கள்மீது, அவர்களின் பணியின் குறைவுகளின்மீது குற்றம் காணலாம். நமது அதிகாரமே மக்களின் நம்பிக்கையின்மீது தான் செழிக்கிறது; அவதூறு வழக்குத் தொடரும் சக்தியின்மீது அல்ல.
பேச்சுரிமையும், கருத்துரிமையும் நமது அரசியல் சாஸனம் அளித்த வரன்கள். அதற்கு விலக்காக அமையும் இந்த கோர்ட்டாரின் அவதூறு சட்டம் ஏற்புடையது அல்ல. ஒரு ஜட்ஜ் லஞ்சம் வாங்கி விட்டாரென்று கற்பனை செய்து கொள்வோம். அந்த உண்மையை எடுத்துரைப்பது அவதூறு என்று கோர்ட்டார் அந்த உண்மை விளம்பியைத் தண்டிப்பது அபத்தம் இல்லையோ! மேலும் ஒரு அபத்தம். நமது அரசியல் சாஸனத்தின் ஷரத்து 124 (4) நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை செய்த ஜட்ஜை நீக்க வழிசெய்கிறது. அதைச் செயல்படுத்த விரும்புபவர் முதலில் அதே ஜட்ஜால் ஜெயிலுக்கு அனுப்பப்படலாம்! இந்த அபத்தத்தைத் தவிர்க்க வழி இல்லையா? உளது. நீதித்துறையே இந்தக் குறையை நீக்கவேண்டும். அவர்கள் சுணங்கினால், வேறு வழியின்றி நாடாளுமன்றமே அதை நீக்கவேண்டும். அவையில் ஊசி விழும் சத்தம்கூட கேட்காத மெளனம். எத்தனை முகங்கள் இறுகியவையோ? சொன்னால் பொல்லாப்பு. பத்துவருடம் கழிந்த நிலையிலும் நான் மாட்டிக்கொள்ளலாம். ஜெயிலுக்குப் போற வயதா? திகார்லெ பிஸ்கெட் ராஜன் பிள்ளையை சாவடிக்கல்லை?
[Pillai’s widow, Nina Pillai, alleged that a conspiracy was behind the death of her husband in the jail. She urged the court to direct a CBI probe on the conspiracy angle as she feared foul play in the death of her husband. The Chief Metropolitan Magistrate (CMM) had ordered a CBI inquiry based on the petition.[9] The medical officer who conducted the autopsy, deposed before the CMM, and said that Pillai had died of asphyxia caused by blocking of blood in the respiratory system.The Justice Leila Seth Commission under Leila Seth was constituted to enquire into the conspiracy angle of his custodial death, but did not find any conclusive evidence. The Commission had issued advertisements in the newspapers seeking public help in the matter. Nina Pillai said she would provide evidence about the conspiracy angle, but later she refused to name the conspirator. The Commission concluded that ‘ways and means must be found to ensure that competent doctors were posted in the jail’. The Commission also suggested that the UN standard minimum rules be followed, and a prisoner should be allowed to be treated by his own doctor. Following the submission of its report, there were systemic changes at the Tihar jail, with a 24-hour attendance by doctors. There were 75 doctors on call compared to the previous 16, and initial medical check up was made imperative~ Wikipaedia] எனினும்?!
அந்தப் பிரபல வழக்கறிஞர், ‘என்னுடைய 55 வருட சட்டம் சார்ந்த துறையில் பெற்ற அனுபவத்தில், இம்மாதிரி ஒரு நீதிபதியே தன் மனத்துள் புகுந்தாரய்ந்து பொருத்தமான வழிமுறையை முன்னுரைப்பதை முதலில் காண்கிறேன் என்று புளகாங்கிதம் கொள்கிறார்.
அந்தத் தலைமை நீதிபதி திரு. மார்க்கண்டேய கட்ஜு அவர்கள்.
அந்தப் பிரபல வழக்கறிஞர்: ஃபாலி. எஸ்.நாரிமன் அவர்கள்.
காலத்தின் கோலமடா! இன்று இந்தியாவின் உச்சமன்றத்தில் ஒரு தாவா.
கோர்ட்டாரை அவமதித்தாகக் குற்றம் சுட்டப்பட்டவர்: அந்த மாஜி தலைமை நீதிபதி திரு. மார்க்கண்டேய கட்ஜு அவர்கள்.
அவருக்காக வாதாடப்போகும் வழக்கறிஞர்:அந்த பிரபல வழக்கறிஞர்: ஃபாலி.எஸ்.நாரிமன்.
[தொடரும்]
*****
சித்திரத்துக்கு நன்றி:
http://ai-i1.infcdn.net/icons_siandroid/png/200/8466/8466765.png
–செண்பக ஜெகதீசன்
நிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல். (திருக்குறள்-959: குடிமை)
புதுக் கவிதையில்…
மண்ணின் இயல்பை,
அதில்
முளைத்தெழும் விதைகாட்டும்…
மனிதன் பிறந்த குலத்தின்
மாண்பை அவன்
வாய்ச்சொல் காட்டிவிடும்!
குறும்பாவில்…
மண்தன்மை காட்டும் முளைக்கும்விதை,
மனிதனின் பேச்சு காட்டிவிடும்
பிறந்த குலத்தின் குணத்தை!
மரபுக் கவிதையில்…
மண்ணில் விழுந்த விதையதுதான்
-முளைத்து வந்திடும் முளையினிலே
கண்ணில் தெரியும் உண்மையது
-காணும் நிலத்தின் இயல்பதுவே,
மண்ணில் மனித வாழ்வுதனில்
-மனிதன் பேசும் பேச்சினிலே
திண்ணமாய்த் தெரியும் காண்பீரவன்
-தோன்றிய குடியின் இயல்பதுவே!
லிமரைக்கூ…
மண்வளம் முளையில் தெரியும்,
மனிதன் பிறந்த குலமாண்பு அவன்
பேசிடும் பேச்சிலே புரியும்!
கிராமிய பாணியில்…
போட்டவெத மொளைக்கயில
புரிஞ்சிபோவும் மண்ணுவளம்,
காட்டிப்புடும் காட்டிப்புடும்
மொளயதுதான் காட்டிப்புடும்
மண்வளத்தக் காட்டிப்புடும்…
தெரிஞ்சிபோவும் தெரிஞ்சிபோவும்
மனுசன் பொறந்தகொலக்
கொணமதுதான் தெரிஞ்சிபோவும்,
அவன் பேசுகிற
பேச்சிலதான் தெரிஞ்சிபோவும்
நல்லாவே தெரிஞ்சிபோவும்…!
-மேகலா இராமமூர்த்தி
இவ்வாரப் போட்டிக்கான படத்தை எடுத்துத்தந்திருப்பவர் திருமதி. ராமலக்ஷ்மி. தேர்வாளர், வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியரான திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்களுக்கு நம் நன்றிகளை உரித்தாக்குவோம்!
அன்னையவள் கரந்தவழும் அலைபேசி படம்பிடிப்பது யாரை என்று ஆவலுடன் பார்வையிடுகின்றதோ இந்த மழலை?
இதற்கான விடையைக் கண்டுபிடிக்க நம் கவிஞர்கள் காத்திருக்கின்றார்கள்.
***
”பிள்ளையைக் கவனியாது கைப்பேசியில் அன்னையவள் எடுக்கும் இந்தப் படம், பொய்வாழ்வே மெய்யென்று அப்பிள்ளைக்குச் சொல்லாமல் சொல்லித்தரும் பாடம்” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.
நாளைய பாடம்…
கைக்குழந்தையைக் கவனிக்காமல்
கீழே விட்டு,
கைபேசியில் படமெடுத்து
மெய்மறந்தால்,
நாளை வரும்
பொய் வாழ்வு
தானே படம்பிடிக்கப்படுகிறது–
பிள்ளை நெஞ்சில்…!
***
”நிஜத்தைத் தொலைத்து நிழலை ஆராதிக்கும் வழக்கத்தை விஞ்ஞானம் கற்றுத்தந்துவிட்டதால், பெற்றமனம் கல்லாகவும் பிள்ளைமனம் பித்தாகவும் மாறிப்போயிருப்பது நிழலல்ல நிஜமே!” என்கிறார் திருமிகு. ராதா விஸ்வநாதன்.
நிஜங்களை விட
நிழல்களையே தேடுகிறது மனம்
நிழல்களை நிஜமாக்கி விட்டது விஞ்ஞானம்
வானைமுட்டும் இதன் வளர்ச்சியில்
இன்று நிஜங்களின் பலி ஏராளம்!
பிஞ்சு மனத்தின் கெஞ்சல்
பெற்றவளின் காதில் எட்டவில்லை
சுயத்தின் நிழலில் தொலைந்து விட்டது
அவளது தொடு உணர்வு
தொடர்பு எல்லைக்கு அப்பால் அவள் நிற்க
பிள்ளை மனம் பித்தாகி
பெற்ற மனம் கல்லான இக்காட்சி
நிழல் அல்ல நிஜம்
***
அழுதபிள்ளைக்குப் பாலூட்டாமல் அவசியமற்ற செயல்களில் சிந்தையைச் செலுத்தும் அன்னையைச் சாடுகின்றார் திரு. சி. ஜெயபாரதன்.
சேயிக்குப் பசி!
தாய்ப்பால் கேட்கிறது!
தாயிக்கு மோகம்!
ஆண்பால் தேடுது!
பெண்பாலுக்கு ஆண்பால்!
அழுத பிள்ளைக்குப் பாலூட்டும்
அன்னை இல்லை!
தவமிருந்து பெற்ற பிள்ளை
தவியாய்த் தவிக்குது!
பிள்ளை இல்லாதவள் அந்த
பிரம்மாவைத் துதிப்பாள்!
பிள்ளை உள்ளவள் காதலன் தேடி
கல்லாகிப் போனாள்!
***
இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…
’செல்பி’ மோகம்
நின்றால் நடந்தால் இருந்தாலென்ன
சின்னச்சின்ன அதிர்வுகளும் கவனிக்கப்படும்
செல்லப்பிள்ளையாய் மனசு துடிக்கும்
சிறுவெற்றிடம் கிடைத்தாலும்
கைபேசி காட்சிப்படமாய் விரிந்திடும்
காட்சிப்படங்களை நுட்பமாய்ச் செதுக்குகையில்
காட்சிப்பிழைகளாய் அகாலமரணங்கள்
சிருங்காரம் முதல் மெய்ப்பாடுகள் கையடக்கப் பதிவுகளாய்
தன்மோகம் அதிகரித்துப் பிறர்வாட
வேடிக்கை பார்க்கும் நாகரிகம்
வேகமாய்ப் பரவும் மாயமென்ன?
இயற்கை அழகு கொட்டிக்கிடக்க
அன்னையவள் அருகிருக்க
பிஞ்சு மழலையின் பஞ்சுக் கரங்கள் பற்றிட ஆளில்லை
நெஞ்சுரத்தில் நஞ்சுரம் ஏறிய காரணமென்ன
யான் அறியேன் பராபரமே!
செல்பேசியில் ’செல்ஃபி’ எடுக்கும் வசதி வந்தாலும் வந்தது…மாந்தரனைவரும் வயது வித்தியாசமின்றித் ’தம்படம்’ (செல்ஃபி) எடுத்துத் தம் பெருமையைத் ’தம்பட்டம்’ அடித்துக் கொள்வதிலேயே பொழுதைக் கழிக்கத் தொடங்கிவிட்டனர். அரவணைக்கவேண்டிய பிஞ்சுக்குழந்தையையும் அந்நியமாக்கிவிடும் இந்த நஞ்சுகுணம் நல்லோரை அஞ்சவே செய்கின்றது எனும் அருங்கருத்தைத் தன்கவிதையில் பதிந்திருக்கும் திருமிகு. மா. பத்ம பிரியாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கின்றேன்.
க. பாலசுப்பிரமணியன்
நேற்றைய சொந்தங்கள் நிலையாய் இல்லை
பற்றிய பந்தங்கள் நினைவில் முல்லை
வந்தது நின்றது வளர்ந்தது வீழ்ந்தது
விந்தை வாழ்வெனும் மாயை கலைந்தது !
பூப்பும் மூப்பும் புலனுள் அடக்கம்
பூவா நினைவுகள் மண்ணில் கிடக்கும்
புரிந்த உயிர்கள் புதிதாய் பிறக்கும்
புரியா நெஞ்சங்கள் பொழுதும் துடிக்கும் !
மதியிட்ட கணக்கை விதியொன்று வென்றது
விழிகண்ட பார்வை வழியின்றி முடிந்தது
அறிவென நினைத்தது அமைதியில் மறைந்தது
விதியிட்ட பாதையோ வாழ்வெனும் கவிதை ?
வண்ணங்கள் விலகிட வெளிச்சமே உண்மை
எண்ணங்கள் மறைந்தால் எல்லாம் நன்மை
சின்னங்கள் உள்ளே சிறைப்பட்ட வாழ்க்கை
பின்னங்கள் இல்லை பேரருள் கருணை !
உதிர்ந்திடும் இலைகள் உணர்த்திடும் உவமை
சருகாய் வீழ்ந்ததும் சமத்துவம் உண்மை
உருவாய் இருக்கையில் உதவிடும் நிழல்கள்
உலகுக்கு இலைகள் தருகின்ற பெருமை !

http://slideplayer.com/slide/
பெருநிறை விண்மீன்கள் பிறப்பு இன்னும் மர்மமாகத் தெரிகிறது நமக்கு. காரணம் இந்த விண்மீன்கள் தீவிரமாய்த் திண்ணிய வாயுத் தூசிகள் ஈடுபாடு கொண்டவை. இந்த ஒளிபுகாச் சூழ்புறம் [Opaque Envelope] நவீனத் தொலை நோக்கிகள் மூலம் ஆயும் நேரடி நோக்குதலுக்கும் கடினமாய் உள்ளது. சொல்லப் போனால், இவ்வகை விண்மீன்கள் பிறக்கும் தாலாட்டு ஊஞ்சல் மட்டும் நமக்குத் தெரிகிறதே தவிர, அந்த விண்மீன்கள் தென்படு வதில்லை.
ரால்ஃப் கியூப்பர் [ Emmy Noether Research Group for Massive Star Formation, Germany]
குளிர்தேசக் கணப்பு அடுப்பில் மரத் துண்டுகளை எறிந்தால் குப்பெனத் தீப்பற்றுவதுபோல், பெருநிறை விண்மீன்கள் எழுப்பும் தீவிரப் பேரொளி வெடிப்புகள் நூறாயிரம் சூரியன்கள் உண்டாக்கும் கூட்டு ஒளிமயத்தைக் காட்டுகின்றன. இம்மாதிரி ஒளி வெடிப்பு நிகழ்ச்சிகள், பிரபஞ்சத்தில் சிறுநிறை கொண்ட நமது சூரியன் போல், பூர்வப் பரிதிகள் தோன்றிய போதும் நேர்ந்துள்ளன.
எட்வேர்டு வொரோபையோவ் [ஜெர்மன் ஆய்வக அறக்கட்டளை]

முன்னுரை: பிரபஞ்சத்தில் சூப்பர்நோவா ஒன்று விளைவித்த கொந்தளிப்பில் அல்லது பளுமிக்க விண்மீன் ஒன்று வெடித்த கொந்தளிப்பில் புதிய விண்மீன் ஏற்பாடுகள் (New Star Systems) உருவாகுகின்றன. நமது சூரிய மண்டலமே பால்மய வீதி காலக்ஸியின் சுருள் ஆரத்தில் மரித்த ஒரு சூப்பர்நோவா வீசி எறிந்த மிச்சத்திலிருந்து தோன்றி யிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் ஒரு கோட்பாடை ஊகிக்கிறார்கள். சுமார் 5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அது வெளியேற்றிய கூண்டு விண்வெளியில் உலவி வீதி வழியே தூசி துணுக்குகளை வாரிக் கொண்டு, வழி நெடுவே திண்ணிய தீக்கனலுடன், எரியும் வாயுக்களில் நீல நிறத்தில் எக்ஸ்ரே கதிர்களை எழுப்பிக் கொண்டு சென்றது !

பெருநிறை விண்மீன்கள் பிறக்கும்போது பேரொளி வெடிப்பு நேர்கிறது
பெருநிறை விண்மீன்களின் பிறப்பானது, வானியல் விஞ்ஞானி களுக்கு இன்னும் புதிராகவும், மர்மமாகவும் இருக்கிறது. அதற்குக் காரணம் : அந்த வகை விண்மீன்கள் பேரடர்த்தி வாயுத் தூசிகள் கலந்த அரங்குகளில் அடைபட்டுக் கிடக்கின்றன. அந்த ஒளிபுகாச் சூழக நிகழ்ச்சிகளை தொலை நோக்கிகள் மூலம் காண்பதும் கடினமாய் உள்ளது. இந்த விஞ்ஞான ஆய்வுகளில் ஈடுபட்டு வருவது, ஜெர்மன் ஆய்வு அறக்கட்டளை [GRB – German Research Foundation] [Emmy Noether Research Group for Massive Star Formation] தலைமை விஞ்ஞானி ரால்ஃப் கியூப்பர் [Rolf Kuiper].
ஜெர்மன் ஆய்வாளர் ஒரு கணினி இலக்கப் போலி மாடலில் [Computer Numerical Simulation] இட்டு அதன் விளைவுகள் வெளியிட்டுள்ளார். அதற்கு அதிகத் திறனுள்ள கணினிகள் [High Performance Computers] பயன்படுத்தப் பட்டன. அந்த மாடல்கள் சுய ஈர்ப்பியல் இறுக்கி அழுத்தப்படும் வாயுத் தூசி முகிலில் ஆரம்பமாகிறது. அதுவே முடிவில் கொந்தளிக்கும் இளம்பரிதி ஒன்றைச் சுற்றிவரும் சுழற் தட்டாகி [Accretion Disk] உருவா கிறது. அந்த சுழற் தட்டுப் பிண்டம் ஒரு மையப் பரிதியைச் சுற்றிவந்து, மெதுவாக வாயுத் தூசிகளை மையத்தை நோக்கி இழுக்கிறது.
வெடிப்பு நிகழ்ந்து பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து வெடியலைகள், குளிர்ந்து போன கருமை முகிலோடு முட்டி முனையில் செந்நிற ஹைடிரஜன் மின்னிட மோதியது ! இந்தப் பின்புலத்திலே மோதலுக்குப் பிறகு வாயுக்கள் குளிர்ந்து திணிவும் (Density) உஷ்ணமும் மாறி பல்வேறு வண்ணப் பட்டைகள் (Muli-colour Bands) தெரிந்தன. குளிர்ந்து திரண்ட ஆரஞ்சு நிறத் திரட்டுகள் விண்மீனின் வடிவாயின ! சிதைவுக் குப்பைகள் ஈர்ப்பு ஆற்றலில் மேலும் அழுத்தமாக்கப் பட்டன. காலம் செல்லச் செல்ல ஈர்ப்பு விசையே வலுத்து வாயுக்களையும், தூசி துணுக்குகளையும் சுருக்கித் திரட்டி சுழற்றுத் தட்டுகளாய் ஆக்கின ! பிற்காலத்தில் அத்தட்டுகளே “முன்னோடி விண்மீன்களாகவும்”, முன்னோடிக் கோள்களாகவும் (Protostars & Protoplanets) விண்மீன் ஏற்பாடுகளுக்கு அடிப்படையாயின (Steller System Forerunners).

இந்திய அமெரிக்க வானியல் விஞ்ஞான மேதை சுப்ரமணியன் சந்திரசேகர் (1910-1995) விண்மீன்களின் தோற்ற பௌதிகத்தையும், கருந்துளைகள் (Black Holes) பற்றிய ஆராய்ச்சிகளையும் சிகாகோ பல்கலைக் கழகத்தில் பல்லாண்டுகள் செய்தவர். அவர் விண்மீன்களின் பளுவுக்கும் அவற்றின் சிதைவுக்கும் உள்ள தொடர்பைக் கண்டுபிடித்தார். ஒரு விண்மீனின் பளு சூரியனைப் போல் 1.4 மடங்கானால் அது சிதைவடைந்து மடியும் போது நியூட்ரான் விண்மீனாகவோ அல்லது ஒரு கருந்துளையாகவோ (Neutron Star or Black Hole) மாறிவிடும் என்று கூறினார். அந்தக் குறிப்பிட்ட 1.4 விகித எண்ணிக்கையே “சந்திரசேகர் வரம்பு” (Chandrasekher Limit) என்று வானியல் விஞ்ஞானிகளால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலும் “வெண்குள்ளி” விண்மீன்களின் (White Dwarf Stars) பளு வரம்பையும், உள்ளமைப்பையும் சந்திரசேகர் விளக்கினார்.

விண்வெளியில் கண்சிமிட்டும் விண்மீன்களின் தோற்றமும் சிதைவும்!
பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் வானியல் வல்லுநர்கள், மின்மினிபோல் வானிருளில் மினுமினுக்கும் விண்மீன்களைப் பரிதியின் பரம்பரைச் சேர்ந்த அண்டங்களோ என்று ஐயுற்றார்கள்! விண்மீன்களின் இடம்மாறிய பிம்பங்களை [Stellar Parallaxes] முதலாகக் கண்டு, 1838 இல் அந்த ஐயம் மெய்யான தென்று உறுதியானது. மேலும் அந்நிகழ்ச்சி விண்மீன்களின் இயற்கைத் தன்மைகளை ஆழ்ந்து அறிய அடிகோலியது. சுயவொளி வீசும் சூரிய வம்சத்தைப் போல் தோன்றினாலும், பல விண்மீன்கள் முற்றிலும் வேறுபட்டவை!

கோடான கோடி விண்மீன்களின் பிறந்தகமும், அழிவகமும் எல்லையற்ற பிரபஞ்சத்தில் பால்வீதி ஒளிமயத் திடலே [Milky Way Galaxy]! தோன்றிய எந்த விண்மீனும் அழியாமல் அப்படியே உருக்குலையாமல் வாழ்பவை அல்ல! பூமியில் பிறந்த மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் எப்படி ஆயுட்காலம் என்று குறிக்கப் பட்டுள்ளதோ, அதே போன்று அண்டவெளியிலும் விண்மீன் ஒவ்வொன்றுக்கும் ஆயுட்காலம் தீர்மானிக்கப் பட்டுள்ளது! இதுவரைப் பத்து பில்லியன் ஆண்டுகள் விண்வெளியில் கண்சிமிட்டி வாழ்ந்து வந்த சில விண்மீன்கள், இன்னும் 100 பில்லியன் ஆண்டுகள் கழித்து அழிந்து போகலாம்! சில விண்மீன்கள் சூரியனை விடப் பலமடங்கு பெரியவை! சில வடிவத்தில் சிறியவை!

கொதிப்போடு கொந்தளிப்பவை சில! குளிர்ந்து கட்டியாய்த் திரண்டவை சில! ஒளிப் பிழம்பைக் கொட்டுபவை சில! ஒளி யிழந்து குருடாகிப் போனவை சில! பல பில்லியன் மைல் தூரத்தில் மினுமினுக்கும் விண்மீன்களைப் பற்றிய விஞ்ஞானிகளின் அறிவெல்லாம், அவற்றின் ஒளித்திரட்சிதைப் பார்த்து, ஒளிமாற்றத்தைப் பார்த்து, இடத்தைப் பார்த்து, இடமாற்றத்தைப் பார்த்து, ஒளிநிறப் பட்டையைப் [Light Spectrum] பார்த்துத், தமது பெளதிக ரசாயன விதிகளைப் பயன்படுத்திச் செய்து கொண்ட விளக்கங்களே!
ஒரு விண்மீன் தனது உடம்பைச் சிறிதளவு சிதைத்து வாயு முகிலை உமிழ்கிறது. அப்போது விண்மீன் முன்பு இருந்ததை விட 5000-10,000 மடங்கு ஒளி வீசுகிறது! அது நோவா விண்மீன் [Nova Star] என்று அழைக்கப்படுகிறது. சூப்பர்நோவா [Supernova] விண்மீன்கள் வெடிப்பில் சிதைவுற்றுச் சிறு துணுக்குகளை வெளியேற்றிச் சூரியனை விட 100 மில்லியன் மடங்கு ஒளிமயத்தைப் பெறுகின்றன. சூரிய குடும்பத்தின் அண்டங்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள்கள் ஒரு சூப்பர்நோவா வெடிப்பில் உண்டானவை என்றும், அவற்றைப் பின்னால் சூரியன் கவர்ந்து கொண்டதாகவும் கருதப்படுகிறது!

Supernova & White Dwarf
பரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு [1.4 times Solar Mass] மேற்பட்ட விண்மீன் இறுதியில் ஒரு வெண்குள்ளியை [White Dwarf] உருவாக்குவ தில்லை என்று சந்திரசேகர் கூறினார். [வெண்குள்ளி என்பது பரிதியின் பளுவை (Mass) அடைந்து, அணுக்கருச் சக்தி யற்றுச் சிதைந்த விண்மீன் ஒன்றின் முடிவுக் கோலம். அது வடிவத்தில் சிறியது! ஆனால் அதன் திணிவு [Density] மிக மிக மிகையானது!] அதற்குப் பதிலாக அந்த விண்மீன் தொடர்ந்து சிதைவுற்று, சூப்பர்நோவா வெடிப்பில் [Supernova Explosion] பொங்கித் தனது வாயுக்களின் சூழ்வெளியை ஊதி அகற்றி, ஒரு நியூட்ரான் விண்மீனாக [Neutron Star] மாறுகிறது. பரிதியைப் போல் 10 மடங்கு பருத்த விண்மீன் ஒன்று, இன்னும் தொடர்ந்து நொறுங்கி, இறுதியில் ஒரு கருந்துளை [Black Hole] உண்டாகிறது. சந்திரசேகரின் இந்த மூன்று அறிவிப்புகளும் சூப்பர்நோவா, நியூட்ரான் விண்மீன், மற்றும் கருந்துளை ஆகியவற்றை விளக்கிப் பிரபஞ்சம் ஆதியில் தோன்றிய முறைகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றன.

சந்திரசேகரின் ஒப்பற்ற வாழ்க்கை வரலாறு
இந்தியராகப் பிறந்து அமெரிக்காவில் குடிபுகுந்த சுப்ரமணியன் சந்திரசேகர் பிரிட்டிஷ் இந்தியாவில் 1910 ஆம் ஆண்டு அக்டோபர் 19 இல் லாகூரில் அவதரித்தார். 1930 இல் பெளதிகத்திற்கு நோபெல் பரிசு பெற்று உலகப் புகழடைந்த விஞ்ஞானி ஸர் சி.வி. ராமனின் மருமான் [Nephew] சந்திரசேகர், என்பது இந்தியர் பலருக்குத் தெரியாது! தந்தையார் சுப்ரமணிய ஐயர் அரசாங்க நிதித்துறையகத்தில் வேலை பார்த்து வந்தார். தாயார் சீதா பாலகிருஷ்ணன் பிள்ளைகள் பிற்காலத்தில் பேரறிஞர்களாக வருவதற்கு ஊக்கம் அளித்தவர். பத்துக் குழந்தைகளில் சந்திரசேகர் மூன்றாவதாகப் பிறந்த முதற் பையன்! 1918 இல் தந்தையார் சென்னைக்கு மாற்றலானதும், சந்திரசேகர் சென்னை ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து [1922-1925] படித்துச் சிறப்பாகச் தேர்ச்சி அடைந்தார்.
பிறகு பெரியப்பா சி.வி. ராமன் அவர்களைப் பின்பற்றிச் சென்னை பிரிசிடென்ஸிக் கல்லூரியில் படித்து, 1930 இல் மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் B.Sc. பட்டதாரி ஆனார். கல்லூரியில் சிறப்புயர்ச்சி பெற்று முதலாகத் தேறியதால், அரசாங்கம் அவர் மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்ல உதவிநிதிப் பரிசளித்தது. அங்கே கேம்பிரிடிஜ் பல்கலைக் கழகத்தின் டிரினிடிக் கல்லூரியில் படித்துப் 1933 இல் பெளதிகத்தில் Ph.D. பட்டத்தைப் பெற்றார். 1936 செப்டம்பரில் கல்லூரியில் சந்தித்துக் காதல் கொண்ட லலிதா துரைசாமியை மணந்து கொண்டார். கேம்பிரிட்ஜில் ஸர் ஆர்தர் எடிங்டன் [Sir Arthur Eddington], மில்னே [E.A. Milne] போன்ற புகழ் பெற்ற வானியல் வல்லுநர்களின் நட்பைத் தேடிக் கொண்டார்.

Sun’s Evolutionary Tracks
அதற்குப் பிறகு சிகாகோ பல்கலைக் கழகத்தில் 1937 இல் ஆய்வுத் துணையாளர் [Research Assistant] பதவியை ஒப்புக் கொண்டு, அமெரிக்காவுக்குச் சென்றார். 1938 இல் சந்திரசேகர் வானியல் பெளதிக [Astrophysics] உதவிப் பேராசிரியராகி, ஒப்பற்ற வானியல் பெளதிகப் பேராசிரியர் மார்டன் ஹல் [Morton Hull] அவர்களின் கீழ் பணியாற்றினார். அவர் பணி யாற்றிய இடம் விஸ்கான்சின், எர்க்ஸ் வானியல் நோக்ககம் [Yerks Observatory, Williams Bay, Wisconsin]. சந்திரசேகர் 1953 இல் அமெரிக்கப் பிரஜையாக மாறினார். 1952 ஆம் ஆண்டு பேராசிரியர் ஆக்கப் பட்டுப் பல ஆண்டுகள் வேலை செய்து, ஓய்வுக்குப் பின்பு கெளரவப் பேராசிரிய ராகவும் 1986 வரை அங்கே இருந்தார். சந்திரசேகர் வானியல் ஆராய்ச்சிகள் செய்து வெளியிட்ட, விண்மீன் தோற்றத்தின் இறுதி நிலைக் கோட்பாடு [Theory on the Later Stages of Stellar Evolution] என்னும் பெளதிகப் படைப்பிற்கு 1983 இல் நோபெல் பரிசை, அமெரிக்க விஞ்ஞானி வில்லியம் ·பவ்லருடன் [William Fowler] பகிர்ந்து கொண்டார். அந்தக் கோட்பாடு அண்டவெளியில் நியூட்ரான் விண்மீன்கள் [Neutron Stars]. கருந்துளைகள் [Black Holes] ஆகியவற்றைக் கண்டு பிடிக்க உதவியது.

H-R Diagram
அண்டவெளியில் சூப்பர்நோவா, வெண்குள்ளி விண்மீன்கள்
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் டேனிஸ் விஞ்ஞானி ஐஞ்சர் ஹெர்ட்ஸ்புருங் [Einjar Hertzsprung] அமெரிக்க விஞ்ஞானி ஹென்ரி ரஸ்ஸெல் [Henri Russell] இருவரும் முதன் முதல் விண்மீன்களின் ஒளிவீச்சையும், உஷ்ணத்தையும் சேகரித்து, ஒரு வரைப்படத்தில்
புள்ளியிட்டு அவற்றின் இணைச் சார்புகளைக் காட்டினார்கள். அந்த ஹெர்ட்ஸ்ப்ருங்-ரஸ்ஸெல் [Hertzsprung-Russell, H-R Diagram] வரைப்படமே வானியல் பெளதிகத்தில் விண்மீன்களின் தன்மைகளை எடுத்துக் காட்டும் ஒரு முக்கிய ஒப்புநோக்கு வரைப்பட மாகப் பயன்படுகிறது. ஒளித் திரட்சியை நேரச்சிலும் [Luminosity in Y-Axis], உஷ்ணத்தைக் மட்ட அச்சிலும் [Temperature in X-Axis] குறித்து, ஆயிரக் கணக்கான விண்மீன் களின் இடங்களைப் புள்ளி யிட்டுக் காட்டப் பட்டுள்ளது. ஹைடிரஜன் 10% கொள்ளளவுக்கும் குறைந்து எரிந்த பெரும்பான்மையான விண்மீன்கள் முதலக வீதியில் [Main Sequence] இடம் பெற்றன. ஒளிமிக்க விண்மீன்கள் இக்கோட்டுக்கு மேலும், ஒளி குன்றியவை கோட்டுக்குக் கீழும் குறிக்கப் பட்டன. பேரொளி வீசுவதற்கு விண்மீன் பெருத்த பரப்பளவு கொண்டிருக்க வேண்டும்! அவைதான் பெரும் பூத விண்மீன்கள் [Super Giants] ! அவற்றுக்கும் சிறியவைப் பூத விண்மீன்கள் [Giant Stars]! பிறகு வாயுக்கள் எரிந்து எரிந்து அவைச் செந்நிறப் பூதங்களாய் [Red Giants] மாறுகின்றன! போகப் போக வாயு விரைவில் காலி செய்யப் பட்டு, ஈர்ப்பு விசையால் குறுகி விண்மீன்கள் வெண்குள்ளியாய் [White Dwarfs] சிதைவாகின்றன.

Supergiants & White Dwarfs
பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகுப் பரிதியும், ஒரு வெண்குள்ளியாகச் சிதைவடைந்து மடியப் போவதாய்க் கருதப் படுகிறது! அவ்வாறு நிகழ்ந்தால் அது ஒரு செந்நிறப் பூதமாகி [Red Giant] புதன், வெள்ளி ஆகிய இரு கோள்களை வெப்பக்கடலில் மூழ்க்கி, அடுத்து பூமியின் வாயு மண்டலத்தை ஊதி வெளியேற்றிக், கடல்நீரைக் கொதித்துப் பொங்க வைத்து, உயிரினம் யாவும் மடிந்து மீண்டும் எதுவும் வாழ முடியாத வண்ணம், பூமி ஓர் நிரந்தர மயான கோளமாய் மாறிவிடும்! ஏறக்குறைய முழுப்பகுதி ஹைடிரஜன் வாயுள்ள விண்மீன், ஈர்ப்பு விசையால் பேரளவில் அமுக்கப் பட்டுச் சுருங்கி உண்டானது. வாயுக்கள் கணிக்க முடியாத பேரழுத்தத்தில் பிணைந்து, பல மில்லியன் டிகிரி உஷ்ணம் உண்டாகி, வெப்ப அணுக்கரு இயக்கம் [Thermonuclear Reaction] தூண்டப்பட்டு அவை ஹீலியமாக மாறுகின்றன. அந்த நிகழ்ச்சியின் போது அளவற்ற வெப்பமும், வெளிச்சமும் எழுந்து பிணைவு இயக்கம் [Sustained Fusion Reaction] தொடர்கிறது!
1930 ஆரம்ப ஆண்டுகளில் விஞ்ஞானிகள், ஹைடிரஜன் சேமிப்பு யாவும் எரிந்து ஹீலியமாகி வற்றியதும் விண்மீன்கள் சக்தி வெளியீட்டை இழந்து, தமது ஈர்ப்பு ஆற்றலால் அமுக்கப் பட்டுக் குறுகி விடுகின்றன என்று கண்டார்கள். பூமியின் வடிவுக்குக் குன்றிப் போகும் இவையே வெண்குள்ளிகள் [White Dwarfs] என்று அழைக்கப் படுபவை. வெண்குள்ளி கொண்டுள்ள அணுக்களின் எலக்டிரான்களும் அணுக்கருத் துகள்களும் [Nuclei] மிக மிகப் பேரளவுத் திணிவில் [Extremely High Density] அழுத்தமாய் இறுக்கப் பட்டு, எண்ணிக்கை மதிப்பில் நீரைப் போல் 100,000-1000,000 மடங்கு அதன் திணிவு ஏறுகிறது என்று பின்னால் கணிக்கப் பட்டுள்ளது!
Structure of a Star
சந்திரசேகர் எழுதிய விண்மீன் அமைப்பின் முதற்படி ஆய்வு
சந்திரசேகரின் சிறப்பு மிக்க ஆக்கங்கள் விண்மீன்களின் தோற்ற மூலம் [Evolution of Stars], அவற்றின் அமைப்பு [Structure] மற்றும் அவற்றுள் சக்தி இயக்கங்களின் போக்கு [Process of Energy Transfer], முடிவில் விண்மீன் களின் அழிவு ஆகியவற்றைப் பற்றியது. வெண்குள்ளிகளைப் [White Dwarfs] பற்றிய அவரது கோட்பாடு, பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் ரால்·ப் பவ்லர் [Ralph Fowler], ஆர்தர் எடிங்டன் [Arthur Eddington] ஆகிய இருவரும் தொடங்கிய வினையைப் பின்பற்றி மேற்கொண்டு விருத்தி செய்தது.
சிதைவுப் பண்டங்கள் [Degenerate Matter] சேர்ந்து பேரளவுத் திணிவு [Extremely High Density] பெருத்த வெண்குள்ளியில், எலக்டிரான்களும் அணுக்கருத் துகள் மின்னிகளும் [Ionized Nuclei], விண்மீனின் ஈர்ப்பு விசையால் இறுக்கிப் பிழியப் படுகின்றன என்று 1926 இல் ரால்ஃப் பவ்லர் விளக்கிக் கூறினார்.

அதே ஆண்டு ஆர்தர் எடிங்டன் ஹைடிரஜன் அணுக்கருக்கள் பிணைந்து ஹீலியமாக மாறி, சக்தியைச் சுரக்கும் மூலமாக விண்மீன்களில் இருக்கலாம் என்று எடுத்துக் கூறினார். சந்திரசேகர் தனது ‘விண்மீன் அமைப்பின் முதற்படி ஆய்வு ‘ [An Introduction to the Study of Stellar Structure] என்னும் நூலில், விண்மீன் தனது எரிவாயுவான ஹைடிரஜன் தீரத் தீர முன்னைப்போல் ஒளிக்கதிர் வீசத் தகுதி யற்று, அதன் ஈர்ப்பு விசை சிறுகச் சிறுக அதே விகிதத்தில் குன்றிச் சுருங்குகிறது என்று எழுதியுள்ளார். ஓர் அண்டத்தின் ஈர்ப்பு விசை அதன் பளுவைச் [Mass] சார்ந்து நேர் விகிதத்தில் மாறுகிறது! பளு குன்றினால், அண்டத்தின் ஈர்ப்பு விசையும் குறைகிறது! ஈர்ப்பு விசைச் சுருக்கத்தின் [Gravitational Collapse] போது, விண்மீனின் பளு ஒப்புமை நிலைப்பாடு [Relatively Constant] உள்ளது என்று சந்திரசேகர் அனுமானித்துக் கொண்டார். அந்தச் சுருக்கத்தை நிறைவு செய்ய, பேரமுக்க முள்ள எலக்டிரான்கள் [Highly Compressed Electrons] பொங்கி எழுந்து, விண்மீன் நொறுங்கிச் சிதைவடைந்து, சிறுத்துப்போய் முடிவில் வெண்குள்ளியாக [White Dwarf] மாறுகிறது என்பது அவர் கருத்து!

What is a White Dwarf ?
சந்திரசேகர் ஆக்கிய வெண்குள்ளிக் கோட்பாடு கூறுவது என்ன ?
1936 முதல் 1939 வரை சந்திரசேகர் வெண்குள்ளிகளின் கோட்பாட்டை [Theory of White Dwarfs] உருவாக்கினார். அந்தக் கோட்பாடு வெண்குள்ளியின் ஆரம், பளுவுக்கு எதிர்விகிதத்தில் மாறுவதாக [Radius is inversely proportional to Mass] முன்னறிவிக்கிறது! பரிதியின் பளுவை விட 1.4 மடங்கு பெருத்த எந்த விண்மீனும் வெண்குள்ளியாக மாற முடியாது! வெண்குள்ளியா சிதைவடைவதற்கு முன்பு பரிதியின் பளுவை விட 1.4 மடங்கு மிகுந்த விண்மீன்கள் தமது மிஞ்சிய பளுவை, முதலில் நோவா வெடிப்பில் [Nova Explosion] இழக்க வேண்டும்! சந்திரசேகரின் மேற்கூறிய மூன்று முன்னறிவிப்புகளும் மெய்யான விதிகள் என்று விஞ்ஞானிகள் உறுதிப்பாடு செய்துள்ளனர்! ஏற்கனவே தெரிந்த ஒரு வெண்குள்ளிகளின் சரிதையைத் தவிர, இவற்றைத் தொலை நோக்குக் கருவிகள் மூலம் கண்டு ஒருவர் நிரூபிப்பது மிகவும் கடினம்! வானியல் வல்லுநர்கள் இதுவரை அறிந்த எந்த வெண்குள்ளியும் நிறையில் 1.4 மடங்கு பரிதியின் பளுவை மிஞ்சி யுள்ளதாகக் காணப்பட வில்லை! விண்மீன்களின் நிறையை இனம் பிரித்திடும் அந்த வரையரைப் பளு எண்ணைச் [1.4] ‘சந்திரசேகர் வரம்பு ‘ [Chandrasekar Limit] என்று வானியல் விஞ்ஞானம் குறிப்பிடுகிறது.

Red Giant turning to White Dwarf
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆக்கிய சிறப்பு ஒப்பியல் நியதி [Special Theory of Relativity] மற்றும் குவாண்டம் பெளதிகக் கோட்பாடு [Principles of Quantum Physics] ஆகிய இரண்டையும் பயன்படுத்திச் சந்திரசேகர், ஓர் அறிவிப்பை வெளியிட்டார். ‘பரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு நிறை யுடைய ஒரு வெண்குள்ளி விண்மீன், சிதைவுற்ற வாயுவில் உள்ள எலக்டிரான்களின் உதவியை மட்டும் கொண்டு நிலைப்பாடு கொள்ள முடியாது. அப்படிப் பட்ட ஒரு விண்மீன் தனது வெப்ப அணுக்கரு எரு [Thermonuclear fuel] முழுதையும் எரித்துத் தீர்க்கா விட்டால், அதன் பளு சந்திரசேகர் வரம்பை விடவும் மிகையானது என்று அறிந்து கொள்ள வேண்டும்’.
தொலைநோக்கியில் காணப் பட்ட மெய்யான வெண்குள்ளி விண்மீன்களின் பளுவைக் கணித்ததில், அவை யாவும் சந்திரசேகர் வரம்புக்குக் [1.4] குறைந்த தாகவே அறியப் பட்டன! அந்த வரம்புக்கு மேற்பட்ட பளுவை உடைய விண்மீன், தனது அணுக்கரு எரிப்புக் காலம் [Nuclear-Burning Lifetime] ஓய்ந்தபின், ஒரு வேளை நியூட்ரான் விண்மீனாக [Neutron Star] ஆகலாம்! அல்லது ஒரு கருந்துளையாக [Black Hole] மாறலாம்! சந்திரசேகர் ஆராய்ந்து வெளியிட்ட வானியல் சாதனைகள் விண்மீன்களின் இறுதி ஆயுள் நிலையை எடுத்துக் காட்ட உதவி செய்கின்றன. மேலும் ஏறக் குறைய எல்லா விண்மீன்களின் பளுக்களும் சந்திரசேகர் வரம்பு நிறைக்குள் அடங்கி விட்டதால், அகில வெளியில் பூதநோவாக்கள் [Supernovas] எதுவும் இல்லாமைக் காட்டுகின்றன. [நோவா என்பது உள்ளணுக்கரு வெடிப்பு (Internal Nuclear Explosion) ஏற்பட்டுப் பேரளவில் சக்தியை மிகைப்படுத்தி வெளியாக்கும், ஒரு விண்மீன்].

Star turning to Black Dwarf
ஈர்ப்பியல் நொறுங்கலில் தோன்றும் கருந்துளைகள்!
1968 இல் கருந்துளை என்று முதன் முதலில் பெயரிட்டவர், அமெரிக்க விஞ்ஞானி ஆர்ச்சிபால்டு வீலர் [Archibald Wheeler]. ஆயினும் அவருக்கும் முன்பே கருந்துளையைப் பற்றிப் பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் வேதாந்தி [John Mitchell (1783)], மற்றும் பிரென்ச் கணித வல்லுநர் பியரி ஸைமன் லாபிளாஸ் [Piere Simon de Laplace (1796)] ஆகியோர் இருவரும் கருந்துளையின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பற்றி எழுதியுள்ளார்கள்.
கருந்துளை [Black Hole] என்பது விண்வெளியில் பேரடர்த்தி [Highly Dense] கொண்டு, நியதிப்படி இருப்பதாகக் கற்பனிக்கப் பட்ட ஓர் அண்டம்! அகில வெளியில் ஈர்ப்பு விசைப் பேராற்றலுடன் உட்புறம் இழுத்துக் கொண்டிருக்கும் ஓர் குழிப் பகுதி. அப்பகுதியில் எதுவும், ஏன் ஒளிக்கதிர் வீச்சு, மின் காந்தக் கதிர்வீச்சு [Electromagnetic Radiation] கூட அதன் அருகே நெருங்க முடியாது!
விண்மீன்கள் தோற்றம்
அதன் அருகே புகும் ஒளிக்கதிர்கள் நேராகச் செல்ல முடியாமல் வளைக்கப் படும்; அல்லது ஈர்ப்பு மையத்துக் குள்ளே கவர்ந்து இழுக்கப் படும்! ஆகவே கருந்துளையின் பக்கம் ஒளி செல்ல முடியாத தால், அதன் இருப்பிடத்தைத் தொலை நோக்கி மூலம் காண்பது அரிது! கருங்குழியிலிருந்து எழும் எக்ஸ்ரே கதிர்களை [X-Rays], பூமியில் உள்ள வானலை நோக்கிகள் [Radio Telescopes] நுகர்ந்து கண்டு பிடிக்க முடியும். பபெருத்த ஒரு விண்மீன் தனது எரிபொருள் யாவும் தீர்ந்த பின், அதன் நிறையால் சிதைந்து, ஈர்ப்பாற்றல் [Gravitation] மிகுந்து அதன் உருவம் குறுகிக் கருந்துளைஉண்டாகிறது! அதன் வடிவம் ஒரு வளைவான கோள விளிம்பில் [Spherical Boundary] சூழப் பட்டுள்ளது. அந்தக் கோள விளிம்பின் ஊடே ஒளி நுழையலாம். ஆனால் தப்ப முடியாது! ஆதலால் அது முழுக்க முழுக்கக் கருமை அண்டமாக இருக்கிறது. ஈர்ப்பியல் நொறுங்கல் [Gravitation Collapse] நிகழ்ச்சி ஆக்கவும் செய்யும்! அன்றி அழிக்கவும் செய்யும்! ஒரு விண்வெளி அண்டத்தில் அல்லது விண்மீன் கோளத்தில் ஈர்ப்பாற்றல் விளைவிக்கும் உள்நோக்கிய சிதைவை ஈர்ப்பியல் நொறுங்கல் என்று வானியல் விஞ்ஞானத்தில் கூறப்படுகிறது. அண்டவெளிக் கோள்களும், விண்மீன்களும் ஈர்ப்பியல் நொறுங்கல் நிகழ்ச்சியால் உருவாக்கப் படலாம்; அல்லது அவை முழுவதும் அழிக்கப் படலாம்.

Star Structure
சிறு விண்மீன்களில் நிகழும் ஈர்ப்பியல் சிதைவுகள்
சில சிறு விண்மீன்களில் இந்த ஈர்ப்பியல் நொறுங்கல் மெதுவாக நிகழ்கிறது! சில காலத்திற்குப் பிறகு நின்று விடுகிறது! வெப்பம் படிப்படியாகக் குறைந்து, விண்மீன் வெளிச்சம் மங்கிக் கொண்டே போகிறது! வானியல் நோக்காளர்கள் அந்த மங்கிய விண்மீனையும் தொலைநோக்கி மூலம் காணலாம்! அவைதான் வெண்குள்ளிகள் [White Dwarfs] என்று அழைக்கப் படுகின்றன. நமது சூரியனும் உதாரணமாக பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்பு ஒரு வெண்குள்ளியாகத்தான் தனது வாழ்வை முடித்துக் கொள்ளப் போகிறது!
சில சமயங்களில் இறுதி நொறுங்கல் [Final Collapse] விண்மீனில் ஹைடிரஜன், ஹீலியம் ஆகியவற்றை விடக் கனமான மூலகங்களில் [Heavier Elements] திடீரென அணுக்கரு இயக்கங்களைத் தூண்டி விடலாம்! பிறகு அவ்வணுக்கரு இயக்கங்களே சூப்பர்நோவாவாக [Supernova] வெடித்து ஆயிரம் ஒளிமயக் காட்சிகளை [Galaxies] விட பேரொளி வீசக் காரண மாகலாம்! ஓராண்டுக்குப் பிறகு பேரொளி மங்கி, பரவும் முகில் வாயுக்கள் கிளம்பி, மூல விண்மீனின் நடுக்கரு [Core] மட்டும் மிஞ்சுகிறது! அம்முகில் பயணம் செய்து, அடுத்து மற்ற அகில முகிலோடு கலந்து, ஈர்ப்பியல் நொறுங்கலில் புதிய ஒரு விண்மீனை உண்டாக்கும்! எஞ்சிய நடுக்கரு பேரளவுத் திணிவில் [Extremely Dense] இறுகி வெப்பமும், வெளிச்சமும் அளிக்க எரிப்பண்டம் இல்லாது, முடமான நியூட்ரான் விண்மீனாய் [Neutron Star] மாறுகிறது!

Steller Formation seen By Hubble Telescope
நியூட்ரான் விண்மீன் முதல் நூறாயிரம் ஆண்டுகள் வானலைக் கதிர்க் கற்றைகளை [Beams of Radio Waves] வெளியாக்கி, விண்மீன் சுற்றும் போது கதிர்கள் பூமியில் உள்ள வானலைத் தொலைநோக்கியில் துடிப்புகளை [Pulses] உண்டாக்குகின்றன! ஓர் இளைய நியூட்ரான் விண்மீன் துடிப்பி [Pulsar] என்றும் குறிப்பிடப்படுகிறது. துடிப்பியின் குறுக்களவு சுமார் 9 மைல்! ஆயினும் அதன் பளு பிரம்மாண்டமான நமது பரிதியின் நிறைக்கு ஒத்ததாகும்!
பூத விண்மீனில் நிகழும் ஈர்ப்பியல் சிதைவு ! கருந்துளைகள் !
பேரளவு பளு மிகுந்த ஒரு விண்மீன் சிதையும் போது அழுத்தமோ, அணுக்கரு வெடிப்போ இறுதி நொறுங்கலை நிறுத்துவ தில்லை! அந்த விண்மீனின் ஆரம் [Radius] சிறுக்கும் போது, அதன் விளிம்பின் வளைவில் ஈர்ப்பு விசைப் பெருக்கம் அடைகிறது!
முடிவில் ஆரம் மிகச் சிறியதாகி, ஈர்ப்பு விசை பிரம்மாண்ட மாகி, விளிம்பின் வளைவு உள்நோக்கி இழுக்கப்பட்டு கருந்துளை உண்டாகிறது! அப்போது கருந்துளையின் அருகே ஒளிக்கதிர் சென்றால் அது வளைக்கப் பட்டு, உள்நோக்கி இழுக்கப் பட்டு விழுங்கப் படுகிறது!
ஒளிக்கதிர் யாவும் விழுங்கப் படுவதால் கருந்துளையைத் தொலை நோக்கியில் காண முடியாது! கருந்துளை பிரபஞ்சத்தில் இன்னும் ஓர் மர்ம அண்டமாய், மாய வடிவத்தில் இருக்கிறது. நமது ஒளிமய வானிலும் [Galaxy] பால்மய வீதியிலும் [Milky Way], எண்ணற்ற கருந்துளைகள் இருக்கலாம்! ஆனால் இதுவரை யாரும் அவற்றின் இருக்கையைக் கண்டு பிடித்து உறுதிப் படுத்தியதில்லை! கருந்துளையின் அளவு அதன் உட்பளுவைப் பொறுத்து நேர் விகிதத்தில் மாறுகிறது. நமது பரிதியின் பளுவைக் கொண்டுள்ள ஒரு கருந்துளையின் ஆரம் சுமார் 1 மைல் [1.5 km] இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது! ஆனால் மற்ற ஒளிமய மந்தைகளில் [Other Galaxies] கருந்துளைகளை விஞ்ஞானிகள் கண்டிருப்பதாக நம்பப்படுகிறது!

The Spinning Black Hole
பிரபஞ்சத்தில் வெண்குள்ளி இறுதியில் கருங்குள்ளி ஆகிறது
செந்நிறப் பூத [Red Giant] நிலையிலிருந்து விண்மீன் முடிவான வடிவுக்குத் தளர்வது ஒரு நேரடிப் பாதை! குன்றிய பளுவுடைய விண்மீன்கள் பலவற்றில், பரந்த வெளிப்புற அரண் அண்டவெளியில் விரிந்து கொண்டே போக, அவற்றின் நடுக்கரு மட்டும் ஒளித்திறம் [Luminosity] வற்றி வெண்குள்ளியாய் தங்கி விடுகிறது. பல மடங்கு பரிதி நிறை கொண்டுள்ள விண்மீன்கள் பெருநோவா வாக [Supernova] வெடித்து விடும். அவற்றிலும் சந்திரசேகர் வரம்புக்கு [1.4 மடங்கு பரிதியின் பளு] உட்பட்ட நடுக்கரு மிச்ச அண்டமும் வெண்குள்ளி யாக மாறும். அவ்வாறு உண்டான வெண்குள்ளியில் தாய்மூலக அணுக்களிலிருந்து [Parent Atoms] எலக்டிரான் யாவும் பிடுங்கப் பட்டு, அதன் பிண்டம் [Matter]அனைத்தும் சிதைவான வாயுவாகத் [Degenerate Gas] திரிவடைகின்றது! அந்த விபரீத வாய்க்கள் வெப்பக் கடத்தி யாகி, பொதுவான வாயு நியதிகளைப் [Gas Laws] பின்பற்றுவதில்லை! அவ்வாயுக்கள் பேரளவு நிலையில் அழுத்தம் அடையலாம்! அவற்றைப் போன்ற வெண்குள்ளிகள் சக்தி அளிக்கும் சுரப்பிகள் எவையும் இல்லாமல், நிரந்தரமாய்க் குளிர்ந்து, அடுத்து மஞ்சல்குள்ளியாகி [Yellow Dwarf], பிறகு செங்குள்ளியாகி [Red Dwarf], அப்புறம் பழுப்புக்குள்ளியாகி [Brown Dwarf] இறுதியில் முடிவான கருங்குள்ளியாக [Black Dwarf] கண்ணுக்குத் தெரியாமல் இருந்தும் இல்லாத உருவெடுக்கிறது!

Supernova turning to a Black Hole
சந்திரசேகர் எழுதிய வானியல் விஞ்ஞான நூல்கள்
1952 முதல் 1971 வரை வானியல் பெளதிக வெளியீடு [Astrophysics Journal] விஞ்ஞானப் பதிவின் ஆசிரிய அதிபராகப் [Managing Editor] பணி யாற்றினார். பிறகு அந்த வெளியீடே அமெரிக்க வானியல் பேரவையின் [American Astronomical Society] தேசீய இதழாய் ஆனது. 1953 இல் ஆண்டு ராயல் வானியல் பேரவை [Royal Astronomical Society] சந்திரசேகருக்குத் தங்கப் பதக்கம் அளித்தது. 1955 ஆம் ஆண்டு தேசீய விஞ்ஞானப் பேரவைக்குத் [National Academy of Science] தேர்ந்தெடுக்கப் பட்டார். சந்திரசேகர் பத்து நூல்களை எழுதியுள்ளார். விண்மீன் சூழகத்தில் கதிர்வீச்சால் நிகழும் சக்தி கடத்தல் [Energy Transfer By Radiation in Stellar Atmospheres], பரிதியின் மேல்தளத்தில் வெப்பச் சுற்றோட்டம் [Convection in Solar Surface], விண்மீன் அமைப்பின் முதற்படி ஆய்வு [An Introduction to the Study of Stellar Structure (1939)], விண்மீன் கொந்தளிப்பின் கோட்பாடுகள் [Priciples of Stellar Dynamics
(1942)], கதிர்வீச்சுக் கடத்தல் [Radiative Transfer (1950)], திரவ இயக்க & திரவ காந்தவியல் நிலைப்பாடு [Hydrodynamic & Hydromagnetic Stability (1961)], கருங்குழிகளி கணித நியதி [Mathematical Theory of Black Holes (1983)]. மெய்ப்பாடும் எழிலும் [Truth & Beauty], விஞ்ஞானத்தில் கலைத்துமும் வேட்கையும் [Aesthetics & Motivation in Science (1987)]. விண்மீன் ஒளியின் இருமட்ட இயக்கம் [The Polarization of Starlight], காந்த தளங்களில் வெப்பச் சுற்றோட்ட வாயுக்கள் [Convection of Fluids in Magnetic Fields].
1999 ஆம் ஆண்டு ஏவப்பட்ட மனிதரற்ற விஞ்ஞானத் துணைக்கோள் [Premier Unmanned Scientific Satellite] ஓர் எக்ஸ்ரே நோக்ககத்தைக் [X-Ray Observatory] கொண்டது. அது ஒரு முற்போக்கான எக்ஸ்ரே வானியல் பெளதிக ஆய்வுச் சாதனம் [Advanced X-Ray Astrophysics Facility]. “சந்திரா எக்ஸ்ரே நோக்ககம்” என அழைக்கப்படும் அந்த துணைக்கோள், இந்திய அமெரிக்க வானியல் மேதை, சுப்ரமணியன் சந்திரசேகரைக் கெளரவிக்க வைத்த பெயராகும். அத்துணைக்கோள் எக்ஸ்ரேக் கதிர்கள் எழுப்பும் விண்மீன்களின் கூர்மையான ஒளிநிறப் பட்டைகளை எடுத்துக் காட்டும். அது பூமியின் சுழல்வீதியில் சுற்ற ஆரம்பித்ததும், ஒரு நண்டு நிபுளாவின் பொறிவீசி விண்மீனையும் [Pulsar in Crab Nebula], காஸ்ஸியோப்பியா பூதநோவாவையும் [Cassiopeia A Supernova] படமெடுத்து அனுப்பியுள்ளது.

சந்திரசேகர் தனது 84 ஆம் வயதில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்டு 21 ஆம் தேதி காலமானார். இறப்பதற்கு முன் 1995 இல் அவர் எழுதிய இறுதிப் புத்தகம்: ‘பொது நபருக்கு நியூட்டனின் கோட்பாடு’ [Newton ‘Principia’ for the Common Reader]. அவரிடம் படித்த இரண்டு சைனா பெளதிக விஞ்ஞானிகள் [Tsung-Dao Lee, Chen Ning Yang] 1957 இல் துகள் பெளதிகத்திற்கு [Particle Physics] நோபெல் பரிசு பெற்றார்கள்! இரண்டாம் உலகப் போர் நடந்த போது, சந்திரசேகர் அணுகுண்டு ஆக்கத் திட்டத்தில் சிகாகோவில் முதல் அணுக்கருத் தொடரியக்கம் புரிந்த இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ·பெர்மியோடு [Enrico Fermi] பணியாற்றினார்! குலவித்தைக் கல்லாமல் பாகம்படும் என்னும் முதுமொழிக் கேற்ப நோபெல் பரிசு பெற்று உலகப் புகழ் அடைந்த ஸர். சி.வி. ராமனின் வழித்தோன்றலான, டாக்டர் சந்திரசேகர் வானியல் விஞ்ஞானப் படைப்பிற்கு பெளதிகத்தில் நோபெல் பரிசைப் பகிர்ந்து கொண்டதும் போற்ற தகுந்த ஆற்றலாகும்!
++++++++++++++++++
தகவல்:
1. Astronomy’s Explore the Universe 8th Edition (2002) December 31, 2001
2. National Geographic Magazine (1982) Frontiers of Science The Family of the Sun By: Bradford Smith Ph. D. Professor of Planetary Sciences, The University of Arizona.
3. National Geographic Magazine (1975) Amazing Universe, The Family of Stars By: Herbert Friedman.
4. Internet Article “Stellar Evolution”
5. http://www.nasa.gov/
6. http://ezinearticles.com/?
7. http://sc663drk.weebly.com/
9. http://www.esa.int/esaKIDSen/
10. http://science.nasa.gov/
11. http://www.innovations-
12. https://www.sciencedaily.
13. http://phys.org/news/2016-
…
[Message clipped] View entire message
Preview YouTube video The Birth and Death of Stars
“தூங்கும்முன் ஜாக்ரத்தாய், தூங்கியபின் சொப்பனமாய் ,
தூங்காமல் தூங்கும் துரீயம்:-தாங்கும்
கடத்தில் நானாய் , கடமுடைய வானாய்
படத்தில் இருக்கின்றான் பார்”….கிரேசி மோகன் ….!
துரீயம்- நான்கவஸ்த்தை தாண்டிய “நான்”….!கடகாசமும் கண்ணன் , கடமுடைய ஆகாசமும் கண்ணன்….!
“ஆனைக்(கு) ஒருகாலம் அர்ஜுன பாண்டவ
பூனைக்கு வெற்றிமாலை பூட்டிய- சேனை
மணிவண்ணன் சாரதியின் மார்பில் துதிக்கை :-
நனிவண்ணன் கேசவ்கை நிற்பு”….கிரேசி மோகன்….!
பா.ராஜசேகர்
முன்பொருகாலம்
முன்பொருகாலமென
மூச்சைப்பிடித்து
முகவுரையிட்டுக்கொண்டே
வருகிறேன்
என்றாவது ஒருநாள்
முன்பொருகாலம்
மீண்டும்
உயிர்பெறும் கனவுகளோடு!